No law no life. Know law, know life! நியாயந்தான் சட்டம்! அதற்கு தேவையில்லை வக்கீழ் பட்டம். வக்கீழ் என்றாலே, கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்களே! இடைத்தரகர்களே!! நீ வாழ, நீயே வாதாடு!

நீ வாழ... நீயே வாதாடு... வரவேற்பு வாழ்த்து!

No law, no life. Know law, know life! என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியத்தை உணர்ந்து, ‘‘நீதியைத்தேடி... சட்டப் பல்கலைக் கழகத்திற்கு’’ வருகை தந்துள்ள உங்களை வருக என வரவேற்று, உங்களுக்கான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்று பயனைப் பெறுக என வாழ்த்துகிறோம்!
முக்கிய அறிவிப்பு : இந்த இணையப்பக்கத்தை புதுப்பிக்கும் பணி நடந்துக் கொண்டிருப்பதால், சில பதிவுகள் அல்லது இணைப்புக்கள் கிடைக்காமல் போகலாம்!

இடையில் இடைத்தரகர்கள் எதற்கு?வக்கீல் என்றாலே ‘கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்களே! இடைத்தரகர்களே!!’ என்பதே நான் முன்மொழிந்துள்ள தத்துவம். 

ஆமாம், இதுவரை பொய்யர்கள் என்று மட்டுமே சொல்லி வந்ததால், அவர்கள் இடைத்தரகர்களுங்கூட என்பதைப் பற்றியும் சொல்ல வேண்டி உள்ளது. இந்த இடைத்தரகர் களை  இரண்டு வகையாகச் சொல்லலாம். 

முதல் வகையில் எல்லோரும் எப்படிப் பொய்யர்களோ அப்படியே இடைத்தரகர்கள். அதாவது இவர்கள் சம்பந்தப் பட்ட இருவரையும் நேரடியாகப் பேசவே விடமாட்டார்கள் என்பதோடு, தங்களின் ஆதாயத்திற்காக இருவரிடமும் வெவ் வேறு விதமாக பேசுவார்கள்.

இருவரிடமும் என்ன பேசினார் என்பது, அவரைத் தவிர அந்த இருவருக்குமே தெரியாத அவல நிலை. உங்களிடம் இருந்து கூலியைப் பெறுவதற்காக, ‘நீங்க செய்தது தப்பே இல்லை’ என்று உங்களிடம் சொன்னால், தன் பொய்த் தொழிலை நிலைப்படுத்திக் கொள்வதற்காக, ‘என் கட்சிக் காரர் ஏதோ தெரியாமல் தப்பு பண்ணிட்டார்’ என்று நிதிபதி யிடம் சொல்லுவார்.

இது உங்களின் மீது தவறு இருக்கும் போது உள்ள நிலை. ஆகையால், நீங்களும் அமைதியாகத்தான் வேண்டும். என் மீது தப்பேயில்லை என்று முன்பு சொன்னியே என்றெல் லாம் கேள்வி கேட்கவே முடியாது. ஏனெனில், உங்கள் மீது தவறு இருக்கிறது என்பது உங்களுக்கே தெரிந்ததுதான். ஆனால், அதிலிருந்து பொய்யரின் உதவியோடு தப்பித்து விடலாம் என்று  முயற்சித்ததால் வந்த விளைவு.

இதையும் மீறி கேட்டால், ‘உங்களுக்கு நியாயம் இருக் குன்னு எனக்கு புரியிது; ஆனால் நிதிபதிக்கு தெரியல! நாம வேணும்னா அப்பீல் போகலாம் என்று ஆசையைத் தூண்டி,  அதுக்கு இவ்வளவு செலவாகும்’ என்பார்கள். 

இப்படி, உங்களின் தவறை வெளிப்படையாக சொல்ல முடியாத நிலை இருந்தால், இந்த நிலையை வேறுவிதமாக உருவாக்கி உங்களைத் தோற்கடித்து  விடுவார். தோற்ற பின்னரே விசயம் புரியும். 

ஆமாம், நம் வாசகர் ஒருவர் சென்னையில் பட்டரை நடத்துகிறார். மனிதாபி மான அடிப்படையில் பதினான்கு வயதுக்கு உட்பட்ட, பெற்றோர் இல்லாத, படிப்பு வராத தன் பேரனுக்கு, அவனது பாட்டி கேட்டதால் வேலை கொடுத் தார். வேலை நேரத்தில்  சோதனைக்கு வந்த தொழிற்சாலை ஆய்வாளர்கள் பிடித்து எழும்பூரில் குற்றவியல் வழக்கு போட்டு விட்டார்கள்.

இவர் நம் வழியில் வாதாடி இருந்தால் நடந்த அவனது பாட்டியையும், அவனையும் சாட்சி சொல்ல வைத்து, வழக்கில் உண்மையை நிலைநாட்டி இருக்கலாம். இதுபோன்ற சிறுவர் களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை வழக்குபோட்ட முட்டாளுக்கு கற்றும் கொடுத்து இருக்கலாம். 

ஆனால் இவரோ தானே வாதாட பயந்து பொய்யர்களின் வழியில் சென்று, ‘எனது சொந்தக் காரரின் மகன் என்பதால் வேலை கொடுத்தேன் என்று சாட்சியம் கொடுத்து விட்டார்’. இப்படிச் சொல்லி தப்பித்து விடலாம் என்று பொய்யர்  பொய்ச் சொல்லச் சொல்லி இருக்கார். 

எனக்கு தெரிய இவர் பொய்பேச மாட்டார். ஆனாலும், பொய்யர் நம்மை வசமாக சிக்க வைக்கப் போகிறார் என்பது புரியாமல் வேறு வழியின்றி சொல்லி விட்டார். 

ஆமாம், நீங்கள் எவ்வளவுதான் உண்மை பேசுபவராக இருந்தாலும் நான் ஏற்கெனவே சொன்னது போல, பொய்யர் களிடம் போய்விட்டால் உனக்கு நான் அடிமையே என வக்காலத்தில் கையெழுத்து போட்டுக் கொடுத்துள்ள  அடிமையே. ஆகையால், அவர்கள் சொல்வதை கட்டாயம் கேட்டு கெட்டுத்தான் ஆக வேண்டும். 

எனவே, பொய்யரை நம்பி பொய்ச்சொன்ன இவரை குறுக்கு விசாரணை செய்து, ‘அந்த சிறுவன் வேறு சாதியை சார்ந்தவன்’ என்பதை மிக எளிதாக ஒப்புக்கொள்ள வைத்து குற்றவாளியாக அறிவித்து ரூபாய் பத்தாயிரத்தை  அபராதம் விதித்தார்கள். இதற்கு மூன்றாண்டுகள் சிறை தண்டனையும் விதிக்க முடியும்.

குற்றம் புரிந்தவர்களே குற்றங்களை ஒப்புக்கொள்ள முன் வராத நிலையில், குற்றம் புரியாதவரை பொய்ச் சொல்ல வைத்து குற்றவாளி என அறிவித்தால், அவரின் மனம் எவ்வளவு வேதனைபடும்?

வயதில் பெரியவராக இருந்தாலும், என்னை அய்யா என்றே அழைப்பார்; அன்பாக பேசுபவர். என் சட்ட விழிப் பறிவுணர்வில் மிகுந்த நம்பிக்கை கொண்டு நிதி உள்ளிட்ட உதவிகளை செய்தவர், உண்மையாய் இருப்பவர், பொய்யரி டம் போய் குற்றவாளியானார் என்றால், இதெல்லாம் கர்ம வினை என்று சொல்வதை தவிர வேறென்ன சொல்ல?

‘குறைந்தபட்ச கூலியை கொடுத்து, சிறுவனை வேலையில் அமர்த்தி கொடுமை செய்வதே குற்றம்’ என்பதே சட்டத்தின் சாரம். ஆனால், தொழிற்சாலை ஆய்வு அடிமை முட்டாள்களோ, உண்மையிலேயே கொத்தடிமைகளாக நடத்தும் இடங்களில் ஆய்வு செய்து தடுக்க மாட்டார்கள். 

அங்கெல்லாம் இவர்கள் சென்றால் உயிரோடே திரும்ப முடியாது. ஆங்கேயே புதைத்து சமாதி கட்டி விடுவார்கள். 

ஆகையால். நாங்களும் வாங்கும் பெறுங்கூலிக்கு வேலை பார்த்தோம் என்பதை ஆவணப்படுத்த, மனிதாபி மானத்தோடு வேலை கொடுத்தவர்களை குற்ற வாளிகள் ஆக்கி விடுவார்கள். 

மனிதாபிமான அடிப்படையில் வேலை கொடுத்ததற்கு  மன உலைச்சலோடு மூன்றாண்டுகள் வழக்கை நடத்தி, பொய்யர் களுக்கு கூலி கொடுத்து குற்றவாளி ஆனதுதான் மிச்சம். குறைந்தது ஐம்பதாயிரமாவது செலவு செய்திருப்பார். இனி, இவருக்கெல்லாம் சமூக சிந்தனை சாதாரணமா வருமா?! 


இதில் கொடுமை என்னவென்றால், இது போன்ற சிறுவர் களுக்கும் வேலை கொடுக்க தனி சட்டமே உள்ளது. சிறு வயது என்பது கற்கும் பருவம். இப்பருவத்தில் கல்வி மீது பற்றில்லாத சிறுவர்களை அப்படியே விட்டு விட முடியாதே!

ஆகையால், யார் எக்கேடு கெட்டு போனாலும் பரவாயில்லை. சமூகத்தைப் பற்றி சிந்திப்பவர்கள் முதலில் சட்டத்தைப் பற்றி சிந்திக்க வேண்டும். என் சட்ட விழிப்பறிவுணர்வு கடமை தங்கு தடையின்றி வெற்றிநடை போடக் காரணமும் இதுவே! 

இரண்டாம் வகை இடைத்தரகர்கள் 

இவர் பணம், சாதி, இன பேத இடைத்தரகர்கள். இவர்கள் சமையத்துக்கு தக்கவாறு நிதிபதியோடு குறுக்கு வழியில் பேசி   நடிகப்  பொண்ணையும், நகைப் பொன்னையும், பொருளை யும், பணத்தையுங் கொடுத்து தற்காலிக அநீதியை நீதியாகப்  பெற்றுத் தரும் மாமாக்கள். இவர்கள் ஆயிரத்தில் ஓரிருவர் என சிலரே இருப்பர். 

அரசின் அடிமைகளான நிதிபதிகளின் நோக்கமும் பணம் பறிப்பது மட்டுந்தான். ஒருபோதும் நீதியை நிலைநாட்டுவது அன்று என்று ஏற்கெனவே சொன்னதை நினைவூட்டுகிறேன். 

ஆகையால்,  அவரவருவரும்  தானே வாதாடுவது நமக்கு வதமாகி விடும் என்ற கருத்தில்  இடைத் தரகர்களை வைத்துக் கொள்ளவே வலியுறுத்துவார்கள்.

பொய்யர்களே பொறுப்பேற்க வேண்டும்!

இதற்கு நீங்கள் (ஏ, கோ)மாளித் தனமாக பதில் சொன்னால்,  ‘இலவச சட்ட உதவிப் பொய்யரை அமர்த்துகிறேன்’ என்று எல்லாஞ் சொல்லுவார்கள். இதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல்  நிதிபதி நியமித்த பொய்யர்களிடம் சிக்கிக் கொள்கிறார்கள். 

எனவே, உங்களிடமும் இப்படிச் சொன்னால், என் மீது நீங்கள் கொண்டுள்ள கருணை அளப்பறியது. அதன் பலன் எனக்கே கிடைக்க வேண்டும் என்கிற உங்களின் நல்ல எண்ணத்தை வரவேற்று மகிழ்ச்சி அடைக்கிறேன். 

ஆனால், இதிலொரு சட்ட சிக்கல் உள்ளது. அதாவது விசாரணையின் இறுதியில் ‘எனக்கு சிறை தண்டனை கொடுத்தால் அதற்கு நானே பொறுப்பேற்று நான் நியமித்த  பொய்யருக்கே கொடுப்பேன்; அபராதம் விதித்தாலும் அவரிடம் இருந்தே வசூல் செய்துக் கொள்வேன்; சொத்துரிமை உள்ளிட்ட எந்தவொரு உரிமையை இழக்க நேரிட்டாலும் அவரே இழக்க நேரிடும்’ என்ற ஓர் உத்தரவை மட்டும் போட்டுக் கொடுத்து விட்டு, உங்கள் விருப்பப்படி நீங்கள் யாரை வேண்டுமானாலும் அமர்த்திக் கொள்ளுங்கள் என்று ஓர் அணுகுண்டு மநுவை கொடுத்து விடுங்கள்.

அப்புறம் பாருங்க, உங்க வழக்கில் வழக்கத்துக்கு மாறாக எல்லாமே சட்டப்படி நடக்கும். நீங்க சொல்லுறதுதான் சட்டம்!

சேர்க்கை நாள் 11-04-2018பிற்கேர்க்கை நாள் 14-05-2019


0 comments:

Post a Comment

பத்திரிகை செய்திகள்

அறவழி நோட்டா

அறவழி நோட்டா
மகாத்மா போதித்த வாக்குரிமை!

நோட்டா: NOTA

நோட்டா: NOTA
விளக்கம்: EXPLANATION

நூல்களின் முகப்பு

Followers

முக்கியப் பக்கங்கள்

அடிப்படை சட்டங்கள்

  • 1. இந்திய சாசனம் 1950
  • 2. நீதிமன்ற சாசனம் 1872
  • 3. இந்திய தண்டனை சட்டம் 1860
  • 4. குற்ற விசாரணை முறை விதிகள் 1973
  • 5. உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908

நம் நூல்களைப் பற்றி

நீதியைத்தேடி.... நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் வரிசையில்...
1 குற்ற விசாரணைகள்
2 பிணை (ஜாமீன்) எடுப்பது
எப்படி?
3 சட்ட அறிவுக்களஞ்சியம்
4 சட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்
5 சாட்சியங்களைச் சேகரிப்பது
எப்படி?
6 கடமையைச் செய்!
பலன் கிடைக்கும்
7 மநு வரையுங்கலை!Recent Posts Widget

இந்நூல்கள் அனைத்தும் உங்களின் சட்ட விழிப்பறிவுணர்வுக்காக
மத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவியோடு
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பொது நூலகங்கள், மத்திய சிறைச்சாலைகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

சொந்தமாக தேவைப்படுவோர், உ(ய)ரிய நன்கொடையைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு வாட்ஸ்அப் எண் 09842909190 ஆகும்.

எல்லாப் பதிவுகளும்!

நம் தள வகைகள்

பயின்றோர் (20-08-16)