சமூகத்தின் சட்ட விழிப்பறிவுணர்வுக்கான தளம்

நீ வாழ... நீயே வாதாடு... வரவேற்பு வாழ்த்து!

No law, no life. Know law, know life! என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியத்தை உணர்ந்து, ‘‘நீதியைத்தேடி... சட்டப் பல்கலைக் கழகத்திற்கு’’ வருகை தந்துள்ள உங்களை வருக என வரவேற்று, உங்களுக்கான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்று பயனைப் பெறுக என வாழ்த்துகிறோம்!
முக்கிய அறிவிப்பு : இந்த இணையப்பக்கத்தை புதுப்பிக்கும் பணி நடந்துக் கொண்டிருப்பதால், சில பதிவுகள் அல்லது இணைப்புக்கள் கிடைக்காமல் போகலாம்!

சட்டமா... தீர்ப்பா... எது முக்கியம்... ஏன்?!
சட்டமா... தீர்ப்பா... எது முக்கியம் என்று  Sathish Kumar N கேள்வியை கேட்டுள்ளார். இப்படியொரு சந்தேகம்  உங்களுக்கும் இருக்கும்! 

இதுபற்றி நீதியைத்தேடி... உள்ளிட்ட நூல்களில் தெளிவாக சொல்லி உள்ளேன். ஆனால், எல்லோருக்கும் எனக்காக படிப்பதுதானே கடினமாக இருக்கிறது. ஆகையால், இப்படி எளிதாக என்னிடமே கேட்டு விடுகின்றனர்.

மேலும், முஸ்லிம்களின் முத்தலாக் விவகாரத்தில் நேற்று ஒரு தீர்ப்பு வந்துள்ள நிலையில், இத்தீர்ப்பில் உள்ள சூசகங்களைப் பற்றி எடுத்துச் சொல்ல வேண்டியுள்ள நிலையில், இக்கேள்வியும் முக்கியத்துவம் பெறுவதால் தான் இந்த கட்டுரையைப் பதிகிறேன். 

ஆனால், அவர் கேட்டது, இந்த விவாகாரத்தை முன் வைத்து அல்ல. மாறாக, ஹெல்மட் அணியும் விசயத்தில் நிதிபதி கிறுக்கு கிருபாகரன் பிரப்பித்த உத்தரவை முன்வைத்தே!   


சரி சங்கதிக்கு வருகிறேன். 

பொதுவாக சமூதாயத்திற்கு சட்டமே முக்கியமானது. தீர்ப்பு என்பது அதில் சம்பந்தப் பட்டவர்களுக்கே முக்கியமானது. 

ஆமாம், சட்டம் என்பது மாறாதது. ஆகையால், நிரந்தரமானது. ஆனால், தீர்ப்பு என்பது அதனை தாக்கல் செய்தவரின் பண பலம், ஆள் பலம், அதிகார பலம்..,

அவ்வழக்கை எடுத்து நடத்தும் மற்றும் எதிர்க் கொள்ளும் பொய்யரின் திறமை மற்றும் திறமை இன்மை மற்றும் விசாரணை செய்யும் நிதிபதியின் உள்நோக்கத்தைப் பொறுத்து அவ்வப்போது மாறுபடும் என்பதை கீழ்நீதிமன்றம் முதல் உச்சநீதிமன்றம் வரை, ஒரே வழக்கில் நிதிபதிகள் மாறிமாறி தீர்ப்பு செல்வதைப் பார்க்கலாம். 

இதுபுரியாத அல்லது புரிந்தாலும் குழம்பிய குட்டையில் நாமும் மீன் பிடிக்கலாம் என்ற ஆசையில், தீர்ப்பே முக்கியம் என்று பொய்யர்கள் பிழைப்பு நடத்திக் கொண்டிருக்க, இதனை மற்றவர்களும் பின்பற்ற ஆரம்பித்து விட்டனர். 

இதன் விளைவாகத்தான் எது ஒன்றுக்கும் நிரந்தரமான தீர்வை காணமுடியாமல், மக்கள் அவ்வப்போது அல்லல்பட்டுக் கொண்டே இருக்கின்றனர்.

தீர்ப்பு எப்போது முக்கியத்துவம் பெறும் என்றால், இந்திய சாசனக் கோட்பாடு 142 இன்படி, சட்டத்தில் தீர்வு இல்லாத நிலையில் எழுந்துள்ள புதுப்புது சட்டப் பிரச்சினைகளின் அடிப்படையில், சொல்லப்படும் தீர்ப்பு நாடாளுமன்றத்தால் சட்டமாகும் வரை அல்லது அத்தீர்ப்பை குடியரசுத் தலைவர் சட்டமாக அறிவிக்கும் வரை அது சமுதாயத்திற்கு முக்கியமாகும்.

இல்லையெனில், அந்த தீர்ப்பு அந்த வழக்கோடு 
நீர்த்துப் போய் விடும். அவ்வளவே!

இப்படி, எனக்கு தெரிந்து தீர்ப்பின் அடிப்படையில் சட்டங்கள் பல நாடாளுமன்றத்தால் கொண்டு வரப்பட்டு உள்ளன. ஆனால், இப்படி ஒரு தீர்ப்புக் கூட குடியரசுத் தலைவரால் சட்டமாக அறிவிக்கப் பட்டதாக தெரிய வில்லை.

ஆனால், எனது அறிவுக்கு எட்டிய வரையில், முதல் நேற்று வழங்கப் பட்ட முத்தலாக் விவகாரத்தில் தான், நாடாளுமன்றம் ஆறு மாதத்திற்குள் இதுகுறித்து சட்டம் இயற்ற வேண்டுமென நிதிபதிகள் வெளிப்படையாகவே குறிப்பிட்டு உள்ளனர். 

இதன் மூலம், ‘‘அவர்கள் சொல்லும் தீர்ப்பு சட்டமானால்தான் செல்லும்; இல்லையெனில் செல்லாது’’ என்பதையும் நிதிபதிகள் சூசகமாக ஒப்புக் கொண்டு உள்ளனர். 

மாறாக, இந்திய சாசனக் கோட்பாடு 142 இன்படி, ‘‘சட்டத்தில் தீர்வு இல்லாத முத்தலாக் பிரச்சினைக்கு தீர்வாக சொல்லப்பட்டுள்ள இந்த தீர்ப்பை, சட்டமாக இயற்ற வேண்டும்; இல்லையேல் செல்லாது’’ என்பதையெல்லாம் வெளிப்படையாக தீர்ப்பில் சொன்னால், பின் நிதிபதிகள் வழங்கும் தீர்ப்புக்களின் நிலை எத்தகையது என்பது எல்லோருக்கும் எளிதாகப் புரிந்து விடும்.

பின், அவர்களது தீர்ப்புகளை ஒருவரும் மதிக்கமாட்டார்களே... ஆகையால், கூட்டுக்களவாணிகள் ஆன பொய்யர்களும், அவ்வழி வந்த நிதிபதிகளும் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க முடியாதே!

இத்தீர்ப்பு ஒரு மதத்தின் கோட்பாடுகளுக்குள் தலையிடுவது என்பதாலும், இதனால் தங்களுக்கு கெட்டப் பெயர் உண்டாகக் கூடாது என்பதாலும், மத்திய அரசே இதற்கு சட்டமியற்றி தீர்வு கண்டிருக்க வேண்டுமென அதிருப்தியை நிதிபதிகள் தங்களது தீர்ப்பில் வெளிப்படுத்தி உள்ளனர்.  
இதே நிலைப்பாட்டில்தான் மத்திய அரசும், நீதிமன்றத்தின் முடிவுக்கு விட்டு விட்டது என்பது ஊரறிந்த இரகசியந்தான்!!

மேலும், மத்திய அரசு இதுபற்றி இயற்றும் சட்டத்தில், உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பின் பேரில் இந்தச் சட்டம் இயற்றப்படுவதாக குறிப்பிடும் என்பதில் எள் முனையளவும் சந்தேகமில்லை. 

இதுபோன்ற பல்வேறு சட்ட இரகசியங்களை அறிந்துக் கொள்ள விரும்புவோர், உங்களது பகுதி பொதுநூலகத்தில் உள்ள நீதியைத் தேடி... உள்ளிட்ட நூல்களைப் படித்து அறியலாம்.

தனிப்பட்ட முறையில், நன்கொடை செலுத்தி வாங்க விரும்புவோர் 09842909190 என்ற வாட்ஸ்அப் எண்ணில் தொடர்புக் கொள்ளலாம். 

நூல்களின் முகப்பு

நியாயந்தான் சட்டம்

Follow by Email

Followers

முக்கியப் பக்கங்கள்

அடிப்படை சட்டங்கள்

  • 1. இந்திய சாசனம் 1950
  • 2. நீதிமன்ற சாசனம் 1872
  • 3. இந்திய தண்டனை சட்டம் 1860
  • 4. குற்ற விசாரணை முறை விதிகள் 1973
  • 5. உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908

நம் நூல்களைப் பற்றி

நீதியைத்தேடி.... நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் வரிசையில்...
1 குற்ற விசாரணைகள்
2 பிணை (ஜாமீன்) எடுப்பது
எப்படி?
3 சட்ட அறிவுக்களஞ்சியம்
4 சட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்
5 சாட்சியங்களைச் சேகரிப்பது
எப்படி?
6 கடமையைச் செய்!
பலன் கிடைக்கும்
7 மநு வரையுங்கலை!Recent Posts Widget

இந்நூல்கள் அனைத்தும் உங்களின் சட்ட விழிப்பறிவுணர்வுக்காக
மத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவியோடு
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பொது நூலகங்கள், மத்திய சிறைச்சாலைகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

சொந்தமாக தேவைப்படுவோர், உ(ய)ரிய நன்கொடையைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு வாட்ஸ்அப் எண் 09842909190 ஆகும்.

நம் தள வகைகள்

பயின்றோர் (20-08-16)