
இன்று 02-10-2019 நாம் கொண்டாடும் 150 வது காந்தி ஜெயந்தி விழாக் கொண்டாட்டம், வரலாற்றுச் சிறப்பும், புகழும் மிக்க சீரிய விழா!
இந்தியா மட்டுமல்ல; அகிலம்
முழுவதுமுள்ள மக்கள் பலரும் அறிந்த பெயர் காந்தி!
இந்தியா என்றாலே, அவர்களுக்கு
காந்திதான் நினைவுக்கு வருவார்!!
இந்திய விடுதலைக்காக சுமார் ஏழு வருடங்கள் சிறையில் இருந்தவர். இந்திய
விடுதலையில் பலர் களம் கண்டிருந்தாலும், அவர்களில் பலரும் காந்தியின் வழியைப் பின்பற்றியதால், காந்தியே தேசத்தந்தை என அறியப்படுகிறார்.
இத்தேசதந்தை காந்தியின் அகிம்சை கொள்கையால் ஈர்க்கப்பட்ட நெல்சன் மண்டேலா,
அகிம்சை வழியில் போராடி,
தன் கறுப்பின மக்களுக்கு
விடுதலைப் பெற்றுத்தந்தார். இதற்காக தன் வாழ்நாளில் சுமார் இருபத்தி ஏழு வருடங்கள்
சிறையில் இருந்தார். அகையால், அம்மக்களின்
தேசத்தந்தை என அறியப்படுகிறார். உலக அளவில் அறியப்படும் அரசியல் தலைவர்களில் இவரே
அதிகபட்சம் சிறையில் இருந்தவர்.
காந்தியும், நெல்சன்
மண்டேலாவும் தொழில் ரீதியாக வக்கீல், சமூக சேவகர்கள் மற்றும் மக்களுக்கான சிறந்த அரசியல் தலைவர்கள், விடுதலைக்காக (ஓ, தொ)ய்வின்றி போராடியவர்கள் என்ற ஒற்றுமை
இருவருக்குமே உண்டு என்றாலுங்கூட, தென்னாப்பிரிக்காவின்
நிறவெறியே இவர்கள் இருவரும் மகாத்மா நிலைக்கு உயர வழி வகுத்தது என்பது
ஒற்றுமையிலும் தனிச்சிறப்பு மிக்க ஒற்றுமை!
வீட்டிற்கொரு தந்தை இருப்பதுபோல, நாட்டிற்கொரு தந்தையும் உண்டு. பெரும்பான்மை மக்கள் காந்தியை தேசத்தந்தையாக
ஏற்றுக் கொண்டிருந்தாலும் கூட, சிறு மனப்பான்மை
மக்களோ முரண்படுகின்றனர்.
இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் என்றப் பிரிவினையை உண்டாக்கிய முகமது அலி
ஜின்னாவை, அந்நாடு
தேசத்தந்தையாகவே போற்றி, அந்நாட்டின்
பணத்தாள்களில் அவரது உருவப்படத்தை அச்சிட்டு வருகிறது. இப்படித்தான் ஏறக்குறைய
எல்லா நாடுகளிலும் நடக்கிறது.
இந்த வகையில், இந்தியாவும்
சத்தியவான் காந்தியின் நூற்றான்டு விழாவை 1969 இல் கொண்டாடிய போதுதான் முதன் முதலாக அவரது
உருவத்தை நம் பணத்தாள்களில் அச்சிட்டு உலக அரங்கில் தன்னை கௌரவப்படுத்திக் கொண்டதே
ஒழிய, காந்தியின்
விருப்பத்திற்கு அன்று! அவர் வாழ்ந்தபோதே அச்சிட்டு இருந்தால், நிச்சயம் வேண்டாம் என்றே சொல்லி இருப்பார்!!
ஆமாம், ‘‘மகாத்மா பட்டத்தை நான் மதிக்கவில்லை.
இப்பட்டத்தால் நான் மன வேதனையையே அடைந்திருக்கிறேன். இப்பட்டத்தால் எந்த
சமயத்திலும் ஒரு கண நேரமாவது பரவசம் அடைந்ததாக எனக்கு நினைவில்லை’’ என்று அவரே
சத்திய சோதனை நூலின் முன்னுரையில் குறிப்பிட்டு உள்ளாரே!
சுதந்திரப் போராட்டத்தில் பங்கு கொண்டவர்கள் பலர் இருந்திருந்தாலும், காந்தி என்ற ஒற்றைப் புனிதரின் முன்னிலை
மட்டும் இல்லை என்றால், இந்தியாவிற்கு
மட்டுமல்ல; முன்பு
இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிகளாக இருந்து பிரிக்கப்பட்ட, இன்றைய வங்க தேசம், மியான்மர், பாகிஸ்தான் மற்றும் அண்டை நாடான இலங்கை என
இங்கிலாந்தின் அடிமைப்பிடியின் கீழிருந்த எந்தவொரு நாட்டிற்கும் விடுதலை
நிச்சயமில்லை.
இந்த வகையில் பார்த்தால், இங்கிலாந்தின்
அடிமைகளாக இருந்த அத்துணை நாடுகளுக்கும் தேசத்தந்தை காந்தியாகத்தான் இருந்திருக்க
வேண்டுமென்பதே நியாயம்! ஆயினும், காந்தி அதிகாரப்
பதவிகளையும், பட்டங்களையும்
துட்சமாகவே நினைத்ததால், இந்த நியாயத்தை
கூட ஏற்க மறுத்திருப்பார்!!
ஆமாம், தன் கடமையைச் செம்மையாக செய்வதே, தனக்கான அங்கீகாரம்! அதிகாரம்!! என்று கடமையைச்
செய்ததால் உலகப் புகழ்ப் பெற்றாரே ஒழிய, பிரதிபலன் எதையும் எதிர்பார்க்கவில்லை. பிரதிபலனை
எதிர்பார்த்தவர்கள் ஒருபோதும் கடமையைச் செய்தவர்கள் ஆகமாட்டார்கள்.
சமூகத்தின் தேவையை அறிந்து, கடமையைச்
செய்தவருக்கு, அதன் பலனாக அவரே
விரும்பா விட்டாலும் கூட, அதன் புகழ் அவரை
வந்தே தீரும் என்பதை, நம் வள்ளுவப்
பாட்டனே ஒப்புரவு (கடமை) என்ற அதிகாரத்தில் சொல்லி, அதன் அடுத்தடுத்த அதிகாரமாக புகழ் என்ற அதிகாரத்தை
வைத்து சொல்லியுள்ளபடி ‘‘புகழானது, மகாத்மாவை தானே
தேடிவந்து புகழைத் தேடிக் கொண்டது’’ என்றுதான் சொல்ல
வேண்டும். இவ்வியற்கைப் புகழ் விதியை யார்தான் தடுக்க, தடுத்திருக்க முடியும்??
காந்தி அதிகாரப் பதவிக்கு ஆசைப்பட்டிருந்தால், முன்னது முகமது அலி ஜின்னா போலவும், பின்னது நெல்சன் மண்டேலா போலவும், நாட்டின் முதன்மை அதிகாரத்தில் அவரும்
அமர்ந்திருப்பாரே! அப்படி, அவர் அமர்வதை
யார்தான் தடுத்திருக்க முடியும்?!
ஆனால், அதிகாரப் பதவிகளை
துட்சமாக நினைத்த அவர், தன் கடமையில்
மட்டுமே கடைசி காலம் வரை கண்ணாக இருந்தார் என்று சொன்னால், உங்களுக்கு ரொம்பவே ஓவராக தெரியலாம்.
உங்களுக்கு மட்டுமல்ல; எனக்கு மட்டுமல்ல;
எல்லோருக்குமே ரொம்பவே
ஓவர்தான் என்பது விசயத்தை, மிகச் சரியாக
தெரிந்து கொண்டால்தானே விளங்கும்?!
ஆமாம்!
சொல்லுதல் யாருக்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்
என்ற நம் வள்ளுவப் பாட்டனின் நல்வாக்கிற்கு இணங்க, இதுவரை உலகில் வாழ்ந்த எவரும் காந்தி எழுதியது
போன்று எழுதியிருக்கவோ, பேசி இருக்கவோ,
செயல்பட்டு இருக்கவோ
முடியாது என்கிற வகையில், அவர்
ஆங்கிலத்தில் எழுதியதை மட்டும், தேதி வாரியாக
மத்திய அரசு நூறு தொகுதிகளைக் கொண்ட நூல்களாக வெளியிட 1958 ஆம் ஆண்டு திட்டமிட்டு, 1960 முதல் 1994 வரை சுமார் 34 ஆண்டுகளில் நூறு தொகுதிகளைக் கொண்ட நூல்களாக
வெளியிட்டு உள்ளது.
இந்திய வரலாற்றைப் பற்றி அறிந்துக் கொள்ள உதவும் வகையில், உலகின் பல்வேறு நாடுகளின் பிரசித்திப் பெற்ற நூலகங்களிலும், இந்நூறு நூல்களும் இருப்பதாக இணையத்தின் வழியில் தெரிய வருகிறது. ‘‘இந்தியா என்றால் காந்தி! காந்தி என்றால் இந்தியா!!’’ என்பதையே இது
குறிக்கிறது. இதைவிட, வேறென்ன பெருமை வேண்டும்?!
இந்த நூல்கள் ஒவ்வொன்றும் குறைந்தது 800 பக்கங்களுக்கு மேல்தான் என்பதால், மொத்தம் எண்பதாயிரம் பக்கங்கள். இவை ஆங்கிலத்தில் எழுதியது மட்டுமே என்றால், அவர் ஆங்கிலத்தில் எழுதியதில் தெரியாமல் விடுபட்டது, அவரின் தாய் மொழியான குஜராத்தி, இந்தி உள்ளிட்ட மற்ற மொழிகளில் எழுதியது எத்தனை
பக்கங்களோ! யார் அறிவார்?
மகாத்மா காந்தியின் மறைவுக்குப்பின், காந்தி நினைவு நிதி என்றப் பெயரில் அறக்கட்டளை ஒன்றை ஆரம்பித்து, வரும் நிதியை நிர்வகிக்க அன்றைய பல்வேறு
மாகாணங்களிலும் குழுக்கள் அமைத்திருக்கிறார்கள்.
05-05-1955 அன்று நடந்த சென்னை மாகாண கூட்டத்தில்,
‘‘காந்தி நூல் வெளியீட்டுக்
கழகம்’’ என்ற உட்குழுவை
தொடங்கி, இதற்கு தி. சு.
அவினாசிலிங்கம் அவர்களை தலைவராகவும், நாமெல்லாம் நன்றாக அறிந்த பெருந்தலைவர் காமராஜ், சி. சுப்பிரமணியம், எம். பக்தவச்சலம் உள்ளிட்ட பத்து அறிவிற்
சிறந்த ஆன்றோர் பெருமக்களை எல்லாம் உறுப்பினர்களாகவும் தேர்ந்தெடுத்து
இருக்கிறார்கள்.
முதலில் சென்னை தக்கர் பாபா வித்தியாலயத்தில் செயல்பட்ட காந்தி நூல்
வெளியீட்டுக் கழகம், பின் தமிழக
அரசின், அரசினர் மாளிகையில் இலவசமாக இடம் கொடுக்கப்பட்டு பத்தாண்டுகளுக்கு மேல்
செயல்பட்டுள்ளது.
இந்தக் கால கட்டத்தில் தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரகம், அகிம்சா தருமம், சுய சரிதை, ஆரோக்கிய வாழ்வு, கதரும் கைத்தொழிலும், பொருளாதார உறவு, சமூக சீர்திருத்தம், சத்தியாக்கிரகம், சமூக ஒற்றுமை, கடவுளும் சமயமும், பகவத் கீதை, கல்வி, அரசாங்கத்துக்கு காந்திஜியின் கடிதங்கள், தலைவர்களுக்கு காந்திஜியின் கடிதங்கள், கிராம சுயராஜ்யம், சகோதரிகளுக்கு காந்திஜியின் கடிதங்கள் மற்றும்
இப்பதினாறு தொகுப்புகளுக்குமான பொருட்குறிப்பு அகரவரிசை என பதினேழு தொகுதி நூல்களை
வெளியிட்டு உள்ளார்கள்.
01-12-1969 அன்று பதினேழாவது தொகுதி நூலுக்கு ‘‘காந்தி நூல்களின் வெளியீட்டுப் பணி நிறைவு’’ என்ற தலைப்பில் வழங்கிய பதிப்புரையில், ‘‘மேற்சொன்ன மூன்று தகவல்களோடு, முதல்
தொகுப்பில் இருந்து ஏழாவது தொகுப்பு வரை இரண்டு, மூன்று பதிப்புகள் வந்திருக்கின்றன என்றும், மூன்றாவது தொகுப்பான சத்திய சோதனையை மட்டும்
மலிவுப் பதிப்பாக சுமார் ஒரு லட்சம் பிரதிகளை வழங்கி இருப்பதாகவும், நம் நாட்டில் மகாத்மா காந்தி நூல்கள் முதன்
முதலாக வெளிவந்திருப்பது தமிழில்தான் என்பது பெருமைக் குரியது’’ எனவும் காந்தி நூல் வெளியீட்டுக் கழகத்தின்
தலைவரான தி. சு. அவினாசிலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், இதற்கு முன்பாக 03-11-1969 அன்றே ‘‘தமிழ்நாட்டில்
காந்தி’’ என்ற பதினெட்டாவது தொகுதி நூலுக்கு தி. சு. அவினாசிலிங்கம் முன்னுரையும் வழங்கியுள்ளார். இந்த முன்பின் முரண்பாடு வந்தது ஏன் என தெரியவில்லை.
காந்தி நூல் வெளியீட்டுக் கழகத்தின் வாயிலாக வெளியிட்டுள்ள ‘‘தமிழ்நாட்டில் காந்தி’’ என்ற இந்த நூலில், காந்தி தமிழகத்திற்கு முதன் முறையாக வந்த 1896 ஆம் ஆண்டு முதல் 1946 ஆம் ஆண்டு
வரையிலான ஐம்பதாண்டு கால தமிழர் - காந்தி வரலாற்று உறவுச் செய்திகளை தொகுத்து வழங்கி
வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தி இருக்கிறார்கள்.
நம் நாட்டிலேயே முதன் முதலாக மகாத்மா காந்தி நூல்கள் தமிழில்தான் வெளிவந்தன
என்பதற்கு, நான் முன்பே
சொன்னபடி, மத்திய அரசு கூட,
1958 ஆம் ஆண்டில் திட்டமிட்டு,
1960 முதல் 1994 வரையென சுமார் 34 ஆண்டுகளில் நூறு தொகுதிகளையும் நூல்களையும்
வரிசையாக வெளியிட்டு உள்ளதே சான்றாக இருக்கிறது.
இதன் மூலம், நாம் வேறு இரண்டு உண்மையையும் புரிந்துக் கொள்ள
வேண்டும். முதலாவது, அதிகபட்சமாக ஆங்கிலத்தில் கிடைத்ததை எல்லாம் அப்படியே தொகுத்து கொடுக்கவே
மத்திய அரசுக்கு முப்பத்தி நான்கு ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. ஆனால், தமிழில் வெளியிடப்பட்ட பதினெட்டும், சுமார் பதினெட்டு
ஆண்டுகளில் ஆங்கிலத்தில் இருந்து தமிழாக்கம்
செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
இரண்டாவது, தமிழாக்கம் செய்யப்பட்ட இப்பதினெட்டு தொகுதி நூல்களும்,
‘‘மத்திய அரசு
வெளியிட்டுள்ள ஆங்கில தொகுதிகளை அப்படியே சுருக்கி தமிழில் மொழிபெயர்த்தது அல்ல’’ என்பது.
ஏனெனில், ஆங்கிலத்தின் நூறு தொகுதியில் இருந்துதான், தமிழில் சுருக்கி மொழிப் பெயர்த்துள்ளதாக காந்திய கொள்கையில் பற்றுள்ள
பலருங்கூட, நம்பி சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களால்
எனக்கு சொல்லப்பட்டதுங் கூட
இப்படித்தான்!
ஆனால், உறுதியாக இல்லை
என்பதற்கு இரண்டு ஆக்கங்களுக்கும் இடையேயான ஆண்டுக் கணக்கான இடைவெளிகளே முதல்
காரணமாகவும், அப்படித்தான் செய்யப்பட்டு
உள்ளது என தமிழ் மொழிபெயர்ப்பு நூலில் சொல்லப்படாதது இரண்டாவது காரணமாகவும்
இருக்கிறது.
தமிழக மக்கள் அனைவரும் வாங்கி வாசிப்பதற்கு ஏதுவாக, ஒரு தொகுதியின் விலை ரூபாய் 7.50 என 1957 ஆண்டு நிர்ணயித்து, 1969 இல் வெளியான பதினேழாவது தொகுதி வரையிலும் விலையை உயர்த்தாமல் வெளியிட்டு இருக்கிறார்கள்.
முன்பே சொன்னபடி நாடு முழுவதுமுள்ள மக்களிடம் இருந்து திரட்டப்பட்ட நிதியிலும்,
சென்னை மாகாண அரசிடம்
இருந்து கிடைத்த நிதியிலும், அறிவார்ந்த
பெருமக்கள் பலரது உன்னத உழைப்பாலும் வெளியிடப்பட்ட ‘‘இந்தப் பதினேழு தொகுதி நூல்களுக்குமான முழு
காப்புரிமையும் எங்களுக்கே சொந்தமென காந்தி நூல் வெளியீட்டுக் கழகம் குறிப்பிட்டு
இருந்ததாலும், அவர்களே
தொடர்ந்து வெளியிடவில்லை என்பதாலும், இந்நூல்கள் மீண்டும் மீண்டும் வெளிவர முடியாமல்
ஐம்பதாண்டுகள் முடங்கிப் போனதற்கு காரணமாக அமைந்து விட்டது’’ என்பது நிச்சயம் நமக்கெல்லாம் நெருடலான
விசயந்தான்!
ஆமாம்! தேசத்தந்தை என போற்றப்படும் மகாத்மா காந்தி தான் எழுதியது, தனக்கே காப்புரிமை என சொல்லி இருந்தால்,
காப்புரிமைச் சட்டப்படி
நாமே கூட ஐம்பது ஆண்டுகளுக்கு வெளியிட முடியாதே என்பதை அறிவார்ந்த காந்தி நூல்
வெளியீட்டுக் கழகப் பெருமக்கள் சிந்திக்கத் தவறியது ஏனோ தெரியவில்லை.
மேலும், இந்த பதினெட்டு
தொகுதி நூல்களை வெளியிட்டப் பிறகு, ‘‘காந்தி நூல் வெளியீட்டுக் கழகம்’’ என்ன ஆனது என்பதும் தெரியவில்லை. அப்படியொரு அமைப்பு
இருந்தது என்பது, அதன் மூலம்
வெளிவந்த பதினெட்டு தொகுதி நூல்களின் வாயிலாகத்தான் தெரிய வருகிறது.
மேலும், மத்திய அரசு
ஆரம்பத்தில் இருந்து இறுதிநாள் வரை தேதி வாரியாக வரிசையாக அப்படியே ஆங்கிலத்தில்
தொகுத்து வெளியிட்டதோ, அதுபோலவே
தமிழிலும் மொழிப் பெயர்த்து வெளியிட்டு இருக்க வேண்டும். இதற்கு கால் அல்லது அரை
நூற்றாண்டுகள் கூட ஆகி இருக்கலாம்.
பதினெட்டு தொகுதிகளாக சுருக்கியதால், ஒன்றுக்கொன்று தொடர்ச்சி இல்லை; பல செய்திகள் முழுமையாக இல்லை. குறிப்பாக, அவர் மீதான பல்வேறு குற்ற வழக்குகளை, அவரே வாதாடி எதிர்கொண்ட சங்கதிகள் பெரும்பாலும்
மொழிப் பெயர்க்கப்படவில்லை. எதுயெது
மொழிப் பெயர்க்கப்பட்டது, எதுயெது மொழிப்
பெயர்க்கப்படவில்லை என்பதை கண்டறிவதும் மிகவும் கடினமான குழப்பமாகவே இருக்கிறது.
உண்மைக்கு ஒன்றைச் சொல்ல வேண்டுமென்றால், இதன் பதினாறாவது தொகுதியில் ஆயிரம் கடிதங்கள்
மொழிப் பெயர்க்கப்பட்டு உள்ளது. இத்தொகுதி காந்தி தன் தவப் புதல்விகளாக (குழந்தைப்
பருவத்திலேயே தாயை இழந்த இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேலின்
மகள் மணிபென் பட்டேல் உட்பட) கருதிய நான்கு பேருக்கு மட்டும் எழுதிய கடிதங்களின்
தொகுப்பு. இந்த நான்கு புதல்விகளும் அவருக்கு எழுதியது என்னவென்பதும் காந்தி
எழுதிய பதிலின் மறைபொருளாக நமக்கு நன்கு புலப்படுகிறது.
இதில், அவரவர்களுக்கு
ஏற்றபடி, தந்தைக்கு
தந்தையாகவும், தாய்க்கு
தாயாகவும் புத்திமதி கூறும் விதத்தில், ‘‘என் அன்பார்ந்த முட்டாளே, என் அன்பார்ந்த புரட்சிவாதி என ஆரம்பித்து,
(சரியான புரிதல் வரும்வரை
குழந்தைகள் பொதுவாக தந்தையை கொடுங்கோலனாக கருதுவது இயல்புதானே என்ற எதார்த்த
நிலையை உணர்ந்து) முடிக்கும் தறுவாயில் அன்பு கொடுங்கோலன், அன்பு கொள்கைக்காரன் என்று முடித்து’’
எழுதியுள்ள கடிதங்கள்
எந்தக்காலத்திலும் சமூகம் படித்து பயனடைய வேண்டிய பல்வேறு முக்கியச் சங்கதிகளாகவே
இருக்கிறது.
இதில் ஒருவரான மீராபென் பெரிதும் போற்றி பாதுகாத்து வந்த 650 கடிதங்களில் 386 கடிதங்கள் மட்டுமே மொழிபெயர்க்கப்பட்டு
உள்ளதாகவும், இவை காந்தியின்
கடைசி இருபத்திரண்டு வருட கடிதங்கள் மட்டுமே என்றும், அவ்வப்போது அதிகாரிகள் சோதனை நடத்தி பல
ஆவணங்களை அழித்து விட்டார்கள் என்றும், தன்னை கைது செய்வார்கள் என எண்ணிய போதெல்லாம், சந்தேகத்திற்கு ஆளாகாத ஒரு நண்பரிடம், சோதனைக்கு ஆட்படாது என்று கருதிய ஆராய்ச்சி
நிலையத்திலும் கொடுத்து பாதுகாத்ததோடு, கடைசி மூன்று வருடங்கள் கூடவே வைத்திருந்து பாதுகாத்ததாகவும், இப்படி பெரும் சோதனைகளுக்கு இடையில் பாதுகாத்து
வந்தது இப்போது பிரசுரமாகி விட்டதால் என் மனதில் இருந்த பெரும்சுமை நீங்கி
விட்டதாக அவரது 07-11-1948 இல் எழுதிய
முன்னுரையில் குறிப்பிட்டு உள்ளார்.
இதன் மூலம் இவரது வசமிருந்த 264 கடிதங்கள்
மொழிப் பெயர்க்கப்படவில்லை என்பது தெளிவு. இக்கடிதங்கள் எவையெவை? இவை ஆங்கிலத்தில் ஆவணப்படுத்தப்பட்டு உள்ளதா?
இப்போதும் இருக்கிறதா
என்பதற்கெல்லாம் இனிதான் விடை காண வேண்டும். இப்படி ஒவ்வொன்றிலும் மொழிப்
பெயர்க்காமல் விட்டதை கணக்கிட்டுப் பார்த்தால் நான் சொல்வதில் உள்ள உண்மைகள்
அனைத்தும் புரியும்.
இங்கிலாந்தைப் பிறப்பிடமாக கொண்ட மிஸ் மேடலின் ஸ்லேட் (காந்தி தன் மகளாக
ஏற்று வைத்த இந்தியப்பெயரே மீராபென்), பாரீஸ் நகரைச் சேர்ந்த திரு. ரோமெய்ன் ரோலந்த்
என்பவர் காந்தியைப் பற்றி எழுதிய புத்தகத்தைப் படித்து விட்டு, தன் வாழ்க்கையை காந்தியின் கொள்கைக்காகவே சமர்ப்பணம்
செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு 25-10-1925 அன்று மார்சேய்ல்ஸ் துறைமுகத்தில் இருந்து கப்பலேறி 07-11-1925 அன்று அகமதாபாத் சபர்மதி ஆசிரமத்திற்கு வந்து,
மகாத்மாவை தரிசித்து
மகளாக பாக்கியம் தேடிக் கொள்கிறார்.
ஆமாம், காந்தி தன்னை
மகளாக ஏற்றுக்கொள்ளும் விதத்தில் தன் தகுதிகளை மேம்படுத்திக் கொள்ள வேண்டுமே
என்பதற்காக காந்தியின் சிந்தனைக்கு ஏற்ப, சபர்மதி ஆசிரமத்தின் விதிகளை அறிந்து தரையில் சம்மணமிட்டு அமருதல், பஞ்சடித்தல், நூற்றல், நெய்தல், அசைவ உணவில் இருந்து சைவ உணவுக்கு மாறுதல்,
உபநிடதங்கள், வேதங்களை கற்றல் என அனைத்திலும் தன்னை
தயார்படுத்திக் கொள்ள ஒரு வருடத்திற்கும் மேலாக முழு மூச்சாக பயிற்சி எடுத்துக்
கொண்டே, இதுபற்றி
காந்தியோடு கடிதத் தொடர்பில் உரையாடி நட்புறவை ஏற்படுத்திக் கொண்ட பின்னரே
வந்திருக்கிறார்.
அதன்பின் தன்னைப் பெற்ற தாய் தந்தையை கூட காண முடியாமல், வாழ்நாள் முழுவதையும் காந்தியின் கொள்கைக்கு
சமர்ப்பணம் செய்திருக்கிறார். இவரது தியாக வாழ்வை போற்றும் வகையில், இந்திய அரசின் இரண்டாவது உயரிய விருதான ‘‘பத்ம விபூஷன்’’ விருதை இறப்புக்குப் பின் வழங்கி
கௌரவித்துள்ளது.
இவர் மகளாக வந்த சேர்ந்த சமயத்தில்தான், காந்தியின் நூல்களில் உலகப் பிரசித்திப் பெற்ற ‘‘சத்திய சோதனை’’ நூலை, காந்தி தன் தாய்மொழியான குஜராத்தியில் எழுத, அதனை மகாதேவ் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க,
இதனை மீராபென் பிழைதிருத்தம்
செய்து காந்தி எங்கிருந்தாரோ அங்கெல்லாம் கடிதம் மூலம் அனுப்ப, இறுதியாக காந்தி நிறைகுறைகளை திருத்தி, சரியான ஆங்கில வார்த்தைகளைப் போட்டு, சத்திய சோதனையின் உண்மையான உறுதியான வடிவத்தை
உலகிற்கு கொடுத்திருக்கிறார்.
பதினெட்டு தமிழ் மொழிப் பெயர்ப்பு நூல்களில் சிறப்பானதொரு மூன்றாவது தொகுதி
நூலாக ‘‘சத்திய சோதனை’’
என்ற தொகுதி நூலை நமக்கு
அமைத்து தந்திருக்கிறார்கள் என்பதை மிகமிக
முக்கியமாக குறிப்பிட்டாக வேண்டும்.
ஆமாம், காந்தி சத்திய
சோதனை நூலில், சுமார் 1920 ஆம் ஆண்டு வரையிலான வாழ்க்கைச் சங்கதிகள்
வரையே எழுதியிருக்கிறார் அல்லவா?
இதன் பிறகு, அவர் வாழ்ந்த இறுதி நாளான 30-01-1948 வரையிலான வரலாற்றுச் செய்திகளும், அவரது வாழ்வில் வருட வாரிய நடந்த முக்கிய நிகழ்வுகளையும், இம்மூன்றாவது தொகுதியில் சுருக்கமாக தொகுத்தளித்து உள்ளதால், அவரைப்பற்றி அவரே எழுதாத சங்கதிகளும் நமக்கு சத்திய சோதனையில் கிடைக்கின்றன.
இதன் பிறகு, அவர் வாழ்ந்த இறுதி நாளான 30-01-1948 வரையிலான வரலாற்றுச் செய்திகளும், அவரது வாழ்வில் வருட வாரிய நடந்த முக்கிய நிகழ்வுகளையும், இம்மூன்றாவது தொகுதியில் சுருக்கமாக தொகுத்தளித்து உள்ளதால், அவரைப்பற்றி அவரே எழுதாத சங்கதிகளும் நமக்கு சத்திய சோதனையில் கிடைக்கின்றன.
ஆனால், சத்திய சோதனையாக
ஏனோ இதனை சத்திய சோதனை நூலை தனித் தனியாக வெளியிடும் எவரும் சேர்த்து
வெளியிடவில்லை. ஆகையால், காந்தி எழுதாத
சத்திய சோதனைக்குப் பிறகான அவரது மிகமிக முக்கியமான, தீவிரமான சுதந்திரப் போராட்ட காலங்களில்,
பல தவறான செயல்களை
செய்ததாக, அவரது அகிம்சை
கொள்கைக்கு மாறான கருத்துள்ள விஷமிகள் தவறான கருத்துகளை பரப்பிக் கொண்டு
இருக்கிறார்கள்.
அவர் எழுதி இருப்பதிலேயே எதையாவது திரித்துச் சொல்லி ஏளனம் செய்வோருக்கு,
அவர் எழுதாததை எழுதி வைத்து
ஏளனம் செய்வது மிகவும் எளிதல்லவா? இதற்கு
முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது, அப்புனிதருக்கு
நாம் செய்ய வேண்டிய கடமையல்லவா?!
காந்தி நூல் வெளியீட்டுக் கழகம் வெளியிட்ட பதினெட்டு தமிழ் மொழிப் பெயர்ப்புத் தொகுதிகளை எல்லாம் கண்ணால் காண்பதே
அரிதாக இருக்கிறது. ஆமாம், இப்புனிதரின் ஆங்கில நூலொன்றை தமிழில் வெளிக் கொண்டு
வரும் நீண்ட நெடிய முயற்சி தேடலில்தான் நானும் தரிசிக்க நேர்ந்தது.
ஆங்கில தொகுதிகள் நூறும் அச்சுப் பிரதிகளாகவும் மின்நூலாகவும் கிடைக்கின்றன.
ஆனால், இப்பதினெட்டு தமிழ்த்
தொகுதி நூல்களையும் மின்நூலாக கூட யாரும் ஆவணப்படுத்தியதாக தெரியவில்லை. ஆகையால், இதன் அடுத்தடுத்த கடமைகளில் மிகமிக முக்கியமான ஒன்றாக நாம் ஆவணப்படுத்த
வேண்டியுள்ளது.
ஆமாம்! அந்த அளவிற்கு இன்றும்,
இனியும் நாம் எதிர்கொண்டு
வருகிற பல்வேறு வகையான எல்லாப் பிரச்சினைகளில் இருந்தும் விடுபட்டு, ஆரோக்கியமான நல்வாழ்வு வாழவும், காந்தி சொல்லாத விசயங்களே இல்லை என்கிற
அளவிற்கும், ஒவ்வொரு தொகுதி நூலிலும் அப்புனிதரின் அற்புதப்
புதையல்கள் மலைபோல புதைந்து இருக்கின்றன.
சுவாமி சித்பவானந்தா தலைமையில் முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ. விஸ்வநாதம்
அவர்களால் 1955 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ‘‘திருக்குறட்
கழகம்’’, மகாத்மா காந்தியின் வாழ்க்கை திருக்குறளின் ஒவ்வொரு அதிகாரத்துக்கும்
மேம்பட்டதாக இருந்ததை உணர்ந்ததால்,
காந்தியடிகளின் வாழ்க்கை
வரலாற்றை காவியமாக செய்யுள் வடிவில் இயற்றிட அறிவார்ந்த பெருமக்கள் பலரது
பரிந்துரையின் பேரில் திரு. அரங்க சீனிவாசன் என்பவரை ஆசிரியராக நாடியும், தங்களுக்கு தெரிந்த தகவல்களுடன் பெருந்தலைவர் காமராஜரை 11-09-1975 அன்று
சென்னையில் சந்தித்துப் பேசி வேண்டிய தகவல்களைப் பெற்று இருக்கிறார்கள்.
பின் நான்கு பேர் கொண்ட அக்குழு, காந்தி பிறந்த
போர்பந்தர் முதல் அகிம்சை தவம் செய்த எரவாடா சிறை வரையென சில ஆண்டுகள் முக்கிய
இடங்களையும், அங்குள்ள முக்கிய ஆவணங்களையும் பார்வையிட்டு
சேகரித்த தகவல்களின் அடிப்படையில்,
‘‘மனித தெய்வம் - காந்தி காதை (பெருங்காப்பியம்)’’ என்று ஐந்து
காண்டங்களாக 1210 பக்கங்கள் கொண்ட பெருங்காப்பிய நூலை 1980 ஆம் ஆண்டு சுதந்திரத்
தினத்தன்று வெளியிட்டு, ‘‘இப்படியொரு பெருங்காப்பியம் தமிழைத்தவிர
வேறு எம்மொழியிலும் இல்லாத வகையில் காந்தி எனும் புனிதருக்கு பெரும்புகழைச்
சேர்த்து இருக்கிறார்கள்’’ என உறுதியாக சொல்லலாம்.
ஆமாம்! இது பெருங்காப்பியந்தான் என்பதை பறைசாற்றும் வகையில், புனிதர் காந்தியை போற்றும் சுமார் 5075 செய்யுள்
பாடல்கள், ஆசிரியர் அருட்கவி - கவிக்கடல் அரங்க சீனிவாசன் அவர்களது அருட்புலமையால் மலர்ந்திருக்கிறது.
போற்றுதலுக்குரிய இப்பெருங்காப்பியம் காந்தியின் தொகுதி நூல்களுள் பத்தொன்பதாவது
இடத்தைப் பிடித்திருக்கிறது.
காந்தியின் நூல் தொகுதிகளோடு,
தமிழ் ஞானச் செல்வர்களைப்
பற்றியும் நூலொன்றை வெளியிட விரும்பிய பொள்ளாச்சி மகாலிங்கம் அவர்கள் சிந்தனையில்
உதித்ததே, ‘‘காந்தி முன்னோடிகள்’’ என்ற இருபதாவது
தொகுதி நூல். இதில் பதினோரு தமிழ் ஞானச் செல்வர்களைப் பற்றி, பதினோரு தமிழ்ப் புலமையாளர்கள் எழுதிய கட்டுரைகள் தொகுக்கப்பட்டு உள்ளது.
ஆகவே, கடைசி இரு தொகுதி நூல்களும், காந்தி நூல் வரிசையில் வெளியிடப்பட்டு இருந்தாலும், அவை காந்தி எழுதியவை அன்று. காந்தி நூல் வெளியீட்டுக் கழகம் மற்றும்
திருக்குறட் கழகத்திற்கு பிறகு, இந்த இருபது தொகுதி நூல்களையும் முப்பத்தேழு
முதல் ஐம்பது வருட இடைவெளியில், காப்புரிமைக்குள்ளும் புறமும் என ஒரே தொகுப்பாக
வர்த்தமானன் பதிப்பகம் 2005 முதல் 2009 வரை நான்கு பதிப்புகளை ரூ 6000 க்கு வெளியிட்டதோடு
சரி. பின் வெளிவரவில்லை.
மத்திய அரசு ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ள நூறு தொகுதிகளும் இதுவரை தமிழில்
மொழிப் பெயர்க்கப் படவில்லை என்பதால், உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் உலகத்தமிழ்ச் சங்கம் மூலமாக நல்ல
தரமான மொழி பெயர்பாளர்களைக் கொண்டு மொழிபெயர்ப்பு செய்ய உள்ளோம் என 2017 ஆம் ஆண்டில் ஒரு காணொளிப் பேட்டியில் தமிழ்
வளர்ச்சித்துறை அமைச்சர் திரு. மா.ஃபா. பாண்டியராஜன் அவர்கள் குறிப்பிட்டார். இந்த
முயற்சி தொடங்கப்பட்டதா என தெரியவில்லை.
நம் நாட்டு மக்களின் நலனுக்காகவும், விடுதலைக்காகவும்
காந்தி எழுதியெழுதி தன் வலக்கை வலித்தபோது, இடக் கையால் எழுதி இருக்கிறார். அவரால் எழுத
முடியாதபோது, மற்றவர்களின் துணையோடும்
எழுதி இருக்கிறார். இரயில் பயணம், சிறைச்சாலை என
எந்தவொரு இடத்தில் இருந்தும் எழுதி இருக்கிறார். இப்படி ஆயிரக்கணக்கான பக்கங்கள்
எழுதிய, அதே சமயத்தில் அதுபற்றி
மிகமிக அதிகமாக பேசியும், செயல்பட்டும் விடுதலைக்கான
(வி, மு)த்தாகவும் இருந்திருக்கிறார் என்பது, எவருக்கும் இல்லாத சிறப்பிலும் தனிச்சிறப்பு!
அவர் ஒருவரால் எழுதப்பட்டதை எல்லாம், நமக்கு தேவையான நம் தாய்மொழித் தமிழில் நம்மால் மொழிபெயர்க்க கூட முடியாதா என்ன?!
நாமே மொழிபெயர்க்க முன்வரவில்லை
என்றால், வேறு யார்தான்
மொழி பெயர்ப்பார்கள்; நம் எதிர்கால
சந்திகளுக்கு இப்புனிதரின் அறவழிச் சிந்தனைகளை யார்தான் சேர்ப்பிப்பார்கள் என்பதை
சிந்திக்க வேண்டிய நாளிது!
எனவே காந்தி என்றப் புனிதரின் வாழ்நாள் வரலாறு முழுவதையும் மத்திய அரசு
ஆங்கிலத்தில் நூறு தொகுதிகளாக தொகுத்து, மிகக் குறைந்த விலையில் வழங்கி வருவது போலவே, நம் தமிழக அரசும், மற்ற மாநில அரசுகளும் தத்தமது மொழிகளில் நூறு
தொகுதிகளையும் மொழிப்பெயர்த்து மக்களுக்கு வழங்கிட வேண்டியது, நமக்காக நாமே
செய்துக் கொள்ள வேண்டிய புனிதக் கடமையாகும்.
இதற்கு அப்புனிதர் பிறந்த இந்த 150 வது நன்நாளில் பொறுப்பேற்போம்.
********************
இந்தக் கட்டுரையின் முக்கியத்துவத்தை உணர்ந்து மதுரை காந்தி மியூசியத்தில் இருந்து வெளிவரும் சர்வோதயம் மலர்கிறது என்ற அக்டோபர் 2019 இதழில் 07 -14 பக்கங்கள் வரை வெளியிட்டு ஆவணப்படுத்தி உள்ளார்கள்.
இந்த ஆய்வுக் கட்டுரையின் பின் குறிப்பு
இன்று காந்தியின் வக்கீல் தொழில் அனுபவங்கள் மற்றும் அவர் சந்தித்த வழக்குகளில் வாதாடிய அனுபவங்கள் ஆகியவற்றை, ஆங்கிலத்தில் இருந்து மொழிபெயர்த்தும் கூடவே நம் விளக்கத்துடனும் தொகுத்து நூலாக வெளியிட எண்ணி இருந்தோம். ஆனால், ஆங்கில மொழிபெயர்ப்புகள் நிறைவு அடையாததால், திட்டமிட்டபடி வெளியிட இயலாமல் போய்விட்டது என்பதையும், ஆகவே அப்பணி தொடர்கிறது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த நூலை வெளியிட மேற்கொண்ட முயற்சியினால், மேற்சொன்ன தகவல்களை எல்லாம் ஆராய்ந்து அறியும் நல்லதொரு நல்வாய்ப்பு கிடைத்தது. இந்த நூலுக்காக எழுதப்பட்டதையாவது, அப்புனிதர் பிறந்த இந்நந்நாளில் பகிர்வோம் என்ற அடிப்படையில் பகிர்ந்துள்ளேன்.
இன்று காந்தி நூலை வெளியிட நினைத்திருந்தோம். ஆனால், முடியவில்லை என்று சொன்னதுமே, பலருக்கு வருத்தம். எங்களுக்கோ மிகப் பெரிய வருத்தம்!
இந்த நூலை எப்படியாவது வெளிக் கொண்டு வந்து விட வேண்டுமென்கிற முயற்சி கொஞ்ச நஞ்சமல்ல.
ஆமாம், சுமார் 500 பக்கங்களுக்கு குறையாத இந்த நூலை 2016 ஆண்டில் வெளியான ‘‘மநு வரையுங்கலை!’’ நூலோடு சேர்த்து வெளிக் கொண்டு வரும் முயற்சித்தோம்.
ஆனால், உ(ய)ரிய கூலி கொடுத்தால் மொழியாக்கம் செய்துத் தருவதாக சொன்ன பிரபல காந்தியவாதி ஒருவர், கேட்ட கூலியை தருவதாக சொன்னதும், செய்து தருகிறேன் என ஓரிரு வருடங்களாக நம்ப வைத்தும், அலைய வைத்தும், கடைசியில் முடியாது என கழுத்தை அறுத்து விட்டார். அவர் அறுத்தது நம் கழுத்தை அல்ல. ‘‘மகாத்மாவின் க(ழு, ரு)த்தை’’
கடமையைச் செய்ய கூலி கேட்பவர்கள், கடமையைச் செவ்வனே செய்யமாட்டார்கள் என்பதற்கு, இவரும் நல்லதொரு சான்று. நமக்கு நல்லதொரு பாடம்!
மேலும், இந்த நூல் வெளிவரக்கூடாது என்பதே அவரின் எண்ணம்! ஆனாலும், ‘‘நம் ஆசிரியரின் அயராத முயற்சியை கண்ட அவர் எப்படியும் வெளியிட்டு விடுவோம்!!’’ எனவும் நம்பினார். ஆனால், அது இன்றில்லை; நாளை என்றாகி விட்டது. இது எதற்காக என்பது, இப்போது புரியவில்லை.
பொதுவாக காந்தியின் பல்வேறு விதமான கருத்துக்களையும் மொழியாக்கம் செய்தவர்கள், அவரது சட்டக் கருத்துக்களை மட்டும் செய்யவில்லை. சத்திய சோதனையில் கொஞ்சம் செய்துள்ளதோடு சரி.
காரணம், அவர்களின் சட்ட அறியாமை ஒருபுறம் என்றால், இதையெல்லாம் வெகுஜன மக்களுக்காக எழுதி கறுப்பங்கி கயவர்களை பகைத்துக் கொள்ளவும் தயாரில்லை!
காந்திய வியாதிகளாக உள்ள வக்கீழ்ப் பொய்யர்கள், அவ்வழி வந்த நிதிபதிகள் அரைகுறையாக மொழியாக்கம் செய்தால்தான் உண்டு. அந்தக் கறுப்பங்கி விபச்சாரிகள் எப்படி செய்வார்கள்?
ஆகையால், நாம்தான் செய்தாக வேண்டும். நம்மை விட்டால், வேறு நாதியில்லை என்ற அளவிற்கு காந்தியின் வக்கீல் தொழில் அனுபவங்களும், தன் வழக்கில் தானே வாதாடிய அனுபவங்களும் மக்களுக்கு கிடைக்காமல் மறைத்து வைக்கப்பட்டு உள்ளன.
இல்லையென்றால், இந்நேரம் இதுபற்றி பல நூல்கள் வந்திருக்குமே! ஆமாம், வக்கீழ் தொழில் விபச்சாரித் தொழில் என்று சொன்ன காந்தியின் கருத்தே, நாம் சொல்லித்தானே பரவலாக வெளியில் தெரிய வந்தது!!
எனவே, பற்பல கடுமையான சவால்கள் நிறைந்த இந்த நூலையும் போதுமான நிதியை திரட்டி எல்லா பொது நூலகங்களுக்கும், நிதிபதிகளுக்கும் வழங்க வேண்டிய கடமை நமக்கே உள்ளது.
ஆனால், மொழிபெயர்ப்பு, பிழைத்திருத்தம், தொழில் நுட்பம் என பல வேலைகளுக்கு நாம் பிறரின் உதவியை நாட வேண்டி இருப்பதால், அவ்வேலைகளை நாம் நினைத்தபடி செய்து முடிக்க முடியவில்லை. இவற்றில் போதிய தகுதியுள்ளவர்கள் விரும்பினால், உதவலாம்.
இதற்கு இடையில், அது, இது என பல பொது வேலைகள் வேறு மிகவும் அவசரமாக புகுந்து நம் வேலைப்பளுவை அதிகமாக்கி விடுவதோடு, அவையே தொடர்கின்றன. எனவே, எடுத்த வேலைகள் எல்லாம் அரைகுறையாகவே நிற்கிறது. விரைவில் வெளிக் கொண்டுவர முயற்சிக்கிறோம். பொறுத்துக் கொள்ளவும்.
பத்தாண்டுகளுக்கு முன்பு நிகழ்த்தப்பட்ட நம் சாதனை!
பத்தாண்டுகளுக்கு முன்பு இதே நாளில்தான், நம்முடைய நீதியைத்தேடி... சட்டங்கள் உங்கள் பாக்கெட்டில் நூலும், முதல் நூலின் இந்தி மற்றும் கன்னட மொழியாக்கங்களும் வெளியிடப்பட்டு, சாதனை நிகழ்த்தப்பட்டது.
இன்று காந்தியின் வக்கீல் தொழில் அனுபவங்கள் மற்றும் அவர் சந்தித்த வழக்குகளில் வாதாடிய அனுபவங்கள் ஆகியவற்றை, ஆங்கிலத்தில் இருந்து மொழிபெயர்த்தும் கூடவே நம் விளக்கத்துடனும் தொகுத்து நூலாக வெளியிட எண்ணி இருந்தோம். ஆனால், ஆங்கில மொழிபெயர்ப்புகள் நிறைவு அடையாததால், திட்டமிட்டபடி வெளியிட இயலாமல் போய்விட்டது என்பதையும், ஆகவே அப்பணி தொடர்கிறது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த நூலை வெளியிட மேற்கொண்ட முயற்சியினால், மேற்சொன்ன தகவல்களை எல்லாம் ஆராய்ந்து அறியும் நல்லதொரு நல்வாய்ப்பு கிடைத்தது. இந்த நூலுக்காக எழுதப்பட்டதையாவது, அப்புனிதர் பிறந்த இந்நந்நாளில் பகிர்வோம் என்ற அடிப்படையில் பகிர்ந்துள்ளேன்.
இன்று காந்தி நூலை வெளியிட நினைத்திருந்தோம். ஆனால், முடியவில்லை என்று சொன்னதுமே, பலருக்கு வருத்தம். எங்களுக்கோ மிகப் பெரிய வருத்தம்!
இந்த நூலை எப்படியாவது வெளிக் கொண்டு வந்து விட வேண்டுமென்கிற முயற்சி கொஞ்ச நஞ்சமல்ல.
ஆமாம், சுமார் 500 பக்கங்களுக்கு குறையாத இந்த நூலை 2016 ஆண்டில் வெளியான ‘‘மநு வரையுங்கலை!’’ நூலோடு சேர்த்து வெளிக் கொண்டு வரும் முயற்சித்தோம்.
ஆனால், உ(ய)ரிய கூலி கொடுத்தால் மொழியாக்கம் செய்துத் தருவதாக சொன்ன பிரபல காந்தியவாதி ஒருவர், கேட்ட கூலியை தருவதாக சொன்னதும், செய்து தருகிறேன் என ஓரிரு வருடங்களாக நம்ப வைத்தும், அலைய வைத்தும், கடைசியில் முடியாது என கழுத்தை அறுத்து விட்டார். அவர் அறுத்தது நம் கழுத்தை அல்ல. ‘‘மகாத்மாவின் க(ழு, ரு)த்தை’’
கடமையைச் செய்ய கூலி கேட்பவர்கள், கடமையைச் செவ்வனே செய்யமாட்டார்கள் என்பதற்கு, இவரும் நல்லதொரு சான்று. நமக்கு நல்லதொரு பாடம்!
மேலும், இந்த நூல் வெளிவரக்கூடாது என்பதே அவரின் எண்ணம்! ஆனாலும், ‘‘நம் ஆசிரியரின் அயராத முயற்சியை கண்ட அவர் எப்படியும் வெளியிட்டு விடுவோம்!!’’ எனவும் நம்பினார். ஆனால், அது இன்றில்லை; நாளை என்றாகி விட்டது. இது எதற்காக என்பது, இப்போது புரியவில்லை.
பொதுவாக காந்தியின் பல்வேறு விதமான கருத்துக்களையும் மொழியாக்கம் செய்தவர்கள், அவரது சட்டக் கருத்துக்களை மட்டும் செய்யவில்லை. சத்திய சோதனையில் கொஞ்சம் செய்துள்ளதோடு சரி.
காரணம், அவர்களின் சட்ட அறியாமை ஒருபுறம் என்றால், இதையெல்லாம் வெகுஜன மக்களுக்காக எழுதி கறுப்பங்கி கயவர்களை பகைத்துக் கொள்ளவும் தயாரில்லை!
காந்திய வியாதிகளாக உள்ள வக்கீழ்ப் பொய்யர்கள், அவ்வழி வந்த நிதிபதிகள் அரைகுறையாக மொழியாக்கம் செய்தால்தான் உண்டு. அந்தக் கறுப்பங்கி விபச்சாரிகள் எப்படி செய்வார்கள்?
ஆகையால், நாம்தான் செய்தாக வேண்டும். நம்மை விட்டால், வேறு நாதியில்லை என்ற அளவிற்கு காந்தியின் வக்கீல் தொழில் அனுபவங்களும், தன் வழக்கில் தானே வாதாடிய அனுபவங்களும் மக்களுக்கு கிடைக்காமல் மறைத்து வைக்கப்பட்டு உள்ளன.
இல்லையென்றால், இந்நேரம் இதுபற்றி பல நூல்கள் வந்திருக்குமே! ஆமாம், வக்கீழ் தொழில் விபச்சாரித் தொழில் என்று சொன்ன காந்தியின் கருத்தே, நாம் சொல்லித்தானே பரவலாக வெளியில் தெரிய வந்தது!!
எனவே, பற்பல கடுமையான சவால்கள் நிறைந்த இந்த நூலையும் போதுமான நிதியை திரட்டி எல்லா பொது நூலகங்களுக்கும், நிதிபதிகளுக்கும் வழங்க வேண்டிய கடமை நமக்கே உள்ளது.
ஆனால், மொழிபெயர்ப்பு, பிழைத்திருத்தம், தொழில் நுட்பம் என பல வேலைகளுக்கு நாம் பிறரின் உதவியை நாட வேண்டி இருப்பதால், அவ்வேலைகளை நாம் நினைத்தபடி செய்து முடிக்க முடியவில்லை. இவற்றில் போதிய தகுதியுள்ளவர்கள் விரும்பினால், உதவலாம்.
இதற்கு இடையில், அது, இது என பல பொது வேலைகள் வேறு மிகவும் அவசரமாக புகுந்து நம் வேலைப்பளுவை அதிகமாக்கி விடுவதோடு, அவையே தொடர்கின்றன. எனவே, எடுத்த வேலைகள் எல்லாம் அரைகுறையாகவே நிற்கிறது. விரைவில் வெளிக் கொண்டுவர முயற்சிக்கிறோம். பொறுத்துக் கொள்ளவும்.
பத்தாண்டுகளுக்கு முன்பு நிகழ்த்தப்பட்ட நம் சாதனை!
பத்தாண்டுகளுக்கு முன்பு இதே நாளில்தான், நம்முடைய நீதியைத்தேடி... சட்டங்கள் உங்கள் பாக்கெட்டில் நூலும், முதல் நூலின் இந்தி மற்றும் கன்னட மொழியாக்கங்களும் வெளியிடப்பட்டு, சாதனை நிகழ்த்தப்பட்டது.
புனிதமானவர் என்பதாலே மகாத்மா காந்தி என்றுஅழைக்கப்பட்டார் அவருடைய 150-வது பிறந்தநாளான இன்று அவர் வழி நடக்க இன்நன்நாளில் அனைவரும் பெருமையுடன் முயற்சித்து பொறுப்பேற்போம்.
ReplyDeleteஅண்ணல் காந்தியடிகள் பற்றி இவ்வளவு நூல்கள் உள்ளன என்று இப்போது தான் தெரிந்து கொண்டேன். சத்திய சோதனை மட்டுமே அவரை பற்றிய நூல் என்று எண்ணி இருந்தேன். நிறைய புது தகவல்கள் இந்த கட்டுரையில் அறிந்து கொண்டேன். வாழ்த்துக்கள்.....
ReplyDeleteமகாத்மா நம் ஆத்மா.
ReplyDeleteமுத்தமிழ் காவலர் கி.ஆ.பெ. விஸ்வநாதம் அவர்களால் 1955 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ‘‘திருக்குறட் கழகம்’’, மகாத்மா காந்தியின் வாழ்க்கை திருக்குறளின் ஒவ்வொரு அதிகாரத்துக்கும் மேம்பட்டதாக இருந்ததை உணர்ந்ததால்,
ReplyDeleteஇந்த தகவல் திகைப்கபாவும்,வியப்பாகவும் இருக்கிறது,
ஒருவேளை வள்ளுவன் மறுபிறவி எடுத்து இருக்கிறாரோ,
இயற்கைக்கே வெளிச்சம்.