No law no life. Know law, know life! நியாயந்தான் சட்டம்! அதற்கு தேவையில்லை வக்கீழ் பட்டம். வக்கீழ் என்றாலே, கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்களே! இடைத்தரகர்களே!! நீ வாழ, நீயே வாதாடு!

நீ வாழ... நீயே வாதாடு... வரவேற்பு வாழ்த்து!

No law, no life. Know law, know life! என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியத்தை உணர்ந்து, ‘‘நீதியைத்தேடி... சட்டப் பல்கலைக் கழகத்திற்கு’’ வருகை தந்துள்ள உங்களை வருக என வரவேற்று, உங்களுக்கான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்று பயனைப் பெறுக என வாழ்த்துகிறோம்!
முக்கிய அறிவிப்பு : இந்த இணையப்பக்கத்தை புதுப்பிக்கும் பணி நடந்துக் கொண்டிருப்பதால், சில பதிவுகள் அல்லது இணைப்புக்கள் கிடைக்காமல் போகலாம்!

வாய்தா வாங்கிக் கொள்ளுங்கள்!
நீதியைத்தேடி... உள்ளிட்ட நூல்களை சாதாரணமாக சட்டத்தை தெரிந்துக் கொள்ள வேண்டுமென்ற ஆர்வத்தில் வாங்கிப் படிப்பவர்கள் மிகமிக குறைவே. பிரச்சினை உள்ளவர்களே அதிகமாக வாங்குகிறார்கள். இது முற்றிலும் தவறு.

பிரச்சினைகள் ஏதும் வராமல் இருக்கும் பொருட்டு, ஒவ்வொருவரும் சட்டத்தை தெரிந்துக் கொள்ள முன் வர வேண்டும்.  ஏனெனில், இப்போது சட்டத்தை தவறாக தெரிந்து வைத்திருப்பவர்களால்தான் பிரச்சினையே வருகிறது. இதனை எதிர்க்கொள்ள சரியான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெறுவது அவசியம்.  

நம் நூல்களை வாங்குபவர்கள் எங்களிடம் சொல்வது, வழக்கில் அவசரமாக செயல்பட வேண்டி உள்ளது. அதற்குள் படித்து முடிக்க நேரமில்லை. ஆகையால், ஆலோசனை சொல்லுங்கள் என்பதே!

சட்டத்துக்கு உட்பட்டு நிதிபதிகள் எந்தவொரு வழக்கையும் தொடர்ந்து விசாரிப்பது இல்லை. ஓரிரு மாதங்கள் முதல் சில மாத இடைவெளியில்தான் வாய்தா போடுகிறார்கள் என்பதை அறியாதவன் அல்ல.

ஆகையால், இந்த கால அளவில் நூல்களைப் படித்து வழக்கை நடத்தி விட முடியும். இப்படி செய்ய முடியாதவர்கள் நிச்சயம் வாழைப்பழ சோம்பேறிகளே!

ஆமாம், சட்ட ஆராய்ச்சியை தொடங்கியது முதல் போதிய உணவும், உறக்கமும் இன்றி அடிப்படைச் சட்ட விதிகளை, அதற்கேற்ற சம்பவங்கள் ஒவ்வொன்றுடனும் அலசி ஆராய்ந்து, அதுபற்றி உங்களுக்கெல்லாம் எளிமை யாகப் புரியும் வகையில், ஒவ்வொரு நூல்களையும் எழுதி முடிக்கவும்.., 

பின் அடுத்தடுத்தப் பதிப்புக்களில் அப்படியே அச்சடித்து தராமல் அதில் சேர்க்க வேண்டிய சட்டத் திருத்தங்களையும், நம் சாதனைகளையும் சேர்க்க என எனக்குத் தான் வருடக் கணக்கில் தேவைப்படுகிறதே தவிர..., 

இதையெல்லாம் படித்து முடிக்க, உங்களுக்கு சில மணி நேரங்கள் முதல் அதிகப் பட்சம் ஓரிரு மாதங்களே போதும். திரும்பத் திரும்ப படிக்க வேண்டு மென்றால் கூட, ஆறு மாதங்களே அதிகம். 

ஆமாம், நீங்கள் புள்ளி வைத்தால் போதும்; நாங்கள் கோலமே போட்டு விடுவோம் என்று, பல வாசகர்கள் படித்து முடித்து சாதித்து இருக்கிறார்கள் என்பதையும் நூல்களில்  ஆங்காங்கே எழுதி உள்ளேன்.

ஆனாலிது, உங்களின் (நோ, தா)க்கம்,  தேவை, திறமை, மனநிலை ஆகியவற்றைப் பொருத்து, புரிதலின் தன்மை நிச்சயம் மாறுபடும்.

உண்மையில், சட்டத்தைப் பற்றி மனக் குழப்பத்தில் உள்ளவர்களுக்கு, இந்நூல்கள் நல்லதொரு மருந்தாக இருக்கும். 

அப்படி இல்லை என்றால், புரிதலில் வேறு விவரிக்க முடியாத கோளாறுகள் இருப்பதாகப் புரிந்துக் கொண்டு,  அடுத்த ஆரோக்கியமான வழியென்ன என யோசித்து முடிவு எடுக்க வேண்டும். 

சட்ட  ஆராய்ச்சியை தொடங்குவதற்கு முன்னர் நானும் இதே நிலைமையில்தான் இருந்தேன் என்பதை, எனது ஆய்வு அறிக்கையில் சொல்லி இருக்கிறேன்.

இப்படி இருந்த நான் தான் சரியாகச் சிந்திக்க ஆரம்பித்ததன் விளைவாக சட்ட ஆராய்ச்சியாளர் ஆகி, இவ்வளவு நூல்களையும் உங்களுக்காகவே எழுதிக் கொண்டிருக்கிறேன். 

எனவே,  நான் சொல்வதை, நீங்க சரியாகப் பின் பற்றினால், சர்வ சாதாரணமாக உங்களது வழக்கை நடத்துவது மட்டுமல்ல; இதுபோன்ற நூல்களைக் கூட, அனுபவத்தில்  உணர்ந்து எழுத முடியும்.

எனவே, நீங்கள் வழக்கை சந்திக்க வேண்டிய அவசரச் சூழ்நிலையில், பதற்றத்தில் படித்து இருந்தாலும், புரியாமல் போயிருக்கலாம். அப்படி இருந்தால், இந்நூல்களைப் படித்து முடிப்பதற்காகவே, தேவையான காலத்திற்கு, வழக்கில் வாய்தா வாங்கிக் கொள்ளுங்கள்.

இந்த காரணத்தையே உங்களுக்கு தெரிந்த வகையில் மனுவாக எழுதி தாக்கல் செய்தாலே  போதும்!

ஆமாம், ச(ண், ட்)டக் கல்லூரியில் மூன்றாண்டுகள் முதல் ஐந்து ஆண்டுகள் வரை பொய்யாகப் படித்து விட்டும்; பின் மூத்தப் பொய்யர்களிடம், இளையப் பொய்யர்களாக பல்லாண்டுகள் பயிற்சி எடுத்து விட்டும்.., 

பின் நிதிபதியாக தேர்வு செய்யப்பட்டும், அரசால் அதற்கான அனைத்துப் பயிற்சிகளும் வழங்கப் பட்டும்; நியமிக்கப் படும் நிதிபதிகள் சொல்லும் தீர்ப்புகளே நிரந்தரம் இல்லாமல்  நிதிபதிகளுக்குள் தடம் மாறும்போது..,

அச்சட்டத்தையே படிக்காத நான், உங்களுக்கு கொடுக்கப்பட்டு உள்ள நீதியைத்தேடி... உள்ளிட்ட நூல்களை முறையாகப் படித்து வாதாட  தேவையான காலத்திற்கு வாய்தா கேட்பது, ‘‘எப்படி நியாயம் இல்லை’’ என, கேட்ட வாய்தா கிடைக்காத போது மட்டும் மனு கொடுங்கள். வாய்தா கேட்பதற்கும் இதே காரணந்தான்.

இப்படி கேட்க வேண்டிய தேவையே இல்லாமல் வாய்தா கொடுத்து விடுவார்கள். இல்லையேல், இப்படி கேட்டப்பின் உறுதியாக கேட்டதற்கு மேலேயே இந்நூல்களைப் படிக்க கால அவகாசம் கிடைக்கும்.  

எப்படியும் கிடைக்கவில்லை என்றால், அதற்காக கவலைப்படாமல், சட்டம் படிக்க வாய்தா கேட்டும் கொடுக்காததால், இந்த வழக்கை எப்படி சட்டப்படி நடத்துவது என்று தெரியவில்லை என, அடுத்தடுத்த ஒவ்வொரு நடவடிக்கையிலும் மனுவை தாக்கல் செய்துக் கொண்டே இருங்கள். போதும். 

ஒருவேளை வழக்கு பாதகமாக முடிந்தால், இதையும் நல்லதொரு காரணமாக மேல்முறையீட்டில் எடுத்துச் சொல்லலாம். 

இதைத்தவிர வேறு எதற்காக வாய்தா வாங்கினாலும், அது நம் கொள்கையின்படி சட்ட விரோத செயலாகும்.

ஏற்கெனவே சொன்ன வாய்தா வழிமுறைகளைப் பின் பற்றி இப்போது, இந்நூல்கள் அனைத்தையும் படித்து முடித்து விட்டீர்களா? இந்த இடத்தில் நீங்கள் தெளிவானதொரு முடிவுக்கு வந்தே ஆக வேண்டி உள்ளது.

அதாவது, இந்நூல்களின் கருத்துக்கள் அனைத்தும் புரிந்ததா... புரியவில்லையா... வழக்கை நாமே தடுமாற்றம் இல்லாமல் இறுதி வரை நடத்த முடியுமா... முடியாதா என தீர்க்கமாக முடிவுசெய்ய வேண்டும். இல்லையெனில், வழக்கு மட்டுமல்ல; வாழ்க்கையும் இரண்டுங் கெட்டானாய் இடியாப்பச் சிக்கலாகி விடும்.

எல்லாம் புரிந்து நடத்துவதாக இருந்தாலுஞ் சரி அல்லது  இந்த நூலில் சொல்லப்பட்டுள்ள சங்கதிகளில் மட்டும் எதாவது புரியாதது இருந்து அதுபற்றி எங்களிடம் கேட்டுப் புரிந்துக் கொண்டு வழக்கை நடத்துவதாக இருந்தாலுஞ் சரி, ரொம்பவே நல்லது!

இல்லையில்லை, எனக்கு எதுவுமே புரியவில்லை. ஆகையால், நான் பொய்யரையோ அல்லது வேறு யாரையோ வைத்து வழக்கை நடத்திக் கொள்கிறேன் என்று முடிவெடுத்தால், அது ரொம்பவே கெட்டது என்பதை எச்சரிக்க வேண்டியது எனது கடமை. அவ்வளவே!

இந்தத் தவறான முடிவில், நீங்கள் தீர்க்கமாக இருந்தால், இந்த நூல்கள் உங்களுக்கு உதவாது அல்லவா? 

ஆகையால், புரியாதது பற்றிய சற்றே விரிவான கடிதத் துடன், இந்நூல்களைப் பத்திரமாக அப்படியே எங்களுக்கு திருப்பி அனுப்பி விட்டு நீங்கள் செலுத்திய நன்கொடையை, கொரியர் செலவு போக திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். 

இந்தத்தொகை உங்களது பெ(ரு, று)ங்கூலிக்கு மாரடிக்கும் பொய்யருக்கு கூடுதலாகக் கொடுக்க உதவும் என்பதோடு, இந்நூல்களும் பயனுள்ளவர் களுக்குப் போய்ச் சேருமே!

0 comments:

Post a Comment

பத்திரிகை செய்திகள்

அறவழி நோட்டா

அறவழி நோட்டா
மகாத்மா போதித்த வாக்குரிமை!

நோட்டா: NOTA

நோட்டா: NOTA
விளக்கம்: EXPLANATION

நூல்களின் முகப்பு

Followers

முக்கியப் பக்கங்கள்

அடிப்படை சட்டங்கள்

  • 1. இந்திய சாசனம் 1950
  • 2. நீதிமன்ற சாசனம் 1872
  • 3. இந்திய தண்டனை சட்டம் 1860
  • 4. குற்ற விசாரணை முறை விதிகள் 1973
  • 5. உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908

நம் நூல்களைப் பற்றி

நீதியைத்தேடி.... நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் வரிசையில்...
1 குற்ற விசாரணைகள்
2 பிணை (ஜாமீன்) எடுப்பது
எப்படி?
3 சட்ட அறிவுக்களஞ்சியம்
4 சட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்
5 சாட்சியங்களைச் சேகரிப்பது
எப்படி?
6 கடமையைச் செய்!
பலன் கிடைக்கும்
7 மநு வரையுங்கலை!Recent Posts Widget

இந்நூல்கள் அனைத்தும் உங்களின் சட்ட விழிப்பறிவுணர்வுக்காக
மத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவியோடு
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பொது நூலகங்கள், மத்திய சிறைச்சாலைகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

சொந்தமாக தேவைப்படுவோர், உ(ய)ரிய நன்கொடையைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு வாட்ஸ்அப் எண் 09842909190 ஆகும்.

எல்லாப் பதிவுகளும்!

நம் தள வகைகள்

பயின்றோர் (20-08-16)