No law no life. Know law, know life! நியாயந்தான் சட்டம்! அதற்கு தேவையில்லை வக்கீழ் பட்டம். வக்கீழ் என்றாலே, கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்களே! இடைத்தரகர்களே!! நீ வாழ, நீயே வாதாடு!

நீ வாழ... நீயே வாதாடு... வரவேற்பு வாழ்த்து!

No law, no life. Know law, know life! என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியத்தை உணர்ந்து, ‘‘நீதியைத்தேடி... சட்டப் பல்கலைக் கழகத்திற்கு’’ வருகை தந்துள்ள உங்களை வருக என வரவேற்று, உங்களுக்கான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்று பயனைப் பெறுக என வாழ்த்துகிறோம்!
முக்கிய அறிவிப்பு : இந்த இணையப்பக்கத்தை புதுப்பிக்கும் பணி நடந்துக் கொண்டிருப்பதால், சில பதிவுகள் அல்லது இணைப்புக்கள் கிடைக்காமல் போகலாம்!

ஆவணக் காப்பகம் - பொது நூலகங்களில் நம் நூல்கள்தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து நூலகங்களுக்கும் நம்முடைய ஏழு நூல்களும் வழங்கப்பட்டுள்ளன. அப்படி கொடுக்க ஆரம்பித்த காலகட்டத்தில், கொடுத்த நூல்கள் நூலகத்தில் இருக்கிறதா என்பதை, நாங்கள் செல்லுமிடங்களில் உள்ள நூலகத்தில் தேடிப் பார்ப்போம். 

சில நேரங்களில் கிடைக்கும். சில நேரங்களில் கிடைக்காது. கூலிக்கு மாரடிக்கும் நூலகர்களை கேட்டால், நான் இப்போதுதான் வந்தேன். தெரியாது என்பார். அப்படி தெரிந்து வைத்திருப்பதும் கஷ்டந்தான். ஆனால், பலரும் படித்தாக உலாப்பேசி அழைப்பில் சொல்லுவார்கள். ஆகையால், நாங்களும் பின்னர் அப்படி சோதனை செய்வதை அலட்சியமாக நேரமின்மையால் விட்டு விட்டோம். 

நம் நூல்களை பொதுநூலகத்தில் கொடுத்திருக்கிறோம் என்ற தகவலை மக்களுக்கு சொன்னால், அவரவர்களும் அருகில் உள்ள நூலகங்களுக்கு சென்று, எங்களுக்காக கொடுத்த சட்ட விழிப்பறிவுணர்வு நூல்கள் எங்கே என்று நூலகர்களைத்தான் கேள்வி கேட்க வேண்டும். 

இப்படி எழுத்து மூலமாக கேள்வி கேட்டால், பதுக்கி வைத்த நூல்கள் அல்லது வாசகர்கள் எடுத்துச் சென்று திருப்பிக் கொடுக்காத நூல்கள் எல்லாம் தானாக திரும்பவும் நூலகத்திற்கு வந்து சேரும்.

நீதிமன்ற நூலகங்கள்

ஆமாம், நிதிபதிகள் படிப்பதற்காக நீதிமன்றங்களுக்கு கொடுத்துள்ள நூல்களின் பட்டியலில் நம் நூல்களின் பெயர் இருந்து, நூல் களவாடப்பட்டிருந்தால், அந்நூலகர்கள் நம்மிடம் கெஞ்சி கூத்தாடி அந்த நூல்களை சொந்த செலவில் விலை கொடுத்து வாங்கி வைத்து விடுகிறார்கள். 

சிறை நூலகங்கள்

மத்திய சிறை நூலகத்தில் உள்ள நம் நூல்களால் பயனடைந்த, விடுதலையான கைதிகளும் பலருண்டு. இதையெல்லாம் தகவல் தெரிவித்தால் மட்டுந்தானே நம்மால் ஆவணப்படுத்த முடியும்? ஆகையால், அப்படி கிடைத்த தகவலை மட்டும் ஆவணப்படுத்தி உள்ளோம். 

மேலும், அங்குள்ள நம் நூல்களை கைதிகளுக்கு கிடைக்காமல் ஒளித்து வைத்திருந்து, விவரமறிந்து கேட்கும் கைதிகளிடம், சிறைக்கேவலர்கள் இலஞ்சம் பெற்றுக் கொண்டும் கொடுப்பதுண்டு என்று அப்படி வாங்கிய கைதிகள் நம்மிடம் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்கள். இதையெல்லாம் இனிதான் ஆவணப்படுத்த வேண்டும்.

கேள்வியை எங்கு கேட்கனும்?

நம்மாளுங்கதான், எங்க எதை கேட்கனுமோ அங்க கேட்காம, கேட்க கூடாதவர்களிடம் கேட்கும் முட்டாள்கள் ஆயிற்றே! 

ஆகையால், எங்களையே எந்தெந்த நூலகத்துக்கு கொடுத்தீர்கள்? அதற்கு அடையாள எண் ஏதாவது இருக்கிறதா என்று, எங்களுக்குள்ள வேலை பளு தெரியாமல், அவ்வப்போது எதாவது முட்டாள்தனமான கேள்வியை கேட்டு எரிச்சலை ஏற்படுத்துவார்கள்.

ஆகையால், இதுபோன்ற முட்டாள்களுக்கு பதில் சொல்லிப் பயனில்லை என்பதால், பெரும்பாலும் பதில் சொல்வதில்லை. அதற்கான நேரமும் இல்லை. பதில் சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை. 

ஆனாலும், அவ்வப்போது சிலர் நூல்களை நூலகத்தில் இருந்து எடுக்கிறார்கள். அப்படி எடுத்ததாக சொன்னதை இப்படி ஆவணப்படுத்தவில்லை. இன்று 01-09-2019 முதல் ஆவணப்படுத்தலாம் என்று உள்ளோம். மேலும், இது கிறுக்குத்தனமாக கேள்வி கேட்பவர்களுக்கு தக்க பதிலைச் சொல்லுமே, அதான்!

மாவட்ட நூலக ஆணைக்குழு

நாங்கள் ஒரு மாவட்டத்திற்கான நூல் முழுவதையும் மாவட்ட தலைமையகத்தில் இயங்கும் நூலக ஆணைக் குழுவிடமே ஒப்படைப்போம். அது அந்தந்த மாவட்டத்தின் கடைகோடியில் உள்ள ஊர்ப்புற நூலகம் வரை செல்லும் என்பதற்கு, பதினோரு ஆண்டுகளுக்கு முன்பு 2008 ஆம் ஆண்டில் கொடுத்த இந்த நூல் ஆதாரம். 


ஆனால், இதனை பழைய நூல் பட்டியலில் வைத்து இருக்கிறார், அந்தக் கொடுங்கோல் நூலகர். இது தவிர நம் நூல்கள் வேறெதுவும் இல்லையாம்.

சபாஷ்!

ஆமாம், பொய் வழக்கில் சிக்குண்ட ஒருவர், தன்னுடைய உடம்பை வளைத்து, ‘‘நமக்கு உதவ சட்ட நூல்கள் எதுவும் நிச்சயம் கிடைக்கும்’’ என்ற தன்னம்பிக்கையோடு நாகநல்லூர் (இந்த ஊரில் இருந்து குறைந்தது இரண்டு கிலோமீட்டர் சென்றால் தான், பேருந்தாம்) என்ற ஊர்ப்புற நூலகத்தில் பழையப் பட்டியலில் இருந்து, நீதியைத்தேடி... சட்ட அறிவுக்களஞ்சியம் என்ற நூலை தேடி எடுத்துள்ளார். சபாஷ்!

நகர்ப்புறத்தில் வசிப்பவர்களுக்கு பல விதங்களில் தேடும் வசதிகள், தகவல் கிடைக்கும் வசதிகள் அதிகம். ஆகையால், இதெல்லாம் சாதாரணமாக கிடைத்து விடும். ஆனால், கிராமத்தில் வாழும் பாமர மக்களுக்கு இதெல்லாம் வெறும் கனவுதான்!

ஆனால், இதையே நனவாக்கி காட்ட வேண்டும், கிராமத்தில் உள்ள பாமர மக்களையும் நம்முடைய சட்ட விழிப்பறிவுணர்வூட்டும் நூல்கள் சென்றடைய வேண்டும், அவர்களும் தானே வாதாட வேண்டும் என்கிற இலட்சிய குறிக்கோள் மற்றும் தன்னம்பிக்கையில்தான், ‘‘அதற்காக தேவைப்படும் நிதியை பிச்சையெடுத்தாவது திரட்டுவேன்; நான் நினைத்தபடி நிச்சயம் நூல்களைக் கொடுப்பேன்’’ என்ற முடிவுக்கு வந்தார், நம் ஆசிரியர்!

தான் கொண்ட கொள்கையில், பின் வாங்காது தொடர்ந்து போராடி சிறைக்கே சென்று, கைதிகளுக்கு சட்ட விழிப்பறிவுணர்வை ஊட்டியவர், சொன்னபடி நிச்சயம் பிச்சையும் எடுத்திருப்பார். நல்ல வேளையாக நாம் அவரை அப்படி பிச்சையெடுக்க விட்டு விடவில்லை. 

ஆமாம், உங்களின் நிதியுதவியுடன் நாங்களும் கொடுத்தோம். உங்களின் நிதியுதவியால் மட்டுமே இந்த நோக்கம் எளிதாக நிறைவேறி இருக்கிறது. ஆமாம், இந்த  நூலை எடுத்த வாசகர் தன் மீதான குற்ற வழக்கில், தானே வாதாட இருக்கிறார்.  

எங்களிடம் தாராளமான நிதி இருந்தால், ஒவ்வொரு நூலையும் ஐந்து அல்லது பத்து வருடங்களுக்கு ஒருமுறை மீண்டும் மீண்டும் அச்சிட்டு கொடுத்துக் கொண்டே இருக்கலாம். இதற்கு காலம் வழி வகுக்கட்டும்!

போதுமான வசதியும் வாய்ப்பும் உள்ளவர்கள் தங்களின் சொந்தப் பணத்தில் ஆரம்ப நூல்களையோ அல்லது அனைத்து நூல்களையோ வாங்கி நூலகத்திற்கு கொடுத்து கண்காணிக்கலாம். இப்படி சிலர் செய்யப்போவதாக சொன்னார்களே ஒழிய செய்யவில்லை. 

இப்படி செய்ய முன் வருபவர்கள், விரும்பினால் வாங்கிய நூல்களை நூலகத்தில் கொடுத்து விட்டு, அப்படி கொடுத்ததற்கான உ(ய)ரிய ஒப்புதலைப் பெற்று அதன் நகலை அனுப்பினால், அதில் எங்களின் பங்காக 20% தொகையை திரும்ப தருவோம். 

இதனை பிற நண்பர்களுடனோ அல்லது ஊர் மக்களின் ஒத்துழைப்புடனோ செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். அனைவரும் நூல்களின் பொருப்பான பாதுகாப்புக்கு உறுதி ஏற்பர். ஆனால், இதில் பலரின் பங்கு இருப்பதால், நாங்கள் பங்கேற்க மாட்டோம். 20% தொகை திரும்ப கிடைக்காது.  

எங்களோடு ஒப்பிடும்போது, இதெல்லாம் உங்களுக்கு மிகமிக சாதாரண சட்ட விழிப்பறிவுணர்வூட்டும் கடமைகளே!

எது எப்படி இருப்பினும், ஏற்கெனவே சொன்னபடி இல்லாத நம் நூல்கள் எங்கே என அங்குள்ள நூலகரையும், மாவட்ட நூலக ஆணைக் குழுவையும் கேள்விமேல் கேள்வி கேட்டு, கண்டு பிடித்து வைக்கச் சொல்ல வேண்டியது, அந்த ஊரில் வசிக்கும் உங்களின், பொதுமக்களின் கடமையே!0 comments:

Post a Comment

பத்திரிகை செய்திகள்

அறவழி நோட்டா

அறவழி நோட்டா
மகாத்மா போதித்த வாக்குரிமை!

நோட்டா: NOTA

நோட்டா: NOTA
விளக்கம்: EXPLANATION

நூல்களின் முகப்பு

Followers

முக்கியப் பக்கங்கள்

அடிப்படை சட்டங்கள்

  • 1. இந்திய சாசனம் 1950
  • 2. நீதிமன்ற சாசனம் 1872
  • 3. இந்திய தண்டனை சட்டம் 1860
  • 4. குற்ற விசாரணை முறை விதிகள் 1973
  • 5. உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908

நம் நூல்களைப் பற்றி

நீதியைத்தேடி.... நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் வரிசையில்...
1 குற்ற விசாரணைகள்
2 பிணை (ஜாமீன்) எடுப்பது
எப்படி?
3 சட்ட அறிவுக்களஞ்சியம்
4 சட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்
5 சாட்சியங்களைச் சேகரிப்பது
எப்படி?
6 கடமையைச் செய்!
பலன் கிடைக்கும்
7 மநு வரையுங்கலை!Recent Posts Widget

இந்நூல்கள் அனைத்தும் உங்களின் சட்ட விழிப்பறிவுணர்வுக்காக
மத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவியோடு
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பொது நூலகங்கள், மத்திய சிறைச்சாலைகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

சொந்தமாக தேவைப்படுவோர், உ(ய)ரிய நன்கொடையைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு வாட்ஸ்அப் எண் 09842909190 ஆகும்.

எல்லாப் பதிவுகளும்!

நம் தள வகைகள்

பயின்றோர் (20-08-16)