(உங், மக்) வரிப்பணத்தில் கூலி வாங்கும் எவரும், (உங், மக்)களின் ஊழியர்களே.
இவ்வூழியர்களை சட்டப்படி வேலை வாங்க வேண்டுமெனில், அவர்களை வேலை வாங்கும் அளவிற்கு, நாம் அவர்களை விட அதிக சட்ட அறிவைப் பெற்றவர்களாக இருக்க வேண்டும்.
இப்படி இருந்(திருந்)தால், அவர்கள் ஊழியர்களாக இரு(ந்திரு)ப்பார்களே ஒழிய ஊழல்வாதிகளாக இரு(ந்திரு)க்க முடியாது. இதனாலேயே, அரசு (உங், மக்)களுக்கு அடிப்படை கல்வியில் சட்டக் கல்வியை வழங்கவில்லை. விளைவு?
நீங்கள் ஊழல் ஊழியர்களிடம் அடிமையாக இருக்கிறீர்கள்.
இந்த இழிநிலையை மாற்றவே, நாம் முன்னெடுத்துள்ள சமூகத்திற்கான சட்ட விழிப்பறிவுணர்வுக் கொள்கை!
இதில், முற்றிலும் வேறுபட்ட முதல் முயற்சியான இந்த ஆவணப் (ப, பா)டம், நம் நூல்களுக்கு சற்றும் குறையாத வகையில், சாட்டையடியாக இருக்கும்; சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியங் குறித்த புரிதலை மிக எளிதில் ஏற்படுத்தி நீங்களே வாதாடத் தூண்டு கோலாக நீதிமன்றக் காட்சிகளை படம் பிடித்துக் காட்டும்.
ஆமாம், இந்த நோக்கத்திற்காகவே இந்த ஆவணப் படத்தை பல கட்டங்களாக மெருகேற்றிக் கொண்டே வருகிறோம். உங்களின் ஆதரவைப் பொறுத்து விரைவில் வெளியிட்டு விடலாம் என்ற நம்பிக்கையிலேயே இந்த முன்னோட்டத்தை முதலில் வெளியிடுகிறோம்.
ஒரு மணி நேரத்திற்கும் மேலான இந்த ஆவணப் படத்தை வழங்கம் போலவே பொதுவுடைமை அடிப்படையில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக பொது நூலகங்களுக்கு வழங்குவதற்கு பதிலாக எவரும் தரவிறக்கம் செய்துக் கொள்ளும் வண்ணம் சமூக வலைத்தளங்களில் பகிர உள்ளோம்.
தேவையானவர்கள் உ(ய)ரிய நன்கொடையை செலுத்தி குறுந்தகடுகளாகவும் பெற்றுக் கொள்ளலாம். பங்களிப்பு தொகை வழங்கியவர்களுக்கு, தேவைப்பட்டால் ஒரு குறுந்தகடு அன்பளிப்பாகவே அனுப்பப்படும்.
மேலும், வழக்கம்போலவே நிதிபதிகளின் அடிப்படை சட்ட அறிவுக்காக, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து நீதிமன்றங்களுக்கு குறுந்தகடுகளாக வழங்கிட உள்ளோம்.
ஆகையால், நமது சட்டக் கடமையின் மற்றுமோர் மைல் கல்லாக அமைய, தங்களால் இயன்ற பங்களிப்பை உடனே செய்திட, இதன் மூலம் அழைப்பு விடுக்கின்றோம்.
ஆவணப்பட முன்னோட்டம் - நீ வாழ, நீயே வாதாடு! ஐ யூடியூபில் காணுங்கள்!
0 comments:
Post a Comment