No law no life. Know law, know life! நியாயந்தான் சட்டம்! அதற்கு தேவையில்லை வக்கீழ் பட்டம். வக்கீழ் என்றாலே, கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்களே! இடைத்தரகர்களே!! நீ வாழ, நீயே வாதாடு!

நீ வாழ... நீயே வாதாடு... வரவேற்பு வாழ்த்து!

No law, no life. Know law, know life! என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியத்தை உணர்ந்து, ‘‘நீதியைத்தேடி... சட்டப் பல்கலைக் கழகத்திற்கு’’ வருகை தந்துள்ள உங்களை வருக என வரவேற்று, உங்களுக்கான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்று பயனைப் பெறுக என வாழ்த்துகிறோம்!
முக்கிய அறிவிப்பு : இந்த இணையப்பக்கத்தை புதுப்பிக்கும் பணி நடந்துக் கொண்டிருப்பதால், சில பதிவுகள் அல்லது இணைப்புக்கள் கிடைக்காமல் போகலாம்!

இது ஆவணப்படம் அல்ல; ஆவணப்பாடம்!நீ வாழ, நீயே வாதாடு! என்ற ஆவணப்படத்தின் முன்னோட்டத்தில் சொல்லியுள்ளபடி, ஓரிரு மாதத்திற்குள் மிகவும் துரிதமாக முடித்து வெளியிட வேண்டும் என்று இரவு பகல் பாராமல் கடமையாற்றிய நேரத்தில், நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலுக்கான நோட்டா பரப்புரை, அது இது என்று விவரிக்க விரும்பாத பல்வேறு காரணங்களால், என் கவனம் முழுவதும் திசைமாறி விட்டதால், திட்டமிட்டபடி ஆவணப்படத்தை முடிக்க முடியாத நிலையில் இருக்கிறது. 

எது எப்படி இருந்தாலும், இக்கடமை தவறிய செயலுக்கு நானே பொறுப்பேற்றுக் கொள்ளும் அதே நேரத்தில், நடப்பதெல்லாம் நன்மைக்கே என்ற கொள்கையின் அடிப்படையில் தாமதத்தை மனதார ஏற்கின்றேன். 

மீண்டும், இந்த ஆவணப்படக் கடமையை அடுத்த வாரத்தில் இருந்து தொடங்குவதற்கான சாத்தியக் கூறுகள் தென்படுகின்றன. ஆனாலும், இனியும் காலத்தை நிர்ணயித்து, எனக்கு நானே ஏமாறவும், கூடவே உங்களையும் ஏமாற்ற விரும்பவில்லை. 

மற்றபடி, இந்த ஆவணப்படத்தை வெளிக்கொண்டு வருவதற்கான போதுமான நிதியை நம் வாசகர்களும், ஆர்வலர்கள் வழங்கி விட்டார்கள் என்றே கருதுகிறேன். தேவை ஏற்படின், பின்னர் தெரிவிக்கிறேன். 

மற்றபடி, நிதிப் பிரச்சினையால், வெளிவரவில்லையோ என்று, நீங்கள் தவறாக நினைத்து விடக்கூடாது அல்லவா? அதற்காகவே இதனைச் சொல்கிறேன்

சரி, இதுவரை சொல்லி வந்த ஆவணப்பட சங்கதிகளுக்கு மாற்றாக, நான் சொல்ல வந்த ஆவணப்பாடம் விசயத்துக்கு வருகிறேன்.

ஆமாம், இது ஆவணப்படம் அல்ல; ஆவணப்பாடம்!

நம் நீதியைத்தேடி.... பிணை (ஜாமீன்) எடுப்பது எப்படி?  உள்ளிட்ட நூல்களில், கண்டுப் பிடிக்க முடியாத திருட்டு வழக்குகளை, அகப்பட்டவன் தலையில் கட்டி விடுவார்கள் என்றும், அப்படி அகப்பட்ட சட்டக் கோவிந்தன் என்ற வாசகர் மீது, சுமார் பன்னிரெண்டு வழக்குகளைகேவலர்கள் கட்டி விட்டு, குண்டர் தடுப்புக் காவலிலும் வைத்த, ஆவணங்களின் அடிப்படையில் புலனாய்வு செய்ததில், சாட்சிகள் எல்லாம் பொய் என்பதை இந்திய அஞ்சல்துறை ஆதாரங்களுடன் நான் சேகரித்து தந்த விவரத்தை சொன்னது நினைவிருக்கும். 

இப்படி, கேவலர்கள் போட்டுள்ள வழக்குகள் எல்லாம் பொய் வழக்குகள் என நான் புலனாய்வு செய்து சேகரித்துத் தந்த ஆவணங்களின் அடிப்படையில் பதினோரு வழக்குகளில் தானே வாதாடிய சட்டக் கோவிந்தன் விடுதலையாகி விட்டார். 

ஆனால், மீதம் இருந்த ஒரேயொரு வழக்கை மட்டும், ஏனோ நல்லதொரு பொய்யனிடம் ஒப்படைக்க, அப்பொய்யனோ மிகவும் சிறப்பாக வாதாடி, ஏழாண்டுகள் சிறைத் தண்டனையைப் பெற்றுத் தந்து விட்டார். 

அதன் மேல்முறையீட்டில், உயர்நீதிமன்ற பிணையில் வந்து சென்னையில் ஆட்டோ ஒட்டிப் பிழைப்பு நடத்திக் கொண்டிருந்த சட்டக் கோவிந்தனை, (எதார்த்தமாக 2012 ஆண்டில் என நினைக்கிறேன்) சென்னையில் சந்தித்த போது, இந்த விவரத்தை சொன்னார். இதையெல்லாம், நூலின் அடுத்தடுத்தப் பதிப்புகளில் சேர்க்க வேண்டும்.  

இப்படி, தன் மீதான நம்பிக்கையை விட, சட்டத்தொழில் பொய்யர்களை நம்பி பலர் வாழ்க்கையை இழக்கின்றனர் என்று கடலூர் சிறையில் இருந்து, எனக்கு வந்துள்ள இக்கடிதத்தின் சங்கதிகள் உங்களுக்கு உணர்த்தி, எச்சரிக்கையாகி விடவேண்டும் என்பதாலேயே இக்கட்டுரையை பதிவிடுகிறேன்.இந்த மூன்று பக்கக் கடிதத்தைப் பொறுமையாகப் படித்தால், கேவலர்களால் கண்டுப் பிடிக்க முடியாத திருட்டு வழக்குகளை சிக்கிய ஏமாளிகளின் தலையில் கட்டுவது போலவே, கேவலர்கள் கொலை கொள்ளை வழக்குகளையும் கட்டுகிறார்கள் என்பதும்...

இதில் வாதாட வீட்டையே விற்றுக் கொடுத்துங்கூட, பெ(ரு, று)ங்கூலிக்கு மாரடிக்கும் பொய்யர் மிகச்சிறப்பாக வாதாடி தண்டனைகளை பெற்றுத் தந்ததையும்...


பின் பணம் கொடுக்க இயலாததால், பொய்யர் வாதாட மறுக்கவே, வேறு வழியின்றி ஒரு கொள்ளை மற்றும் கொலை முயற்சி வழக்கில் மகிளா (மகளிர்) நீதிமன்றத்தில் தானே வாதாடி விடுதலை ஆனதையும்...


ஆகையால், ஏற்கெனவே பொய்யர் மிகச் சிறப்பாக பெற்றுத் தந்த தண்டனைகள் குறித்து, உயர்நீதிமன்றத்துக்கு மேல்முறையீடு செய்ய சட்ட ஆலோசனைகள் கேட்டுள்ளதையும் படிக்க முடியும்.

இதையே வரும்முன் காக்கும் நடவடிக்கையாக, பொய்யனை நம்பாமல் இவரே வாதாடி இருந்தால், எளிதில் வெற்றியைப் பெற்று விடுதலையாகியும் இருக்கலாம்; வீட்டையும் விற்றிருக்க வேண்டிய நிலை வந்திருக்காது.

இதெல்லாம், யாருக்கு எப்போது எப்படி ஞானம் வர வேண்டுமோ அப்படித்தான் வந்து சேரும் என்பதற்கு நல்லதொரு உண்மை!

ஆகையால், பொய்யர்களை வைத்து வழக்கு நடத்தும் முன் சட்டக் கோவிந்தன் மற்றும் இந்த இராஜாவிற்கான அனுபவப் பாடங்களை உங்களுக்கான பாடமாக எடுத்துக் கொள்ளுங்கள் என்று எச்சரிப்பது மட்டுமே எங்கள் கடமை. அபிஸ்டு போல மீறினால், அது உங்களது மடமையே!  


இந்தக் கடிதம் சட்ட முறைப்படி, சிறைத்துறையால் தணிக்கை செய்யப்பட்டே நமக்கு அனுப்பப்பட்டு உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இதில், படிப்பறிவு இல்லாத இராஜாவுக்கு தானே வாதாடலாம் என்பது, சிறைக்கு நன்கொடையாகக் கொடுத்துள்ள நம் நூல்களின் மூலமே தெரிந்துள்ளது என்பதோடு, ஏற்கெனவே இப்படி, சங்கர்லால் என்ற விசாரணை கைதி தானும் வாதாடி, மற்றவர்களுக்கும் மநு எழுதிக் கொடுத்து சிறையை காலி செய்தது பற்றியும் எழுதி உள்ளேனே!

சரி, இதில்  இராஜா சொல்லியுள்ளதெல்லாம் உண்மைதான் என்றும், அவர் கொள்ளை, கொலை போன்ற குற்றங்களில் ஈடுபடாதவர் என்றும் எப்படி நம்புகிறீர்கள் என்ற நியாயமான கேள்வி, உங்களுக்கு வேண்டுமானால் எழலாம். ஆனால், சட்ட ஆராய்ச்சியாளரான எனக்கு எழவே எழாது.

ஆமாம், உண்மையில் இராஜா கொள்ளையடித்து இருந்தால், வீட்டை விற்று பொய்யனுக்கு பீஸ் கொடுத்திருக்க வேண்டியதில்லை; தொடர்ந்து சித்தாள் வேலைக்கும் போயிருக்க வேண்டியதில்லை; தானே வாதாடிய வழக்கில் விடுதலையும் ஆகி இருக்கவும் முடியாது. 

இதையெல்லாம் விட, தன் நியாயத்துக்காக தானே வாதாட வேண்டும் என்ற உணர்வும் வந்திருக்காது என்ற நிலையில், சாதாரண சித்தாள், பலரை கொலை செய்ய வேண்டிய அவசியம் என்ன? என்ற கேள்விகள் எல்லாம் தண்டனை கொடுத்த முட்டாள் நிதிபதிகளுக்கு எழாமல் போனதில் வியப்பு ஒன்றுமில்லை.

ஆகையால், இராஜாவின் சூழ்நிலை கருதியும், இராஜாவின் தேவையறிந்தும் நம் நூல்களை நன்கொடை வாங்காமல் அன்பளிப்பாக அனுப்ப சொல்லி உள்ளேன். அவ்வளவே! 

1 comment:

  1. படிக்க தெரியாமல், ராஜா அவர்கள் சாதனை புரிந்திருக்கிறார். சபாஷ். ராஜா அவர்கள் உண்மையாக இருந்தால் வெற்றி பெற வாழ்த்துக்கள். நூல்களை படித்த பிறகு வெற்றி நிச்சியம்தானே ...

    ReplyDelete

பத்திரிகை செய்திகள்

அறவழி நோட்டா

அறவழி நோட்டா
மகாத்மா போதித்த வாக்குரிமை!

நோட்டா: NOTA

நோட்டா: NOTA
விளக்கம்: EXPLANATION

நூல்களின் முகப்பு

Followers

முக்கியப் பக்கங்கள்

அடிப்படை சட்டங்கள்

  • 1. இந்திய சாசனம் 1950
  • 2. நீதிமன்ற சாசனம் 1872
  • 3. இந்திய தண்டனை சட்டம் 1860
  • 4. குற்ற விசாரணை முறை விதிகள் 1973
  • 5. உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908

நம் நூல்களைப் பற்றி

நீதியைத்தேடி.... நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் வரிசையில்...
1 குற்ற விசாரணைகள்
2 பிணை (ஜாமீன்) எடுப்பது
எப்படி?
3 சட்ட அறிவுக்களஞ்சியம்
4 சட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்
5 சாட்சியங்களைச் சேகரிப்பது
எப்படி?
6 கடமையைச் செய்!
பலன் கிடைக்கும்
7 மநு வரையுங்கலை!Recent Posts Widget

இந்நூல்கள் அனைத்தும் உங்களின் சட்ட விழிப்பறிவுணர்வுக்காக
மத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவியோடு
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பொது நூலகங்கள், மத்திய சிறைச்சாலைகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

சொந்தமாக தேவைப்படுவோர், உ(ய)ரிய நன்கொடையைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு வாட்ஸ்அப் எண் 09842909190 ஆகும்.

எல்லாப் பதிவுகளும்!

நம் தள வகைகள்

பயின்றோர் (20-08-16)