சமூகத்தின் சட்ட விழிப்பறிவுணர்வுக்கான தளம்

நீ வாழ... நீயே வாதாடு... வரவேற்பு வாழ்த்து!

No law, no life. Know law, know life! என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியத்தை உணர்ந்து, ‘‘நீதியைத்தேடி... சட்டப் பல்கலைக் கழகத்திற்கு’’ வருகை தந்துள்ள உங்களை வருக என வரவேற்று, உங்களுக்கான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்று பயனைப் பெறுக என வாழ்த்துகிறோம்!
முக்கிய அறிவிப்பு : இந்த இணையப்பக்கத்தை புதுப்பிக்கும் பணி நடந்துக் கொண்டிருப்பதால், சில பதிவுகள் அல்லது இணைப்புக்கள் கிடைக்காமல் போகலாம்!

ஆவணப்படம் : நீ வாழ, நீயே வாதாடு!




‘‘நியாயந்தான் சட்டம்! அதற்குத் தேவையில்லை வக்கீல் என்கிற பொய்யர் பட்டம்’’ என்ற தத்துவத்தின் அடிப்படையில், நமக்கு நாமே வாதாட வழிகாட்டும் ஏழு நூல்கள் வெளியிடப்பட்டு உள்ளன.

இதில் கடந்த 2010 ஆம் ஆண்டில், மத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவியோடு வெளியிடப்பட்ட ‘‘நீதியைத்தேடி... சாட்சியங்களைச் சேகரிப்பது எப்படி?’’ என்ற நூலோடு சேர்த்து, ‘‘நீ வாழ, நீயே வாதாடு!’’ என்ற ஒலிப்பேழையும் வெளியிடப்பட்டது.

இந்த ஒலிப்பேழையில் என்ன சொல்லப்பட்டு உள்ளது என்பது பற்றிய செய்தி மேற்ச்சொன்ன நூலின் வெளியீட்டார் உரையிலேயே ஒரளவிற்கு சொல்லி உள்ளோம். இருப்பினும், நினைவுபடுத்திக் கொள்வதற்காக சுருக்கமாக சொல்கிறோம்.

அதாவது திரு. நெமிலியப்பன் என்ற விவசாயி, அவரது ஊரிலுள்ள பொது நூலகத்தில் இருந்து, நம்முடைய முதல் நூலான நீதியைத்தேடி... குற்ற விசாரணைகள் என்ற நூலை மட்டும் எடுத்துப் படித்து விட்டு, ‘‘தன் மீதான பொய் வரதட்சினை வழக்கில் தானே வாதாடி விடுதலை ஆனார்’’! 

இந்த ரு-சிகர அனுபவத்தை ஆசிரியர் திரு. வாரண்ட் பாலா அவர்களைச் சந்தித்து, வழக்கின் ஆரம்பம் முதல் இறுதி வரை அதாவது, இவரது தரப்புப் பொய்யர் எதிர்தரப்பிடம் விலை போனதில் ஆரம்பித்து, நிதிபதியை இவரது ரசிகர் ஆக்கியது வரையென தான் வாதாடிய அனுபவத்துடன் விளக்கிச் சொன்ன போது, அதனை தன் சமயோதித்த புத்தியால், அதனை அப்படியே ஆசிரியர் ஒலிப்பதிவு செய்ய, பின் அதுவே நூலோடு ஒலிப்பேழையாக வெளியிடப்பட்டது. 

ஆனால், ‘‘நீதியைத்தேடி... சாட்சியங்களைச் சேகரிப்பது எப்படி?’’ நூலோடு சேர்த்து நூலகங்களுக்கும், நீதிமன்றங்களுக்கும் கொடுக்கப் படவில்லை. காரணம், அப்போதிருந்த நிதிப்பற்றாக்குறை மற்றும் நாமே கொடுத்தாலும் நூலைப் படிப்பது போல, இதனை கேக்க வழியில்லை என்பதே. 

தன் வழக்கில் தானே வாதாடுவோர் நாளுக்கு நாள் அதிகரித்து வரும், இன்றைய சூழ்நிலையில் இந்த ஒலிப்பேழையை நம் சாட்டையடி விளக்கத்துடனும், அதற்கேற்ற விளக்கப் படங்களுடனும் ஆவணப் படமாக வெளியிட்டால், நீதிமன்றத்தில் வாதாடும் நம் வாசக வழக்காளிகள் உள்ளிட்ட பலருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் அல்லவா?! 

ஆகவே, இக்களப்பணியில் நம் ஆசிரியர் திரு. வாரண்ட் பாலா அவர்கள் களமிறங்கி, பல்வேறு இன்னல்களுக்கு இடையில் ஈடுபட்டு, வெகு விரைவில் வெளியிட திட்டமிட்டு உள்ளார். 

நம் நூல்களைப் போலவே, இதுவும் சட்ட விழிப்பறிவுணர்வில் நிச்சயமாக புதியதொரு புரட்சியை ஏற்படுத்தும். இந்தப் புரட்சி அடுத்தகட்ட நடவடிக்கைக்கு அடித்தளமும் அமைத்துக் கொடுக்கும் என்பதற்கான அறிகுறிகளும் ஆரம்பமாகி விட்டன.

ஆமாம், இதே நேரத்தில் வாதாடி விடுதலையான விவசாய வாசகர் நெமிலியப்பனும், இதுபற்றியும் நம் சட்ட விழிப்பறிவுணர்வைப் பற்றியும் திரைப்படம் ஒன்றை தயாரித்து, அடுத்த ஆண்டிற்குள் வெளியிடும் பணியில் மும்மரமாக ஈடுபட்டு உள்ளார். 

ஆனாலிது, வழக்கமான திரைப்படம் போல் இல்லாமல், சமூகத்தில் நிலவும் பல்வேறு பிரச்சினைகளுக்கு நம் பாணியில் சட்டத் தீர்வை சொல்லும் பலமான (ப, பா)டமாக இருக்கும் என நிச்சயம் நம்பலாம். 

ஆமாம், அந்நூலை எழுதிய குருவும், அந்நூலைப் படித்து வாதாடி விடுதலையான விவசாய சிஷ்யரும் இணைந்தே கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என எல்லாவற்றிலும் ஈடுபட இருக்கிறார்கள் என்றால், சொல்லவா வேண்டும்?!!

இப்போது தயாராகிக் கொண்டிருக்கும், ‘‘நீ வாழ நீயே வாதாடு!’’ ஆவணப்படத்தை, வழக்கம் போலவே பொதுவுடைமை அடிப்படையில் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு அனைவருக்கும் கிடைக்கும்படி செய்ய உள்ளார். 

ஆனால், இதனை நிதிபதிகள் பார்க்க வேண்டுமே! அவர்கள் சமூக வலைத்தளத்தில் பார்த்தாலும், பார்க்கவில்லை என்று பொய்ச் சொல்லக்கூடுமே!!

ஆகையால், ஏற்கெனவே நூல்களைக் கொடுத்தது போல, இந்த ஆவணப்படத்தையும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து வகையான நீதிமன்றங்களுக்கும் குறுந்தகடாக வழங்கிட உள்ளோம். 

இன்று அனைத்து நீதிமன்றங்களும் கணினி மயமாக்கப்பட்டு உள்ளதாலும், தகவல் தொழில் நுட்பம் கைக்குள் வந்து விட்டாலும், அவர்கள் பார்த்தே ஆக வேண்டும்.  

ஆமாம், இந்த ஆவணப்படத்தை பார்த்தால்தான், அரசூழியர்கள், காவலூழியர்கள் அரசுப் பொய்யர்கள், பொய்யர் மற்றும் நிதிபதிகளுக்கு நம்மீது மக்கள் வைத்திருக்கும் மரியாதை என்ன? என்பது புரியும். அனைவருக்கும் நல்லதொரு (ப, பா)டமாக இருக்கும். 

எனவே, இந்த ஆவணப்படத்திற்கென நன்கொடை அளிக்க விரும்புவோர், 

Account Name :  CARE Society

Account Number :  768307417

Account Type :  Saving Bank Account

IFSC code   :  IDIB000H011

Bank Name   :  Indian Bank, Hosur – 635109

என்ற கேர் சொசைட்டி வங்கிக் கணக்கில், for NVNV Documentary என்ற குறிப்போடு, கூடிய விரைவில் செலுத்தி விட்டுவிட்டு, செலுத்திய தகவலை வழக்கம் போலவே 09842909190 என்ற வாட்ஸ்அப் எண்ணில், கணக்கு வழக்கு பராமரிப்புக்காக அவசியம் தகவல் தெரிவித்து உதவவும்.

நூல்களின் முகப்பு

நியாயந்தான் சட்டம்

Follow by Email

Followers

முக்கியப் பக்கங்கள்

அடிப்படை சட்டங்கள்

  • 1. இந்திய சாசனம் 1950
  • 2. நீதிமன்ற சாசனம் 1872
  • 3. இந்திய தண்டனை சட்டம் 1860
  • 4. குற்ற விசாரணை முறை விதிகள் 1973
  • 5. உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908

நம் நூல்களைப் பற்றி

நீதியைத்தேடி.... நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் வரிசையில்...
1 குற்ற விசாரணைகள்
2 பிணை (ஜாமீன்) எடுப்பது
எப்படி?
3 சட்ட அறிவுக்களஞ்சியம்
4 சட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்
5 சாட்சியங்களைச் சேகரிப்பது
எப்படி?
6 கடமையைச் செய்!
பலன் கிடைக்கும்
7 மநு வரையுங்கலை!Recent Posts Widget

இந்நூல்கள் அனைத்தும் உங்களின் சட்ட விழிப்பறிவுணர்வுக்காக
மத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவியோடு
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பொது நூலகங்கள், மத்திய சிறைச்சாலைகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

சொந்தமாக தேவைப்படுவோர், உ(ய)ரிய நன்கொடையைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு வாட்ஸ்அப் எண் 09842909190 ஆகும்.

நம் தள வகைகள்

பயின்றோர் (20-08-16)