நீ வாழ... நீயே வாதாடு... வரவேற்பு வாழ்த்து!

No law, no life. Know law, know life! என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியத்தை உணர்ந்து, ‘‘நீதியைத்தேடி... சட்டப் பல்கலைக் கழகத்திற்கு’’ வருகை தந்துள்ள உங்களை வருக என வரவேற்று, உங்களுக்கான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்று பயனைப் பெறுக என வாழ்த்துகிறோம்!
முக்கிய அறிவிப்பு : இந்த இணையப்பக்கத்தை புதுப்பிக்கும் பணி நடந்துக் கொண்டிருப்பதால், சில பதிவுகள் அல்லது இணைப்புக்கள் கிடைக்காமல் போகலாம்!

பொதுவுடைமை நூல்கள் மற்றும் குறுந்தகடுகள்


இந்தியாவில் மத்திய அரசும், மாநில அரசுகளும் தத்தமது அதிகாரங்களுக்கு உட்பட்ட சட்டங்களை இயற்றுகின்றன. மேலும், இவ்விரண்டு அரசுகளும் சேர்ந்து செயல்பட வேண்டிய விசயங்களுக்காக, சேர்ந்தே சட்டங்களை இயற்றுகின்றன. இவைகள் பற்றிய முழு விபரங்கள் இந்திய சாசனத்தில் (அரசமைப்பில்) ஏழாவது அட்டவனையில் மத்தியப்பட்டியல், மாநிலப்பட்டியல் மற்றும் பொதுப்பட்டியல் என்கிற தனித்தனி தலைப்புகளில் கொடுக்கப்பட்டுள்ளது. 
மத்திய சட்டத்தைப் பொருத்தவரை, குடியரசுத்தலைவரும், மாநில சட்டத்தைப் பொருத்தவரை ஆளுநரும் கையெப்பமிட்டதும் அமலுக்கு வருகிறது. இவ்விரு அரசுகளும் சேர்ந்து இயற்ற வேண்டிய சட்டத்திற்கு குடியரசுத் தலைவரே கையெப்பமிட வேண்டும். 
மத்திய சட்டத்தை பொருத்தவரை, இந்தியாவில் வசிக்கும் சாதாரண குடிமகன் முதல் குடியரசுத்தலைவர் வரை கட்டுப்படுத்தும். இதேபோல், மாநில சட்டங்களை பொருத்தவரை, அம்மாநிலத்தில் வசிக்கும் குடிமகன் முதல் ஆளுநர் வரை கட்டுப்படுத்தும். 

இப்படி குடியரசுத் தலைவரும், ஆளுநரும் கையொப்பமிட்டு அமல்படுத்தியுள்ள சட்டத்தை அவர்கள் முதல் அவர்களுக்கு கீழான அதிகாரம் கொண்ட எவரும் மீற முடியாது.
அப்படி மீற வேண்டுமானால், அவர் குடியரசுத் தலைவரை விட அல்லது ஆளுநரை விட, அதிக அதிகாரம் கொண்டவராக இருக்க வேண்டும் அல்லது மத்திய அரசின் சட்டத்தில் இருந்து ஒருசில குறிப்பிட்ட மாநிலங்களுக்கு குடியரசுத்தலைவர் மத்திய அரசின் இம்முழுச் சட்டமோ அல்லது ஒருசில குறிப்பிட்ட பகுதிகளோ பொருந்தாது என விதி விலக்கு அளித்திருக்க வேண்டும்.
குடும்பத்தின் பொறுப்புகள் அனைத்தும் எப்படி குடும்பத் தலைவரிடம் இருக்கிறதோ அதேபோல, இந்தியாவின் மற்றும் மாநிலத்தின் தலைமை நிர்வாக பொறுப்புகள் அனைத்தும், இந்திய சாசனக் கோட்பாடு 53(1) மற்றும் 154(1) இன்படி, முறையே குடியரசுத் தலைவரிடமும், ஆளுநரிடமும்தாம் இருக்கிறது என்பதால், இவர்களை விட அதிக அதிகாரம் உள்ளவர்கள் என நாட்டில் மற்றும் மாநிலத்தில் யாருமே கிடையாது.
இவர்களுக்கு உதவி செய்யத் தேவையான, அந்தந்த அமைச்சரவையை ஏற்படுத்தவே தேர்தல் மூலம் மக்கள் தங்களின் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கின்றனர். இப்பிரதிநிதிகளில் இருந்து அமைச்சர்கள் நியமிக்கப் படுகின்றனர். இதனாலேயே, குடியரசுத் தலைவரும், ஆளுநருமே, அளவலாவிய ஏகாதிபத்திய அதிகாரத்தைக் கொண்டவர்கள் என்றும், நமக்கெல்லாம் ஒன்றுமே இல்லை என்றும் ஒருபோதும் தவறாக கருதி விட வேண்டாம். இது குறித்து (பரவலாக்கப்பட்ட அதிகாரம்)  என்கிற கட்டுரையின் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்.
மாநிலங்களுக்கு குடியரசுத் தலைவர் தரும் விதிவிலக்குகளின் கீழ்தாம்,  மும்பை மற்றும் கொல்கத்தாவில் மாநில அரசின் அங்கீகாரத்துடன் விபச்சார விடுதிகள் இன்றும் நடத்தப்படுகின்றன. இதேபோல், இந்தியாவில் வேறு எங்குமே இல்லாத வகையில் தமிழ்நாட்டில், தந்தைப் பெரியாரின் பகுத்தறிவுப் பாதையில், சமயச் சடங்குகள் இல்லாத சீர்த்திருத்த திருமணங்களை நடத்தவும் அனுமதி சிறப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதுவே சட்டம் அமல்படுத்தபடும் முறையும், கடைப்பிடிக்க வேண்டிய முறையும் ஆகும் என்பதால், எந்த அரசின் ஊழியர்கள் சட்டத்தை மீறினாலும், அவர்களுக்கான மேல்நிலை ஊழியரிடம் புகார் செய்யும் மூடத்தனமான நடைமுறையை விட்டொழித்து, சட்ட மீறலுக்கு ஏற்ப, நேரடியாக குடியரசுத் தலைவரிடமோ அல்லது ஆளுநரிடமோ அது குறித்து (சம்பந்தப்பட்ட ஊழியருக்கு சட்டத்தை மீற விதிவிலக்கு தரப்பட்டுள்ளதா?) விளக்கம் கேட்டு, அறிவிப்பு அனுப்புவதுதாம் சட்டப்படி சரியானது; ஊழியர்களை சரியானபடி வேலை வாங்கவும் ஏதுவானதாகும்.
இந்திய சாசனக் கோட்பாடு 361(4) இன்கீழ், ஆளுநர் அல்லது குடியரசுத் தலைவருக்குத்தாம் சட்டப்படியான அறிவிப்பை விடுக்க முடியும். இதுபோன்றதொரு அறிவிப்பை சட்ட ஆராய்ச்சியை தொடங்கிய நான்காம் ஆண்டான 12-07-2004 அன்றே குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ளேன். இதற்கு முன்பாக வேறு யாரும் குடியரசுத் தலைவருக்கு, இக்கோட்பாட்டின் கீழ் அறிவிப்பு அனுப்பி உள்ளார்களா என்பதும் எனக்கு தெரியாது.
ஆனால், கடந்த காலங்களில் அறிவு வறுமை வக்கீல்கள், பரபரப்புக்காகவும், தங்களின் பகட்டுக்காகவும் பல்வேறு விடயங்களில் பிரதமருக்கு அறிவிப்பை அனுப்பினார்கள். அத்தோடு, அவர்கள் அதை மறந்தும் விட்டார்கள் என்பதை நீங்கள் நினைவில் கொள்ளுங்கள்.
இப்படி இந்திய நாட்டில் உள்ள அல்லது ஒரு மாநிலத்தில் உள்ள அனைத்து குடிமக்களும் கடைப்பிடிக்க வேண்டும் என்கிற உன்னத நோக்கத்தோடு, அமல்படுத்தப்பட்ட சட்டத்தை, நம்மைப் போல் அலசி ஆராய்ந்து விளக்கமாக சொல்லாமல், அப்படியே ஈயடிச்சான் காபி போல், நூலாக எழுதி வெளியிடும் வக்கீல்களும், நீதிபதிகளும், சட்ட நூல்களை வெளியிடும் பதிப்பகங்களும், அச்சட்டங்களை தங்களது பாட்டன், முப்பாட்டன் சொத்துக்களைப் போல், எங்களுக்கே உரிமை என்று போட்டுக் கொள்வது அடிப்படை அறிவற்ற செயலே!
ஆதலால்தாம், நீதியைத்தேடி... நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் என்கிற பொதுத்தலைப்பின் கீழ், நான் எழுதியுள்ள ஐந்து சட்ட விழிப்பறிவுணர்வு நூல்கள், கடமையைச் செய்! பலன் கிடைக்கும் மற்றும் மநு வரையுங்கலை! ஆகிய ஏழு நூல்களின், வெளியீட்டு உரிமையையும் பொதுவுடைமை என அறிவித்து உள்ளேன். இனி எழுதப்போகும் நூல்களும் பொதுவுடைமையே!
இதனை முதன் முதலாக கேர் சொசைட்டி மத்திய சட்ட அமைச்சகம், தனக்குத்தானே வாதாடி, தனது நியாயத்தை தக்க வைத்துக் கொண்வர்கள் மற்றும் உங்களைப் போன்ற சட்ட விழிப்பறிவுணர்வு தன்னார்வலர்களின் நிதியுதவியோடு வெளியிட்டு உள்ளது. இதுபோல், நீங்களும் விரும்பும் பெயர்களில், மொழிகளில் வெளியிட்டு விற்பனை செய்து கொள்ளலாம்.
பொதுவுடைமை நூல்களைப் பற்றிய சுருக்க விபர விளக்கங்கள்.
1. நீதியைத்தேடி... நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம்! 
குற்ற விசாரணைகள்.
நீதிமன்றத்தில் வாதாடுவது அப்பா அம்மாவிடம் பேசுவது போல்தான்
என்ற தத்துவத்தை முன்மொழிந்து எழுதப்பட்ட இந்நூல், நீதியைத்தேடி... நூல்களின் வரிசையில் சட்ட விழிப்பறிவுணர்வுக்காக நீங்கள் படிக்க வேண்டிய முதல் நூல் இதுவேயாகும். 

2006 ஆண்டு எழுதப்பட்ட இந்நூலில் சட்டத்தை எளிதாக படிப்பதும், புரிந்து கொள்வது குறித்தும்...
அடிப்படையான ஐந்து சட்டங்களை என்னனென்ன... 

நாமே வாதாடுவதற்கும், பொய்யர்கள் வாதாடுவதற்கும் இடையே உள்ள முக்கிய வேறுபாடுகள் அடங்கியப் பட்டியல் மற்றும் இதனால் நாம் அடையும் விரைவான பலன்கள் குறித்தும்... 
காவல் நிலையத்தில் புகார் கொடுப்பது... 

காவல் நிலையத்தில் கொடுக்கப்படும் புகாருக்கு, சட்டப்படி முதல் தகவல் அறிக்கையை மட்டுந்தான் பதிவுசெய்ய முடியுமே தவிர, இரசீது கொடுக்க முடியாது..
நீதிமன்றத்தில் முறையீடு தாக்கல் செய்வது...

நீதிமன்றத்தில் அல்லது நிதிபதியின் வீட்டில் குற்றஞ் குறித்த முறையீட்டை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் கொடுக்க முடியும் என்பது... 
சாட்சி சொல்ல செலவு தொகை கேட்பது...

நிதிபதிகள் தீர்ப்பு எழுத காரணமாக இருக்கும் சாட்சிகள், தங்களுக்கு ஆகும் சம்பள இழப்பு உள்ளிட்ட ஆதாரச் செலவுகளை நீதிமன்றத்தின் மூலம் பெறுவது... 
வாய்தா கேட்டால், அதற்காக பணம் கேட்பது...

வழக்கு தரப்பினர்களில் எவராவது ஒருவர் வழக்கு நாளன்று சட்டப்படி ஆற்ற வேண்டிய கடமையை ஆற்றாமல், வாய்தா கேட்டால் அன்றைய தினம் தனக்கு ஆன செலவுகளை மறுதரப்பினர் கேட்டுப் பெறுவது...  
மனு எழுதும் முறைகள் மற்றும் மனு மாதிரிகள்... 

மிகச் சுருக்கமான இப்பகுதி, மநு வரையுங்கலை என்ற ஏழாவது நூலாகவும் 768 பக்கங்களைக் கொண்ட பெரிய நூலாகவும் வெளியிடப்பட்டுள்ளது...
என பல்வேறு விடயங்கள் அடங்கியுள்ளன. மிக முக்கியமாக நீங்கள் இந்நூலை வாசிக்கும் போது, படிப்பது போன்று தெரியாது. 

மாறாக, நான் உங்களுடன் இப்படி நேரடியாக பேசிக் கொண்டிருப்பதைப் போலவும், நீங்கள் கேட்டுக் கொண்டிருப்பது போன்ற உணர்வு ஏற்படும் என்பதால், சட்டம் குறித்த அடிப்படையான விபரங்கள் எளிதாக புரிந்து விடும். புது நம்பிக்கையும் பிறக்கும். 
இந்நூல் முழுக்க முழுக்க குற்றம் சார்ந்த விசாரணைகளுக்கு மட்டுமே பொருந்தக் கூடியது. இந்நூலுக்கு பல்வேறு இதழ்கள் எழுதிய மதிப்புரைகள், அதிலேயே தொகுக்கப்பட்டுள்ளன.
இந்நூலின் நன்கொடை ரூ 100. 
2. நீதியைத்தேடி... நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம்! 
பிணை (ஜாமீன்) எடுப்பது எப்படி?
நீதிமன்றத்தில் வாதாடி பிணையில் வருவது மட்டுமல்ல; சிறைக்குள் செல்வதும் சாதனைதான்! 
என்ற தத்துவத்தை முன்மொழிந்து எழுதப் பட்டுள்ள நூல்.


ஆமாம், முதன் முதலாக 2003 ஆம் ஆண்டு எதிர்ப்பாராத விதமாக கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தியபோது பிணை மனு தாக்கல் செய்து உடனே பிணையில் வந்தபின்...

‘‘மக்கு மங்களம்’’ என்ற பெண் நிதிபதி என் மீது வாரண்ட் பிறப்பித்து ஒரு வருடம் கைது செய்யாமல் இருந்ததன் நினைவு நூலாக 2004 ஆம் ஆண்டு எழுதப்பட்டது. 

ஆனால், 2005 ஆண்டில், என் மீதான வாரண்ட்டின்படி கைது செய்ய வைத்து, சிறைக்கு சென்று சுமார் 87 நாட்கள் தங்கியிருந்த அனுபவங்களை எல்லாம் மையப்படுத்தி 2007 ஆம் ஆண்டு, நீதியைத்தேடி... நூல்களின் வரிசையில் நீங்கள் படிக்க வேண்டிய இரண்டாவது நூலாக புதுப்பிக்கப்பட்டுள்ளது. 
பிணையில் வருவதற்கு மொத்தம் எத்தனைப் பிரிவுகள் என உங்களுக்கு தெரிந்த பொய்யரிடம் கேட்டால் குற்ற விசாரணை முறை விதிகள் 436 முதல் 439 வரை என நான்கு விதிகளைச் சொல்லுவார்கள். 

ஆனால், சட்டத்தை சரியாக ஆராய்ந்ததன் விளைவாக, ஆதி முதல் அந்தம் வரையென எந்தெந்தச் சூழ்நிலையில் எப்படி பிணையில் வரலாம் என்பதைப்பற்றி நான் இந்நூலில், ஒட்டு மொத்தமாக ஐம்பத்தியோரு சூழ்நிலைகளையும், அதற்கான சட்ட விதிகளையும் சொல்லியுள்ளேன். 

மக்களின் சட்ட விழிப்பறிவுணர்வின்மையால் நான் ஆராய்ந்துச் சொன்ன மற்ற பிணை விதிகளைப் பொய்யர்கள் பயன்படுத்தி கைதிகளை பிணையில் எடுத்தும் கைதிகளிடம் பெரும் பணத்தை கொள்ளையடித்து வருகின்றனர்.  
2003 ஆம் ஆண்டில், தண்டவாளத்தை தாண்டிச் சென்றது குற்றம் என்று, சென்னை பெரம்பூர் இரயில்வே காவல்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போது, மக்கு மங்களம் என்கிற பெண் நடுவரிடம் வாதாடிய காட்சியை அப்படியே படம் பிடித்து காட்டியுள்ளேன்.
கைது செய்யப்பட்டதும் நமக்குள்ள உரிமைகள் குறித்தும்...
சிறைச்சாலை சட்டங்கள் குறித்தும்... 
சிறைக்கு சென்று வருவதில் உள்ள சிறப்புகள் குறித்தும்...
சிறையில் நடத்திய சட்ட விழிப்பறிவுணர்வு குறித்தும்...
இவ்விழிப்பறிவுணர்வால், தனக்குதானே சிறையில் இருந்து வாதாடிய கைதிகள் குறித்தும்... 
சிறையிலுள்ள விசாரணை மற்றும் தண்டனை கைதிகளின் உண்மையான மன நிலைகள் குறித்தும் பல்வேறு விடயங்களை எழுதியுள்ளேன். 

உண்மையில், சிறை என்பது என்பதுபோன்ற சிந்தனையாளர்களுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும், யாரும் அவ்வளவு எளிதாகப் போய்விட முடியாத தவச்சாலை!

ஆகையால், இந்த நூலை படித்து முடித்ததும் நாமும் ஒருமுறை சிறைக்கு போய் வரலாமே என்கிற எண்ணம் உங்களுக்கும் வரலாம். 

நமக்கு முன்பாக நடக்கும் தவறுகளைத் தட்டிக்கேட்க வேண்டுமென்கிற எண்ணம் ஒன்வொருவருக்கும் இருந்தாலும், பலரால் கேட்க இயலாமல் போவதற்கான முக்கிய காரணம், சிறையைப் பற்றிய பயந்தான். இந்த அச்சத்தை இந்நூல் போக்கி விடும். 
இந்நூலின் நன்கொடை ரூ 100.
3. நீதியைத்தேடி... நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம்! 
சட்ட அறிவுக் களஞ்சியம்.
கடமையைச் செய்தால், பலனை அடையலாம்!
என்ற தத்துவத்தை முன்மொழிந்துள்ள  இந்நூல், 2008 ஆம் ஆண்டில் எழுதப்பட்டது. 

நீதியைத்தேடி... நூல்களின் வரிசையில் படிக்க வேண்டிய மூன்றாவது நூலாகும். சாதாரணமாக சட்டத்தைப் பற்றி அறிய வேண்டுமென நினைப்பவர்களுக்கு இம்முதல் மூன்று நூல்களே போதுமானது. 

முதல் இரண்டு நூல்களை படித்தப்பின் இந்நூலை படித்தால் ஏற்படும் புரிதலை விட, இந்நூலை நேரடியாக படிக்கும் போது கிடைக்கும் புரிதல் மிகவும் குறைவாகவே இருக்கும். உங்களின் திறனைப் பொருத்து புரிதல் மாறுபடலாம்.
இதில், இந்திய சாசனம் என்கிற அரசமைப்பு எந்தெந்த நாடுகளின் சாசனங்களில் இருந்து காப்பியெடுத்து தொகுக்கப்பட்டது... 
இந்திய அரசமைப்பின் சாதக பாதகங்கள்...

அடிப்படைச் சட்டங்கள் ஐந்தை தவிர, அத்தியாவசியமாக உள்ள ஐந்து சட்டங்கள் குறித்தும்... 

தற்போதுள்ள இந்திய சாசனம் சரியாக இல்லை என்றும், ஆகையால் காலத்திற்கு ஏற்றப்படி புதிய சாசனத்தை உருவாக்க வேண்டுமென்ற கோரிக்கை சரியா என்பது குறித்தும்... 

இந்திய சாசனத்தில் மத்திய அரசு செய்த திருட்டுத்தனமான திருத்தங்கள் குறித்தும்... 

சட்டத்திற்கு இறுதி விளக்கஞ் சொல்லும் உச்சநீதிமன்ற நிதிபதிகள் செய்யும் திருட்டுத்தனங்கள் குறித்தும்... 

சமுதாயத்தில் இன்று நிலவும் லஞ்சம், மணக்கொடை, சொத்து பிரச்சினைகள், பாகப் பிரிவினை, அனைத்து மத திருமணம் தொடர்பான விபரங்கள் என பல்வேறு விடயங்களுக்கு தீர்வுதரும் வழிமுறைகளை 155 தலைப்புகளின் கீழ் எழுதியுள்ளேன். 
நீதியைத்தேடி... வரிசையில் எழுதப்பட்டுள்ள ஐந்து நூல்களில் 400 பக்கங்களைக் கொண்ட பெரிய நூல் இதுவே! 
இந்நூலின் நன்கொடை ரூ 100.
4. நீதியைத்தேடி... நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம்! 
சட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்.
நியாயந்தான் சட்டம்! அதற்கு தேவையில்லை வக்கீல் பட்டம் 
என்ற தத்துவத்தை முன்மொழிந்துள்ள மிகமிக முக்கியமான இந்நூல் 2009 ஆம் ஆண்டில் எழுதப்பட்டது. 

ஆமாம், சட்ட ஆராய்ச்சியை ஆரம்பித்த இரண்டு வருடங்களில், இப்படியொரு நூலை எழுத வேண்டுமென்று எழுந்த எண்ணம் ஏழு வருடங்கள் கழித்தே இந்நூலின் வழியாக முழுமைப் பெற்றது. 

நீதியைத்தேடி... நூல்களின் வரிசையில் முதல் மூன்று நூல்களை படித்து புரிந்திருந்தால் மட்டுமே, இந்நூலைப் படித்து புரிந்து கொள்ள முடியும். எந்தவொரு வழக்கைச் சந்திப்பவர்களுக்கும் இந்த நூல் மிகமிக அவசியம். 

ஆமாம், நீங்கள் ஒரு சாதாரணப் பிரச்சினைக்காக நீதிமன்றம் சென்றால், அதனைப் பொய்யர்கள் அவர்களின் பிழைப்புக்காக குறைந்தது ஒன்பது பிரச்சினைகளாக உருவாக்கி விடுவார்கள். 

பொய்யர்களில் கிரிமினல், சிவில், லேபர், விவாகரத்து, நுகர்வோர் என தனித்தனியாக உள்ளனர். கிரிமினல் பொய்யர் மீது ஒரு சிவில் வழக்கு என்றால், அதனை அவருக்கு நடத்த தெரியாது. இதுபோல்தான், மற்ற வழக்குகளுக்கும். 

குற்றம் தொடர்பான வழக்குகளைத் தவிர, பல உரிமையியல் சார்ந்த வழக்குக்கள் குற்ற வழக்குகளாக வேண்டுமென்றே திட்டமிட்டு மாற்றப் படுகின்றன.

உண்மையாக, முதலாளியை எதிர்த்து தொழிலாளி போராடினால், முதலாளியே கம்பெனி பொருளை உடைத்து விட்டு, தொழிலாளி மீது காவல் நிலையத்தில் புகார் கொடுப்பது... 

சாதாரண நிலத்தகராறை திட்டமிட்டு அடிதடியாக்கி அல்லது வெட்டு குத்தாக்கி குற்றவியல் வழக்காக மாற்றி தண்டனைக்கு உள்ளாக்குவது... 

மனைவி எதற்கெடுத்தாலும், கணவன் வீட்டார் மீது வரதட்சினை வழக்கு கொடுப்பது... 

எதற்கெடுத்தாலும், சாதியைச் சொல்லி திட்டினார் என வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் புகார் கொடுப்பது என பல்வேறு விடயங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம். 

உங்களுக்காக, நீங்களே வாதாட முனைந்துள்ள உங்களுக்கு இதுபோன்ற வழக்குகள் எது வந்தாலும், அதை எளிதாக எதிர்க்கொள்ளும் விதத்தில் சாசனங்கள், சட்டங்கள் மற்றும் விதிகள் என 14 வகையான சட்ட விதிகளை ஒருங்கிணைத்து பட்டியல் இட்டுள்ளேன். 

ஆகையால், இந்த நூல் எந்த வகையான வழக்கக்களைச் சந்திப்பவருக்கும் வரப் பிரசாதமாக இருக்கும் வகையில், நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பதற்கு முன்பாக கொடுக்கப்படும் அறிவிப்பில் ஆரம்பித்து, சொல்லப்பட்ட தீர்ப்பை நிறைவேற்றுவது வரை, ஒவ்வொரு நிலையிலும் செய்ய வேண்டிய செயல்களை விளக்கியுள்ளேன். 

அதாவது, நீங்களே வாதாட இந்திய அரசமைப்பில் கோட்பாடு 19 இல் ஆரம்பித்து, மற்ற 13 சட்ட விதிகளுக்கான பிரிவுகள் ஒரே நேர்க்கோட்டில் பட்டியல் இடப்பட்டிருக்கும். இதனால், உங்களுக்கான எந்தவொரு வழக்கை நடத்துவதும் மிகமிக எளிது.  

இந்த 14 சட்ட விதிகளும் ஒன்றுக்கொன்று அதிகபட்சம் தொடர்பில்லாத தாகவும், நேரெதிர் திசையின் தன்மையைக் கொண்டது. இன்னும் புரியும்படி சொல்லப்போனால், இந்தியாவில் உள்ள மதங்கள், சாதிகளை எல்லாம் ஒருங்கிணைத்து, ஒரே நேர்க்கோட்டில் நிலை நிறுத்துவது போன்றது. இவைகளை ஒருங்கிணைத்திருப்பது, இதுவரை யாரும் செய்யாதது.

பொதுமக்களுக்கு பயன்பட வேண்டும் என்கிற நோக்கில் எழுதப்பட்ட இவ்வைந்து நூல்களையும், வக்கீல்களும், நீதிபதிகளுமே வரப்பிரசாதமாக படிக்கின்றனர்.

இந்நூலின் பின்பக்க அட்டையில், வக்கீல் தொழிலை விபச்சாரித் தொழில் என்று கூறிய சத்தியவான் காந்தி, அனைவரும் ஆச்சரியப்படத்தக்க வகையில், அத்தொழிலை எப்படி சத்தியமாக மேற்கொண்டார் என்பதை, அவரது சத்தியச்சோதனை நூலில் இருந்து தொகுத்துள்ளேன்
இந்நூலின் நன்கொடை ரூ 100.
5. நீதியைத்தேடி... நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம்! 
சாட்சியங்களை சேகரிப்பது எப்படி?
வக்கீல் என்றாலே கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்களே! இடைத் தரகர்களே!! 
என்ற காலத்தால் அழிக்க முடியாத அதிரடி தத்துவத்தை முன்மொழிந்துள்ள மிக முக்கியமான இந்நூல், நீதியைத்தேடி... நூல்களின் வரிசையில் 2010 ஆம் ஆண்டில் எழுதப்பட்ட பத்து வருட சட்ட ஆராய்ச்சியின் கடைசி நூலாகும். 
கண்ணால் காண்பதும் பொய்; காதால் கேட்பதும் பொய்; தீர விசாரிப்பதே மெய் என்பது நீதி விசாரணைக்கான அடிப்படை இலக்கணம்.
நாம் எதை சொன்னாலும், அதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது என்பதுதான், சாதாரணமாக கேட்கும் கேள்வியாக இருக்கிறது. நீதிமன்றத்தைப் பொருத்த வரை சொல்லவே வேண்டாம். 

சரியான ஆதாரங்களை தந்தாலும் கூட, ஏற்க மறுப்பார்கள். நம்பிக்கையோடு நண்பனுக்கு தந்த பணத்தை திருப்பி தர மறுக்கிறான்... இப்படி பல்வேறு செயல்கள் ஆதாரமில்லாத குற்றங்களாகி விடுகின்றன. 
நீதிபதிகள் உட்பட உங்களின் ஊழியர்கள் சட்டத்துக்கு புறம்பான செயல்களில் ஈடுபடுகிறார்கள்... இப்படி எத்தனையோ சம்பவங்கள் ஆதாரத்தோடும், ஆதாரமில்லாமலும் அனுதினமும் நடக்கின்றன. 

இதற்காக பொய்யர்கள் சாட்சிகளை உருவாக்குவார்கள். திட்ட மிட்டு உருவாக்கும் ஆதாரங்கள் உருகுலைந்து போகும்.  

கடனுக்கு மாரடிக்கும் காவலூழியர்களும், பெ(ரு, று)ங்கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்களும் ஆதாரங்களை உருவாக்குவதால்தான் பல்வேறு முக்கிய வழக்குக்களில் குற்றவாளிகள் தண்டனையில் இருந்து தப்பி விடுகிறார்கள். 
குற்றங்கள் எதையுமே தடையங்கள் இல்லாமல் செய்யமுடியாது என்கிற அடிப்படையில் அத்தடையங்களைச் சேகரிப்பது எப்படி என்பதை இந்நூல்  விளக்குகிறது. 
இவைகளை எல்லாம் எப்படி சட்டரீதியான ஆதாரங்களாக, நவீன தொழில் நுட்பங்களின் உதவியோடு சேகரிப்பது, பாதுகாப்பது என்பனவற்றை நடந்த உண்மைச் சம்பவங்களை மையப்படுத்தி தக்க கதையாகச் சொல்லி உணர்த்தும் வகையில் எழுதப்பட்டுள்ளது. 
இந்நூலின் நன்கொடை ரூ 120. 

6. கடமையைச் செய்! பலன் கிடைக்கும் 
(தன்னாட்சிக்கான கொள்கைச் சாசனம் ஒன்றாம் தொகுதி)

கடமையைச் செய்! பலனை எதிர்ப்பாராதே என்பதற்கு மாறாக, ‘‘கடமையைச் செய்! பலன் கிடைக்கும்’’ என்ற மாறுபட்ட தலைப்பின் பெயருக்கு ஏற்ப மாறுபட்ட கண்ணோட்டத்தோடும்... 
நம் கடமையை ஏற்பதே நமக்கான அங்கீகாரம்! அதிகாரம்!! 
என்ற தத்துவத்தை முன்மொழிந்தும் எழுதப்பட்டுள்ள இந்நூல் பத்து வருட சட்ட ஆராய்ச்சியை முடித்து விட்டு 2010 இல் வெளியேறிய பிறகு, 2013 ஆம் ஆண்டில் மத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகம், தானாகவே அழைத்து நிதியைக் கொடுத்து நூலொன்றை வெளியிடச் சொன்னதன் பேரில் 2014 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஆறாவது நூலாகும்.

இதற்கு முந்தைய ஐந்து நூல்களும் உரிமைகளை நிலை நாட்டிக் கொள்வதற்காக எழுதப்பட்டவை. ‘‘கடமையைச் செய்தால் மட்டுமே, அதற்கான பலனை அடையலாம்’’ என்பதை அறிவுறுத்தும் விதமாக தொகுத்து எழுதப்பட்ட முதல் கொள்கை விளக்க நூல் இதுவே!

ஆமாம், இந்நோக்கத்தை அறிவுறுத்தும் விதமாக ஏற்கெனவே 2007 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரை இருமாத இதழாக எழுதி வந்த இதழின் கருத்துக்களை பனிரெண்டு அத்தியாயங்களாகப் பிரித்து முதல் நான்கு அத்தியாயத்தை மட்டும் ஒன்றாம் தொகுதியாக வெளியிடப்பட்டு உள்ளது. மீதமுள்ள எட்டு அத்தியாயங்களும் குறைந்தது மூன்று தொகுதிகளாக வெளிவரும் நிலை உள்ளது. 

இந்நூலின் அடிப்படை குறிக்கோள் ‘‘குடிமக்கள் தங்களைத் தாங்களே ஆளம் வகையில், எச்சார்புத் தன்மையும் இல்லாமல், தங்களது சுயச்சார்பு அடிப்படையில் தன்னிகர் அற்ற வகையில் தனிச் சிறப்போடு வாழவேண்டும்’’ என்பதே ஆகும். இந்த உன்னத நோக்கத்திற்காக, 

குடிமக்களின் தலையாக கடமைகள் என்னென்ன... 

தன் நலங்கருதாது தனிப்பட்ட முறையில் கடமையை ஆற்றும், கடமையாளர்களைப் பற்றிய ஓர் ஆய்வுக்கோர்வை... 

நமது வாசகக் கடமையாளர்களின் (மெ, பொ)ய்யறிவும்!?

தன்னார்வ அமைப்புக்களின் (கட, மட)மையும்!?

ஆகிய நான்கு அத்தியாயங்களின் கீழ் நாற்பத்தி மூன்று வகையான மிகமிக முக்கியமான (க, கு)ட்டுரைகள் தொகுக்கப்பட்டு உள்ளன. 

இந்நூலின் பக்கங்கள் 376. நன்கொடை 200. 

7. மநு வரையுங்கலை! 

‘‘கடமையைச் செய்! பலன் கிடைக்கும்’’ என்பதை தொடர்ந்து, மீண்டுமோர் மாறுபட்ட கோணத்தில், ‘‘எந்தப் பிரச்சினையாக இருந்தாலும், அதில் தர்மத்தின் அடிப்படையில் தலையிட்டு நியாயத்திற்கும் மேலான தர்மத்தை தட்டிக்கேட்க தயங்காதீர்’’ என்ற கொள்கையை அறிவுறுத்தும் குறிக்கோளுடன்... 

எங்களால் அதிரடியாக நடைமுறைப்படுத்தி காட்டப்பட்டுள்ள சிவில், கிரிமினல், தொழிலாளர், திருமண விவாகரத்து, நுகர்வோர், நீதிமன்ற அவமதிப்பு வழக்குக்களில் செய்யப்படும் மநுத்தாக்கல், பதிலுரை தாக்கல், சீராய்வு மநுத்தாக்கல், மேல்முறையீட்டு மநுத்தாக்கல் உள்ளிட்ட பல்வேறு வகையான அர்த்தமுள்ள அதிரடியான தாக்குதல்கள் நிறைந்த மநுக்களை தொகுத்தும்... 
அரசின் கூலிக்கு மாரடிக்கும் எவரும், காரிய அடிமைகளே! கயமைக் கோமாளிகளே!! வெள்ளையர்களை விஞ்சிய கொள்ளையர்களே!!! 
என்ற தத்துவத்தை முன்மொழிந்தும் எழுதப்பட்டுள்ள ஏழாவது நூலாகும். 

இதன் மூலம், நீதியைத்தேடி... குற்ற விசாரணைகள் நூலின் பிற்பகுதியில் மிகச் சுருக்கமாகவும் குற்றவியலைச் சார்ந்தும் கொடுத்திருந்த மனு மாதிரிகள், தற்போது அனைத்திற்குமான ‘‘மநு வரையுங்கலை’’ ஆகிவிட்டது. 

இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ள மநுக்களை படிக்கும்போது, இப்படியெல்லாங்கூட சட்டப்படி எழுத முடியுமா என்கிற ஆச்சரியமும், இப்படி எழுதினாலுங்கூட நிதிபதிகளாலும், அதிகார வர்க்கத்தாலும் சட்டப்படி நம்மை ஒன்றுஞ் செய்யமுடியாது என்ற நம்பிக்கையும் உங்களுக்கு வெளிப்படும். 

குறிப்பாக, ரிட் என்கிற நிதிப்பேராணை மனுக்களை, எப்படியெல்லாம் சட்ட விரோதமாக பயன்படுத்துகிறார்கள் என்பதில் இருந்து, இந்நிதிப் பேராணையே நீதியின் சாபக்கேடாக இருக்கிறது’’ என்பது வரை முதல் அத்தியாயம் முழுவதும் எழுதப்பட்டுள்ளது. 

மேலும், சட்டப்படி ஒரு வழக்கை எப்படி தாக்கல் செய்ய வேண்டும், எதிர்க்கொள்ள வேண்டும், இறுதியாக எவ்வளவு நாளில் அவ்வழக்கை விசாரித்து முடிக்க வேண்டும் என்பது பற்றியும் ஓர் அத்தியாயத்தில் விளக்கி எழுதப்பட்டுள்ளது. 

மிகமிக முக்கியமாக சட்டத்தில் வெளிப்படையாக சொல்லப்படாத அரைகுறை ஊழியர்கள், அரசூழியர்கள் மற்றும் பொதுவூழியர்கள் குறித்தும், அவரவர்களின் பலம், பலவீனங் குறித்தும் விளக்கி எழுதப்பட்டுள்ளது. 

இந்நூலின் பக்கங்கள் 768. நன்கொடை 400. 

8. தகவல் பெறும் உரிமைச் சட்டம் - 2005 
இரண்டாவது சுதந்திரமா? அரசின் தந்திரமா?! 

இது, அடிப்படை உரிமைகளுக்கும், அடிப்படைச் சட்டங்களுக்கும் எதிராக உள்ள தகவல் பெறும் உரிமையென்ற தறுதலைச் சட்டத்தை வலுவிழக்கச் செய்து, வலுவான இந்திய சாட்சிய சட்டத்தை நிலைநிறுத்த வேண்டுமென்கிற இலட்சிய இலக்கோடு எட்டாவது நூலாக நாம் எடுத்துக் கொண்டுள்ள கொண்ட நூலின் தலைப்பு. 

இந்த தலைப்பில் சிறு நூலொன்றை எழுதித்தருமாறு 2010 ஆம் ஆண்டில் வாசகர் ஒருவர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, மிகச் சுருக்கமாக எழுதப்பட்ட இந்நூல், இக்காலத்தின் தேவையைப் பொறுத்து மிகவும் விரிவாக எழுதப்பட உள்ளது. 

இதற்கு மத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்திடம் நிதியும் கோரப்பட்டுள்ளது. இந்நிதி 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் கிடைக்குமென நம்புகிறோம்.

நமது சட்ட ஆராய்ச்சிக்கு மத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகம் நிதியுதவி அளித்தும், அங்கீகரித்தும் ஊக்குவிக்கிறது என்பதுவேறு. இதற்காக, இதையே நாம் எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்தால், பல்வேறு வகையான நூல்கள் வெளிவருவதையும், அதனால் வரும் பலன்களையும் இழந்தவர்கள் ஆகி விடுவோம்.  

ஆமாம், நமது சட்ட விளக்க விழிப்பறிவுணர்வூட்டும் நூல்கள் அல்லாது, மத்திய மாநில அரசுகளால் பல வருடங்களுக்கு முன் வெளியிடப்பட்டு, கிடைக்காமல் இருக்கிற முக்கியச் சட்ட நூல்கள் பலவற்றை வெளியிட வேண்டும் என்கிற எண்ணம் எங்களுக்கு இருக்கிறது. 

இதற்கு வாசகர்கள் ஒவ்வொருவரும் சுயத்தற்சார்பு அடிப்படையில் நிதிப்பங்களிப்பு செய்(ய முன்வந்)தால், அரசை நம்பாமல் அரசு வெளியிட்ட பழைய சட்ட நூல்கள் அனைத்தையும் நாமே வெளியிட்டு பலனை அடையமுடியும். 

நிதிப்பங்களிப்பு என்பது, நீங்கள் கொடுக்கும் நிதிக்கு ஏற்பவும், நூலுக்கு நிர்ணயிக்கும் பண மதிப்பீட்டின்படியும் உங்களுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நூல்கள் வழங்கப்படும். இதனை நீங்கள் மற்றவர்களுக்கு கொடுத்து, உங்களுக்கான நிதியை திரும்பவும் ஈட்டிக்கொள்ள முடியும். 

முக்கிய பின் குறிப்புகள்:
இவ்வைந்து நூல்கள் குறித்து பல்வேறு இதழ்களும் எழுதியுள்ள மதிப்புரைகளைப் படிக்க இங்கே சொடுக்கவும்.
நூல்களின்  கருத்துக்கள் அனைத்தும், நியாயம்தான் சட்டம் என்கிற அடிப்படை தத்துவத்தின் கீழ் சட்டத்துக்கு உட்பட்ட கருத்துக்களையே, வக்கீல்கள், நீதிபதிகள் மட்டுமல்லாது யாருமே சிந்தித்து பார்க்காத புதுப்புது கோணங்களில், சட்ட விளக்கங்களை சொல்லியுள்ளேன்.
இவ்வைந்து நூல்களையும் பத்து வருட மற்றும் பலதரப்பட்ட அனுபவங்களின் வாயிலாக அனுபவத்தின் அடிப்படையில் எழுதியுள்ளேன். இவை இரண்டும் ஒரு சேர நூலாக வருவது அரிதே! ஆதலால், நூல்களை வரிசைக் கிரகமாக, ஒன்றன்பின் ஒன்றாக, புரிந்து கொண்டு படிக்க முற்பட்டால், எல்லாமே எளிதாக விளங்கும்.

சரி, உங்களுக்கு விளங்கி விட்டது. ஆனால், விளங்க வேண்டியவர்களுக்கு, விளங்க வேண்டுமே! என்று யோசித்துதாம், காவல் நிலையங்களுக்கும், நீதிமன்றங்களுக்கும் கூட, நூல்கள் வழங்கப்பட்டுள்ளது. ஒருவேளை, உங்களது வழக்கை நடத்தும் "மக்கு மங்களம்" போன்ற நீதிபதிகளுக்கு புரியவில்லை. உங்களின் புரிய வைக்கும் முயற்சியும் எடுபடவில்லை. என்ன செய்வது என்கிற கவலையை விடுங்கள்.

இந்த புத்தகத்தைப் படித்தும், சட்டத்தை சரி பார்த்தும்தான் இதைச் சொல்கிறேன். இதனை ஏற்க இயலாது என்றால், இச்சட்டக் கருத்தை எழுதிய என்னை முக்கிய சாட்சியாக அழைத்து விசாரணை செய்ய வேண்டும் என்கிற மனுவை மட்டும் கொடுங்கள். நீதிபதிகளுக்கு புரியாததும் புரிந்து விடும்.

அப்படியும் புரியவில்லையா, அது தொடர்பான அந்நீதிமன்ற அழைப்பானையை எனக்கு அனுப்புங்கள். நான் வந்து புரிய வைக்கிறேன் என்கிற உத்திரவாதத்தை ஒவ்வொரு நூலிலும் சொல்லியுள்ளேன். ஆனால், யாருமே இதுவரை அழைக்கவில்லை. அழைக்கவில்லை என்றால், என்ன அர்த்தம்? அழைக்க வேண்டிய அவசியமே இல்லை என்கிற அளவிற்கு எளிமையாக புரிகிறது. ஆதலால் காரியத்தை சாதித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதே பொருள். (நெமிலியப்பன்)

அப்பாடா, இப்பத்தான் நிம்மதியா இருக்கு என்று பெருமூச்சு விடுகிறீர்கள் போலிருக்கிறதே! சற்று பொறுங்கள். இதில், உங்களுக்கு ஒரு சில நிபந்தனைகளும், சிக்கல்களும் இருக்கின்றன.

நான் சொல்லும், இச்சட்ட சங்கதிகள் ஐம்புலண்களால் உணர முடியாதது அல்ல. மாறாக, யார் படித்தாலும் புரிந்து கொள்ளும் வகையில், எழுத்து மூலமாக, இந்திய அரசால் அல்லது மாநில அரசால் எழுத்தால் எழுதப்பட்டுள்ள சங்கதியே ஆகும்.

ஆனாலும், நான் சொல்வது சட்டத்திற்கான விளக்க உரையே! இதைப் படித்ததும், நான் சொல்லியுள்ள கருத்துக்கள் எந்த அளவிற்கு சரியானது என்பதை அறிவதற்காக, அதற்குறிய மூல சட்ட விதிகளை படித்து, சரி பார்த்துக் கொள்ள வேண்டும். மூல நூல்கள் பற்றிய விபரங்கள், கிடைக்கும் இடங்கள் எல்லாம், முதல் நூலிலேயே சொல்லப்பட்டுள்ளது.

நான் சொன்ன சட்ட விளக்க கருத்துக்கள் சரியாக இருக்கிறது என்ற முடிவுக்கு, நீங்கள் வந்து விட்டால், நீங்களே நீதிபதிக்கு புரிய வைத்து விட முடியும். எனது கருத்துக்களையோ அல்லது நூல்களையோ மேற்கோள் காட்ட வேண்டியதில்லை.

அப்போதுதான் உங்களது திறமை வளரும். அதன் மூலம் நீங்களும் இதுபோன்ற சட்ட விழிப்பறிவுணர்வு கடமைகளை ஆற்ற முடியும்.

இதில், இன்னொரு நன்மையும் உங்களுக்கு உண்டு. அதாவது, அறிவுக்கும், படிப்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை உணர திறனில்லாத நீதிபதிகளின் சினத்திற்கு ஆளாகாமல் தப்பிக்கலாம்.

ஒருவேளை, புரியாத விடயங்கள் ஏதும் இருப்பின், எந்த நூலில், என்ன தலைப்பில் என தெரிவித்து விளக்க கோரினால் மட்டும், எழுதியவன் என்கிற முறையில், முடிந்த வரை விளக்க கடமைப்பட்டுள்ளேன்.

எனவே, நூலில் உள்ள சட்ட சங்கதிகளை எப்படி பயன்படுத்தி பலன் அடைவது; நியாயத்தை தக்க வைத்துக் கொள்வது என நீங்களேதான், உங்கள் பிரச்சினைக்காக யோசிக்க வேண்டும். மனு எழுத வேண்டும்.

இதைச் செய்யாமல், உங்களின் பிரச்சினைகள் / வழக்குகள் குறித்து ஆலோசனை கேட்க நினைத்தால், ஒருபோதும் கிடைக்காது.



இதுபோலவே, நியாயம்தான் சட்டம் என்பதற்கு மாறாக, நீங்கள் எதையாவது ஏடாகூடமாக செய்து விட்டு, என்னை நீதிமன்றத்துக்கு சட்டம் குறித்து விளக்கமளிக்க, முக்கிய சாட்சியாக அழைக்க நேர்ந்தால், உங்களது சட்டத்துக்கு புறம்பான செயல்களுக்கு, நானே தண்டனை கொடுக்க வலியுறுத்த வேண்டியிருக்கும். இதுவும் எனது கடமைதாம் என்பதையும் மறந்து விடாதீர்கள்.

நூல்களின் நன்கொடை விபரங்கள் மற்றும் கொரியர் செலவுகள் எல்லாம் மாற்றத்துக்கு உரியவைகளாகவே இருப்பதால், இது குறித்து எங்களின் உலாப்பேசிகளில் தொடர்பு கொண்டு, நன்றாக அறிந்து கொண்டு வாங்க முயற்சியுங்கள்.

2012 ஆம் ஆண்டில், ஐந்து நூல்கள் மற்றும் கொரியர் சேர்த்து ரூ 500 (ஐநூறு மட்டும்) நன்கொடையாகும்.












பொதுவுடைமை சீடிகள்



1. நீ வாழ, நீயே வாதாடு!   


நான் உங்களிடம் சட்டம் குறித்து என்ன சொல்ல விரும்புகிறேனோ, அதை அப்படியே நமது இயல்பான பேச்சு வழக்கில் புத்தகமாக எழுதியுள்ளேன். ஆதலால், எளிமையாக புரிகிறது. இதன் காரணத்தால், சிவகங்கை மாவட்டம், மான்கொம்பு என்கிற கிராமத்தைச் சேர்ந்த திரு.நெமிலியப்பன் என்பவர், நமது முதல் நூலான குற்ற விசாரணைகளை, நூலகத்தில் எடுத்து படித்து விட்டு, தன் மீது சாற்றப்பட்ட பொய்யான வரதட்சினை வழக்கில், வாதாடி விடுதலையாகி விட்டார்.

இதற்கு முன்பாக, திருப்பத்தூரில் யார் மூத்த வக்கீலோ அவரை நியமித்திருந்தும், அவர் முறையாக வாதாட முன் வராமல், புகார் கொடுத்தவர்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டு, இவரை சமரசத்திற்கு அழைக்க, அதனை ஏற்க மறுத்து,‘‘பொய் வழக்கு என நிருபித்து விடுதலையாக வேண்டும் என்கிற ஒரே குறிக்கோளுடன் வாதாடி விடுதலையாகி விட்டார்’’.

வழக்கு நடந்து கொண்டிருந்த போதே, நான் எப்படியும் சென்னையில்தாம் இருப்பேன் என்று அனுமானித்து, எனது நூல்கள் குறித்தும், தொடர்பு எண் அல்லது முகவரி பெறும் பொறுட்டு, ஒவ்வொரு புத்தககடையாக ஏறியிறங்கியும், பலன் இல்லாததால் திரும்பி போய் விடுகிறார்.

பின் விடுதலையானதும், ‘‘என்னைப் பார்க்காமலேயே செத்து விடுவோமோ என்கிற அச்சம் அவருக்கு ஏற்பட்டு விடவே’’, மீண்டும் சென்னைக்கு வந்து ஒவ்வொரு புத்தக கடையாக, அனைத்து விபரங்களையும் சொல்லி ஏறி இறங்க, ஏதோ ஒரு கடையில் இவ்விணையதள முகவரியை கொண்டு, என்னை எளிதாக கண்டு பிடித்து விடலாம் என ஆலோசனைச் சொல்லி கணினி மையத்தை தொடர்பு கொள்ள சொல்லியிருக்கிறார்கள்.

உடனே இவர் கேட்ட கேள்வி என்ன தெரியுமா கணினியில் தேடி கண்டு பிடிக்க எவ்வளவு செலவாகும்? அதிகபட்சம் பத்து ரூபாய்தான் கேட்பார்கள் என்று சொல்லவே, அதன்படி, அங்கு சென்ற போது கேட்ட போது, பத்து ரூபாய் வாங்கி கொண்டு எனது உலாப்பேசி எண்ணை தேடிப் பிடித்து  கொடுத்துள்ளனர். அதன் பிறகு என்னை தொடர்பு கொண்டு, சந்திக்க வருகிறார்.

ஒரு நூலின் வெளியீட்டாளர் யாரோ அவர்களை தொடர்பு கொண்டால், அந்நூலின் ஆசிரியரை தொடர்பு கொள்ள முடியும் என்கிற புரிதல் கூட இல்லாமல் இருந்தவர், ஒரு குற்ற வழக்கில் வாதாடி விடுதலை பெற்றிருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்! என்னை தேடி கண்டு பிடிக்கும் வரை, அந்நூலை நூலகத்திற்கு கொடுப்பதில்லை என்று கருதி, அதற்கு மேலட்டை போட்டு, வருடக் கணக்கில் பத்திரமாக வைத்திருந்து, கையோடு கொண்டு வந்து விட்டார். நூல் காணாமல் போய் விட்டது என்று சொல்லி, அதற்குறிய பணத்தை கட்டியிருக்கிறார்.

இருநூறு அடி தூரத்திற்கு முன்பே, என்னைப் பார்த்த சந்தோசத்தில் துள்ளிக் குதிக்கிறார். பின் வணக்கம் சொன்னார். அவ்வணக்கம் ஒரு சொற்றொடர்போல் இருந்தது. ஆனால், எதிர்காற்று அடித்ததால் என்ன சொன்னார் என்பது புரியவில்லை. அருகில், வந்ததும் என்ன சொன்னீர்கள் என்று கேட்டேன்.

அவரோ, முதல் வணக்கம் சொன்னேன் என்றார். இல்லையே, ஏதோ சொற்றொடர் போல் சொன்னீர்களே என்றேன். அதுவா, ‘‘திருவாரூர் திருமகனே, பேரளம் பெற்றெடுத்த பெருமகனே வணக்கம்’’ என்றேன் என்றார்.

இவரின் திறமையை சமயோசித்தமாக அந்நொடியே எடை போட்டு விட்டேன். சமயோசித்தமாக அவர் வழக்கில் வாதாடியதாக சொன்ன அனுபவங்களை, அவருக்கே தெரியாமல் ஒலிப்பதிவு செய்து விட்டேன். அப்படி பேசுகையில், அவரின் உடலும் பேசியது. இதனை ரகசிய கேமரா வைத்து எடுத்திருந்தால், அவ்வளவு அற்புதமாக இருந்திருக்கும். அதற்கு வாய்ப்பில்லாமல் போய் விட்டது.

பின், அவ்வொலிப்பதிவை அவருக்கு போட்டுக் காண்பித்த போது, சற்று அதிர்ச்சியாகி விட்டார். அதிர்ச்சிக்கு காரணம், அவ்வழக்கில் யார் யார் எப்படி நடந்து கொண்டார்களோ அதற்கு ஏற்றவாறு அவர்களுக்கு மரியாதையும் தந்து பேசியிருந்தார்.

இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய சங்கதிகள் பல இருந்தாலும், ‘‘இவர் வாதாடிக் கெண்டிருந்த போது நீதிபதிக்கு பசி எடுத்து விடவே, இன்னுமொரு அரை மணி நேரமாகுமா, சாப்பிட்டு வந்துடட்டுமா என்று இவரிடம் அனுமதி கேட்டுள்ளார், நீதிபதி’’ சபாஷ்!

ஆனாலும், அவ்வொலிப்பதிவை அவருக்கு போட்டுக் காண்பித்த எனது செயல் அவருக்கு மிகவும் பிடித்துப் விட்டது. இதை விட சிறப்பாக பேசுகிறேன். அதனை வெளியிடுங்கள் என கேட்டுக் கொண்டார். எதார்த்தமாக நீங்கள் பேசியதைதாம் நன்றாக இருக்கும் எனச் சொன்னேன்.

இக்கருத்தை அவர் ஏற்றுக் கொண்ட பின்னரே, இக்குறுந்தகடு 2010 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட சாட்சியங்களை சேகரிப்பது எப்படி? நூலுடன் வெளியிடப்பட்டது. இரண்டு குறுந்தகடுகளைக் கொண்ட இதன் நன்கொடை ரூ 50 ஆகும். நூல்களோடு சேர்த்து வாங்கினால் கொரியர் செலவு கிடையாது.


2. நீதியா! அநீதியாநீதிக்குச் சமாதியா?!


நீதித்துறையில் வக்கீல்களாலும், நீதிபதிகளாலும் என்னென்ன குறுக்கீடுகள், அவலங்கள் செய்யப்படுகின்றன என்பதை நீதித்துறையால், பழிவாங்கப்பட்ட ஒரு நீதிபதியே (குற்றவியல் நடுவர்) ஒலி ஒளி வடிவில் ஆதாரப் பூர்வமாக பேசியுள்ளார்.

இவரது பேச்சில் சதி செய்யும் சாதியும், மதம் பிடித்த மதமும் நீதித்துறையில் பரவலாக ஊடுருவி உள்ளதை உணர முடிகிறது.

தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவிலேயே ஒரு குற்றவியல் நடுவர் சிறையில் அடைக்கப்பட்டு, மிகக் கொடுமையான முறையில் நடத்தப்பட்டிருப்பது இவராகத்தாம் இருக்க முடியும். இவரைப் பற்றி பிணை எடுப்பது எப்படி என்கிற இண்டாவது நூலில், ‘‘நீதிபதிகள் திருந்த என்ன செய்யனும்’’ என்கிற தலைப்பில் எழுதியுள்ளேன். அதைப் படித்தப் பின்னரே என்னை தொடர்பு கொண்டார்.

குற்றச்சாற்றின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டவர், எப்படி பதவி உயர்வு பெற தகுதியானார்? பதவி உயர்வு பெற தகுதியான ஒருவர் ஏன் சிறையில் அடைக்கப்பட்டார்? இதில் எது உண்மை என்பதுதாம் நான் நூலில் எழுப்பியிருந்த கேள்வி.

2008 ஆம் ஆண்டில், இவர் என்னை முதன் முதலில் தொடர்பு கொண்டு சொன்னது, நீதிபதிகள் திருந்த என்ன செய்யனும் என்ற தலைப்பில் எழுதியுள்ளீர்கள். எனக்கு தெரிந்த ஒரே வழி நீதிபதிகளை செறுப்பால் அடிப்பதுதான் என்றார். யாரோ ஒரு பாதிக்கப்பட்ட பாமரன் பேசுகிறார் என நினைத்து சற்றே அதிர்ச்சியாகி, நீங்கள் யார் என்று கேட்ட போதுதான் அனைத்து விபரங்களையும் சொன்னார்.

முதலில், இவரை திருத்துறைப்பூண்டியில் கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் தனியறையில் அடைத்து, இவரின் மேல் சிறுநீர் கழித்து, பைத்தியமாகும் அளவிற்கு சித்தரவதை செய்து மகிழ்ந்தவர்கள், பின் இவருக்கு பதவி உயர்வுடன் சிதம்பரத்தில் பணியமர்த்தினர்.

பதவி உயர்வுக்கு பிறகு, இவருக்கு ஓய்வூதியம் கூட கிடைக்க கூடாது என திட்டம் தீட்டி, தற்காலிக வேலை நீக்கமோ அல்லது நிரந்தர பணி நீக்கமோ அல்லது பணி முடிப்போ செய்து ஆவண உத்தரவு எதையும் வழங்காமல், தினக்கூலி வேலைக்கு செல்பவர்களை திடீரென்று வேலை இல்லை என்று கூறி வீட்டுக்கு அனுப்புவார்களே அதுபோல் கட்டாய ஓய்வளித்து உள்ளார்கள்.

இவருக்கு கிடைக்க வேண்டிய பணிக்கால பலாபலன்கள் எதுவும் இதுவரையிலும் கிடைக்கவில்லை. மீண்டும் வேலைகொடு என்று ஒரு தரப்பாக போராடிக் கொண்டிருந்தவர், எனது ஆலோசனையில் பேரில், என் மீதான குற்றத்தை நிறுபித்து தண்டனை வழங்கு எனவும் போராடி வருகிறார்.

இவர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த ஆவணங்களை எல்லாம் அலசி ஆராய்ந்தேன். தமிழ்நாடு உள்துறையும், சென்னை உயர் நீதிமன்றமும் சேர்ந்து பற்பல கூத்துகளை, குளறுபடிகளை அறங்கேற்றி உள்ளதை உள்ளங்கை நெல்லிக்கணியாக உணர முடிந்தது. அதன் பிறகே, இதனை ஆவணப்படமாக்க வேண்டும் என ஆக்கி உள்ளேன்.

நீதித்துறையால் பாதிக்கப்பட்ட ஒரு பாமரன், அப்படி தன்னை பாதிக்கச் செய்த நீதிபதியை செறுப்பால் அடித்த (சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் மீது செறுப்பு வீச்சு)சம்பவங்கள் பல உண்டு. ஆனால், நீதித்துறையில் பணியாற்றிய ஒருவரே, தனக்கு மேலான நிதிபதிளை செறுப்பால் அடிக்காமல் விடுவதில்லை என்று சொல்வது, எங்கே நடந்து விடுமோ என்றே கருத வேண்டியுள்ளது.

என்னைப் பொறுத்தவரை, மற்ற நீதித்துறை ஊழியர்கள் போல் அநியாயமாக அல்லாமல், இவரும் ஓரளவு சட்டத்தை மீறி பற்பல காரியங்களைச் செய்துள்ளார். ஆனாலும், அவைகள் எந்த விதத்திலும் அநியாயம் என்று சொல்லுவதற்கில்லை. மாறாக, முள்ளை முள்ளால் எடுப்பது போல, குற்றம் புரிவதையே வாடிக்கையாக கொண்டவர்களுக்கு, இவரும் அதிகாரத்தின் பெயரில் குற்றம் புரிந்து, குற்றத்தால் ஏற்படும் வலியை எடுத்துக் காட்டியுள்ளார் என்பதே என் கருத்து.

எது எப்படி இருப்பினும், நான் அவரை பேட்டி எடுத்தவரை போதிய சட்ட விழிப்பறிவுணர்வு இன்மையால்தாம் இந்நிலைக்கு சென்றுள்ளார் என்பது எனது முடிவு.

இக்குறுந்தகடு 2010 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட சாட்சியங்களை சேகரிப்பது எப்படி? நூலுடன் வெளியிடப்பட்டது. இரண்டு குறுந்தகடுகளைக் கொண்ட இதன் நன்கொடை ரூ 100 ஆகும். நூல்களோடு சேர்த்து வாங்கினால் கொரியர் செலவு கிடையாது.

நூல்களின் முகப்பு

நியாயந்தான் சட்டம்

Translate

Follow by Email

அடிப்படை சட்டங்கள்

  • 1. இந்திய சாசனம் 1950
  • 2. நீதிமன்ற சாசனம் 1872
  • 3. இந்திய தண்டனை சட்டம் 1860
  • 4. குற்ற விசாரணை முறை விதிகள் 1973
  • 5. உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908

நம் நூல்களைப் பற்றி

நீதியைத்தேடி.... நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் வரிசையில்...
1 குற்ற விசாரணைகள்
2 பிணை (ஜாமீன்) எடுப்பது
எப்படி?
3 சட்ட அறிவுக்களஞ்சியம்
4 சட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்
5 சாட்சியங்களைச் சேகரிப்பது
எப்படி?
6 கடமையைச் செய்!
பலன் கிடைக்கும்
7 மநு வரையுங்கலை!Recent Posts Widget

இந்நூல்கள் அனைத்தும் உங்களின் சட்ட விழிப்பறிவுணர்வுக்காக
மத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவியோடு
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பொது நூலகங்கள், மத்திய சிறைச்சாலைகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

சொந்தமாக தேவைப்படுவோர், உ(ய)ரிய நன்கொடையைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு உலாப்பேசி எண்கள் 09842909190 மற்றும் 09842399880 ஆகும்.

இப்படி, நன்கொடை செலுத்தி வாங்கிய நூல்களால் பயனில்லை என்று கருதும் பட்சத்தில், அப்படியே திருப்பி அனுப்பிவிட்டு, கொரியர் செலவுபோக மீதிப் பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.

பயின்றோர் (20-08-16)