No law no life. Know law, know life! நியாயந்தான் சட்டம்! அதற்கு தேவையில்லை வக்கீழ் பட்டம். வக்கீழ் என்றாலே, கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்களே! இடைத்தரகர்களே!! நீ வாழ, நீயே வாதாடு!

நீ வாழ... நீயே வாதாடு... வரவேற்பு வாழ்த்து!

No law, no life. Know law, know life! என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியத்தை உணர்ந்து, ‘‘நீதியைத்தேடி... சட்டப் பல்கலைக் கழகத்திற்கு’’ வருகை தந்துள்ள உங்களை வருக என வரவேற்று, உங்களுக்கான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்று பயனைப் பெறுக என வாழ்த்துகிறோம்!
முக்கிய அறிவிப்பு : இந்த இணையப்பக்கத்தை புதுப்பிக்கும் பணி நடந்துக் கொண்டிருப்பதால், சில பதிவுகள் அல்லது இணைப்புக்கள் கிடைக்காமல் போகலாம்!

சட்டம் அறிய முயல்வோர் (ச, சி)ந்திக்க வேண்டிய சவால்கள்!உண்மையில் மனித வாழ்க்கை, மற்ற மிருகங்களைப் போல மிகவும் இலகுவானது. ஆனால், மனிதன் தன் சுயநலத்திற்காக அதனை கோடானகோடி, கோடான கோடி என சிக்கலாக்கி வைத்திருக்கிறான். 

இதிலிருந்து மீண்டு வெளிவர வேண்டுமென, ஞானிகள் யாராவது அவ்வப்போது வந்து வழி வகுத்துக் கொடுத்தால், அதிலும் போட்டிப் போட்டுக் கொண்டு ஆளாளுக்கு ஆயிரத்தெட்டு குழுப்பங்களை ஏற்படுத்தி மக்களை பைத்தியம் பிடித்தவர்கள் போல ஆக்கி விடுகிறார்கள்.

இதனால், மக்கள் யார் சொல்வது உண்மை, நாம் பின்பற்ற வேண்டிய சரியான வழிமுறை எதுவென தெரியாமல் திண்டாடுகிறார்கள். இது ஒவ்வொரு விடயத்திலும் இருக்கிறது என்றாலுங்கூட, எல்லாவற்றிலும் ஒருவரால் தெளிவு கொடுக்க முடிவதில்லை. 

இந்த வகையில், எனக்கு நன்றாகத் தெரிந்த விடயங்களில் மட்டுமே, என் தெளிவை மக்களுக்குச் சொல்லி வருகிறேன். இந்த வகையில் சட்டம் அறிய முற்படுவோர், (ச, சி)ந்திக்க வேண்டிய சவால்கள் நிறையவே இருக்கிறது என்பதாலேயே, இப்பதிவு! 

நீங்கள் எதுவொன்றைப் பற்றி அறிய வேண்டு மென்றாலும், முதலில் அதுபற்றி அத்துபடியாக தெரிந்தவர்களிடந்தான் கேட்கமுடியும். அவர்கள் காலாகாலத்திற்கும் இருந்து சொல்லிக் கொண்டிருக்க முடியாது என்பதால், அவர்கள் தங்களின் சிந்தனைகளை எல்லாம், வசதிக்குத் தக்கபடி எழுதி வைத்து விடுகிறார்கள். 

இப்படித்தான் நமக்கு நன்றாகத் தெரிந்த தெய்வப்புலவர் திருவள்ளுவர் பனை ஓலையில், ஆணியால் எழுதி வைத்ததாகச் சொல்கிறார்கள். அவர் நமக்காக எழுதி  வைத்துச் சென்ற திருக்குறளை ஒழுங்காகப் படித்திருந்தால், நாம் வாழ்க்கையில் வேறு எதையுமே படிக்க வேண்டி இருந்திருக்காது.

ஆமாம், ‘‘ஒன்றைப்படி உலகம் புரியும்!’’ என்ற தத்துவத்தின் அடிப்படையில் திருக்குறளை இலங்கை ஜெயராஜ் என்பவரின் விளக்கவுரை வழியாகப் படிக்கத் தொடங்கிய நிலையிலேயே, ‘‘ஒன்றைப்படி உலகம் புரியும்!’’ என்பது மகா தத்துவமாக தெரிகிறது. இந்த விளக்க உரையை நீங்களும் கேட்க விரும்பினால், உயர் வள்ளுவம்

சரி, நம்ம விசயத்துக்கு வருவோம்.


நீங்கள் சட்டத்தை அறிய முயன்றால், ‘‘நியாயந்தான் சட்டம்!’’ அதற்குத் தேவையில்லை வக்கீல் (ப, வ)ட்டமும். என்பதை முதலில் நினைவில் கொள்ளுங்கள். 

ஆமாம், வக்கீல்கள் என்றப் பெயரில், சட்ட விரோதமாக கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்களோடு எந்த விதத்திலும் நட்புறவு கொள்ளாதீர்கள். ஏனெனில், பொய் என்பது, அவர்களின் இரத்தத்தில் ஊறிப்போன ஒன்று. 

ஆகையால், எப்படி இருந்தாலும் உங்களை ஏமாற்றி திசை திருப்பவே அல்லது குழப்பவே செய்வார்கள் என்பதை, பதினெட்டு வருடங்களாக சட்டங்களை ஆய்வு செய்துவரும் அனுபவத்தில் சொல்கிறேன். 

மேலும், இவர்களைப்பற்றி நம் காந்தி, பெரியார், வ.உ.சி என பலரும் என்ன சொல்லி இருக்கிறார்கள் என்பதை, இந்த இணையப் பக்கத்தின் முகப்புப் பக்கத்திலேயே தொகுத்து கொடுத்துள்ளதைப் படித்து, முதலில் அறிக; அல்ல அல்ல தெள்ளத்தெளிவாக அறிக!

தமிழில் எழுதப்பட்டுள்ள திருக்குறளை நேரடியாகப் படித்துப் புரிந்து கொள்ள முடியாமல், அதற்கான விளக்க உரை மூலம் படித்து தெரிந்துக் கொள்கிறோமோ, அதுபோல சட்ட நூல்களை நேரடியாகப் படித்தும், புரிந்தும் பயன்படுத்துவது எப்படியென தெரியாதவர்களுக்கு நீதியைத்தேடி... உள்ளிட்ட நூல்கள் வழிகாட்டும். 

ஆகையால், இதனை சட்ட நூல்கள் என கருதாமல், சட்டத்திற்கு விளக்கம் சொல்லி விழிப்பறிவு ணர்வூட்டும் நூல்கள் என தெள்ளத்தெளிவாக அறிக.

இந்த நூலைப்படித்துப் பயனில்லை என கருதினால், அதுபற்றிய தெளிவான காரண விளக்கக் கடிதத்துடன், அந்நூல்களை அப்படியே திருப்பி அனுப்பி விட்டு, செலுத்திய தொகையைப் பெற்றுக் கொள்ளலாம் என்பதையும், ஆனால், இப்படி இதுவரை யாரும் திருப்பி தந்ததில்லை என்பதையும், இப்படி வேறெங்கும் வாங்கும் எந்தவொரு நூலையும் திருப்பித்தர முடியாது என்பதையும் தெளிவாக அறிக. 

ஆமாம், உங்களின் பணம் ஒரு ரூபாய் கூட வீணாக கூடாது என்பதோடு, கண்ட கண்ட நூல்களை வாங்கி ஏமாறவும் கூடாது என்ற, சட்டப்படியான நல்லெண்ணத்தில் இதனைச் சொல்கிறேன். 

எனவே பொதுவுடைமை என அறிவித்துள்ள நீதியைத்தேடி... உள்ளிட்ட நூல்களை விற்பனை செய்து பணம் ஈட்டுவது எங்களின் தொழிலல்ல; மாறாக, நாங்கள் தனியார் நிறுவனங்களில் போதுமான கூலி பெறும் தொழிலாளர்கள் என்பதையும், திரு. வாரண்ட் பாலா அவர்களின் சமூகத்திற்கான சட்ட விழிப்பறிவுணர்வு கடமைக்கு எங்களால் இயன்ற பங்களிப்பை செய்கிறோம் என்பதையும் தெளிவாக புரிந்துக் கொள்க!

ஏனெனில், இப்போது வெளிவரும் நூல்களின் நிலையென்ன என்பதைப் பற்றி அறிய, நுண்ணறிவு இல்லாத நூல்கள் என்ற (கு, க)ட்டுரையில் விளக்கியுள்ளேன். இதே நேரத்தில், நம் நூல்களுக்கான மதிப்புரைகளைப் படித்தால், நம் நூல்களின்  சிறப்பை ஒருசேர உணரலாம். 

இந்த மதிப்புரைகளின் பேரில் நம்பிக்கை வைத்து, சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற விரும்பினால் மட்டும் இந்நூல்களை வாங்கவும். தொடர்பு வாட்ஸ்அப் எண் 9842909190. வாங்குவதற்கு முன்பாக பொது நூலகத்தில் எடுத்துப் படிக்கவும் முயலவும். 

நீதியைத்தேடி... உள்ளிட்ட நூல்களோடு, தமிழில் கிடைக்கும் சட்ட நூல்களையும் வைத்துக்கொண்டு படித்தால், சில காலங்களுக்குப் பிறகு அந்தந்த சட்ட நூல்களை, நீங்களே நேரடியாகப் படித்துப் புரிந்துக் கொள்ளும் அளவிற்கு பரிச்சயம் ஆகிவிடும். 

நீதியைத்தேடி... குற்ற விசாரணை என்கிற முதல் நூலில், வாங்கப் பரிந்துரைத்துள்ள அடிப்படை சட்ட நூல்கள் ஐந்து உட்பட, நீதியைத்தேடி... சட்ட அறிவுக்களஞ்சியம் என்ற மூன்றாவது நூலில், உங்களின் சூழ்நிலைக்கு ஏற்ப சொல்லியுள்ள தேவைப்படலாம் என மேலும் ஐந்து நூல்களைச் சொல்லி உள்ளேன். 

இவை அனைத்தின் அதிகபட்ச விலை ஆயிரம் ரூபாய்கள்தான் வரும். இந்தப் பத்து நூல்களில் ஏழெட்டு நூல்கள், சென்னை பாலாஜி பதிப்பகத்தில் கிடைக்கிறது. இவர்களிடம் தொலைபேசியில் நான் பரிந்துரை செய்துள்ள ஐந்து நூல்களை அனுப்புங்கள் என சொன்னாலே போதும். தொடர்பு எண் 04428482831. 

ஆனால், அடிப்படைச் சட்டங்கள் ஐந்தில் தெளிவு இல்லாமல், வேறெந்த சட்டத்தைப் படித்தாலும் குழுப்பத்திற்கே ஆளாவீர்கள். ஆகையால், அடிப்படைச் சட்டங்களில் அத்துபடியான பிறகு, அடுத்து தேவைப்படும் சட்டத்தைப் படிக்க முயலுங்கள். 

இது தவிர, எது சரி, எது தவறு என்பதை சரியாகப் புரிந்துக் கொள்ள முடியாத நிலையில் இருந்த நீதியைத்தேடி... வாசகரைப் போன்று தற்போதைய நிலையில் உள்ள நீங்கள், 

வேறெந்த சட்ட விழிப்பறிவுணர்வூட்டும் நூல்களையோ அல்லது சட்ட நூல்களையோ அல்லது முகநூல், யுடியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில், சட்டத்தை தங்களின் இஷ்டம்போல மாற்றிச் சொல்லும் பொய்யர்கள், இப்பொய்யர்களுக்கு உங்களை வழக்காளிகளாகப் பிடித்துத் தரும் புரோக்கர்கள்,  

சட்டத்தை சொல்லிக் (கெ, கொடுக்கிறேன்) என்று மனநலம் பாதிக்கப்பட்ட கோளாறுகள் என பலரும் பல்வேறு வழிவகைகளில் திரித்து எழுதி இருக்கும் சட்டங் குறித்த கட்டுரைகள், நூல்கள், பேசி இருக்கும் காணொலிகள் எல்லாம் உண்மையென நம்பி ஏமாறாதீர்கள். 

ஏமாற்றம் என்பது பணத்தை மட்டுஞ் சொல்ல வில்லை. குற்றவாளிகளாக வாழ்நாள் சிறைத் தண்டனையை கூட அனுபவிக்க நேரிடும். எச்சரிக்கை! 

குறிப்பு: இந்தக் கடைசிப் பத்தில் சொல்லியுள்ள எச்சரிப்பு சங்கதிகளை விவரித்து சொல்ல, பல நூல்கள் எழுத வேண்டி இருக்கும். இதெல்லாம் தீயவை. இதற்கு நேரத்தை செலவழிப்பது வீண் என்ற அடிப்படையில், சட்டத்தை அறிய முயல்வோர் போக வேண்டிய பாதையை விளக்கி உள்ளேன். 

இதன் பின்னனியில், போகக்கூடாத வழியில் சென்று பலருக்கு ஏற்பட்ட பல்வேறு விதமான பாதிப்புகள் உள்ளது. இதுபற்றி நீதியைத்தேடி... உள்ளிட்ட நூல்களில் ஏற்கெனவே எழுதி உள்ளேன் என்பதை, அந்நூல்களைப் படிக்கும் போது அறிவீர்கள். அவ்வளவே!

0 comments:

Post a Comment

பத்திரிகை செய்திகள்

அறவழி நோட்டா

அறவழி நோட்டா
மகாத்மா போதித்த வாக்குரிமை!

நோட்டா: NOTA

நோட்டா: NOTA
விளக்கம்: EXPLANATION

நூல்களின் முகப்பு

Followers

முக்கியப் பக்கங்கள்

அடிப்படை சட்டங்கள்

  • 1. இந்திய சாசனம் 1950
  • 2. நீதிமன்ற சாசனம் 1872
  • 3. இந்திய தண்டனை சட்டம் 1860
  • 4. குற்ற விசாரணை முறை விதிகள் 1973
  • 5. உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908

நம் நூல்களைப் பற்றி

நீதியைத்தேடி.... நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் வரிசையில்...
1 குற்ற விசாரணைகள்
2 பிணை (ஜாமீன்) எடுப்பது
எப்படி?
3 சட்ட அறிவுக்களஞ்சியம்
4 சட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்
5 சாட்சியங்களைச் சேகரிப்பது
எப்படி?
6 கடமையைச் செய்!
பலன் கிடைக்கும்
7 மநு வரையுங்கலை!Recent Posts Widget

இந்நூல்கள் அனைத்தும் உங்களின் சட்ட விழிப்பறிவுணர்வுக்காக
மத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவியோடு
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பொது நூலகங்கள், மத்திய சிறைச்சாலைகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

சொந்தமாக தேவைப்படுவோர், உ(ய)ரிய நன்கொடையைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு வாட்ஸ்அப் எண் 09842909190 ஆகும்.

எல்லாப் பதிவுகளும்!

நம் தள வகைகள்

பயின்றோர் (20-08-16)