No law no life. Know law, know life! நியாயந்தான் சட்டம்! அதற்கு தேவையில்லை வக்கீழ் பட்டம். வக்கீழ் என்றாலே, கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்களே! இடைத்தரகர்களே!! நீ வாழ, நீயே வாதாடு!

நீ வாழ... நீயே வாதாடு... வரவேற்பு வாழ்த்து!

No law, no life. Know law, know life! என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியத்தை உணர்ந்து, ‘‘நீதியைத்தேடி... சட்டப் பல்கலைக் கழகத்திற்கு’’ வருகை தந்துள்ள உங்களை வருக என வரவேற்று, உங்களுக்கான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்று பயனைப் பெறுக என வாழ்த்துகிறோம்!
முக்கிய அறிவிப்பு : இந்த இணையப்பக்கத்தை புதுப்பிக்கும் பணி நடந்துக் கொண்டிருப்பதால், சில பதிவுகள் அல்லது இணைப்புக்கள் கிடைக்காமல் போகலாம்!

பங்காளிச் சண்டையில், நிதிபதிகளின் பரப்புரை!நிதிபதிகளின் வளர்ப்பு ரவுடிகளாக ஊர்வலம் வந்தப் பொய்யர்கள், ஒரு கட்டத்தில் எல்லைமீறி நிதிபதிகளையே மிரட்டித் தாக்கிய போது, நிதிபதிகள் தங்களுக்குள்ள ஆபத்துக்களை உணர்ந்து அப்பொய்யர்களை கட்டுப்படுத்த, அவர்களது பொய்த்தொழிலில் பல புதிய கட்டுப்பாடுகளை சேர்த்தனர். 

இதனால், இவ்விருவருக்குள்ளும் உருவான பங்காளிச் சண்டை மாதக்கணக்கில் நீண்டதொரு நீதிமன்றப் புறக்கணிப்பு போராட்டமாக தொடரவே, இதனை நல்லதொரு தருனமாக பயன்படுத்திக் கொள்ள நினைத்த நாம், ‘வழக்காளிகளையே வாதாட அழைப்பு விடுங்கள்’ என கடித எண் CARE/ 56 / TR / 2016 தேதி 25-07-2016 ஐ சென்னை உயர்நீதிமன்ற தலைமை நிதிபதி சஞ்சய் கிஷன் கௌலுக்கு சார்பு செய்தோம். 

எப்படிப்பட்ட பிரச்சினையையும் சட்டப்படி தீர்ப்பது என்பது நமக்கு கைவந்த கலைதானே! இது நம் நூல்களை வாசிக்கும் எல்லா நிதிபதிகளுக்கும் நன்றாகத் தெரியுமே!!

ஆகையால், நீதிமன்றப் புறக்கணிப்பை கை விட்டு, வழக்காட வாருங்கள், வாருங்கள் என பொய்யர்களுக்கு அழைப்பின் மேல் அழைப்பு விடுத்துக்கொண்டிருந்த வேலையற்ற நிதிபதிகள், நாம் சொன்னப்படியே 04-08-2016 அன்று, கீழ்நிலை நிதிபதிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையை, கூடவே அனைத்து நாளிதழ்களிலும் வெளியிட்டனர்.


இப்படி, ‘அவரவர்களே வாதாடலாம்’ என்ற பகிரங்க அறிவிப்பு நாளிதழ்களில் வெளியாவது இதுவே முதல்முறை என்றாலுங் கூட, இது ‘‘நியாயந்தான் சட்டம்’’ என்கிற நம் கொள்கை முடிவுக்கு கிடைத்த பல்வேறு முக்கிய வெற்றிகளில் ஒன்று.


ஆமாம், சிறையிலுள்ள நம் உறவினர்களை நாமே பிணையில் எடுக்கலாம் என்பது உட்பட, ‘நியாயந்தான் சட்டம்’ என்ற தத்துவத்திற்கு ஏற்ப நம்  நீதியைத்தேடி... நூல்களில் என்னென்ன வழி முறைகள் சொல்லப்பட்டு உள்ளனவோ, அவையே நிதிபதிகளின் இந்த அறிக்கையிலும் உள்ளதை உள்ளங்கை நெல்லிக்கனியாக காணலாம்!

இப்படி, அவரவர்களே வாதாட ஆரம்பித்தால், அவ்வப்போது நமக்கு கிடைக்கும் பொய்த்தொழில் பிழைப்புங்கூட நாறிவிடும் என்பதை உணர்ந்த, உரிமையை இழந்து விட்டதாக சொல்லிக் கொண்டு போராடிய பொய்யர்கள் இழந்த அவ்வுரிமைகளை மீட்டெடுக்காமலேயே, புதிதாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுக்கு அடங்கி தத்தம் பொய்த்தொழிலுக்கு திரும்பினர்.

பொய்யர்களின் எந்தவொரு போராட்டத்திலும் அவர்களது நாறிய பிழைப்புக்கான காரணமே பிரதானமாய் இருக்கும். இதையும் வெற்றிகரமாக முடியடித்து இருக்கிறோம். 

ஆமாம், இதற்குப் பிறகு, பொய்யர்கள் எந்தவொரு தொடர் நீதிமன்றப் புறக்கணிப்பையும் மேற்கொள்ளவில்லை. 

அவர்களது உரிமைக்காகவே போராடாது அடங்கிப்போன அடிமைப் பொய்யர்கள் (உங், மக்)களின் நியாய உரிமைக்காக மட்டும் எப்படி (வாதா, போரா)டுவார்கள்??? மாறாக, பொய்க்காக பொய்யாகத்தான் (போரா, வாதா)டுவார்கள்.

0 comments:

Post a Comment

பத்திரிகை செய்திகள்

அறவழி நோட்டா

அறவழி நோட்டா
மகாத்மா போதித்த வாக்குரிமை!

நோட்டா: NOTA

நோட்டா: NOTA
விளக்கம்: EXPLANATION

நூல்களின் முகப்பு

Followers

முக்கியப் பக்கங்கள்

அடிப்படை சட்டங்கள்

  • 1. இந்திய சாசனம் 1950
  • 2. நீதிமன்ற சாசனம் 1872
  • 3. இந்திய தண்டனை சட்டம் 1860
  • 4. குற்ற விசாரணை முறை விதிகள் 1973
  • 5. உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908

நம் நூல்களைப் பற்றி

நீதியைத்தேடி.... நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் வரிசையில்...
1 குற்ற விசாரணைகள்
2 பிணை (ஜாமீன்) எடுப்பது
எப்படி?
3 சட்ட அறிவுக்களஞ்சியம்
4 சட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்
5 சாட்சியங்களைச் சேகரிப்பது
எப்படி?
6 கடமையைச் செய்!
பலன் கிடைக்கும்
7 மநு வரையுங்கலை!Recent Posts Widget

இந்நூல்கள் அனைத்தும் உங்களின் சட்ட விழிப்பறிவுணர்வுக்காக
மத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவியோடு
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பொது நூலகங்கள், மத்திய சிறைச்சாலைகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

சொந்தமாக தேவைப்படுவோர், உ(ய)ரிய நன்கொடையைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு வாட்ஸ்அப் எண் 09842909190 ஆகும்.

எல்லாப் பதிவுகளும்!

நம் தள வகைகள்

பயின்றோர் (20-08-16)