No law no life. Know law, know life! நியாயந்தான் சட்டம்! அதற்கு தேவையில்லை வக்கீழ் பட்டம். வக்கீழ் என்றாலே, கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்களே! இடைத்தரகர்களே!! நீ வாழ, நீயே வாதாடு!

நீ வாழ... நீயே வாதாடு... வரவேற்பு வாழ்த்து!

No law, no life. Know law, know life! என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியத்தை உணர்ந்து, ‘‘நீதியைத்தேடி... சட்டப் பல்கலைக் கழகத்திற்கு’’ வருகை தந்துள்ள உங்களை வருக என வரவேற்று, உங்களுக்கான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்று பயனைப் பெறுக என வாழ்த்துகிறோம்!
முக்கிய அறிவிப்பு : இந்த இணையப்பக்கத்தை புதுப்பிக்கும் பணி நடந்துக் கொண்டிருப்பதால், சில பதிவுகள் அல்லது இணைப்புக்கள் கிடைக்காமல் போகலாம்!

இந்நூல்களை திருப்பித் தருவதற்கான நிபந்தனைகள்
இந்த காலத்தில் விற்றப் பொருட்களை திரும்பப் பெற  மாட்டோம் என்று, நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்துக்கு எதிராக அதற்கான கட்டண இரசீதிலேயே அச்சடிக்கிறார்கள். 

ஆனால் நாங்கள் உங்களை ஏய்த்துப் பிழைக்கும் வியாபாரி கள் இல்லையே! மாறாக உங்களுக்கு எப்படி எல்லாம் நன்மையைச் செய்ய முடியும் என்று ஒவ்வொரு நிமிடமும் சிந்திக்கும் கொள்கை உள்ள ஆர்வலர்களே!! ஆகையால், நூல்களை திரும்பப் பெற்றுக் கொள்ளவும் முன்வந்துள்ளோம்.

ஆமாம்,  இந்நூல்களை பொதுவுடைமை என அறிவித்து சுமார் பதினைந்து ஆண்டுகள் ஆன நிலையில் எங்களைத் தவிர மற்றவர்கள் வெளியிட சற்று யோசிக்கவே செய்வர்.

ஆகையால்  நாங்களேதான் தொடர்ந்து வெளியிட வேண்டி இருக்கும் என்பதை அறிகிறோம். 

இந்நூல்களை விற்பதே எங்களின் நோக்கம் என்றால் இதுவே தொழிலாகி பின் ஆராய்ச்சி மனப்பான்மை அழிந்து விடும் பேராபத்தும் உண்டு. இந்நூல்கள் எந்த அளவிற்கு சமூகத் திற்கு பயன்பட்டு வருகிறது என்பதை தெள்ளத்தெளிவாக அறிந்திருக்கிறோம். 

ஆனாலும் இந்நூல்கள் பயன்படுத்தாதவர்களிடம் பாழ் பட்டு கிடப்பதை விட, அவர்களிடம் இருந்து திரும்பப் பெற்று பயன்படுத்த நினைக்கும் வாசகர்களுக்கு கொடுப்பதன் மூலம் தேவையின்று நூல்களை அச்சிட வேண்டி இருக்காது.

இதனால், நூல்களை அதிக அளவில் அச்சடிப்பதற்காக அழிக்கப்படும் மரங்களும் காக்கப்பட்டு இயற்கை வளமும் காக்கப்படும்.  நமக்கு கிடைக்கும் நிதியில் புதுப்புது நூல்களை வெளிக்கொண்டு வர முடியும் என பல நன்மைகள் உண்டு. 

எனவே, ‘நியாயந்தான் சட்டம்’ என்கிற அடிப்படை உரிமை யில் , பின்வரும் ஐந்து நிபந்தனைகளோடு திருப்பித் தரலாம்.   

1. சில கருத்துப் பிழைகள் இருக்கின்றன. 
2. சில கருத்துகள் புரியாமல் குழப்புகின்றன.  
3. சில கருத்துகளை செயல்படுத்தவே முடியாது.   
4. சில சட்டத்தில் இல்லாதது சொல்லப்பட்டு உள்ளது.
5. சில கருத்துகள் ஒரு சார்பு தன்மையாகவே இருக்கிறது.

இதில் சில என்பதற்கு மூன்று முதல் ஐந்துக்கு மேற்பட்ட காரணங்கள் வரையென எடுத்துக் கொள்ளுங்கள். 

இந்த ஐந்து நிபந்தனைகளில் உங்களின் கருத்து எதுவாக இருந்தாலும் ‘அது எந்த நூலில், என்ன தலைப்பில் என்பது உட்பட தெளிவாக எழுதி திருப்பி அனுப்ப வேண்டும்’.  

இப்படி ஒரு நூல் முதல் ஒட்டுமொத்த நூலையும் அனுப் பலாம். இது சாதாரண வாசகர்களுக்கே என்றாலுங் கூட பொய்யர்களுக்கும், நிதிபதிகளுக்கும் இன்னபிற அரசூழியத் தில் உள்ளவர்களுக்கும் நான் பகிரங்கமாக விடுக்கும் சவால்! 

ஒவ்வொரு நூலிலும் இவ்வைந்து காரணங்களையும் எழுதினால் கூரியர் செலவுபோக முழுத்தொகையும் திரும்பக் கிடைக்கும் அல்லது எந்தெந்த நூலுக்கு குறைகள் சொல்லப் படுகிறதோ அந்தந்த நூல்களுக்கு மட்டும் கிடைக்கும். 

ஒரு காரணத்திற்கு பத்து சதவிகிதம் என ஐம்பது சதவிகி தத்தில் இருந்து கூடுதலாகப் பெறலாம். இதிலுள்ள காரணம் எதையுமே நான் சொல்ல விரும்ப வில்லை; எனக்கு நூல்களே வேண்டாம் என்று எழுதி அனுப்பினால் செலுத்திய  நன்கொடையில் நாற்பது சதவிகிதத்தைப் பெறலாம். 

இதெல்லாம்  சொந்தப் பயன்பாட்டிற்காக நன்கொடை செலுத்தி வாங்கிய நூல்களுக்குதானே தவிர, மத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுடன் சேர்ந்து இந்நூல்கள் வெளிவர நீங்கள் வழங்கிய நன்கொடைக்கு அல்ல. 

ஏனெனில், அந்த நன்கொடைப் பணத்தில் அச்சடிக்கப் பட்ட நூல்கள் அனைத்தும் பொதுமக்கள் பெரிதும் பயன் பெறும் வகையில் பொது நூலகங்களுக்கும் பொது அறிவே இல்லாத நிதிபதிகளுக்குமே நன்கொடையாகவே வழங்கப் படுகின்றன. 

இந்த நிபந்தனைகள் எல்லாம் உங்களின் புரிதலை நீங்களே சீர்தூக்கி பார்த்து கொள்ள உதவும். உங்களின் வழியாக நானும் என்னை சரிபார்த்துக் கொள்ள ஒரு வாய்ப்பு.

இந்த நிபந்தனைகள் கேர் சொசைட்டி வெளியிடும் நூல் களுக்கு மட்டும் அல்ல; பொதுவுடைமை அடிப்படையில் யார் வெளியிடுவதாக இருந்தாலும் பொருந்தும்.

இந்த திட்டம் வெற்றி பெற வேண்டுமென எண்ணுங்கள். இதனால் யாருக்கும் நட்டமில்லை; யாவருக்கும் நன்மையே!    

0 comments:

Post a Comment

பத்திரிகை செய்திகள்

அறவழி நோட்டா

அறவழி நோட்டா
மகாத்மா போதித்த வாக்குரிமை!

நோட்டா: NOTA

நோட்டா: NOTA
விளக்கம்: EXPLANATION

நூல்களின் முகப்பு

Followers

முக்கியப் பக்கங்கள்

அடிப்படை சட்டங்கள்

  • 1. இந்திய சாசனம் 1950
  • 2. நீதிமன்ற சாசனம் 1872
  • 3. இந்திய தண்டனை சட்டம் 1860
  • 4. குற்ற விசாரணை முறை விதிகள் 1973
  • 5. உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908

நம் நூல்களைப் பற்றி

நீதியைத்தேடி.... நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் வரிசையில்...
1 குற்ற விசாரணைகள்
2 பிணை (ஜாமீன்) எடுப்பது
எப்படி?
3 சட்ட அறிவுக்களஞ்சியம்
4 சட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்
5 சாட்சியங்களைச் சேகரிப்பது
எப்படி?
6 கடமையைச் செய்!
பலன் கிடைக்கும்
7 மநு வரையுங்கலை!Recent Posts Widget

இந்நூல்கள் அனைத்தும் உங்களின் சட்ட விழிப்பறிவுணர்வுக்காக
மத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவியோடு
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பொது நூலகங்கள், மத்திய சிறைச்சாலைகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

சொந்தமாக தேவைப்படுவோர், உ(ய)ரிய நன்கொடையைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு வாட்ஸ்அப் எண் 09842909190 ஆகும்.

எல்லாப் பதிவுகளும்!

நம் தள வகைகள்

பயின்றோர் (20-08-16)