சமூகத்தின் சட்ட விழிப்பறிவுணர்வுக்கான தளம்

நீ வாழ... நீயே வாதாடு... வரவேற்பு வாழ்த்து!

No law, no life. Know law, know life! என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியத்தை உணர்ந்து, ‘‘நீதியைத்தேடி... சட்டப் பல்கலைக் கழகத்திற்கு’’ வருகை தந்துள்ள உங்களை வருக என வரவேற்று, உங்களுக்கான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்று பயனைப் பெறுக என வாழ்த்துகிறோம்!
முக்கிய அறிவிப்பு : இந்த இணையப்பக்கத்தை புதுப்பிக்கும் பணி நடந்துக் கொண்டிருப்பதால், சில பதிவுகள் அல்லது இணைப்புக்கள் கிடைக்காமல் போகலாம்!

Tuesday, July 9, 2019

சட்ட விரோத மதுக் கொள்(கை, ளை)யும், போராட்டங்களும், மற்ற மர்ம முடிச்சுகளும்...மதுவால் விளையும் தீங்குகளை விளக்க பல நூல்களையே எழுதலாம் என்றாலுங்கூட, மது என்ற இவ்விரண்டு எழுத்தை வைத்தே சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், ம=மகிழ்ச்சி; து=துன்பம். 

ஆமாம், மகிழ்ச்சியில் ஆரம்பித்து துன்பத்தில் முடிவதுதான் மது. இதுபோன்று மதி நுட்பமாக தன் கருப்பொருளை உணர்த்தக்கூடிய வார்த்தைகள் தமிழில் அதிகம் என்றாலும், ஏனோ தமிழைத் தாய் மொழியாக கொண்டவர்கள் உணர்வதில்லை. அப்படி உணர்ந்திருந்தால், மதியை மயக்கும் மதுவுக்கு அடிமையாகி இருக்க மாட்டார்களே! 

பொதுவாக குற்றம் என்பது, ‘‘சட்டப்படி செய்ய வேண்டியதை செய்யாமல் இருப்பதும், செய்யக் கூடாததை செய்வதும் ஆகும்’’. இந்த வரையறை சாதாரண குடிமகனில் இருந்து, அக்குடிமகனை காக்க  அவர்களே தேர்ந்தெடுக்கும் அரசு வரைக்கும் சரி சமமாகப் பொருந்த வேண்டும். 

ஆனால், இந்திய சாசனம் என்கிற இந்திய அரசமைப்பின் அடிப்படை உரிமையில், ‘‘சட்டத்தின் முன் அனைவரும் சமம்’’ என்று தெள்ளத் தெளிவாக சொல்லப்பட்டு இருந்தாலுங்கூட, சட்டத்தை இயற்றும் அரசுகள் தனக்கொரு நீதி, தன் குடிகளுக்கொரு நீதி என்ற வகையில், பாரபட்சத்துடன்தான் சட்டத்தை இயற்றும். 

அதாவது, தன்குடிகள் செய்தால் குற்றம். ஆனால், அதையே தானோ அல்லது தன்னால் நியமிக்கப்பட்ட அரசூழியர்களோ செய்தால் குற்றமல்ல என்ற வகையிலேயே சட்டத்தை இயற்றும்.

இதற்கு முழுக்க முழுக்க அடிப்படை அமைத்து தந்தது, பல்வேறு நாடுகளின் சாசனங்களை எல்லாம் ஈ அடிச்சான் காப்பியடித்து, இந்திய சாசனத்தை தொகுத்த மாமேதை மடையர்களே என்பதை விளங்கிக் கொள்ள விரும்பினால், இந்திய சாசனத்தை சுயமாக எழுதினார்களா...?! என்ற கட்டுரையைப் படித்தப் பின்னரே இதனை தொடர வேண்டும்.

அப்போதுதான் சட்டங்களை குறித்த சரியானப் புரிதலைப் பெற முடியும் என்பதால், ஏற்கெனவே படிக்காதவர்கள் படித்து விட்டு தொடருங்கள்.

பொதுவாக இணையத்தில் தினசரி நாளிதழ்களைப் படித்து, அதில் சட்டம் தொடர்பாக வரும் செய்திகளைப் பற்றி கருத்தை முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவு செய்கிறோமே தவிர, சமூக வலைத்தளங்களில் சட்டம் தொடர்பாக யார் யார் என்னென்ன எழுதி இருக்கிறார்கள் என்று படிப்பதில்லை. 

அப்படி படிக்க ஆரம்பித்தால், அவை அதிகபட்சம் மிகுந்த முட்டாள் தனமாகத்தான் இருக்கும். ஆகையால், அப்பதிவுகள் பலவற்றுக்கு சரியான சட்ட விளக்கத்தை எழுதிப் பதிவிட வேண்டி இருக்கும். மேலும், இவை பெரும்பாலும், ஏற்கெனவே ஆசிரியர் திரு. வாரண்ட் பாலா அவர்கள் நிச்சயமாக நீதியைத்தேடி... உள்ளிட்ட நூல்களில் எழுதியதாகவே தான் இருக்கும்.

அப்படியே ஆசிரியரால் எழுதப்படாத சட்ட சங்கதி என்றாலும் கூட, ஆசிரியரின் கருத்துப்படி, யாருக்கு என்ன தெரியனுமோ அதற்காக அவரவர்கள்தானே சிந்திக்கனும்? நாங்களே எதுக்கு சிந்திக்கனும்?

ஆகையால், என்னதான் நடக்கிறது என்று பார்க்கலாம் என வேடிக்கைதான் பார்க்கிறோம்.

ஆனால், நம் நீதியைத்தேடி... வாசகர்கள் உட்பட பலருக்கும், அவரவர்களுக்காக சிந்திப்பதே மிகுந்த சிரமமாக இருக்கிறது என்றால், அவர்கள் எப்படி மற்றவர்களைப் பற்றியும், மற்றவர்கள் சொல்லுவதில் உள்ள உண்மைகளைப் பற்றியும், சமுதாயத்தைப் பற்றியும் எப்படி சிந்திப்பார்கள்? சிந்திப்பீர்கள்??

அப்படி யாருமே சிந்திக்கத் தயாராக இல்லை. இந்த இழிநிலையே நீடித்தால், எப்படி உருப்பட முடியுமோ??!

சரி, நம்ம விசயத்துக்கு வருவோம்.

ஒரு போராட்டம் என்றால், அதனை தொடர்ந்து நடத்தி அக்காரியத்தை முடித்த பின்னரே ஓயவேண்டும்; அடுத்த போராட்டத்தை ஆரம்பிக்க வேண்டும் என்பதை மகாத்மா காந்தி ஒருவரே சரியாகப் பின்பற்ற, மக்களும் அமோக ஆதரவு கொடுக்க அவர் முன்னெடுத்த ஒவ்வொரு போராட்டமும் வெற்றி அடைந்தது.

அதன் பிறகு, அதே பிரச்சினைக்காக மீண்டும் மீண்டும் போராட வேண்டிய தேவையே இல்லாமல் போனது. இது காந்தி போன்ற கொள்கையாளர்கள் எடுத்த தெளிவான முடிவு. இதுபற்றி ஆசிரியர், ‘‘கடமையைச் செய்! பலன் கிடைக்கும்’’ நூலிலும் விரிவான விளக்கத்தோடு எழுதி உள்ளார்.

ஆனால், இப்போதுள்ள பெரும்பாலான போராட்ட காரர்களின் நோக்கமும், அவர்கள் போராடும் விதமும் தவறாகத்தான் இருக்கிறது.

சமீப காலங்களில் மது ஒழிப்புப் போராட்டம் என சொல்லிக் கொண்டு, சிலர் போராடி வருகிறார்கள். இதில் சசி பெருமாள் என்று ஒருவர் இருந்ததையே நீங்கள் மறந்திருக்க கூடும்.

ஆமாம், ஆள் இருந்தாலே பலருக்கு தெரியாது என்ற நிலையில், இல்லாத சசி பெருமாளை எப்படி நினைவிருக்கும்?

தன்னை காந்தியவாதி என்று சொல்லிக் கொண்ட இவர், அவ்வப்போது உண்ணாவிரதம் உள்ளிட்ட பல்வேறு வழிவகைகளில் போராட்டங்களை நடத்தியவர். இறுதியாக, கடந்த 2015 ஆம் ஆண்டில் செல்போன் டவரின் உச்சியில் ஏறி நின்று போராடினார்.

இது எந்த வகையில் காந்தி சொன்ன அகிம்சை போராட்டம் என்று தெரியவில்லை. தெரிந்தவர்கள் தெளிவாக விளக்கிச் சொன்னால், தெரிந்து கொள்வோம். 

அவ்வப்போது அரசுக்கு பெரும் தொந்தரவாக இருந்த இவரை மேலிருந்து கீழே இறக்குவதாக கூறி, இனியும் இருந்தால் தானே போராடுவாய்? ஆகையால், இனி இல்லாமலேயே போய்விடு என இறக்கவே வைத்து விட்டார்கள்.


ஆமாம், இந்த ஒளிப்படத்தை, நன்றாகப் பார்த்தாலே, இதுபற்றிய பல உண்மைகள் விளங்கும். அந்தரத்தில் வேலை பார்ப்பவர்கள், தவறி கீழே விழாமல் இருக்க அதற்கென உள்ள பிரத்தியேக பெல்ட்டை அணிந்த கொள்ள வேண்டும். இதையேதான் உயரத்தில் உள்ள ஒருவரை கீழே இறக்கவும் பயன்படுத்த வேண்டும்.


இதுபற்றி மேலும் விரிவாக அறிய விரும்புபவர்கள், இந்த காணொளியை பார்க்கவும். ஆனால், இதனை பின்பற்றாமல் கயிற்றை கண்டபடி உடம்பில் சுற்றி இறக்கியும், கயிற்றால் கழுத்தை இறுக்கியும் இறக்க வைத்தார்கள் என்பது படத்தைப் பார்த்தாலே புரியும். ஆகவே, இதுவும் ஒரு திட்டமிட்ட கொலைதான்.

ஆகையால், இவரது மரணத்துக்கு அரசே பொறுப்பு, நீதி விசாரணை வேண்டும் என்றெல்லாம் போலிப் போராளிகள் கூக்குரலிட்டதோடு சரி.


அவரவர்களும் அடுத்தடுத்த தங்களின் போலிப் போராட்டத்திற்கு சென்று விட மற்றுமல்லது அவர்களது தொழிற்சாலைகளில் மது தயாரிக்கும் வேலையில் மும்மரமாகி விட, அனாதையானது சசி பெருமாள் அவர்களது மனைவியும், குடும்பமும் தான்!

மதுவின் துயரத்தில் இருந்து மக்களை காப்பேன் என்று போராட்டக்களத்தில் இறங்கியவர் இறுதியாக தன்னையே காப்பாற்றிக் கொள்ள முடியாது போனது துரதிருஷ்டமே!

இப்போது மது எதிர்ப்பு போராளியாக இருப்பவர்கள், ஆனந்தனும், அவரது மகள் நந்தினி மற்றும் நிரஞ்சனா. இவர்களது முகநூல் பதிவு ஒன்று.

*************

"சமூக வலைத்தளங்களில் நீதிபதிகளை விமர்சித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தனது வானளாவிய அதிகாரத்தை மக்கள் மீது ஏவும் உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கவனத்துக்கு..

இ.பி.கோ.328 பிரிவின்படி மதியை மயக்கக் கூடிய, உடல்நலத்தைக் கெடுக்கக்கூடிய போதையூட்டும் மதுவகைகளை பிறருக்குக் கொடுப்பவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்கப்பட வேண்டும். இச்சட்டம் சரியாக செயல்படுத்தப்பட்டால் தமிழக முதல்வர் முதல் டாஸ்மாக்கில் மதுவிற்கும் ஊழியர் வரை சிறையில் அடைக்கப்பட வேண்டும். சட்டம் தெரிந்த நீதிபதிகளுக்கு இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 328 தெரியாமல் இருக்க முடியாது.

சாதாரண மக்கள் மீது தனது மேலாண்மையை செலுத்தும் நீதிபதிகள் மது ஆலை நடத்தும் அரசியல் வாதிகள் மீதும், மது விற்று லட்சக்கணக்கான மக்களை படுகொலை செய்யும் ஆட்சியாளர்கள் மீதும் ஒரு துரும்பையாவது கிள்ளிப் போட முடியுமா? 

நீதிமன்றத்தை விமர்சித்ததாக குற்றம்சாட்டி பொது மக்களை சிறைக்கு அனுப்ப உத்தரவிடும் உங்களுக்கு இ.பி.கோ-328 பிரிவின் படி மது விற்று மக்களைக் கொல்லும் குற்றவாளிகளை, கொலைகாரர்களை சிறைக்கு அனுப்பும் துணிவு உண்டா? 

ஹெல்மெட் போடுவது கட்டாயம் என்று அதிரடியாக உத்தரவிடும் நீதிபதிகளே! விபத்துகளுக்கு மூல காரணமாக உள்ள டாஸ்மாக் கடைகளை மூடச் சொல்லி உத்தரவிட முடியாமல் உங்களைத் தடுப்பது எது? 

அதிகாரத்தில் இருப்பவர்கள் கொடூரமான குற்றங்களைச் செய்தாலும் கண்டு கொள்ளாமல் குற்றவாளிகளுக்கு துணைபோகும் நீதிபதிகளும் குற்றவாளிகள் தானே? இதை உங்களால் மறுக்க முடியுமா? இதுபற்றி பகிரங்கமாக விவாதிக்க நீங்கள் தயாரா?

நீதிபதி என்பதாலேயே மக்களின் சட்டப்படியான உரிமைகள் மீது கைவைக்கும் அதிகாரத்தை உங்களுக்கு யார் கொடுத்தது? எத்தனையோ தியாகங்கள் செய்து கிடைத்த ஜனநாயக உரிமைகளை ஒருபோதும் விட்டுத்தர மாட்டோம். 

பிரிட்டிஷ் காலத்து சிறைச்சாலையைக் காட்டி மக்களை பயமுறுத்தும் அடக்குமுறையை ஏற்க மாட்டோம். தவறு செய்யும் நீதிபதிகளை விமர்சிப்பதால் என்ன விளைவு ஏற்பட்டாலும் சந்திக்க தயாராகவே இருக்கிறோம் என்பது Nandhini Anandan 22 செப்டம்பர் 2017 அன்று பதிவிட்ட பதிவு.

*************

இது அப்போதே இதுபற்றி எழுத நினைத்து எடுத்த பதிவு. ஆனால், இதில் என்னென்ன கூத்துக்கள் எல்லாம் நடக்கிறது என்பதை அறிவதற்காகவே காத்திருந்தோம். இன்னும் கூட காத்திருக்கலாம்.

ஆனால், இவர்களது போராட்டத்திற்கு நாம் ஏன் ஆதரவு தரவில்லை, இதுபற்றி நாம் ஏன் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை என்ற குழுப்பம் வாசகர்கள் உள்ளிட்ட பலருக்கும் இருக்கிறது.

ஆகையால், வாசகர்கள் உள்ளிட்ட பலரும் இவர்களது போராட்டங்கள் குறித்த பதிவுகளை நமக்கு அனுப்பி, நம் கருத்தை எதிர்ப்பார்த்து நீண்ட காலமாகவே காத்திருக்கிறார்கள்.

ஆமாம், நம் நீதியைத்தேடி... வாசகர்களுக்கே இவர்களது போராட்டம் எந்த அளவிற்கு சட்டப்படி சரியானது என்று தெரியாதபோது, மற்றவர்களுக்கு எப்படி தெரியும்?

எனவே, எல்லோருக்கும், எல்லாவற்றையும் சட்டப்படி விளக்கவே, இந்த விரிவான கட்டுரை!

உண்மையில், ஆனந்தனும், அவரது மகள்களும் நம்முடைய வாசகர்கள். ஆனந்தனும், நம் ஆசிரியரும் இப்போதுள்ள நோட்டா பட்டன் வரவேண்டும் என்ற எண்ணத்தோடு 2008 ஆம் ஆண்டுகளில் களப்பணி ஆற்றியவர்கள்.

ஆமாம், எந்த அளவிற்கு நண்பர்கள் என்றால், ஆசிரியர் எழுதி வந்த ‘‘கடமையைச் செய்! பலன் கிடைக்கும்’’ பத்திரிகையை 2011 ஆம் ஆண்டில் இருந்து நடத்துவதாக இருந்தவர் ஆனந்தன். ஆனால், பிறகு ஏனோ வேறு ஒரு பெயரில் மாத இதழை தொடங்கினார். அதன் பெயரும் நினைவில்லை. அது எவ்வளவு காலம் வெளிவந்தது என்பதும் தெரியாது.

இப்படி நம் ஆசிரியரைப் பார்த்து, வேறு இரண்டு வாசகர்கள் தொடங்கிய மாத இதழ்களும் கூட, தொடர்ந்து வெளிவராமல் போனதில் வியப்பில்லை.

நம் வாசகர்களாக நம் கருத்துக்களில் ஏற்பு இருந்தும், நந்தினி ஆனந்தன் சட்ட பட்டப் படிப்பை தேர்ந்தெடுக்க காரணம், ‘‘வக்கீழ் என்றால், ஓர் அங்கீகாரம் கிடைக்கும்’’ என்று, ஏற்கெனவே உள்ள வக்கீழ்கள் நினைத்ததைப் போலவே, இவர்களும் நினைத்ததை தவிர வேறென்ன இருக்க முடியும்?

சரி, வக்கீழ்களுக்கு எந்த சட்ட விதிகளும் சரியாக தெரிவதில்லை என்பதுதானே நாம் நம் நூல்கள் முழுவதும் நிறுவியுள்ள கருத்து. இது வக்கீழ் நந்தினிக்கு மட்டும் பொருந்தாமல் போய் விடுமா என்ன?!

ஆமாம், இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 328 இன்படி, அரசு மது விற்பது குற்றம் என்பதுதானே நந்தினியின் பிரச்சாரம். ஆனால், உண்மையில் அந்த சட்டப் பிரிவு சொல்வது என்ன? என்பதை மிகவும் கவனமாக படியுங்கள்.


இதன்படி, அரசு அரிசியில் ஆரம்பித்து ஆடு, மாடு உள்ளிட்டவற்றை வழங்குவது போல, மதுவை யாருக்கும் ஓசியில் ஊட்டியோ அல்லது ஊத்தியோ விட வில்லை.

மாறாக, அரசு தன் கஜானாவை நிரப்புவதற்காக, மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு (விற்கும் எனக்கும், வாங்கிக் குடிக்கும் உனக்கும் கேடு) என்று சொல்லியே விற்கிறது. அதனை வாங்கிக் குடிக்க விரும்புபவர்கள் காசு கொடுத்து வாங்கிக் குடிக்கிறார்கள். இது அரசுக்கும், குடிகாரர்களுக்கும் இடையே நடக்கும் கொள்கை, கொள்ளை, கொலை முடிவு.

எனவே, அரிசி, ஆடு, மாடு உள்ளிட்டவற்றை இலவசமாக கொடுத்தது போல, மதுவையும் அரசு இலவசமாக கொடுத்து குடிக்கச் சொன்னால் மட்டுமே, மேற்சொன்ன சட்டப் பிரிவு, அரசை நிர்வகிக்கும் அரசியல் வியாதிகளை தண்டிக்க தக்க அளவில் பொருந்தும் என்பது இப்போது புரிந்து இருக்கும்.  

ஆகையால், இதுபற்றிய வழக்கு விசாரணையில் கேள்வி கேட்டதாகவும், மேலும் கேட்க இருந்ததாகவும் சொல்லப்படும் கிறுக்குத்தனமான கேள்விகள், அதனால் ஏற்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, சிறையில் அடைப்பு, முகநூல் பதிவின் கருத்துக்கு மாறாக பிணையில் விட கோரியது, பிணையில் விட விதிக்கப்பட்ட நிபந்தனை என எல்லாமே கேலிக் கூத்தானவை என்பதால், இதற்கெல்லாம் வீணாக விளக்கம் தரவில்லை.  

ஆனாலும், முக்கியமான இரண்டு விசயங்களை தெளிவுபடுத்த வேண்டி உள்ளது. குடி வீட்டுக்கு கேடு என்பது மட்டும் அவர்களின் பிரச்சாரமல்ல; மோடி நாட்டுக்கு கேடு என்பதும் தான்! இதுகுறித்த காணொளிகளை யூடியூபில் காணலாம். 

மது விற்பனையை தமிழக அரசு செய்ய, மது ஒழிப்பு பிரச்சாரத்தில் மோடியை இழுக்க வேண்டி தேவை என்ன? இதனை மோடியின் ஆதரவாளர்கள் எதிர்த்து பிரச்சினை செய்யாமல் என்ன செய்வார்கள்? அப்போது சமூகத்தில் வேறு பிரச்சினைகள் உருவாகுமா உருவாகாதா? மதுவால் ஏற்படும் தீங்குகள் குறித்து விழிப்புணர்வு செய்கிறேன் என்று சொல்லுபவர்கள், வேறு பல பிரச்சினைகளை உருவாக்கு எப்படி சரியாகும்?

மோடியை எதிர்க்க வேண்டிய தேவை இருந்தால், அதனை தனியாக செய்ய வேண்டியதுதானே?! 

வழக்கு விசாரணையில் நந்தினி கேட்ட கேள்வி தவறு என்றால், அதனை நிதிபதி தவிர்க்க அறிவுறுத்தி, அவரும் பதிவு செய்ய மறுப்பார். இதனை ஆட்சேபித்து, எப்படி தொடர்புள்ளது என விளக்கினால், நிதிபதி ஏற்றுக் கொள்ள வேண்டும். 

எனவே இதற்காக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போட முடியாது. போடப்பட்டதாக சொல்வதும் பொய். பொய்த்தொழிலை செய்ய ஆரம்பித்தால் பொய்த்தானே சொல்ல வேண்டும்? 

உண்மையில், அரசின் மது விற்பனைக்கு நீதிமன்றமும் உடந்தையா என ஆனந்தன் கூச்சல் இட்டதாலேயே நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிகிறது. நிதிபதிகளும் உடந்தைதான் என்பதில் எங்களுக்கும் மாற்றுக் கருத்தில்லை. ஏன் உடந்தையாக இருக்கிறார்கள் என்பதை இதன் இறுதிப் பகுதியில் பார்ப்போம். 

சரி, அப்படியானால், இந்த சட்டப்பிரிவை சரியாக எப்படி எல்லாம் பொருள் கொள்ளலாம் என்றால், இந்தப் பிரிவின்படி, நாம் ஒருவருக்கு வலுக் கட்டாயமாக போதையை ஊட்டி விட்டு, அதனால் நிலை தடுமாறி அவன் குற்றம் எதையும் புரிந்து விட்டால், அதற்கு அவன் பொறுப்பாகவே மாட்டான். கட்டாயமாக ஊட்டி விட்ட நாமே பொறுப்பாவோம் என்பது ஒன்று.

அப்படி கட்டாயப்படுத்தி மதுவைக் கொடுத்ததால் அந்நபர் போதையில் தன்னிச்சையாக தனக்குத் தானே எந்த விதத்தில் காயம் ஏற்படுத்திக் கொண்டாலும் அதற்கும் நாமே பொறுப்பாவோம் என்பது மற்றொன்று என எங்களது அறிவுக்கு எட்டிய வகையில், இப்போதைக்கு இரண்டு விதங்களாக வகைப்படுத்தலாம். 

இதனை நாம் கட்டாயப்படுத்தி கொடுக்க வேண்டும் என்பது மட்டுமல்ல; அவர் அறியாமல் குடிக்கும் சூழ்நிலையை உருவாக்கி அதனால் குற்றம் நிகழ்ந்தாலும், அதற்கு அவர் பொறுப்பல்ல; நாமே பொறுப்பு என நம் ஆசிரியர் சொல்வதைப் போல, இச்சட்டப்பிரிவு பல்வேறு அர்த்தங்களை தருகிறது. ஆகையால், மேன்மேலும் இதுபற்றி சிந்திக்க வேண்டும்.

எனவே, இது அல்லாமலோ அல்லது இது தவிரவோ வேறு எதாவதொரு அர்த்ததில் இருப்பது, உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள். நாங்களும் அதுபற்றி சிந்தித்து தெரிந்துக் கொள்வதோடு, இதிலும் சேர்த்து விடலாம்.  

இது புரியாமல், இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 19 இன் விளக்கத்தை தவறாகப் புரிந்துக் கொண்டு, ‘‘நானும் நிதிபதிதான் என்று சொல்லிக் கொண்டதால் சிறைத்தண்டனைக்கு ஆளாகி இருக்கும் செந்தமிழ்க் கிழார் என்பவரைப் போல’’ இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 328 ஆனது என்ன சொல்கிறது என்றே புரியாமல், ‘‘அரசு மதுவை விற்பது குற்றம்’’ என்று ஆனந்தனும், நந்தினியும் பல வருடங்களாக இச்சட்டப் பிரிவை தவறாகச் சொல்லி போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்பதே எங்களின் கருத்து.

இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 328 க்கான சரியான விளக்கம் இதுதான் என்பதை, இதுவரை யாரும் சொன்னதாக தெரியவில்லை. அப்படி யாராவது சொல்லி இருந்து, அதுபற்றி சொன்னால் தெரிந்துக் கொள்கிறோம். 

மேலும், இதனை ஆனந்தன் மற்றும் நந்தினி சரிபார்த்து, விரும்பினால் விளக்கமான மறுப்புக் கட்டுரை எழுதிக் கொடுத்தால் வெளியிட்டு, நாங்களும் சட்டப்படியே ஆதரவு தர தயாராக இருக்கிறோம்.

அப்படி இல்லையென்றால், தங்களின் போராட்டம் எந்த அளவிற்கு சரியானது என்பதை (இப்போதே சுமார் ஐந்தாறு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இன்னும் பல்லாண்டுகள் கழித்து நிதிபதிகள் சட்ட விளக்கம் தவறு என்று சொல்வதற்கு முன்பாக) ஆனந்தனே சீர்தூக்கிப் பார்த்து போராட வேண்டும். ஏனெனில், போராடுவதற்கு பலரும் தயாரில்லாத நிலையில், போராடுபவர்களின் எந்தவொரு போராட்டமும் வீணாக கூடாது. 

இது புரியாமல், இச்சட்டப் பிரிவின்படி சரிதான் என நம் வாசகர்கள் உள்ளிட்ட, சமூகம் நம்பிக் கொண்டு ஆதரவு கொடுக்கிறோம் என்றப் பெயரில், ‘‘அவர்களை உசுப்பேத்தி உசுப்பேத்தியே சிறைக்குள் தள்ளி நடக்க இருந்த திருமணத்தை நிறுத்தி விட்டார்கள்’’ என்பதை தவிர வேறென்ன சொல்வது?

மேற்சொன்ன சட்ட விளக்கத்தின்படி, இக்குற்றம் (ந, த)டைபெற காரணமாக இருந்த ஆதரவாளர்கள் அனைவரையும் கூடவே, குற்ற உடந்தையில் சேர்த்து தண்டனைக்கு உள்ளாக்கலாம்.

அப்படியானால், மதுவை ஒழிக்க எதுவுமே செய்ய முடியாதா அல்லது என்ன செய்ய வேண்டுமென்றால், முன்பே சொன்னது போல, இந்திய சாசனத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ள கொள்கை முடிவுகளை பின்பற்ற வேண்டியது அரசின் கட்டாயக் கடமை.

ஆனாலும், அரசு அக்கடமையில் இருந்து தவறினால், நீதிமன்றம் உள்ளிட்ட யாரும் கேள்வி கேட்க முடியாது என்று மற்ற நாடுகளின் சாசனங்களில் இருந்து ஈ அடிச்சான் காப்பியாக இந்திய சாசனத்தை தொகுத்த மாமேதைகளின் மடத்தனத்தை திருத்தி எழுத முயற்சிப்பதன் மூலம் எளிதில் தீர்வு காண முயல வேண்டும்.

இது ஒன்றே இந்தியா முழுமைக்கும் மது விலக்கை அமல்படுத்துவதற்கான தீர்வாகவும், தீர்ப்பாகவும் இருக்கும் என நம்பலாம்.

ஆமாம், இந்த ஒன்றை மட்டும் செய்து விட்டால் மது மட்டுமல்ல; அரசின் கொள்கை முடிவு என்ற பல்வேறு பகல் கொள்ளை முடிவுகளுக்கும் சமாதி கட்டி விடலாம். 

இப்படி ஒன்றின் மூலம் பல பிரச்சினைகளை வராமல் தடுப்பது சிறந்ததா அல்லது ஒவ்வொரு பிரச்சினையாக வந்தப்பின் அவைகளை எதிர்த்து ஆயுள் முழுவதும் போராடுவது சிறந்ததா?

சரி, இதனை நீதிமன்றத்தின் மூலம் செய்ய வழியில்லையா என்ற கேள்வி உங்களுக்கு எழுந்தால்,

அரசின் கூலிக்கு மாரடிக்கும் எவரும்
காரிய அடிமைகளே! கயமை கோமாளிகளே!!
வெள்ளையர்களை விஞ்சிய கொள்ளையர்களே!!

என்று ‘‘மநு வரையுங்கலை!’’ நூலில் ஆசிரியர் திரு. வாரண்ட் பாலா அவர்கள் முன்மொழிந்த தத்துவத்தை நினைவில் கொள்ளுங்கள். 
அவர் சொல்லும் தத்துவங்கள், மேலோட்டமாக படிக்க சர்வ சாதாரணமாக தெரியலாம். ஆனால், அவை அனைத்துமே சரித்திரத்தில் பொறிக்கப்பட வேண்டிய அளவிற்கு அர்த்தங்கள் பொருந்தியவை. 
ஆமாம், எந்த நூலில் இந்த தத்துவத்தை சொன்னாரோ, அந்த நூலிலேயே இதற்கான விடையையும் வேறு விதமாக எழுதியுள்ளார். அது என்ன?
பொதுவாக அரசூழியர்கள் என்று சொல்லப்படுபவர்களை ‘‘அரைகுறை ஊழியர்கள், அரசூழியர்கள், பொது ஊழியர்கள்’’ என மூன்றாக, தகுதியின் அடிப்படையில் தரம் பிரித்து சொன்னார் அல்லவா? 


அதில், வாரியங்கள் மற்றும் கலகங்களால் மட்டுமே அரசுக்கு வருமானம் என்றும், அரசுத்துறை மற்றும் அரசின் அதிகாரம் பெற்ற நீதித்துறையால் அரசுக்கு அவ்வளவாக வருமானம் கிடையாது. 
ஆனால், இவ்விரு துறைகளுக்கும் பெரும்பணம் செலவு செய்யப்படுகிறது என்றும், இதற்கு வாரியங்கள் மற்றும் கலகங்களில் வசூலாகும் நிதியே கை கொடுக்கிறது என்றும் சொல்லி உள்ளார்.  
நிதிபதிகளுக்கு கொடுக்கப்படும் பெரும்கூலி, வீடு, கார் உள்ளிட்ட சொகுசு வாழ்க்கைக்கு மது உள்ளிட்ட வருவாயில் இருந்துதான், அரசு செலவழிக்கிறது என்ற நிலையில், ‘‘மதுவை விற்க கூடாது என்று கூறி நிதிபதிகள் சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்வார்களா?’’ 

இவ்வளவு ஏன், அரசு ஊழியராக இருந்து, விருப்ப ஓய்வைப் பெற்று மதுவுக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கும், ஆனந்தன், அரசிடம் இருந்து மாதா மாதம் தனக்கு கிடைக்கும் பென்ஷன் பணத்தை வேண்டாமென சொல்லி விடுவாரா? அந்தப் பணம் இல்லாமல், அவர்களால் போராட முடியுமா??

மதுவை மையக்கருவாக கொண்ட தமிழ் திரைப்படம் ஒன்றில், ‘‘நாங்க குடிச்சிட்டு தள்ளாடுவதால்தான், அரசாங்கம் தள்ளாடாம இருக்கு; நாங்க ஸ்டெடியா நிற்க ஆரம்பிச்சிட்டோம்னா, அப்புறம் அரசாங்கம் தள்ளாட வேண்டியதுதான்’’ என்று சொன்னதில் கூடுதலாக நாம் சொல்வது, நிதிபதிகளின் வாழ்வும் ஆட்டம் கண்டு விடும் என்பதே!
இப்படித்தான் கேவலர்களுக்கு வழங்கப்படும் பெரும் கூலி உள்ளிட்ட சலுகைகளுக்கு ஆகும் தொகையை அவர்கள் மக்களிடம் மாதாமாதம் அபராதமாக வசூலித்து தந்து விட வேண்டும் என்பதெல்லாம் எழுதப்படாத சட்டம் அல்ல.  
ஆமாம், அவரவர்களுக்கு மாத்திரமே தெரியும் வண்ணம் எழுதப்படுகிற சட்டம் என்பதற்கு ஆதாரமாக, இந்த 2019 - 2020 ஆம் நிதியாண்டில் எவ்வளவு கோடி (சுமார் 1634.30 கோடி என தெரிகிறது. இது ஆய்வில் இருக்கிறது) தொகையை வசூல் என்றப் பெயரில் மக்களிடம் இருந்து வழிபறி செய்துத் தரவேண்டுமென இந்திய இரயில்வே வாரியம், அதன் பயணச்சீட்டு பரிசோதகர்களுக்கு இலக்காக நிர்ணயித்துள்ள ஆதாரம் நம்மிடம் இருக்கிறது. 

ஆகவே, திட்டம் போட்டு மக்களிடம் வழிபறி மூலம் கொள்ளையடிக்கும் கொள்ளையர்களுக்கும், அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி மக்களை கொள்ளையடித்து, அதில் கூலியைப் பெற்று சொகுசாக வாழும் இவர்களுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. 

இந்திய தன்னாட்சி நூலின், ஒன்பதாவது கட்டுரையில், இந்திய இரயில்வே சமூகத்திற்கு கேடு என்று மகாத்மா காந்தி சொன்னதை, இங்கு மிகப் பொருத்தமாக நினைவு கூற வேண்டியுள்ளது. 

இறுதியாக, எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்கிறது என்று தெரியாது என்பது போலவே, யாருடைய போராட்டத்தின் பின்னனியில் யார் இருக்கிறார்கள் என்பது எதுவுமே தெரியாமல், நாம் யாரையுமே கண்மூடித்தனமாக  ஆதரிக்க கூடாது. அவ்வளவே! 

பிற்சேர்க்கை நாள் 11-07-2019

கடந்த 05-07-2019 அன்று நந்தினிக்கு நடைப்பெற்று இருக்க வேண்டிய திருமணம், சிறையில் இருந்ததால் நின்று போனது. பின் பிணையில் வந்துள்ள நந்தினிக்கு, தந்தை ஆனந்தன் தலைமையேற்று, அவருக்கே உரிய பாணியில் நேற்று திருமணம் நடத்தி வைத்துள்ளார். அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்!


பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

Monday, July 8, 2019

இனி சட்டம் படிக்க வேண்டிய கட்டாயம் வரும்மக்களுக்குள் தகராறுகள் ஏற்படும்போது, பொய்யர்கள் மகிழ்ச்சி அடைவதாக காந்தி சொன்னார். அது அந்தக்காலம். 

ஆனால், மக்களுக்கும், ஊழியர்களுக்கும் தகராறுகள் ஏற்படும்போது, இனி நானும் மகிழ்ச்சி அடைவேன் என்கிறேன். இது இந்தக் காலம். 

ஆமாம், இனிமே சட்டம் படிக்கவில்லை என்றால், குற்றவாளி ஆக்கப்பட்டு சிறையிலேயே சாக வேண்டியதுதான்! மக்கள் சட்டத்தைப் படிக்க ஆரம்பித்து விட்டால் எனக்கு அதைவிட வேறு மகிழ்ச்சி என்ன இருக்க முடியும்?! 

வழிபறி செய்யும் கொள்ளையர்களிடம் அவர்கள் நினைத்தப் பொருள் அகப்படவில்லை என்றால் ஆயுதத்தை காட்டி மிரட்டுவார்கள். இதற்கு பெரும்பாழானோர் பயந்து கொடுத்து விடுவார்கள். சிலர் மட்டுமே போராடுவார்கள். 


இதைபோன்றே சட்டத்துக்கு விரோதமாக வாகன ஓட்டிகளிடம் வழிபறி செய்து வந்த போக்குவரத்துக் காவலூழியர்கள், கேட்டது கிடைக்காத போது, அவதூறு வழக்கு நடவடிக்கை என்ற ஆயுதத்தை புதிதாக கையில் எடுத்து இருக்கிறார்கள். 

இதன் மூலம், பொதுமக்கள் படம் பிடிப்பதை தடுத்து விடலாம் என்று தப்புக்கணக்கு போடுகிறார்கள். நமக்கு இரண்டு கண்கள்தான். ஆனால், நம்மை ஆயிரமாயிரம் கண்கள் கண்காணித்துக் கொண்டு இருக்கிறது என்பது, அந்த காவலூழிய அடிமை முட்டாள்களுக்கு தெரியப்போவது இல்லை. 

அடிப்படை உரிமைகளுக்கு எதிராக கிறுக்கு கிருபாகரன் போன்ற நிதிபதிகள் முட்டாள்தனமாக போடும் உத்தரவு செல்லாது என்று சொல்லமுடியாத முட்டாள் அடிமைகளே காவலூழியர்கள்.
இதனை ஆர்ப்பாட்டம் போராட்டம் ஆகிய முறைகளில் எடுத்துச் சொல்ல முயன்ற பொய்யர்களை நீதிமன்ற அவமதிப்பு என்றப் பெயரில் நிதிபதிகள் முடக்கி விட்டார்கள். 

ஆகையால், அதேபோன்று வழக்குப்புதிவு என்ற வேறொரு வழிமுறையை கையாண்டு நாமும் அடக்கி விடலாம் என காவலூழியர்கள் தப்புக் கணக்கு போட்டு விட்டார்கள் போலும்! 

இந்த வழக்கை நான் சொல்லும் சட்டப்படியான முறையில் (வாகன (ஓட்டி, பயணி)களே... உஷார்!) எதிர்க்கொண்டால், போக்குவரத்து காவலூழியர்கள் அபராதம் விதிக்க முடியாது என்ற நிலை நிச்சயம் வரும். ஆனால், சிக்கியவர்கள் நான் சொல்வதை கேட்கனுமே! 

எது எப்படி இருப்பினும் இந்தச் செய்தியை அவர்களுக்கு தெரிந்தவர்கள் யாரும் இருந்தால் கொண்டு செல்லுங்கள். என்னுடைய மின்னஞ்சலுக்கு வரச் சொல்லுங்கள். வந்தால் பார்க்கலாம். 

தலைகவசம் அணிவதை கட்டாயம் ஆக்கனும் என்று பொதுநல வழக்கு போட்டப் பினாமிப் பொறம் போக்குகளும், தன்னார்வ தறுதலைகளும் இதற்கு என்ன பதில் சொல்வார்கள்? எங்கே அவர்கள்?? 

இவர்களுக்கு என்றே நூலொன்றை கூட எழுதலாம். ஒவ்வொருவரின் பின்புலத்திலும் அவ்வளவு சொல்ல வேண்டிய சங்க(தி, தீ)கள் இருக்கின்றன. 

ஆமாம், இவர்கள் ஒவ்வொருவருமே தன்னை விட சிறந்த ஆணிப் புடுங்கிகள் வேறு யாரும் இல்லை என்ற மனநலம் பாதிக்கப்பட்டவர்கள். 

பினாமியாக இருப்பவன் பிரபலம் ஆகனும், அதன் மூலம் தான் துப்பாக்கி ஏந்திய காவலூழியரோடு பாதுகாப்பாகவும், பெருமையாகவும் வீதியுலா வரனும்  என்பதற்காக பொதுநல வழக்கு போடுறான்.

இந்த உண்மை தெரியாமல் தலையில் தூக்கி வைத்து கொண்டாடிய மக்கள் இதையெல்லாம் அனுபவித்துத் தானே ஆகனும்! இதனால், இனியாவது சட்டத்தைப் படிக்கத்தானே வேண்டும்!!

ஆமாம், இதுபற்றி நான் சிந்திக்காத நேரமே இல்லை. ஆயினும், குமரேசன் என்ற அன்பர் ஒருவர் இதுபற்றி அடிக்கடி சொல்லிக் கொண்டே இருக்கிறார்.

எனக்கு அறிமுகமாகி ஐந்தாறு மாதங்களே ஆன இவ்வன்பர், ‘‘சத்தியவான் காந்தியை கண்டபடி திட்டித் தீர்த்தும், உண்மையில் யாரையெல்லாம் திட்டனுமோ அவர்களை எல்லாம் பாராட்டியும் பேசிக் கொண்டு இருந்தார்’’. 

இதற்கு எதிர்ப்பாக நான் சொல்ல வேண்டிய மிக முக்கிய சங்கதிகளை மட்டும் சொல்லி முடித்துக் கொள்வேன்.

ஒரு நாள் உங்களின் நூல்கள் எல்லாம் வேண்டுமென வாங்கிக் கொண்டார். முழுமையாகப் படிக்காமல் அவ்வப்போது ஆங்காங்கே படித்தார். என்ன ஆச்சி, ஏது ஆச்சின்னு தெர்ல வெகுசில தினங்களாக காந்தியை கொண்டாட ஆரம்பித்து விட்டார்.

அதாவது வழக்கம் போல காந்தியை திட்டவில்லை. திட்டியவர்கள் திட்டாமல் இருந்தால், அதுவே கொண்டாட்டம்தானே? அதான் இப்படிச் சொன்னேன்.

மேலும், அவ்வப்போது காந்தியை நினைவுபடுத்தியே பேசி வருகிறார். இவரிடம் இப்படியொரு மாற்றம் வரும் என நானே எதிர்ப்பார்க்கவில்லை.

ஆமாம், போற்ற வேண்டியவர்களை தூற்றுபவர்கள் எல்லாம், அவர்களைப் பற்றிய சரியான புரிதல் இல்லாத அறியாமையினாலேயே தூற்றுகிறார்கள் என்ற எனது கருத்துக்கு இவ்வன்பர் நல்லதொரு உண்மை! 

இவர் பல்வேறு விடயங்களில் (மூலிகை, மருத்துவம், ஆன்மிகம், சன்மார்க்கம் உள்ளிட்ட) ஆழ்ந்த பட்டறிவு உள்ளவர். ஆகையால், நம் சட்ட விழிப்பறிவுணர்வு கொள்கை எந்த அளவிற்கு போகும் என்பதையும் கணித்து விட்டார். 

‘‘மநு வரையுங்கலை!’’ நூலில் வள்ளலார் வழக்கு குறித்து நான் ஆராய்ந்து எழுதியுள்ள சங்கதிகள் மற்றும் ‘‘வாழ்க வையகம் வாழ்க வளமுடன்’’ என்ற சொற்றோடருக்கு தனியுரிமை வழங்கக்கூடாது என்று சட்டப்படி போராடி வெற்றியை நிலைநாட்டியது எல்லாம் அவருக்கு மிகவும் பிடித்துப் போய் விட்டது. 

ஒரு நாள் பேசும் போது, ‘‘காந்தி சுதந்திரம் வாங்கிக் கொடுத்து விட்டார். ஆனாலும் மக்கள் தங்களின் சுதந்திரத்தை அனுபவிக்காமல் இருப்பதற்கு அடிப்படை காரணமே, அதுகுறித்த சட்ட அறியாமை தான்’’ என்றார். 

மேலும், பெயரளவுக்கு உள்ள சுதந்திரத்தை பெயர் சொல்லும்படி உங்களின் சட்ட ஆராய்ச்சி சிந்தனைகள் மாற்றி இருக்கின்றன என்றும்.., 

தோழர் காரல் மார்க்ஸ் மற்றும் ஏங்கல்ஸ் எழுதி வெளியிட்ட கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை உள்ளிட்டவை தொழிலாளர் வர்க்கத்துக்கு எழுச்சியை தந்தது போலவே, அனைத்து தரப்பினரும் இனி சட்டம் படித்தே ஆக வேண்டும் என்ற கட்டாய நிலை உருவாகும்போது, உலக மக்களுக்கெல்லாம் உங்களின் நூல்களே கை கொடுக்கும் என்று சதா சொல்லிக் கொண்டே இருக்கிறார்.

இப்படி வேறு சிலரும், சில வருடங்களாக சொல்லிக் கொண்டிருக்க, பத்திரிகை செய்தியில் கண்டுள்ள படி நாட்டில் நடக்கும் சம்பவங்களைப் பார்த்தால் அப்படியொரு விழிப்பறிவுணர்வு நிலை விரைவில் வந்து, நம் சமூகம் நன்றாக இருந்தால் சரிதான்!

பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

Saturday, July 6, 2019

நீ வாழ நீயே வாதாடு! - ஆயுள் தண்டனை கைதி நளினி முருகன்சுமார் இருபது வருடங்களுக்கு முன்பு தானொரு சட்டப் பிரச்சினையை சந்தித்த போது, இப்படித்தானே மக்கள் எல்லோரும் சந்தித்து சந்தியில் நிற்கிறார்கள்?

ஆகையால், நம் சமூகத்தில் உள்ள அனைவருக்கும் சரியான சட்ட விழிப்பறிவுணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று ஆரம்பித்த ஆராய்ச்சியாளர் / ஆசிரியர் திரு. வாரண்ட் பாலா அவர்களின் கொள்கை முடிவால் இன்று எண்ணற்றோர் பயன்பெற்று வர, எதிர் காலத்தில் இது மேன்மேலும் வளர்ந்து, அனைவருக்குமான ஆலமரமாய்  நிற்கப் போகிறது.

ஆமாம், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 1991 ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டு, பின் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டு சுமார் 28 வருடங்களாக வேலூர் மத்திய சிறையில் இருந்து வரும் நளினி முதல் முறையாக உயர்நீதிமன்றத்தில் தானே வாதாடி ஒரு மாதம் பரோலைப் பெற்று, 28 ஆண்டுகளுக்குப் பின் கொஞ்சம் சுதந்திரமாக நடமாடப் போகிறார்.
பரோலுக்காக பல முறை அவரது சார்பில் பொய்யர்கள் மனுத்தாக்கல் செய்தும் கிடைக்காதது, தானே வாதாடியதால் கிடைத்திருக்கிறது. இது ‘‘நமக்காக, நாமேதான் வாதாட வேண்டும்’’ என்றக் கொள்கைக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய வெற்றி! 

தன் வழக்கில் தானே வாதாடி, விடுதலையானவர்கள் பலர் இருந்தாலும், நளினி மீதான வழக்கை ஊரே அறியும் என்பதால், ஆயுள் தண்டனைக் கைதியாக உள்ள அவரே வாதாடி பரோல் பெற்றது, இந்திய வரலாற்றில் மிகமிக முக்கியமான முதல் பதிவு. 

ஆங்கிலேயர்களின் ஆதிக்க அடிமைத்தனத்தில் நாம் இருந்த போது கூட, தீவாந்தர தண்டனை என்றப் பெயரில் அதிகபட்சமாக இருபது வருடங்கள்தான் சிறைத் தண்டனை விதித்தார்கள். இது குறித்த விரினான விளக்கம், கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பு கட்டுரைகளில் உள்ளது என்பதால், இங்கு சொல்லப்படவில்லை. 

பொதுவாக இதுபோன்று பெரிய அளவிலான சிறைத் தண்டனையோடு, வேறு சில குற்றங்களுக்காக சிறைத் தண்டனையையும் விதிக்க நேர்ந்தால், அனைத்தையும் ஏககாலத்தில் (ஒரே நேரத்தில்) அனுபவிக்க வேண்டும் என்றுதான் தீர்ப்பில் எழுதுவார்கள். 

அதாவது அனுபவிக்க வேண்டியது அதிகபட்ச தண்டனை மட்டுமே. அதற்கும் குறைவான தண்டனைகள் எல்லாம் அதிகபட்ச தண்டனைக்குள் அனுபவித்ததாக அடங்கி விடும்.


ஆங்கிலேய நிதிபதி முதன் முதலில் சட்டத்துக்கு விரோதமாக, சட்டத்தை மீறி தீர்ப்பளித்தான் என்றால் அது, கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களுக்கு மட்டுமே. 

ஆமாம், இரண்டு தீவாந்தர தண்டனை என்றும் இதனை தனித்தனியாக அனுபவிக்க வேண்டும் என்றும் தெரிந்தேயும், வேண்டுமென்றேயும் தீர்ப்பு எழுதினால் என்றால், வ.உ.சி மீது எவ்வளவு பயம் இருந்திருக்க வேண்டும் என்பது விளங்கும்.

இதனை எதிர்த்து, இங்கிலாந்தில் மேல்முறையீடு செய்து, ஒரு தீவாந்திர தண்டனையாக குறைத்தார்கள் என்பதெல்லாம் அவரது சுயசரிதையில் விளக்கப்பட்டு உள்ளது. ஆகையால், தேவையானவர்கள் படித்துக் கொள்ளலாம்.

சுமார் இரண்டு ஆண்டுக்கு முன்பு, வேலூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக உள்ள நளினியின் கணவர் முருகனுக்கு நம் நீதியைத்தேடி... உள்ளிட்ட சட்ட விழிப்பறிவுணர்வு நூல்கள் தேவை என்று கேட்கப்பட்டது. ஆகையால், இவர்களே வாதாட ஆயத்தமாகி வருகிறார்கள் என்பதும் புரிந்தது.

ஆனால், நாம் ஏற்கெனவே சிறைக்கு கொடுத்துள்ள நூல்களை எடுத்துப் படிக்கவும், தனியாக தேவை எனில்,  சிறை விதிகளைப் பின்பற்றி சரியான சட்ட முறைப்படி, நூல்களைக் கேட்டு கடிதம் எழுதவும் சொல்லிவிட்டோம்.

மேலும் சில ஆண்டுகளுக்கு முன்பாகவே, (2014 - 2015 என நினைவு) சிறையில் இருக்கும் பேரறிவாளனுக்கு, அவனது தாயார் அற்புதம் அம்மாள் மூலம் அன்பளிப்பாகவே தந்துள்ள தகவலையும் தெரிவித்தோம்.


இதன் பின்பு, சிறையில் செல்பேன் பயன்படுத்திய தான பொய் வழக்கில் முருகனே வாதாடியும், சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்து, பின் விடுதலையும் அடைந்தார்.


இதன் மூலம், இனி பொய்யர்களை நம்பிப் பலன் இல்லை என்பதை உணர்ந்தும், நம் நூல்களைப் படித்தும் தானே வாதாடி வருவது உறுதியானது.

இந்த வரிசையில் தற்போது, அவரது மனைவி நளினியும் வாதாடி பரோலைப் பெற்று, நீ வாழ நீயே வாதாடு என்பதை உலகிற்கு அறிவித்து உள்ள இவர்கள், தங்களின் விடுதலைக்காக இனியும் வாதாடுவார்கள்!

பல்லாண்டுகளுக்கு முன்பாகவே விடுதலை செய்யப்பட்டு இருக்க வேண்டியவர்கள், இன்னும் சிறையில் இருக்க காரணம் என்ன? இதில் யார் யார் என்னென்ன அவலங்களை செய்தார்கள், ஆதாயங்களை தேடினார்கள் என்பதை விரிவாக அறிய விரும்பினால், மூவர் விடுதலையில், மூடர்கள் களியாட்டம்!, சதி சிவம் ஆகிய இரண்டு கட்டுரைகளையும் படிக்க வேண்டும். 

பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

Sunday, June 30, 2019

பொய் வழக்கில் கைது செய்ய முயற்சித்தால், என்னென்ன செய்யனும்?!நீதியைத்தேடி... நூல்களை வாங்குவோரில், வம்பு வழக்கு உள்ளவர்கள், சட்டத்தை அறிந்துக் கொள்ளும் ஆர்வத்தில் உள்ளவர்கள் என்று பல வகையினர் உண்டு. 

இதில் வம்பு வழக்கு உள்ளவர்கள், நீதியைத்தேடி... நூல்களைப் படிப்பதையே வேலையாக வைத்துக் கொள்ள வேண்டும். மற்ற வேலைகளை எல்லாம் அதற்கேற்ற வகையில் ஒதுக்கி வைத்துவிட வேண்டும். இல்லையேல், இரண்டும் கெட்டான் என்ற நிலையில் எல்லாம் பயனற்றுப் போய் விடும். 

பொதுவாக வம்பு, வழக்கு உள்ளவர்களுக்குத்தான் சட்ட விதிகள் நன்றாக புரிய வேண்டும். ஆனால், ஏனோ சிலருக்கு அவ்வளவாக புரிவதில்லை. இவர்களுக்கே விளங்கவில்லை என்றால், கூடவே இருக்கும் குடும்பத்தாருக்கோ அல்லது நண்பர்களுக்கோ மட்டும் எப்படி விளங்கும்? இவர்களுக்கு உதவியாக அவர்களால் சட்ட விதிப்படி என்ன செய்து விடமுடியும்??

உண்மையில், பிரச்சினைக்கு உள்ளானவர்கள் சட்ட விதிகளை நன்றாகப் புரிந்துக் கொண்டு, அதுபற்றி தம்முடன் உள்ளவர்களுக்கு எடுத்துச் சொல்லும் போதுதான், அவர்களுக்கும் எளிதில் புரியும் என்பதோடு, இவர்கள் சட்டத்தில் சாதிப்பார்கள் என்று இவர்களின் மீதான நம்பிக்கை அவர்களுக்கும் அதிகரிக்கும். 

ஆனால், சில வாசகர்களைப் பற்றி நமக்கே நம்பிக்கை இல்லாத நிலை இருக்கிறது என்பதை தவிர, வேறென்ன சொல்ல முடியும்?! ஆசிரியர் நூல்களில் சொல்லாத விசயங்களையா நாம் சொல்லிவிட முடியும்??

ஆமாம், பொய் வழக்கில் கைது செய்தால், அடுத்தடுத்து என்ன செய்யனும்?! என்பது பற்றி, ‘‘கடமையைச் செய்! பலன் கிடைக்கும்’’ நூலில், நிதிபதிகளை வறுத்தெடுப்பது எப்படி? என்றத் தலைப்பில் எழுதி உள்ளார். 

ஆனால், பொய் வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் யாருமே இதன்படி செயல்படவில்லை. இப்படியெல்லாம் செயல்பட ஆரம்பித்தால்தான், பொய் வழக்கில் கைது செய்வதை தடுக்க முடியும். 

இப்படித்தான் சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஒரு வாசகருக்கு பல்வேறு சட்டப் பிரச்சினைகள் இருப்பது போல தெரிகிறது. ஆகையால், இவர் தனக்கு சட்டம் தெரியும் என்று வெளிக்காட்ட நினைக்கிறாரே ஒழிய, சட்டத்தின் அடிப்படை விசயங்களையே அறியாமல் தான் இருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டியுள்ளது. 

இதனை அவரே சட்டங்கள் சரியாக நினைவில் இருப்பதில்லை என்றும், ஒவ்வொரு முறையும் நூல்களைப் படித்தே சட்ட விதிகளை தேடிப்படிக்க வேண்டி உள்ளது என்றும் ஒப்புக் கொள்கிறார். இது எந்த அளவிற்கு சரியானது என்பதை பின்னர் நீங்களும் அறிவீர்கள். 

ஆமாம், இவருக்கு எதிராக கொடுக்கப்பட்ட புகார் மீது, சட்டப்படி முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்திருக்க வேண்டிய கேவலர்கள், அப்படி செய்யாமல், வழக்கம்போல மனு ரசீது கொடுத்து விட்டு, அதுகுறித்து விசாரிக்க இம்மாதம் 18-06-2019 அன்று விசாரணைக்கு வர வேண்டும் என்கிற அழைப்பாணையை  அடுத்த நாளான 19-06-2019 அன்று இவருக்கு சார்வு செய்ததாக சொல்கிறார். 

உடனே, இவர் என்ன செய்திருக்க வேண்டும்? நேற்று நடந்த விசாரணைக்கு இன்று அழைப்பாணை சார்பு செய்யப்படுகிறது என்பதால், ஆட்சேபனையுடன் பெற்றுக் கொள்கிறேன் என்று எழுதி கையொப்பம் இட்டிருந்தால், அழைப்பாணை செல்லாதது ஆகி இருக்கும் அல்லவா? 

ஆனால், இவரோ மிக முக்கியமாக எழுத வேண்டிய இதை எழுதாமல் வேறு எதையெதையோ எழுதி 19-06-2019 என்ற தேதியோடு கையொப்பமிட்டு உள்ளார். பின் இதுகுறித்து விரிவான கடிதம் ஒன்றையும், சட்ட விதிகளோடு சம்பந்தப்பட்ட நிதிபதிக்கு மூன்று பக்கத்திற்கு எழுதி உள்ளார். இதன் நகலை நமக்கு உட்பட வேறு பலருக்கும் குறிப்பிட்டு உள்ளார். 

ஆனால், சொல்வதை எப்படி நேர்த்தியாக, எவர் படித்தாலும் புரியும்படி சொல்ல வேண்டுமோ அப்படி சொல்லத் தெரியவில்லை. ஆனாலும், இவருக்கு நன்றாகவே சட்டம் தெரியும் என்று இருந்து விட்டோம்.

கேவலர் ஒருவர் மீண்டும் அழைப்பாணை கொண்டு வந்துள்ளோம்; வந்து பெற்றுக் கொள்ளுங்கள் என வெளியில் வேலையாக இருந்த இவரை அழைக்க (புத்திசாலித்தனமாக உலாப்பேசியில் பதிவு செய்திருக்கிறார்), இவர் வந்ததும் பலவந்தமாக கைது செய்து (புத்திசாலித்தனமாக இதனை வீடியோ எடுத்து வைத்துள்ளார்) காவல் நிலையத்துக்கு கொண்டுச் சென்று அடித்து கையெழுத்து வாங்கியப் பின் நிதிபதியிடம் கொண்டு சென்று இருக்கிறார்கள்.  

இவரின் கடிதத்தை ஏற்கெனவே பெற்ற நிதிபதி, தான் வெளியில் செல்வதாகவும், வேறு நிதிபதியிடம் கொண்டு செல்லுமாறும் கேவலர்களுக்கு சொல்ல அதன்படி அழைத்துச் சென்று உள்ளார்கள். 

அவரிடம் இவர் தன்னை அடித்தது, கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்கியதைச் சொல்ல, நமக்கு ஏதோ வில்லங்கம் விலைக்கு வருகிறது என நினைத்த அவர் யாருக்கோ போன் செய்து ஏதேதோ கேட்டப்பின், குற்றச் சம்பவத்தை விவரிக்கும் வரைபடம் (மகஜர்) சரியாக இல்லை; சட்டப் பிரிவுகள் சரியாக இல்லையென்று காரணத்தை கூறி நீதிமன்ற காவலுக்கு (ரிமாண்டு) அனுப்பாமல், திங்கள் கிழமை  இரண்டு நபர்களோடு வந்து பிணை கொடுக்க வேண்டும், வெளியூர் செல்லக்கூடாது என்ற நிபந்தனையோடு விட்டு விட்டார். 

28-06-2019 இரவு இவையெல்லாம் நடந்தப்பின், கேவலர்களின் பிடியில் இருந்து வெளியே வந்த வாசகர் நல்லிரவு இரண்டு மணிக்கு இந்த தகவலை தெரிவிக்க, அனைத்து விவரங்களையும் அறிந்து அடுத்தடுத்து என்ன செய்ய வேண்டும் என்று அக்கறையோடு சொல்லத் தொடங்கியதால் அன்றைய தூக்கம் முழுவதும் கெட்டது. இதனால், அடுத்த நாள் பகல் வேலைகளும் கெட்டது.

பொதுவாக ஆசிரியரே ஆலோசனை சொல்வதில்லை என்கிற நிலையில் நாங்களும் சொல்வதில்லை. ஆனால், இவ்வாசகர் நடுவரிடம் வாதாடி சிறைக்கு செல்லாமல் வெளியே வந்ததால், சற்று ஆலோசனைகளை சொல்லி முறைப்படுத்தலாம் என்று நினைத்ததன் விளைவு. இவர் சிறைக்கு சென்று, சட்டங்களைப் படித்தால், ஒருவேளை சரியான புரிதல் கிடைத்தாலும் கிடைக்கலாம்.

ஆமாம், ஆசிரியர் சொல்வது போலவே, சிலருக்கு ஆலோசனை சொல்லும்போதுதான் அவர்களின் சட்ட அறிவுத் திறனை அறிய முடிகிறது. இல்லையெனில், வாசகர்கள் எல்லாம் சட்டத்தில் வல்லவர்கள் என்றே குருட்டாம் போக்கில் தவறாக நினைக்க வேண்டி உள்ளது. அப்படி இவ்வாசகருக்கு சொல்லப் போய்தான் கணிக்க முடிந்தது. 

வாசகர்கள் சுயமாக சிந்திக்காமல், ஈ அடிச்சான் காப்பியே அடிக்கிறார்கள் என்பதற்கு இவ்வாசகரும் நல்லதொரு உண்மை!

ஆமாம், திங்கள் அன்று ‘‘நீ நிதிபதியிடம் சொல்ல வேண்டியது நான் குற்றம் புரிந்ததற்கான முதற்கட்ட ஆதாரங்கள் இருந்தால் என்னை நீதிமன்ற காவலுக்கு தாராளமாக அனுப்புங்கள். இல்லையேல் குற்றம் புரியவில்லை என விடுவியுங்கள். 

நான் குற்றம் எதுவும் புரியாமலேயே பிணையில் செல்ல விரும்பவில்லை என்பதோடு குற்றம் புரிந்ததாக ஒப்புக்கொண்டு நீதிமன்ற காவலுக்கு ஆட்பட கையொப்பமிடவும் விரும்பவில்லை என்று குவிமுவி 2 (7) 7 இன் கீழ் பரிசீலனை மனு ஒன்றை கொடு’’ என்று சொல்லப்பட்டது.

இதில், சரியான குவிமுவி 2 (7) க்கு பதில் குவிமுவி 2 (7) 7 என தவறாக பதிவாகி விட்டது. இதெல்லாம் மிக முக்கியமான சட்ட விதிகள் என்பதால், சாதாரணமாக தெரிந்திருக்கும் என நினைத்து, தவறை சுட்டிக்காட்ட வில்லை.

ஆகையால், அப்படியே ஈ அடிச்சான் காப்பியாக குவிமுவி 2 (7) 7 இன் கீழ் மனு எழுதி அனுப்பி இருக்கார் என்றால், இவரெல்லாம் எப்படி வழக்கை சிறப்பாக நடத்துவார்? மாறாக ஏடாகூடமாக எதையாவது செய்ய, நம் வாசகர் என்ற வீண்பழி நம் சட்ட விழிப்பறிவுணர்வு மீதல்லவா விழும்??

இதுபற்றி கேட்டால், எல்லாம் அவன் செயல் தமிழ் திரைப்படத்தில், வக்கீழாக வாதாடும் வடிவேலு போல, ‘‘உங்களுக்கு தெரியாத சட்டம் ஒன்றுமில்லை; ஆகையால், எந்த சட்டம் சரியோ அதனை, நீங்களே போட்டுக்கொள்ளுங்கள் என்பாராம், நிதிபதியிடம்!’’

இதெல்லாம் நம் சட்ட விழிப்பறிவுணர்வுக்கே இழுக்கு என்பது இவ்வாசகருக்கு புரியாமல் போனது ஏனோ?!

ஆமாம், ஆசிரியரைப்போல், நாம் நீதிமன்றத்துக்கு சென்று சட்டம் பேசினால், நிதிபதிகள் அதுபற்றி தேடிப்பிடித்து படிக்க வைக்க வேண்டுமே ஒழிய, போயும் போயும் அக்கேடுகெட்ட நிதிபதிகளிடமா சட்ட விதியைக் கேட்பது... கெஞ்சுவது?

ஆசிரியர் சொல்வதுபோல, அடிப்படை சட்டங்கள் ஐந்தில் ஒன்வொன்றிலும் குறைந்தது மிக முக்கிய பத்து பிரிவுகள், விதிகள் என ஐம்பது சட்ட விதிகளை தெரிந்து வைத்திருந்தாலே, எப்படிப்பட்ட சட்டப் பிரச்சினையையும் எளிதில் சந்திக்கலாம். இவரைப் போன்ற வாசகர்கள் இதற்கே தயாரில்லை என்றால், எப்படி வாதாடி சாதிக்க முடியுமோ?

சரி, நம் மீதான புகாரின் நகல், ஆதாரச்சான்றுகளின் நகல் எதுவும் தரப்படாமல், அழைப்பாணையை மட்டும் கொடுத்தால், அதனைப் பெற்றதும், சட்டப்படி அடுத்து என்னென்ன செய்யலாம்? என்று பார்ப்போம்.

கு.வி.மு.வி 2(7) இன் கீழ் பரிசீலனை மனு ஒன்றை சம்பந்தப்பட்ட நடுவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யலாம். அந்நடுவர் யார் என்று தெரியாதபோது, மாவட்ட தலைமை குற்றவியல் நடுவரிடம் தாக்கல் செய்யலாம்.
அதில், குற்றம் சாற்றப்பட்ட ஒருவருக்கு, கு.வி.மு.வி 207 இன்படி. அனைத்து ஆவணங்களையும் தந்த பிறகுதான் நிதிபதியே விசாரிக்க முடியும் என்னும் போது, கேவலர்கள் அழைப்பாணையை மட்டும் தந்து விசாரிக்க அழைப்பது சரியல்ல. ஆகையால், என் மீது கொடுக்கப்பட்ட புகார் உள்ளிட்ட அனைத்து ஆவண ஆதாரங்களை தர உத்தரவிட வேண்டும் என்ற பரிசீலனை மனுவை தாக்கல் செய்யலாம்.

இப்படி தாக்கல் செய்தால், பொய்ப் புகாரின் பேரில் கேவலர்கள் நம்மை ஒன்றும் செய்ய முடியாமல் போய் விடும். இதையெல்லாம் இவ்வாசகர் உட்பட இதுவரை எந்த வாசகர்கரும் யோசித்து செய்யவில்லை என்பது வாசகர்களின் முட்டாள்தனமே அன்றி வேறென்ன? 

என் பிரச்சினைக்கு தக்கவாறு நான் யோசித்து சட்டத்தை பயன்படுத்தினேன். அப்படியே நீங்களும் உங்களது பிரச்சினைக்கு தக்கவாறு சட்டத்தைப் பயன்படுத்துங்கள் என்று தானே, ஆசிரியர் நூல்களில் சொல்லி உள்ளார்?

அப்படியும் யோசிக்கவில்லை என்றால், மனிதனாய் பிறந்ததன் பயன்தான் என்ன... உங்களுக்கும் விலங்குக்கும் உள்ள வித்தியாசம் தான் என்ன?? என்று கேள்வி எழுப்புவதை தவிர்க்க இயலவில்லை. 

சரி, இதனை இவ்வாசகர் சிந்திக்க தவறி விட்டார். இவரைப் போலவே நீங்களும் தவறி விட்டீர்கள் என வைத்துக் கொள்வோம். இது தொடர்பாகவே இனி நிதிபதியிடம் என்னென்ன கேள்விகளை கேட்கலாம் என யோசிக்க வேண்டும்.

ஆமாம், சட்ட விழிப்பறிவுணர்வுள்ள நாம் சட்டத்தை நீதிமன்றத்தில் தான் அதிகமாக பயன்படுத்த வேண்டுமே ஒழிய அதுபற்றி அறவே அறியாத முட்டாள் கேவலர்களிடம் பயன்படுத்துவது மடத்தனம் என்பதை ஆசிரியரே நூல்களில் எழுதியுள்ளதோடு அப்படித்தானே அவரும் நடந்து கொண்டுள்ளார் என்னும் போது, முட்டாள் கேவளர்களிடம் சட்டம் பேசி ஏன் நம்மை நாமே தாழ்த்திக் கொள்ளவோ அல்லது அடிபடவோ வேண்டும்?

எனவே, ‘‘கேவலர்கள் நீ தான் கொலை செய்தாய்’’ என்று ஒப்புக் கொண்டு எழுதிக்கொடு என்று கேட்டால் கூட, ‘‘ஓ, அவ்வளவுதானா...’’ என்று நகைப்பாக கேட்டு விட்டு தாராளமாக எழுதிக் கொடுக்கலாம்.

ஏனெனில், கேவலர்களின் காவலில் உள்ள ஒருவர் கொடுக்கும் வாக்குமூலம் எதுவுமே துன்புறுத்தியே வாங்கப்பட்டிருக்கும் என்று, சாட்சிய சட்டம் அனுமானிப்பதால், அது இந்திய சாட்சிய சட்ட உறுபு 26 இன்கீழ் செல்லாது என்பதை தன் அனுபவமாகவே ஆசிரியர் நூல்களில் பதிவு செய்துள்ளாரே!

நியாயந்தான் சட்டம்! என்று ஆசிரியர் முன் மொழிந்துள்ள தத்துவத்திற்கு இணங்கவே இப்படி யெல்லாம் சட்டம் நியாயமாக இருக்கும் போது, நாம் எதற்கு வீணாக கவலைப்படனும்?

ஆகையால், இனி ஒரு குற்றம் சுமத்திப்பட்ட நபராக இருக்கும்போது, கேவலர்கள் என்ன கேட்டாலும், அது காவல்துறையின் எந்த உயர்மட்ட கேவலராக இருந்தாலம் சரி... தாராளமாக எழுதிக் கொடுக்கலாம்.

ஆனால், இதையே ஒரு நிதிபதியிடம் எழுதிக் கொடுத்தால், அப்படியே செல்லுபடியாகும். ஆகையால், அதற்கான தண்டனையும் உறுதி! என்பது நினைவிருக்கட்டும். 

நாம் சட்டப்படி இப்படியெல்லாம் எழுதி வாங்கக் கூடாது; அப்படி வாங்கினாலும் செல்லாது என்று தெரியாத மடையர்களே கேவலர்கள் என்றால், உள்ளதை உள்ளபடி சொல்வது அவதூறு ஆகாது என்ற சட்டக் கருத்துக்கு இணங்க சட்டப்படியே இவர்களை கேவலர்கள் என்று விமர்சிக்காமல் வேறென்ன சொல்வது?

சரி, இனி நிதிபதியிடம் என்னென்ன கேள்விகளை சட்டப் பிரச்சினைகளாகவே எழுப்பலாம் என பார்ப்போம்.

என்னை கைது செய்து உங்களிடம் கொண்டு வந்த போதும் என்னை நீதிமன்ற காவலுக்கு ஆட்படுத்தும் அளவிற்கு மகஜர் சரியாக இல்லை; சட்டப் பிரிவுகளும் சரியில்லை என்று நீங்களே என்னை விடுவித்து உள்ள நிலையில் அவர்கள் என்னை கைது செய்தது மட்டும் எப்படி சரியாகும்?

கேவலர்கள் சமர்ப்பித்த ஆதாரங்கள் சட்டப்படி சரியில்லாதவை என தெரிந்தப்பின், கு.வி.மு.வி 167 இன்படி என் மீதான குற்றச் சாற்றுக்கு ஆதாரமில்லை என்று முற்றிலுமாக விடுவித்திருக்க வேண்டுமே ஒழிய, கேவலர்களின் சட்டக் குளறுபடிகளை சரி செய்து தருமாறும், என்னை இரு நபர் பிணையில் செல்லுமாறும் சொல்லியது எந்த சட்ட விதிப்படி சரியாகும்?

கேவலரின் அழைப்பாணையின்படி, சட்ட விரோதமாக விசாரணைக்கு செல்லவில்லை என்றால் கூட, அதற்காக இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 174 இன்படி, கைது செய்ய முடியாத அக்குற்றத்துக்கு சட்ட நடவடிக்கை எடுக்க முடியுமே தவிர, அக்கேவலரே கைது செய்ய முடியுமா?

என் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாற்றுக்கு சரியான ஆதாரங்கள் இருந்து, கைது செய்யத் தகுந்தது என்றால்,  முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்து என்னை நேரடியாக கைது செய்யாமல், புகார் என்ன என்பதை தெரிவிக்காமல் அழைப்பாணையை மட்டும் கொடுத்து விசாரணைக்கு அழைத்தது எந்த சட்ட விதிப்படி சரியாகும்?

இந்த விசாரணைக்கு நான் செல்லாமல் ஒத்துழைக்க மறுத்தது எந்த சட்ட விதிப்படி, பலவந்தமாக கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு நிறுத்த தக்க குற்றமாகும்?
ஏழு வருடத்துக்குள் சிறை தண்டனை விதிக்கத்தக்க குற்றத்துக்கு கைது செய்வதை தவிர்க்க வேண்டும் சட்ட விதி இருக்கும்போது, என்னை கைது செய்தது எப்படி சரியாகும்?

கேவலர்களின் அழைப்பாணையைப் பெற்றதும், அது குறித்து நான் உங்களுக்கு எழுதி அனுப்பிய கடிதத்தின் மீது நீங்கள் எடுத்த சட்ட நடவடிக்கை என்ன?

சட்டப்பூர்வ நடவடிக்கையை எடுத்திருக்க வேண்டிய நீங்கள் நடவடிக்கை எடுக்காததால்தானே என்னை, சட்ட விரோதமாக கைது செய்து, உங்களிடமே நீதிமன்ற காவலுக்கு கொண்டு வந்திருக்கிறார்கள்?

இதற்கு சட்டப்படி யார் பொறுப்பு, நிதிபதியாகிய நீங்களா அல்லது கேவலர்களா?

என்பன போன்று பல்வேறு கேள்விகளை எல்லாம் ஆசிரியரைப் போலவே கு.வி.மு.வி 2(7) மற்றும் 395 இன்கீழ், சட்டப் பிரச்சினையை எழுப்பி உயர்நீதிமன்றத்துக்கு அனுப்பி கருத்தை கேட்டு முடிவெடுக்கும் வரை தன்னை நீதிமன்ற காவலில் வைக்கும்படியும், சட்டத்துக்கு விரோதமாக நான் பிணையில் செல்ல இயலாது என்றும் துணிந்து சொல்லலாம்.

நான் ஏழுப்பியள்ள கேள்விகள் எல்லாம் சட்ட விதிப்படி சரியே என என்னை விடுவித்தால், கு.வி.மு.வி 340 இன்படி, என் மீது பொய் வழக்குப் போட்டு, நீதி நிர்வாகத்தைப் பாதிக்கச் செய்த கேவலர்கள் மீது சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் சொல்லலாம்.

இப்படி சொன்னாலே, வழக்குப் பதிவு செய்த கேவலர்களுக்கும், நடுவருக்கும் பீதியில் பேதியாகி விடும். இதெல்லாம் ஒன்றும் புதிதல்ல; ஏற்கெனவே நம் ஆசிரியர் திரு. வாரண்ட் பாலா அவர்கள் நூல்களில், தன் அனுபவமாகவே சொல்லி உள்ளது தான். 

அதை ‘‘அப்படியே ஈ அடிச்சான் காப்பியடிக்க முடியவில்லை என்று சொல்லும் இவரைப் போன்ற வாசகர்களுக்கு, இதையாவது ஈ அடிச்சான் காப்பியடிக்க முடிகிறதா?’’ என்று பார்ப்போம் என்பதை தவிர வேறென்ன சொல்ல முடியும்?

குறிப்பு: இதுபோன்ற கேவலர்கள் மீது, வாசகர்கள் மனித உரிமை சட்டப்பிரிவு 30 இன்கீழ், மாவட்ட அமர்வு நீதிமன்றங்களில் குற்றவியல் வழக்கை தொடுத்து, குற்றத்தை நிரூபித்து சிறையில் தள்ளி வேலையை காலி செய்ய வேண்டும்; வெளியில் வந்ததும் பிச்சை எடுக்க வைக்க வேண்டும்.  

மிக முக்கிய குறிப்பு: இந்த கட்டுரையை எழுதி வெளியிட்டு படித்தப் பிறகு, இவ்வாசகர் தனது தரப்பை விளக்கும் பொருட்டு மூன்று ஆடியோக்களை அனுப்பி இருந்தார்.

அதில் இவர் கொடுத்த பணத்தை வாங்குவது தொடர்பாக ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்று பேசுகிறார். அடிப்படை சட்ட அறிவில்லாத இவர் அவர்களிடம் தன்னை சட்ட ஆராய்ச்சியாளர் என்று வேறு இரண்டு மூன்று இடங்களில் சொல்லிக் கொள்கிறார். 

ஏற்கெனவே நம் இருபாலின வாசகத் தறுதலைகள் சிலர் சட்ட ஆராய்ச்சியாளர்கள் என்று சொல்லிக் கொண்டு, பொய்யர்களுக்கு வழக்குப் பிடித்து தரும் புரோக்கர்களாகவும், பொய்யர்களின் கமிஷனுக்கு விற்றுத் தரும் விற்பனையார்களாகவும்.., 

பிரச்சினைக்கு உரிய சொத்தை எனது பெயருக்கு எழுதி கொடு. அச்சொத்துப் பிரச்சினையை தீர்த்து தருகிறேன் என்றும் கூறி, அச்சொத்தை அபகரிக்க அவர்களை அடித்து உதைப்பவர்களாகவும், நிலத்தைப் பறிக்க பொய்யர்களை கொண்டு வழக்கு  நடத்தும் கயவர்களாகவும்..,

சட்டத்துக்குப் புறம்பாக செயல்பட்டு சிக்கும் அய்யோக்கிய அரசூழியர்களை கொண்டு தங்களுக்கு தேவையான காரியங்களை சட்ட விரோதமாக செய்துக் கொள்ளும் கூட்டுக்களவாணிகளாகவும்..,

ஆலோசனை கேட்டு நாடும் ஆதரவற்ற இளம் பெண்களை வைத்து குடும்பம் நடத்தி விட்டு, பின் கருக்கலைப்பு செய்து கைவிட்டு விடும், மீறினால் மிரட்டல் விடுக்கும் கூட்டுக் களவாணிகளாகவும்..,

சிறைக்கு சென்றால் கூட, அங்குள்ள கைதிகளை நட்பு பிடித்து வெளியில் வந்தப்பின், அவர்களது வசிப்பிடம் சென்று, அவர்களது உறவினர்களிடம் சட்ட ஆராய்ச்சியாளராக சிறைக்கு சென்றிருந்தது போது விபரம் அறிந்ததாகவும், உதவுவதாகவும் கூறி பணப் பறிப்பு, பொருள் அபகரிப்பு ஆகிய வேலைகளில் ஈடுபடுகிறார்கள். இதனை தேனி மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண் வாசகியே செய்தாள்.

ஆகையால், ஆசிரியரைப் போல, வேறு யாராவது சட்ட ஆராய்ச்சியாளர்கள் என்று சொல்லிக் கொண்டால், அவர்களிடம் மிகுந்த எச்சரிக்கையாக இருங்கள்; ஏமாந்தப் பின் புலம்பிப் பயனில்லை என்பதை, நம் ஆசிரியரே, ‘‘மநு வரையுங்கலை!’’ நூலில் எழுதி எச்சரித்து உள்ளார் என்பதையும் நினைவு படுத்திக் கொள்ளுங்கள். 

ஆமாம், அரைகுறை ஊழியர்கள், அரசூழியர்கள் கேவலர்கள், வக்கீழ்கள், நிதிபதிகள் போலவே நம் வாசகர்களைப் பற்றியும் எடுத்துரைத்து எச்சரிக்க வேண்டியதும் கடமையே என்பதால்தான், ஆசிரியர் நூல்களிலேயே எச்சரித்து உள்ளார். அப்படியே இங்கும் எச்சரிக்கப்படுகிறது.

இறுதியாக நம் வாசகர்கள் என்று நம்பி, நீங்கள் யாரிடமாவது ஏமாந்தால், உறுதியாக அதற்கு ஆசிரியரோ அல்லது நாங்களோ எவ்விதத்திலும் பொறுப்பல்ல!

பிற்சேர்க்கை நாள் 03-07-2019

குற்ற விசாரணை முறை விதி 167(2) இன்படி, ஒருவரை கைது செய்த கேவலர்கள், அவரை நீதிமன்ற காவலில் அடைப்பதற்காக நிதிபதியின் முன் முன்னிலைப் படுத்தும்போது, அந்த நபர் குற்றம் புரிந்ததற்கான போதிய முகாந்திரம் இருந்தால் மட்டுமே அதனை ஏற்று நீதிமன்ற காவலில் வைக்க கையெழுத்திட வேண்டும். இல்லையேல், மேலே நம் வாசகரை விட்டது போல அங்கேயே விட்டுவிட வேண்டும். 

மேலும், இன்ன காரணத்துக்காகவே சிறையில் வைக்க கையெழுத்திட்டு உள்ளேன் என்பதை, அந்த நபருக்கும் தெரிவிக்கும் விதமாக, அவரின் கையொப்பத்தையும் கட்டாயம் பெற வேண்டும். ஆனால், பெரும்பாழான மட நிதிபதிகளுக்கு இப்படி பெற வேண்டும் என்பதே கூட தெரிவதில்லை. 

ஆகையால், போதிய சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்று நீங்களே எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 

இல்லையெனில், புகார் கொடுத்தவரை கூட, சிறையில் அடைக்க வேண்டிய குற்றம் புரிந்த கைதி என நினைத்து சிறையில் வைத்து விடுவார்கள், மட நிதிபதிகள்! இப்படிப்பட்ட கூத்துக் கொடுமைகள் எல்லாம் நம் முட்டாள் நிதிபதிகளால் அரங்கேற்றப்பட்டு உள்ளதையும் பாருங்கள்!! இதில் உயர்நீதிமன்ற நிதிபதிகளின் விசாரணையில் கூட, தன் மீதான குற்றத்தை, ‘‘தன் பெயருக்கும் குணத்திற்கும் சற்றும் சம்பந்தம் இல்லாத குற்றம் புரிந்த நிதிபதி குணவதி ஒப்புக் கொள்ளவில்லை’’ என்பது, மிகவும் கவனிக்க வேண்டியதாகும். 
பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

Tuesday, June 25, 2019

மறு விசாரணைக்கு அழைப்பதை மறுக்க முடியாதுகடந்த வாரம் வெளியான இந்த செய்தி குறித்து, வாசகர்கள் எந்த அளவிற்கு சட்ட விதிப்படி சிந்திக்கிறார்கள் என்பதை அறிய, அவர்களின் கருத்தை கேட்டிருந்தோம். 

கருத்து சொன்ன பலரும், உயர்நீதிமன்ற நிதிபதியின் கருத்து சரியாகத்தான் இருக்கிறது என்றும், நாம் கேள்வி எழுப்பியதாலேயே நிச்சயம் தவறு இருக்கவே செய்யும் என்ற நம்பிக்கையில், தவறாகத்தான் இருக்கும் என்ற கருத்தைப் பதிவு செய்திருந்தாலும்...

யாருமே எந்த விதத்தில் சரி என்றோ அல்லது தவறு என்றோ சட்ட விதிப்படி விளக்கம் அளிக்கவில்லை என்பதன் மூலம், வாசகர்கள் சட்ட விழிப்பறிவுணர்வில் எந்த அளவிற்கு புலமையோடு இருக்கிறார்கள் என்பதையும் அறிய முடிந்தது! 

இதுபோன்றதொரு சட்டப் பிரச்சினைகள் அவர்களுக்கு வந்தால், பொய்யர்களுக்கு தெரியும் என பொய்யர்களிடம் போவார்களோ...! அல்லது வேறென்ன செய்வார்களோ...??? தெரியவில்லை.

நம் சமூகத்திற்கான சட்ட ஆராய்ச்சியாளராக நம் ஆசிரியர் திரு. வாரண்ட் பாலா அவர்கள் மிக மிக எளிதாக புரியும் விதத்தில் சட்ட விதிகளை விளக்கியும் கூட, இதபோன்ற கேள்விகளுக்கு வாசகர்கள் சிந்திக்காமல் இருக்கிறார்கள் என்றால், இந்த வாசகர்கள் நம் சமூகத்திற்காக என்ன கடமையை செய்வார்கள்? என்ற நியாயமான கேள்வியும் எழுகிறது.

படம் இதைக் கொண்டிருக்கலாம்: உரை
சரி நம்ம விசயத்துக்கு வருவோம்.

பொதுவாக ஒருவர் சொல்லும் கருத்தை கேட்கும் போது, அந்த நேரத்தில் அது மிகவும் சரியே என்றுதான் எண்ணத் தோன்றும். ஏனெனில், அப்போது அதுபற்றி சிந்திக்க நமக்கு போதிய நேரம் இருப்பதில்லை. 

பின் ஓய்வு நேரம் இருக்கும்போது சிந்தித்தால், அதிலுள்ள உண்மையும், பொய்யும் ஓரளவுக்கேனும் விளங்கி விடும். இதனை அடிப்படையாக கொண்டு மேன்மேலும் சிந்தித்தோ அல்லது சம்பந்தப்பட்ட நபரிடம் கேள்வி எழுப்பியோ கிடைக்கும் பதிலின் மூலம் முடிவுக்கு வர முடியும். 

இது பொதுவான இலக்கணமே ஒழிய, எல்லாவற்றுக்கும் பொருந்தி விடாது. சங்கதிக்கு தக்கபடி மாறும்.  

ஆமாம், இதையே ஒரு தீர்ப்பு பற்றி சிந்திக்க வேண்டும் என்றால், முதலில் அந்த தீர்ப்பில் சொல்லப்பட்டுள்ள சட்ட சங்கதிகள் நமக்கு அத்துபடியா என்பதில், போதிய தெளிவு இருக்க வேண்டுமே ஒழிய, போதை தெளிவில் இருக்கவே கூடாது. ஆகையால், முதலில் அதில் தெளிவைப் பெற வேண்டும். 

பின்பு தீர்ப்பில் உள்ள சங்கதிகளை அதோடு ஒப்பிட்டு பார்த்தால், நிதிபதியால் சொல்லப்பட்ட தீர்ப்பு சட்ட விதிப்படிதான் சொல்லப்பட்டு உள்ளதா... அல்லது அவரது இஷ்டப்படி சொல்லப்பட்டு உள்ளதா என்பது விளங்கி விடும். 

இதுவே, நம் ஆசிரியர் திரு. வாரண்ட் பாலா அவர்கள் சட்ட விதிப்படி தீர்ப்புகளை ஆராயும் மேன்மையான அணுகு முறை. இதோடு, சட்ட விதிகளில் உள்ள சங்கதிகள் அடிப்படை சட்டங்கள் ஐந்துக்கு எதிராக அல்லது முரண்படாமல் இருக்கிறதா... நியாயமாக இருக்கிறதா... என்பதை அறியும் திறன் ஒரளவுக்காவது வேண்டும்.

இந்த அடிப்படையில், மேற்கண்ட தீர்ப்பை கீழ்கண்ட சட்ட விதியோடு ஒப்பிட்டு சரியா... பிழையா என அறிய முற்படுவோம். குற்ற விசாரணை முறை விதிகள் 1973 இன் விதி 311 சொல்வது என்ன?
அதாவது அரசுத்தரப்பு சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்ய அனுமதிக்க வேண்டுமா... வேண்டாமா என்பதே இதில் நாம் தீர்வு காணப்பட வேண்டிய பிரச்சினை.

அரசுத்தரப்பு சாட்சிகள் 2012 ஆம் ஆண்டில் சாட்சியம் அளித்து உள்ளனர். அவர்களை மீண்டும் குறுக்கு விசாரணைக்கு அழைப்பது தவறு என்பது, உயர்நீதிமன்ற நிதிபதியின் கூற்று.

இதன் மூலம் நாம் தெரிந்துக் கொள்ள வேண்டியது, இது தொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கிறது. அதில் ஏழு ஆண்டுகள் கழித்து அரசுத்தரப்பு சாட்சிகளை மறு குறுக்கு விசாரணைக்கு அழைத்தால், அவர்களது ஞாபக மறதியில் முன்னுக்குப் பின் முரணாக சாட்சி சொல்ல நேரிடலாம் என்பது நிதிபதியின் கருத்து.

ஒருவர் சாட்சியம் அளித்து விட்டால், அதன் மீது அவரை குறுக்கு விசாரணை செய்யவும், தேவைப்பட்டால் மீண்டும் அவரை அழைத்து மறு குறுக்கு விசாரணை செய்யவும் அவரது தரப்புக்கும், எதிர்தரப்புக்கும் உரிமை உண்டு. 

மேலும் விசாரணை என்பது, புகார்தரப்பினர் சாட்சி சொல்ல ஆரம்பித்ததில் இருந்து, தங்களது வாதங்களை தொடர்வதற்கு முன்பு வரை என்பதால், அதுவரை மறு விசாரணை செய்ய உரிமையுண்டு.

ஆகையால், ‘‘குற்றம் ஏழு வருடமாக விசாரணையை முடிக்காமல் இருக்கும் கீழமை நிதிபதியுடையதே தவிர, எதிர்த்தரப்புடையது அல்ல’’ என்பதையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டுமே அன்றி, விலங்குபோல (உயர்நீதிமன்ற நிதிபதியைப் போல) முடிவெடுக்கக் கூடாது.

ஒரு வழக்கில் சாட்சிகளை மீண்டும் விசாரிக்க, நியாயப்படி ஒரு வாய்ப்பு மட்டுமே தரலாம். அப்படி தந்திருந்தாலும் வழக்கு விசாரணை முடிந்திருக்க வேண்டும். ஆனால், கீழமை நீதிமன்றத்தில் நடக்கும் இந்த வழக்கில் எத்தனை முறை விசாரணைக்கு அழைத்தார்கள்; எத்தனை முறை அனுமதி அளிக்கப் பட்டது என்பது தெரியவில்லை.

ஆனால், மீண்டும் மீண்டும் அழைக்க முடியாது என பத்திரிகை செய்தியில் உள்ளபடி, பலமுறை அழைக்கப்பட்டு இருந்தால், அதைத்தான் முக்கிய காரணமாக நிதிபதி சொல்லி இருக்க வேண்டும். அப்படி சொல்லாததால், ஒரு முறை கூட அழைக்கப் படவில்லை என்றே எடுத்துக் கொள்வோம்.

சட்ட விதிகளின்படி தீர்ப்புகள் தெளிவாக சொல்லப்பட வேண்டும் என்றாலும்,  நிதிபதிகளின் அபார அறிவு வறுமையின் காரணமாக அப்படி சொல்லப்படுவது இல்லை. 

ஆமாம், ஞாபக மறதியில் முன்னுக்குப் பின் முரணாக சாட்சி சொல்ல நேரிடலாம் என்பது நிதிபதியின் கருத்தும் சட்ட அறிவின்மையின் அடையாளமே!

இந்திய சாட்சிய சட்ட உறுபு 159 இன்படி, சாட்சியம் அளிக்கும் ஒருவர், ஏதாவதொரு சங்கதியைப் பற்றி நினைவுபடுத்திக் கொள்ள வேண்டி இருந்தால், அதனைப் பார்வையிட உரிமையுண்டு. சட்டம் எப்படி எல்லாம் நியாயமாக இருக்கிறது என்பதற்கு, இதுவும் நல்லதொரு உண்மை. 

ஆகவே, உயர்நீதிமன்ற நிதிபதியின் முடிவு சட்ட விதிகளின்படியும், நியாயப்படியும் தவறே என்பது, இப்போது உங்களுக்கு நன்றாகவே விளங்கி இருக்கும். 

சட்டத்தை ஆராயும் நமக்கு நன்றாக தெரியும், இதெல்லாம் பெ(ரு, று)ம் கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்களுக்கும், நிதிபதிகளுக்கு தெரிவதில்லை. இதனால், பாதிக்கப்படுவது மக்களும், மக்களுக்கான சமூக நீதியும்தான்!

பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

Sunday, June 23, 2019

தன்னிலை விளக்கம் என்றால் என்ன?நம் நீதியைத்தேடி... வாசகரா என்று தெரியவில்லை. ஆனால், நம்முடைய பாணியில் பள்ளி ஒன்றுக்கு சட்டப்பூர்வ தன்னிலை விளக்கம் கோரி இந்திய சாட்சிய சட்ட உறுபு 101 இன்கீழ் அறிவிப்பு ஒன்றை அனுப்பியுள்ளார். இதற்கு அப்பள்ளியின் நிர்வாகி சார்பில் ஒரு பொய்யன் பதில் அனுப்பியுள்ளான்.

அதில், அப்பள்ளி நிர்வாகியின் கையொப்பம் இல்லாததால், அது அப்பொய்யனின் பதிலாக கருதப்படுமே அன்றி, நிர்வாகியின் பதிலாக கருதப்படாது. ஆகையால், இந்திய சாட்சிய சட்டப்படி செல்லாத காகிதமே!

மேலும், இப்பொய்யன் கொடுத்துள்ள அவனது முகவரியே தவறு. அப்படி ஒரு முகவரி இல்லை என்பது இவர்களது தரப்பு குற்றச்சாட்டு.

பொதுவாக கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்கள் கொடுக்கும் அறிவிப்பில் சட்டப்பிரிவுகள் எதுவுமே இருக்காது. ஏனெனில் அறிவிப்பு அனுப்ப அவர்களுக்கென சட்ட விதிகள் இல்லை.

அவர்கள் வாதாடவே சட்டத் தடைகள் இருக்கும்போது அறிவிப்பு அனுப்ப எப்படி சட்டவிதி இருக்கும்? ஆனாலும் கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்கள் காலங் காலமாக அறிவிப்புகளை அனுப்பி பழக்கப்பட்டு விட்டதால், எதைப் பற்றியும் கவலைப்படாமல் அனுப்பவே செய்வார்கள். 

ஆகையால், நீங்கள்தான் எப்படியெல்லாம் சிந்திக்க முடியுமோ அப்படியெல்லாம் சிந்தித்து, செயல்பட வேண்டும். அப்போதுதான் எடுத்த காரியத்தை கச்சிதமாக முடிக்க முடியும். 

ஆனால், வாசகர்களோ  பெரும்பாலும் ஈயடிச்சான் காப்பியடிக்கிறார்களே ஒழிய, சுயமாக சிந்திப்பதில்லை. அப்படி சிந்தித்தால்தான், அறிவு வளரும் என்பது புரியாமல் மூளை தேய்ந்து விடும் என எண்ணுகிறார்கள் போலும்! 

சரி நம்ம விசயத்துக்கு வருவோம். 

நாம் அனுப்பும் அறிவிப்பிலே இதற்கு நேரடியாக நீதான் பதில் தரவேண்டுமே ஒழிய கூலிக்கு மாரடிக்கும் பொய்யனை வைத்து பதில் சொல்ல உரிமை இல்லை என்றும்; அப்படி அனுப்ப உரிமை இருந்தால் சரியான சட்ட விதிகளை குறிப்பிட்டே அனுப்ப வேண்டும்; இல்லையேல் அது சட்டப்படி செல்லாது என்பதால், அதன் கருத்துக்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது என்பதையும் சொல்லி விட வேண்டும்.

இல்லையேல், நம்மைப் போன்ற சட்ட விழிப்பறிவுணர்வு இல்லாத மாக்கள், நம்முடைய அறிவிப்பை பெற்றதும் பொய்யனை நாட, அவனோ அவனது புளுகு வேலைகளை எல்லாம் காட்டி நம் காரியத்தை குழப்பிவிட முயற்சிப்பான்.

இதுபற்றி நம்முடைய ஆசிரியர்  திரு. வாரண்ட் பாலா அவர்கள் நூல்களில் தெளிவுபட எழுதி உள்ளார். இதையெல்லாம் அப்பள்ளிக்கு அறிவிப்பு அனுப்பியவர் படிக்கவில்லை போலுள்ளது. 

ஆமாம், உண்மைக்காக இப்பொய்யன் அனுப்பியுள்ள பதிலில் இந்திய சாட்சிய சட்டப்பிரிவு 101 என்பது, ‘‘ஒருவர் சட்டப்படி நிரூபிக்க வேண்டிய சங்கதி ஆகும். ஆனால் நீங்களோ தன்னிலை விளக்கம் என்று குறிப்பிட்டுள்ளீர்கள்’’ என பதில் சொல்லி உள்ளான்.

உண்மையில், தன்னிலை விளக்கம் என்றால் உன் தரப்பு நியாயத்தை எனக்கு சொல் என்றே பொருள்! 

இப்படி விளக்கப்படுவதன் அடிப்படையில் தான் ஒருவர் தனக்கு நியாயம் இருக்கிறதா என்பதை சீர்தூக்கிப் பார்த்து அதற்கென வழக்குத் தொடுக்க முடியும்.

ஒரு வழக்கில் தன் கட்சியை நிரூபிப்பதற்காக மனுதாரரும் எதிர் மனுதாரர்கள் இதைத்தான் செய்கிறார்கள்.

மொத்தத்தில் யார் எதை சொல்கிறார்களோ அதனை அவர்களே நிரூபிக்க வேண்டும் என்பதே இந்திய சாட்சிய சட்டப்பிரிவு 101 கீழான பொருளாகும்.

ஆனால் கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்களோ நாம் சொல்லும் உண்மையையும் நாம்தான் நிரூபிக்க வேண்டும்; அவன் சொல்லும் பொய்யையும் நாம்தான் நிரூபிக்க வேண்டும் என சொல்வதை நடைமுறையில் பழக்கப்படுத்தி வைத்து இருக்கிறார்கள்.

இதையெல்லாம் தன் வழக்கில் தானே வாதாடுவோரே தவிடு பொடியாக்க வேண்டும். இதற்கு சட்ட விழிப்பறிவுணர்வுடன் கூடிய சமயோசித்த புத்தியும் அவசியம். 

பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

Sunday, May 19, 2019

இயல்பை அறிவோம்! இன்பம் பெறுவோம்!!இயற்கை பெண்ணுக்கு தந்துள்ள இயல்பு, ‘‘அன்பு’’

ஆணுக்கு தந்துள்ள இயல்பு ‘‘அறிவு’’

இவ்விரண்டு இயல்பும் தனித்து இல்லாத அல்லது இடம் மாறி இருக்கும் குடும்பம், ‘‘பாழ்!’’

ஆணுக்கு அறிவில்லை என்றால் கூட, பிரச்சினையில்லை. இன்னும் சொல்லப்போனால், அறிவுள்ளவனால்தான் அனைத்துப் பிரச்சினையும். 

ஆமாம், அறிவில்லை என்பதைத் தவிர, அவனால் வேறு எந்தப் பிரச்சினையும் அவனுக்கும், அடுத்தவனுக்கும் இல்லவே இல்லை. அப்படியானால், அவனால் குடும்பத்தில் என்ன பிரச்சினை இருக்க முடியும்? 

இங்குதான், வான்டேடா வருகிறது பணம். 

பணம் இருக்கும் இடத்தில் அன்புக்கு மாறாக பாழ்படுத்தும் விரோதமே குடிக்கொண்டு இருக்கிறது. இது உயிர் உறவுகளைக் கொலையும் செய்யத் தூண்டுகிறது.

ஆகவே, குடும்பப் பிரச்சினைக்கு பணம் என்பது பற்றாக்குறையாக பத்தில் ஒரு பகுதி வேண்டுமானால் காரணமாக இருக்கலாமே ஒழிய, ஒருபோதும் முழுக் காரணமாக இருக்கவே முடியாது. 

அறிவில்லாத ஆணிடம் நிச்சயம் மாற்றுத் திறனாக அன்பிருக்கும். உண்மையில் இது குடும்பத்தில் குறைந்தது இரட்டிப்பு மகிழ்ச்சிக்கேனும் வித்திட வேண்டும். இப்படி மகிழ்ச்சி கூடுமிடத்தில், மன்னிப்புக்கும் வரலாறு இருக்காது.

ஆகவே, அறிவை வளர்த்து வீண் சண்டையிட்டு பாழாவதை விட, அன்பை வளர்த்து அறவழி காட்டும் நெறியில் பிறவிப் பேற்றைப் பெறுங்கள்.

இந்த இயற்கை மற்றும் எதார்த்த இயல்புகளை மனதில் கொண்டு கணவனிடம் அன்பாக இருங்கள் என்று சொன்னால் கூட, ‘‘அது ஆணாதிக்கம், ஆணாதிக்கத் திமிர், பெண்ணடிமைத்தனம், மனித உரிமை மீறல் மற்றும் குடும்ப வன்முறை என்று சொல்லி விடுவார்கள் போலிருக்கிறது!’’

ஆணுக்கு சொல்லலாம் என்றால், அன்பு அவர்களது இயல்பில்லையே! பின் யாருக்கு என்னத்த எடுத்துச் சொல்லி நம் குடும்பங்களை எப்படி வாழ வைப்பது?! 

இதனை அவரவர்களும் புரிந்துக் கொண்டு, தங்களின் வாழ்க்கையை வாழ்ந்து வளமாக்கிக் கொண்டு வாரிசுகளுக்கு வழிகாட்டினால்தான் உண்டு!!

இல்லையேல், இப்போதுள்ள சமுதாயம் கூட, எதிர்க் காலத்தில் இல்லை என்ற நிலைக்கு நம்மிடம் பழகி, பழக்கி, பாழாக்கி விடும். எச்சரிக்கை!


பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

Friday, May 17, 2019

மனுவில் தொடர்பு எண்ணை குறிப்பிடவே கூடாது!ஒழுக்கமும், நாணயமும் உள்ளவர்கள் வக்கீல் தொழிலுக்கும், அரசு ஊழியத்துக்கும் அருகதையற்றவர்களாகி விட்டனர் என்று பகுத்தறிவுப் பெரியர் 1931 ஆம் ஆண்டிலேயே சொன்னபடி...
அரசூழியர்கள் என்கிற அய்யோக்கியர்கள் யாரிடம் இலஞ்சமாகப் பெரும் பணத்தைப் பறிக்கலாம் என்ற எண்ணத்தில் வேலையை தாமதப்படுத்தி பணம் பறிப்பார்கள் அல்லவா?
இவைகளை சட்டப்படி முறியடித்து, இலஞ்சம் கொடுக்காமல் காரியங்களை சாதிப்பது எப்படி என்பதோடு, அப்படிப்பட்ட அய்யோக்கிய அரசூழியர்களை சட்டப்படி கதறவிடுவது எப்படி என்ற யுக்திகள் பலவற்றை, தனக்கே உ(ய)ரிய பாணியில் சட்ட ஆராய்ச்சியாளர் திரு. வாரண்ட் பாலா அவர்கள் நீதியைத்தேடி... சட்ட அறிவுக்களஞ்சியம் நூலில் எழுதி உள்ளார்.
இதனைப் படித்த வாசகர்கள் பலரும், அவர் சொல்லி உள்ளதை அப்படியே பின்பற்றி பல அய்யோக்கிய அரசூழியர்களை கதறவிட்டு உள்ளனர்.
அதுமட்டுமல்லாமல், இதனைப் படித்த அய்யோக்கிய அரசூழியர்களே, ‘‘என்னங்க இப்படி எல்லாம் யோசனை சொல்லித்தர்றீங்க’’ என்று அவரிடமே கதறி இருக்கிறார்கள் என்றால், அந்த யுக்திகளை நாம் அனைவரும் பயன்படுத்தினால் எப்படி கதறுவார்கள்? என்று எண்ணுகிறீர்களா... சந்தேகமே வேண்டாம்.
அந்த அய்யோக்கிய அரசூழியர்கள் தங்களின் குடும்பம் குட்டியோடு உங்களின் வீட்டிற்கே வந்து காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு விடுவார்கள்.
ஆமாம், இப்படி காவலூழிய கேவலர்களே நம் ஆசிரியர் அல்ல அல்ல பேராசிரியர் திரு. வாரண்ட் பாலாவின் காலில் விழுந்துள்ளனர் என்றால் யோசித்துக் கொள்ளுங்கள். இந்த அசிங்கங்களை எல்லாம் எழுதக்கூடாது என்று பெருந்தன்மையால் நூலில் எழுதவில்லை என தெரிகிறது.
ஆனால், அரசுப் பொய்யர்களும், நிதிபதிகளும் அவருக்குப் பயந்து, அவரது வழக்கு விசாரணைக்கு வருகின்ற நாளன்று விடுப்பு எடுத்து விடுவார்கள் என்பதை, அவரே நூல்களில் எழுதி உள்ளாரே!
அந்த அளவிற்கு அய்யோக்கிய அரசூழியர்களிடம் கொடுக்கும் சாதாரண மனுக்கள் முதல், ஒரு நிதிபதி வழங்கிய தீர்ப்பு தவறு என எப்படி மேல்முறையீடு மனுவை எழுதுவது என்பது வரை ஒரு மனுவை எப்படி மிகவும் நேர்த்திய தயார் செய்ய வேண்டும் என்பதை ‘‘மநு வரையுங்கலை!’’ நூலில் தெளிவாக எழுதி உள்ளார்.
இந்த நூல் எந்தளவிற்கு மகத்தான சாதனைகளை செய்ய உதவும் என்பதற்கு இந்த இரண்டு உண்மைகளே போதும்.
ஆமாம், இந்த நூலை கடலூர் மத்திய சிறையில் விசாரணை கைதியாக இருந்த சங்கர் லால் என்ற இளைஞர் இப்படியும் ஒரு நூலை எழுத முடியுமா என வியந்து ஒரு வாரம் தூங்காமல் திரும்பத்திரும்ப பலமுறைப் படித்து, தானே வாதாடி ஒரு வழக்கில் விடுதலையானதோடு, தன்னோடு சக கைதிகளாக இருந்த நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு பிணை மனுவை எழுதிக் கொடுத்து பிணை கிடைக்கவும், விடுதலையாகவும் உதவி உள்ளார் என்பதை ‘‘மகத்தான சாதனைகளுக்கு வழிகாட்டும் மநு வரையுங்கலை!’’ என்ற கட்டுரையில் படிக்கலாம்.
மக்களிடம் அரசூழியர்கள் தங்களின் அய்யோக்கியத் தனங்களை காட்டாமல் இருக்கவும், மக்கள் எளிதில் பயனடையவும் பல்வேறு யுத்திகளை அரசு கையாண்டு வருகிறது. இதில் ஒன்று, இணைய வழியில், எதற்கும் விண்ணப்பித்தல் ஆகும்.
இது மக்களுக்கு எளிதாக இருக்கிறது; நம்மிடம் வந்து நாட் கணக்கில் கெஞ்சி தொங்க வேண்டிய அவசியம் இல்லாமல் போய்விட்டது. ஆகையால், நம்முடைய அய்யோக்கியத்தனங்களை அரங்கேற்றி இலஞ்சப் பணம் பறிக்க முடியவில்லையே என்றும், இதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்து, அரசூழிய அய்யோக்கியர்கள் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.
அதாவது இணையவழியில் விண்ணப்பிக்கும்போது தொடர்பு உலாப்பேசி எண்ணை கேட்கிறார்கள். நாமும் கொடுக்கிறோம். ஆனால், அதையே ஒரு காரணமாக வைத்து ‘‘நாங்கள் அழைத்தபோது, உங்களது உலாப்பேசி எண் அனைத்து வைக்கப்பட்டு இருந்தது’’ என்ற சட்டத்துக்கு விரோதமான காரணத்தை பதிவு செய்துவிட்டு, நம் கோரிக்கையை தள்ளுபடி செய்கிறார்கள்.
மனு எழுதும் பலரும் தற்போது தங்களது முகவரியில், தொடர்பு உலாப்பேசி எண்ணை சட்டப்படி குறிப்பிட வேண்டியதில்லை என்றாலுங்கூட ஏனோ குறிப்பிடுகிறார்கள். புதிதான இப்பழக்கம் தவறு என்பதோடு, நமக்கு பல வகையில் பிரச்சினைகளை உருவாக்கும் என்பதற்கு மேற்கண்ட படச்சான்றே நன்சான்று.
அரசாங்க காரியம் எதுவுமே எழுது்து மூலமாக இருக்க வேண்டும் என்பதன் அடிப்படையில், உலாப்பேசி அணைத்து வைக்கப்பட்டிருந்தால் நிராகரிக்கப்பட்டதாக சொல்ல முடியாது என்பது உட்பட பல்வேறு சட்டக் கேள்விகளுக்கு அரசூழிய அய்யோக்கியர்கள் பதில் சொல்லத்தான் வேண்டும் என்றாலும் கூட, நாம் தொடர்பு எண்ணை குறிப்பிட்டதால், நமக்கு தேடி வந்த பின் விளைவிது.
ஆமாம், குற்றம் நடைபெறாமல் தடுப்பதுதான் நம் கடமையே தவிர, குற்றம் நடந்தப்பின் அதற்கு நிவாரணம் தேடிப் போராடுவது மடத்தனம் அல்லவா?
ஆகையால், இதற்காக மேலும் பல மனுக்களை எழுதும்படி ஆகியது, குறிப்பிட்ட காளத்திற்குள் நமக்கு நடக்க வேண்டிய காரியம் ஆகவில்லை என்பதெல்லாம் நமக்கு பல்வேறு வழி வகைகளில் இழப்புதானே?!
நாம் கொடுக்கும் மனுக்களின் மீது, அடுத்தடுத்த சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு கோப்புகளை தயார் செய்ய அரசூழிய அய்யோக்கியர்களை சட்டப்படி வேலை வாங்க வேண்டுமே ஒழிய, அவர்கள் மேலும் சொகுசான சோம்பேறிகளாக இருந்து, சட்ட விரோத காரியங்களை தொடர்ந்திட தொடர்பு எண்ணை கொடுத்து வழிவகை செய்யவே கூடாது.
அப்படி கட்டாயம் குறிப்பிட வேண்டிய அவசியம் இருந்தால் தொடர்பு எண்ணை தவிர்த்து, மின்னஞ்சல் முகவரியை தரவும். இதற்கு வசதி இல்லாதபோது, இணைய வழி விண்ணப்பத்தை தவிர்த்து, அஞ்சல் வழியில் செய்வதே நல்லது.
மற்றுமொரு சிறந்த வழியாக, மின்னஞ்சல் முகவரியைப் பெற்று, அதற்கு அனுப்பி வைப்பதும் மிகச் சிறந்தது.

பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

அறவழி நோட்டா

அறவழி நோட்டா
மகாத்மா போதித்த வாக்குரிமை!

நோட்டா: NOTA

நோட்டா: NOTA
விளக்கம்: EXPLANATION

நியாயந்தான் சட்டம்!

நியாயந்தான் சட்டம்!
வக்கற்றவர்களின் கீழான பட்டம்!

நூல்களின் முகப்பு

Follow by Email

Followers

முக்கியப் பக்கங்கள்

அடிப்படை சட்டங்கள்

  • 1. இந்திய சாசனம் 1950
  • 2. நீதிமன்ற சாசனம் 1872
  • 3. இந்திய தண்டனை சட்டம் 1860
  • 4. குற்ற விசாரணை முறை விதிகள் 1973
  • 5. உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908

நம் நூல்களைப் பற்றி

நீதியைத்தேடி.... நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் வரிசையில்...
1 குற்ற விசாரணைகள்
2 பிணை (ஜாமீன்) எடுப்பது
எப்படி?
3 சட்ட அறிவுக்களஞ்சியம்
4 சட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்
5 சாட்சியங்களைச் சேகரிப்பது
எப்படி?
6 கடமையைச் செய்!
பலன் கிடைக்கும்
7 மநு வரையுங்கலை!Recent Posts Widget

இந்நூல்கள் அனைத்தும் உங்களின் சட்ட விழிப்பறிவுணர்வுக்காக
மத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவியோடு
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பொது நூலகங்கள், மத்திய சிறைச்சாலைகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

சொந்தமாக தேவைப்படுவோர், உ(ய)ரிய நன்கொடையைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு வாட்ஸ்அப் எண் 09842909190 ஆகும்.

எல்லாப் பதிவுகளும்!

நம் தள வகைகள்

பயின்றோர் (20-08-16)