வாசகர்களின் கவனத்திற்கு...
இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.
இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.
சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.
நீ வாழ... நீயே வாதாடு... வரவேற்பு வாழ்த்து!
Monday, January 6, 2020
ஆசிரம (அ, வ)க்கிரமங்கள்!
Wednesday, January 1, 2020
குறுக்கு வழியில் செய்யப்பட்ட பட்டா பெயர் மாற்றத்தை சட்டப்படி இரத்து செய்து சாதனை!
இந்தப் பிரச்சினை குறித்து 17-08-2019 அன்று முதலில் கட்டுரை எழுதப்பட்டு, 30-12-2019 ்அன்று, சுமார் நான்கரை மாதங்களில் முடிவுக்கு கொண்டு வந்து சாதித்து விட்டாள், இவ்வாசகி!
அடிப்படை சட்ட அறிவு இல்லாத மக்கள், பொய்யர்களைப் போன்ற மாக்களிடம் சென்று, குறுக்கு வழியில் காரியம் சாதிக்க முற்பட்டு, வீணாக காலத்தை கடத்திக் கொண்டு இருக்கிறார்கள் என்றும், சட்ட வழியில் சென்றால் எளிதாக முடித்து விட முடியும் என்பதற்கு, நல்லதொரு உண்மையாய் சாதித்து காட்டி இருக்கிறாள்.
இக்கிராமத்து வாசகியின் (சுமார் அரை ஏக்கர் சந்தை மதிப்பு சுமார் ஐந்து இலட்சம்) நிலத்துப் பட்டாவை, சித்தப்பா மகன் அரசியல் செல்வாக்காலும், சட்டப்படி செல்லாத பத்திரத்தின் மூலமாகவும், அவனது குடும்ப உறுப்பினர்களின் பெயருக்கு பட்டா பெயர் மாற்றத்தை செய்து விட்டான்.
இவ்வளவு குறுகிய காலத்தில், (அதாவது விநாயகர் சதுர்த்தி, உள்ளாட்சி தேர்தல் என பல்வேறு நாட்களில் அரசூழியர்களின் பணிகள் முடங்கிய நிலையிலும், இரண்டு மாதங்களாக கடலூர் கோட்டாச்சியரின் ஊழியம் காலியாக இருந்த நிலையிலும், முறைகேடாக பட்டா வழங்கிய தாசில்தார் கீதா, பயந்து கழிந்து பணிஇட மாறுதல் பெற்று, குறிஞ்சிப்பாடிக்கு சென்று விட்ட நிலையிலும்) சுமார் இரண்டு மாத கால அளவில், பட்டாவை இரத்து செய்த சாதனையை வேறு யாரும் நிகழ்த்தி இருக்க வாய்ப்பில்லை.
இவ்வாசகியின் பட்டா இரத்து விவகாரத்தில், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதியின் அரசியல் செல்வாக்கால், விசாரணையில் கலந்து கொள்ள நான்கு முறை வாய்ப்பு அளிக்கப்பட்டும், அவனால் சரியாக கலந்துக் கொள்ள முடியவில்லை என்பதும், அரசியல் செல்வாக்கு உள்ளவர்களே அடங்கிப் போய் விட்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஒரு மாதத்திற்குள் முடிந்திருக்க வேண்டிய இந்த பட்டா இரத்தை, இவளுக்கே தெரியாமல் இவளது அக்கா உள்ளே புகுந்து கெடுத்து விட்டாள். இப்பிரச்சினையை பொய்யர்களிடம் போகலாம் என்றாள். அப்படி போயிருந்தால், பத்து வருடத்துக்கு வழக்கை நடத்தி, அந்த நிலைத்தையே விற்று கூலியாக கொடுத்து விட்டு, நிச்சயம் வெறுங்கையோடு நின்றிருப்பாள்.
பொதுவாக கூலிக்கு மாரடிக்கும் அரசூழியர்கள், மக்களின் பிரச்சினைகளை உள்வாங்கிப் படிக்க மாட்டார்கள். படித்தால், உண்மை என்ன என்பது எளிதில் விளங்கி விடும். ஆனால், இவளது பிரச்சினையில், இவளுக்கு எந்த அளவிற்கு விவரம் தெரியுமோ அந்த அளவிற்கு அவர்களும் அத்துபடியாக தெரிந்து வைத்து இருக்கிறார்களாம்.
இந்தப் பட்டா அனுபவத்தை வைத்து, மக்கள் தங்களுடைய பட்டா சொத்துப் பிரச்சினைகளை எளிதில் தீர்த்துக் கொள்ள உதவும் நூலொண்றை எழுத வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறாள். இந்த அனுபவ நூல் வெளிவர நம்முடைய நல்வாழ்த்துக்களோடு, இயன்ற உதவியை வழங்கிட உள்ளோம். நூலாக வெளிவர உங்களின் உதவியும் தேவைப்படலாம்!
பிற்சேர்க்கை நாள் 06-01-2020
அரசு ஊழியர்கள் 24 மணி நேரமும் ஊழியத்தில் உள்ளவர்கள் என்பதற்கு, (விடுமுறை நாளான 05-01-2020) இந்த கடிதமே சான்றாக இருக்கிறது.
ஆணுக்கு பெண் சமம் என்பது குற்றங்களை புரிவதில் மட்டும்தான் இருக்கும் போலிருக்கிறது.
பட்டா பெயர் மாற்றம் செய்வதற்கு துணை வட்டாட்சியர் ஒருத்தி ஒன்பது ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய போது லஞ்ச ஒழிப்புத் துறையால் கையும் களவுமாக பிடிபட்டுள்ளாள். ஆனால், இதையே சரியான சட்ட விழிப்பறிவணர்வோடு நம் வாசகி மிகமிக எளிதாக செய்து முடித்துள்ளாள்.
வாசகர்களின் கவனத்திற்கு...
இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.
இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.
சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.
Tuesday, December 31, 2019
பொய்யாக குற்றம் சாற்றப்பட்டவர்கள், தற்காப்பு சாட்சியத்தை பயன்படுத்தி ஜெயிக்கனும்!
போக்குவரத்து கலக ஓட்டுனரான இவர் மீது, பேருந்தால் மோதி விபத்தை ஏற்படுத்தி எழுவது வயது மதிக்கத்தக்க ஒருவரின் இறப்புக்கு காரணமாக இருந்தார் என்பது வழக்கு. பத்து நாள் சிகிச்சைக்கு பிறகு இறந்திருக்கிறார்.
தன் மீதான வழக்கை நன்றாகவே நடத்தி இருக்கிறார். தற்காப்பு சாட்சியத்தை சரியாக பயன்படுத்தி இருக்கிறார். இதனை வக்கீழ் பொய்யர்கள், தங்களின் பிழைப்புக்காக ஒருபோதும் பயன்படுத்துவது இல்லை.
குற்றத் தரப்பு சாட்சிகளை நன்றாக குறுக்கு விசாரணை செய்து அவர்கள் பொய் சாட்சிகள் என்பதை வெளிக்கொண்டு வந்திருக்கிறார். அவர்கள் பொய் சாட்சிகள் என்பதற்கு வலுவான அடிப்படையை அமைத்து கொடுத்ததே, குற்ற விசாரணை முறை விதி 315 இன் படியான, இவரது தற்காப்பு சாட்சியம்தான் என்பது மிகமிக முக்கியம். இல்லையென்றால், முன்பே சொன்னபடி, இவரை சூழ்நிலை குற்றவாளி ஆக்கி இருக்க முடியும்.
இதையெல்லாம் விட மேலாக, ‘‘குடி போதையில் தானே கீழே விழுந்து அடிபட்டவரை மிகுந்த கருணையோடு ஆம்புலன்ஸை வரவைத்து ஏற்றி அனுப்பி இருக்கிறார். இது போன்ற கருணை கடமைகளை தொடர வாழ்த்துக்கள்’’.
இது தொடர்பாக கேவலர்களுக்கும் தகவல் சொல்ல, அதனை ஏற்காமல், ‘‘நீதான் இடித்தாய் என பொய் சாட்சிகளை கொண்டு வழக்கு போட்டு, இப்போது தோற்று கேவலப்பட்டு இருக்கிறார்கள்’’. கேவலர்களின் மிரட்டலை எல்லாம் ஆடியோவாக பதிவு செய்து வழக்கில் தாக்கல் செய்துள்ளார். இவர்களை கேவலர்கள் என்று சொல்லாமல் காவலர்கள் என்று எப்படி சொல்ல முடியும்?
இனி இதனை எதிர்த்து, கேவலர்கள் மேல்முறையீடு செய்தாலும் ஜெயிக்க முடியாது. இனி இவர் சீராய்வு மனுவை தாக்கல் செய்து, பிழைகளை திருத்திக் கொள்ளனும். தீர்ப்பில் விடுபட்ட முக்கிய தகவலையும் சேர்த்துக் கொள்ளனும்.
தன் வழக்கில் தானே வாதாடி தன் தரப்பு நியாயத்தை தக்க வைத்துக் கொண்ட இவ்வாசகருக்கு நமது நல்வாழ்த்துக்கள்!
வாசகர்களின் கவனத்திற்கு...
இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.
இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.
சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.
Friday, November 1, 2019
எச்சட்ட விரோத செயல்களையும், சட்டப்படியே முறியடிக்கும் சக்தி நமக்கே உண்டு!
ஒவ்வொருவரும் தனித்தனியாக எழுதி நேரத்தையும், பணத்தையும் வீண் விரயம் செய்ய வேண்டாம் என்ற நந்நோக்கில் எழுதப்பட்டு உள்ளது. இதில், தேவைக்கு ஏற்ப சேர்த்தல், குறைத்தல் உள்ளிட்ட திருத்தங்களை செய்துக் கொள்ளவும்.
இதனை அப்படியே வேர்டு கோப்பிற்கு மாற்றி தேவைக்கு ஏற்ப வடிவமைத்துக் கொள்ள முடியும். இதன் எழுத்துரு மாறா வடிவமும் வசதிக்காக தரப்பட்டு உள்ளது.
அனுப்புதல்
பெயர் மற்றும் இதர கடமையாளர்கள்
பார்வை:
1. இதன் பின் இணைப்பாக உள்ள திருப்பூர் மாவட்ட நிதிபதி அல்லி உள்ளிட்ட மூன்று நீதித்துறை ஊழியர்களுக்கு, இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 220 இன்படி தண்டனை விதிக்க வேண்டுமென கோரி, 30-10-2019 அன்று காலை மின்னஞ்சல் மூலமாக இந்திய உச்சநீதி மன்றத்துக்கு அனுப்பிய முதல் தகவல் அறிக்கை.
2. இதற்கு பழி வாங்கும் நடவடிக்கையாக, எங்களின் மீது திருப்பூர் மாவட்ட நிதிபதி அல்லியால் கொடுக்கப்பட்டுள்ள புகார்.
3. இப்பழி வாங்கும் பொய்ப்புகாரை தொடர்ந்து 01-11-2019 அன்று, இந்திய உச்சநீதிமன்றத்துக்கு எங்களால் அனுப்பப்பட்டுள்ள மறு புகார்.
4. இப்பழி வாங்கும் பொய்ப்புகாரின் பேரில், தங்களால் எனக்கு அனுப்பப்பட்டுள்ள அழைப்பாணை
அய்யா
பின்வரும் ஆவணங்கள் நீதிமன்ற சாசனமாம், இந்திய சாட்சிய சட்டம் 1872 இன் உறுபு 74 இன்கீழ், பொது ஆவணமாகும். இதனை சான்று நகலாகப் பெறுவதற்கு, அச்சட்டத்தின் உறுபு 76 இன்படி, எனக்கு உரிமையுண்டு.
இதன்படி எனக்கு வேண்டிய சான்று ஆவணங்கள் ஆவன...
1. பார்வை 1 இல் கண்டுள்ள எங்களின் மின்னஞ்சல், பார்வை 2 இல் உள்ள பொய்ப்புகார்தாரரால் எந்த வகையிலேனும் சொல்லப்பட்டதா?
2. சொல்லப்பட்டது என்றால், எந்த வகையில், என்ன சொல்லப்பட்டது?
3. அப்படி சொல்லப்படவில்லை என்றால், எங்களால் சொல்லப்பட்டு உள்ள நிலையில், இந்திய சாட்சிய சட்டப்படி ஒன்றுக்கு ஒன்று தொடர்புள்ள இச்சங்கதிகள் தொடர்பாக, பழிவாங்கும் எண்ணத்துடன் உங்களிடம் கொடுக்கப்பட்ட புகாரை மட்டும் விசாரணை செய்ய உங்களுக்கு உள்ள சட்ட உரிமை என்ன?
4. அப்படி சட்ட உரிமையை சொல்ல முடியாதபோது, எதன் அடிப்படையில் பார்வை 4 இல் கண்ட அழைப்பாணையை அனுப்பினீர்கள்?
5. ஒன்றுக்கொன்று தொடர்புள்ள சங்கதிகளில் உண்மை சங்கதி உச்சநீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையிலும்,
பழி வாங்கும் நோக்கத்துடன் வழக்கம் போலவே சட்ட அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி பொய்ப்புகார் உங்களிடம் தரப்பட்டுள்ள நிலையிலும்,
இதனை விசாரிக்கும் அளவிற்கு, இந்திய உச்சநீதி மன்றத்தின் அதிகாரத்தை விட உங்களின் விசாரணை உரிமை பெரிதா? பெரிது என்றால், எந்த சட்ட விதிப்படி?
6. பார்வை 2 இல் கண்டுள்ள பழிவாங்கும் பொய்ப் புகாரை கொடுத்தது யார்?
7. அதனை பெற்று முதல் தகவல் அறிக்கையாக பதிவு செய்தது யார்?
8. இந்தப் புகாரை விசாரணை செய்யச் சொல்லி, உங்களை நியமித்தது யார்? இதற்கு எழுத்துப் பூர்வமாக எதுவும் தரப்பட்டு உள்ளதா?
9. பார்வை 2 இல் கண்டுள்ள பழிவாங்கும் பொய்ப் புகார் தொடர்பாக முன்னுக்குப் பின் முரணான செய்திகள் தமிழ் மற்றும் ஆங்கில தினசரி நாளிதழ்களில் ஓரிரு நாட்கள் வெளி வந்துள்ளதாக தெரிகிறது.
10. இப்படி முன்னுக்குப் பின் முரணாக பத்திரிகைகளுக்கு செய்தியை கொடுத்தது யார்?
அ) பழிவாங்கும் பொய்ப்புகாரை கொடுத்தவர்களா?
ஆ) இதனை முதல் தகவல் அறிக்கையாக பதிவு செய்தவரா?
இ) உங்களை விசாரணை செய்யச் சொன்னவரா?
ஈ) விசாரணை செய்ய அழைப்பாணை அனுப்பிய நீங்களா?
உ) சட்ட விதிப்படி அழைப்பாணை அனுப்பிதான் விசாரணை செய்ய வேண்டும் என்கிற போல, சிலரை தொலைபேசியில் தொடர்புக் கொண்டு, விசாரணைக்கு அழைத்தது ஏன்?
ஊ) மத்திய அரசின் சார்பாக குடியரசுத் தலைவர் கையொப்பமிட்டு அமல்படுத்திய சட்டத்தை அவரே மீற உரிமையில்லை என்கிற போது, மீறுவதற்கான உரிமையை உங்களுக்கு வழங்கியது யார்?
11. எங்களின் மீதான பழிவாங்கும் பொய்ப்புகார் ஒரு முறைதான் தரப்பட்டதா? இல்லை வழக்கம் போல, நிதிபதி தனது சட்ட அதிகாரத்தை தவறாகப் பயன் படுத்தி வசதிக்கு தக்கவாறு மாற்றி மாற்றி தரப்பட்டதா?
12. ஒருவர் மீது சொல்லப்பட்ட குற்றம், நீதிமன்ற விசாரணையில் நிரூபிக்கப்படும் வரை, ‘‘அவர் குற்றம் சாற்றப்பட்டவரே அன்றி குற்றவாளி அல்ல’’ என்று, இந்திய சாசனம் உள்ளிட்ட அடிப்படை சட்ட விதிகளில் சொல்லப்பட்டுள்ள நிலையில்,
புகார் வந்தாலே அதனை முதல் தகவல் அறிக்கையாக பதிவு செய்த உடனே, புகாருக்கு உள்ளானவர்களைப் பற்றி செய்தி ஊடகங்களுக்கு செய்தியை தருவதற்கு உங்களுக்கு எந்த சட்ட விதி உரிமையை வழங்கி உள்ளது?
13. உண்மையில் எங்களை பழிவாங்கும் எண்ணத்துடன் கொடுக்கப்பட்ட பொய்ப்புகார் ஒரு முறைதான் செய்தி ஊடகங்களுக்கு தரப்பட்டது என்றால், இப்புகார் பற்றிய செய்திகள் தினசரி நாளிதழ்களில் மாறிமாறி வர காரணம் என்ன?
14. பழிவாங்கும் எண்ணத்துடன் கொடுக்கப்பட்ட பொய்ப் புகாரையே முதல் தகவல் அறிக்கையாக பதிவு செய்திருந்து, இதையே நாளிதழ்களுக்கு செய்தியாக தந்திருந்து, நாளிதழ்கள் மாறி மாறி எழுதி இருந்தால், அதுகுறித்து விளக்கம் கேட்கப்பட்டதா?
அ) வேறு சட்டப்பூர்வ நடவடிக்கை எதுவும் எடுக்கப் பட்டதா? எடுக்கப்பட்டது என்றால், என்னென்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?
ஆ) சட்ட நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை என்றால், அப்படி எடுக்க கூடாது என்று எந்த சட்டம் தடை விதித்தது?
என்பன போன்றவற்றின் சான்று நகல்கள் இரண்டை, உங்களது விசாரணைக்கு உடனே ஒத்துழைக்க ஏதுவாக நகலர்கள் விதிகள் 1971 இன்படி, மிகவும் அவசரமாக வழங்கிட கோருகிறோம்.
இதற்காக கட்டணம் எதையும் செலுத்த வேண்டி இருந்து, அதுபற்றி உரிய முறையில் தெரிவித்தால், செலுத்திட தயாராய் இருக்கிறோம்.
இதுதவிர கூடுதலாக உங்களுக்கு தெரியாத ஒரு உண்மையை சொல்ல விரும்புகிறோம்.
15. பொதுவாக நிதிபதிகளை கெட்ட உள் நோக்கத்தோடு விமர்சனம் செய்தால், நீதிமன்ற அவமதிப்புச் சட்டத்தின் கீழான, நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை நேரடியாக நீதிமன்றத்தில் தான் எடுப்பார்கள் என்பதும், அப்படி செய்யாமல் தங்களை நாடியது ஏன் என்றும் தெரியுமா?
16. ஆமாம், எங்களின் மீது, சென்னை உயர்நீதி மன்றத்தில் இப்போது உங்களிடம் கொடுத்துள்ளதைப் போன்றே பழிவாங்கும் எண்ணத்துடன், தன் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி, ‘‘நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை மேற்கொண்டும், அது சட்டப்படி எடுபடவில்லை’’ என்பதால்,
தற்போதும், வழக்கம் போலவே தன்னுடைய சட்ட அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி உங்களை மிக எளிதில் சட்ட விரோதமாக செயல்பட வைத்து விடலாம் என்பதை, ஏற்கெனவே பெற்றுள்ள அனுபவத்தின் அடிப்படையில், நாங்கள் கணித்த ஒரே காரணத்தினால்தான்,
இதுகுறித்து பார்வை 1 மற்றும் 3 இல் கண்டுள்ளபடி, இந்திய உச்சநீதிமன்றத்துக்கு முதல் தகவல் அறிக்கையையும், மறு புகாரையும் அனுப்பி உள்ளோம்.
எனவே, இந்திய சாசன கோட்பாடு 51அ(ஒ) இன்படி, எல்லா துறைகளுக்கும் மேலாக உள்ள நீதித்துறையை மேம்படுத்தும் எங்களின் கடமை முயற்சியில் இணைவதே உங்களின் / காவல்துறையினரின் கடமையாக இருக்கும் என்று நம்புகிறோம்.
நிதிபதிக்கான விளக்க குறிப்பு: நம் தேசத்தந்தை மகாத்மா காந்தியவர்கள், (தன்னு, நம்மு)டைய இந்தியா எப்படி இருக்க வேண்டுமென நினைத்து, 1909 ஆம் ஆண்டில் எழுதியதுதான், இந்தியத் தன்னாட்சி என்கிற முதல் நூல். இது ஒரு தத்துவ நூலாகும்.
இதன் 11-வது கட்டுரையில், ‘‘வக்கீழ் தொழிலைப் பற்றிய எல்லா உண்மைகளையும் சொல்லி விட்டு, இது எல்லாம் வக்கீழ் வழி வந்த நிதிபதிகளுக்கும் பொருந்தும்’’ என்று எழுதி உள்ளார்.
மேலும், ‘‘நம் அறியாமையாளும், எதையும் நம்பும் தன்மையாளும் முன்பின் தெரியாத ஒருவர் பணத்தை வாங்கிக் கொண்டு நமக்கு நீதியை வழங்குகிறார்’’ என்று நாம் எண்ணுகிறோம் என்று எழுதி இருப்பதன் மூலம், நீதிபதிகளை நிதிபதிகள் என்றே காந்தியும் மறைபொருளாக குறிப்பிட்டு உள்ளார்.
இப்படி நீதிபதி மாயுரம் வேதநாயகம் பிள்ளை, பகுத்தறிவுப் பெரியார், கவிமணி என பலரும் பல விதமாக விவரித்து சொல்லி உள்ளனர்.
மேலும், இந்திய தண்டனைச் சட்டம் 1860 இன் பிரிவு 19 இன்படி, ஒவ்வொரு வழக்கிலும் தெளிவானதொரு தீர்ப்பை உரைப்பவரே நீதிபதியாவார். அப்படி இல்லாதவர்கள், சட்டத்தின் மறைபொருளாக நிதிபதிகளே என்ற அர்த்தத்தில், நிதிபதி என எழுதி உள்ளோமே தவிர, அவதூறு செய்வதற்காக அல்ல.
குறிப்பு: இது சமூக நலனுக்கானது என்பதால், முடிந்தால் அக்கம் பக்கத்தில் உள்ள மக்களின் ஆதரவு கையொப்பத்தை பெற்றுக் கொள்ளலாம்.
வாசகர்களின் கவனத்திற்கு...
இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.
இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.
சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.
Tuesday, October 29, 2019
வாகன ஓட்டிகளான வாசகர்களின் சாதனை அனுபவங்கள் - 3
(நம் விளக்க குறிப்பு: இது மிகவும் தவறான புரிதல். உண்மையில், நாம் விரும்பினாலும் கேவலர்களிடம் அபராதத்தை சட்ட விதிகள் இல்லை. அப்படி செலுத்துவது கேவலர்களின் சட்ட விரோத செயலுக்கு துணை நிற்பதாகும்)
(நம் விளக்க குறிப்பு: உண்மையில் மோட்டார் வாகனச் சட்டப் பிரிவு 129 ஆனது, இருசக்கர வாகன ஓட்டிகள் தலைகவசம் அணிய வேண்டும். பின்னால் அமர்ந்து செல்பவரும் அணிய வேண்டும் என்பதே தவிர, அபராதத்தை செலுத்துவது பற்றியது அன்று)
நான் கேட்டு பார்த்து கொடுக்கவில்லை என்றதும் சரி நாம் நீதியைத்தேடி... நூல்களைப் படித்து உள்ளோம் ஆனால் நீதிமன்ற அனுபவம் இன்னும் பெறவில்லை என்று வண்டியை விட்டுவிட்டு சென்று விட்டேன்.
(நம் விளக்க குறிப்பு: நீதிமன்ற ஊழியர்கள், நீதிமன்ற மா-மாக்கள். ஆகையால், நேராக உள்ளே சென்று நிதிபதியிடமே பேசிவிட வேண்டும்)
அங்கிருந்தவர்களுக்கு சட்டங்கள் எதுவும் தெரிய வில்லை. சரி, என்று நான் நீதிமன்ற நடுவர் வரும் வரை காத்திருந்தேன் அவர் சில வழக்குகளை விசாரித்து விட்டு உள்ளே விசாரணைகள் எதுவும் நடைபெறாமல் நடுவர் இருக்கும் பொழுது நான் யாரிடமும் கேட்காமல் உள்ளே சென்றேன்.
அதே நேரத்தில், அங்கு நடந்ததை பார்த்து விட்ட நடுவர் என்ன என்று கேட்டார். அவர்களே, மனு கொடுக்க வந்துள்ளதை சொன்னார்கள்.
((நம் விளக்க குறிப்பு: இப்படித்தான் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி சட்ட அறிவை வளர்த்துக் கொள்ள முயலனும். சரியா!
ஆமாம், திடீர்னு ஒருத்தன் கோர்ட்டுக்குள் புகுந்து, அவிங்களுக்கு தெரியாத சட்ட விதிகளை எல்லாம் பேசினால், பீதியாகி பேதியாகாம என்ன செய்யும்?!)
(நம் விளக்க குறிப்பு: காப்பீடு என்பது நம் விருப்பமாக இருக்க வேண்டுமா... கூடாதா என ஆராய வேண்டும்)
(இது நமக்காக நாம் வாதாடும்போது அல்ல. நமக்கு இந்திய சாசன கோட்பாடு 19(1)(அ) இன் கீழான பேச்சுரிமையே!
கு.வி.மு.வி 2(17) என்பது, பிறருக்காக வாதாடும் வக்கீழ் பொய்யர்களுக்கு உரியது. ஆனால், இதன்படிதான் வக்காலத்து தாக்கல் செய்கிறோம் என்பது வக்கீழ் பொய்யர்களுக்கே தெரியாது. இதனை நிதிபதிகள் ஏற்றுக் கொண்டால்தான், வாதாட முடியும். ஆகையால், நம்மைப்போல, நினைத்தபடி எல்லாம் வாதாடி விட முடியாது. அடக்கித்தான் வாசிக்க வேண்டும்.
படிப்பறிவு இல்லாத அல்லது இயலாமை காரணமாக நம் குடும்பத்தினருக்கு அல்லது மிகமிக நெருங்கிய நண்பருக்காக வாதாட வேண்டிய கட்டாய சூழ்நிலை வந்தால், 2(17) நாமும் பயன்படுத்திக் கொள்ளலாம்).
(நம் விளக்க குறிப்பு: இந்த வாசகர் நம்மிடம் சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்பு நூல்களை வாங்கி இருப்பார் போலிருக்கு. தினசரி தொடர்பில் உள்ளவர்களே தடுமாறி விடும் நிலையில், தைரியமாக செயல்பட்டதைப் பற்றி மின்னஞ்சலில் அனுப்பியதை கட்டுரையாக பதிவு செய்கிறோம்.
இவரைப் போன்ற வாசகர்கள் சிலர் தங்களை, ‘‘தன் வழக்கில் தானே வாதாடுபவர்கள், சுய வழக்காளிகள், சுய வழக்காளி வழக்கறிஞர்கள்’’ என்றெல்லாம் சொல்லிக் கொண்டு திரிகிறார்கள்.
இப்படிப்பட்ட அறிவு வறுமை வாசகர்களுக்கு நாங்கள் கேட்க விரும்பும் கேள்வி, எங்களுக்காக நாங்களே சாப்பிடுகிறோம், எங்களுக்காக நாங்களே குளிக்கிறோம், எங்களுக்காக நாங்களே கழுவிக் கொள்கிறோம் என சொல்லிக் கொள்வார்களா?
அப்படி சொல்லிக் கொண்டால், அவர்களை மற்றவர்கள் எப்படி பைத்தியம் என நினைப்பார்களோ அப்படித்தான் நாங்களும் நினைக்க வேண்டி உள்ளது)
வாசகர்களின் கவனத்திற்கு...
இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.
இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.
சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.
Sunday, October 27, 2019
கூண்டோடு சிக்கிய கூட்டுக்களவாணி நிதிபதிகள்!
இதனை அப்படியே காணொளி வடிவமாகவும் யூடியூபில் காணலாம்