சமூகத்தின் சட்ட விழிப்பறிவுணர்வுக்கான தளம்

நீ வாழ... நீயே வாதாடு... வரவேற்பு வாழ்த்து!

No law, no life. Know law, know life! என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியத்தை உணர்ந்து, ‘‘நீதியைத்தேடி... சட்டப் பல்கலைக் கழகத்திற்கு’’ வருகை தந்துள்ள உங்களை வருக என வரவேற்று, உங்களுக்கான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்று பயனைப் பெறுக என வாழ்த்துகிறோம்!
முக்கிய அறிவிப்பு : இந்த இணையப்பக்கத்தை புதுப்பிக்கும் பணி நடந்துக் கொண்டிருப்பதால், சில பதிவுகள் அல்லது இணைப்புக்கள் கிடைக்காமல் போகலாம்!

Sunday, May 19, 2019

இயல்பை அறிவோம்! இன்பம் பெறுவோம்!!இயற்கை பெண்ணுக்கு தந்துள்ள இயல்பு, ‘‘அன்பு’’

ஆணுக்கு தந்துள்ள இயல்பு ‘‘அறிவு’’

இவ்விரண்டு இயல்பும் தனித்து இல்லாத அல்லது இடம் மாறி இருக்கும் குடும்பம், ‘‘பாழ்!’’

ஆணுக்கு அறிவில்லை என்றால் கூட, பிரச்சினையில்லை. இன்னும் சொல்லப்போனால், அறிவுள்ளவனால்தான் அனைத்துப் பிரச்சினையும். 

ஆமாம், அறிவில்லை என்பதைத் தவிர, அவனால் வேறு எந்தப் பிரச்சினையும் அவனுக்கும், அடுத்தவனுக்கும் இல்லவே இல்லை. அப்படியானால், அவனால் குடும்பத்தில் என்ன பிரச்சினை இருக்க முடியும்? 

இங்குதான், வான்டேடா வருகிறது பணம். 

பணம் இருக்கும் இடத்தில் அன்புக்கு மாறாக பாழ்படுத்தும் விரோதமே குடிக்கொண்டு இருக்கிறது. இது உயிர் உறவுகளைக் கொலையும் செய்யத் தூண்டுகிறது.

ஆகவே, குடும்பப் பிரச்சினைக்கு பணம் என்பது பற்றாக்குறையாக பத்தில் ஒரு பகுதி வேண்டுமானால் காரணமாக இருக்கலாமே ஒழிய, ஒருபோதும் முழுக் காரணமாக இருக்கவே முடியாது. 

அறிவில்லாத ஆணிடம் நிச்சயம் மாற்றுத் திறனாக அன்பிருக்கும். உண்மையில் இது குடும்பத்தில் குறைந்தது இரட்டிப்பு மகிழ்ச்சிக்கேனும் வித்திட வேண்டும். இப்படி மகிழ்ச்சி கூடுமிடத்தில், மன்னிப்புக்கும் வரலாறு இருக்காது.

ஆகவே, அறிவை வளர்த்து வீண் சண்டையிட்டு பாழாவதை விட, அன்பை வளர்த்து அறவழி காட்டும் நெறியில் பிறவிப் பேற்றைப் பெறுங்கள்.

இந்த இயற்கை மற்றும் எதார்த்த இயல்புகளை மனதில் கொண்டு கணவனிடம் அன்பாக இருங்கள் என்று சொன்னால் கூட, ‘‘அது ஆணாதிக்கம், ஆணாதிக்கத் திமிர், பெண்ணடிமைத்தனம், மனித உரிமை மீறல் மற்றும் குடும்ப வன்முறை என்று சொல்லி விடுவார்கள் போலிருக்கிறது!’’

ஆணுக்கு சொல்லலாம் என்றால், அன்பு அவர்களது இயல்பில்லையே! பின் யாருக்கு என்னத்த எடுத்துச் சொல்லி நம் குடும்பங்களை எப்படி வாழ வைப்பது?! 

இதனை அவரவர்களும் புரிந்துக் கொண்டு, தங்களின் வாழ்க்கையை வாழ்ந்து வளமாக்கிக் கொண்டு வாரிசுகளுக்கு வழிகாட்டினால்தான் உண்டு!!

இல்லையேல், இப்போதுள்ள சமுதாயம் கூட, எதிர்க் காலத்தில் இல்லை என்ற நிலைக்கு நம்மிடம் பழகி, பழக்கி, பாழாக்கி விடும். எச்சரிக்கை!


பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

Friday, May 17, 2019

மனுவில் தொடர்பு எண்ணை குறிப்பிடவே கூடாது!ஒழுக்கமும், நாணயமும் உள்ளவர்கள் வக்கீல் தொழிலுக்கும், அரசு ஊழியத்துக்கும் அருகதையற்றவர்களாகி விட்டனர் என்று பகுத்தறிவுப் பெரியர் 1931 ஆம் ஆண்டிலேயே சொன்னபடி...
அரசூழியர்கள் என்கிற அய்யோக்கியர்கள் யாரிடம் இலஞ்சமாகப் பெரும் பணத்தைப் பறிக்கலாம் என்ற எண்ணத்தில் வேலையை தாமதப்படுத்தி பணம் பறிப்பார்கள் அல்லவா?
இவைகளை சட்டப்படி முறியடித்து, இலஞ்சம் கொடுக்காமல் காரியங்களை சாதிப்பது எப்படி என்பதோடு, அப்படிப்பட்ட அய்யோக்கிய அரசூழியர்களை சட்டப்படி கதறவிடுவது எப்படி என்ற யுக்திகள் பலவற்றை, தனக்கே உ(ய)ரிய பாணியில் சட்ட ஆராய்ச்சியாளர் திரு. வாரண்ட் பாலா அவர்கள் நீதியைத்தேடி... சட்ட அறிவுக்களஞ்சியம் நூலில் எழுதி உள்ளார்.
இதனைப் படித்த வாசகர்கள் பலரும், அவர் சொல்லி உள்ளதை அப்படியே பின்பற்றி பல அய்யோக்கிய அரசூழியர்களை கதறவிட்டு உள்ளனர்.
அதுமட்டுமல்லாமல், இதனைப் படித்த அய்யோக்கிய அரசூழியர்களே, ‘‘என்னங்க இப்படி எல்லாம் யோசனை சொல்லித்தர்றீங்க’’ என்று அவரிடமே கதறி இருக்கிறார்கள் என்றால், அந்த யுக்திகளை நாம் அனைவரும் பயன்படுத்தினால் எப்படி கதறுவார்கள்? என்று எண்ணுகிறீர்களா... சந்தேகமே வேண்டாம்.
அந்த அய்யோக்கிய அரசூழியர்கள் தங்களின் குடும்பம் குட்டியோடு உங்களின் வீட்டிற்கே வந்து காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு விடுவார்கள்.
ஆமாம், இப்படி காவலூழிய கேவலர்களே நம் ஆசிரியர் அல்ல அல்ல பேராசிரியர் திரு. வாரண்ட் பாலாவின் காலில் விழுந்துள்ளனர் என்றால் யோசித்துக் கொள்ளுங்கள். இந்த அசிங்கங்களை எல்லாம் எழுதக்கூடாது என்று பெருந்தன்மையால் நூலில் எழுதவில்லை என தெரிகிறது.
ஆனால், அரசுப் பொய்யர்களும், நிதிபதிகளும் அவருக்குப் பயந்து, அவரது வழக்கு விசாரணைக்கு வருகின்ற நாளன்று விடுப்பு எடுத்து விடுவார்கள் என்பதை, அவரே நூல்களில் எழுதி உள்ளாரே!
அந்த அளவிற்கு அய்யோக்கிய அரசூழியர்களிடம் கொடுக்கும் சாதாரண மனுக்கள் முதல், ஒரு நிதிபதி வழங்கிய தீர்ப்பு தவறு என எப்படி மேல்முறையீடு மனுவை எழுதுவது என்பது வரை ஒரு மனுவை எப்படி மிகவும் நேர்த்திய தயார் செய்ய வேண்டும் என்பதை ‘‘மநு வரையுங்கலை!’’ நூலில் தெளிவாக எழுதி உள்ளார்.
இந்த நூல் எந்தளவிற்கு மகத்தான சாதனைகளை செய்ய உதவும் என்பதற்கு இந்த இரண்டு உண்மைகளே போதும்.
ஆமாம், இந்த நூலை கடலூர் மத்திய சிறையில் விசாரணை கைதியாக இருந்த சங்கர் லால் என்ற இளைஞர் இப்படியும் ஒரு நூலை எழுத முடியுமா என வியந்து ஒரு வாரம் தூங்காமல் திரும்பத்திரும்ப பலமுறைப் படித்து, தானே வாதாடி ஒரு வழக்கில் விடுதலையானதோடு, தன்னோடு சக கைதிகளாக இருந்த நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு பிணை மனுவை எழுதிக் கொடுத்து பிணை கிடைக்கவும், விடுதலையாகவும் உதவி உள்ளார் என்பதை ‘‘மகத்தான சாதனைகளுக்கு வழிகாட்டும் மநு வரையுங்கலை!’’ என்ற கட்டுரையில் படிக்கலாம்.
மக்களிடம் அரசூழியர்கள் தங்களின் அய்யோக்கியத் தனங்களை காட்டாமல் இருக்கவும், மக்கள் எளிதில் பயனடையவும் பல்வேறு யுத்திகளை அரசு கையாண்டு வருகிறது. இதில் ஒன்று, இணைய வழியில், எதற்கும் விண்ணப்பித்தல் ஆகும்.
இது மக்களுக்கு எளிதாக இருக்கிறது; நம்மிடம் வந்து நாட் கணக்கில் கெஞ்சி தொங்க வேண்டிய அவசியம் இல்லாமல் போய்விட்டது. ஆகையால், நம்முடைய அய்யோக்கியத்தனங்களை அரங்கேற்றி இலஞ்சப் பணம் பறிக்க முடியவில்லையே என்றும், இதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்து, அரசூழிய அய்யோக்கியர்கள் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.
அதாவது இணையவழியில் விண்ணப்பிக்கும்போது தொடர்பு உலாப்பேசி எண்ணை கேட்கிறார்கள். நாமும் கொடுக்கிறோம். ஆனால், அதையே ஒரு காரணமாக வைத்து ‘‘நாங்கள் அழைத்தபோது, உங்களது உலாப்பேசி எண் அனைத்து வைக்கப்பட்டு இருந்தது’’ என்ற சட்டத்துக்கு விரோதமான காரணத்தை பதிவு செய்துவிட்டு, நம் கோரிக்கையை தள்ளுபடி செய்கிறார்கள்.
மனு எழுதும் பலரும் தற்போது தங்களது முகவரியில், தொடர்பு உலாப்பேசி எண்ணை சட்டப்படி குறிப்பிட வேண்டியதில்லை என்றாலுங்கூட ஏனோ குறிப்பிடுகிறார்கள். புதிதான இப்பழக்கம் தவறு என்பதோடு, நமக்கு பல வகையில் பிரச்சினைகளை உருவாக்கும் என்பதற்கு மேற்கண்ட படச்சான்றே நன்சான்று.
அரசாங்க காரியம் எதுவுமே எழுது்து மூலமாக இருக்க வேண்டும் என்பதன் அடிப்படையில், உலாப்பேசி அணைத்து வைக்கப்பட்டிருந்தால் நிராகரிக்கப்பட்டதாக சொல்ல முடியாது என்பது உட்பட பல்வேறு சட்டக் கேள்விகளுக்கு அரசூழிய அய்யோக்கியர்கள் பதில் சொல்லத்தான் வேண்டும் என்றாலும் கூட, நாம் தொடர்பு எண்ணை குறிப்பிட்டதால், நமக்கு தேடி வந்த பின் விளைவிது.
ஆமாம், குற்றம் நடைபெறாமல் தடுப்பதுதான் நம் கடமையே தவிர, குற்றம் நடந்தப்பின் அதற்கு நிவாரணம் தேடிப் போராடுவது மடத்தனம் அல்லவா?
ஆகையால், இதற்காக மேலும் பல மனுக்களை எழுதும்படி ஆகியது, குறிப்பிட்ட காளத்திற்குள் நமக்கு நடக்க வேண்டிய காரியம் ஆகவில்லை என்பதெல்லாம் நமக்கு பல்வேறு வழி வகைகளில் இழப்புதானே?!
நாம் கொடுக்கும் மனுக்களின் மீது, அடுத்தடுத்த சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு கோப்புகளை தயார் செய்ய அரசூழிய அய்யோக்கியர்களை சட்டப்படி வேலை வாங்க வேண்டுமே ஒழிய, அவர்கள் மேலும் சொகுசான சோம்பேறிகளாக இருந்து, சட்ட விரோத காரியங்களை தொடர்ந்திட தொடர்பு எண்ணை கொடுத்து வழிவகை செய்யவே கூடாது.
அப்படி கட்டாயம் குறிப்பிட வேண்டிய அவசியம் இருந்தால் தொடர்பு எண்ணை தவிர்த்து, மின்னஞ்சல் முகவரியை தரவும். இதற்கு வசதி இல்லாதபோது, இணைய வழி விண்ணப்பத்தை தவிர்த்து, அஞ்சல் வழியில் செய்வதே நல்லது.
மற்றுமொரு சிறந்த வழியாக, மின்னஞ்சல் முகவரியைப் பெற்று, அதற்கு அனுப்பி வைப்பதும் மிகச் சிறந்தது.

பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

Wednesday, May 15, 2019

அழைப்பாணையை கொடுக்கனுமா... வாங்கனுமா?நாம் சட்டப்படிதான் வாழ்கிறோம். ஆனால், சட்டம் தெரியாமல் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம் என்ற நம் ஆசிரியரின் கூற்றுக்கு ஏற்ப சாதாரணமாக நம் வாழ்க்கை நடைமுறையில் உள்ள வார்த்தைப் பிரயோகங்களுக்கும், சட்டப் பிரயோகங்களுக்கும் சற்றே வித்தியாசம்தான் இருக்கும். இதுபற்றி நம் ஆசிரியர் நூல்களில் தெளிவாக குறிப்பிட்டு உள்ளார். 

நமக்கு தெரிந்த அன்பர்கள், அவர்களது சுப நிகழ்வுகளுக்கு அழைப்பதாக இருந்தால், நமக்கு அதற்கான அழைப்பிதழைக் கொடுப்பார்கள் அல்லவா? அதுபோல, எந்தவொரு சட்டப் பிரச்சினைகளுக்காக உங்களை சட்டப்படி விசாரிக்க வேண்டி இருந்தாலும், அதற்கான சட்டப்படியான அழைப்பாணையை உங்களுக்கு தரவேண்டும். 

அன்பர் உங்களது இருப்பிடம் தேடி வந்து அழைப்பிதழ் தராமல் நீங்கள் அவர்களது சுப நிகழ்வுகளுக்கு போக மாட்டீர்கள் அல்லவா? அதுபோலவே, சட்டப் பிரச்சினைகளை விசாரிப்பதற்காக, சம்பந்தப்பட்ட எவரும் உங்களைத்தேடி வந்துதான் அழைப்பாணையை கொடுக்க வேண்டுமே தவிர, ‘‘வந்து வாங்கிச் செல்’’ என்று, சட்ட விதிப்படி நீதிமன்றமே கூட சொல்ல முடியாது. 

ஆமாம், உங்களின் மீது ஒரு குற்றவியல் வழக்கு காவலூழியர்களால் பதியப்படுகிறது. அதன் பேரில் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்படுகிறது. அதன் பேரில் வழக்கை சந்திக்க நீதிமன்றம் உங்களுக்கு காவலூழியர்களின் மூலம் அழைப்பாணை அனுப்புகிறது.

இதனை அக்காவலூழியர்கள் உங்கள் வீடு தேடி வந்து தரவேண்டுமே ஒழிய, நீங்கள் குற்றம் சாற்றப்பட்டவர் என்பதாலேயே, கு.வி.மு.வி 62 இன்படி வேறு எங்கு சென்றும் வாங்க வேண்டியதில்லை. 


ஆமாம், கு.வி.மு.வி 62(2) இல், அழைக்கப்பட்டவரிடம் என்பதற்கு, ‘‘அழைப்பாணையை யாருக்கு கொடுக்க வேண்டுமோ அவருக்கு என்றுதான் அர்த்தமாகுமே’’ தவிர, அவரை வரவழைத்து தரவேண்டுமென்று அர்த்தம் அல்ல. 

அவர்கள் அழைப்பாணையை கொண்டு வரும் நேரத்தில் நீங்கள் இல்லாது போனால், உங்களது நெருங்கிய உறவுகள் உள்ளிட்டவர்களிடம் கூட கொடுக்கலாம். அலுவலகம் என்றால் அலுவலகத்திலும் கொடுக்கலாம். 

ஆனால், இயன்ற வரை சம்பந்தப்பட்ட நபரிடம் நேரடியாகவே சார்வு செய்ய வேண்டும். அவர்கள் வழங்குவதை தவிர்க்கும் முயற்சியில், நீங்கள் ஈடுபட்டால் வேறு வழிமுறைகளில் சார்பு செய்ய விரிவான சட்ட விதிகள் உண்டு. 

ஆமாம், கொடுப்பது, வழங்குவது என்பது சாதாரண வழக்கத்தில் உள்ள சொல். ‘‘சார்வு செய்தல் என்றால் சட்டப்படியான சொல். இதனை வழக்கத்தில் சார்பு என்றும் சொல்கிறார்கள்’’. இதெல்லாம் பொதுவாக அழைப்பாணையை சார்வு செய்யும் முறை. 

இதில், குற்றவியல் வழக்குகளில் காவலூழிர்கள், நிதிபதிகள் விசாரணைக்கு அழைப்பது எப்படி, உரிமையியல் சம்பந்தமான வழக்குகளில் விசாரணைக்கு அழைப்பது எப்படி என்று விரிவாக அது அதற்குறிய சட்ட விதிகளில் உள்ளதை படித்துக் கொள்ள வேண்டும். 

இதில், அவர்களது விசாரணைக்கு உதவி புரிவதற்காக உங்களை சாட்சியாக விசாரணைக்கு அழைத்தால், இந்த தேதியில், இத்தனை மணிக்கு வரவேண்டுமென குறிப்பிட்டு அழைக்கவே முடியாது. ஏனெனில், உதவி செய்வதற்கு உங்களது விருப்பப்படி ஓய்வு நேரத்தில் மட்டும் செல்லும் உரிமையும், அதற்கான செலவுத் தொகையையும் பெறும் உரிமையும் சட்ட விதிப்படி உண்டு. 

இப்படி அழைக்கும்போது மட்டும், நேரில் அழைப்பாணையை தருவதோடு, கூடுதலாக பதிவஞ்சல் மூலமாகவும் அனுப்பலாம் என கு.வி.மு.வி 69 அறிவுறுத்தப்பட்டு உள்ளது. 

ஏன் இப்படியொரு விதியை வைத்துள்ளார்கள் என்று ஆராய்ந்தால்,  காவலூழியர்கள் அழைப்பாணையை சாட்சிக்கு கொடுக்காமல், களவாணித்தனம் செய்து விட வாய்ப்புண்டு என்பதோடு, சாட்சியின் முக்கியத்துவமும் உணர்த்தப்பட்டு உள்ளது.

மொத்தத்தில், நீங்கள் யாராக இருந்தாலும், உங்களுக்கான எந்தவொரு அழைப்பாணையாக இருந்தாலும், அவர்கள் ஏதோவொரு வழியில் உங்களைத் தேடிவந்து கொடுக்க, நீங்கள் வாங்க வேண்டுமே அன்றி, நீங்களாக சென்று வாங்க வேண்டிய அவசியம் சட்ட விதிப்படி இல்லை. 

இதேபோல கொடுக்கும் அழைப்பாணை உள்ளிட்ட எதையுமே வாங்க மறுக்கக்கூடாது. அப்படி மறுத்தால், அது சட்டப்படி சிறை தண்டனை விதிக்கத்தக்க குற்றம். 

ஆகையால், சட்ட விரோதம் என்று நிரூபிக்க முடியும் என்று நினைக்கிற காகிதத் தகவல் எதையும் முதலில் படித்துப் பார்த்து ஆட்சேபனையுடன் பெற்றுக் கொள்வதாக எழுதி கையொப்பமிட வேண்டும். 

இதனை, குற்றவாளி என அறிவிக்கப்பட்ட தவறான தண்டனை தீர்ப்புரையை பெறுபவர்களும் எழுதலாம். நம் ஆசிரியர்  இப்படியெல்லாம் ஆட்சேபனையை எழுதி, நிதிபதிகளையே அலற விட்டுள்ளதை அவரது நூல்களில் பதிவு செய்துள்ளார். தேவை இருப்பின் படித்துக் கொள்ளவும்.

ஒருவேளை நீங்கள் கைது செய்யப்பட்ட போது இருந்த முகவரியில் இருந்து, வேறு முகவரிக்கு மாறி இருந்தால், கேவலர்கள் அழைப்பாணையை சார்வு செய்வதற்கு ஏதுவாக, அதுபற்றிய தகவலை சம்பந்தப்பட்ட கேவலர்களுக்கு சட்டப்படி பதிவு அஞ்சலில் தெரிவித்து விட்டு, அதன் நகலை கைது செய்தபோது எந்த நிதிபதியிடம் முன்னிலைப்படுத்தி நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்களோ அந்த நிதிபதிக்கும் போட்டு விடவும். 

இதுபற்றி தெரியாதபோது, மாவட்ட நிதிபதிக்கு அனுப்பியும் அனுப்பி வைக்க சொல்லலாம். மாவட்ட நிதிபதிகளுக்கான் மின்னஞ்சல் மற்றும் தொடர்பு எண்கள் Ecourt இணையப்பக்கத்தில் கிடைக்கும்.

இல்லையேல், நீங்களே வாதாடுவதை தடுக்கும் ஒரு முயற்சியாக, குற்றம் சாற்றப்பட்டவர்கள் தலைமறைவு என எதையாவது எழுதி, ஏடாகூடமாக எதையாவது செய்யவும் வாய்ப்புண்டு.

அழைப்பாணை எதுவும் தராமல், விசாரணைக்கு என வலுக்கட்டாயமாக அழைத்து சென்றால், அதற்கு கைது என்றே முதலில் பொருள் கொள்ள வேண்டும். 

அதன் பின்னர் கைது செய்யவில்லை என்று விடுவித்தால், அழைப்பாணை வழங்காமல் வலுக் கட்டாயமாக அழைத்து சென்றதற்கு, அக்காவலூழியர் மீது குற்றவியல் உள்ளிட்ட மனித உரிமை மீறல் நடவடிக்கையை  எடுக்க முடியும். 

சமுதாயத்தில் கெளரவம் மிக்க நபர்களை விசாரணைக்கு அழைக்க வேண்டி இருந்தால், அவர்களுக்கு அழைப்பாணை அனுப்புவதற்கு பதில், கடிதமாக அனுப்பலாம் அல்லது அவர்களை நேரில் சென்று விசாரித்து வர ஆட்களை அனுப்பலாம்.  

பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

Tuesday, May 14, 2019

இனி தமிழில் தட்டச்சு மிக எளிது!அதிசயம். ஆனால் உண்மை! ஆமாம், நாம் தமிழில் சொல்வதை, அப்படியே தட்டச்சு செய்து தரும் தகவல் தொழில் நுட்பம்!!

தகவல் தொழில் நுட்பம் எவ்வளவோ வளர்ந்து இருந்தாலுங்கூட, பலரும் அதைப்பற்றிய அறியாமையில் தான் இருக்கின்றனர்.

இந்த வகையில் தமிழில் நாம் பேசுவது, அப்படியே தமிழில் தட்டச்சு ஆகுமாறு மென்பொருள் ஒன்றை ஆன்ராய்டு உலாப்பேசிக்கு வடிவமைத்து தந்திருக்கிறார்கள், கூகுள் நிறுவனத்தினர்.

ஆமாம், இதற்கு இந்தப் படத்தில் உள்ளபடி, கூகுள் பிரே ஸ்டோருக்கு சென்று ஜிபோர்டை நிறுவிக் கொள்ள வேண்டும். இதற்கு சுமார் 35 எம்.பி இடம் தேவைப்படும்.


பின், கீபோர்டு செட்டிங் சென்று, நிறுவிய ஜி போர்டை ஆக்டிவேட் செய்துக் கொண்டால், கீழ்கண்டவாறு தமிழில் ஜி கீபோர்டு தோன்றும். இதை இடதுபுறம் மஞ்சள் நிற வட்டத்தில் உள்ள ஜி உறுதிப்படுத்தும்.


இப்போது, வலது புறம் மஞ்சள் வட்டமிட்டு காட்டியுள்ள மைக்கை தொட்டால் ஆன் ஆகி விடும். வாய்க்கு சற்று அருகில் பிடித்து எழுத வேண்டிய எண்ணத்தை சொன்னால், அது அப்படியே மிக அழகாக தமிழில் தட்டச்சு ஆகும். 

ஒருவேளை ஒலிப்பேழையாக (ஆடியோவாக) அனுப்ப நினைத்தால், வலது புறம் மஞ்சள் வட்டமிட்டு காட்டியுள்ள மைக்கிற்கு மேலுள்ள மைக்கை, பேசி முடிக்கும் வரை அழுத்திப் பிடித்துக் கொள்ள வேண்டும்.  

இவை இரண்டுக்குமே இணைய இணைப்பில் (ஆன்லைனில்) இருப்பது மிகமிக முக்கியம். இணைய இணைப்பில் வேகம் குறைவாக இருந்தாலும் தட்டச்சு ஆகாது அல்லது ஆக காலதாமதம் ஆகும்.

ஒருவேளை ஜி கீபோர்டை ஆங்கிலத்தில் வைத்துக் கொண்டு தமிழில் பேசினால், அது அப்படியே அரையும், குறையுமாக பிழையுடன் தமிங்கிலத்தில் தட்டச்சு ஆகும்.

வார்த்தையின் உச்சரிப்பு மற்றும் அக்கம் பக்கத்தில் இருக்கும் சப்தம் ஆகியவற்றைப் பொறுத்து, சில எழுத்துப் பிழைகள் வரலாம். அவற்றை நாம் கையால்,  மிக எளிதாக திருத்திக் கொள்ளலாம்.

மேலும், தமிழில் இல்லாத, ஆனால் நாம் தேவைக்கு ஏற்ப உருவாக்கிப் பயன்படுத்தும் கேவலர்கள், வக்கீழ்கள், நிதிபதிகள் உள்ளிட்ட வார்த்தைகள் எப்படிச் சொன்னாலும் வரவே வராது.

ஆமாம், இப்படி நாம் உருவாக்கும் வார்த்தைகளும் ஒருநாள் தமிழ் அகராதியில் சேரும். அதுவரை நாம்தான் கையால் திருத்திக் கொள்ள வேண்டும்.

மேலும், இதனை மின்னஞ்சல், டெலிகிராம் என நாம் உலாப்பேசியில் பயன்படுத்தும் அத்தனை வசதியிலும் மிகவும் வசதியாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

எழுதுவதற்கு ஆகும் நேரத்தை விட, பேசுவதற்கு ஆகும் நேரம் மிகவும் குறைவு என்பதால், நமக்கு அதிகமான நேரம் மிச்சம்.

வம்பு, வழக்கு உள்ள வாசகர்கள் அதற்கான மனுக்களை வெளியில் தட்டச்சு செய்வதில், பொருளாதாரம், வெளியில் சொல்ல முடியாத வார்த்தைகள், வாழ்க்கை இரகசியங்கள் என பல்வேறு சங்கடங்கள் இருக்கும். 

சமயத்தில் தட்டச்சு நிலையங்களில், நாம் யாருக்கு எதிராக என்ன தட்டச்சு செய்தோம் என்ற தகவல் சம்பந்தப்பட்டவர்களுக்கு எளிதில் சென்று விடும்.

இவர்களுக்கெல்லாம் இந்த மென்பொருள் வரப்பிரசாதம். குறிப்பாக பிரச்சினையில் உள்ள பெண்களுக்கு.

ஆமாம், நம்முடைய பிரச்சினைக்கு தீர்வாக என்னென்ன எண்ணங்கள் தோன்றுகிறேதோ அதை அவ்வப்போது மின்னஞ்சல் உள்ளிட்ட ஏதோ ஒன்றில், தட்டச்சு செய்து வைத்துக் கொண்டு, தேவைப்படும் போது எளிதாக திருத்தி மாற்றி அமைத்துக் கொண்டு, பின் பிரிண்ட் எடுத்துக் கொள்ளலாம். 

அடுத்தடுத்த நடவடிக்கைகளுக்கு தேவையான சங்கதிகளையும் மிக எளிதாக எடுத்துக் கொள்ளலாம். 

இது ஒரு சிறிய அறிமுகம் மட்டுமே. இதில் நான் சொல்லாத மேலும் பல செயல்களை இருக்கின்றன. அவற்றையும் தேவைக்கு ஏற்ப பயன்படுத்திக் கொள்ளலாம்.  

இப்படி, கணினி, மடிக்கணினி உள்ளிட்ட எதுவுமே இல்லாமல் பயன்படுத்த வேண்டிய விதத்தில் பயன்படுத்தி பல நன்மைகளை அடையலாம்.

ஆமாம், இனி வருங்காலங்களில், இதனை நூல் எழுதவே பயன்படுத்தலாமே என்று, நாங்கள் சிந்தித்து உள்ளதோடு, சிலருக்கு சிபாரிசும் செய்துள்ளோம். இப்போது உங்களுக்கும்!

நாங்கள் எப்படி எந்த நேரத்திலும், உடனுக்குடன் தமிழில் பதில் அனுப்புகிறோம் என்பதற்கான இரகசியம், இப்போது புரிந்ததா?!பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

Tuesday, May 7, 2019

பொதுமக்களுக்கு சொல்லப்பட வேண்டிய சொத்துரிமைகள்!நம் சமூகத்திற்கான சட்ட ஆராய்ச்சியாளராக திரு. வாரண்ட் பாலா அவர்கள், மத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவியோடு  எத்தனையோ சட்ட உரிமைச் சங்கதிகளைப் பற்றி ஆராய்ந்து, நூல்களில் எழுதி அதனை பொதுவுடைமையாகவும் ஆக்கி உள்ளார். 

ஆனால், இப்பொதுவுடைமை கருத்துக்களை பொது மக்களிடம் கொண்டுச் செல்லும் அக்கறை மிகமிக குறைவாகவே இருக்கிறது. இதனால், சமூகத்தில் எளிதாக தீர்க்கப்பட ஒரு பிரச்சினை தீர்க்க முடியாத பல்வேறு பிரச்சினைகளாக மாறி விடுகின்றன. தேவையற்ற உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.  

ஆமாம், 2008 ஆம் ஆண்டில் எழுதி வெளியிட்ட நீதியைத்தேடி... சட்ட அறிவுக்களஞ்சியம் என்ற நூலில், இன்று சமூகத்தில் நிலவும் ‘‘இலஞ்சம், வரதட்சினை, சொத்துரிமை, பாகப் பிரிவிணை, பெண்களுக்கு சொத்தில் சமபங்கு என்பது என்ன?’’ என்பன போன்ற பலவற்றுக்கும் சட்ட ரீதியான தீர்வுகளை சொல்லி உள்ளார். 

இந்த நூலில் மட்டும் 155 தலைப்புகளில் எழுதி உள்ளார். இதற்கு முக்கிய பத்திரிகைகள் இப்படி மதிப்புரை எழுதியுள்ளன என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். 

நூல்: நீதியைத்தேடி... சட்ட அறிவுக்களஞ்சியம்

மதிப்புரை: தீக்கதிர் நாளிதழ் 07-12-2008

நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் என்கிற அறைகூவலுடன் ‘‘சட்ட அறிவுக்களஞ்சியமாக’’ இந்நூலை பட்டறிவுடன் படைத்து உள்ளார், வாரண்ட் பாலா. மத்திய சட்ட அமைச்சகமே நிதி உதவி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், தமிழ்நாடு, பாண்டிச்சேரி நூலகங்கள் சிறைச்சாலைகள் என எங்கும் இலவசமாக வழங்கிட சட்ட அமைச்சகம் நிதி உதவி செய்துள்ளது.

‘‘நமக்காக நாம்தான் பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்ள வேண்டுமே யன்றி பிறரை நம்பிப் பயனில்லை’’ என்ற அனுபவ வெளிச்சத்தில், ‘‘சாதாரண சட்ட நடைமுறைகளை எளிய தமிழில், உரிய விளக்கங் களோடு சொல்லும் இந்நூலை எல்லோரும் வாங்கிப் படிப்பதும், பாதுகாப்பதும் அவசியம்’’ என்று குறிப்பிட்டு உள்ளது.


நூல்: நீதியைத்தேடி... சட்ட அறிவுக்களஞ்சியம்

மதிப்புரை: துக்ளக் வார இதழ் 04-02-2009 

இந்நூலாசிரியரின் நீதியைத்தேடி... வரிசையில் ஏற்கெனவே ‘குற்ற விசாரணைகள்’, ‘பிணை எடுப்பது எப்படி?’ என சட்டம் குறித்த இரண்டு நூல்கள் வெளியாகி, பொதுமக்கள் பலரின் வரவேற்பைப் பெற்றன. 

தவிர, பொதுமக்கள் சட்ட விழிப்புணர்வைப் பெற, இதுபோன்ற தனியார் முயற்சிகளை, மத்திய சட்ட அமைச்சகமும் நிதியுதவி செய்து ஊக்குவிக்கிறது. அந்த வகையில், ‘சட்ட அறிவுக் களஞ்சியம்’ என்ற இந்த மூன்றாவது நூலையும் ஆசிரியர் எழுதியுள்ளார்.  

இதில் சொல்லப்பட்டுள்ள கருத்துகள் கோர்ட் நடவடிக்கைகள் பற்றி, அனுபவ ரீதியாக பாமரர்களுக்கும் புரியும் வண்ணம் கூறப் பட்டுள்ளன. 

சட்டங்கள் எப்படி இயற்றப்படுகின்றன? சட்டத்தில் ஓட்டை என்பது என்ன? வழக்கறிஞர்களின் கடமைகள் என்னென்ன? குறுக்கு விசாரணை. சாட்சியங்களை சேகரிப்பது எப்படி? இப்படி சுமார் 155 தலைப்புகளில் கட்டுரை வடிவில் சட்ட அறிவுக்களஞ்சியம் தொகுக்கப் பட்டுள்ளது.

சரி, நம்ம விசயத்துக்கு வருவோம். 


சமூகப் பொறுப்புணர்வுள்ள ஒருவரால் இந்தச் செய்தியைப் படித்ததும், வழக்கம் போல இதுவும் ஒன்று என்று மிக எளிதில் கடந்து செல்ல முடியாது. கடந்து செல்லவும் கூடாது என்பதை விளக்கவே இக்கட்டுரை!

பெற்றோரின் சம்மதம் இல்லாமல் திருமணம் செய்வோர், சொத்தை அடைவதற்காக கொலை செய்வோர் ஆகியோர் இந்து வாரிசு உரிமைச் சட்டப்படி வாரிசு என்கிற உரிமையை இழந்தவர்கள் ஆவர்.

ஆமாம், நாளடைவில் மனம் சமாதானம் ஆகி, பெற்றோர்களாகப் பார்த்து பரிதாப்பட்டு ஏதாவது தந்தால்தானே ஒழிய, சட்டப்படி உரிமை கோர முடியாது.

ஆகையால், இவர்களுக்கு பரம்பரை சொத்தில் கூட பங்கு கிடைக்காது. ஆனால், இதுபற்றி போதிய சட்ட விழிப்பறிவுணர்வு மக்களிடம் இல்லை.

ஆகையால், சொத்துள்ளவர்களை குறிவைத்து காதலிப்பது, சொத்தை அடைவதற்காகவே கொலை செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டு விட்டு, பின்னர் ஏற்படும் பின் விளைவுகளால் பெரும் துன்பப்படுகின்றனர்.

இந்தச் செய்தியைப் பொருத்தவரை, எங்களது விருப்பத்துக்கு விரோதமாக திருமணம் செய்தால், ‘‘இந்து வாரிசுரிமை சட்டப்படி, வாரிசு உரிமையையும் சொத்துரிமையையும் இழப்பாய் என்று எச்சரித்து இருந்தால், காதல் திருமணம் குறித்து யோசித்து இருப்பான்’’ என்றே எண்ணத் தோன்றுகிறது.

அப்படியானால், தன் விருப்பப்படி காதல் திருமண சுய முடிவை எடுக்க ஒரு இளைஞனுக்கு சட்டத்தகுதி இல்லையா என்ற கிறுக்குத்தனமான கேள்வி, உங்களில் யாருக்கேனும் எழுந்தால், அதே சுய முடிவை சொத்தில் எடுக்கும் உரிமை அவனது பெற்றோர்களுக்கு இல்லையா என்றும் யோசித்தால், சொத்துரிமை கிடையாது என்ற சட்டம் சரியே என்பதும், காதல் திருமணம் செய்துக் கொண்டவர்கள் கூட, தங்களது வாரிசுகளின் காதல் திருமணத்துக்கு தடையாக இருப்பதும் விளங்கும்.

சொத்து கிடையாது என்பதை அவனது தந்த சட்ட அறிவோடு சொன்னாரா அல்லது கோவத்தில் குத்து மதிப்பாக சொன்னாரா என்று ஆராய்ந்தால், சட்ட அறிவோடு சொல்லி இருந்தால், திருமணத்துக்கு முன்பாகவே எச்சரித்து இருப்பார்.

ஆகையால், கோவத்தில் சொன்னதாகத்தான் நாம் தீர்மானிக்க வேண்டி உள்ளது. கோவத்தில் சொன்னதாகவே இருந்தாலும், அவரது சட்ட உரிமையே சொன்னதால், தற்கொலைக்கு தூண்டிய குற்றமும் சட்டப்படி சாராது.

ஆனால், இதுதான் பணம் பறிக்க சரியான சமயமென்று நினைக்கும் கேவலர்கள் வழக்குப் பதிவு செய்யலாம், பொய்யர்கள் வாதாடலாம், நிதிபதிகள் தண்டனை கூட கொடுக்கலாம்.

எது எப்படி இருப்பினும், சரியான சட்ட விழிப்பறிவுணர்வோடு எடுத்துச் சொல்லி புரிய வைத்திருக்க வேண்டியதை, தன் கோவத்தால் சொன்னதன் மூலம், மகனையே இழந்துள்ள தந்தைக்கு இதைவிட பெரிய தண்டனை எதுவும் இருக்க முடியாது என்பதே உண்மை!

பெரிய வீரன் போல காதல் திருமணம் செய்தவன், சொத்து கிடையாது என்று சொன்னதும், தன்னை நம்பி காதலித்து, கல்யாணம் செய்துக் கொண்டவளை மறந்து தற்கொலை செய்துக் கொண்டுள்ளான் என்றால், அவன் நிச்சயம் காதலிக்க தகுதி இல்லாத கோழையே. அவனை நம்பி, ஒரு பெண் தன் வாழ்க்கையை கேள்விக்குறி ஆக்கிக் கொண்டு உள்ளாள் என்பது வேதனையே!

மொத்தத்தில் சரியான சட்ட விழிப்பறிவுணர்வு இல்லாததால், இந்த சம்பவத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான இழப்பு. இதில் நாம் அனைவருக்காகவுமே பரிதாப்பட வேண்டி உள்ளது. 

இதுபோன்ற துன்பங்கள் இனி சமூகத்தில் நடக்கவே கூடாது என நினைப்பவர்கள், இதுபோன்ற செய்திகளை மக்களிடம் கொண்டு செல்லுங்கள். இதனை (உங், மக்)களைத் தவிர வேறு யாரும் செய்ய மாட்டார்கள்.

ஆமாம், இதுபோன்று காதல் திருமணங்களை, அதற்கான புரோக்கர்கள் இல்லாமல், அவ்வளவு எளிதில் பதிவு செய்துவிட முடியாது. காதல் திருமணம் செய்வோருக்கு சொத்துரிமை கிடைக்காது என்பது இப்புரோக்கர்களுக்கு நன்றாகவே தெரியும்.

ஆனாலும், தங்களின் நாறியப் பிழைப்புக்காக இதனை காதல் திருமணம் செய்துக் கொள்ள தங்களை நாடும், காதலர்களிடம் சொல்வதில்லை. 

மேலும், இப்படி புரோக்கர்களின் துணையோடு சட்டப்படி செய்யப்படும் பதிவுத் திருமணங்களில் 100 க்கு 99% திருமணங்கள் சட்டப்படி செல்லாது என்று பலருக்கும் தெரியாத இரகசியம், நம் சட்ட ஆராய்ச்சியாளர் திரு. வாரண்ட் பாலா அவர்கள் ஆராய்ந்து சூசகமாக எழுதி உள்ளார். 

எனவே, மகனோ அல்லது மகளோ தங்களுக்கு தெரியாமல் காதல் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார்களே அல்லது செய்துக் கொண்டார்களே என தவறான முடிவுகளை எடுப்பதை தவிர்த்து, சரியான சட்ட விழிப்பறிவுணர்வோடு சந்திக்கவும், சிந்திக்கவும் வேண்டும். 

பிற்சேர்க்கை நாள் 19-05-2019

சொத்தை அடைவதற்கான கொலைகள் தொடர் கதையாகவே இருப்பது கொடுமை!


இதற்கு கூலிக்கு மாரடிக்கும் வக்கீழ்கள் என்கிற பொறுக்கிகள் வழங்கும் தவறான சட்ட ஆலோசனைகளே காரணமாக இருக்கிறது என்பதால், குற்றச் செயல்களுக்கு அடிப்படை காரணமாக விளங்கும், அவர்களையும் சட்டப்படி கைது செய்து நடவடிக்கை எடுத்தாலே ஒழிய, இதுபோன்ற கொலைகளை தடுத்து நிறுத்த முடியாது.பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

Monday, May 6, 2019

இந்திய சாசனத்தை சுயமாக எழுதினார்களா...?!இந்திய சாசனம் என்று மிகப் பொருத்தமாக சொல்லப்பட வேண்டியதைத்தான் இந்திய அரசமைப்பு, அரசியலமைப்பு, அரசியல் சட்டம் என பல்வேறு விதங்களில் சொல்கிறார்கள்.

இந்த இந்திய சாசனத்தையும், இதர முக்கிய இந்திய சட்டங்களையும் எழுதியது யார் என்ற கேள்விகளை அடிக்கடி கேட்டுக் கொண்டேதான் இருக்கிறார்கள். இதற்கு முக்கிய காரணம், இதுபற்றி தவறான செய்தியை தற்போது அதிகமாக பரப்புவதே!

ஆமாம், இந்திய சாசனத்தையும், மற்றப்படி ஆங்கிலேயர் காலத்தில் அமல்படுத்தப்பட்டு, இன்றும் இருந்து வரும் இந்திய தண்டனைச் சட்டம் 1860 உள்ளிட்ட பல்வேறு முக்கியச் சட்டங்களையும் அம்பேத்கர் என்ற தனி ஒருவரே எழுதினார் என்று கூறி, அண்மை காலமாக அவருக்கு பல்வேறு கெளரவப் பட்டங்களை வழங்கியும், உண்மையைத் திரித்தும், தவறானப் பொய்ச் செய்தியை, அவரின் பெருமையைப் பீற்றுவதாக நினைத்து, கெட்டப் பெயரை உண்டாக்கி வருகிறார்கள், மூடர்கள்!

ஆமாம், இதே மூடர்கள்தான் சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பு வரை, இந்திய சாசனத்தை எழுதியது அம்பேத்கர்தான் என்றாலும், வரைவுக் குழுவில் இருந்த ஆதிக்க சாதியினர் தங்களின் எண்ணங்களை எல்லாம், அவர் மீது திணித்து எழுத வைத்தனர் என்றும், ஆகையால், என்னிடம் அதிகாரம் இருந்தால், இந்திய சாசனத்தை நானே தீயிட்டு கொளுத்துவேன் என்று அம்பேத்கரே சூளுரைத்ததாகவும் அவரது ஆதரவாளர்களே சொல்லி வந்தது, பல்வேறு பதிவுகளில் வரலாறாக இருக்கிறது. 

இதில், இப்பொய்ப் பெருமையை தங்களின் அரசியல் ஆதாயத்திற்காக, அரசியல் வியாதிகள் ஆமோதிப்பது போல ஆமோதித்து, அடிமட்டத்தில் கை வைத்துக் கொண்டு இருக்கிறார்கள் என்பது, மாக்களுக்கு புரியவில்லை என்பதை இங்கு விவரிக்க இயலாது. விவரிக்க வேண்டிய விடயமும் இதுவல்ல.

இது ஒருபுறம் இருக்க, அனைத்து அரசியல் வியாதிகளும்  ஆளும்கட்சியாக இருக்கும்போது, இந்திய சாசனத்தில் குறை இருக்கிறது. ஆகையால் அதனை மறு பரிசீலனை செய்து திருத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டுக்கு வருவர். 

ஆனால், இதே நிலைப்பாட்டை இந்து மதவாதிகள் என்று பெயரெடுத்துள்ள அரசியல் வியாதிகள் எடுத்தால் மட்டும், மற்ற அரசியல் வியாதிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து இந்திய சாசனத்தை பங்கப்படுத்துகிறார்கள்.

ஆகையால் பாதுகாப்போம் என்று கூக்குரல் இடுவதை வாடிக்கையான வேடிக்கையாக வைத்திருக்கின்றன என்பதை, 2001 ஆம் ஆண்டே பதிவு செய்திருக்கிறார்கள்.  இப்படியொரு வேடிக்கை கடந்த 2018 ஆம் ஆண்டும் நடந்தது. ஆனால், எந்த அரசியல் கட்சியும், இந்திய சாசனம் அத்தியாயம் நான்கில் வரையறுத்துள்ள ‘‘அரசுக்கான கொள்கை கோட்பாடுகளை’’ மட்டும் கடைப்பிடிக்கவே இல்லை என்பதையும், பட்டவர்த்தனமாகவே பதிவு செய்துள்ளார்கள்.


ஆகையால், நம்ம விட்ட விசயத்தை தொடருவோம். 

இதுபற்றி, நம் சமூகத்துக்கான சட்ட ஆராய்ச்சியாளர் திரு. வாரண்ட் பாலா அவர்கள் நூலில் போதுமான அளவிற்கு எழுதி இருந்தாலும், கேள்வி கேட்பவர்கள் எல்லோரும் அவரின் வாசகர்களும் அல்லர்; அப்படியே வாசகர்களாக இருந்தாலும் கூட, சரியாகப் படித்து உள் வாங்கிக் கொள்பவர்களும் அல்லர்.

ஆமாம், இந்திய அரசமைப்பு என்பது, பல நாடுகளின் அரசமைப்பு சட்டங்களில் இருந்து களவாடப்பட்டு எழுதப்பட்டது என்று சொல்வதே சரியானது. ஆனால், இதனை தவிர்த்து, நாகரீகமாக தொகுக்கப்பட்டது என்று உண்மையைப் பேசுவோர் என்று சொல்லிக் கொள்வோரும் சொல்லுகின்றனர்.

இன்று (06-05-2019) தினமணி நாளிதழில் வெளிவந்துள்ள இம்முழுப் பக்க கட்டுரையைக் கொண்டு விளக்கம் அளிப்பது, உங்களின் எளியப் புரிதலுக்கு ஏதுவாய் இருக்கும். இதிலும் எளிதாகப் புரிந்துக் கொள்ளும் பொருட்டு, ஒரே மாதிரியான வர்ணம் ஒன்றுக்கொன்று தொடர்புள்ள சான்றுச் சங்கதிகளுக்கு கொடுக்கப் பட்டு உள்ளது.
உண்மையில், இந்திய சாசனம் என்பது, நம் சுய சிந்தனையில் உருவானது அல்ல. ஆகையால்தான், அப்போதைய மூன்றாவது இறுதி வரைவில் இருந்த 395 கோட்பாடுகளில் விவாதங்களை செய்து 7653 திருத்தங்களை சட்ட வரைவுக் குழுவினரும், இதர உறுப்பினர்களுமே செய்துள்ளனர். 

இதிலும் மிக முக்கியமானது, முன் இரண்டு வரைவுகளிலும் செய்யப்பட்ட திருத்தங்கள் எத்தனை என்பதும், முதல் வரைவில் திருத்தங்களை பரிந்துரைக்க கொடுக்கப்பட்ட எட்டு மாதத்தில் எத்தனை மக்கள், எத்தனை திருத்தங்களை சொன்னார்கள் என்பதும் கணக்கில் இல்லை.

இதனை நாம் தோராயமாக மூன்றாவது மற்றும் இறுதித் திருத்தமான 7653 ஐ இரண்டு மடங்கு சேர்த்து மும்மடங்காக 22959 என்றே எடுத்துக் கொண்டாலும் கூட, இத்தனை ஆயிரம் திருத்தங்களை கொண்ட வரைவைத் (எழுதிய அல்ல அல்ல) தொகுத்தவர்கள் அனைவரும் எப்படி செதுக்கிய சிற்பி ஆவார்கள்? 

இதையும் திரித்து அம்பேத்கர் ஒருவரை மட்டுமே செதுக்கிய சிற்பி என்று சொல்வது, இவை எல்லாம் தெரிந்தும் இட்டுகட்டிச் சொல்லும் பொய்ப்புளுகு ஆகாதா??

உண்மையில், இந்திய சாசன வரைவுக் குழுவின் தலைவராக திரு. இராஜேந்திரப் பிரசாத்தும், உறுப்பினர்களாக பலரும் அக்கம் வகித்துள்ளனர் என்பது ஆதாரமாக இருக்கும் போது, மற்றவர்களை எல்லாம் விட்டுவிட்டு, அம்பேத்கர் என்ற ஒருவரை மட்டும் கெளரவப்படுத்தி உயர்த்திப் பிடிப்பது போல, பொய்யைப்புளுகி கெட்ட உள் நோக்கத்தோடு சொல்வது கண்டிக்கத் தக்கது அல்லாமல் வேறென்ன?

ஆமாம், ‘‘இந்திய சாசனமானது சுமார் 60 க்கும் மேற்பட்ட நாடுகளின் அரசமைப்பு சட்டங்களை ஆராய்ந்து எடுக்கப்பட்டது’’ என்று இக்கட்டுரையில் சொல்லப்பட்டு இருந்தாலுங்கூட, அதுபற்றி சுருக்கமான விவரத்தை கூட, சொல்லவில்லை.

ஆனால், எந்தெந்த நாடுகளில் இருந்து, எதுயெது மிகமிக முக்கியமாக எடுக்கப்பட்டது என்ற சான்றுகளை, சட்ட ஆராய்ச்சியாளர் திரு. வாரண்ட் பாலா அவர்கள் எழுதியுள்ள நீதியைத்தேடி... சட்ட அறிவுக்களஞ்சியம் நூலில் தொகுத்துக் கொடுத்து உள்ளார்.  


இதுதான் சரியான தகவல் என எப்படி நம்புவது, என்ற சந்தேகம் இருந்தால், சரி பார்ப்பது மிகவும் எளிது.

அக்கம் பக்கத்தில் ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற போட்டித் தேர்வுக்குப் படிப்பவர்களை கேட்டாலே, சொல்லி விடுவார்கள் அல்லது அவர்கள் படிக்கும் நூல்களை வாங்கிப் படித்தும் தெளியலாம். இதுமட்டுமல்லாமல் இணையத்திலும் தேடிப்படித்து அறியலாம்.

ஒரு கருத்தை களவாடும் விதமாக காப்பியடித்தால், அதன் கருப் பொருளை உணர முடியாது என்பதற்கு ஏற்ப, ‘‘கடமையைச் செய்யாமல் உரிமையைப் பெற முடியாது’’ என்பதை, இந்திய சாசனத்தை தொகுத்த நம் வரைவுக்குழு உறுப்பினர்கள் உணரவில்லை என்பதில் வியப்பேதும் இல்லை.

மாறாக, இதைக்கூட உணராதவர்களா இந்திய சாசனத்தை உருவாக்கும் குழுவில் இருந்தார்கள் என்ற கேள்வி எழும்போது அவர்களைப் பற்றிய மதிப்பு தானாகவே குறைவதை தவிர்க்க முடியவில்லை. இதுவே இப்போது உங்களின் நிலையாகவும் இருக்கும்.

ஆமாம், இந்திய குடிமக்களின் கடமை குறித்து, முதலில் உருவாக்கப்பட்ட இந்திய சாசனத்தில் எதுவுமே சொல்லவில்லை. பின் இந்திய சாசனத்தில் 1976 ஆம் ஆண்டில் செய்யப்பட்ட 42 வது திருத்தத்தில் 51அ-வாகவே சேர்க்கப்பட்டு உள்ளது.

இப்படி இதுவரை 103 முறை திருத்தி உள்ளார்கள். ஒருமுறை திருத்தினார்கள் என்றால், அதில் ஒரேயொரு திருத்தம்தான் செய்தார்கள் என்று பொருள் இல்லை. ஒன்றுக்கும் மேற்பட்டு ஓராயிரம், ஒரு இலட்ச திருத்தங்களை கூட செய்யலாம். இப்படி திருத்தியதை பின் மீண்டும் வேறொரு திருத்தத்தில், திருத்தி குழம்பி இருக்கிறார்கள். 

இக்குறைபாடுகள் எல்லாவற்றுக்குமே ஆங்கிலேயர்களின் அற்ப வழியில், போதிய முதிர்ச்சி இல்லாதவர்கள் எல்லாம் இந்திய சாசனத்தை உருவாக்குவதில் உடன்பாடு இல்லாமல், காந்தி விலகி இருந்ததே முக்கிய காரணமாக இருந்து இருக்கலாம் என்பதை விளங்கிக் கொள்ள, பாராளுமன்றம் குறித்த காந்தியாரின் இக்கருத்தே இன்று நாட்டில் நடந்துக் கொண்டிருக்கிறது என்பதற்கு போதுமான ஆதாரமாக இருக்கிறது. 

இதன்படி பார்த்தால், காந்தி முழுமையாக உணர்ந்து எழுதிய மற்றும் அப்படி, தான் எழுதியதில் தன்னுடைய பெண் நண்பி ஒருவர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, அதில் ஒரேயொரு வார்த்தையை மட்டுமே திருத்திய இந்திய சுயராஜியம் நூலின் கருத்துக்களை நிறைவேற்றும் படியே இந்திய சாசனம் அறவழியில் அமைந்திருந்திருக்கனும். 

ஆனால், அப்படி இல்லாமல் போனது, முதிர்ச்சி இல்லாத இந்தியர்களால், இந்தியர்களுக்கு ஏற்பட்ட துரதிருஷ்டமே! 


ஆமாம், இந்திய சாசன நிர்ணய சபையில் உள்ள அறிவாளிகள் அனைவரையும், இறைவன் முட்டாளாக்கி விட வேண்டும் என்றே காந்தி கூறியதாக.., 

மதுரை சர்வோதையா இலக்கியப் பண்ணை வெளியிட்ட ஏப்ரல் 2001 இல் வெளியிட்ட, ‘‘அரசியல் அமைப்புச் சட்டம் மறு பரிசீலனை தேவையா?’’ என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள சிறு நூலில் சொல்லப்பட்டு உள்ளது. (முதலிரண்டு செய்திகளும் கூட, இந்த நூலில் இருந்துதான் பதிவிடப்பட்டு உள்ளது.)

இதோ உங்களின் பார்வைக்கு... ஆனால், காந்தியே இந்திய சாசன வரைவுக் குழுவிற்கு ஆதரவு தந்ததுபோல, திட்டமிட்ட ஒரு மாயையை அரசியல் காழ்ப்புணர்ச்சி மற்றும் களவாணித்தன ஆதாயங்களுக்காக அய்யோக்கியர்கள் ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள். 

இதில் மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது, இந்திய சாசன வரைவுக் குழுவில் இடம் பெறாத முக்கியத் தலைவர்கள் காந்தியும், முகமது அலி ஜின்னாவும். ஆனால், இவர்களே இருநாடுகளின் தேசத்தந்தைகள்!

மொத்தத்தில் இந்தியாவுக்கே அடிப்படை சாசன சட்டமாகவும், அடிப்படை சட்டங்கள் ஐந்தில் முதன்மையானதாகவும் விளங்கும் இந்திய சாசனமே இவ்வளவு கேடுகளோடுதான் தொகுக்கப்பட்டது என்றால், மற்றச் சட்டங்களைப் பற்றி சொல்லவும் வேண்டுமா?

அதாவது ஆங்கிலேயர் காலத்தில் அவர்கள் இயற்றிய சட்டங்களும் அப்படியே அமலில் இருக்கின்றன. அவர்கள் போன பின் இயற்றப்பட்ட சட்டங்கள் எல்லாம் கூட மற்ற நாடுகளின் சட்டங்களை காப்பியடித்து தான் என்று துணிந்து சொல்லலாம்.

இதற்கு நல்லதொரு உண்மையாக திரு. வாரண்ட் பாலா அவர்களே, தற்போது அமலில் உள்ள தொழிலாளர் நலன் சார்ந்த சட்டம் 1947 ஆனது, சோவியத் ரஷ்யாவை முன்மாதிரியாகக் கொண்டது என்பதையும் சட்ட அறிவுக்களஞ்சியம் நூலில் துணிந்து பதிவு செய்துள்ளாரே!

மொத்தத்தில், நமக்கு எந்தவொரு சட்டத்தையும் சுயமாக எழுதும் திறன் இல்லவே இல்லை. மாறாக, ஏதோவொரு நாட்டின் சட்டங்களையாவது முன் மாதிரிகளாக கொண்டு, நமக்கு ஏற்ற வகையில் தொகுத்துக் கொள்ளும் திருட்டுத் திறன்மட்டுமே உண்டு. 

ஆமாம், இப்படி சட்டங்களில் என்னென்ன திருட்டுத் தனங்கள் யார் யாரால் செய்யப்படுகின்றன என்பதில் தொடங்கி, எந்த சட்டம் செல்லும், எந்த சட்டம் செல்லாது என்பதை கூட நாமே தீர்மானிக்கும் அளவிற்கு சரியானப் புரிதலை பெற வேண்டுமென விரும்புவோருக்கு, திரு. வாரண்ட் பாலா அவர்களின் சட்ட விழிப்பறிவுணர்வு நூல்களே, நல்லதொரு வழிகாட்டி!

பிற்சேர்க்கை தேதி: 08-05-2019

முன் கட்டுரையைப் போலவே, இன்று 08-5-2019 இந்திய சாசனத்தை தொகுத்ததில் பங்காற்றிய பதினைந்துப் பெண்களைப் பற்றிய செய்தியை தினமணி நாளிதழ் வெளியிட்டு உள்ளது.


பிற்சேர்க்கை நாள்: 13-05-2019

உலகில் உள்ள சாசனங்கள் (அரசியலமைப்பு) எல்லாம் ஒரே குட்டையில் விழுந்த மட்டைகள்தான் என்பதற்கு இதுவும் ஒரு நற்சான்று!


ஆமாம், அரசின் கொள்கை குறித்து எந்த நீதிமன்றத்திலும் கேள்வி எழுப்ப முடியாது என்ற இந்திய சாசன கோட்பாடு 37 இல் உள்ளது, இலங்கை சாசனத்தில் கோட்பாடு 17 உள்ளது. அவ்வளவுதான்!

ஆனால், இதுபற்றி அடிப்படை அறிவே இல்லாத மடையர்கள், இந்திய சாசனத்தை சுயமாக எழுதினார்கள், சிற்பிகளாய் செதுக்கினார்கள் என்றெல்லாம், உண்மையைத் திரித்து பீலா விட்டுக் கொண்டு திரிகிறார்கள்.

பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

Thursday, April 18, 2019

மகாத்மா போதித்த வாக்குரிமை!
மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்தநாளை கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்த ஆண்டில், மிகப் பொருத்தமாக மக்களவைத் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்று நாம் எதையெல்லாம் சரியில்லை என்றும், சீர்திருத்தம் செய்ய வேண்டுமென்றும் சொல்லிக் கொண்டு இருக்கிறோமோ, அதையெல்லாம்  1908-1909-ஆம் ஆண்டுகளிலேயே  இந்தியத் தன்னாட்சி/இந்திய சுயராஜ்ஜியம் என்ற தொகுப்பு நூலில் தீர்க்க தரிசனத்துடன் மகாத்மா காந்தி எழுதியிருக்கிறார். அதில் அவர் என்னவெல்லாம் நடக்கும் என்று சொல்லி இருக்கிறாரோ, அதுதான் இன்று நாட்டில் நடந்துகொண்டிருக்கிறது. 

மக்களவைத் தேர்தல் நடக்க இருக்கும் இந்தத் தருணத்தில், நாடாளுமன்றம் குறித்து மகாத்மா காந்தி கூறிய வரிகள் இவைதாம்: ஆங்கில அரசாங்க முறை பரிதாபத்துக்குரியது. இது நாம் விரும்பத்தக்கதோ, தகுதியானதோ அன்று என்பதால், இப்படியொரு நிலைமை இந்தியாவுக்கு என்றுமே வந்துவிடக் கூடாது என்று கடவுளை வேண்டுகிறேன் என்று ஆரம்பித்து, பிரிட்டனைப் போன்று இந்தியா நடப்பதென்று ஆரம்பித்துவிட்டால், நமது நாடு அழிவுறும் என்பது என்னுடைய உறுதியான நம்பிக்கை என்று முடிக்கிறார் என்றால், என்னென்ன சொல்லி இருப்பார் என்பதை யோசித்துக் கொள்ளுங்கள்.

ஒரு பக்கம் நாடு வளர்ச்சி அடைந்து வருவதாகக் காட்டப்பட்டாலும்கூட, இதற்கெல்லாம் அடிப்படையில் தேர்தலின் மூலம் மக்களாட்சிதான் நடக்கிறதா என்பதை நாம் புரிந்துகொண்டால் போதும். மகாத்மா காந்தி போதித்த அறவழியில், சட்டப்படியான வாக்குரிமையைச் செலுத்தி மக்களே மக்களுக்கான மகத்தான மக்களாட்சியை மலரச் செய்ய முடியும்.

இதற்கு முன்பாக, தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் ஆட்சி மக்களாட்சியாக இருக்கிறதா என்பதை நம் எளிய புரிதலுக்காக மேலோட்டமாகப் பார்த்து விடுவோம்.  ஒரு தொகுதியில், நான்கு வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள் என்றும், அந்தத் தொகுதியில் வாக்குரிமை உள்ள 100 பேரும் தங்களின் வாக்குரிமையை ஒவ்வொரு வேட்பாளருக்கும் முறையே, 27; 25; 24; 24 எனச் செலுத்துவதாகக் கருத்தில் கொள்வோம்.  இதில் யார் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுகிறார் என்றால், எந்தவிதமான சந்தேகத்துக்கும் இடமின்றி 27 வாக்காளர்களின் வாக்குரிமையைப் பெற்ற வேட்பாளர்தான் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுகிறார். 

ஆனால், உண்மையில் வெற்றி பெற்ற வேட்பாளருக்கு எதிராக மற்ற மூன்று வேட்பாளருக்கும் மொத்தமாக 73 வாக்குகளை அந்தத் தொகுதியின் வாக்காளர்கள் செலுத்தி உள்ளனர் அல்லவா?  இப்படி அதிகபட்ச எதிர்ப்போடும், குறைந்தபட்ச ஆதரவோடும் ஒரு வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்படுவது எப்படி மக்களாட்சியாக இருக்கும்? 

இது தவிர, ஒவ்வொரு கட்சிக்கும் என தனித்தனி கொள்கைகள் இருந்தாலும்கூட, தேர்தல் என்று வந்தால் மட்டும் எப்படி கூட்டுச் சேர்ந்து, கூட்டணி அமைத்துப் போட்டிப் போட முடியும்?

போட்டி என்றால், வயது அல்லது எடை அல்லது பிற ஏதாவது ஒரு தகுதியின் அடிப்படையில் இருக்க வேண்டும் என்பதே இயற்கை நியதி. ஆனால், தேர்தலில் மட்டும் ஒரு கட்சியின் தலைவராக அறியப்படுபவரை எதிர்த்து, எதிர்க்கட்சித் தலைவர் போட்டி போடாமல், அந்தக் கட்சியில் உள்ள யாரோ ஒருவர் போட்டி போடுவது எப்படி நியாயமாகும்? 

இப்படிப் பல காரணங்களை விவரித்துக் கொண்டே போகலாம். எனினும், எளிய புரிதலுக்கு மேற்சொன்ன முத்தாய்ப்பான மூன்றே போதும். இப்படி தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளால் மக்களாட்சி நடைபெறவில்லை. மாறாக, முன்பே சொன்னபடி அதிகபட்ச எதிர்ப்போடு தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளால் மக்களுக்கு எதிரான ஆட்சியே நடைபெறுகிறது.

அப்படியானால், மகாத்மா காந்தி விரும்பியபடி, மக்கள் விரும்பும் மக்களாட்சி அமைய வழிதான் என்னவென்றால், இனி அரசியல்வாதிகளை நம்பிப் பலனில்லை என்று மகாத்மா காந்தி போதித்த அறத்தின் வழியில், நோட்டா என்ற சட்டப்படியான வாக்குரிமையை நாடுவதே ஆகும்.

நோட்டா என்ற வாக்கு மட்டுமே, இனி போராட்டம் ஏதுமின்றி ஆட்சியாளர்களை மக்கள் துளைத்தெடுக்க உதவும். மக்களின் கைகளில் காலம் கனிவுடன் தந்துள்ள ஈடு இணையற்ற சட்டப்படியான தோட்டாவே நோட்டா என்னும் வாக்கு. இதை நன்றாகப் புரிந்து கொண்டவர்கள், மக்களுக்கு எளிதில் புரிந்து விடக்கூடாது என்பதற்காகவே நோட்டாவுக்கு வாக்களிப்பதால் எந்தப் பலனும் இல்லை என்ற பொய்யான பரப்புரையைத் திட்டமிட்டுச் செய்து வருகின்றனர்.

இவர்கள் பொய் பரப்புரை செய்வதுபோல, ஒரு தொகுதியில் வாக்குரிமை பெற்றுள்ள 1,110 பேரில், வேட்பாளர்களின் மீதுள்ள அதிருப்தியின் காரணமாக நோட்டாவுக்கு 1,000 பேர் வாக்குகளை செலுத்திவிட, 100 பேர் வாக்குரிமையைச் செலுத்தாமல் விட்டுவிட, மீதமுள்ள 10 வாக்காளர்கள் மட்டும் வேட்பாளர்களுக்கு வாக்கைச் செலுத்தியதாகக் கொள்வோம்.  இதில் செலுத்தப்பட்ட 10 வாக்குகளில், எந்த வேட்பாளர் அதிக வாக்குகளைப் பெற்றுள்ளாரோ அவரே வெற்றி பெற்றவர் என அறிவிக்கப்படுவார் என்று பரப்புரை செய்கிறார்கள். இது முற்றிலும் தவறு.

ஒரு தொகுதியில் பதிவாகும் வாக்குகளில் ஆறில் ஒரு பங்கு வாக்கைப் பெறாத  வேட்பாளர்கள், தன்னுடைய வைப்புத் தொகையை இழந்து விடுவார்கள் என்பது நாம் அறிந்ததே. இந்த வகையில், வாக்கு எண்ணிக்கையில் நோட்டாவும் செல்லத்தக்க வாக்காக கணக்கிடப்படுவதால், இப்போது அமலில் உள்ள மக்கள் பிரதிநிதித்துவச் சட்ட விதிகளின்படி, மொத்தம் பதிவான 1,010 செல்லத்தக்க வாக்குகளில் குறைந்தது 168 வாக்குகளைப் பெறாதவர்கள் அத்தனை பேரும் வைப்புத் தொகையை இழந்து தோற்றவர்களாகிப் போவார்களே ஒழிய, சட்டப்படி ஒருபோதும் வெற்றி பெற்றவர்கள் ஆகவே முடியாது. 

மேலும், இதைவிடச் சிறப்பான செயல்பாடாக ஒட்டுமொத்தமாக பதிவான வாக்குகளில் 6 சதவீத வாக்கைப் பெறாத அரசியல்வாதிகளின் சின்னங்களும் முடக்கப்படும் எனத் தெரிகிறது.

இதனால், வேட்பாளர்களின் தகுதியைவிட, முக்கியமாகக் கருதும் சின்னங்களை வைத்து நடத்தும் ஆபத்தான அரசியலுக்கும் முற்றுப்புள்ளி வைத்ததாகி விடும். இப்படி ஒரே வாக்குரிமையில் எத்தனை எத்தனையோ மறுமலர்ச்சி மாற்றங்களை நம் வாக்கால் மட்டுமே உருவாக்க முடியும். 

ஆம். எப்போதெல்லாம் மகத்தான மக்களாட்சி மலர வேண்டுமோ, அப்போதெல்லாம் இதை நாமே செய்ய முடியும் என்பதன் மூலம், உண்மையான அரசாட்சி அதிகாரம் அரசியல்வாதிகளிடம் இல்லை; நம்மிடமே இருக்கிறது என்று வரலாற்றை ஒவ்வொரு முறையும் மக்களே புதிதாக மாற்றி எழுதுவதன் மூலம், அரசியல்வாதிகளுக்கு உணர்த்தி உறுதி செய்ய முடியும். 

ஆகவே, காலம் நம்முடைய கையில் அளித்துள்ள நோட்டா எவ்வளவு வலிமையானது என்பதை உணர்ந்து செயல்பட்டு, அறத்தின் துணையுடன், நாம் விரும்பும் மகத்தான மக்களாட்சியை மலரச் செய்ய வேண்டும். 

உண்மையில், 49-ஓ மற்றும் நோட்டா வாக்குகள் அறிமுகமானதிலிருந்து இதுவரை போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களைவிட அவை அதிக வாக்குகளைப் பெற்றதில்லை. அதனால், நோட்டாவின் வெற்றியில் இதுவரை சட்டச் சிக்கல்கள் எதுவும் எழவில்லை.  அதாவது, வேட்பாளர்களைவிட நோட்டாவுக்கு அதிகமானோர் வாக்களித்தால், வெற்றி பெற்றது யார் என்று இதுவரை இல்லாத புது சட்டச் சிக்கல்கள் எழும். 

இதற்கு சட்டப் பிரிவுகளின் அடிப்படையில் நல்லதொரு தீர்வே கிடைக்கும் என்று அறுதியிட்டுச் சொல்ல முடியுமே தவிர, என்ன தீர்வு கிடைக்கும் என்பதை இப்போது நான் சொல்ல முடியாது. நான் மட்டுமல்ல; தேர்தல் ஆணையம் உள்பட வேறு யாராலும்கூட சொல்ல முடியாது.

ஏனெனில், இப்படியொரு சட்டப் பிரச்னை இனிமேல்தான் வர வாய்ப்புள்ளது என்பதால், அதற்கான சட்டமும் தீர்வும்கூட, அதன் பின்னரே வரவேண்டும்.

எனவே, அவர்கள் சார்ந்துள்ள சின்னத்துக்கு அரசியல்வாதிகள் வாக்கு சேகரிப்பதுபோல, நோட்டாவுக்காக அல்ல, மகத்தான மக்களாட்சி மலர்வதற்காக மக்களில் யார் வேண்டுமானாலும், இந்தப் பிரசாரத்தை சட்டப்படி செய்யலாம் என்பதை 2009-ஆம் ஆண்டே தேர்தல் ஆணையத்திடமிருந்து கடிதமாகவே பெற்றுள்ளோம். 

எனவே, நீங்கள் வேட்பாளர்களை விரும்பாத நிலையில் நன்கு சிந்தித்து அறவழி நோட்டாவுக்கு வாக்களித்தால், முதலில் உங்களின் வாக்கை கள்ள வாக்காக வேறு யாரும் பதிவு செய்ய முடியாதபடி தடுத்த புண்ணியத்துக்கு உள்ளாவீர்கள். 

இப்படி அறத்தின் வழியில் அடுத்தவர்களிடமும் ஆதரவு திரட்டி, அனைத்து அல்லது பெரும்பான்மை வாக்குகளை நோட்டாவில் விழச் செய்வதன் மூலம், அரசியல்வாதிகளை தேர்தலில் வீழ்த்தி, அறத்தின் துணையுடன் மகத்தான மக்களாட்சி மலர பெரிதும் துணை நிற்க முடியும். 

எனவே, நோட்டா  என்பது மகாத்மா காந்தி போதித்த சட்டப்படியான அறவழி என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்து தவறாமல் வாக்களியுங்கள். ஒவ்வொருவருக்கும் உணர்த்தி 100 சதவீதம் வாக்களிக்க வையுங்கள்.

கட்டுரையாளர்: சட்ட ஆராய்ச்சியாளர்.

பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

Tuesday, April 16, 2019

நோட்டா என்ற தோட்டா... ஞாநியின் நினைவாக!மறைந்த எழுத்தாளர்கள் ஞாநி மற்றும் இந்திய ஆட்சிப் பணி ஊழியராக இருந்த ஆ.கி.வேங்கடசுப்பிரமணியன் ஆகியோர், இப்போதைய நோட்டா, முந்தைய 49-ஓ ஓட்டுக்காக செய்த காரியங்கள் குறித்து, நோட்டா (ஓ, போ)ட்டால் மட்டுமே, மகத்தான மக்களாட்சிக்கு அறவழிப் பிறக்கும்! என்ற கட்டுரையில் எழுதி உள்ளேன். 

எங்களுக்குள் நல்லதொரு அறிமுக நட்பு உண்டு என்றாலுங்கூட, மிக நெருங்கிய நட்பு கிடையாது. இதிலும் ஆ.கி.வே அவர்களை விட, ஞாநியிடம் குறைவே. ஆம், நேரில் இரு முறை சந்தித்ததாகவும், உலாப்பேசியில் இரண்டு முறை பேசியதாகவுமே நினைவு.

ஆனால், ஆ.கி.வேவை பலமுறை நேரில் சந்தித்து பேசி இருக்கிறேன். குடிமக்கள் முரசு என்று அவர் எழுதி வந்த மாத இதழில், நீதியைத்தேடி... குற்ற விசாரணைகள் நூலுக்கு மதிப்புரை எழுதி எங்களை வெளிப்படையாகவே பாராட்டி எழுதியதோடு, சுமார் 250 பிரிதிகளை வாங்கி, அவர் நடத்தி வந்த மக்கள் மையம் என்ற அமைப்புக்கு கொடுத்தார். இதனை அவர் எழுதிய மதிப்புரையிலேயே தெரிவித்தும் உள்ளார். எனக்கு முன்பாகவே அவர் உலாப்பேசியை உபயோகிக்காதவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
49-ஓ ஓட்டுக்கு நோட்டா என்ன பொத்தானை வைக்க வேண்டுமென உச்சநீதிமன்ற நிதிபதிகள் 2013 இல் அறிவித்தபோது, பொத்தான் வந்து விட்டதால், இனி எல்லோரும் தைரியமாக வாக்களிப்பர்; நாம் கையிலெடுத்த வேலை முடிந்து விட்டது என்று எண்ணியும், அந்த நேரத்தில் ‘‘கடமையைச் செய்! பலன் கிடைக்கும்’’ நூலை மிகுந்த ஈடுபாட்டுடன் எழுதிக் கொண்டிருந்ததாலும், இதற்கிடையில் இப்ப என்ன பண்ணுவ என்ற கட்டுரையில் நோட்டா கடந்து வந்த பாதையை சொல்லிவிட்டு, மற்ற எதையும் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டேன்.

ஆகையால், அந்த  சமயத்தில் ஞாநி இப்படியொரு கட்டுரை, 01-10-2013 அன்று தமிழ் இந்து நாளிதழில் எழுதியது எனக்கு தெரியவில்லை. இன்று 16-04-2019 அன்று நோட்டா குறித்து என்னென்ன தகவல்கள் உலாவுகின்றன என்பதை இணையத்தில் தேடிய போது, இந்த கட்டுரை கண்ணில் சிக்கியது. 


இதில், நோட்டா (ஓ, போ)ட்டால் மட்டுமே, மகத்தான மக்களாட்சிக்கு அறவழிப் பிறக்கும்! என்ற கட்டுரையில் நான் சொல்லியுள்ளபடி, ‘‘நோட்டா அதிக வாக்குகளை வாங்கி சட்டப் பிரச்சினை எழுந்தால்தான் தீர்வு கிடைக்கும்’’ என்பதை அவரும் ஆறு வருடங்களுக்கு முன்பே எழுதி உள்ளார். 

மேலும், நான் இப்போது சிந்திக்காத, இன்னும் செய்யப்பட வேண்டிய சீர்த்திருத்தங்களைக் குறித்தும் எழுதி உள்ளார். இதனைப் பகிர்ந்து, பாதுகாக்க வேண்டும் என்பதற்காக அப்படியே பகிர்ந்து உள்ளேன். இது அவரெழுதிய அசல் இணைய முகவரி 

**************************

10 ஆண்டுகளுக்கும் மேலாக நாடு முழுவதும் சமூக ஆர்வலர்கள் அயராமல் போராடியதற்கான வெற்றி இப்போது உச்ச நீதிமன்றத் தீர்ப்பாகக் கிடைத்திருக்கிறது. எல்லா வேட்பாளர்களையும் நிராகரிப்பதற்கான உரிமை மக்களுக்கு உண்டு; அதை ரகசியமாகத் தெரிவிக்கும் வசதியும் அவர்கள் உரிமை என்று தெளிவாகச் சொல்லிவிட்டது நீதிமன்றம்.

இதை வர விடாமல், அரசு மட்டத்திலும் நீதிமன்றத்திலும் இழுத்தடித்த கட்சிகள் எல்லாம் இப்போது இதை வரவேற்பதாகப் பாவனை செய்கின்றன. முன்னர் வேட்பாளர்கள் சொத்துக் கணக்கு தெரிவிக்க வேண்டும் என்ற விதியைத் தேர்தல் ஆணையம் கொண்டுவந்தபோது, எல்லாக் கட்சிகளும் அதை எதிர்த்தன. ஆனால், அந்த விதியும் உச்ச நீதிமன்ற உத்தரவால்தான் நடைமுறைக்கு வந்தது.

முன்பு சமூக ஆர்வலர்கள் ‘49 ஓ’என்று சுருக்கமாகக் குறிப்பிட்டு வந்த நிராகரிக்கும் உரிமைக்கு இப்போது நீதிமன்ற உத்தரவின் பின் புதுப் பெயர் ‘நோட்டா’. மின்னணு இயந்திரத்தில் வேட்பாளர் பட்டியல் வரிசையில் கடைசியாக ‘மேற்கண்ட யாரும் இல்லை’(நன் ஆஃப் தி அபவ்) என்ற வரியும் அதற்கான பொத்தானும் இடம்பெறப்போகின்றன. அதன் சுருக்கமே ‘நோட்டா’. அதாவது, சுருக்கமாகச் சொன்னால் என்னிடம் நோட்டை நீட்டி, என் ஓட்டை வாங்க முயற்சிக்கும் வேட்பாளர்களுக்கெல்லாம் நான் ‘நோட்டா’போடலாம். ஆக, ‘நோட்டா’மக்கள் கையில் கிட்டியிருக்கும் தோட்டா.

இந்தப் புதிய உத்தரவால் என்ன பயன்? ‘‘தேர்தல் ஜனநாயகத்தில் இருக்கும் எல்லாப் பிரச்சினைகளும் தீர்ந்துவிடுமா?’’ என்று சிலர் கேட்கிறார்கள். எல்லா நோய்க்குமான ஒற்றை மருந்து உலகில் எங்கும் கிடையாது. ஒவ்வொரு மருந்தும் ஒரு சில நோய்களைத் தீர்க்க உதவும். அப்படித்தான் இதுவும்.

முதல் விஷயம், இனி இந்த நிராகரிப்பு ஓட்டுகள் கணக்கில் வரும். ‘49 ஓ’-வின் கீழ் போட்ட ஓட்டுகள் எல்லாம் மொத்தமாக செல்லத்தக்க ஓட்டுகள் பட்டியலிலேயே சேராதவை. ஆனால், இப்போது நீதிமன்றம் நிராகரிக்கும் உரிமை வாக்காளர்களின் அடிப்படை உரிமை என்று சொல்லியிருப்பதால், அந்த ஒட்டுகளை எண்ணி செல்லத் தக்கவையாகக் கருதாவிட்டால், உரிமை முழுமை அடையாது. அப்படி எண்ணியதில் நிராகரித்தோரின் வாக்கு எண்ணிக்கை எல்லா வேட்பாளர்களும் பெற்ற வாக்குகளுக்கும் சமமாகவோ அதிகமாகவோ வந்துவிட்டால், வேட்பாளர்களில் அதிக வாக்கு பெற்றவரைவிட இந்த வாக்கல்லவா அதிகமாக இருக்கும். அவரை ஜெயித்தார் என்று அறிவிப்பார்களா, மாட்டார்களா, தேர்தல் செல்லாது என மறு தேர்தலுக்கு உத்தரவிடுவார்களா? இந்த விஷயங்களைப் பற்றி நீதிமன்றம் எதுவும் சொல்லவில்லையே என்று சிலர் கேட்கிறார்கள்.

நீதிமன்றம் ஊகங்களின் அடிப்படையில் எதையும் சொல்ல முடியாது. எனவே, சொல்லாதது சரி. சட்டச் சிக்கல் வந்தால்தான் எதுவும் சொல்ல முடியும். ஆனால், அப்படிப்பட்ட சட்டச் சிக்கல் வர வேண்டும் என்றுதான் என்னைப் போன்ற ஆர்வலர்கள் விரும்புகிறோம். அப்போதுதான் இது அடுத்த கட்டத்துக்கு நகரும்.

அப்போது என்ன செய்ய வேண்டும்? நிராகரிப்பு ஓட்டுகள் இதர வேட்பாளர்களின் ஓட்டுகளைவிட அதிகமாக இருந்தால், மறு தேர்தலுக்குத்தான் உத்தரவிட வேண்டும். அந்தத் தேர்தலில், முந்தைய நிராகரிக்கப்பட்ட வேட்பாளர்கள் மறுபடியும் நிற்கத் தகுதி இல்லை. அவர்கள் நிராகரிக்கப்பட்டவர்கள்.

இதைச் செய்யச் சட்டத் திருத்தம் தேவையெனச் சில ஆர்வலர்கள் கருதுகிறார்கள். நான் அப்படிக் கருதவில்லை. தேர்தல் ஆணையம் தனக்குள்ள அதிகாரத்தின் கீழ் இப்போதே இந்த விதிகளை அறிவித்துவிடலாம் என்பது என் கருத்து. ஏனென்றால், ஒவ்வொரு தொகுதியிலும் வாக்கு எண்ணிக்கை முடிந்ததும், வெற்றி - தோல்விகளை அறிவிக்கும் முழு உரிமை ஆணையத்துடையதுதான். முடிவை அறிவிக்காமல் தொகுதியில் பல பகுதிகளில் மறு வாக்குப்பதிவு நடத்தும் உரிமையெல்லாம் ஏற்கெனவே ஆணையத்துக்கு உள்ளது. இப்படியெல்லாம் செய்தால் வீண் செலவுதானே என்று நாட்டில் இதர துறைகளில் நடக்கும் பிரமாண்டமான வீண் செலவுகள், ஊழல்கள் பற்றியெல்லாம் கவலைப்படாத சிலருக்கு இதைக் குறித்து மட்டும் கவலை வருகிறது.

முதலில் இப்படிப் பல தொகுதிகளில் மறு தேர்தல் நடத்துவதற்கான வாய்ப்பு வராது. காரணம், மக்களுக்கு இப்போது ரகசிய ஓட்டின் மூலம் எல்லாரையும் நிராகரிக்கும் உரிமை வந்துவிட்டதால், ஒவ்வொரு கட்சியும் முன் எப்போதையும்விட தங்கள் வேட்பாளர் தேர்வில் எச்சரிக்கையாக இருப்பார்கள். கட்டாயம் கிரிமினல்களை நிறுத்த முடியாது. பெரும் ஊழல் ஆசாமிகளை நிறுத்த முடியாது. உள்ளூர் ரௌடிகளை நிறுத்த முடியாது. சொந்தக் கட்சிக்காரர்களும் கட்சி விசுவாசிகளும்கூட அத்தகைய வேட்பாளருக்கு எதிராக நிராகரிப்புப் பொத்தானைப் பயன்படுத்திவிட முடியும்.

கட்சிகள் முன்பைவிட தரமான வேட்பாளர்களை நிறுத்தச் செய்வதுதான் நிராகரிப்பு உரிமையின் முதல் பெரும் பயனாக இருக்கும். இது ஒரே தேர்தலில் நிகழாவிட்டாலும் படிப்படியாக நிகழும். அப்படித் தரமான வேட்பாளர்கள் நிறுத்தப்படும்போது அடுத்த பயனாக,தேர்தலில் விரக்தியால் பங்கேற்காமல் இருப்போரெல்லாம் கலந்துகொள்ளும் ஊக்கம் ஏற்படும். ‘நோட்டா’-வைத் தொடர்ந்து செய்யப்பட வேண்டிய தேர்தல் சீர்திருத்தங்கள் பல காத்திருக்கின்றன. தேர்தல் செலவைச் சமமாக்குவது, கட்சிகளின் கணக்குகளைத் தணிக்கை செய்வது, உட்கட்சித் தேர்தல்களைத் தேர்தல் ஆணையமே நடத்துவது, விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ முறைக்கு மாறுவது, பிரதிநிதிகளைப் பதவியிலிருந்து திரும்பப் பெறும் மக்கள் அதிகாரம், கொள்கை விஷயங்களில் மக்களிடம் நேரடியான கருத்து வாக்கெடுப்புச் சட்டம் என்று நீண்ட பட்டியல் உள்ளது. இவையெல்லாம் இந்தியாவில் நடக்குமா என்று ஏங்குவோர் பலருண்டு.

மறைந்த சமூக ஆர்வலர் அ.கி. வேங்கடசுப்பிரமணியன் எனக்கு ‘49 ஓ’-வை அறிமுகப்படுத்தி 10 ஆண்டுகளுக்கு முன் இதற்காகப் பிரச்சாரத்தில் நான் ஈடுபடத் தொடங்கியபோது இதெல்லாம் என் வாழ்நாளில் நடக்குமா என்ற ஏக்கத்துடனேதான் ஈடுபட வேண்டியிருந்தது. ஆனால், இதோ நடந்துவிட்டது. கூடவே, எல்லாமே 10 ஆண்டுகளில் நடந்துவிடும் என்ற நம்பிக்கையும் இப்போது வந்திருக்கிறது!

ஞாநி, மூத்த பத்திரிகையாளர் - தொடர்புக்கு: gnanisankaran@gmail.com

பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

Sunday, April 14, 2019

இனி இப்படியெல்லாம் தமிழ்ப் புத்தாண்டை கொண்டாடுக!‘‘தீதும், நன்றும் பிறர்தர வாரா’’ என்பது நம் தமிழ் முன்னோர்களின் முதுமொழி!

இதற்கேற்ப இன்று தமிழும், தமிழனும் தரம் தாழ்ந்து தலைகுனிந்து நிற்பதற்கு காரணமும், தமிழர்களே அன்றி மற்றவர்கள் அல்ல என்பதை தங்களின் வசதிக்காக மறைத்து, மற்றவர்கள் மீது குற்றம் சுமத்துவதையே வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

இதை மறுப்பவர்கள், முன்னோர்களின் முதுமொழிதான் தவறென்று சொல்ல வேண்டும். ஆனால், அப்படியும் சொல்வதில்லை.

எங்களுக்கு மட்டுமல்ல; சித்திரை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டாக நெடும் காலமாக கொண்டாடப்பட்டு வருகிறது என்பது நாம் எல்லோரும் நன்கு அறிந்ததே! இதனை நம்மை விட வயதில் மிக மூத்தப் பெரியவர்களும் உறுதி செய்கிறார்கள். அவர்களுக்கு அவர்களின் முன்னோர்கள் உறுதி செய்ததன் மூலம், இதன் பழம்பெரும் தொடர்பு என்னவென்று தெரிகிறது.

நமக்கு தெரிய தமிழ்ப் புத்தாண்டு சித்திரை முதல் நாளா அல்லது தை முதல் நாளா என்ற சர்ச்சை முதன் முதலாகவும், கடைசியாகவும் கருணாநிதி முத(லை, ல்) அமைச்சராக இருந்த காலத்தில்தான் உருவானது; அல்ல அல்ல திட்டமிட்டு உருவாக்கப்பட்டது என்றே கருத வேண்டி உள்ளது.

ஆமாம், இதற்கு முன்பாக இப்படியொரு சர்ச்சை இருந்ததற்கான அறிகுறிகளே இல்லை என்பதால், நாங்களே தமிழர்கள், தமிழர்களின் தலைவர்கள் என்று சொல்லிக் கொள்ள முயன்ற தற்குறிகளின் திட்டமிட்ட செயலே தீராத சர்ச்சையாக இருக்கிறது.

உண்மையில், சித்திரை முதல்திருநாளே தமிழர்களின் வருடப்பிறப்பு என்றால், இதை பெரியாரும், அண்ணாவும் அவர்கள் வாழ்ந்த காலத்திலேயே அறிவித்து இருப்பார்களே?

அண்ணாவுக்குப் பின், அத்தனை ஆண்டுகள் முதல் அமைச்சராக இருந்த கருணாநிதியும் அப்போதே அறிவிக்காமல் கடைசியாக இருந்தபோது அறிவிக்க காரணம் ‘‘தான் சொல்வதே என்ற தற்குறித்தனம் தானேயன்றி வேறு காரணம் எதுவும் இருப்பதாக தெரியவில்லை’’.

எது எப்படி இருப்பினும், நாங்களே தமிழர்கள், தமிழைக் காப்பாற்ற வந்தவர்கள் என்று சொல்லிக் கொண்டு திரியும் தற்குறிகளை தவிர, மற்றபடி உலகெங்கிலும் உள்ளத் தமிழர்கள் அனைவரும் வழி வழியாகவும், வழக்கம் போலவும் சித்திரை முதல் நாளையே ஒவ்வொரு ஆண்டும் தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாடுகிறார்கள்.

தமிழக சட்ட சபையில் தலைமை அரசியல் வியாதியாக இருப்பது ஆரியனா அல்லது திராவிடனா அல்லது அவரவர்களது ஆதரவைப் பெற்றவர்களா என்பதைப் பொறுத்து, தமிழ் வருடப்பிறப்பு மாறிமாறி கொண்டாடப்படுகிறது என்றால்..,

இப்படிப்பட்ட கேவலமான ஒரு வருடப்பிறப்பு கொண்டாட்டம் நமக்கு தேவைதானா என்ற நியாயமான கேள்வி நடுநிலையாளர்கள் எல்லோரது மனதிலும் இருந்தாலுங்கூட, ‘‘நாங்களே தமிழர்கள் என்று சொல்லிக் கொள்ளும் தற்குறிகள், எங்கே நம்மை தமிழர் விரோதி என்று சொல்லி விடுவார்களே’’ என்ற எண்ணத்திலேயே தானுன்டு, தன் வேலையுண்டு என கொண்டாடிக் கொண்டு இருக்கிறார்கள்.

ஏனெனில், இதற்கு முன்பாக உலகின் முதல்குடி, மூத்த குடி என்று சொல்லிக் கொள்கிற தமிழ் இனத்தில் இப்படியொரு சர்ச்சை இருந்ததாகவே தெரியவில்லை.

மேலும், உலகின் வேறெந்த மொழியைத் தாய் மொழியாக கொண்ட இனத்திலும் இதுபோன்ற ஆரியன், திராவிடன் என்ற சாக்கடைத் தனமான சண்டையும், வருடப் பிறப்பு சச்சரவுகளும் இருப்பதாக தெரியவில்லை.

மேலும் கன்னடம் தெலுங்கு ஆகியவற்றை தாய்மொழியாக கொண்டவர்கள், குறிப்பிட்ட ஒரே நாளில் தங்களின் வருடப் பிறப்பை கொண்டாடுகிறார்கள் எனவும் தெரிகிறது.

ஆகையால், ‘‘தமிழன் என்று சொல்லடா; தலை நிமிர்ந்து நில்லடா என்று நாமே சொல்லி வீர வசனத்தை, இனி தமிழன் என்று சொல்லடா; தலைக்குனிந்து நில்லடா’’ என்று மற்றவர்கள் சொல்லும் இழிநிலமை விரைவில், நமக்கு வந்து விடும் போலிருக்கு!

ஆகையால், இனி ஒவ்வொரு தமிழனும் தமிழனாய் பிறந்ததற்கு பெருமைப்படுவது போலவே, இனி வெட்கப்படவும் வேண்டி இருக்கும் போலிருக்கு.


இந்த இழிநிலைகள் ஏற்படாமல் தடுக்க, நம்மால் என்ன செய்ய முடியும் என நீங்கள் நினைத்தால், உண்மையில் தமிழ்ப் புத்தாண்டு என்பது தமிழை தாய்மொழியாகக் கொண்ட ஒவ்வொரு தமிழர்களும் தாங்கள் விரும்பியபடி கொண்டாட வேண்டியது தானேயன்றி, இந்த நாளில்தான் கொண்டாட வேண்டுமென்று சொல்லி அரசியல் செய்வதற்கு அது ஆரியருடைய சொத்தோ அல்லது திராவிடர்களின் சொத்தோ அல்லது தமிழ் தற்குறிகளின் சொத்தோ அல்லது வேறு எவருடைய சொத்தோ அல்ல.

எனவே, இனி தமிழைத் தாய்மொழியாக கொண்டவர்களும், தமிழை நேசிப்பவர்களும் தாங்கள் விரும்பும் ஒரு நாளில் / நந்நாளில் / பிறந்தநாள் உள்ளிட்ட சிறப்பாக நினைவு கூறத்தக்க ஏதோவொரு நாட்களில் தமிழ் வருடப் பிறப்பை கொண்டாடுங்கள். இதையுங்கூட, உங்களுக்கு ஏற்ற வகையில் வருடா வருடம் மாற்றிக் கொள்ளுங்கள்.

அது சித்திரையாக இருந்தால் என்ன... தையாக இருந்தால் என்ன... அல்லது நாம் விரும்பும் வேறெந்த நாளாக இருந்தால் என்ன... ஒவ்வொரு நாளும் தமிழ்க் கொண்டாட்டமாக இருக்கும் என்பதோடு, இப்படி கொண்டாட ஆரம்பித்தால் ஆரிய, திராவிட, தமிழ்த் தற்குறிகள் உள்ளிட்ட அவரவரின் ஆட்டமும் தானாக அடங்கி விடும். அவ்வளவே!

பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

அறவழி நோட்டா

அறவழி நோட்டா
மகாத்மா போதித்த வாக்குரிமை!

நோட்டா: NOTA

நோட்டா: NOTA
விளக்கம்: EXPLANATION

நியாயந்தான் சட்டம்!

நியாயந்தான் சட்டம்!
வக்கற்றவர்களின் கீழான பட்டம்!

நூல்களின் முகப்பு

Follow by Email

Followers

முக்கியப் பக்கங்கள்

அடிப்படை சட்டங்கள்

  • 1. இந்திய சாசனம் 1950
  • 2. நீதிமன்ற சாசனம் 1872
  • 3. இந்திய தண்டனை சட்டம் 1860
  • 4. குற்ற விசாரணை முறை விதிகள் 1973
  • 5. உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908

நம் நூல்களைப் பற்றி

நீதியைத்தேடி.... நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் வரிசையில்...
1 குற்ற விசாரணைகள்
2 பிணை (ஜாமீன்) எடுப்பது
எப்படி?
3 சட்ட அறிவுக்களஞ்சியம்
4 சட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்
5 சாட்சியங்களைச் சேகரிப்பது
எப்படி?
6 கடமையைச் செய்!
பலன் கிடைக்கும்
7 மநு வரையுங்கலை!Recent Posts Widget

இந்நூல்கள் அனைத்தும் உங்களின் சட்ட விழிப்பறிவுணர்வுக்காக
மத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவியோடு
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பொது நூலகங்கள், மத்திய சிறைச்சாலைகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

சொந்தமாக தேவைப்படுவோர், உ(ய)ரிய நன்கொடையைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு வாட்ஸ்அப் எண் 09842909190 ஆகும்.

எல்லாப் பதிவுகளும்!

நம் தள வகைகள்

பயின்றோர் (20-08-16)