இது மனு எழுதத்தெரியாத மடையர்களே வக்கீழ் பொய்யர்கள் என்ற கட்டுரையின் தொடர்ச்சி. ஆகையால், இந்த கட்டுரையை ஏற்கெனவே படித்திருந்தாலும் கூட, சரியான புரிதலுக்காகவும் நினைவூட்டிக் கொள்வதற்காகவும் மீண்டும் ஒருமுறை படித்து விட்டு தொடர்வது சிறப்பாக இருக்கும்.
இந்தப் பிரச்சினை குறித்து 17-08-2019 அன்று முதலில் கட்டுரை எழுதப்பட்டு, 30-12-2019 ்அன்று, சுமார் நான்கரை மாதங்களில் முடிவுக்கு கொண்டு வந்து சாதித்து விட்டாள், இவ்வாசகி!
அடிப்படை சட்ட அறிவு இல்லாத மக்கள், பொய்யர்களைப் போன்ற மாக்களிடம் சென்று, குறுக்கு வழியில் காரியம் சாதிக்க முற்பட்டு, வீணாக காலத்தை கடத்திக் கொண்டு இருக்கிறார்கள் என்றும், சட்ட வழியில் சென்றால் எளிதாக முடித்து விட முடியும் என்பதற்கு, நல்லதொரு உண்மையாய் சாதித்து காட்டி இருக்கிறாள்.
இக்கிராமத்து வாசகியின் (சுமார் அரை ஏக்கர் சந்தை மதிப்பு சுமார் ஐந்து இலட்சம்) நிலத்துப் பட்டாவை, சித்தப்பா மகன் அரசியல் செல்வாக்காலும், சட்டப்படி செல்லாத பத்திரத்தின் மூலமாகவும், அவனது குடும்ப உறுப்பினர்களின் பெயருக்கு பட்டா பெயர் மாற்றத்தை செய்து விட்டான்.

இதற்காக இவர்கள் பல வருடங்களுக்கு முன்பே திட்டமிட்டு பெற்றுள்ள தாத்தாவின் வாரிசு சான்றிதழில், எல்லோருக்கும் மூத்தவரான இவளது அப்பாவை வாரிசாக கொண்டு வராமல், மோசடியான சான்றிதழை, இவனது அப்பாவே பெற்றுள்ளார். ஆக, அப்பனுக்கு தப்பாம பிறந்திருக்கிறான் மகன்.
இப்படியொரு வாரிசு சான்றிதழை வாங்கி இருப்பதே இப்போதுதான் இவளுக்கு தெரிகிறது. இதனை எதிர்த்து நம் நூல்களைப் படித்து சட்ட வழியில் தொடர்ந்து போராடிவள், செய்யப்பட்டா பட்டா பெயர் மாற்றத்தை 30-12-2019 அன்று இரத்து செய்து, நான்கு மாதத்தில் சாதித்து விட்டாள். வாரிசு சான்றிதழ் விவகாரம், அவர்களுக்கே பெரும் தலைவலியாகி நிலுவையில் இருக்கிறது.
இவ்வளவு குறுகிய காலத்தில், (அதாவது விநாயகர் சதுர்த்தி, உள்ளாட்சி தேர்தல் என பல்வேறு நாட்களில் அரசூழியர்களின் பணிகள் முடங்கிய நிலையிலும், இரண்டு மாதங்களாக கடலூர் கோட்டாச்சியரின் ஊழியம் காலியாக இருந்த நிலையிலும், முறைகேடாக பட்டா வழங்கிய தாசில்தார் கீதா, பயந்து கழிந்து பணிஇட மாறுதல் பெற்று, குறிஞ்சிப்பாடிக்கு சென்று விட்ட நிலையிலும்) சுமார் இரண்டு மாத கால அளவில், பட்டாவை இரத்து செய்த சாதனையை வேறு யாரும் நிகழ்த்தி இருக்க வாய்ப்பில்லை.

ஆமாம், இதே பட்டா இரத்துக்கு, இவளுக்கு தெரிந்தே பல வருடங்களாக அலைந்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும், அதில் ஒருவர் அதிகபட்சமாக பதினான்கு வருடங்களாக அலைகிறார் என்ற தகவலையும் சொல்லுகிறாள்.
அவர்களுக்கு இதைப்பற்றி எடுத்து சொல்ல வேண்டியதுதானே என்று கேட்டால், நாம் சொல்வது எல்லாம் அவர்களுக்கு பெரிதாகவே தெரியவில்லை என்கிறாள். ஆடு வெட்டுபவனை தான் நம்பும் என்பது போலத்தான் மாக்கள் மற்றவர்களை நம்பிக் கொண்டு இருக்கிறார்கள்.
இவ்வாசகியின் பட்டா இரத்து விவகாரத்தில், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதியின் அரசியல் செல்வாக்கால், விசாரணையில் கலந்து கொள்ள நான்கு முறை வாய்ப்பு அளிக்கப்பட்டும், அவனால் சரியாக கலந்துக் கொள்ள முடியவில்லை என்பதும், அரசியல் செல்வாக்கு உள்ளவர்களே அடங்கிப் போய் விட்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆமாம், குறுக்கு வழியில் செய்யப்பட்ட பட்டா பெயர் மாற்றத்தை சட்டப்படி இரத்து செய்ய முயன்றதும், அரசியல் செல்வாக்கால் நிலப் பத்திரைத்தையும் மாற்ற முயற்சித்தார்கள். ஆனால், இவளுடைய சட்டப்படியான எச்சரிக்கையால், நாம்தான் சிக்குவோம் என அரசூழியர்கள் எச்சரிக்கை ஆகி விட்டனர்.
ஒரு மாதத்திற்குள் முடிந்திருக்க வேண்டிய இந்த பட்டா இரத்தை, இவளுக்கே தெரியாமல் இவளது அக்கா உள்ளே புகுந்து கெடுத்து விட்டாள். இப்பிரச்சினையை பொய்யர்களிடம் போகலாம் என்றாள். அப்படி போயிருந்தால், பத்து வருடத்துக்கு வழக்கை நடத்தி, அந்த நிலைத்தையே விற்று கூலியாக கொடுத்து விட்டு, நிச்சயம் வெறுங்கையோடு நின்றிருப்பாள்.

ஆனால், தன் மீது நம்பிக்கை வைத்தால், இன்று பட்டாவை இரத்து செய்த சாதனையுடன் நிற்கிறாள். மேலும், இவளது பெயருக்கு பட்டாவை மாறுதல் செய்வதற்கான அடிப்படையையும் ஏற்படுத்தி விட்டாள். இனி இதனை எதிர்த்து அவன் எங்கு போனாலும் நிற்காது.
பொதுவாக கூலிக்கு மாரடிக்கும் அரசூழியர்கள், மக்களின் பிரச்சினைகளை உள்வாங்கிப் படிக்க மாட்டார்கள். படித்தால், உண்மை என்ன என்பது எளிதில் விளங்கி விடும். ஆனால், இவளது பிரச்சினையில், இவளுக்கு எந்த அளவிற்கு விவரம் தெரியுமோ அந்த அளவிற்கு அவர்களும் அத்துபடியாக தெரிந்து வைத்து இருக்கிறார்களாம்.
பட்டா இரத்து செய்யப்பட்ட 30-12-2019 அன்று மட்டும், கோட்டாச்சியரும், அவரது உதவியாளரும் என சுமார் மூன்று மணி நேரம், ஆர்வத்தில் உரையாடி இருக்கிறார்கள். சட்ட அறிவு இருந்தால், அலட்சியமாக பார்த்தவர்களும் கூட, அவர்களுக்கு பயந்து அன்பாகி விடுவார்கள் போலும்.
இதற்கேற்ப முன்பே, ‘‘உங்க அம்மா, உன் அக்காவை படிக்க வைக்காமல் விட்டு விட்டார்கள். படிக்க வைத்திருந்தால், கலெக்டர் ஆகி இருப்பாங்க’’ என இவளது தங்கையிடம் சொல்லி இருக்கிறார்கள்.
இந்தப் பட்டா அனுபவத்தை வைத்து, மக்கள் தங்களுடைய பட்டா சொத்துப் பிரச்சினைகளை எளிதில் தீர்த்துக் கொள்ள உதவும் நூலொண்றை எழுத வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறாள். இந்த அனுபவ நூல் வெளிவர நம்முடைய நல்வாழ்த்துக்களோடு, இயன்ற உதவியை வழங்கிட உள்ளோம். நூலாக வெளிவர உங்களின் உதவியும் தேவைப்படலாம்!
இதற்கு முன்பாக, எந்த சட்டப்படி இதை செய்வது என்பது உள்ளிட்ட சில சந்தேகங்கள் வாசகர்களுக்கு எழலாம். அதற்கான முக்கிய குறிப்புகள் இதோ!
அடிப்படை சட்டங்கள் ஐந்து என, மிகமிகச் சரியாக நம் ஆசிரியரால் வரையறுக்கப்பட்டு உள்ளதில் நான்காவதாக உள்ள குற்ற விசாரணை முறை விதிகள் 1973 தான்.
இதன் பத்தாவது அத்தியாயம் அதாவது விதி 129 முதல் 148 வரை முழுவதும் பொது அமைதி மற்றும் ஒழுங்கை காப்பது, பொது ஓழுங்கினங்களை அகற்றுவது, ஆக்கிரமிப்புகளை அகற்றுவது, நிலம், நீர் தொடர்பான பிரச்சினைகளை தீர்ப்பது பற்றியதுதான்.
இதில் வரும் வட்டார செயல்துறை நடுவர், அல்லது நடுவர் என்பது வட்டாச்சியரையும், கோட்ட நடுவர் என்பது கோட்டாச்சியரையும், மாவட்ட குற்றவியல் நடுவர் என்பது, மாவட்ட ஆட்சியரையும் குறிக்குமே ஒழிய, ஒருபோதும் நீதித்துறை ஊழியர்களாக உள்ள நிதிபதிகளை குறிக்காது.
இதுபற்றி மேலும் விவரமாக அறிய குற்ற விசாரணை முறை விதிகள் 1973 விதி 20 முதல் 23 வரை படித்து, நீங்களும் உங்க பிரச்சினையில் கலக்குங்க!
பிற்சேர்க்கை நாள் 06-01-2020
அரசு ஊழியர்கள் 24 மணி நேரமும் ஊழியத்தில் உள்ளவர்கள் என்பதற்கு, (விடுமுறை நாளான 05-01-2020) இந்த கடிதமே சான்றாக இருக்கிறது.
ஆணுக்கு பெண் சமம் என்பது குற்றங்களை புரிவதில் மட்டும்தான் இருக்கும் போலிருக்கிறது.
பட்டா பெயர் மாற்றம் செய்வதற்கு துணை வட்டாட்சியர் ஒருத்தி ஒன்பது ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய போது லஞ்ச ஒழிப்புத் துறையால் கையும் களவுமாக பிடிபட்டுள்ளாள். ஆனால், இதையே சரியான சட்ட விழிப்பறிவணர்வோடு நம் வாசகி மிகமிக எளிதாக செய்து முடித்துள்ளாள்.

பகிர்ந்து கொள்ள
வாசகர்களின் கவனத்திற்கு...
இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.
இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.
சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.
0 comments:
Post a Comment