No law no life. Know law, know life! நியாயந்தான் சட்டம்! அதற்கு தேவையில்லை வக்கீழ் பட்டம். வக்கீழ் என்றாலே, கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்களே! இடைத்தரகர்களே!! நீ வாழ, நீயே வாதாடு!

நீ வாழ... நீயே வாதாடு... வரவேற்பு வாழ்த்து!

No law, no life. Know law, know life! என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியத்தை உணர்ந்து, ‘‘நீதியைத்தேடி... சட்டப் பல்கலைக் கழகத்திற்கு’’ வருகை தந்துள்ள உங்களை வருக என வரவேற்று, உங்களுக்கான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்று பயனைப் பெறுக என வாழ்த்துகிறோம்!
முக்கிய அறிவிப்பு : இந்த இணையப்பக்கத்தை புதுப்பிக்கும் பணி நடந்துக் கொண்டிருப்பதால், சில பதிவுகள் அல்லது இணைப்புக்கள் கிடைக்காமல் போகலாம்!

Monday, January 6, 2020

ஆசிரம (அ, வ)க்கிரமங்கள்!கடமையைச் செய்! பலன் கிடைக்கும் நூலில், தன்னார்வ அமைப்புகளின் (கட, மட)மையும் என்ற நான்காவது அத்தியாயத்தில், அனைத்து விதமான அமைப்புளும் எப்படி செயல்பட வேண்டும். ஆனால், அவை எப்படியெல்லாம் மிகக் கேவலமாக செயல்படுகின்றன என்பதைப் பற்றி எழுதி உள்ளார். 


எனவே, அமைப்பு, சங்கம், இயக்கம் என எதையும் நம்பி ஏமாறுவதற்கு முன்பாக அதனைப் படித்துக் கொண்டால், எச்சரிக்கையாக தப்பித்து விடலாம். அதில் எழுதாத ஆசிரமங்களின் இரண்டு (அ, வ)க்கிரமங்கள் குறித்து விளக்கவே இப்பதிவு.

ஆ-சிரமம் என்ற பெயரிலேயே ஆச்சரியப்படத்தக்க சிரமங்கள் இருக்கின்றன என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஆனால், மாறாக இப்போதுள்ள சாமியார்களையும், ஆசிரமங்களையும் துறவிகள் வாழும் இடம் என்று தவறாகவே கருதுகிறார்கள். 

இது தாத்தா மகாத்மா காந்தி வாழ்ந்த காலத்திலேயே இருந்திருக்கிறது. ஆகையால், துறவு என்ற சொல்லுக்கு இலக்கணமாக யாரையும் சொல்ல முடியாது. ஆகையால், எந்த சொல்லையே அகராதியில் இருந்து நீக்கி விட வேண்டுமென அவரே எழுதி உள்ளார். உண்மைதான், அறத்தின் வழியில் சிந்திப்பவர்களின் நிந்தனைகள் எல்லாம் ஒரே மாதிரியாகத்தானே இருக்கும். 

ஆம், எதைப் பற்றியும், திருவள்ளுவரை விட வேறு யார் தெளிவாக சொல்லி விட முடியும்? அதனால்தானே ஒன்றைப்படி உலகம் புரியும் என்று திருக்குறளுக்கு சிறப்புப் பெயரை தந்திருக்கிறார்கள். நாமும் ஒரு நாள் துறவிகள் தான் என்பது முதல் திருக்குறளில் துறவரம் குறித்து திருவள்ளுவர் என்னென்ன சொல்லி உள்ளார் என்பதை, உயர் வள்ளுவம் என்ற தலைப்பில் இலங்கை ஜெயராஜ் அவர்கள் தெளிவுபட விவரிப்பதை கேட்டு தெளியுங்கள்.

சில வருடங்களுக்கு முன்பு நித்தியின் காணொளி காட்சிகள் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்ட போது, நமக்கும் சில தகவல்கள் கிடைத்தன. இன்னும் கூட நித்தியின் பரபரப்பு குறையவில்லை. 

அதாவது, ஐஏஎஸ் தேர்வு எழுத டில்லி சென்றிருந்த நான்கு பெண்கள், அங்கிருந்த நித்தியைப் பார்த்து ஆசி பெற்றால், தேர்வில் வெற்றி பெறலாம் என போனார்களாம். ஆனால், அதில் ஒருத்தி மட்டும், நித்தியின் பேச்சில் மயங்கி அங்கேயே அடிமையாகி விட்டாளாம். தேர்வை கூட எழுதவில்லையாம். 

அவள் நுனி நாக்கில் ஆங்கிலம் பேசுவாளாம். அவளை வெளிநாட்டில் இருந்து வரும் பக்தர்களிடம் பேசி பணம் வாங்குவதற்கே பயன்படுத்துகிறார்கள் என்றும், ஆறு மாதத்திற்கு ஒருமுறை வீட்டுக்கு வருவாள் என்றும், திருமணம் குறித்து பேச்சை எடுத்தாலோ அல்லது அடுத்த நாளோ கிளம்பி விடுவாள் என்றும்...

அப்படி வரும்பேதெல்லாம், நன்றாக உறங்குவாள். எழுந்ததும் கையோடு எடுத்து வந்து நித்தியின் படத்தை வைத்து பூஜை செய்து விட்டு கிளம்பி விடுவாள் என்றும், அவளை எப்படியாவது மீட்க வேண்டும் என்பதே, நம்மை தொடர்புக் கொண்ட அவளுடைய தங்கையின் கோரிக்கையாக இருந்தது.

அதில் அவளுக்கு திருமணம் முடிக்காமல், தனக்கு முடிக்க முடியாது என்ற அவளுடைய பெற்றோரின் நிலைப்பாடும், அதில் அவளுடைய கவலையும் புரிந்தது. 

ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல் வைத்துக் கொள்ள மாட்டார்கள். அவளே வந்து விடுவாள். அதுவரை காத்திருக்க வேண்டியதுதான் என்று சொன்னோம். 

இப்படித்தான், வேடசந்தூரை சேர்ந்த ஒருத்தி, தன் சொத்தை தம்பி அபகரித்து விட்டான் என்று அவனது அக்கா நம் நூல்களை வாங்கிப் படித்து போராடினாள். 

இவளும் இப்படித்தான் சிறு வயதில் (17 வயதில் என சொன்ன நினைவு) பேச்சில் மயங்கி ஆசிரமத்திற்கு சென்று விட்டாள். அந்தப் பருவ வயது கவர்ச்சியை பயன்படுத்தி, அவளுக்கு முக்கியப் பொறுப்புகளை எல்லாம் தந்திருக்கிறார்கள். 

அதாவது, பணக்காரர்கள் வந்தால், அவர்களுக்கு தேவையான அத்தனை உதவிகளையும் செய்து குறையில்லாமல் கவனித்துக் கொள்ள வேண்டியது பிரதான வேலை. சாதாரணமாக ஏழ்மை நிலையில் இருந்த  நமக்கு இவ்வளவு பேரும், புகழும், மதிப்பும் கிடைக்கிறதே என ஒயாமல் உழைத்திருக்கிறாள். 

இப்படித்தான் நம்முடைய பருவ வயது திறனை பணக்காரர்கள் வேலை தருகிறோம் என்று பிழிந்து கொண்டு, விட்டு விடுகிறார்கள். இதற்காக நமக்கு பொறுப்பான பொறுப்புகளை வழங்கி விடுவார்கள். இதெல்லாம் நம் அறிவுக்கண்ணை மறைத்து விடுகிறது. 

நமக்கு ஒரு பொறுப்பு தரப்படுகிறது என்றால், திறன் இருந்தால்தான் தரப்படும். திறன் இருந்தாலும், அதற்கேற்ற பொறுப்பு தரப்படாமல் இருப்பது வேறு விடயம். எனவே, நமக்கு ஒரு பொறுப்பு தரப்பட்டாலே, அது நம் உழைப்பை பிழியவே என்று புரிந்துக் கொள்ள வேண்டுமே தவிர, தலைகீழாக ஆட கூடாது. 

ஏனெனில், நமக்கு பிறரால் தரப்படும் பொறுப்பு, எப்போது வேண்டுமானாலும் பறிக்கப்படும் அல்லது இல்லாமல் போகும். எனவே, பொறுப்பு என்பது நாமாக எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர, பிறர் நமக்கு தருவதாக இருக்கவே கூடாது. அப்போதுதான் எந்த வித துயரமும் இல்லாமல், எப்போது வேண்டுமானாலும் பொறுப்பை ஏற்கலாம் அல்லது துறக்கலாம்.  

நம் திறனில் அடிப்படையிலேயே பொறுப்பு வழங்கப்படுகிறது என்பதை உணர்ந்து விட்டால், அந்தப் பொறுப்புக்காக நாம் உழைக்கும் உழைப்பை, நம் தற்சார்பு முன்னேற்றத்துக்காக அதே பொறுப்புடன் உழைத்தால், நாம் எவ்வளவோ முன்னேறி விடுவோம்.

இதன் அடிப்படையில்தான், ‘‘நம் கடமையை ஏற்பதே நமக்கான அங்கீகாரம்! அதிகாரம்!!’’ என்ற தத்துவத்தை கடமையைச் செய்! பலன் கிடைக்கும் நூலில் முன்மொழிந்து உள்ளார், ஆசிரியர்!

ஆனால், அப்படி உழைக்க முன்வராமல், அடுத்தவர்களின் வளர்ச்சிக்காகவே உழைத்து அடிமையாக இருக்கவே பழகி விட்டோம். ஆகையால், தற்சார்பு வாழ்க்கைக்கான அடிப்படையில் இருந்தே தவறி விட்டோம்.

சரி, நாம விட்ட விசயத்துக்கு வருவோம். 

அவளது பருவ வயது வாலிபத்தை பணத்துக்காக உறிஞ்சியதும், போகப்போக அவளுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவத்தை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து இருக்கிறார்கள். அதையும் வேறு வழியின்றி பொறுத்துக் கொண்டு செய்திருக்கிறாள். இறுதியில், போகப்போக நிலைமை படுமோசம் ஆகிவிட்டது. 

அதாவது இப்படி, நாமே வெளியில் போ என்று சொல்லாமல், கொடுக்கப்பட்ட கெளரவத்தை குறைத்தால், அவர்களாகவே விலகிப் போய் விடுவார்கள் என்பது நிர்வாக யுக்திகளில் மிக முக்கியமானது. இந்த நிர்வாக புத்தியில், முன்பு சாதாரண தொழிலாளியாக இருந்த நம் ஆசிரியருக்கு  நிறையவே அனுபவம் உண்டு. 

இதை ஐந்தாண்டுகளுக்கு பிறகு புரிந்து கொண்டவள், சுமார் இருபத்தி ஐந்து ஆண்டுகளை வெளி உலகமே தெரியாத ஆசிரமத்தில் கழித்து விட்டு, சுமார் நாற்பது வயதில் வெளியே வந்தாள், போனவள் போனவள்தான்; திரும்ப வரப்போவதில்லை என்ற எண்ணத்தில் தம்பி நிலத்தை மோசடியாக அவனது பெயருக்கு எழுதி விட்டான். 

பிறகு நம் தொடர்பில் வரவில்லை என்பதால் வழக்கு என்ன ஆனது என்பதெல்லாம் தெரியவில்லை. ஆனால், வழக்கின் ஆரம்ப நிலையிலேயே நிதிபதிகளையும், அரசுப் பொய்யர்களை கதற விட்டாள்.  

நம்மை தொடர்பு கொள்வதற்கு முன்பு, நிதியைத்தேடி... தேடி அலையும் வாசகர்களிடம் சிக்கியதாகவும் சொன்னதாக நினைவு.   

அவளது நல்ல நேரமோ, ஆசிரமத்தில் செய்த புண்ணியமோ அந்த வயதில் நல்லதொரு ஆண் கணவனாக கிடைத்து விட்டான். குழந்தை ஒன்றும் உண்டு என சொன்னதாக நினைவு. நித்தியிடம் சேர்ந்தவளும் இப்படி ஆகி இருக்கமாட்டாள் என்பது என்ன நிச்சயம்?

எனவே, புரியாத வயதில் புத்தி கெட்டுப்போய், பெண் பிள்ளைகள் யாராவது இப்படி விரும்பி போனாலோ அல்லது பெற்றோர்களே விரும்பி விட முயற்சித்தாலோ, எச்சரிக்கை செய்யுங்கள் என்பதற்காகவே இந்த பதிவை எழுதினோம். 


பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

Wednesday, January 1, 2020

குறுக்கு வழியில் செய்யப்பட்ட பட்டா பெயர் மாற்றத்தை சட்டப்படி இரத்து செய்து சாதனை!இது மனு எழுதத்தெரியாத மடையர்களே வக்கீழ் பொய்யர்கள் என்ற கட்டுரையின் தொடர்ச்சி. ஆகையால், இந்த கட்டுரையை ஏற்கெனவே படித்திருந்தாலும் கூட, சரியான புரிதலுக்காகவும் நினைவூட்டிக் கொள்வதற்காகவும் மீண்டும் ஒருமுறை படித்து விட்டு தொடர்வது சிறப்பாக இருக்கும்.

இந்தப் பிரச்சினை குறித்து 17-08-2019 அன்று முதலில் கட்டுரை எழுதப்பட்டு, 30-12-2019 ்அன்று, சுமார் நான்கரை மாதங்களில் முடிவுக்கு கொண்டு வந்து சாதித்து விட்டாள், இவ்வாசகி!

அடிப்படை சட்ட அறிவு இல்லாத மக்கள், பொய்யர்களைப் போன்ற மாக்களிடம் சென்று, குறுக்கு வழியில் காரியம் சாதிக்க முற்பட்டு, வீணாக காலத்தை கடத்திக் கொண்டு இருக்கிறார்கள் என்றும், சட்ட வழியில் சென்றால் எளிதாக முடித்து விட முடியும் என்பதற்கு, நல்லதொரு உண்மையாய் சாதித்து காட்டி இருக்கிறாள்.  

இக்கிராமத்து வாசகியின் (சுமார் அரை ஏக்கர் சந்தை மதிப்பு சுமார் ஐந்து இலட்சம்) நிலத்துப் பட்டாவை, சித்தப்பா மகன் அரசியல் செல்வாக்காலும், சட்டப்படி செல்லாத பத்திரத்தின் மூலமாகவும், அவனது குடும்ப உறுப்பினர்களின் பெயருக்கு பட்டா பெயர் மாற்றத்தை செய்து விட்டான்.

இதற்காக இவர்கள் பல வருடங்களுக்கு முன்பே திட்டமிட்டு பெற்றுள்ள தாத்தாவின் வாரிசு சான்றிதழில், எல்லோருக்கும் மூத்தவரான இவளது அப்பாவை வாரிசாக கொண்டு வராமல், மோசடியான சான்றிதழை, இவனது அப்பாவே பெற்றுள்ளார். ஆக, அப்பனுக்கு தப்பாம பிறந்திருக்கிறான் மகன்.

இப்படியொரு வாரிசு சான்றிதழை வாங்கி இருப்பதே இப்போதுதான் இவளுக்கு தெரிகிறது. இதனை எதிர்த்து நம் நூல்களைப் படித்து சட்ட வழியில் தொடர்ந்து போராடிவள், செய்யப்பட்டா பட்டா பெயர் மாற்றத்தை 30-12-2019 அன்று இரத்து செய்து, நான்கு மாதத்தில் சாதித்து விட்டாள். வாரிசு சான்றிதழ் விவகாரம், அவர்களுக்கே பெரும் தலைவலியாகி நிலுவையில் இருக்கிறது.

இவ்வளவு குறுகிய காலத்தில், (அதாவது விநாயகர் சதுர்த்தி, உள்ளாட்சி தேர்தல் என பல்வேறு நாட்களில் அரசூழியர்களின் பணிகள் முடங்கிய நிலையிலும், இரண்டு மாதங்களாக கடலூர் கோட்டாச்சியரின் ஊழியம் காலியாக இருந்த நிலையிலும், முறைகேடாக பட்டா வழங்கிய தாசில்தார் கீதா, பயந்து கழிந்து பணிஇட மாறுதல் பெற்று, குறிஞ்சிப்பாடிக்கு சென்று விட்ட நிலையிலும்) சுமார் இரண்டு மாத கால அளவில், பட்டாவை இரத்து செய்த சாதனையை வேறு யாரும் நிகழ்த்தி இருக்க வாய்ப்பில்லை.

ஆமாம், இதே பட்டா இரத்துக்கு, இவளுக்கு தெரிந்தே பல வருடங்களாக அலைந்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும், அதில் ஒருவர் அதிகபட்சமாக பதினான்கு வருடங்களாக அலைகிறார் என்ற தகவலையும் சொல்லுகிறாள். 

அவர்களுக்கு இதைப்பற்றி எடுத்து சொல்ல வேண்டியதுதானே என்று கேட்டால், நாம் சொல்வது எல்லாம் அவர்களுக்கு பெரிதாகவே தெரியவில்லை என்கிறாள். ஆடு வெட்டுபவனை தான் நம்பும் என்பது போலத்தான் மாக்கள் மற்றவர்களை நம்பிக் கொண்டு இருக்கிறார்கள். 

இவ்வாசகியின் பட்டா இரத்து விவகாரத்தில், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதியின் அரசியல் செல்வாக்கால், விசாரணையில் கலந்து கொள்ள நான்கு முறை வாய்ப்பு அளிக்கப்பட்டும், அவனால் சரியாக கலந்துக் கொள்ள முடியவில்லை என்பதும், அரசியல் செல்வாக்கு உள்ளவர்களே அடங்கிப் போய் விட்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆமாம், குறுக்கு வழியில் செய்யப்பட்ட பட்டா பெயர் மாற்றத்தை சட்டப்படி இரத்து செய்ய முயன்றதும், அரசியல் செல்வாக்கால் நிலப் பத்திரைத்தையும் மாற்ற முயற்சித்தார்கள். ஆனால், இவளுடைய சட்டப்படியான எச்சரிக்கையால், நாம்தான் சிக்குவோம் என அரசூழியர்கள் எச்சரிக்கை ஆகி விட்டனர்.

ஒரு மாதத்திற்குள் முடிந்திருக்க வேண்டிய இந்த பட்டா இரத்தை, இவளுக்கே தெரியாமல் இவளது அக்கா உள்ளே புகுந்து கெடுத்து விட்டாள். இப்பிரச்சினையை பொய்யர்களிடம் போகலாம் என்றாள். அப்படி போயிருந்தால், பத்து வருடத்துக்கு வழக்கை நடத்தி, அந்த நிலைத்தையே விற்று கூலியாக கொடுத்து விட்டு, நிச்சயம் வெறுங்கையோடு நின்றிருப்பாள்.

ஆனால், தன் மீது நம்பிக்கை வைத்தால், இன்று பட்டாவை இரத்து செய்த சாதனையுடன் நிற்கிறாள். மேலும், இவளது பெயருக்கு பட்டாவை மாறுதல் செய்வதற்கான அடிப்படையையும் ஏற்படுத்தி விட்டாள். இனி இதனை எதிர்த்து அவன் எங்கு போனாலும் நிற்காது.


பொதுவாக கூலிக்கு மாரடிக்கும் அரசூழியர்கள், மக்களின் பிரச்சினைகளை உள்வாங்கிப் படிக்க மாட்டார்கள். படித்தால், உண்மை என்ன என்பது எளிதில் விளங்கி விடும்.  ஆனால், இவளது பிரச்சினையில், இவளுக்கு எந்த அளவிற்கு  விவரம் தெரியுமோ அந்த அளவிற்கு அவர்களும் அத்துபடியாக தெரிந்து வைத்து இருக்கிறார்களாம். 

பட்டா  இரத்து செய்யப்பட்ட 30-12-2019 அன்று மட்டும், கோட்டாச்சியரும், அவரது உதவியாளரும் என சுமார் மூன்று மணி நேரம், ஆர்வத்தில் உரையாடி இருக்கிறார்கள். சட்ட அறிவு இருந்தால், அலட்சியமாக பார்த்தவர்களும் கூட, அவர்களுக்கு பயந்து அன்பாகி விடுவார்கள் போலும்.  

இதற்கேற்ப முன்பே, ‘‘உங்க அம்மா, உன் அக்காவை படிக்க வைக்காமல் விட்டு விட்டார்கள். படிக்க வைத்திருந்தால், கலெக்டர் ஆகி இருப்பாங்க’’ என இவளது தங்கையிடம் சொல்லி இருக்கிறார்கள்.  

இந்தப் பட்டா அனுபவத்தை வைத்து, மக்கள் தங்களுடைய பட்டா சொத்துப் பிரச்சினைகளை எளிதில் தீர்த்துக் கொள்ள உதவும் நூலொண்றை எழுத வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறாள். இந்த அனுபவ நூல் வெளிவர நம்முடைய நல்வாழ்த்துக்களோடு, இயன்ற உதவியை வழங்கிட உள்ளோம். நூலாக வெளிவர உங்களின் உதவியும் தேவைப்படலாம்! 

இதற்கு முன்பாக, எந்த சட்டப்படி இதை செய்வது என்பது உள்ளிட்ட சில சந்தேகங்கள் வாசகர்களுக்கு எழலாம். அதற்கான முக்கிய குறிப்புகள் இதோ! 

அடிப்படை சட்டங்கள் ஐந்து என, மிகமிகச் சரியாக நம் ஆசிரியரால் வரையறுக்கப்பட்டு உள்ளதில் நான்காவதாக உள்ள குற்ற விசாரணை முறை விதிகள் 1973 தான்.

இதன் பத்தாவது அத்தியாயம் அதாவது விதி 129 முதல் 148 வரை முழுவதும் பொது அமைதி மற்றும் ஒழுங்கை காப்பது, பொது ஓழுங்கினங்களை அகற்றுவது, ஆக்கிரமிப்புகளை அகற்றுவது, நிலம், நீர் தொடர்பான பிரச்சினைகளை தீர்ப்பது பற்றியதுதான்.

இதில் வரும் வட்டார செயல்துறை நடுவர், அல்லது நடுவர் என்பது வட்டாச்சியரையும், கோட்ட நடுவர் என்பது கோட்டாச்சியரையும், மாவட்ட குற்றவியல் நடுவர் என்பது, மாவட்ட ஆட்சியரையும் குறிக்குமே ஒழிய, ஒருபோதும் நீதித்துறை ஊழியர்களாக உள்ள நிதிபதிகளை குறிக்காது. 

இதுபற்றி மேலும் விவரமாக அறிய குற்ற விசாரணை முறை விதிகள் 1973 விதி 20 முதல் 23 வரை படித்து, நீங்களும் உங்க பிரச்சினையில் கலக்குங்க!

பிற்சேர்க்கை நாள் 06-01-2020

அரசு ஊழியர்கள் 24 மணி நேரமும் ஊழியத்தில் உள்ளவர்கள் என்பதற்கு, (விடுமுறை நாளான 05-01-2020) இந்த கடிதமே சான்றாக இருக்கிறது.

ஆணுக்கு பெண் சமம் என்பது குற்றங்களை புரிவதில் மட்டும்தான் இருக்கும் போலிருக்கிறது.

பட்டா பெயர் மாற்றம் செய்வதற்கு துணை வட்டாட்சியர் ஒருத்தி ஒன்பது ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய போது லஞ்ச ஒழிப்புத் துறையால் கையும் களவுமாக பிடிபட்டுள்ளாள். ஆனால், இதையே சரியான சட்ட விழிப்பறிவணர்வோடு நம் வாசகி மிகமிக எளிதாக செய்து முடித்துள்ளாள்.

பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

பத்திரிகை செய்திகள்

அறவழி நோட்டா

அறவழி நோட்டா
மகாத்மா போதித்த வாக்குரிமை!

நோட்டா: NOTA

நோட்டா: NOTA
விளக்கம்: EXPLANATION

நூல்களின் முகப்பு

Followers

முக்கியப் பக்கங்கள்

அடிப்படை சட்டங்கள்

  • 1. இந்திய சாசனம் 1950
  • 2. நீதிமன்ற சாசனம் 1872
  • 3. இந்திய தண்டனை சட்டம் 1860
  • 4. குற்ற விசாரணை முறை விதிகள் 1973
  • 5. உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908

நம் நூல்களைப் பற்றி

நீதியைத்தேடி.... நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் வரிசையில்...
1 குற்ற விசாரணைகள்
2 பிணை (ஜாமீன்) எடுப்பது
எப்படி?
3 சட்ட அறிவுக்களஞ்சியம்
4 சட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்
5 சாட்சியங்களைச் சேகரிப்பது
எப்படி?
6 கடமையைச் செய்!
பலன் கிடைக்கும்
7 மநு வரையுங்கலை!Recent Posts Widget

இந்நூல்கள் அனைத்தும் உங்களின் சட்ட விழிப்பறிவுணர்வுக்காக
மத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவியோடு
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பொது நூலகங்கள், மத்திய சிறைச்சாலைகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

சொந்தமாக தேவைப்படுவோர், உ(ய)ரிய நன்கொடையைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு வாட்ஸ்அப் எண் 09842909190 ஆகும்.

எல்லாப் பதிவுகளும்!

நம் தள வகைகள்

பயின்றோர் (20-08-16)