No law no life. Know law, know life! நியாயந்தான் சட்டம்! அதற்கு தேவையில்லை வக்கீழ் பட்டம். வக்கீழ் என்றாலே, கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்களே! இடைத்தரகர்களே!! நீ வாழ, நீயே வாதாடு!

நீ வாழ... நீயே வாதாடு... வரவேற்பு வாழ்த்து!

No law, no life. Know law, know life! என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியத்தை உணர்ந்து, ‘‘நீதியைத்தேடி... சட்டப் பல்கலைக் கழகத்திற்கு’’ வருகை தந்துள்ள உங்களை வருக என வரவேற்று, உங்களுக்கான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்று பயனைப் பெறுக என வாழ்த்துகிறோம்!
முக்கிய அறிவிப்பு : இந்த இணையப்பக்கத்தை புதுப்பிக்கும் பணி நடந்துக் கொண்டிருப்பதால், சில பதிவுகள் அல்லது இணைப்புக்கள் கிடைக்காமல் போகலாம்!

Tuesday, December 31, 2019

பொய்யாக குற்றம் சாற்றப்பட்டவர்கள், தற்காப்பு சாட்சியத்தை பயன்படுத்தி ஜெயிக்கனும்!நம் தேசத்தந்தை மகாத்மா காந்தி உள்ளிட்ட பல்வேறு ஆன்றோர்களின் எச்சரிக்கைகளை உள்வாங்கி இருக்கும் சில முக்கிய சங்கதிகளை அவ்வப்போது நினைவூட்டிக் கொள்ள வேண்டும். 

அதில் ஒன்று, நம்ம வக்கீழ் பொய்யர்கள் எல்லாம் இவ்வளவு வடிகட்டின முட்டாள்களாய் இருக்கும் போது, நம்ம காந்தி தாத்தா மட்டும் எப்படி இந்தியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து என பல நாடுகளில் வாதாடினாரு? 

அவரு எல்லா நாட்டு சட்டத்திலும் அவ்வளவு பெரிய அறிவாளியா என்ற கேள்வி எல்லோருக்குமே எழுவது போல ஆசிரியருக்கும் எழுதுகிறது.  ஆராய்ச்சியாளர் ஆராய தொடங்கி விட்டால், தீர்வை சொல்லாமல் தூங்குவாரா?  

சட்டம் குறித்த நம்ம தாத்தாவின் புரிதல் என்னவென்று அவரே சொல்வதை அறிந்தால் தான் முடிவுக்கு வரமுடியும் என்று, ஆராய தொடங்கினால், சத்திய சோதனையில் சட்டங்களைப் பற்றி எனக்கு அதிகம் தெரியாது. சாட்சிய சட்டத்தில் ஓரளவு தெளிவுண்டு என்று சொல்லி இருக்கிறார். 

அப்படியானால், சாட்சிய சட்டத்தின் முக்கியத்துவம் என்னவென்றால், நாட்டுக்கு நாடு சட்டங்களும், உரிமைகளும், தண்டனைகளும் வேறு பட்லாம். ஆகையால், உண்மையை கண்டு பிடிக்க இதையெல்லாம் தெரிந்திருக்க வேண்டிய அர்த்தமில்லை. 

ஆனால், சாட்சியம் என்றால், அது எல்லா நாட்டிலும் ஒன்றாகத்தான் இருக்க முடியும். அதாவது எழுதுவதற்கு பேனாவும், காகிதமும் என ஆரம்பித்து மற்ற அனைத்திற்கும் உலகம் முழுவதும் ஒரே மாதிரியாகத் தான் இருக்கும் என்ற தெளிவான முடிவுக்கு வருகிறார். 

ஆமாம், இது காந்தி தாத்தாவுக்கு தெரிந்திருந்தால், அவரே சொல்லி இருப்பாரே!  ஆனால், ஆச்சரியம் பாருங்கள் இந்த சட்டந்தான் அவருக்கு நன்றாக தெரிந்திருக்கிறது!!

ஆம், நாம் பரிந்துரை செய்துள்ள அடிப்படை சட்ட நூல்கள் ஐந்தில், இந்திய சாட்சிய சட்டத்தை படித்துப் புரிந்துக் கொள்வது அவ்வளவு எளிதல்ல என்பதை ஒரு உதாரணத்துடன் சொன்னால் நன்கு விளங்கும்.

மதுரையில் உள்ள ஒரு வாசகர், தாய்மொழி தமிழாக இருந்தாலும், பெற்றோர்கள் ஆங்கில புலமை மிக்கவர்கள் என்பதால், பள்ளியிலும், வீட்டிலும் அத்துபடியாக ஆங்கிலமே பேசுவார்கள். ஆகையால், மத்திய அரசு நிறுவனம் ஒன்றில் உயர்மட்ட அதிகாரியாக வேலையில் இருந்தார். 

ஆசிரியர் நூல்களில் சொல்லியுள்ளதைப் போல, நம் நூல்களோடு அசல் சட்ட நூல்களைப் வைத்துப் படித்து வந்தால், சிறிது காலத்திற்குப் பிறகு, அசல் சட்ட நூல்களை நேரடியாகவே படித்துப் புரிந்துக் கொள்ள முடியும். இவரும் இப்படிப் படித்து புரிந்துக் கொண்டு இருக்கிறார். ஆனால்,  இது சாட்சிய சட்டத்தில் மட்டும் சாத்தியப்படவில்லை.

ஆசிரியரை தொடர்பு கொண்டு உங்களை சந்திக்க வேண்டும் என்று சொல்ல, மதுரை வந்தால் சந்திக்கிறேன் என்று சொல்லி விட்டார். உடனே இப்படி நாமும் பார்த்து விடலாம் என தவறாக நினைக்க கூடாது. இதெல்லாம் சுமார் 13 வருடங்களுக்கு முன்பு. 

அதன்படி, நூலொன்றை அச்சிட சென்ற வேலையில் தகவல் சொல்ல அலுவலகத்திற்கு புறப்பட்ட அவரோ அடித்துப் பிடித்து நேராக, அச்சகத்துக்கு வந்து விட்டார். 

அப்படி வந்தவரின் தோற்றத்தைப் பார்த்த அச்சக உரிமையாளர், ‘‘ஏதோ ஒரு ஆபீசர் சோதனைக்கு வந்திருக்கிறார்’’ என்று நினைத்து பதறிப் போய் விட்டார். ஏன் தெரியுமா, ‘கழுத்தில் டை கட்டிக் கொண்டு டிப்டாப்பாக ஒருவர், அச்சகத்திற்குள் திடீரென நுழைந்தால்’’, வேறென்ன நினைக்க தோன்றும்?!

வந்த வாசகர் தன் ஆங்கிலப்புலமை எல்லாம் சொல்லி விட்டு, சாட்சிய சட்டத்தைப் படித்தால் புரிய மாட்டேங்குது. ஆங்கிலத்தில் படிப்பதால் புரியவில்லை என நினைத்து, தமிழ் நூலை வாங்கி வந்துப் படித்தேன். தலைவலி வந்ததுதான் மிச்சம் என்று சொல்லி விட்டு, நீங்கள் சொல்லும் விளக்கத்தைப் படித்து விட்டு, படித்தால் புரிகிறது.

ஆனால்,  நீங்கள் விளக்கம் சொல்லாத பிரிவை படித்து பரிந்துக் கொள்ளவே முடியவில்லை; எங்க அப்பாவாலும் முடியவில்லை; நீங்கள் எப்படி புரிந்து எழுதுகிறீர்கள்? என புரியும்படி பதில் சொல்வார் என்று ஆசையாய் கேட்க, ஆசிரியரோ எனக்குப் புரிகிறது எழுதுகிறேன். ஆனால், எப்படிப் புரிகிறது என்று என்னை கேட்டால், தெரியலையே என்றாரே பார்க்கலாம்!

உற்சாகத்தோடு வந்த வாசகரின் உற்சாகம் அப்படியே குறைந்து விட்டது. கூடவே இருந்த எங்களுக்கு ஆச்சரியம் கலந்த அதிர்ச்சி. 

ஆமாம், ‘‘கண்டவர் விண்டதில்லை; விண்டவர் கண்டதில்லை’’ என்பது இதுதான் போலும். இந்த உலகத்தில் நமக்கு புரியாத புதிர்களாக இருப்பவர்கள் எல்லாம் இப்படிப்பட்டவர்கள்தான் போலும்!  

இது இவரைப் போலவே, அல்ல அல்ல தாத்தா காந்தியைப் போலவே இவருக்கு நன்றாகப் புரிகிறது என்றால் என்ன அர்த்தம் என்பதை நீங்களே முடிவு செய்துக் கொள்ளுங்கள். கூடவே இந்திய சாட்சிய சட்டத்தில் உள்ள 167 பிரிவுகளில் அத்து படியாக இருந்தால், அகிலம் முழுவதிலும் வழக்கை மிகமிக எளிதாக நடத்தி நமக்கான நியாயத்தைப் பெறலாம் என்பதையும் புரிந்துக் கொள்ளுங்கள். 

ஆகையால்தான், இந்திய சாட்சிய சட்டத்திற்கு, அவரது பாணியில் ‘‘நீதிமன்ற சாசனம்’’ என்று கெளரவப் பெயரையும் முன்மொழிந்து உள்ளார் என்பது நாமும் விளங்கிக் கொண்டு, இதே பெயர்களை பயன்படுத்தி அந்த சட்டங்களை கெளரவப்படுத்துவதன் மூலம் மட்டுமே, நம் கெளரவத்தை பாதுகாத்துக் கொள்ள முடியும். 

குற்றவியல் வழக்குகளில் குற்றத்தை குற்றத்தரப்பே நிருபிக்க வேண்டுமென நீதிமன்ற சாசனத்துக்கு எதிரான விதியை வகுத்து வைத்திருக்கிறார்கள். உண்மையில், யார் எதை சொல்கிறார்களோ அதனை அவர்கள் நிருபிக்க வேண்டும். 

இந்த அடிப்படையில் குற்றத்தை நிருபிக்கும் பொறுப்பு குற்றத்தரப்புக்கு இருப்பதை போலவே, மறுக்கும் எதிரிக்கும் பொய்ப்பிக்க வேண்டிய கடமை இருக்கிறது. இந்த கடமையில் தவறினால், சூழ்நிலை சந்தர்ப்பத்திற்கு ஏற்ப, குற்றவாளி ஆக்கப்படலாம் என்பதை நம் நூல்களின் வாயிலாக உள்வாங்கிக் கொண்ட வாசகர்களில், இருவர் மட்டுமே துணிந்து செய்திருக்கிறார்கள். விளைவு?

இருவருமே விடுதலை என்கிற வெற்றிக் கனியை ரசித்து சுவைத்து இருக்கிறார்கள். இதில் முதலாவதாக திருப்பூரை சேர்ந்த மூட்டை தூக்கும் தொழிலாளி சரவணன் என்றால், இரண்டாவது தென்காசியை சேர்ந்த அரசுப் போக்குவரத்து கலக ஓட்டுநரான ஜெயராமன். 

வாசகர் ஜெயராமனது சிவகிரி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் ஆண்டு பட்டிகை வழக்கு எண் - 153/2013 சாதனை தீர்ப்பை படித்தோம். எழுத்துப் பிழைகள் அதிகம் இருக்கிறது.

போக்குவரத்து கலக ஓட்டுனரான இவர் மீது, பேருந்தால் மோதி விபத்தை ஏற்படுத்தி எழுவது வயது மதிக்கத்தக்க ஒருவரின் இறப்புக்கு காரணமாக இருந்தார் என்பது வழக்கு. பத்து நாள் சிகிச்சைக்கு பிறகு இறந்திருக்கிறார்.

தன் மீதான வழக்கை நன்றாகவே நடத்தி இருக்கிறார். தற்காப்பு சாட்சியத்தை சரியாக பயன்படுத்தி இருக்கிறார். இதனை வக்கீழ் பொய்யர்கள், தங்களின் பிழைப்புக்காக ஒருபோதும் பயன்படுத்துவது இல்லை.

குற்றத் தரப்பு சாட்சிகளை நன்றாக குறுக்கு விசாரணை செய்து அவர்கள் பொய் சாட்சிகள் என்பதை வெளிக்கொண்டு வந்திருக்கிறார். அவர்கள் பொய் சாட்சிகள் என்பதற்கு வலுவான அடிப்படையை அமைத்து கொடுத்ததே, குற்ற விசாரணை முறை விதி 315 இன் படியான, இவரது தற்காப்பு சாட்சியம்தான் என்பது மிகமிக முக்கியம்.
இல்லையென்றால், முன்பே சொன்னபடி, இவரை சூழ்நிலை குற்றவாளி ஆக்கி இருக்க முடியும்.

இதையெல்லாம் விட மேலாக, ‘‘குடி போதையில் தானே கீழே விழுந்து அடிபட்டவரை மிகுந்த கருணையோடு ஆம்புலன்ஸை வரவைத்து ஏற்றி அனுப்பி இருக்கிறார். இது போன்ற கருணை கடமைகளை தொடர வாழ்த்துக்கள்’’.

இது தொடர்பாக கேவலர்களுக்கும் தகவல் சொல்ல, அதனை ஏற்காமல், ‘‘நீதான் இடித்தாய் என பொய் சாட்சிகளை கொண்டு வழக்கு போட்டு, இப்போது தோற்று கேவலப்பட்டு இருக்கிறார்கள்’’. கேவலர்களின் மிரட்டலை எல்லாம் ஆடியோவாக பதிவு செய்து வழக்கில் தாக்கல் செய்துள்ளார். இவர்களை கேவலர்கள் என்று சொல்லாமல் காவலர்கள் என்று எப்படி சொல்ல முடியும்?

இனி இதனை எதிர்த்து, கேவலர்கள் மேல்முறையீடு செய்தாலும் ஜெயிக்க முடியாது. இனி இவர் சீராய்வு மனுவை தாக்கல் செய்து, பிழைகளை திருத்திக் கொள்ளனும். தீர்ப்பில் விடுபட்ட முக்கிய தகவலையும் சேர்த்துக் கொள்ளனும்.

ஒரு பொய் வழக்கை எப்படி தற்காப்பு சாட்சியத்தின் அடிப்படையில் ஜெயிக்கனும் என அறிய விரும்புபவர்கள் தீர்ப்பை முழுமையாகப் படிக்கவும்.

தன் வழக்கில் தானே வாதாடி தன் தரப்பு நியாயத்தை தக்க வைத்துக் கொண்ட இவ்வாசகருக்கு நமது நல்வாழ்த்துக்கள்!

பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

பத்திரிகை செய்திகள்

அறவழி நோட்டா

அறவழி நோட்டா
மகாத்மா போதித்த வாக்குரிமை!

நோட்டா: NOTA

நோட்டா: NOTA
விளக்கம்: EXPLANATION

நூல்களின் முகப்பு

Followers

முக்கியப் பக்கங்கள்

அடிப்படை சட்டங்கள்

  • 1. இந்திய சாசனம் 1950
  • 2. நீதிமன்ற சாசனம் 1872
  • 3. இந்திய தண்டனை சட்டம் 1860
  • 4. குற்ற விசாரணை முறை விதிகள் 1973
  • 5. உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908

நம் நூல்களைப் பற்றி

நீதியைத்தேடி.... நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் வரிசையில்...
1 குற்ற விசாரணைகள்
2 பிணை (ஜாமீன்) எடுப்பது
எப்படி?
3 சட்ட அறிவுக்களஞ்சியம்
4 சட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்
5 சாட்சியங்களைச் சேகரிப்பது
எப்படி?
6 கடமையைச் செய்!
பலன் கிடைக்கும்
7 மநு வரையுங்கலை!Recent Posts Widget

இந்நூல்கள் அனைத்தும் உங்களின் சட்ட விழிப்பறிவுணர்வுக்காக
மத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவியோடு
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பொது நூலகங்கள், மத்திய சிறைச்சாலைகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

சொந்தமாக தேவைப்படுவோர், உ(ய)ரிய நன்கொடையைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு வாட்ஸ்அப் எண் 09842909190 ஆகும்.

எல்லாப் பதிவுகளும்!

நம் தள வகைகள்

பயின்றோர் (20-08-16)