No law no life. Know law, know life! நியாயந்தான் சட்டம்! அதற்கு தேவையில்லை வக்கீழ் பட்டம். வக்கீழ் என்றாலே, கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்களே! இடைத்தரகர்களே!! நீ வாழ, நீயே வாதாடு!

நீ வாழ... நீயே வாதாடு... வரவேற்பு வாழ்த்து!

No law, no life. Know law, know life! என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியத்தை உணர்ந்து, ‘‘நீதியைத்தேடி... சட்டப் பல்கலைக் கழகத்திற்கு’’ வருகை தந்துள்ள உங்களை வருக என வரவேற்று, உங்களுக்கான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்று பயனைப் பெறுக என வாழ்த்துகிறோம்!
முக்கிய அறிவிப்பு : இந்த இணையப்பக்கத்தை புதுப்பிக்கும் பணி நடந்துக் கொண்டிருப்பதால், சில பதிவுகள் அல்லது இணைப்புக்கள் கிடைக்காமல் போகலாம்!

Tuesday, October 29, 2019

வாகன ஓட்டிகளான வாசகர்களின் சாதனை அனுபவங்கள் - 3
நீதியைத்தேடி... குற்ற விசாரணைகள் முதல் மனு வரையும் கலை நூல்கள் வரை படித்து சட்ட விழிப்பறிவுணர்வு அடைந்ததற்காக, முதலில் திரு வாரண்ட் பாலா சார் அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 

நான் 22-10-2019 ஆம் தேதி என்னுடைய டிவிஎஸ் எக்ஸ்எல் சூப்பர் வாகனத்தில் சென்று கொண்டிருந்தேன். தேவகோட்டை தாலுகா ஆறாவயல் காவல் உதவி ஆய்வாளர் என் வண்டியை நிறுத்தி வாகன தணிக்கை செய்தார். நான் தலைக்கவசம் அணிந்து இருந்தேன் ஓட்டுநர் உரிமம் வாகன பதிவு சான்று அனைத்து ஆவணங்களையும் காண்பித்தேன்.

இன்சூரன்ஸ் மட்டும் ரினிவல் செய்யவில்லை என்று சொன்னேன் உடனே 200 ரூபாய் கொடுத்துவிட்டு செல் என்று சொன்னார். அதற்கு நான் விருப்பம் இருந்தால் மட்டும்தான் உங்களிடம்அபராதம் செலுத்த வேண்டும் நான் நீதிமன்றத்தில் அபராதம் செலுத்தி கொள்கிறேன் ரசீது கொடுங்கள் என்று சொன்னேன்.

(நம் விளக்க குறிப்பு: இது மிகவும் தவறான புரிதல். உண்மையில், நாம் விரும்பினாலும் கேவலர்களிடம் அபராதத்தை சட்ட விதிகள் இல்லை. அப்படி செலுத்துவது கேவலர்களின் சட்ட விரோத செயலுக்கு துணை நிற்பதாகும்)

மேலும் நீங்கள் கொடுக்கும் காவல் அறிவிப்பு நோட்டீஸிலும் நீதிமன்றத்தில் மட்டுமே அபராதம் செலுத்த வேண்டும் என்று உள்ளதே என்று சொன்னேன். மேலும் மோட்டார் வாகன சட்டம் பிரிவு 129 இன் படியும் நீதிமன்றத்தில் அபராதத்தை செலுத்த வேண்டும் என்று உள்ளது என்று சொன்னேன்.

(நம் விளக்க குறிப்பு: உண்மையில் மோட்டார் வாகனச் சட்டப் பிரிவு 129 ஆனது, இருசக்கர வாகன ஓட்டிகள் தலைகவசம் அணிய வேண்டும். பின்னால் அமர்ந்து செல்பவரும் அணிய வேண்டும் என்பதே தவிர, அபராதத்தை செலுத்துவது பற்றியது அன்று)

நம் வாரண்ட் பாலா சார் அவர்கள் சொன்னதைப்போல சட்டம் என்னமோ அவர்கள் அப்பன் வீட்டுச் சொத்து என்பது போல, என்னிடமே சட்டம் பேசுகிறாயா என்று ‘‘வித்தவுட் ஹெல்மெட், வித்தவுட் இன்ஷூரன்ஸ், ஓவர் ஸ்பீடு என்று மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து ரசீதை என்னிடம் கொடுத்து நீதிமன்றத்தில் அபராதத்தை செலுத்திவிட்டு ரசீது கொண்டுவந்து காட்டிவிட்டு உன் வண்டியை எடுத்துச் செல் என்று என் வண்டி சாவியையும் என் வண்டியையும் பறித்து வைத்துக் கொண்டார்’’.

(நம் விளக்க குறிப்பு: இப்படி செய்ய கேவலர்களுக்கு எந்த சட்ட உரிமையும் இல்லை). 

நான் கேட்டு பார்த்து கொடுக்கவில்லை என்றதும் சரி நாம் நீதியைத்தேடி... நூல்களைப் படித்து உள்ளோம் ஆனால் நீதிமன்ற அனுபவம் இன்னும் பெறவில்லை என்று வண்டியை விட்டுவிட்டு சென்று விட்டேன். 

மறுநாள் குற்ற விசாரணை முறை சட்டம் பிரிவு 2 (7) இன் படி மனு எழுதிக் கொண்டு நீதித்துறை நடுவர் நீதிமன்றத்திற்குச் சென்றேன். நீதிமன்ற கிளர்கிடம் மனு கொடுக்க வேண்டும் என்று சொன்னேன். அதற்கு அவர் நீங்கள் நேரடியாக கொடுக்க முடியாது ஒரு வக்கீல் வைத்துக் கொடுங்கள் என்று சொல்லி மனுவை வாங்க மறுத்து விட்டார்.

(நம் விளக்க குறிப்பு: நீதிமன்ற ஊழியர்கள், நீதிமன்ற மா-மாக்கள். ஆகையால், நேராக உள்ளே சென்று நிதிபதியிடமே பேசிவிட வேண்டும்) 

அங்கிருந்த பொய்யர்களும் நீதிமன்றத்திற்கு வந்திருந்த கேவலர்களும் இதையே சொல்லி வெளிய போக சொல்லி விட்டார்கள்.

நான் இந்திய அரசமைப்பு சாசனம் 19(1)(அ) இன்படி எனக்கு அடிப்படை பேச்சுரிமை உள்ளது என்று கூறினேன்.

அங்கிருந்தவர்களுக்கு சட்டங்கள் எதுவும் தெரிய வில்லை. சரி, என்று நான் நீதிமன்ற நடுவர் வரும் வரை காத்திருந்தேன் அவர் சில வழக்குகளை விசாரித்து விட்டு உள்ளே விசாரணைகள் எதுவும் நடைபெறாமல் நடுவர் இருக்கும் பொழுது நான் யாரிடமும் கேட்காமல் உள்ளே சென்றேன். 

மீண்டும் உள்ளே இருந்தவர்கள் என்னை வெளியே போக சொன்னார்கள். நான் அவர்களிடம் மனுவை கொடுங்கள் நடுவர் ஏற்கவில்லை என்றால் போகிறேன் என்று சொன்னேன்.

அதே நேரத்தில், அங்கு நடந்ததை பார்த்து விட்ட நடுவர் என்ன என்று கேட்டார். அவர்களே, மனு கொடுக்க வந்துள்ளதை சொன்னார்கள்.


நடுவர் மனுவை வாங்கித் தரச்சொல்லி பார்த்தார். நடுவர் மனுவை பார்த்துவிட்டு அவர் கொடுத்துள்ள மனு சரிதான் என்று என்ன நடந்தது என்று கேட்டார். எனக்கு நீதிமன்றத்தில் முதன் முதலில் பேசுவதால் சிறிது பதட்டம் இருந்தது. 

ஆனால் நம்ம வாரண்ட் பாலா சார் நீதிமன்றத்தில் பேசுவது அப்பா அம்மாவிடம் பேசுவது போல்தான்! என்று சொல்லி உள்ளதால் சிறிதுநேரம் பேசியதும் பதட்டம் படபடப்பு இல்லாமல், கீழே நீதிமன்றத்தில்  நானே எழுதி கொடுத்த மனுவில் உள்ளதையும் விட இந்த வழக்கிற்கு சம்பந்தப்பட்ட இன்னும் சில சட்ட பிரிவுகளையும் மனப்பாடமாக கூறினேன். 

இத்தனை சட்டப் பிரிவுகளையும் மனப்பாடமாக கூற முடிந்ததை நினைத்து எனக்கே ஆச்சரியமாக இருந்தது. சிறிது நேரம் கழித்து நடுவர் ஓய்வறைக்கு சென்று விட்டார்.

((நம் விளக்க குறிப்பு: இப்படித்தான் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி சட்ட அறிவை வளர்த்துக் கொள்ள முயலனும். சரியா! 

ஆமாம், திடீர்னு ஒருத்தன் கோர்ட்டுக்குள் புகுந்து, அவிங்களுக்கு தெரியாத சட்ட விதிகளை எல்லாம் பேசினால், பீதியாகி பேதியாகாம என்ன செய்யும்?!)

நீதிமன்ற பணியாளரிடம் என்னை அங்கு கூட்டி வர சொன்னார். நான் உள்ளே சென்றேன். அங்கு அவர் ஹெல்மெட் போட்டிருக்கிறீர்களா? என்று கேட்டார். நான் ஆமா என்றேன். 

ஓவர் ஸ்பீடில் வந்தீர்களா என்று கேட்டார். நான் என் உயிரின் மதிப்பு எனக்கு தெரியும். அதனால் நான் மெதுவாகத்தான் சென்றேன் என்று சொன்னேன். பின் நானே இன்சூரன்ஸ் மட்டும் ரினிவல் செய்யவில்லை என்று சொன்னேன்.

(நம் விளக்க குறிப்பு: காப்பீடு என்பது நம் விருப்பமாக இருக்க வேண்டுமா... கூடாதா என ஆராய வேண்டும்) 

அதற்கு அவர் இன்சூரன்ஸிற்க்கு மட்டும் அபராதத்தை செலுத்திவிட்டு இதை வாங்கி சென்று காவல் நிலையத்தில் காண்பித்து வண்டியை எடுத்து செல்லுங்கள் என்று சொன்னார். 

என் வண்டியை பறித்து வைத்துக் கொள்வதற்கு எஸ்.ஐக்கு எந்த சட்டம் மற்றும் விதி அதிகாரம் அளித்துள்ளது என்று தெரியாமல் நான் வண்டியை எடுக்க மாட்டேன். (கேவலன் செத்தான்)

என் வண்டி துருப்பிடித்து போனாலும் பரவாயில்லை என்று நடுவரிடம் கூறினேன். அதற்கு நடுவர் பக்கத்தில் நின்றிருந்த நீதிமன்ற கிளார்க் அடுத்த 30 ஆம் தேதி வாய்தாவிற்கு வழக்கறிஞரை அமைத்துக் கொள்ளுங்கள் என்று கூறினார். 

அதற்கு நான் குற்ற விசாரணை முறை சட்டம் 2(17)-இன்படி நீதிமன்ற அனுமதியுடன் வாதாடும் ஒவ்வொருவரும் வழக்கறிஞர் தான் என்று கூறினேன்.

(இது நமக்காக நாம் வாதாடும்போது அல்ல. நமக்கு இந்திய சாசன கோட்பாடு 19(1)(அ) இன் கீழான பேச்சுரிமையே! 

கு.வி.மு.வி 2(17) என்பது, பிறருக்காக வாதாடும் வக்கீழ் பொய்யர்களுக்கு உரியது. ஆனால், இதன்படிதான் வக்காலத்து தாக்கல் செய்கிறோம் என்பது வக்கீழ் பொய்யர்களுக்கே தெரியாது. இதனை நிதிபதிகள் ஏற்றுக் கொண்டால்தான், வாதாட முடியும். ஆகையால், நம்மைப்போல, நினைத்தபடி எல்லாம் வாதாடி விட முடியாது. அடக்கித்தான் வாசிக்க வேண்டும். 

படிப்பறிவு இல்லாத அல்லது இயலாமை காரணமாக நம் குடும்பத்தினருக்கு அல்லது மிகமிக நெருங்கிய நண்பருக்காக வாதாட வேண்டிய கட்டாய சூழ்நிலை வந்தால், 2(17) நாமும் பயன்படுத்திக் கொள்ளலாம்). 

பிறகு நடுவரிடம், ‘‘நான் நீதியைத்தேடி... வாரண்ட் பாலா சார் அவர்களுடைய வாசகர். அதனால் எனக்கு கொஞ்சம் சட்டம் தெரியும் என்று சொன்னேன்’’. சரி 30 ஆம் தேதி வாய்தாவிற்கு வாருங்கள் என்று சொன்னார் நான் வந்துவிட்டேன். 

மறுநாள் இந்திய சாட்சிய சட்டம் பிரிவு 76 இன் கீழ் சான்று நகல் கோரும் மனுவை சம்பந்தப்பட்ட எஸ்.ஐ க்கும் அதன் நகலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கும் அனுப்பி உள்ளேன். அந்த மனுவையும் கீழே கொடுத்துள்ளேன். (நம்ம ஆராய்ச்சி முடிவின்படி, இந்திய சாட்சிய சட்ட உறுபு 76 என்றே குறிப்பிட வேண்டும்).

நாம் நீதியைத்தேடி... நூல்களிலேயே நம் பிரச்சனை களுக்கு நாமே தீர்வு காண வேண்டும். 

எதற்காகவும் ஆசிரியரிடம் ஆலோசனை கேட்கக் கூடாது என்று நீதியைத்தேடி... நூல்களிலேயே நம் ஆசிரியர் சொல்லி உள்ளதால் நீதியைத்தேடி... நூல்களை மட்டும் படித்துள்ளேன்.

மேலும் குற்ற விசாரணைகள் நூலில் நம் ஆசிரியர் பரிந்துரைத்த 5 அடிப்படை சட்டப் புத்தகங்களையும் படித்து அடுத்த 30 ஆம் தேதி நீதிமன்றத்தில் என்ன நடக்கும் என்பதை யூகித்து அன்றும் அங்கு பேசுவதற்கு தயார் செய்து வைத்துள்ளேன். 

இதை தாமதமாக பதிவு இடுவதற்கு காரணம் அவசரம் காரணமாக இரண்டு நாள் மருத்துவமனையில் இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விட்டது. மீண்டும் திரு வாரண்ட் பாலா சார் அவர்களுக்கு என் நன்றிகள்.

(நம் விளக்க குறிப்பு:  இந்த வாசகர் நம்மிடம் சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்பு நூல்களை வாங்கி இருப்பார் போலிருக்கு. தினசரி தொடர்பில் உள்ளவர்களே தடுமாறி விடும் நிலையில், தைரியமாக செயல்பட்டதைப் பற்றி மின்னஞ்சலில் அனுப்பியதை கட்டுரையாக பதிவு செய்கிறோம்.  

இவரைப் போன்ற வாசகர்கள் சிலர் தங்களை, ‘‘தன் வழக்கில் தானே வாதாடுபவர்கள், சுய வழக்காளிகள், சுய வழக்காளி வழக்கறிஞர்கள்’’ என்றெல்லாம் சொல்லிக் கொண்டு திரிகிறார்கள். 

இப்படிப்பட்ட அறிவு வறுமை வாசகர்களுக்கு நாங்கள் கேட்க விரும்பும் கேள்வி, எங்களுக்காக நாங்களே சாப்பிடுகிறோம், எங்களுக்காக நாங்களே குளிக்கிறோம், எங்களுக்காக நாங்களே கழுவிக் கொள்கிறோம் என சொல்லிக் கொள்வார்களா?

அப்படி சொல்லிக் கொண்டால், அவர்களை மற்றவர்கள் எப்படி பைத்தியம் என நினைப்பார்களோ அப்படித்தான் நாங்களும் நினைக்க வேண்டி உள்ளது)


பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

0 comments:

Post a Comment

பத்திரிகை செய்திகள்

அறவழி நோட்டா

அறவழி நோட்டா
மகாத்மா போதித்த வாக்குரிமை!

நோட்டா: NOTA

நோட்டா: NOTA
விளக்கம்: EXPLANATION

நூல்களின் முகப்பு

Followers

முக்கியப் பக்கங்கள்

அடிப்படை சட்டங்கள்

  • 1. இந்திய சாசனம் 1950
  • 2. நீதிமன்ற சாசனம் 1872
  • 3. இந்திய தண்டனை சட்டம் 1860
  • 4. குற்ற விசாரணை முறை விதிகள் 1973
  • 5. உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908

நம் நூல்களைப் பற்றி

நீதியைத்தேடி.... நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் வரிசையில்...
1 குற்ற விசாரணைகள்
2 பிணை (ஜாமீன்) எடுப்பது
எப்படி?
3 சட்ட அறிவுக்களஞ்சியம்
4 சட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்
5 சாட்சியங்களைச் சேகரிப்பது
எப்படி?
6 கடமையைச் செய்!
பலன் கிடைக்கும்
7 மநு வரையுங்கலை!Recent Posts Widget

இந்நூல்கள் அனைத்தும் உங்களின் சட்ட விழிப்பறிவுணர்வுக்காக
மத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவியோடு
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பொது நூலகங்கள், மத்திய சிறைச்சாலைகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

சொந்தமாக தேவைப்படுவோர், உ(ய)ரிய நன்கொடையைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு வாட்ஸ்அப் எண் 09842909190 ஆகும்.

எல்லாப் பதிவுகளும்!

நம் தள வகைகள்

பயின்றோர் (20-08-16)