No law no life. Know law, know life! நியாயந்தான் சட்டம்! அதற்கு தேவையில்லை வக்கீழ் பட்டம். வக்கீழ் என்றாலே, கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்களே! இடைத்தரகர்களே!! நீ வாழ, நீயே வாதாடு!

நீ வாழ... நீயே வாதாடு... வரவேற்பு வாழ்த்து!

No law, no life. Know law, know life! என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியத்தை உணர்ந்து, ‘‘நீதியைத்தேடி... சட்டப் பல்கலைக் கழகத்திற்கு’’ வருகை தந்துள்ள உங்களை வருக என வரவேற்று, உங்களுக்கான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்று பயனைப் பெறுக என வாழ்த்துகிறோம்!
முக்கிய அறிவிப்பு : இந்த இணையப்பக்கத்தை புதுப்பிக்கும் பணி நடந்துக் கொண்டிருப்பதால், சில பதிவுகள் அல்லது இணைப்புக்கள் கிடைக்காமல் போகலாம்!

Friday, October 25, 2019

எலிப் பொறியில் சிக்கிய எலி, அதிலிருந்து எளிதில் தப்பிக்க முடியுமா?கடந்த 21-10-2019 அன்று, எலிப் பொறிக்குள் சிக்கும் எலி எப்படி வெளியில் வரவேண்டுமென தெரியாமல் சிக்கி சாகிறதோ அப்படியே, சட்டத்துக்கு புறம்பாக நடக்கும் புறம்போக்கு அரசூழியர்களும் நாம் விரிக்கும் சட்ட வலையில் சிக்கினால் தப்பிக்கவே முடியாது என்பதை, நீவாழ, நீயே வாதாடு! என்ற நம்முடைய யூடியூபில் காணொளியாக வெளியிட்டோம். 

இப்படி நாம் தொடர்ந்து விரித்த சட்ட வலையில், தன்னை புலியாக கற்பனையில் கருதிக் கொண்டு சிக்கிய சி. சசிக்குமார் என்கிற சின்ன எலிக்குஞ்சி, அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து புலியை சிறையில்  அடைத்ததால், அந்த புலி சட்டப்படி வெளியில் வர, எலிக் குஞ்சியோ சிறைக்கு போகப் போகிறது.

ஆமாம், நேற்று நாம் வாசகர்கள் பதினைந்து பேர் போயிருந்து, புகார் கொடுத்தவர்கள் வாக்குமூலம் கொடுப்பதற்காக அவரது சாட்சிகளுடன் சேர்த்து நாலு பேர் வந்திருப்பதை பார்த்திருக்கிறார்கள். புகைப்படமும் எடுத்து இருக்கிறார்கள்.


ஆனால்,  அந்த திருட்டு முட்டாப்பய நிதிபதி சி. சசிக்குமார், குற்றத் தரப்பு சாட்சிகள் வரவில்லை என்று காரணத்தை எழுதி, மேலும் பதினைத்து நாட்கள் சிறையில் அடைத்து உள்ளான். ஆமாம், திருடனுக்கெல்லாம் சட்டத்தில் திருடர் என மரியாதை கொடுப்பதில்லை. இதுவேதான் நமக்கும்.

இதற்கெல்லாம் காரணம், மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் மூலமாக இவள் கொடுத்த மனு வந்து சேர்ந்ததுதான். அதன் மீது சட்டப்படி என்ன முடிவெடுப்பது என தெரியாமல் திருட்டுத்தனம் செய்து வசமாக மாட்டிக் கொண்டு உள்ளான். 

சொந்த சட்ட விரோதத்தின் காரணமாக, அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி ஒருவரை சிறையில் அடைப்பது, இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 220 கீழ், ஏழு வருடம் சிறைதண்டனை விதிக்கத்தக்க குற்றம்.

ஆகையால், இரவோடு இரவாகவும், விடிய விடியவும் இதற்கான நான்கு மநுவை தயார் செய்தாகி விட்டது. இதற்கு தக்கதொரு சாட்சியாக இவள் மனுவை வாங்கி அனுப்பிய தலைமை குற்றவியல் நடுவரே இருப்பதுதான் வேடிக்கையான விசயம். 

ஆகையால், திருட்டுத்தனம் செய்து, சிறையில் வைக்க சொன்னால், அவன் மீது சிறை தண்டனை விதிக்க குற்ற நடவடிக்கையை எடுக்க வேண்டுமென தலைமை குற்றவியல் நடுவருக்கு இன்று மனு கொடுக்கிறாள். 

ஆகையால், இவர் நடவடிக்கை எடுத்தாக வேண்டும். இல்லையேல், அவனது குற்றச் செயலுக்கு, குற்ற உடந்தையாக இருந்ததாகி விடும் என எச்சரித்தும், ரகுவை பிணையில் விடுவது உள்ளிட்டு, சட்டத்துக்கு உட்பட்ட நடவடிக்கையை எடுக்க கோரியுள்ளதால், நாளைக்குள் பிணையில் வெளிவர வாய்ப்பு உண்டு. 

இம்மனு எட்டு மணிக்கு முன்பாக நீதியைத்தேடி... இணையப்பக்கம், வாட்ஸ்அப், முகநூல் ஆகியவற்றில் பகிரப்படும். 

நான்காவது பக்கத்தில் பாதி பக்கம் வெற்றிடமாக அமைக்கப்பட்டு உள்ளது. இதில் தங்களின் கருத்துக்களை எழுதி பிரதி எடுத்துக் கொண்டு இம்மூன்று முகவரிகளுக்கு அனுப்பி வைக்கலாம்.

1. திரு. ஜி. சுந்தரராஜன், மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம், திருப்பூர் - 641602

2. பொதுப் பதிவாளர், சென்னை உயர்நீதிமன்றம், சென்னை - 600104

3. முட்டாள் நிதிபதி சி. சசிக்குமார், நீதித்துறை குற்றவியல் நடுவர் மன்றம், தாராபுரம் - 638656

குறிப்பு: *மனுவை முழுமையாகப் படித்து விட்டு, கருத்துக்கள் சரிதான் என கருதுபவர்கள் மட்டும், அவரவரது முகவரியுடன் பதிவு அஞ்சல் மூலமாக, மதியம் 12 மணிக்குள் அனுப்புவதே நல்லது.* 

இதற்காக ஆகும் செலவை விரும்பினால், கேர் சொசைட்டியில் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.

இந்த மனுவில் மிகமிக முக்கியமாக புரிந்து கொண்டது என்ன என்பதை, பின்னூட்டமாக பதிவிடவும்.

*******************பிற்சேர்க்கை நாள் 26-10-2019 

நேற்று நம்ம முட்டாள் நிதிபதிக்கு கடிதம் அனுப்பிய பலபேர் முட்டாள் நிதிபதி என்றே எழுதி அனுப்பலாமா அஞ்சல் அலுவலகத்தில் ஏற்றுக்கொள்வார்களா என்றெல்லாம் கேட்டார்கள். உங்கள் விருப்பப்படி அனுப்புங்கள் என சொல்லியாச்சு.

ஆனால் இன்று அனுப்பிய வாசகர் ஒருவர் அஞ்சல் உரையிலேயே முட்டாள் நிதிபதி சி. சசிகுமார் என குறிப்பிட்டே அனுப்பியுள்ளார். மனுவில் கொடுத்திருந்த காலி இடம் போதாததால் கூடுதலாக ஒரு பக்கத்தையும் சேர்த்துள்ளார்.

ஏற்கனவே நாம் பலமுறை தான் முட்டாள் என்று சொல்லி இருந்தாலும் கூட இப்படி அஞ்சலுறை முகவரியிலேயே எழுதி அசிங்கபடுத்தியது மிகவும் கேவலம் தான் அவனுக்கு. இதையும் அந்த முட்டாள் வாங்குறானா இல்லை; இது எனக்கு வந்ததில்லை என்று திருப்பி அனுப்பறானா என்று பாக்கணும்.

இப்படி முட்டாள் நிதிபதி என்று வேறு சிலரும் அனுப்பியதை, அவர்கள் நேற்றே அனுப்பி ருந்தும் இப்போதுதான் கவனிக்கிறோம். இதைப் படித்த அஞ்சலக ஊழியன், நீதிபதியையே முட்டாள் நிதிபதி என எழுதி இருக்கானுங்கன்னா நமக்கு எதுக்கு வீண் வம்பு என்றே நினைத்திருக்கனும்.

ஆனால், அவிங்களுக்கு பிரச்சினை வரகூடாது என்பதற்காக, முட்டாள் நிதிபதி என்பதை தவிர்த்து, சி. சசிக்குமார் என்ற பெயரில் பதிவு செய்து இரசீது கொடுத்திருக்கான். பெயரை குறிப்பிடாமல் வெறுமனே, முட்டாள் நிதிபதி நீதித்துறை நடுவர், தாராபுரம் என்று குறுப்பிட்டால், என்ன செய்வானுங்க!

சட்ட அறிவில்லாத முட்டாள் என்று சொன்னதால், சொந்த விரோதத்தில் சிறையில் அடைத்து, ஒரு பெண்ணிடம் உன் திருட்டு முட்டாள்தனத்தை காட்டுவதுபோல, உனக்கு ஆண்மை இருந்தால் என்னை அடைத்துப் பார் என்று சவால் விட்டு சோதனைக்கு உட்படுத்தி இருக்கலாம். 

ஏனெனில், இதையெல்லாம் நாங்கள் ஏற்கெனவே செய்து சோதித்து விட்டோம் என்பது நூல்களைப் படித்தாலே புரியும்!

எது எப்படியோ, எந்த புத்துல எந்த பாம்பு இருக்கும்னு தெரியாம கைய விடுவது போல, முட்டாள்தனமா மாட்டிக்கிட்டு, கண்டபடி வசவை இசையா வாங்கி கிட்டு இருக்கிறான்.

நியாயந்தான் சட்டம்!

மீண்டும், மீண்டும் நிரூபணம்!!

ஆமாம், நியாயந்தான் சட்டம்! என்பது நாம் முன்மொழிந்துள்ள தத்துவம். இதற்கு எதிராக யார் நடந்தாலும் சட்டப்படியே சிக்கலில் சிக்குவார்கள் என்பதற்கு, இந்த முட்டாள் திருட்டு நிதிபதியே நல்ல சாட்சி!

நிதிபதிகள் அடிப்படை சட்ட அறிவே இல்லாத முட்டாள்கள் என்பது நமக்கு நன்றாகவே தெரியும். ஆனால், அதனை எங்களைப் போன்ற வெகுசிலரை தவிர மற்றவர்களால் தைரியமாக சொல்ல முடிவதில்லை.

காரணம், இந்த முட்டாள் திருட்டு நிதிபதியைப் போல, அவனது அற்ப சொற்ப அதிகாரத்தை, நிதிபதிகள் தவறாகப் பயன்படுத்தி சிறையில் வைத்து விடுவானுங்க என்ற சட்ட அறியாமை அச்சம்தான். 

அப்படி வைப்பவனுக்கும் எப்படி சரியாக ஆப்பு அடிக்கலாம் என்பதற்கு, இருக்கவே இருக்கு இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 220 என்பதை புரிந்துக் கொண்டு, நிதிபதிகள் உள்ளிட்டு தவறு செய்யும் எவனையும் விடக்கூடாது. எப்படியெல்லாம் வறுத்தெடுக்க முடியுமோ, அப்படி வறுவறுன்னு வறுத்தெடுத்திடனும்.

நம் ஆசிரியர் திரு. வாரண்ட் பாலா அவர்கள், அடிக்கடி சொல்வது, குடிமக்கள் அனைவரும் முதலில் அடிப்படை சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்றுக் கொள்ளுங்கள். பின் நியாயந்தான் சட்டம் என்பது தானாகவே விளங்கும்.


பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

3 comments:

 1. அய்யா, இவனை போன்றவர்களுக்கு நிதிபதிகளுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும்.இந்த வழக்கில் ஒரு நல்லதீர்வு கிடைத்து கண்டிப்பாக மக்கள் அனைவருக்கும் தெரிய வரவேண்டும் தொடர்ந்து எலிப் பொறியியல் சிக்கிய எலியை தப்பமுடியாதபடி கழுத்துபிடியாக பிடித்து நசுக்கிவிடுங்கல் அப்பதான் இவனைபோன்ற மற்ற எலிகளும் இவர்களின் தவறுகளுக்கு உடைந்தையாக செயல்படும் பெருச்சாளி கற்கும் தக்க பாடமாக அமையட்டும் வெற்றி நமதே உங்களுடைய பொதுநலன் உழைப்பு என்றும்
  வீண்போகாது நல்லதே நடக்கும் நன்றி

  ReplyDelete
 2. அய்யா, நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கைளை பார்த்தால், திருட்டு முட்டாள் நிதிபதி என்ற பட்டம் பெற்ற சசிக்குமார் ஏற்கனவே, திருட்டுத்தனமாக படித்து திருட்டு வழியில் பட்டம் பெற்று திருட்டு வழியில் நிதிபதியாகியது இவனுது சட்ட அறிவு புலமையில் தெள்ளத் தெளிவாகிறது. இந்த வருடம் இவனுது குடும்பமே திருட்டுத்தனமாகதான் திபாவளி பண்டிகையை கொண்டாடனும் வெளியில் தலை காட்ட முடியாது வாசகர்கள் அனுப்பிய முட்டாள் நிதிபதி என்ற பதிவு அஞ்சல் கடிதத்தை வாங்க மறுத்தாலும் தான் ஒரு முட்டாள் நிதிபதி என உலகமே அறிந்துவிட்டது என்பது கண்டிப்பாக புலப்படும்.

  ReplyDelete
 3. நீங்கள் எவ்வளவோ எடுத்து சொல்லியும் அவனுங்க அறிவில் ஏற மாட்டேன் என்கிறதே
  அதனால தான் நீங்கள் அவனுங்களுக்கு முட்டாள் பட்டம் கொடுத்து இருக்கிறீர்கள்.சாபாஷ்

  ReplyDelete

பத்திரிகை செய்திகள்

அறவழி நோட்டா

அறவழி நோட்டா
மகாத்மா போதித்த வாக்குரிமை!

நோட்டா: NOTA

நோட்டா: NOTA
விளக்கம்: EXPLANATION

நூல்களின் முகப்பு

Followers

முக்கியப் பக்கங்கள்

அடிப்படை சட்டங்கள்

 • 1. இந்திய சாசனம் 1950
 • 2. நீதிமன்ற சாசனம் 1872
 • 3. இந்திய தண்டனை சட்டம் 1860
 • 4. குற்ற விசாரணை முறை விதிகள் 1973
 • 5. உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908

நம் நூல்களைப் பற்றி

நீதியைத்தேடி.... நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் வரிசையில்...
1 குற்ற விசாரணைகள்
2 பிணை (ஜாமீன்) எடுப்பது
எப்படி?
3 சட்ட அறிவுக்களஞ்சியம்
4 சட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்
5 சாட்சியங்களைச் சேகரிப்பது
எப்படி?
6 கடமையைச் செய்!
பலன் கிடைக்கும்
7 மநு வரையுங்கலை!Recent Posts Widget

இந்நூல்கள் அனைத்தும் உங்களின் சட்ட விழிப்பறிவுணர்வுக்காக
மத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவியோடு
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பொது நூலகங்கள், மத்திய சிறைச்சாலைகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

சொந்தமாக தேவைப்படுவோர், உ(ய)ரிய நன்கொடையைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு வாட்ஸ்அப் எண் 09842909190 ஆகும்.

எல்லாப் பதிவுகளும்!

நம் தள வகைகள்

பயின்றோர் (20-08-16)