நீ வாழ... நீயே வாதாடு... வரவேற்பு வாழ்த்து!

No law, no life. Know law, know life! என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியத்தை உணர்ந்து, ‘‘நீதியைத்தேடி... சட்டப் பல்கலைக் கழகத்திற்கு’’ வருகை தந்துள்ள உங்களை வருக என வரவேற்று, உங்களுக்கான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்று பயனைப் பெறுக என வாழ்த்துகிறோம்!
முக்கிய அறிவிப்பு : இந்த இணையப்பக்கத்தை புதுப்பிக்கும் பணி நடந்துக் கொண்டிருப்பதால், சில பதிவுகள் அல்லது இணைப்புக்கள் கிடைக்காமல் போகலாம்!

Friday, October 11, 2019

அசுத்த சுத்தத்தில் வீடும், நாடும் ஒன்றே!



பொதுவாக இரண்டில் எது சிறந்தது என்ற கேள்வி எழும்போது, அந்த இரண்டின் நன்மை தீமைகளை தனித்தனியாக பட்டியலிட்டு காட்டுவதே எளிமையாக புரியும். 

இதற்கு நல்லதொரு உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், நம்முடைய நீதியைத்தேடி... குற்ற விசாரணைகள் நூலில், ‘‘நம் வழக்கில் நாமே வாதாடுவதற்கும், வக்கீழ்ப் பொய்யர் வாதாடுவதற்கும் உள்ள வேறுபாட்டை பட்டியல் இட்டு காட்டப்பட்டு உள்ளது’’ அல்லவா? அதை சொல்லலாம்! 

இதே முறையில் ஒரே மாதிரியான நன்மை தீமைகளை ஒப்பீடாகவும் சொல்லலாம். 

ஆமாம், பொதுவாக மக்கள் தாங்கள் வாழும் வீடுகள் உள்ளிட்ட இருப்பிடங்களை பெரும்பாலும் அழுக்காகத்தான் வைத்திருப்பார்கள். 

வருடத்துக்கு ஒரு முறையாவது சுத்தமாகட்டும் என்ற அடிப்படையில்தான் போகிப் பண்டிகை கொண்டாடப் படுகிறது. இது தவிர, வெவ்வேறு நாளுங்கிழமைகள், நல்ல நாட்கள் எனவும் கொண்டாடப்படுகிறது. ஆனாலும், அழுக்குக்கு மட்டும் பஞ்சமே இருக்காது. 

யாராவது முக்கியமான விருந்தாளி வருவதாக தகவல் வந்தால் மட்டும் வழக்கத்தை விட சற்று சுறுசுறுப்பாகி சுத்தப்படுத்தி வைத்துக் கொள்வார்கள்.

அது ஒரு நாலைந்து நாளைக்கு நீட் தேர்வு நீட்டாக நடந்து போல தோன்றி, பின்பு அலங்கோலமாகி விடும். 

அதே முக்கிய விருந்தாளி சொல்லாமல் வந்து விட்டால், (அ, இ)ங்கப் போயிருந்தேன் என சொல்ல வேண்டிய பொய்களை எல்லாம் சொல்லி, வந்தவர்கள் புழங்கும் முக்கியமான இடங்களை மட்டும் சுத்தம் செய்வார்கள். 

இவர்களே ஓரிரு முறை சொல்லாமல் தொடர்ந்து வந்து விட்டால், நம்மோடு சேர்ந்து அவரும் பழகிக் கொள்வார் என வந்தவரை சாப்பாட்டில் தனிக்கவனம் செலுத்தி கவனிப்பதன் மூலம், அன்று தங்களுக்கும் விருந்தாகி கொள்வார்கள்.  

இப்படி, வீட்டை சுத்தமாக வைத்திருக்க வேண்டிய பெண்கள், தனியாக வசிக்கும் ஆண்களின் இல்லத்திற்கு வந்தால், என்ன வீட்டை இவ்வளவு சுத்தமில்லாமல் வச்சிருக்கிங்க! என்று சொல்லி சுத்தம் செய்ய களமிறங்கி விடுவார்கள்.  

இதிலும், ஒன்றுக்கு மேற்பட்ட பெண்கள் வந்திருந்தால், அவர்களுக்குள் உள்ள போட்டியில் அனைத்தும் சுத்தமாகி விடும். ஆகையால், ஆண்களுக்கு சந்தோசமோ, சந்தோசமாகி விடும்.  

ஆஹா, இவர்கள் அடிக்கடி வந்தால், நம் வசிப்பிடம் சுத்தமாக இருக்குமே என நினைப்பார்கள். ஆனால், அப்படி ஓரிரு வாரங்களோ மாதங்களோ தங்க நேர்ந்தால், ஏண்டா தங்கினார்கள் என்று ஆகிவிடும். 

இப்படிதான் நாட்டிலும் நடக்கிறது. 

ஆமாம், வழக்கமான விருந்தாளியாக மோடி வரும்போது, செய்யப்படாத சுத்தமெல்லாம், இதுவரை வராது முதல் முறையாக சொல்லி விட்டு வரும் சீன அதிபருக்காகவே, அவர் பயணிக்கும் இடங்கள் மட்டும் ஜொலிக்கும்படி செய்து விட்டார்களாம்!

clip
இது சீன அதிபரின் வரவால், சென்னையின் சில பகுதிகளுக்கு ஏற்பட்ட தற்காலிக விடிவு. ஆகையால், இதனை கண்குளிர காணவாவது உடனே, சென்னைக்கு போக வேண்டுமென தோன்றுகிறது. நாலு நாள் கழித்து போனால் கூட நாறிவிடுமே!

சிங்கார சென்னையின் மற்றப் பகுதிகள், மற்றும் நாட்டின் பிறபகுதிகள் எல்லாம் நாறி நாற்றமெடுத்துதான் கிடக்கிறதாம்! இப்படித்தான் இருக்கும் என்பதற்காகத்தானே முன்பு வீட்டை வைத்து சொன்னோம். 

இதில் புரியாத புதிர் என்னான்னா, ‘‘இப்படி வீட்டில் நடப்பதால் நாட்டில் நடக்கிறதா... அல்லது நாட்டில் நடப்பதால் வீட்டில் நடக்கிறதா’’ என்பதே!


பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

2 comments:

  1. அய்யா, நீங்கள் சொல்வதுபோல் வீடு சுத்தமாக இருந்தால் நாடு சுத்தமாக இருக்கும் முதலில் வீட்டிலிருக்கும் மனிதர்களின் மனம் குப்பைதொட்டியாக செயல் படுகிறது அதேபோல்தான் நாட்டை ஆளும் மனிதர்களின் மனம் குப்பை கிடங்காக செயல்படுகிறது எல்லாமே தன் நலம் காக்க சுயநலமே

    ReplyDelete
  2. வீடும் நாடும் நாமூம் சுத்தமாக இருந்தால் நலமாகும்.

    ReplyDelete

பத்திரிகை செய்திகள்

அறவழி நோட்டா

அறவழி நோட்டா
மகாத்மா போதித்த வாக்குரிமை!

நோட்டா: NOTA

நோட்டா: NOTA
விளக்கம்: EXPLANATION

நூல்களின் முகப்பு

Follow by Email

Followers

முக்கியப் பக்கங்கள்

அடிப்படை சட்டங்கள்

  • 1. இந்திய சாசனம் 1950
  • 2. நீதிமன்ற சாசனம் 1872
  • 3. இந்திய தண்டனை சட்டம் 1860
  • 4. குற்ற விசாரணை முறை விதிகள் 1973
  • 5. உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908

நம் நூல்களைப் பற்றி

நீதியைத்தேடி.... நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் வரிசையில்...
1 குற்ற விசாரணைகள்
2 பிணை (ஜாமீன்) எடுப்பது
எப்படி?
3 சட்ட அறிவுக்களஞ்சியம்
4 சட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்
5 சாட்சியங்களைச் சேகரிப்பது
எப்படி?
6 கடமையைச் செய்!
பலன் கிடைக்கும்
7 மநு வரையுங்கலை!Recent Posts Widget

இந்நூல்கள் அனைத்தும் உங்களின் சட்ட விழிப்பறிவுணர்வுக்காக
மத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவியோடு
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பொது நூலகங்கள், மத்திய சிறைச்சாலைகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

சொந்தமாக தேவைப்படுவோர், உ(ய)ரிய நன்கொடையைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு வாட்ஸ்அப் எண் 09842909190 ஆகும்.

எல்லாப் பதிவுகளும்!

நம் தள வகைகள்

பயின்றோர் (20-08-16)