No law no life. Know law, know life! நியாயந்தான் சட்டம்! அதற்கு தேவையில்லை வக்கீழ் பட்டம். வக்கீழ் என்றாலே, கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்களே! இடைத்தரகர்களே!! நீ வாழ, நீயே வாதாடு!

நீ வாழ... நீயே வாதாடு... வரவேற்பு வாழ்த்து!

No law, no life. Know law, know life! என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியத்தை உணர்ந்து, ‘‘நீதியைத்தேடி... சட்டப் பல்கலைக் கழகத்திற்கு’’ வருகை தந்துள்ள உங்களை வருக என வரவேற்று, உங்களுக்கான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்று பயனைப் பெறுக என வாழ்த்துகிறோம்!
முக்கிய அறிவிப்பு : இந்த இணையப்பக்கத்தை புதுப்பிக்கும் பணி நடந்துக் கொண்டிருப்பதால், சில பதிவுகள் அல்லது இணைப்புக்கள் கிடைக்காமல் போகலாம்!

Monday, October 7, 2019

வாகன ஓட்டிகளான வாசகர்களின் சாதனை அனுபவங்கள் - 2இது வாகன ஓட்டிகளே உஷார்! மற்றும் வாகன ஓட்டிகளான வாசகர்களின் சாதனை அனுபவங்கள் - 1 என்ற கட்டுரைக்கு பிறகு படிக்க வேண்டிய அனுபவ கட்டுரை. 

இந்த அனுபவம், ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த நம் வாசகர் பிரகாஷ் என்பவருடையது. இவர் என்ன சொல்கிறார்?

****************

நான் கடந்த 23-09-2019 மாலை சுமார் ஆறு மணி அளவில் ஈரோடு, அரச்சலூர் காவல் நிலையத்தின் முன் கேவலர்கள் வாகன சோதனை நடத்தினர். நான் தலைக்கவசம் அணியாமல் சென்றதால், தடுத்து நிறுத்தி ஓட்டுநர் உரிமம் முதலியவற்றை சரி பார்த்தனர். 

பின் அனைவருக்கும் ஸ்பாட் பைன் விதித்து, வண்டி சாவியை பறித்து வைத்துக்கொண்டு கட்டிவிட்டு வண்டியை எடு என , துணை ஆய்வாளர் மிரட்ட, ஆய்வாளர், புதிய ஸ்பாட் பைன் மெஷின் வைத்து அதிவேகமாக கிட்ட தட்ட 50 பேர் வரை சீரும் சிறப்புமாக வழிப்பறி நடந்து கொண்டிருந்தது. 

நான் இப்போது பணம் இல்லை, கோர்ட்டில் கட்டுகிறேன் என்றேன். அதெல்லாம் முடியாது உனக்கு ஒருத்தனுக்கு அப்படியெல்லாம் பண்ண முடியாது என்று, தன் பணியை தொடர்ந்தார். 

சில நிமிடங்கள் கடந்தது, எத்தனை தடவை படித்து இருப்பினும் 1988 மோட்டார் வாகன சட்டம் 129 தவிர, மற்றவை மறந்துவிட அலைபேசி கையில் இருந்ததால் ‘‘நீதியைத்தேடி... இணையதள பக்கத்தில் உள்ள வாகன ஓட்டிகளே உஷார்’’ என்ற கட்டுரையில் உள்ள சட்ட விதிகளை படித்துக் கொண்டேன்.  

இதற்கு இடையில் ஸ்பாட் பைன் போட்டுவிட்டு அருகில் உள்ள கடையில் கட்டிவிட்டு வா சாவி தருகிறேன் என்றார். நான் அவர் வேலையை முற்றிலும் குறுக்கிட்டு, வண்டியை தக்க காரணமின்றி தடுத்து வைப்பது இந்திய அரசமைப்பு கோட்பாடு 21 இன் படி தவறு என்றேன். 

பின் Cr.p.c 424 இன்படி ஸ்பாட் பைன் தவறு என்றேன். நின்றிருந்த அனைவரும் பார்த்தனர். அதனால் நீ வண்டியை கோர்ட்டில் எடுத்துக்கொள் என்று கூறிவிட்டார். 

நீதியைத்தேடி... உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர் ‘‘கேவலரிடம் சட்டம் பேசாதீர்கள். நீதிமன்றத்தில் பேசுங்கள்’’ என்று நூல்களில் அறிவுரையாக சொன்னது ஞாபகம் வந்தது. சரி என்று 100 க்கு அழைத்து, வலுக் கட்டாயமாக ஸ்பாட் பைன் கேட்கிறார்கள் என்றேன். அதற்கு அவர்களும் கட்ட வேண்டும் என்றே சொன்னார்கள். எல்லாம் ஊழல் கொள்ளை என்கிற ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தானே?

நான் உடனடியாக கட்ட வேண்டும், இல்லை என்றால் வாகனத்தை பறிமுதல் செய்வேன் என்று சொல்வது தவறு என்றேன். 

மேலும் ஒரு பேப்பரை வாங்கி cr.pc 424 , motor vehicle act 1988 section 129, இந்திய சாசன கோட்பாடு 21 உள்ளிட்டவற்றை குறிப்பிட்டு (அப்போது கேர் சொசைட்டியின் உதவியை வாட்ஸாப்பில் கேட்டபோது, படித்துக் கொள்ள வேண்டுமே தவிர, இப்படியெல்லாம் கேட்க கூடாது என்ற அறிவுறுத்தலோடு சொன்னார்கள். இதுவும் சரிதான், அந்த நேரத்தில் அவர்கள் வாட்ஸ்அப்பை பார்க்காமல் பல மணி நேரம் கழித்து பார்த்தால், நம் கதி என்னாவது?). வண்டியை விடுங்கள், இல்லையேல் வண்டி பறிமுதல் செய்பட்டதற்கான காரணத்துடன் கூடிய சான்றை எழுதிக் கொடுங்கள் என கேட்டேன்.


இம்மனுவை வாங்கிப் படித்து பார்த்து விட்டு இப்படி எல்லாம் சட்ட விதி இல்லை என்றார். வண்டியை சீஸ் பண்ண சொல்லி இருக்கிறார்கள் என்றார். எந்த சட்டம் அல்லது அரசாணைப்படி என்றேன். இதெல்லாம் வாங்க முடியாது என்று மனுவை திருப்பி கொடுத்து விட்டார் ஆய்வாளர். 

இதற்கு இடையிலும், பின்னும் ஸ்டேஷனில் இருந்த கேவலர்கள் அனைவரும், என்னை பணிய வைக்கும் ஓர் அற்ப முயற்சியாக அதை பண்ணுவேன் இதை பண்ணுவேன் என்று வித விதமான மிரட்டல்கள் விடுத்தனர். நான் பண்ணுங்க பார்ப்போம் என்றேன். 

லோக்கல்ல இருந்துகிட்டு ஏன் 100 ரூபாய்க்கு இவ்வளவு அழும்பு செய்கிற என்றார்கள்? ஆனால், அதே 100 ரூபாய்க்கு அவர்கள், சட்டத்துக்கு புறம்பாக அழும்பு செய்வார்களாம். அதற்கு நாம் சட்டத்துக்கு புறம்பாக ஒத்துழைக்கனுமாம்! இவர்கள் காக்கிச் சட்டை காவலர்களா... இல்லை, கயவர்கள். 

நம் ஆசிரியர் உள்ளிட்ட சரியான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்றோர் அனைவரும் கேவலர்கள் என்று, ஆசிரியரின் பாணியிலேயே காவலர்களைப் புகழ்வது மிகமிக சரியே! 

ஆனால், நானோ இப்படியெல்லாம் சட்ட விதிகள் இருக்கும் போது ஏன் அதன்படி செயல்பட மறுக்கிறீர்கள் என்றேன். ஒரு நூறு ரூபாய்க்கு ஒரு மணி நேரம் ஏன் விவாதம்? சொல்லி இருந்தால் காலம் தாழ்த்தி கட்டும் விதமாகவே பைன் போட்டிருப்பேன், என சொல்லி கட்டி விட்டு் ஸ்லிப் கொடுங்கள் என்று கூறி சாவியை கொடுத்து விட்டனர்.

(நம் குறிப்பு: கேவலர்கள் உள்ளிட்ட எவரும் நம்மை சட்ட விரோதமாக நடக்க வலியுறுத்தும் போது, சட்டத்துக்கு விரோதமாக நடக்க எனக்கு உரிமையில்லை என்று சொன்னாலே போதும். உனக்கும் அந்த உரிமையில்லை என்று நேரடியாக சொல்லாமல், மறைமுகமாக சொல்லியதாகி விடும்.

இப்படி நம் ஆசிரியர் பல இடங்களில் பல்வேறு விதமாக கையாண்ட அனுபவங்களை நூல்களில் விளக்கி சொல்லி இருக்கிறார். இதையெல்லாம் ஆழ்ந்துப் படித்துப் புரிந்துக் கொண்டால்தான் உண்டு.

இதில், உண்மைக்கு ஒன்று சொல்ல வேண்டுமென்றால், ‘‘மூன்று முறைக்குமேல் வாய்தா கொடுங்கள் என சொல்வதற்கு எனக்கு உரிமையில்லை’’ என்று தொழிலாளர் வழக்கில், நிதிபதியிடம் சொல்லியதன் மூலம், ‘‘எதிர்த்தரப்பு வாய்தா கேட்கவும் முடியாது, அவனே கேட்டாலும் நீ கொடுக்கவும் முடியாது’’ என்று நிதிபதிக்கு மறைபொருளாக உணர்த்தியதை சொல்லலாம்.

இதையே நேரடியாக சொன்னால், என்னையே எதிர்த்து பேசுறியா என அம்முட்டாள்களுக்கு கோபம் வரும். அப்படி வரும் கோபம், தேவையற்ற வேறு வீண் விளைவுகளை ஏற்படுத்தி விடும். எச்சரிக்கை!)

என் உலாப்பேசி எண் வேண்டுமா என கேட்டேன், வேண்டாம் என்றனர். கடைசியில் இவ்வளவு சட்டம் பேசுகிறீர்கள் கம்பெனி பங்குதாரர் என்கிறீர்கள். உங்க கம்பெனியில் எப்படி சட்டம் கடைப் பிடிக்கரீங்கன்னு பார்ப்போம் என்று சொல்லி அனுப்பினர்.

இதுபற்றி கேர் சொசைட்டியில் கேட்ட போது, வாகன ஓட்டிகளே உஷார்! மற்றும் முதல் அனுபவ கட்டுரையில் சொல்லியுள்ளபடி, அவர்கள் போட்ட ரூ 100 அபராதத்தை அவர்களே கட்டி விடுவார்கள் என்றார்கள். இதன்படி இதுவரை நான் கட்டவுமில்லை. யாரும் கட்டச் சொல்லி கேட்கவும் இல்லை.


ஆனால், இணைய வழியில் சோதித்துப் பார்த்ததில் கட்டாமல் நிலுவையில் இருக்கிறது என்று உள்ளது. ஆகையால், நல்லதொரு சட்ட சிக்கலை, சட்ட விரோதமாக எனக்கு உண்டாக்கி இருக்கிறார்கள். பணத்தை செலுத்தாத வரை வேறு சேவைகள் எதையும் பெறமுடியாது. 

எனவே, சட்டப்படி நடக்க நினைக்கும் நீங்கள், முதல் அனுபவ கட்டுரையில் சொன்னபடி, ‘‘எனக்கு ஹெல்மட் போட விரும்பமில்லை. இதற்காக நீங்கள் குற்றம் சுமத்தி வழக்கு போடுங்கள். நான் வாதாடிக் கொள்கிறேன்’’ என்று சொல்லி கேவலர்கள் இரசீது போடாமல் தடுத்து விடுங்கள்.

அப்படியே அவர்கள் போட்டாலும் வாங்காமல், வழக்கு போட சொல்லி வாங்க மறுத்து விடுங்கள். இல்லையெனில், இதுபோன்ற வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.

இந்தப் பிரச்சினையை சாதனையாக மாற்றுவதும், சாதாரணமாக எல்லோரையும் போல கட்டி விட்டு கடந்துப்போய் விடுவதும் என்னுடையதே! ஆமாம், வண்டி என் அப்பா பெயரில் இருக்கிறது. ஆனால், இதுவரை அப்பாவுக்கு இந்த நிகழ்வுப்பற்றி எதுவும் தெரியாது!!

ஆனாலும், இச்சட்ட விரோத அபராதம் குறித்தும், இதனை இணையத்தில் ஏற்றியது குறித்தும் சில கேள்விகளை எழுப்பி, இந்த இணையப்பக்கத்தை நிர்வகிக்கும் மத்திய அரசின் சாலைப் போக்குவரத்து துறைக்கு சான்று நகலை கேட்டு மின்னஞ்சல் அனுப்பி உள்ளேன்.

இது தொடர்பாக யாராவது தேடி வந்து கேட்டால், நிதிபதி மட்டுந்தான் விசாரித்து அபராதம் விதிக்க முடியும். ஆகையால், இதெல்லாம் கட்ட முடியாது என சொல்ல உள்ளேன்.

இதுதான் நான் காவல் நிலையத்திற்கு முதல் முறையாக சென்று கேவலர்களிடம் முறையாகவே பேசியது. ஆகையால், சற்று இயல்பான பதட்டம் எனக்கு இருக்கவே  செய்தது.

நமக்கு அடிப்படை சட்ட விழிப்பறிவுணர்வு இருந்தால், எப்படி எதிலும் ஏமாராமல் இருக்கலாம் என்பது இப்போது என்னைப் போலவே உங்களுக்கும் நன்றாகவே விளங்கி இருக்கும்.

இதில் நான் முக்கியமாக சொல்ல வேண்டியது அனுபவம் இல்லாமல் படித்தபோது ஒருவிதமான புரிதலும் அனுபவத்தோடு படித்தபோது புரிதல் வேறுவிதமாகவும் இருந்தது. ஆமாம் முன்பு படித்த போது சட்டவிதிகள் நினைவிலில்லை. ஆனால் அனுபவப்பட்ட படித்தபோது சட்ட விதிகள் அப்படியே நினைவில் நிற்கின்றன.

இந்த சட்ட அனுபவத்திற்கு காரணமாக இருக்கும் சட்ட ஆராய்ச்சி ஆசிரியர் திரு. வாரண்ட் பாலா அவர்களுக்கும், அவரது நூல்களை வெளியிடும் கேர் சொசைட்டிக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

(நம் குறிப்பு: அவர்கள் கேவலர்கள் என தெரிந்தப் பிறகு தேவையில்லாம் நம்முடைய தொடர்பு எண்ணையோ, நாம் பார்க்கும் வேலையையே சொல்ல வேண்டிய அவசியமில்லை. இது சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்வதற்கு ஒப்பாகும். இதையெல்லாம் சாதாரண வாகன சோதனையில் ஈடுபடும் கேவலர்கள் கேட்க உரிமையில்லை. ஆனால், வாகனத்தால் குற்றம் எதுவும் நிகழ்ந்து, அந்த குற்றத்தைப் புலனாய்வு செய்பவர்கள் கேட்கலாம்). 

இதன் தொடர்ச்சியாக,  இதுபோன்ற சட்ட விழிப்பறிவுணர்வு அனுபவங்களை வாசகர்கள் ஆதாரங்களுடன் பகிர்ந்தால், கட்டுரையாக பகிர்வோம்.


பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

3 comments:

 1. மோட்டார் வாகன சட்டமும் விதிகளும், இருசக்கர வாகனத்திற்கு மட்டுமே உருவாக்கப்பட்டது போல கேவலர்கள் செயல்படுகிறார்கள். ஹெல்மெட் பிரச்சினை மட்டுமே அவமானத்தை சேர்த்து வருமானத்தை தருகிறது ஈனப்பிறவிகுக்கு மற்றவகை வாகனங்கள் மோட்டார் வாகன சட்டமும் விதிகளின்படி தான் இயங்குகிறதா என்றால் இல்லை இதில் கேவலர்களாகிய உங்களுக்கு வருமானம்மில்லை அதனால் எவனும் கண்டுகொள்வதில்லை. குறிப்பு: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பேருந்துக்களில் எந்தவொரு ஆவணங்களும் காப்பீடும் இல்லாமல் இயக்கப்படுகிறதே உங்களால் ஸ்பாட் பைன் போடமுடியுமா அதற்கு தகுதியுண்டா மாநில அரசு சட்டத்தை மதிப்பதில்லை மக்கள் மட்டுமே அதுவும் இருசக்கர வாகன ஓட்டிகள் மட்டும் சரியாக சட்டத்தை மதித்து ஹெல்மெட் போட வேண்டும் நியாயம்தான் சட்டமோ தவிர உங்களின் அதிகாரம் சட்டமல்ல.

  ReplyDelete
 2. முற்றிலும் உண்மை........
  (இதில் நான் முக்கியமாக சொல்ல வேண்டியது அனுபவம் இல்லாமல் படித்தபோது ஒருவிதமான புரிதலும் அனுபவத்தோடு படித்தபோது புரிதல் வேறுவிதமாகவும் இருந்தது. ஆமாம் முன்பு படித்த போது சட்டவிதிகள் நினைவிலில்லை. ஆனால் அனுபவப்பட்ட படித்தபோது சட்ட விதிகள் அப்படியே நினைவில் நிற்கின்ற).....

  ReplyDelete

 3. //இதில் நான் முக்கியமாக சொல்ல வேண்டியது அனுபவம் இல்லாமல் படித்தபோது ஒருவிதமான புரிதலும் அனுபவத்தோடு படித்தபோது புரிதல் வேறுவிதமாகவும் இருந்தது. ஆமாம் முன்பு படித்த போது சட்டவிதிகள் நினைவிலில்லை. ஆனால் அனுபவப்பட்ட படித்தபோது சட்ட விதிகள் அப்படியே நினைவில் நிற்கின்றன.// ஆர்வமும்,தைரியமும் முன்னை விட அதிகமாக இருக்கும்

  ReplyDelete

பத்திரிகை செய்திகள்

அறவழி நோட்டா

அறவழி நோட்டா
மகாத்மா போதித்த வாக்குரிமை!

நோட்டா: NOTA

நோட்டா: NOTA
விளக்கம்: EXPLANATION

நூல்களின் முகப்பு

Followers

முக்கியப் பக்கங்கள்

அடிப்படை சட்டங்கள்

 • 1. இந்திய சாசனம் 1950
 • 2. நீதிமன்ற சாசனம் 1872
 • 3. இந்திய தண்டனை சட்டம் 1860
 • 4. குற்ற விசாரணை முறை விதிகள் 1973
 • 5. உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908

நம் நூல்களைப் பற்றி

நீதியைத்தேடி.... நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் வரிசையில்...
1 குற்ற விசாரணைகள்
2 பிணை (ஜாமீன்) எடுப்பது
எப்படி?
3 சட்ட அறிவுக்களஞ்சியம்
4 சட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்
5 சாட்சியங்களைச் சேகரிப்பது
எப்படி?
6 கடமையைச் செய்!
பலன் கிடைக்கும்
7 மநு வரையுங்கலை!Recent Posts Widget

இந்நூல்கள் அனைத்தும் உங்களின் சட்ட விழிப்பறிவுணர்வுக்காக
மத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவியோடு
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பொது நூலகங்கள், மத்திய சிறைச்சாலைகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

சொந்தமாக தேவைப்படுவோர், உ(ய)ரிய நன்கொடையைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு வாட்ஸ்அப் எண் 09842909190 ஆகும்.

எல்லாப் பதிவுகளும்!

நம் தள வகைகள்

பயின்றோர் (20-08-16)