No law no life. Know law, know life! நியாயந்தான் சட்டம்! அதற்கு தேவையில்லை வக்கீழ் பட்டம். வக்கீழ் என்றாலே, கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்களே! இடைத்தரகர்களே!! நீ வாழ, நீயே வாதாடு!

நீ வாழ... நீயே வாதாடு... வரவேற்பு வாழ்த்து!

No law, no life. Know law, know life! என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியத்தை உணர்ந்து, ‘‘நீதியைத்தேடி... சட்டப் பல்கலைக் கழகத்திற்கு’’ வருகை தந்துள்ள உங்களை வருக என வரவேற்று, உங்களுக்கான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்று பயனைப் பெறுக என வாழ்த்துகிறோம்!
முக்கிய அறிவிப்பு : இந்த இணையப்பக்கத்தை புதுப்பிக்கும் பணி நடந்துக் கொண்டிருப்பதால், சில பதிவுகள் அல்லது இணைப்புக்கள் கிடைக்காமல் போகலாம்!

Friday, October 4, 2019

வாகன ஓட்டிகளான வாசகர்களின் சாதனை அனுபவங்கள் - 1சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற வேண்டும் என்பதற்காக நம் நூல்களை வாங்குவோர், அதனைப் பயன்படுத்தி பலனை அடைந்தால், அந்தப் பலன் மற்ற வாசகர்களுக்கும் கிடைக்க வேண்டுமென்ற நோக்கில் அதுபற்றி கட்டுரையாக எழுதி அனுப்பினால், இப்படி வெளியிடலாம்.

ஆமாம், தேவையான இடங்களில் செய்யப்பட்ட சில திருத்தங்களை தவிர, பெரும்பாலும் அவர் எழுதிய பாணியிலேயே வெளியிடப்பட்டு உள்ளது.

இது வாகன (ஓட்டி, பயணி)களே... உஷார்! என்ற கட்டுரையின் வாயிலாகப் பயனடைந்த வாசகர்களின் கருத்துக்கள். ஏற்கெனவே அந்தக் கட்டுரையைப் படிக்காதவர்கள், படித்து விட்டு தொடரவும். அப்போது தான் சரியான புரிதல் கிடைக்கும்.

முதலில் மதுரையைச் சேர்ந்த வாசகர் அன்புவின் அனுபவப் பகிர்வு.

******************

02-06-2019 அன்று மதுரையில் நண்பர் ஒருவரைப் பார்ப்பதற்காக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தேன்.

தெப்பகுளம் சிக்னலுக்கு பக்கத்தில் போக்குவரத்து போலிசார் நின்று கொண்டிருந்தார்கள். நான் அந்தப் பக்கமாகதான் சென்று கொண்டிருந்தேன்!

பெண்காவலர் ஒருவர் வழிமறித்து அந்தப் பக்கமா போங்கன்னார்.. போக்குவரத்து ஆய்வாளர் ஒருவர் வசூல் வேட்டையிலிருந்தார்..!

நான் அவர்ட்ட போனப்ப.. லைசன்ஸ் போன்ற ஆவணங்களைக் கேட்டார்.. !

அதைக் கையில வச்சிருக்கணும்ங்கிற அவசியம் இல்லனு தெரியும். ஆனாலும் நான் வழக்கமா வச்சிருப்பேன்..! ஆகையால், எல்லாத்தையும் காண்பித்தேன்.

என்னை எதுவும் கேட்காமலேயே ரசீது போட்டு நூறு ரூபாய் கொடுங்கன்னார். அந்த போக்குவரத்து ஆய்வாளர்!

நான் எதற்கு சார்? னேன்.

நீங்க ஹெல்மெட் போடலைலன்னார்..!

ஆமா சார், என்னிடம் கேட்டுல்ல சார்.. ரசீது போடனும் னேன்.. அதான் போட்டாச்சுலனார்..

சார் எனக்கு கட்டுறதுக்கு விருப்பமில்லன்னேன்..

அப்ப ஹெல்மெட் போடனும்ல ன்னார்.. சார் எனக்கு ஹெல்மெட் போட இஷ்டமில்லை..!

நான் குற்றம் செஞ்சிருக்கிறேன்னா.. நீங்க என் மேல வழக்கு தொடுங்க.. நான் நீதிமன்றத்தில் வாதாடி பைன் கட்டுறதா.. இல்லையான்னு பார்த்துக்கிறேன் னேன்!

(நாம தான் நீதியைத்தேடி... வாசகராச்சே! வக்கீழ் இல்லாமல்.. செலவில்லாம.. நம்ம தரப்பு வாதத்தை இந்திய குடிமகன் யாரும் வாதாடலாம்னு.. நமக்குத் தெரியுமில்ல..)

உடனே அந்த போக்குவரத்து ஆய்வாளர்.. நீதிமன்றம் தான் டைரக்சன் கொடுத்திருக்குன்னார்..!

அதுக்கு நான்,

‘‘சார் இந்திய அரசியல் சாசனம் கோட்பாடு 21 ன் படி சட்டப்படியான விசாரணையின்றி ஒரு நபரின் உரிமையைப் பறிக்கக் கூடாது’’ ன்னு இருக்கு..!

(நம் குறிப்பு: இதைமீறி நீதிமன்றம் சொல்ல முடியாது. ஆனால், கூலிக்கு மாரடிக்கும் நிதிபதிகள், தங்களுக்கு அரசிடம் இருந்து கிடைக்க வேண்டிய கூலிக்காக, அரசுக்கு ஆதரவாக எதை வேண்டுமானாலும் சொல்லலாம் என்ற அடிப்படையில்,  நிதிபதி கிறுக்கு கிருபாகரன் போன்ற நிதிபதிகள் பிறப்பித்தது எல்லாம் தீர்ப்பு அல்ல. மாறாக, கழுதை கூட தின்னாத காகிதக் குப்பை. 

குப்பைகளுக்கு குட்பை சொல்லனுமே ஒழிய மதிக்க வேண்டுமென்கிற அவசியம் மக்களுக்கு இல்லை என, இவ்வாசகர் அறிவுப்பூர்வமான அறிவுறுத்தலாக கேவலர்களுக்கு சொல்லி இருக்க வேண்டும். 

ஆனால், ஏனோ தவறி விட்டார். இனி நீங்களாவது சொல்லுங்கள். 

ஆமாம், இப்படித்தான் நம் ஆசிரியர் திரு. வாரண்ட் பாலா அவர்கள் 2017 ஆம் ஆண்டில், நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் வசிக்கும் நம் வாசகர் திரு. ஹேலன் என்பவருடன் மோட்டார் வாகனத்தில் சென்றபோது, வாகன சோதனையில் ஈடுபட்ட போக்குவரத்து கேவலர்கள் பிடிக்க, இவரோ அங்குள்ள பொது மக்களை எல்லாம் கூட்டி வைத்துக் கொண்டு தன்னுடைய சட்ட ஆராய்ச்சி அறிவுறுத்தல்களை எடுத்துச் சொல்லவே, இனி நாம் வழிபறியில் பணம் புடுங்க முடியாது என நினைத்த கேவலர்கள் உடனே அங்கிருந்து சென்று விட்டனராம்! 

கொய்யால யார்கிட்ட, உன் களவாணித்தனத்தை காட்ட நினைத்த... ஓடு... 

மேலும், அன்று அனைவர் முன்னிலையிலும் ஏற்பட்ட அவமானத்தால், அதன் பிறகு அந்தக் குறிப்பிட்ட இடத்தில் நின்று வாகன சோதனையே செய்வதில்லை என்று அவ்வாசகர் சொல்லுவார்!)

ஆனால், இவ்வாசகர் அன்போ.., அதனால நான் Spot fine கட்டமாட்டேன்.. !

மேலும் நீங்க நிர்வாகத்தரப்பு..! உங்களுக்கு குற்றம் சாட்டத்தான் உரிமை உண்டே தவிர, அபராதம் கட்டணும்னு சொல்லவே முடியாது.. வேணும் னா ஹெல்மெட் போடலைன்னு என் மேல வழக்குத் தொடுங்க.. அது நியாயமா.. இல்லையானு.. கோர்ட்டுல வாதாடி பார்த்துகிறேன் னுட்டேன்..

லைசன்ஸ், ஆர்.சி.புக் லாம் ஒரிஜினல் கொண்டு வாங்கன்னார்..

சார் அதையெல்லாம் கையிலேயே வச்சுகிட்டா திரிவாய்ங்க. கையிலியே வச்சிகிட்டு திரியனும்னு எந்த சட்ட விதி சொல்லுதுன்னு கேட்டேன்..

மோட்டார் வாகனச் சட்டம் 129 ன்னார்..

நான் சொன்னேன்.. சார் நீங்க மோட்டார் வாகனச் சட்டத்தைச் சொல்லுறீங்க.. அதில் இந்திய அரசியல் சாசனம் கோட்பாட்டுக்கு எதிரான சட்ட விதிகள் இருந்தா செல்லாதுன்னேன்.. அதற்கு பதில் சொல்லத் தெரியாமல் நின்றார்..

(நம் குறிப்பு: உண்மையில், மோட்டார் வாகன சட்டம் 129 என்பது, தலைகவசம் அணிந்து செல்ல வேண்டும் என்ற அறிவுறுத்தலே! 

அதன் சட்டப்பிரிவு 158 தான், மோட்டார் வாகனம் சம்பந்தப்பட்ட எந்தவொரு ஆவணத்தையும் கையில் வைத்திருக்க வேண்டியது இல்லை. ஒருவேளை வாகனத்தை ஓட்டியதில் யாருக்காவது தீங்கு இழைத்து விட்டால் மட்டுந்தான் கேட்க முடியும். இப்படி கேட்டாலும் கொடுக்க ஏழு நாட்கள் கால அவகாசம் இருக்கிறது என்ற அறிவுறுத்தல்!!

ஆமாம், சும்மா போகிறவர், வருகிறவர்களிடம் எல்லாம் நிகழ்விட அபராதம் என்றப் பெயரில், வழிபறி கொள்ளையில் ஈடுபடுவதற்காக கேட்க முடியாது. 

‘‘நியாயந்தான் சட்டம்!’’ என்று நாம் முன் மொழிந்துள்ள அடிப்படை தத்துவத்தின்படி பார்த்தால், இச்சட்டப் பிரிவுகள் எல்லாம் எவ்வளவு நியாயமாக இருக்கிறது என்பதும் புரியும்)


(இதெல்லாம் தெரியாத கூமுட்டை முட்டாள்களா அடிமட்ட போக்குவரத்து கேவலர்களில் இருந்து, உயர்மட்ட கேவலர்கள் வரை மற்றும் கூட்டுக் களவாணிகள் ஆன அரசுப் பொய்யர்கள் நிதிபதிகள் எல்லாம் அல்லது சட்டம் தெரிந்தே, அரசிடம் இருந்து கூலியைப் பெற்று சோறு தின்பதற்காக மக்களை வழிபறி செய்கிறார்கள் என்பது பொருள். 

இப்படி சோறு தின்பதற்கு மலத்தை தின்னு மாண்டு போகலாம்தானே?!)  

அதற்குள் கூடியிருந்த சிலரும் என்னை மாதிரியே கேள்வி கேட்க ஆரம்பிச்சுட்டாங்க..! என்னைப் பார்த்து.. ‘‘நீங்க கொஞ்ச நேரம் வெய்ட் பண்ணுங்க’’ ன்னார்..

அப்படியே, அந்த போக்குவரத்து ஆய்வாளர் காவல் நிலையத்திற்கு, என்னைப் பற்றிய தகவலை சொல்லி விட்டார் போல..

கொஞ்ச நேரத்தில்.. வசூல் வேட்டையெல்லாம் முடிவதற்கும்.. பக்கத்து காவல் நிலையத்தில் இருந்து மூன்று காவலர்கள் ஒரே இருசக்கர வாகனத்தில் வந்து இறங்குவதற்கும் சரியாக இருந்தது..!

காவலர்களில் ஒருவர் இவர்தானா? என கேட்டுக் கொண்டே என்னைப் பார்த்து வந்தார்.. (இப்படித்தான் முதலில் பயமுறுத்துவது போலவும், மிரட்டுவது போலவும் வீரமாக வருவார்கள். இதுக்கெல்லாம் பயப்படவோ, அசரவோ கூடாது)

ஏன்.. பைன் கேட்டா கட்ட வேண்டியது தானே என வேகமாகப் பேசினார்..

நானும் நிதானமாக..

இந்திய அரசியல் சாசனக் கோட்பாடு 21 இன்படி, ‘‘சட்டப்படியான நீதிமன்ற விசாரணை முறை இல்லாமல் என்னை பணம் கொடுக்கும்படியோ, வண்டியைப் பறித்துக் கொள்வேன்’’ என்றோ சொல்ல முடியாதுன்னேன்..

அதற்கு, அந்த கேவலர் இந்திய சாசனப்படியா Mp, Mla அரசியல்வாதிலாம் நடக்கிறாங்க.. அப்படின்னு கத்த ஆரம்பிச்சுட்டார்

(இப்படித்தான் பல பேரு எவன்கிட்ட கேட்கனுமோ, அதை அவங்கிட்ட கேட்க துப்பில்லாம, நம்ம கிட்ட கேப்பாய்ங்க. இப்படி நம்மிடம் கேட்கும் வாசகர்களும் உண்டு. இப்படி யாராவது கேட்டால், ஆண்மை இருந்தா அவங்கிட்ட கேளுன்னு சொல்லிடனும், நாங்க சொல்லிடுவோம்)

நான் சார்.. நீங்க என்ன சொன்னாலும்.. இங்க நிகழ்விட அபராதம் (Spot பைன்) கட்டுறதுக்கு சட்டப்படி எனக்கு உரிமை இல்லை. ஆகையால், கட்ட இஷ்டமில்லைனு தெளிவா சொல்லிட்டேன்..

உடனே, வழக்குப் பதிவு செஞ்சாதான் சரியா வரும் னு சொல்லிகிட்டே.. என் வாகனத்துலேயே காவல் நிலையத்துக்குக் கூப்பிட்டு போனார்கள்..  என்னதான் நடக்குதுன்னு பார்ப்போம்னு நானும் போனேன்..

(நியாயம் வேணும்னா சிறைக்குச் செல்லவும் தயாரா இருங்கன்னு, நீதியைத்தேடி... நூல்களில் ஆசிரியர் Warrant Ba-Law அவர்கள் சொல்லியிருக்கிறாரே..)

காவல் நிலையத்தில் ஆய்வாளர் இருந்தார்..  ஏன் ஹெல்மெட் போடலன்னு.. அவரும்.. அதே விசாரணை.. மீண்டும் மொதல்ல இருந்தா..

நானும் இந்திய கோட்பாடு 21 ஐ விளக்கமாக சொல்லி, ‘‘குற்றம் செய்ததாக நினைச்சா வழக்கு போடுங்க.. நீதிமன்றத்தில என்னுடைய தரப்பு வாதத்தை நானும் வாதாடிக்கிறேன்னு..’’ அதே பதில்..!

ஆய்வாளர்.. கொஞ்சம் விவரமானவர் போல.. நீதியைத்தேடி... நூல்கள் காவல்நிலையங்களுக்கும் நன்கொடையாகக் கொடுக்கப்பட்டிருக்கு அல்லவா?! படிச்சிருக்கலாம்..

ஆய்வாளர், இன்னொரு காவலரிடம் இவரை அவரிடம் கூட்டிட்டு போங்கன்னார்.. அங்கே இன்னொரு காவலர் நூறு ரூபாய் தானே கட்டுங்கன்னார்.. என்னென்னவோ பேசினார்.. !

அதுக்கு நான் சார் அப்படி கட்ட முடியாது..  ஒரு தனி நபரின் உரிமையை நீதிமன்ற விசாரணையில்லாமல் நீங்கள் பறிக்க முடியாது.. எனத் திட்டவட்டமாக சொல்லி விட்டேன்..

மேலும்.. இந்திய அரசமைப்புச் சட்டத்தை மதிக்காமல்.. கேவலமாகப் பேசிய.. கேவலரையும் வழக்கில் இழுப்பேன்.. என்றும் திருத்தமாக சொல்லி விட்டேன்..!

அங்கிருந்த காவலர்கள்.. என்ன செய்வதென்று தெரியாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.. வேற வழி.. கொஞ்ச நேரங்கழித்து.. என்னிடம், வாகனத்தைக் கொடுத்து நீங்க கிளம்புங்கன்னுட்டாங்க.

வழக்கு.. அது, இதுன்னு இழுத்துட்டுப் போனால்.. அவர்கள் எல்லாரையும் அலையவிட்டு நம்ம ‘‘நீதியைத்தேடி...' நூல்களின் பாணியில் சட்டப் பாடம் எடுக்கலாம்’’ னு பார்த்தா.. இப்படி பொதுக்குன்னு கெளம்புங்கன்னு சொல்லிட்டாங்களேன்னு நினைச்சிகிட்டே வந்துட்டேன்..!

இப்படி நாம் ஒவ்வொருவரும் சட்டம் தெரிஞ்சு கேள்வி கேட்க ஆரம்பிச்சா.. சட்டங்களை தவறாக பயன்படுத்துவதையும் நியாயமற்ற சட்டங்கள் செல்லுபடியாது.. என்பதையும் அனுபவபூர்வமாகவே தெரிந்து கொண்டேன்.

இதற்கிடையில், நான் பார்க்கச் சென்ற நண்பருக்கு விசயத்தை சொன்னதும்.. என்னைப் பார்க்க அவரே வந்து விட்டார்..

நிகழ்வுகளையெல்லாம், கூடவே இருந்து பார்த்து விட்டு, நானும், இனி இதே மாதிரி கேள்வி கேட்பேன்.. என்று கூறினார்..!

முன்பாக அவரையும் காவலர்கள் விட்டு வைக்கவில்லை..

அவருக்காக நீங்களாவது அந்த அபராதத்தைக் கட்டுங்க.. என்றிருக்கிறார்கள்! அவரோ, அவர் கேள்விக்கு பதில் சொல்லுங்க சார்' என்று முடித்துக் கொண்டார்!

வாகனம் ஓட்டுறவன் ஒன்னும் தெரியாத கேனையா இருந்தா பல கோடி வழக்கை கூட பதிவு செய்து, கோடான கோடியில் கொள்ளையடிக்கலாம்.

clip

இதன் தொடர்ச்சியாக ஈரோட்டை சேர்ந்த, பிரகாஷ் என்ற வாசகரின் அனுபவம் விரைவில் வெளியாகும். இதுபோன்ற அனுபவங்களில் வேறு வாசகர்கள் யாரும் சாதித்து இருந்தால், அதுபற்றி எழுதி அனுப்பவும். 


பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

5 comments:

 1. நல்ல பதிவு. எனக்கு இதுபோல் சந்திரப்பம் வந்ததில்லை. வந்தால் என்ன செய்வது என்று தெரிந்துகொண்டேன். மிக்க மகிழ்ச்சி

  ReplyDelete
 2. எல்லோரும் சேர்ந்து முதலில் மிரட்டுவார்கள் அதை கடப்பதர்க்கு தைரியம் வேண்டும்.

  ReplyDelete
 3. இப்படி ஒவ்வொரு இந்திய குடிமகன்கள் மற்றும் குடிமகளும் அனைவருமே சட்டப்படியான கேள்வி கேட்க ஆரம்பித்தால் நாடு எப்பவே முன்னேற்றம் அடைந்திருக்கும் காவல்துறை மட்டுமல்ல அரசின் அனைத்து நடவடிக்கைகளிலும் மக்களின் ஒவ்வொரு சட்ட உரிமைகளை விட்டு கொடுக்காமல் கேள்வி கேட்க வேண்டும் அப்பத்தான் நாடும் நாமளும் நலமுடன் வாழமுடியும் இல்லை என்றால் உழைக்கும் உழைப்பே வீணாக போகும் சட்டம் என்பதை எல்லோருக்கும் ஒன்றே அதை பயண்படுத்தும் விதம் மாறுகிறது அதை நாம் விடக்கூடாது கேவலர்களின் ஹெல்மெட் விஷயத்தில் இவ்வளவு அக்கறை காட்டுவது அவர்களின் ஈனப்பிழைப்பிற்கே ஏன் மற்ற மோட்டார் வாகன சட்டம் விதிகளின்படிதான் எல்லா வாகனங்களும் இயங்குகிறதா ஏன் அரசு பேருந்துக்களின் என்ன நடக்கிறது என்பது எல்லோரும் அறிந்ததே அதில் இவனுக சட்டப்படி செயல்பட வேண்டியதானே அரசு நேரடியாகவும், மறைமுகமாகவும் செய்யும் களவாணித்தனம் பித்தலாட்டத்தை கண்டுகொள்ளாத போக்குவரத்து சம்பந்தப்பட்ட அனைத்து அரசூழியர்களான அரைகுறை ஊழியர்கள் அரசின் கையால்லாகாத அடிமை கைக்கூலிகளே இதை இந்திய குடிமகனான நாம் ஒவ்வொருவரும் சரியான சட்டவிழிப்புணர்பு பெற்று கேள்வி கேட்க வேண்டும்.

  ReplyDelete
 4. சுதந்திர நாட்டில் மக்களைத் துன்புறுத்தும் அளவிலான எந்தவொரு நியாயமற்ற சட்டங்களோ.. சட்ட விதிகளோ இருந்தாலோ இயற்றப்பட்டாலோ.. அவற்றையெல்லாம் அப்படியே மக்கள் பின்பற்ற வேண்டிய அவசியமில்லை" என்ற புரிதல் ஒவ்வொருவருக்கும் வந்து கேள்விகள் கேட்டு திணறடிக்க வேண்டும்..! அரசூழியர்களின் மழுங்கிப் போன மூளையைக் கொஞ்சம் சிந்திக்க வைக்கணும்!

  மகாத்மா காந்தியவர்களின் அஹிம்சா வழியில் 'நியாயமான மக்களாட்சி'க்கு 'நீதியைத் தேடி' புத்தகங்கள் உதவி செய்யும்!!

  ReplyDelete
 5. நீதியைத்தேடி நூல்களால் நான் பயன் பெற்றுள்ளேன்.அதனால் என் வழி காட்டுததால் பலரும் பயன் பெற்றுள்ளனர்.இன்று கூட ஒருவருக்கு சட்ட வழி காட்டி உள்ளேன்.இலவசமாக பெற்றதை இலவசமாக வழங்கி வருகிறேன்.நன்றி

  ReplyDelete

பத்திரிகை செய்திகள்

அறவழி நோட்டா

அறவழி நோட்டா
மகாத்மா போதித்த வாக்குரிமை!

நோட்டா: NOTA

நோட்டா: NOTA
விளக்கம்: EXPLANATION

நூல்களின் முகப்பு

Followers

முக்கியப் பக்கங்கள்

அடிப்படை சட்டங்கள்

 • 1. இந்திய சாசனம் 1950
 • 2. நீதிமன்ற சாசனம் 1872
 • 3. இந்திய தண்டனை சட்டம் 1860
 • 4. குற்ற விசாரணை முறை விதிகள் 1973
 • 5. உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908

நம் நூல்களைப் பற்றி

நீதியைத்தேடி.... நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் வரிசையில்...
1 குற்ற விசாரணைகள்
2 பிணை (ஜாமீன்) எடுப்பது
எப்படி?
3 சட்ட அறிவுக்களஞ்சியம்
4 சட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்
5 சாட்சியங்களைச் சேகரிப்பது
எப்படி?
6 கடமையைச் செய்!
பலன் கிடைக்கும்
7 மநு வரையுங்கலை!Recent Posts Widget

இந்நூல்கள் அனைத்தும் உங்களின் சட்ட விழிப்பறிவுணர்வுக்காக
மத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவியோடு
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பொது நூலகங்கள், மத்திய சிறைச்சாலைகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

சொந்தமாக தேவைப்படுவோர், உ(ய)ரிய நன்கொடையைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு வாட்ஸ்அப் எண் 09842909190 ஆகும்.

எல்லாப் பதிவுகளும்!

நம் தள வகைகள்

பயின்றோர் (20-08-16)