No law no life. Know law, know life! நியாயந்தான் சட்டம்! அதற்கு தேவையில்லை வக்கீழ் பட்டம். வக்கீழ் என்றாலே, கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்களே! இடைத்தரகர்களே!! நீ வாழ, நீயே வாதாடு!

நீ வாழ... நீயே வாதாடு... வரவேற்பு வாழ்த்து!

No law, no life. Know law, know life! என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியத்தை உணர்ந்து, ‘‘நீதியைத்தேடி... சட்டப் பல்கலைக் கழகத்திற்கு’’ வருகை தந்துள்ள உங்களை வருக என வரவேற்று, உங்களுக்கான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்று பயனைப் பெறுக என வாழ்த்துகிறோம்!
முக்கிய அறிவிப்பு : இந்த இணையப்பக்கத்தை புதுப்பிக்கும் பணி நடந்துக் கொண்டிருப்பதால், சில பதிவுகள் அல்லது இணைப்புக்கள் கிடைக்காமல் போகலாம்!

Friday, September 27, 2019

அசல் ஆவணங்கள் குறித்த, ஓர் எச்சரிக்கை!பொதுவாக குற்றம் புரிந்தவர்கள் அதற்கான தடயங்களையும் முக்கிய ஆதாரங்களையும் அழிக்கவே முயற்சிப்பார்கள். ஆகையால் குற்றம் சாட்டப்பட்டவர்களை பிணையில் விடுவிக்கக் கூடாது என அரசு சார்பில் காவலர்கள் ஆட்சேபிப்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

காவல்துறையே இப்படி எச்சரிக்கிறது என்றால் நீங்கள் எவ்வளவு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள்.

ஆமாம் உரிமையியல் வழக்கை பொறுத்தவரை ஆவணங்களே பிரதானம் என்பதால் அந்த ஆவணங்களை கைப்பற்றி அழிக்கவே எதிரிகள் முயற்சிப்பார்கள். ஆகையால், ஆவணங்களை பொறுத்த வரை மிகவும் பத்திரமாக பாதுகாக்க வேண்டும். 

ஆனால், மழை, வெள்ளம், புயல், கரையான் உள்ளிட்ட பூச்சிகளிடம் இருந்து ஆவணங்களை பராமரிப்பது என்பது அவ்வளவு எளிதான வேலை இல்லை. எனவே முதலில் ஆவணங்களை தற்போதுள்ள தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி, ஸ்கேன் செய்து பத்திரப்படுத்திக் கொள்ளுங்கள். 

இதே அசல் ஆவணங்கள் அல்லது அதன் பிரதிகள் அரசு அலுவலகங்களில் இருந்தால், அதனை சான்று நகலாக வாங்கி பயன்படுத்திக் கொள்வது, நம்மிடம் உள்ள அசல் ஆவணங்களுக்கு மிகுந்த பாதுகாப்பாகி விடும்.  

அரசு அலுவலகங்களில் உள்ள ஆவணங்களை, ஊழியர்களுக்கு இலஞ்சம் கொடுத்து திருட்டுத் தனமாக பெறுவதை மக்கள் வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். இது சட்டப்படி தவறு என்பதோடு, தண்டிக்க தக்க குற்றமும் ஆகிவிடும். 


ஊழல் வழக்கில் சிக்கியுள்ள சிதம்பரத்திடமே கூட, ஆவணங்கள் எங்கிருந்து கிடைத்தன என்ற கேள்வியை நிதிபதிகள் எழுப்பி இருப்பது, நமக்கு எச்சரிக்கை!

எனவே எந்த ஆவணத்தையும் சட்டப்படி சான்று நகலாக விண்ணப்பித்து பெறுவதே சரியானது. அப்படி கொடுக்காத ஊழியர்களை வழக்கில் சாட்சியாக வரவைக்கலாம். அந்த ஆவணங்களையும் கொண்டு வரும்படி செய்யலாம். 

இப்படி ஆவணங்களைக் கேட்டு சான்று நகலுக்கு விண்ணப்பித்தால், ஒன்றுக்கு இரண்டு அல்லது மூன்றாக கூட கேட்டு வாங்கிக் கொள்ளனும். அப்போதுதான் இதிலொன்றை  அசலாக எங்கு வேண்டுமானாலும் தாக்கல் செய்யலாம். 

ஏற்கெனவே உள்ள ஆவணத்தை சான்று நகல் கேட்கும்போது, அசல் ஆவணத்தின் பிரதியில் உண்மை நகலென சான்று செய்து தர வேண்டுமென கேட்டு வாங்கனும். மாறாக புதிதாக தயாரித்துக் கொடுத்தால், அசலில் உள்ளதுதான் இதில் இருக்கிறது என்பதற்கு எந்த உறுதியும் இல்லை.

இப்படி மாற்றி எழுதித்தந்தால், ஐபிசி 166 மற்றும் 167 இன்படி, கடமையில் தவறி தவறான ஆவணத்தை உருவாக்கிய குற்றத்தில் சேரும். 

அசல் ஆவணங்களை ஒரு போதும் விசாரணைக்காக வெளியில் எடுத்துச் செல்லவே கூடாது. ஏனெனில், அசல் ஆவணங்களை தட்டிப்பறித்து அழிக்கவே முயற்சிப்பார்கள்.

ஆகையால், அரசூழியர்கள் உண்மை நகல் என நகலில் சான்று செய்து வழங்குவது போலவே,  இந்திய சாட்சிய சட்ட உறுபு 70 இன்படி, நாமும் அசல் ஆவணங்களின் நகலில் உண்மை நகல் என எழுதி கையெப்பம் இட்டு கொடுத்தாலே போதும். 

அசல் ஆவணங்கள் தேவை என நிதிபதி கேட்டால்கூட கையோடு கொண்டு சென்று அசலோடு நகலை ஒப்பிட்டு பார்க்க சொல்லி விட்டு உடனே வாங்கி கொள்ள வேண்டும்.

இதையும் அசல் ஆவணங்களை கொண்டு வரவேண்டும் என சட்டப்படி அழைப்பாணை கொடுத்தால் மட்டுமே கொண்டு போக வேண்டும்.

இல்லையேல் அந்த அசல் ஆவணங்கள் நீதிமன்றத்திலிருந்து கூட திருடப்பட்டு விடும் என்பதை, ஆசிரியர் மநு வரையும்கலை! நூலில் எச்சரித்து எழுதியுள்ளார். 

மேலும், இதில் வக்கீழ்ப் பொய்யர்கள், நிதிபதிகள் மற்றும் எழுத்தாளர்கள் எப்படி ஆவணங்களை கோட்டை விட்டார்கள் என்பதையும் எழுதி உள்ளார். எனவே எச்சரிக்கை! எச்சரிக்கை!!

பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

1 comment:

  1. நல்லதொரு (முக்கிய)தகவல் நன்றி ஐயா

    ReplyDelete

பத்திரிகை செய்திகள்

அறவழி நோட்டா

அறவழி நோட்டா
மகாத்மா போதித்த வாக்குரிமை!

நோட்டா: NOTA

நோட்டா: NOTA
விளக்கம்: EXPLANATION

நூல்களின் முகப்பு

Followers

முக்கியப் பக்கங்கள்

அடிப்படை சட்டங்கள்

  • 1. இந்திய சாசனம் 1950
  • 2. நீதிமன்ற சாசனம் 1872
  • 3. இந்திய தண்டனை சட்டம் 1860
  • 4. குற்ற விசாரணை முறை விதிகள் 1973
  • 5. உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908

நம் நூல்களைப் பற்றி

நீதியைத்தேடி.... நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் வரிசையில்...
1 குற்ற விசாரணைகள்
2 பிணை (ஜாமீன்) எடுப்பது
எப்படி?
3 சட்ட அறிவுக்களஞ்சியம்
4 சட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்
5 சாட்சியங்களைச் சேகரிப்பது
எப்படி?
6 கடமையைச் செய்!
பலன் கிடைக்கும்
7 மநு வரையுங்கலை!Recent Posts Widget

இந்நூல்கள் அனைத்தும் உங்களின் சட்ட விழிப்பறிவுணர்வுக்காக
மத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவியோடு
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பொது நூலகங்கள், மத்திய சிறைச்சாலைகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

சொந்தமாக தேவைப்படுவோர், உ(ய)ரிய நன்கொடையைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு வாட்ஸ்அப் எண் 09842909190 ஆகும்.

எல்லாப் பதிவுகளும்!

நம் தள வகைகள்

பயின்றோர் (20-08-16)