No law no life. Know law, know life! நியாயந்தான் சட்டம்! அதற்கு தேவையில்லை வக்கீழ் பட்டம். வக்கீழ் என்றாலே, கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்களே! இடைத்தரகர்களே!! நீ வாழ, நீயே வாதாடு!

நீ வாழ... நீயே வாதாடு... வரவேற்பு வாழ்த்து!

No law, no life. Know law, know life! என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியத்தை உணர்ந்து, ‘‘நீதியைத்தேடி... சட்டப் பல்கலைக் கழகத்திற்கு’’ வருகை தந்துள்ள உங்களை வருக என வரவேற்று, உங்களுக்கான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்று பயனைப் பெறுக என வாழ்த்துகிறோம்!
முக்கிய அறிவிப்பு : இந்த இணையப்பக்கத்தை புதுப்பிக்கும் பணி நடந்துக் கொண்டிருப்பதால், சில பதிவுகள் அல்லது இணைப்புக்கள் கிடைக்காமல் போகலாம்!

Friday, September 20, 2019

குழந்தை கடத்தல் குற்றமா... குற்றமில்லையா... குழப்படிகளும், தீர்வுகளும்!
‘‘நியாயந்தான் சட்டம்! அதற்கு தேவையில்லை வக்கீழ்ப் பட்டம்’’ என்று, நாம் முன் மொழிந்துள்ள தத்துவத்திற்கு ஏற்ப, சட்ட விதிகள் எல்லாம் நியாயமாகவே தான் இருக்கின்றன. 

ஆனால், வக்கீழ்ப் பொய்யர்களும், அவ்வழி வந்த நிதிபதிகளும் தங்களின் அளவற்ற அறிவுவறுமை முட்டாள் தனத்தால் சமூகம் சீர்கெட்டு கிடக்கிறது என்பதை எவ்வளவோ சங்கதிகளில் நிரூபித்து, நூல்களில் நிறுவி இருக்கிறோம். 

இதனை மீண்டும் நிரூபிக்கும் விதமாக ‘‘மிகவும் சிக்கலான குழந்தை கடத்தல் வழக்கு ஒன்று நம்மிடம் ஆலோசனைக்காக வர, அதனை நாம் பெரும் சவாலாக ஏற்று அடுத்தடுத்து சட்டப்படி செய்ய வேண்டியது என்ன என்பதை ஆராய்ந்துக் கொண்டிருக்கிறோம்’’. 

இதில் சம்பந்தப்பட்ட இரண்டு தரப்பினருமே சட்டத் தெளிவு இல்லாதவர்கள் என்பதாலும், கேவலர்கள் அரசுப் பொய்யர்கள் மற்றும் நிதிபதிகளின் கூட்டுக் களவாணித்தன முட்டாள் தனத்தாலும் எளிதில் முடிந்திருக்க வேண்டிய வழக்கு நீண்டு கொண்டே சென்று நம் தூக்கத்தை கெடுத்து விட்டதன் விளைவே, இந்த விழிப்பறிவுணர்வு கட்டுரை!

பொதுவாக ஒவ்வொரு குற்றமும், அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீராத ரணமாகவே இருக்கும். ஆகையால், குற்றத்தில் பெரிய குற்றம், சிறிய குற்றம் என்றெல்லாம் கிடையவே கிடையாது. 

ஆகையால், தனக்கு பாதிப்பை ஏற்படுத்தியவர்கள் மீது பாதிக்கப்பட்டவர்கள் எவ்வளவு கொலை வெறியில் இருப்பார்கள், சிக்கினால் என்ன செய்வார்கள் என்பதெல்லாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.  

இதிலும் ஏதுமறியாத குழந்தைகளை கடத்துவது என்பது மிகக் கொடூரமான குற்றமாகப் பார்க்கப் படுகிறது. தண்டனைகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன.

எங்காவது சந்தேகத்திற்கு இடமான புதிய நபர்களை கண்டால், அவர்கள் குழந்தையை கடத்த வந்தவர்கள் என நினைத்து, அவர்களை அடித்தே கொன்ற அவலச் சம்பவங்களும் அரங்கேறி, தற்போது கொஞ்சம் குறைந்து இருக்கிறது. இதற்காக சந்தேகத்திற்கு இடமானவர்கள் குழந்தை கடத்தலில் ஈடுபடுவது இல்லை என்றும் சொல்லவில்லை. 

எதையுமே ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டியுள்ள நிலையில் அதுகுறித்த ஆராய்வது எப்படி என தெரியாமலும்,  குற்றம் நடந்து விட்ட அவசர கதியில் உணர்ச்சி வசப்பட்டு, நாமும் தாக்குதல் நடத்தி அதன் விளைவாக குற்றவாளிகள் ஆகி விடுவதும் உண்டு. 

சரி, நம்ம விசயத்துக்கு வருவோம். 

நம்மிடம் வந்துள்ள வழக்கும், குழந்தை கடத்தல் வழக்குதான். ‘‘குழந்தையை கடத்தியவள், குழந்தையைப் பார்த்துக் கொள்வதற்காகவே அக்குழந்தையின் பெற்றோர்களால் ஏஜென்சி மூலம் பிரத்தியேகமாக நியமிக்கப்பட்ட வேலைக் கார பெண்ணே!’’ 

இந்த சம்பவத்தை தங்களின் குழந்தைகளை பாதுகாக்க வேலைக்கு ஆட்களை நியமிக்கும் பெற்றோர்கள் மிகமிக முக்கியமாக கவனிக்க வேண்டும்!

ஆமாம், தன் குழந்தைகள், தன் பெற்றோர் / முதியோர் ஆகியோர்களை நாமே பேணி காக்க வேண்டும் என்று தற்சார்பு வாழ்க்கை வாழ்ந்து இன்பம் அடைவதற்கு பதிலாக, எவன் எவனுக்கோ கூலிக்கு மாரடிக்கும் வேலையைப் பார்ப்பதற்காக குழந்தைகளையும், பெற்றோர்களையும் பராமரிக்கும் வேலைக்கு ஆட்களை நியமிக்கிறார்கள். 

அப்படி நியமிக்கப்படும் வேலையாட்கள் எப்படி யெல்லாம் குழந்தைகள் மீதும், முதியோர்கள் மீதும் ஈவு இரக்கமின்றி தாக்குதல் நடத்துகிறார்கள் என்பது குறித்த காணொளிகள் பல்லாயிரம் காண கிடைத்தாலும் கூட, நாங்கள் சுயமாக அனுபவப் பட்டாலே ஒழிய திருந்தவே மாட்டோம் என்கிற மாக்களே அதிகம்! 

சரி, நம்ம விசயத்துக்கு வருவோம்.

2017 ஆண்டில் சென்னையில் நடந்த இந்த சம்பவத்தில் காவல் துறையினர் தீவிரமாக தேடி இரண்டு நாட்களில் குழந்தையை கண்டுபிடித்து பெற்றோரிடம் ஒப்படைத்து விடுகிறார்கள். காவல் துறையினர் அவ்வளவு பொறுப்பானவர்களா? என்ற சந்தேகம் வந்தால், அதுவும் சரிதான்! 

இதன் பின்னனியே வேறு. அது பின்னரே சொல்லப்படும்!!

சரி, வேலைக்காரியே குழந்தையை கடத்தி இருக்கிறாள். ஆகையால் அவள் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டியவள்தானே? இதில் ஆராய நமக்கு என்ன இருக்கிறது என்ற கேள்வி எழுந்தால், அவளோ நியாயப்படி விடுதலை செய்யப்பட வேண்டியவள் என்கிறாள்!

ஆமாம், குற்றம் புரிந்தவர்கள் யாரும் தங்களை குற்றவாளிகள் என்று ஒருபோதும் ஒப்புக்கொள்வது இல்லையே! என்றால், ‘‘நியாயப்படி விடுதலை செய்யப்படி வேண்டுமென நம்மிடம் கேட்பது, குழந்தையை கடத்தியவள் அல்ல; மாறாக, குழந்தைப் பெற்றவள்!!’’

இதென்னடா, உலகத்தில் இல்லாத அதிசயமாக இருக்கு என்கிறீர்களா? நாமே ஓர் உலக அதிசயம் தானே! ஆகையால், இதுபோன்ற உலக அதிசய வழக்குகளும் நம்மிடம் தானே வந்து சேராமல் வேறெங்கு போகும்?! 

ஆமாம், எக்காரணம் கொண்டும் தன் குழந்தையை கடத்தியவள் தண்டனைக்கு உள்ளாகி விடக்கூடாது. விடுதலை செய்து விடவேண்டும் என்று, குழந்தையின் பெற்றோர் தவியாய் தவித்து, வேலைக்காரியை சந்திக்க மேற்கொண்ட முயற்சிகள் பலவும் பலன் அளிக்கவில்லை. 

ஆமாம், அவளுக்காக பொய்யாக வாதாடும் பொய்யன் யார் என்பதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. நீதித்துறைக்கான பிரத்தியேக பக்கத்தில் பார்த்து கண்டு படித்து விடலாம் என நினைத்துப் பார்த்தால், அதிலும் அப்பொய்யனது பெயர் இல்லை.

ஆகையால், அந்த வேலைக்காரப் பெண் வசிப்பதாக சொல்லப்படும் சென்னை ஓட்டேரி பகுதிக்கு கடந்த வாரம் சென்று, தங்களின் உன்னதமான உண்மை நோக்கத்தை எவ்வளவோ எடுத்துச் சொல்லியுங்கூட, காதில் வாங்காத அப்பகுதி மாக்கள், காட்டேரிகள் போல, இவர்களை அடிக்காத குறையாக துரத்தி இருக்கிறார்கள். 

அவள் நீதிமன்ற விசாரணைக்கு வருவாள். எளிதில் சந்தித்து பேசி விடலாம் என மாலை வரை காத்திருந்தால் அவள் வரவில்லை. காரணம், தேடிச் சென்றதை பொய்யனுக்கு சொல்லி இருப்பாள். அவனோ நம் பிழைப்பில் மண் விழுந்திடும் போலிருக்கே என நினைத்து நீ விசாரணைக்கு வர வேண்டாம் என பயமுறுத்தி இருக்கிறான் என யூகிக்க முடிகிறது. 

ஆமாம், அவள் வராததற்கு, அவள் சார்பில் பொய்யன் மனுத்தாக்கல் செய்துள்ளான். ஆனால், மனுத்தாக்கல் செய்தப் பொய்யன் யார் என்றும், இவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனாலும், நம்முடைய தொடர் ஆலோசனையின் பேரில், எப்படியாவது அவளை தொடர்பு கொண்டு, அவளுடைய சட்டப்படியான தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள சொல்ல வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.  

இதே நேரத்தில், ‘‘அவளை விடுதலை செய்வதற்காகவா நாங்கள் உங்கள் குழந்தையை கண்டு பிடித்து தந்தோம்’’ என்று தங்களின் கடமையை மறந்த கேவலர்கள்  இதுபோன்ற வழக்குகளில், எளிதாக குற்றவாளிக்கு தண்டனையைப் பெற்றுத்தந்து விடலாம். இதனால் நமக்கு பதவி உயர்வும், கூலி உயர்வும் கிடைக்கும் என்பதற்காக அரசூழிய அடிமைகளான கேவலர்களும், அரசுப் பொய்யர்களும், நிதிபதிகளும் தங்களின் சட்ட விரோதமான கூட்டுக்களவாணித் தனங்களை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆமாம், இந்த வேலைக்காரப் பெண் வசிக்கும் ஏரியாவைப் பார்த்தால், அவள் நிச்சயமாக தாழ்த்தப்பட்ட ஏழை எளியவளாகத்தான் இருப்பாள் என தெரிகிறது. இதுபோன்ற ஏழைகளைத்தான் நம்மால் எதுவும் செய்ய முடியும் என நம்பும் எடுபிடிகள்தானே அரசூழிய அய்யோக்கியர்கள். 

இதன் உச்சகட்டமாக, ‘‘தாங்கள் செய்துவிட்ட சட்ட விரோத செயல்களில் இருந்தும், நம் உடும்புப் பிடியில் இருந்தும் தப்பிக்க வேண்டும்; இல்லையேல், நம் வேலை காலியாகி விடும்’’ என்ற தெளிவான கெட்ட உள் நோக்கத்தில், நாம் கொடுத்த மனுக்களை ஏற்காது, ‘‘அவர்களாகவே வாக்கு மூலத்தை தட்டச்சி செய்து குழந்தையின் அப்பாவிடம் கட்டாயப் படுத்தி கையொப்பமும் பெற்று விட்டார்கள்’’.

அந்த வாக்குமூலத்தில் என்ன எழுதியுள்ளார்கள் என்பதும் தெரியவில்லை. நிச்சயம் நம்முடைய நியாய நிலைப் பாட்டுக்கு எதிராகத்தான் எழுதி இருப்பார்கள். இல்லையெனில், அப்படி வாங்க வேண்டிய அவசியம் இல்லையே! இதனால், இவர்களுக்கே கூட, பின்னர் சட்ட சிக்கல்களை கொடுக்கலாம்!! 

ஆமாம், நமக்கு எதிரான குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்கதானே கஷ்டப்பட வேண்டி இருக்கும். நாமே விடுதலை செய்யச் சொல்வது மிக எளிதுதானே. ஆகையால், நம்மை நம்பிக்கையுடன் நாட்டியவர்கள் நம்முடைய சட்ட விழிப்பறிவுணர்வை பெற்றிருக்கா விட்டால் என்ன? 

இவர்களின் நோக்கம் உன்னதமான நோக்கமாக இருக்கிறதே என நினைத்து ஆலோசனை சொன்னோம். ஆனால், விளைவு?

நாம் சொன்ன ஆலோசனைகளை தவிர, கூட்டுக் களவாணிகள் ஒன்று சேர்ந்து வேறு மாதிரி அல்லது சட்ட விரோதமாக நடந்தால் என்ன செய்வது என்ற சுய சிந்தனையோ, சமயோசித்த புத்தியோ இல்லாததால், கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்கி விட்டார்கள். இது சாட்சிய சட்டப்படி அப்படி செல்லும்.

எனவே, இனி இதனால் இவர்களுக்கு என்னென்ன பிரச்சினைகள் எழும், வேலைக்காரிக்கு தண்டனை கொடுப்பார்களா, இவைகளை தடுப்பது எப்படி அல்லது தீர்ப்பது எப்படி? இதற்குப் பிறகாவது இவர்களால் நாம் சொல்வதை செய்துவிட முடியுமா? என அனைத்துப் பிரச்சினைகளையும் நாம் தான் தீர்க்க வேண்டும் என மற்ற வேலைகளின் மீது கவனம் செலுத்த முடிவதில்லை. நாம் கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்களைப் போல பொறுப்பில்லாமல் விட்டுவிட முடியாதே!

இப்படித்தான் நாம் பிரச்சினையை தீர்த்துக் கொடுக்க நினைத்து சட்ட ஆலோசனை சொன்ன வாசகர்கள் பலரும்  அவர்களது முட்டாள்தனத்தால் நம்மை மிகவும் கஷ்டப்படுத்தி விடுகிறார்கள். 

இதெல்லாம் சுயமான சட்டத் தெளிவு பெற முயலாமல் எங்களிடம் அவ்வப்போது ஆலோசனையை கேட்டு சட்டப் பிரச்சினையை தீர்த்துக் கொண்டுவிட முடியும் என முட்டாள்தனமாக நினைக்கும் வாசகர்கள் தக்க பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும். 

ஆனால், முட்டாள் வாசகர்களுக்கு, நாம் எவ்வளவுதான் எடுத்துச் சொன்னாலும் புரியாமல், பொழுது விடிந்து பொழுது போனால் ஆலோசனை சொல்லுங்கள், ஆலோசனை சொல்லுங்கள் என்று எதையாவது கேட்கத்தான் செய்கிறார்கள். 

இப்படிப்பட்ட வாசக முட்டாள்கள் எதில் சிக்கி எப்படிச் செத்தால் நமக்கென்ன என்று, ஆலோசனை சொல்லி, அதனை சரியாக செய்ய முடியாது போனால், பின் அம்போவென விட்டு விட வேண்டும்; இல்லையேல், அப்படிப்பட்ட முட்டாள் வாசகர்களை நம் வாசகர் பட்டியலில் இருந்தே முற்றிலுமாக தடை செய்துவிட என்றே தோன்றுகிறது. 

ஆமாம், தனக்கு சட்ட ஆலோசனை மறுக்கப்பட்ட போது, இனி நாம் யாரிடமும் சட்ட  ஆலோசனை கேட்க கூடாது. மாறாக நாமே சட்ட ஆலோசனைகளை சொல்லும் நபராக மாற வேண்டுமென சபதமெடுத்து, அதற்கேற்ப திட்டமிட்ட ஐந்துக்கும் மேலே இரண்டு என ஏழு நூல்களை போற்ற வேண்டியப் பொக்கிஷங்களாக எழுத்திக் கொடுத்து விட்டாரே! 

இதைப் படித்தும், சுயமாக சிந்தித்தும் தன் பிரச்சினையை தீர்த்துக் கொள்ள இயலாமல் ஆலோசனை கேட்பதையே கொள்கையாக வாசகர்கள் வைத்திருக்கிறீர்கள் என்றால், உங்களை விட மடையன் இருப்பானா என்பதையும், இனியும் நாம் இருந்து என்ன சாதிக்கப் போகிறோம் என்பதையும் சிந்திக்க வேண்டாமா? 

சிந்திக்க முடியவில்லை என்றால், தன் எழுத்தின் மீதான தன்னம்பிக்கையில் ஆசிரியரே தில்லாக அறிவித்துள்ளபடி நூல்களை திருப்பிக் கொடுத்து விட்டு, நல்லதொரு பொய்யனை அணுகி நாசமாய் போக வேண்டியதுதானே? 

சரி, விட்ட விசயத்துக்கு வருவோம். 

கணவனிடம் கட்டாயப்படுத்தி வாக்குமூலம் பெற்றதைப் போலவே, மனைவியிடமும் வலுக் கட்டாயமாக பெற்றுவிட வேண்டும் என்ற அற்ப கெட்ட நோக்கத்தில், ‘‘சட்ட விரோதமாக குழந்தையின் தாய் சாட்சி சொல்ல வரவில்லை’’ என்று முட்டாள் நிதிபதி வாரண்ட் பிறப்பித்து இருப்பது நேற்று மதியம் எதார்த்தமாக பார்த்த போதுதான் நமக்கு தெரிந்தது. இதுபற்றி எல்லாம் அவர்கள் இருவருக்கும்தான் தெளிவு கிடையாதே! 

இந்த நிலையில் அந்த வேலைக்காரியை, உடனே கண்டு பிடித்தே ஆகவேண்டும் என்ற நிலையில் இன்று இப்படியொரு இபோஸ்ட் அவளுக்கு அனுப்பப் படுகிறது. இதன் பிறகு அவளது தலைவிதி என்னவோ?!
இபோஸ்ட் குறித்து ‘‘மநு வரையுங்கலை!’’ நூலில் விரிவாக எழுதப்பட்டு உள்ளது. இணையத்தில் தேடியும் எளிதாக அறியலாம்.

இதில் சம்பந்தப்பட்ட மனுக்களும், எந்த நியாயப்படி குற்றவாளி விடுதலை செய்யத்தக்கவள் என்பதும், மறைக்கப்பட்ட இன்னபிற தகவல்களும் இவ்வழக்கில் தீர்வு கண்ட பின்னரே முழுமையாக வெளியிடப்படும்.

பிற்சேர்க்கை நாள் 21-09-2019

மேற்சொன்னவாறு முதன் முதலாக நாம் இபோஸ்ட் அனுப்பிய அனுபவம் இது. அஞ்சலக ஊழியையாக உள்ள நம் வாசகியின் மூலம் அனுப்பப்பட்டது.


நீதியைத்தேடி... சட்டங்கள் உங்கள் பாக்கெட்டில் நூலில், ‘‘சான்று அஞ்சல் (Certificate of Posting)’’ என்பது பற்றி ஆசிரியர் எழுதி இருக்கிறார். இந்த முறை நீக்கப்பட்டு விட்டதால் தற்போது இல்லை.

இதேபோல, நீதியைத்தேடி... பிணை (ஜாமீன்) எடுப்பது எப்படி? நூலில், ‘‘சட்ட விரோதமாக கைது செய்யப்பட்டவர்களை அதிலிருந்து விடுவிக்க மாவட்ட நிதிபதிக்கு தந்தி அனுப்பலாம்’’ என சொல்லி இருக்கிறார். அஞ்சல் அலுவலகம் மூலம் அனுப்பும் தந்தி (Telegram) என்பதும் தற்போது இல்லை.

இதற்கு பதிலாக தற்போது, இபோஸ்ட் (ePost) என்ற முறையை பயன்படுத்திக் கொள்ளலாம். 

இதன்படி, நீங்கள் யாருடைய முகவரிக்கும் அனுப்பும் கடிதத்தை அப்படியே எழுதி JPGE படமாக அல்லது PDF ஆக கொடுத்தால், அதனை அந்த ஊர் அஞ்சலக மின்னஞ்சலுக்கு அனுப்பி, அங்கு பிரிண்ட் எடுத்து, உரிய முகவரியில் அன்றைய தினமோ அல்லது அடுத்த நாளோ கொடுத்து விடுவார்கள்.

நாம் இந்த வசதியைப் பெற, அந்த அஞ்சலகத்தில் கணினி பயன்பாடு இருக்க வேண்டும். ஆகையால், கிராமங்களில் உள்ள அஞ்சலகங்களில் இருந்து இப்படி அனுப்புவது கஷ்டந்தான்!

ஒரு வேளை நீங்கள் பெறுதல் முகவரியில் குறிப்பிட்ட  நபர் அந்த முகவரியில் இல்லையென்றால், நமக்கே திரும்ப அனுப்பி விடுவார்களாம். எப்படி வரும் என்பது வந்தால்தான் தெரியும்!

இந்தியாவின் எந்தவொரு முகவரிக்கும் இப்படி அனுப்ப ஒரு ஏ4 பக்கத்திற்கு ரூ 10 ஆகும் என்கிறார்கள். ஆனால், நாம் கொடுத்த ஒரு பக்கத்தை இரண்டு பக்கமாக கணக்கிட்டு ரூ. 20 வாங்கி இருக்கிறார்கள்.

நீங்கள் அனுப்பியதற்கு ஆதாரமாக மேலே கொடுத்துள்ளபடி ரசீது கிடைக்கும். ஆனால், அங்கு ஒப்படைக்கப்பட்டதற்கு ஆதாரம் எதுவும் கிடைக்காது என்பதால், இது முன்பு அமலில் இருந்து தற்போது இரத்து செய்யப்பட்டு விட்ட சான்று அஞ்சல் முறையை ஒத்ததே!

இதனை அவசரத் தேவைக்காக நீதிமன்றங்கள் உள்ளிட்டு யாருக்கு வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

பிற்சேர்க்கை நாள் 22-09-2019


நம்முடைய ePost கடிதத்திற்கு வேலைக்காரியிடம் இருந்து எந்தத் தகவலும் இல்லை. குழந்தையின் தந்தையிடம் மடத்தனமாக கட்டாயப்படுத்தி வாக்குமூலம் எழுதி வாங்கியதோடு, தாயை கைது செய்ய வாரண்ட் போட்டதால், இதையெல்லாம் விரிவாக எடுத்துச் சொல்லி இந்திய சாசனக் கோட்பாடு 227, 228 இன்படியான கண்காணிப்பு உரிமையின் கீழ், கண்காணித்து தக்க அறிவுறுத்தலை விடுக்க வேண்டுமென உயர்நீதிமன்ற பொதுப் பதிவாளருக்கு மின்னஞ்சல் மற்றும் பதிவுத்தபால் மூலம் மனுவை அனுப்பியாச்சி. இதன் நகலை நடுவருக்கும் அனுப்பியாச்சி. 

பிற்சேர்க்கை நாள் 26-09-2019

இது 24-09-2019 அன்று நடுவருக்கு சென்று சேர்ந்ததும், பெரிய அதிர்வலையை காண முடிந்தது. ஆமாம், இதன் விளைவாக 25-09-2019 அன்று வாரண்டின்படி கைது செய்யவில்லை என்பதோடு, குழந்தாயின் தாத்தா பாட்டியின் மூலம், குழந்தையின் பெற்றோர்களை சமாதானப்படுத்தி, சென்னை உயர்நீதிமன்றத்துக்கு அனுப்பிய கண்காணிப்பு மனுவை திரும்பப்பெற வைக்க முயற்சித்தனர்.

இதற்காக நடுவர் மன்றத்தில் வாதாடும் அரசுப் பொய்யரின் ஆலோசனையின்படியும், அவர்கள் வைத்துதரும் பொய்யரை வைத்தும், இவ்வழக்கை விசாரித்து வரும் கூட்டுக் களவாணிகளுக்கு பாதிப்பு எதுவும் இல்லாத வகையில் நடத்திக் கொள்ளலாம் என்பது திட்டம். 

ஆனால், நம் வாசகரோ ஏற்கெனவே வாக்கு மூலத்தில் கையொப்பமிட்டதை சுட்டிக்காட்டி கடுமையாக எச்சரித்து இருந்ததால், அப்பா அம்மாவின் சமரச முயற்சிக்கு இணங்காமல் நம் நிலைப்பாட்டில் தெளிவாக நின்று விட்டார். இந்தத் தெளிவு இல்லை என்றால், எதையும் உருப்படியாக செய்ய முடியாது. 

இனியும் குழந்தையின் பெற்றோர் இருவரும் இதே நிலைப்பாட்டில் உறுதியாய் நிலைத்து நின்றால் மட்டுமே நாம் நினைத்ததை சாதிக்க முடியும். பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

0 comments:

Post a Comment

பத்திரிகை செய்திகள்

அறவழி நோட்டா

அறவழி நோட்டா
மகாத்மா போதித்த வாக்குரிமை!

நோட்டா: NOTA

நோட்டா: NOTA
விளக்கம்: EXPLANATION

நூல்களின் முகப்பு

Followers

முக்கியப் பக்கங்கள்

அடிப்படை சட்டங்கள்

  • 1. இந்திய சாசனம் 1950
  • 2. நீதிமன்ற சாசனம் 1872
  • 3. இந்திய தண்டனை சட்டம் 1860
  • 4. குற்ற விசாரணை முறை விதிகள் 1973
  • 5. உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908

நம் நூல்களைப் பற்றி

நீதியைத்தேடி.... நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் வரிசையில்...
1 குற்ற விசாரணைகள்
2 பிணை (ஜாமீன்) எடுப்பது
எப்படி?
3 சட்ட அறிவுக்களஞ்சியம்
4 சட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்
5 சாட்சியங்களைச் சேகரிப்பது
எப்படி?
6 கடமையைச் செய்!
பலன் கிடைக்கும்
7 மநு வரையுங்கலை!Recent Posts Widget

இந்நூல்கள் அனைத்தும் உங்களின் சட்ட விழிப்பறிவுணர்வுக்காக
மத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவியோடு
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பொது நூலகங்கள், மத்திய சிறைச்சாலைகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

சொந்தமாக தேவைப்படுவோர், உ(ய)ரிய நன்கொடையைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு வாட்ஸ்அப் எண் 09842909190 ஆகும்.

எல்லாப் பதிவுகளும்!

நம் தள வகைகள்

பயின்றோர் (20-08-16)