சமூகத்தின் சட்ட விழிப்பறிவுணர்வுக்கான தளம் நீ வாழ, நீயே வாதாடு! நீதிமன்றத்தில் வாதாடுவது அப்பா அம்மாவிடம் பேசுவதுபோல்தான்! நியாயந்தான் சட்டம்! அதற்கு தேவையில்லை வக்கீல் பட்டம் வக்கீல் என்றாலே கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்களே! இடைத்தரகர்களே!!

நீ வாழ... நீயே வாதாடு... வரவேற்பு வாழ்த்து!

No law, no life. Know law, know life! என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியத்தை உணர்ந்து, ‘‘நீதியைத்தேடி... சட்டப் பல்கலைக் கழகத்திற்கு’’ வருகை தந்துள்ள உங்களை வருக என வரவேற்று, உங்களுக்கான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்று பயனைப் பெறுக என வாழ்த்துகிறோம்!
முக்கிய அறிவிப்பு : இந்த இணையப்பக்கத்தை புதுப்பிக்கும் பணி நடந்துக் கொண்டிருப்பதால், சில பதிவுகள் அல்லது இணைப்புக்கள் கிடைக்காமல் போகலாம்!

Friday, September 27, 2019

அசல் ஆவணங்கள் குறித்த, ஓர் எச்சரிக்கை!



பொதுவாக குற்றம் புரிந்தவர்கள் அதற்கான தடயங்களையும் முக்கிய ஆதாரங்களையும் அழிக்கவே முயற்சிப்பார்கள். ஆகையால் குற்றம் சாட்டப்பட்டவர்களை பிணையில் விடுவிக்கக் கூடாது என அரசு சார்பில் காவலர்கள் ஆட்சேபிப்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

காவல்துறையே இப்படி எச்சரிக்கிறது என்றால் நீங்கள் எவ்வளவு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள்.

ஆமாம் உரிமையியல் வழக்கை பொறுத்தவரை ஆவணங்களே பிரதானம் என்பதால் அந்த ஆவணங்களை கைப்பற்றி அழிக்கவே எதிரிகள் முயற்சிப்பார்கள். ஆகையால், ஆவணங்களை பொறுத்த வரை மிகவும் பத்திரமாக பாதுகாக்க வேண்டும். 

ஆனால், மழை, வெள்ளம், புயல், கரையான் உள்ளிட்ட பூச்சிகளிடம் இருந்து ஆவணங்களை பராமரிப்பது என்பது அவ்வளவு எளிதான வேலை இல்லை. எனவே முதலில் ஆவணங்களை தற்போதுள்ள தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி, ஸ்கேன் செய்து பத்திரப்படுத்திக் கொள்ளுங்கள். 

இதே அசல் ஆவணங்கள் அல்லது அதன் பிரதிகள் அரசு அலுவலகங்களில் இருந்தால், அதனை சான்று நகலாக வாங்கி பயன்படுத்திக் கொள்வது, நம்மிடம் உள்ள அசல் ஆவணங்களுக்கு மிகுந்த பாதுகாப்பாகி விடும்.  

அரசு அலுவலகங்களில் உள்ள ஆவணங்களை, ஊழியர்களுக்கு இலஞ்சம் கொடுத்து திருட்டுத் தனமாக பெறுவதை மக்கள் வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். இது சட்டப்படி தவறு என்பதோடு, தண்டிக்க தக்க குற்றமும் ஆகிவிடும். 


ஊழல் வழக்கில் சிக்கியுள்ள சிதம்பரத்திடமே கூட, ஆவணங்கள் எங்கிருந்து கிடைத்தன என்ற கேள்வியை நிதிபதிகள் எழுப்பி இருப்பது, நமக்கு எச்சரிக்கை!

எனவே எந்த ஆவணத்தையும் சட்டப்படி சான்று நகலாக விண்ணப்பித்து பெறுவதே சரியானது. அப்படி கொடுக்காத ஊழியர்களை வழக்கில் சாட்சியாக வரவைக்கலாம். அந்த ஆவணங்களையும் கொண்டு வரும்படி செய்யலாம். 

இப்படி ஆவணங்களைக் கேட்டு சான்று நகலுக்கு விண்ணப்பித்தால், ஒன்றுக்கு இரண்டு அல்லது மூன்றாக கூட கேட்டு வாங்கிக் கொள்ளனும். அப்போதுதான் இதிலொன்றை  அசலாக எங்கு வேண்டுமானாலும் தாக்கல் செய்யலாம். 

ஏற்கெனவே உள்ள ஆவணத்தை சான்று நகல் கேட்கும்போது, அசல் ஆவணத்தின் பிரதியில் உண்மை நகலென சான்று செய்து தர வேண்டுமென கேட்டு வாங்கனும். மாறாக புதிதாக தயாரித்துக் கொடுத்தால், அசலில் உள்ளதுதான் இதில் இருக்கிறது என்பதற்கு எந்த உறுதியும் இல்லை.

இப்படி மாற்றி எழுதித்தந்தால், ஐபிசி 166 மற்றும் 167 இன்படி, கடமையில் தவறி தவறான ஆவணத்தை உருவாக்கிய குற்றத்தில் சேரும். 

அசல் ஆவணங்களை ஒரு போதும் விசாரணைக்காக வெளியில் எடுத்துச் செல்லவே கூடாது. ஏனெனில், அசல் ஆவணங்களை தட்டிப்பறித்து அழிக்கவே முயற்சிப்பார்கள்.

ஆகையால், அரசூழியர்கள் உண்மை நகல் என நகலில் சான்று செய்து வழங்குவது போலவே,  இந்திய சாட்சிய சட்ட உறுபு 70 இன்படி, நாமும் அசல் ஆவணங்களின் நகலில் உண்மை நகல் என எழுதி கையெப்பம் இட்டு கொடுத்தாலே போதும். 

அசல் ஆவணங்கள் தேவை என நிதிபதி கேட்டால்கூட கையோடு கொண்டு சென்று அசலோடு நகலை ஒப்பிட்டு பார்க்க சொல்லி விட்டு உடனே வாங்கி கொள்ள வேண்டும்.

இதையும் அசல் ஆவணங்களை கொண்டு வரவேண்டும் என சட்டப்படி அழைப்பாணை கொடுத்தால் மட்டுமே கொண்டு போக வேண்டும்.

இல்லையேல் அந்த அசல் ஆவணங்கள் நீதிமன்றத்திலிருந்து கூட திருடப்பட்டு விடும் என்பதை, ஆசிரியர் மநு வரையும்கலை! நூலில் எச்சரித்து எழுதியுள்ளார். 

மேலும், இதில் வக்கீழ்ப் பொய்யர்கள், நிதிபதிகள் மற்றும் எழுத்தாளர்கள் எப்படி ஆவணங்களை கோட்டை விட்டார்கள் என்பதையும் எழுதி உள்ளார். எனவே எச்சரிக்கை! எச்சரிக்கை!!

பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

Tuesday, September 24, 2019

நீர் ஆதார ஏரிகளைப் பாதுகாக்க நினைப்பவரா, நீங்கள்?!



இந்த மாதத்தில் என்ன சிறப்பு என்றே தெரியவில்லை. நம்மிடம் வாங்கிக் கட்டிக் கொள்வதற்கு என்றே வரிசையாக வரும் அரசூழிய அறிவு வறுமைகளை வருக வருக! என வரவேற்று, அவர்களது அறிவு வறுமைகளையும், அய்யோக்கியத் தனங்களையும் சுட்டிக்காட்டி பின்னிப் பெடலெடுத்துக் கொண்டே இருக்கிறோம். 

ஆமாம், திண்டுக்கல் மாவட்ட நலப் பிணிகள் மறுத்துவ மடச்சி பூங்கோதைக்கு தொடுத்த செருப்படி கேள்விகளால், ஹீலர் பாஸ்கர் உள்ளிட்ட நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க நேரிடும் என்று குலைத்துக் கொண்டிருந்தது, எங்கே ஓடி ஒளிந்தது என்றே தெரியவில்லை. 

அதனை இதோடு விட்டு விடுவதா என்று பலர் ஆதங்கத்தில் கேட்க, அடுத்து என்ன செய்யலாம் என யோசித்துக் கொண்டிருந்த போது  அடுத்த அதிரடி கேள்விகளுக்கு போக வேண்டியதாகி விட்டது.  

ஆமாம், அடுத்தபடி அதிரடியாக, நம்முடைய சான்று நகல் கோரும் கேள்விகளில் சிக்கி சின்னாப் பின்னமாகி இருப்பது, ஓசூர் நகராட்சியா... மாநகராட்சியா... அதிலவர் ஆணையரா... ஆணையாளரா... என்பது கூட தெரியாமல், அறிக்கை என்றப் பெயரில் நமக்கு வெற்றுக் கடித காகிதத்தை கொடுத்து, ஓசூரில் உள்ள மிக முக்கியமான ஏரியான இராம நாயக்கன் ஏரிக்கு மூடு விழா காண முயற்சித்து  சிக்கியுள்ள மாநகராட்சியின் தலைமை நிர்வாக ஊழியர் கே. பாலசுப்பிர(சனி, மணி)யனே!

இது சற்றே பெரிய சான்று நகல் கோரும் கடிதம் ஆகையால், பொறுமையாக படித்தால் மட்டுமே எப்படி  அய்யோக்கிய அரசூழியர்களை கேள்விகளால் பிரித்து மேய்வது என்பது புரியும். 

இந்தத் திருடர் ஏரியை தூய்மைப்படுத்த உலக வங்கியிடம் இருந்து நிதியைப் பெற்றது போல நமக்கு சொல்ல, நாம் உலக வங்கியிடம் கேட்டதில், இப்படி நிதி கேட்டு எங்களுக்கு விண்ணப்பமே வரவில்லை என்கிறார்கள்.   

****************
கே சொ/ நி க/ 57 - 2019 தேதி 23-09-19

மிகவும் அவசரம் / நேரில் / மின்னஞ்சல் சார்வு

இந்திய சாட்சிய சட்டப்படியான சான்றுகளை கலந்தாலோசனை கூட்டத்திற்கு ஆய்வுக்காகவும், நகலெடுத்துக் கொள்வதற்காகவும் கொண்டுவர கோரும் மனு!

பெறுதல் 
திரு. கே. பாலசுப்பிரமணியன், 
தலைமை நிர்வாக ஊழியர்
மின்னஞ்சல் முகவரி commr.hosur@tn.gov.in
மாநகராட்சி நிர்வாகம், 
ஓசூர் மாநகராட்சி, ஓசூர் & 635109

பொருள் : இந்திய சாசனக் கேட்பாடு 51அ-இன் கீழான கடமையாக, ஓசூர் இராமநாயக்கன் ஏரியில் அமைந்துள்ள அனைத்து விதமான ஆக்கிரமிப்புகளையும் அகற்றியும், ஆழப்படுத்தியும், தூர்வாரியும் காக்க வேண்டிய கடமையை எடுத்து உரைத்தல் தொடர்பாக.., 
     நீதிமன்ற சாசனமாம் இந்திய சாட்சிய சட்டம் 1872 இன் உறுபு 76 இன்கீழ் சான்று நகல்களை கோருதல், ஆவணங்களை ஆய்வு செய்யவும் அனுமதி கோருதல் மற்றும் வெள்ளையறிக்கை விட வலியுறுத்தல்... 
பார்வைகள்: 
1. இந்திய சாசன கேட்பாடு 51அ-இன் உட்பிரிவு ‘எ மற்றும் ஓ’ கீழான கடமை.
2. இதனை வலியுறுத்தி எங்களின் சார்பில் தமிழக ஆளுநருக்கு எழுதப்பட்ட கடிதம் தேதி 27-07-2019  
3. இதன் பேரிலான தங்களின் ந. க. எண் 7341 / 2019 / பி3 நாள் 09-09-2019
4. ஓசூர் பொதுமக்களிடம் 30-09-2019 அன்று கருத்துக் கேட்பு கலந்தாய்வு கூட்டம் நடத்த உள்ளதாக வெளியான தங்களின் நாளிதழ் பொது அறிவிப்பு.   
         திரு. கே. பாலசுப்பிரமணியன் அவர்களுக்கு

இந்திய சாசனக் கேட்பாடு 51அ-இன் உட்பிரிவு ‘எ’ இல் ஆறுகள், ஏரிகள், காடுகள், காட்டு விலங்குகள் மற்ற உயிரினங்கள் உட்பட அனைத்து இயற்கை சுற்றுச் சார்புகளை காக்க வேண்டுமெனவும், இதனை அதன் உட்பிரிவான ‘ஓ’ இல் தனியாகவும், கூட்டாகவும் செய்வதை கடமையாக கருத வேண்டும் என்ற அற்புதமான அறிவுறுத்தலின் அடிப்படையில் இக்கடமை மனுவை உங்களுக்கு சமர்ப்பிப்பது கடமையாகி விட்டது.

இதன் பேரில் எழுந்ததுதான் பார்வை 2 இல் கண்டுள்ள, தமிழக ஆளுநருக்கான எங்களின் மனுவும் என்பதையும், இதனை குறிப்பிட்டு பார்வை 3 & இல் குறிப்பிட்டுள்ள தங்களின் கடிதத்தை படிப்பதற்காகவும், நினைவூட்டலுக்காகவும், கேள்விகளை எழுப்புவதற்கு வசதியாகவும் அப்படியே அடுத்தப் பக்கத்தில் அச்சேற்றி உள்ளோம். 

இதன்படி (மக், எங்)களுக்கு எழுந்துள்ள வினாக்கள்

1. தலைப்பை பொறுத்தவரை, ‘தலைப்பில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை’ என குறிப்பிடப் பட்டுள்ள நிலையில், தங்களின் பெயருக்கு கீழே ‘ஆணையாளர் மாநகராட்சி’ என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. 

நகராட்சி மற்றும் மாநகராட்சி என இரண்டு இடங்களிலும் வேறுபட காரணம் என்ன? நகராட்சி என்றால் ‘ஆணையர்’ என்றும், மாநகராட்சி என்றால் ‘ஆணையாளர்’ என்றும் சட்ட விதிகளின்படி சொல்ல வேண்டும். 

முதலில் ஓசூர் நகராட்சியா... மாநகராட்சியா...; அதில் நீங்கள் ஆணையரா... ஆணையாளரா?

2. இதன் பொருள் பகுதியின் ஆரம்பத்தில், ஆளுநர் மனுக்கள் என்று குறிப்பிட்டு உள்ளீர்கள் என்பதன் மூலம், நாங்கள் ஆளுநருக்கு அனுப்பிய ஒன்றுக்கும் மேற்பட்ட கடிதங்கள், உங்களுக்கு வந்திருக்கிறது என்றும் ஆனால், அதில் ஏரி சம்பந்தமான மனுவிற்கு மட்டும், ‘அச்சேற்றிய வெற்று அறிக்கை கடிதத்தை மட்டும்’ கொடுத்து விட்டு, மற்றதை எல்லாம் மறைத்துள்ளீர்கள் என்றே பொருள். 

3. ஆமாம், இதன் பொருள் பகுதியின் முடிவில், ‘‘அறிக்கை சமர்ப்பித்தல் தொடர்பாக’’ என்று குறிப்பிட்டு உள்ளீர்கள். 

நாட்டில் அமலில் உள்ள சட்ட விதிகளின்படி, ‘அறிக்கை’ என்றால், ஒரு பொருளைப் பற்றி சொல்லப்பட்டுள்ள விவரங்கள் ஒவ்வொன்றையும், இடையில் கேள்விகள் எதுவும் எழாத வண்ணம் மிகவும் நேர்த்தியாக ஆவண ஆதாரங்களோடு விளக்கி தெளிவுபடுத்துவது. 

இதற்கு நல்லதொரு உண்மையாக சொல்ல வேண்டுமென்றால், குற்றவியல் வழக்குகளில் காவல் துறையினர் புலனாய்வை முடித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்யும் (நடந்த குற்றம், இடம், காலம், புகார்தாரர்,  குற்றம் நடந்ததற்கான காரணம் அல்லது நோக்கம், அது தொடர்பாக செய்யப்பட்ட புலனாய்வு, புலனாய்வில் கிடைத்த தடையங்கள், ஆதாரங்கள், சாட்சிகள் உள்ளிட்ட) பலபக்க குற்றப்பத்திரிகையை மிகப் பொறுத்தமாக சொல்லலாம்.

ஆனால், ‘அறிக்கை’ என்று குறிப்பிட்டுள்ள நீங்கள், அச்சேற்றியுள்ள இந்த ஒருபக்க தகவலை தவிர, அதற்கான சாட்சிய சட்டப்படி செல்லத்தக்க ஆவணங்கள் எதையும் இணைக்கவில்லை என்பதில் இருந்தே, ‘நீங்கள் உண்மைக்கு மாறான சாட்சியச் சட்டப்படி செல்லாத ஆவணத்தை நன்றாகத் தெரிந்தே அளித்துள்ளீர்கள்’ என்பதோடு, ‘எந்தத் தகுதியின் அடிப்படையில் ஆணையர் அல்லது ஆணையாளர் ஆனீர்கள்’ என்பதும் சந்தேகத்திற்கு உரியதாகவே இருக்கிறது. 

அச்சேற்றியுள்ள வெற்று கடிதத்தின் அல்ல அல்ல சாட்சிய சட்டப்படி செல்லாத காகிதத்தின் பொருள் பகுதியில் குறிப்பிட்டுள்ள தனித்துணை ஆட்சியரின் கடிதம் மற்றும் உதவிப் பொறியாளரின் குறிப்புகள், எங்களின் கடிதத்தால் விளைந்தவை என்ற வகையில் அதுபற்றி குறிப்பிட்டுள்ளபோது, ‘அதன் நகலை எங்களுக்கு இணைத்து அனுப்பாததும் தங்களின் நடத்தையையும், நேர்மையையும் மேலும் சந்தேகிக்க  வைக்கிறது’
  
4. அதில் தாங்கள் சொல்லியுள்ள ‘உலக வங்கியின் நிதியைப்’ பொறுத்தவரை...

அ) இதில் குறிப்பிட்டுள்ளபடி மத்திய அரசு உத்தரவு என்ன?

ஆ) உலக வங்கியின் நிதியைப் பெற மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளதா? அறிவுறுத்தி இருந்தால் எவ்வளவு? நிதி பெறப்பட்டிருந்தால் அதன் விரிவான விவரங்கள் என்ன?

இ) நம் நாட்டின் சார்பாக பின் தங்கிய நாடுகளுக்கு பயணம் செய்யும் பிரதமர் அந்நாடுகளுக்கு ஆயிரக்கணக்கான கோடிகளில் நிதியுதவி அளித்து வரும் நிலையில், ஓசூரில் ஏற்கெனவே இருக்கும் ஓர் ஏரியை பழுது பார்க்கவும், பராமரிக்கவும் உலக வங்கியிடம் இருந்து நிதியைப் பெற வேண்டிய அவசியம் என்ன?

ஈ) உலக வங்கியின் நிதியைப்பெற பரிந்துரை செய்தது யார்? எதன் அடிப் படையில் பரிந்துரை செய்யப்பட்டது?

உ) தமிழ்நாடு முழுவதுமுள்ள பல்வேறு ஏரிகளையும் தன்னார்வலர்கள் தூர்வாரி ஆழப்படுத்தியதாக அவ்வப்போது நாளிதழ்களிலும், சமூக வலைத்தளங்களிலும் ஆதாரங் களுடன் செய்திகள் வெளிவரும் நிலையில், அதுபோன்றதொரு யுத்தியை நீங்கள் பயன்படுத்தாமல் உலக வங்கியின் நிதியை கோருவது எதனால்?

ஊ) குட்டி ஜப்பான் என்று சொல்லும் அளவிற்கு தொழில் நகரமான ஓசூர் மாநகராட்சிக்கு பல்வேறு வழிவகைகளில் கோடிக்கணக்கில் வருமானம் வரும் நிலையில், அந்த நிதியில் குறிப்பிட்ட நிதியை ஒதுக்கிப் பயன்படுத்தாமல் உலக வங்கியின் நிதியை கோருவது எதனால்?

எ) அப்படி ஒருவேளை ஓசூர் மாநகராட்சிக்கு கிடைக்கும் வருவாய் நிதி ஆதாரத்தில் செய்ய முடியவில்லை என்றால், மத்திய மாநில அரசுகளிடம் நிதியை கோர வேண்டியதுதானே? அப்படி கோரப்பட்டதா? கோரப்பட்டிருந்தால், அதுகுறித்து அரசுகள் தெரிவித்தது என்ன?

ஏ) முன் மாதிரி நகரம் திட்டத்தின் கீழ், இராம நாயக்கன் ஏரி தூர்வாரி ஆழப்படுத்தப்பட்டு விட்டதா? அப்படி ஆழப்படுத்தப்பட்டிருந்தால் எப்போது? அதற்காக செலவிடப்பட்ட நிதி எவ்வளவு?

ஐ) ஓசூரில் உள்ள ஓர் ஏரியை பராமரிக்க, ஓசூர் மாநகராட்சி உலக வங்கியிடம் கையேந்துகிறது என்றால், ஓசூர் மாநகராட்சியும், அதன் ஊழியர்களும் எதற்கு? 

ஒ) உலக வங்கியில் இருந்து பெறப்படும் நிதி, திருப்பி தரப்பட வேண்டாத நிதியுதவியா அல்லது திருப்பித் தரவேண்டிய கடனா? இதற்கு வட்டி உண்டா? 

ஓ) திருப்பித் தர வேண்டிய கடன் என்றால், எவ்வளவு நாளில் திருப்பித்தரனும்? வட்டி எவ்வளவு தரனும்? இதனை எப்படி திரும்பச் செலுத்த திட்டமிட்டு உள்ளீர்கள்?

5. அதில் சொல்லியுள்ள ‘Inlet & Outlet பழுது பார்த்தல்’ லைப் பொறுத்தவரை...   

அ) இப்போதுள்ள Inlet & Outlet இல் என்ன பழுது ஏற்பட்டு உள்ளது? இன்ன இன்ன பழுது ஏற்பட்டுள்ளது என்று யார் ஆய்வு செய்து அறிக்கை கொடுத்தது? ஆய்வு செய்து அறிக்கை கொடுக்க கேட்டுக் கொண்டது யார்? 

ஆ) இதற்கு முன்பாக Inlet & Outlet இல் எப்போது பழுது பார்க்கப்பட்டது? இதற்காக செலவிடப்பட்ட நிதி எவ்வளவு? எந்த நிதியில் இருந்து செலவிடப்பட்டது? இதற்கெல்லாம் ஒப்புதல் தந்தது யார்?

6. அதில் தாங்கள் சொல்லியுள்ள ‘கிழக்குபுறம் கரை அமைத்தல்’ லைப் பொறுத்த வரை...  

அ) கிழக்குபுறம் என குறிப்பிட்டுள்ளது எந்தப் பகுதி? அப்புறத்தில் ஏற்கெனவே கரை இருந்ததா இல்லையா? கரை இருந்திருந்தால் அது இல்லாமல் போனது எப்படி? 

ஆ) ஏற்கெனவே இல்லை என்றால், நான்கு புறங்களில், கிழக்குபுறம் மட்டும் கரை இல்லாமல் எப்படி ஓர் ஏரி இருக்க முடியும்? இவ்வளவு நாளாக இருந்தது எப்படி?

இ) அப்படி அதிசயமாக கிழக்குபுறத்தில் கரை இல்லாமல் இருந்திருந்தால், இனியும் அப்படியே இருக்க வேண்டியதுதானே? இப்போது கரை கட்ட வேண்டிய அவசியம்?

7. அதில் தாங்கள் சொல்லியுள்ள ‘ஏரியின் இதர இடங்களில் பழுது பார்த்தல்’ லைப் பொறுத்த வரை...

ஏரியில் என்னென்ன இடத்தில், என்னென்ன பழுது ஏற்பட்டுள்ளது? அவை எதனால் ஏற்பட்டது? பழுது நீக்குவதற்காக செய்ய உள்ள பணிகள் என்னென்ன?

8. அதில் தாங்கள் சொல்லியுள்ள ‘பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஏரியினை சுற்றி நடைபாதை அமைத்தல்’ லைப் பொறுத்தவரை...

அ) ஏற்கெனவே ஏரியினை சுற்றி நான்கு புறங்களிலும் சாலைகள், கட்டிடங்கள் என இருக்கும் நிலையில் எந்த விதத்தில், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஏரியைச் சுற்றி நடைபாதை அமைக்க முடியும்? 

ஆ) அப்படி அமைப்பதாக இருந்தால், ஏற்கெனவே பொது மக்களின் ஆக்கிரமிப்பு, நான்கு வழிச் சாலைக்கு கையக்கப்படுத்தியது பல்வேறு ஆக்கிரமிப்புகளுக்கு பிறகு கிட்டதட்ட பாதி பரப்பளவாக குறைந்து விட்ட ஏரியில், மீண்டும் தங்களின் பங்கிற்கு ஆக்கிரமிப்பு செய்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஏரியைச் சுற்றி நடைபாதை அமைத்துத் தர முடிவு செய்துள்ளீர்களா? 

இ) அப்படி அமைத்துத் தந்தால், அங்கு வரும் மக்களுக்காக தற்காலிக கடைகள் உள்ளிட்டவை தோன்றி, பின் அவை நிரந்தர ஆக்கிரமிப்புகளாக மாறாதா? 

ஈ) ஆக்கிரமிப்புகளை அகற்றி ஏரியை அகலப்படுத்த வேண்டிய கடமைப் பொறுப்பில் உள்ள நீங்களே, இதுபோன்ற கயமைத்தனங்களுக்கு வழி ஏற்படுத்தி கொடுக்கலாமா? 

உ) இப்படியொரு வசதியைச் செய்துத் தந்தால் அங்கு வரும் மக்களின் உயிருக்கு என்னென்ன பாதுகாப்பு இருக்கிறது? பாதுகாப்பு வசதியை செய்துத்தரப் போவது யார்? எந்தெந்த விதத்தில்?

ஊ) அங்கு நடக்கும் சட்ட விரோத செயல்களுக்கு நீங்கள் தார்மீக பொறுப்பேற்க தயாரா?

எ) ஏரியை சுற்றியுள்ள நான்கு பக்கங்களிலும், ஏற்கெனவே பல்லாண்டுகளாக மக்கள் வாழ்ந்து வருகிறார்கள் என்பதால், அவரவர்களும் வாழும் பகுதிகளில் ஏற்கெனவே நடைபாதை வசதிகள் பல இருக்கும்போது, ஏரியைச் சுற்றி நடைபாதை அமைத்துத் தர வேண்டிய அவசியமென்ன?

ஏ) ஏரி என்பது, மக்களின் பயன்பாட்டிற்கு தேவையான நீர் ஆதாரத்தை காத்து, மக்களுக்கு வழங்குவதற்காகவா அல்லது சுற்றுலாத் தளம்போல மக்கள் சுற்றிப் பார்த்து பல்வேறு வகைகளில் நீரை மாசடையச் செய்வதற்காகவா? 

9. அதில் தாங்கள் சொல்லியுள்ள ‘செடிகள் வளர்த்தல், அழகு படுத்துதல்’ லைப் பொறுத்தவரை...

அ) இதனை ஏரியின் எப்பகுதிகளில் எல்லாம் செய்யப் போகிறீர்கள்? இதற்காக ஏரியில் நீங்கள் எவ்வளவு இடத்தை ஆக்கிரமிப்பு செய்யத் திட்டம் தீட்டியுள்ளீர்கள்?

ஆ) மக்களின் பயன்பாட்டிற்கான நீர் ஆதாரம், மக்களின் வருகையால் சிறுநீர் மலம் உள்ளிட்டவற்றால் பயன்படுத்த முடியாத அளவிற்கு மாசுபடும் என்பதாலும்,   ஏரி சுற்றுலாத்தளம் அல்ல என்பதாலும், பின் எதற்காக செடிகளை வளர்த்து, அழகு படுத்த வேண்டும்?

10. அதில் தாங்கள் சொல்லியுள்ள ‘Sewage Treatment Plant’  லைப் பொறுத்த வரை...

அ) இதற்காக ஏரியில் எவ்வளவு இடத்தை ஆக்கிரமிப்பு செய்ய திட்டம் தீட்டி உள்ளீர்கள்? 

ஆ) எங்குள்ள கழிவு நீரை, இங்கு கொண்டு வந்து சுத்தம் செய்ய திட்டம் தீட்டியுள்ளீர்கள்?

இ) வெளியில் இருந்து கழிவு நீரை கொண்டு வரும் உத்தேசமில்லை என்றால், ஏற்கெனவே சொன்னபடி மக்களின் வருகையால் மாசுபடும் நீரை சுத்தப்படுத்தவே என்றால், இது தும்பை விட்டு வாலைப் பிடிக்கும் வெட்டி வீண் வேலையல்லவா?

ஈ) நீரை மாசுபடாமல் காப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது உங்களின் கடமையா? அல்லது நீரை மாசுபடுத்துவதற்கான எல்லா வேலைகளையும் செய்துக் கொடுத்து, அதன்படி நீரை மாசுபடுத்த வைத்து, பின் அதனை சுத்திகரிப்பு செய்வது உங்களின் கடமையா?? 

உ) நீரை மாசுபடாமல் காப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது உங்களின் கடமை என்பது முட்டாள்களுக்கு கூட சொல்லாமலேயே விளங்கும் என்ற நிலையில், இது போன்ற திட்டங்களை தீட்டுவதற்கு நீங்களென்ன முட்டாள்களுக்கு எல்லாம் முட்டாளா?

ஊ) கழிவு நீரை சுத்தம் செய்ய ஏரியை ஆக்கிரமித்துத்தான் ‘Sewage Treatment Plant’ ஐ நிறுவ வேண்டுமென உங்களுக்கு எந்த சட்ட விதி அறிவுறுத்துகிறது? இதற்கு யார் யாரிடம் எல்லாம் அனுமதி பெற்றுள்ளீர்கள்?

11. இதுபற்றி ஓசூர் பொதுமக்களிடம் 30-09-2019 அன்று கருத்துக் கேட்பு கலந்தாய்வு கூட்டம் நடத்த உள்ளதாக வெளியான தங்களின் நாளிதழ் பொது அறிவிப்பை அச்சசேற்றி உள்ளோம். 


அ) இந்தப் பொது அறிவிப்பை திட்டம் தீட்டுவதற்கு முன்பாக அல்லவா அறிவித்து இருக்க வேண்டும்? 

ஆ) ஆனால், அப்படி அறிவிக்காமல் திருட்டுத் தனமாக திட்டம் தீட்டியது எங்க ளுக்கு தெரியவந்து, இதுகுறித்து நாங்கள் தமிழக ஆளுநருக்கு மநு அனுப்பியப் பின், அதன் மீதான இந்த அறிவிப்பு திட்டமிட்ட கண் துடைப்பு நாடகமாகவே தெரிகிறது.

இ) ஆமாம், தங்களின் திட்டம் (மக், எங்)களின் நலனுக்கானது அல்ல. மாறாக உங்களின் சுயநலனுக்கானதே என்பதை மேலே சொல்லி விட்டோம். 

ஈ) இதனை உறுதிப்படுத்துவது போலவே பொது மக்களுக்கு விடுமுறை நாளான ஞாயிற்றுக் கிழமைகளில், கலந்தாலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யாமல், 30-09-2019 அன்று திங்கள் கிழமையான வேலை நாளில் ஏற்பாடு செய்தது ஏன்? 

உ) உங்களுக்கு ஞாயிறு விடுமுறை நாள் என்றாலுங்கூட, (மக், எங்)களுக்காக 24 மணி நேரமும் ஊழியத்தில் உள்ளவர் என்பதால், இந்த கலந்தாலோசனை கூட்டத்தை, பொது விடுமுறை நாளான ஞாயிறு அன்றுதான் வைத்திருக்க வேண்டும்.

ஊ) இதையும் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு பகுதி வாழ் மக்கள் தங்களின் கருத்துக்களை சொல்வதற்கு ஏதுவாக நான்கு பகுதிகளாகப் பிரித்து வைத்திருக்க வேண்டும். 

எ) அப்போதுதான் பொதுமக்கள் தாமாக முன்வந்து தங்களின் கருத்தைக்களை பகிர முடியும்; இதற்கு வாய்ப்பளிக்காத கலந்தாலோசனை கூட்டம் கூட்டமே அல்ல! 

ஏ) மாறாக, கணக்கு காட்டுவதற்காக திட்டமிட்டு செய்யப்பட்டுள்ள முன் ஏற்பாடே என்பது (மக், எங்)களின் பகிரங்க குற்றச்சாற்று ஆகும். 

ஐ) ஆமாம், இதற்காகத்தான் போதிய அளவில் விளம்பரங்கள் எதுவும் செய்யப் படாமல் குறுகிய மனப்பான்மையில் குறுகிய கால அளவில், கலந்தாலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடும் செய்யப்பட்டு உள்ளது.

ஒ) மேலும், பார்வை 3 இன் மூலம் ‘எங்களுக்கு சொல்லப்பட்ட உலக வங்கியின் நிதி உள்ளிட்ட முக்கிய தகவல்கள் பல பார்வை 4 இல் உள்ள பத்திரிகை செய்தியில் திட்டமிட்டு சொல்லப்படாமல் மறைக்கப்பட்டு உள்ளது’ கெட்ட உள்நோக்கம் கொண்ட குற்றச் செயலே!

ஓ) எனவே, பொதுமக்களின் நீர் ஆதாரத்திற்கு குந்தகமும், நீருக்கு கேடும் விளை விக்கும் இத்திருட்டுத்தனமான திட்டம் இரத்து செய்யப்பட வேண்டும்.          

12. ஆமாம், ஓசூரின் உள்ளும், புறமும் அமைந்துள்ள எல்லா ஏரிகளிலும் இதுபோன்ற செயல்களை செய்யப்போவதாக தாங்கள் சொல்லவில்லை என்பதன் மூலம், ஓசூரின் அரசு மருத்துவமனை, தாலுக்கா அலுவலகம், நீதிமன்றங்கள், காவல் நிலையம் சார் ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட இன்னும் பல மிக முக்கிய அலுவலகப் பகுதிகள் நிறைந்த ஊரின் பிரதான உள்புறத்தில் உள்ள வாழும் பொது மக்களின் பிரதான நீர் ஆதாரமாக விளங்கும்.., 

இராம நாயக்கன் ஏரியை மட்டும் இப்படியெல்லாம் ஆக்கிரமிப்பு செய்ய திட்டம் தீட்டியதில் கேடுகெட்ட உள்நோக்கதை தவிர வேறொன்றும் இருக்கவே வாய்ப்பில்லை என்பது, எங்களுக்கு உள்ளங்கை கை நெல்லிக்கனியாகப் புலப்பட்டதை போலவே, திட்டம் தீட்டிய உங்களுக்கு மட்டும் புலப்படாமல் போய் விடுமா என்ன?   

13. ஓசூரின் துணை ஆட்சியராக திரு. அனந்த குமார் அவர்கள் இருந்த போது, அவரது அலுவலகத்திற்கு நேர் எதிரேயே, இராமநாயக்கன் ஏரியில் ஆக்கிரமிப்புச் செய்து கோவில் ஒன்று கட்டப்பட்டது. அது எங்களின் துரித சட்ட நடவடிக்கை களால் முழுமையடைவதற்கு முன்பே, அவரது தலைமையிலேயே இடிக்கப்பட்டது. 

ஆனால், அதன் தரை மட்டத்திற்கான அடித்தளம் இன்று வரை அகற்றப்படாமல் அப்படியே சாலை ஓரத்தில் அனைவருக்கும் நன்றாக தெரியும்படியே ஆக்கிரமித்து இருக்கிறது என்றால், இன்னும் (மக், எங்)களுக்கு தெரியாத ஆக்கிரமிப்புகள் ஏராளம்! ஏராளம்!!

14. எனவே, இதையெல்லாம் அகற்றி ஏரியின் பரப்பளவை மீட்பதன் மூலம், நாளுக்கு நாள் பெருகி வரும் மக்களின் தேவைக்கு ஏற்ப நீர் ஆதாரத்தை காத்தும் மக்களுக்கு தங்குதடையின்றி நீர் கிடைக்கச் செய்வதுதான் தங்களின் கடமையே ஒழிய, உலக வங்கியின் நிதியைப் பெற்று பல ஆக்கிரமிப்புகளை செய்து, அந்நிதியில் கொள்ளையடிக்க முயற்சிப்பது அல்ல. 

15. ஆகையால், 1950 ஆம் ஆண்டில் இராமநாயக்கன் ஏரியின் மொத்த பரப்பளவு எவ்வளவு? இப்போது உள்ள பரப்பளவு எவ்வளவு? 

இதில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுதிகள் எவையெவை என ஆராய்ந்து அவற்றையெல்லாம் மீட்டெடுக்க வேண்டியதே உங்களின் இந்திய சாசனத்தின் படியான கடமை என்பதை வலியுறுத்துவதே எங்களின் கடமையாகும். 

16. மேலும், இந்த திருட்டுத்தனமான கேடுகெட்ட திட்டத்திற்கு நிதி கொடுக்க கூடாது என ஆட்சேபித்து, இந்தியாவுக்கான உலக வங்கியின் பிரதிநிதிக்கு 07-08-2019 அன்று மின்னஞ்சல் அனுப்பியதில், ‘இதுவரை அப்படியொரு திட்டம் எங்களுக்கு வரவே இல்லை’ என்று 16-08-2019 அவர்கள் மின்னஞ்சல் வழியில் அளித்த பதிலை அப்படியே பதிவேற்றி உள்ளோம். 

உண்மைகள் இவ்வாறு இருக்க, பார்வை 3 இல் கண்டுள்ள எங்களுக்கான கடிதத்தில் ‘உலக வங்கியின் நிதியைப் பெற்று விட்டதுபோல, பொய்யான தகவல்களை  தந்திருப்பதும், இதனை பார்வை 4 இல் மறைத்து பொது அறிவிப்பை வெளியிட்டிருப்பது, ஆணையாளராக உள்ள அய்யோக்கியத்தன கயமையை காட்டுகிறதே’ தவிர, கடமைப் பொறுப்பை காட்டவில்லை.

எனவே, மக்களை திட்டமிட்டு ஏமாற்றும் எண்ணத்தோடு வெளியிடப்பட்டு உள்ள பொது அறிவிப்பையும், இது தொடர்பான அனைத்து திட்டங்களையும் இரத்து செய்து விட்டதாக மறு பொது அறிவிப்பை வெளியிட வேண்டியதும், பத்திகள் 12 முதல் 15 வரை (மக், எங்)களின் கடமையாக வலியுறுத்தியுள்ளவற்றை செய்வதே உங்களின் கடமை என்பதையும் சட்டப்படி அறிவித்துக் கொள்கிறோம்.

இதையும் மீறி கலந்தாலோசனைக் கூட்டத்தை நடத்துவதாக இருந்தால், இதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து கேள்விளுக்குமான ஆவண ஆதாரச் சான்றுகளை எல்லாம் பொதுமக்கள் சோதித்து தேவையானவற்றை சான்று நகல்களாக பெறுவதற்கு வழிவகை செய்ய வேண்டியதுடன், இதுகுறித்த விரிவான விளக்கத்தையும், விவாதிப்பதற்கு ஏதுவாக இதனைப் பெற்ற 24 மணி நேரத்தில் எங்களுக்கு தர வேண்டும்.  

கேர் சொசைட்டிக்காக
உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என மொத்தம் 111 நபர்களின் கையொப்பத்துடன் நாளை 25-09-2019 அன்று மாலை நேரில் வழங்கி, ஒப்புதல் பெறப்பட உள்ளது. 

நகல்: இந்திய சாசனக்கோட்பாடு 51 அ-இன்படி, இந்திய குடிமக்களிடையே பொதுவான விழிப்பறிவுணர்வை ஏற்படுத்துவதற்காக நூல்கள், இணையப்பக்கங்கள், அனைத்து வித சமூக வலைத்தளங்களின் வெளியீட்டுக்காகவும்.., 

மேலும் இந்திய சாசனத்தின் பல்வேறு கோட்பாடுகளின் கீழ் சட்டக் கடமையைச் செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள தமிழக தலைமை ஊழியரான ஆளுநர், சென்னை உயர்நீதிமன்ற பொது பதிவாளர், கிருஷ்ணகிரி மாவட்ட தலைமை நிர்வாக ஊழியர் உள்ளிட்ட பல முக்கிய ஊழியர்களுக்கும் மற்றும் உலக வங்கிக்கான இந்தியப் பிரதிநிதி ஊழியருக்கும் மின்னஞ்சல்கள் மற்றும் பதிவஞ்சல் வாயிலாக... 

*********************

எங்களின் இந்த ஆக்கப்பூர்வமான முயற்சியை வலுப்படுத்தும் விதமாக, உலகெங்கிலும் வாழும் இந்திய குடிமக்களும் பங்கேற்று தனியாகவோ அல்லது கூட்டாகவோ மிக எளிமையாக மின்னஞ்சல் மூலம், ஏரிகளை காக்கும் கடமையைச் செய்யலாம்.

ஆமாம், மிகமிக எளிமையாக எப்படி செய்யலாம் என்பதற்காக மாதிரி ஒன்றை கொடுக்கிறோம். 
இதன்படி, உங்களது பாணியில் மநுவை தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். எங்களின் மனுவை நாளை 25-09-2019 அன்று நேரில் கொடுத்து ஒப்புதல் வாங்கியதும் தெரிவிக்கிறோம். அதன் பிறகு ஆனால் 27-09-2019 அன்று மாலை 5 மணிக்குள் அனுப்பி வையுங்கள்.

பிற்சேர்க்கை நாள் 25-09-2019 நேரம் 19.30

நாம் ஏற்கெனவே திட்டமிட்டபடி, 111 கடமையாளர்களின் கையொப்பத்துடன், இன்று மாலை 18.00 மணிக்கு ஓசூர் மாநகராட்சியில் மேற்கண்ட சான்று நகல் கோரும் கடிதத்தை கொடுத்து அதற்கான ஒப்புதலையும் பெற்றாகி விட்டது.


எனவே, இனி ஏரியை காக்க விரும்புபவர்கள் விரும்பிய படி, 27-09-2019 மாலை 17.00 மணிக்குள் அனுப்பி வைக்கவும். இதற்கு வசதியாக மேற்கண்ட மாதிரி படிவத்தினை, தேவையானபடி திருத்திக் கொள்வதற்காக எழுத்துக்களாக கொடுத்துள்ளோம்.

ஏரிகளைப் பாதுகாக்க வேண்டுமென்கிற அக்கறையுள்ள பொதுமக்களுக்கு... நீங்கள் செய்ய வேண்டியது மிக எளிது.

அனுப்புதல்




பெறுதல்
திரு. கே. பாலசுப்பிரமணியன், தலைமை நிர்வாக ஊழியர்
மின்னஞ்சல் முகவரி commr.hosur@tn.gov.in
மாநகராட்சி நிர்வாகம்,
        ஓசூர் மாநகராட்சி, ஓசூர் & 635109

பொருள்: ஓசூர் இராமநாயக்கன் ஏரி சம்பந்தமாக, ஓசூர் கேர் சொசைட்டி மற்றும் பொதுமக்களின் சார்பில் கொடுக்கப்பட்டுள்ள கே சொ/ நி க/ 57 - 2019 தேதி 23-09-19 இன் சங்கதிகளை வழிமொழிந்து நிறைவேற்ற கோருதல்...

பார்வை : சமூக வலைத்தளங்களில் வேகமாக வளம் வந்துக் கொண்டிருக்கும் கே சொ/ நி க/ 57 - 2019 தேதி 23-09-19.

திரு. கே. பாலசுப்பிரமணியன் அவர்களுக்கு

பொருள் மற்றும் பார்வை பகுதியில் கண்டுள்ள கடிதத்தை சமூக வலைத் தளத்தில் படிக்க நேர்ந்ததில், அதில் ஆவண ஆதாரங்களோடு சொல்லப்பட்டுள்ள அனைத்து சங்கதிகளும் உண்மை என்பதை, உள்ளங்கை நெல்லிக்கனியாக ஏற்றும், அதனை அப்படியே வழி மொழிந்தும்...

எங்களது -------குடியிருப்போர் நலச் சங்கம் / தொழிற்சங்கம் / இன்ன பிற அமைப்புகளின் உறுப்பினர்களாக உள்ள சுமார் ----- உறுப்பினர்களின் சார்பாக அதில் விவரித்து சொல்லப்பட்டுள்ள கடமைகளை நிறைவேற்ற வேண்டியதே உங்களின் கட்டாய கடமை என்பதை அறிவுறுத்திக் கொள்கிறோம்.
ஒப்பம்


இதை தவிர வேறு எதையாவது சொல்ல விரும்பினாலும், விரும்பியபடி சொல்லி இதனை தேவைக்கு ஏற்ப திருத்தி COMMR.HOSUR@TN.GOV.IN என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 27-09-2019 அன்று மாலை 5 மணிக்குள் அனுப்பவும்.

அப்படியே இதனை நகல் பகுதியில் எங்களது CARESOCIETY.ORG@GMAIL.COM மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பவும். இதையும் மீறி 30&09&2019 அன்று கலந்தாலோசனை கூட்டத்தை நடத்தினால், ஓசூரில் இருப்பவர்கள் அதில் தவறாமல் கலந்து கொண்டு ஆட்சேபனையை பதிவு செய்து, உங்களது ஏரியை காப்பாற்றி கொள்ளுங்கள்.

இதில் தங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால், எங்களுடைய 9842909190 என்ற வாட்ஸ்அப் எண்ணில் தொடர்பு கொண்டு தெளிவு பெறலாம். நன்றி!

பிற்சேர்க்கை நாள் 26-09-2019

இதன் நகலை இந்திய சாசனத்தின் பல்வேறு கோட்பாடுகளின் கீழ் சட்டக் கடமையைச் செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள தமிழக தலைமை ஊழியரான ஆளுநர், சென்னை உயர்நீதிமன்ற பொது பதிவாளர், கிருஷ்ணகிரி மாவட்ட தலைமை நிர்வாக ஊழியர் உள்ளிட்ட பல முக்கிய ஊழியர்களுக்கும் மற்றும் உலக வங்கிக்கான இந்தியப் பிரதிநிதி ஊழியருக்கும் மின்னஞ்சல்கள் மற்றும் பதிவஞ்சல் வாயிலாக அனுப்பியாச்சு!

பிற்சேர்க்கை நாள் 29-09-2019 நேரம் 17.30

நமது ஆட்சேபனை மநு நல்லதொரு பிரதிபலிப்பை மாநகராட்சியில் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த விவகாரம் குறித்து முன்பு, யாருக்கும் தெரியாத வண்ணம் ஆங்காங்கே பிட் நோட்டீஸ் ஒட்டியிருந்தவர்கள், இப்போது எ3 அளவுக்கு புதிதாக மக்களின் ஆதரவை கேட்டு நோட்டீஸ் அச்சடித்து ஒட்டி உள்ளனர்.

மேலும் இன்று இந்த நோட்டீஸின் ஒரு பிரதியை கவரில் வைத்து நம் கேர் சொசைட்டியிலும் கொடுத்துச் சென்று உள்ளனர். 

இந்த நிலையில், நாளை நடக்கும் கலந்தாலோசனை கூட்டத்தில், கேர் சொசைட்டி சார்பில் ஐந்து பேர் ஆஜராகி ஆட்சேபனையை தெரிவிப்பதற்காக வேலைக்கே விடுப்பு போட்டு விட்டோம். 

நம்மை தொடர்ந்து நம் வாசகர்கள் மனு அனுப்பியதோடு சரி. மற்றபடி, ஏரியை காப்போம், மீட்டோம் என்று சமூக வலைத்தளங்களில் கூக்குரல் இடுகின்ற எவரும் ஆட்சேபிக்கவில்லை என்பது அதுகுறித்த மின்னஞ்சல் எதுவும் நமக்கு வராததில் இருந்து நமக்கு நன்றாக தெரிகிறது.

ஏற்கெனவே, இந்த ஏரி 129 ஏக்கரில் இருந்ததாகவும், அதில் கிட்டத்தட்ட 60 ஏக்கர் அளவிற்கு ஆக்கிரமித்து பட்டா போட்டு விட்டதாக நம் வாசகர் ஒருவர் தெரிவித்து உள்ளார். இதனை இன்றே உச்சநீதிமன்றத்தின் கவனத்திற்கு மின்னஞ்சல் மூலம் கொண்டு செல்வதாக மற்றொரு வாசகர் தெரிவித்து உள்ளார். நாளை என்ன நடக்கிறது என பார்க்கலாம்!

பிற்சேர்க்கை நாள் 30-09-2019 நேரம் 09.30

ஓசூர் ஏரியை ஆக்கிரமிக்கும் விவகாரத்தில், நம்முடைய பலமான எதிர்ப்பு  ஆட்சேபனையையும் மீறி, இன்று கலந்தாலோசனைக் கூட்டத்தை நடத்துவதால், திட்டமிட்ட கொள்கையை அரங்கேற்றுவதில் முனைப்புடன் இருப்பதாக கருதி..,

இதனை தடுக்கும் முயற்சியாகவும், ஏற்கெனவே ஆக்கிரமிக்கப்பட்டு உள்ள ஏரியை மீட்கவும் அவசரமாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென உச்சநீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு பிரத்தியேக மின்னஞ்சலை அனுப்பி உள்ளோம். என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது என பொறுத்திருந்து பார்ப்போம்.

இந்த விடயத்தில் ஆர்வமுடன் தலையிட்டு, மின்னஞ்சல் அனுப்பிய அனைத்து வாசகர்களையும் நகலைப் பெறுபவர்களாக இணைத்துள்ளோம்.

பிற்சேர்க்கை நாள் 01-10-2019 நேரம் 00-15

இன்றைய கலந்தாலோசனை கூட்டத்தின் முடிவு என்ன? நம் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? என்பதைப் பற்றி திரு. ஜெயராம், திரு. நாஞ்சில் கிருஷ்ணன் ஆகிய இரு வாசகர்கள் ஆர்வத்துடன் கேட்டுள்ளனர். 

இப்படி கேட்பதற்கு முன்பே, நடந்த சங்கதிகளை சொல்லி விடுவதே நம் வழக்கம். ஆனால், பல்வேறு வேலைப்பளு சூழ்நிலைகளால், எழுத இயலாமல் போனது. எனவே தான் உடனே நடு இரவிலேயே எழுதி விட்டோம். 

நாங்கள் திட்டமிட்ட படி ஐந்து பேரில், மூன்று பேர் மட்டுமே கலந்துக் கொள்ள முடிந்தது. அங்கு வருபவர்களுக்கு விளக்கிச் சொல்வதற்காக நாம் அனுப்பிய ஆட்சேபனை மனுவின் பிரதிகள் 25 ஐ எடுத்து வைத்துக் கொண்டு இரண்டு மணி நேரம் முன்பாகவே தயார் நிலையில் காத்திருந்தோம். 

ஆனால், கலந்து கொள்ள வந்திருந்த பலரும், மிகுந்த பொறுப்புணர்வோடு கலந்தாலோசனை கூட்டம் ஆரம்பித்த பின்னரே ஆடி அசைந்து வந்ததால், அவர்களுக்கு நம் ஆட்சேபனை மனுவை நம்மால் கொடுக்க முடிந்ததே ஒழிய, அதை விளக்கி சொல்ல முடியவில்லை. கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள், அங்கு நடப்பதைத்தானே கவனம் செலுத்துவார்கள்.

ஆகையால், பலருக்கும் படித்து பார்க்க கூட முடிந்திருக்காது. அப்படியே அவசரத்தில் படித்தாலும் புரிந்திருக்குமா என்ன?

மொத்தமே 60-70 பேர்தான் இருக்கும். இதில், அவர்களுக்கு ஆதரவாக ஆட்கள் சிலரை அழைத்து வந்ததும், அவர்களது நடவடிக்கையிலேயே தெரிந்தது.

மாநகராட்சி தலைமை ஊழியரைப் பார்த்தால் ஊழியருக்கான தகுதியிலேயே இல்லை. மாறாக கட்டப்பஞ்சாயத்து செய்யும் கும்பலின் தலைவர் போலவே இருந்தார். இதற்கு ஏற்றார்போல, அவருக்கென ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமராமல் கட்டப்பஞ்சாயத்து காரர்கள் உட்காருவது போல நடுவில் உட்கார்ந்தார். 



நாம் எழுப்பிய கேள்விகள் எதற்கும் பதில் சொல்லவில்லை. இதன் விபரீதத்தை உணர்ந்து கூடவே அழைத்து வந்திருந்த இரண்டு அடிபொடி அடிமைகள் ‘‘ஓர் ஆணையாளரைப் பார்த்து இப்படியெல்லாமா கேள்வி கேட்பது?’’ என எகிறினார்கள். 

சட்டப்படி கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லித் தான் ஆகனும் என நாமும் பதிலுக்கு சொல்ல கொஞ்சம் அடங்கினார்கள். ஆனாலும், அவரால் பதில் சொல்ல முடியுமா என்ன? ஆகையால் சொல்ல முடியவில்லை. ஆதாரத்திற்காக நடந்ததை அவ்வப் போது வீடியோ போட்டோ எடுத்துக் கொண்டோம். 

நாம் முதலில் பேசியதை வந்தவர்கள் கேட்டதால், அதனை புரிந்துக்கொண்டு பலரும் அதிகப்பட்சமாக ஆட்சேபனையை தெரிவித்தனர். இதற்கென அச்சடித்து இருந்த படிவத்தை கொடுத்து கருத்தை எழுதிக் கொடுக்க சொன்னார்கள். எழுதிக் கொடுத்து உள்ளோம்.

இதுபற்றி நம் ஆசிரியரிடம் தெரிவித்தபோது, இப்படியொரு படிவமே திசை திருப்பும் முயற்சி தான்.  ஆகையால் எழுதிக் கொடுத்தது தவறு என்றும், இப்படி யாரிடமும் எழுதி வாங்கி தேவைக்கு ஏற்ப பின்னர் சேர்த்து  விடலாம் என்றும், சமயோசித்தமாக யோசித்து முடிவெடுக்க வேண்டாமா? என்றார்.

ஆமாம், கூட்டத்தில் கலந்து கொண்டவர்களின் மொத்த எண்ணிக்கை இவ்வளவு, ஆதரவு இவ்வளவு, எதிர்ப்பு இவ்வளவு என்று பதிவு செய்வதுதானே திருட்டுத்தனத்தை தடுக்கும் யுக்தி என்றார். 

உண்மைதான், இதைத்தானே அவர் வேலூர்  மாவட்டம் திருப்பத்தூர் சார்பு நீதிமன்றத்தில் முறைகேடாக நடந்த ஒரு மோட்டார் வாகன விபத்து நஷ்டஈடு வழக்கில், நிதிபதியையே திருத்தங்களை செய்ய வைத்து, இத்தனை திருத்தங்கள் என தானாகவே எழுதிதானே கையொப்பம் போட்டு, எதுவும் செய்ய முடியாமல் தடுத்தார்.   

இப்படி சமயோசித்தமாக முடிவெடுக்கும் புத்தி நமக்கு எவ்வளவு முக்கியம்? என்ன இருந்தாலும், மாணவர்கள் மாணவர்கள்தான்! ஆசிரியர் ஆசிரியர்தானே!! 

எனவே இப்படியொரு படிவத்தை நாமே தயார் செய்து எடுத்துச் சென்று பதிவு செய்து வாங்கியிருக்கலாம் என்று இப்போது தோன்றுகிறது. ஆனாலும், எத்தனை பேர் கலந்து கொண்டார்கள் என்பதற்கு நம்மிடம் வீடியோ, போட்டோ ஆதாரம் இருக்கு.

மேலும், ஏற்கெனவே 111 பேரின் ஆட்சேபனை மற்றும் வாசகர்கள் மின்னஞ்சல் மூலம் என குறைந்தது 150 ஆட்சேபனைகள் இருக்கிறது. வந்திருந்தவர்களிலும் பெரும்பான்மை ஆட்சேபனைகள் என்பதால், சட்டப்படி நடப்பவர்களால் எதுவும் செய்ய முடியாது.

செய்யவும் கூடாது என்பதற்காகவே தனிப்பட்ட முறையில், உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதி மன்றத்தின் கவனத்திற்கு மின்னஞ்சல் அனுப்பி உள்ளோம். இம்மின்னஞ்சலை நகலாகப் பெற்றுள்ள மாநகராட்சி தலைமை ஊழியர் நினைத்தபடி எல்லாம் செய்துவிட முடியாது.

மேலும் நாமோ சட்டப்படியே அடுத்தகட்ட நடவடிக்கையாக இதில் நடக்கும் ஊழல்கள் என்னென்ன என்பதை விசாரிக்க கோரி, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை, வருமான வரித்துறை, சிபிஐ, நீர்வள மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு விசாரணை அமைப்புகளுக்கு நமக்கு பதில் கொடுக்காததை காரணமாக வைத்தே அனுப்ப உள்ளோம். ஏரியை மீட்காமல் விடுவதாக இல்லை.

இந்த ஏரியில் இருந்து குறைந்தது ஐந்து கிலோ மீட்டருக்கு அப்பால்தான், கலந்து கொண்ட மூவருமே வசிக்கிறோம். ஆகையால், இதனால் எங்களுக்கு பெரிய பாதிப்பு இல்லை. ஆனாலும், ஏரியை காக்க இவ்வளவு போராடிக் கொண்டிருக்கிறோம்.

எங்களை விட எங்கெங்கோ உள்ள வாசகர்கள் வெளி மாநிலத்தில் இருந்தும் கூட, தங்களின் ஆட்சேபனையை பதிவு செய்திருக்கிறார்கள் என்பது பாராட்டப்பட வேண்டிய விசயம். 

ஆனால், தொழிற்சாலைகள் நிறைந்த ஓசூரில், தொழிற் சங்கங்களுக்கோ, குடியிருப்போர் நல சங்கங்களுக்கோ, இன்னும் கண்டக்கண்ட பெயர்களில் இருக்கும் அமைப்புகளுக்கோ குறைவே இல்லை. இதிலும் குறிப்பாக, ஏரி உள்ளிட்ட நீர் நிலைகளை காப்போம், மீட்போம் என கூக்குரல் இடுகின்ற அமைப்புகள் வேறு பல இருக்கின்றன. இதையெல்லாம் குத்துமதிப்பா சொன்னால் கூட, குறைந்தது இலட்சம் என சொல்லலாம்.

இவற்றில் நூறு அமைப்புகள் ஆட்சேபித்து இருந்தால் கூட, இலட்சக்கணக்கானோர் ஆட்சேபித்ததாகி இருக்கும்.  அட இவ்வளவு ஏன்?

நாங்கள் எவ்வளவோ சொல்லியும், எங்களின் தொழிற் சங்கமே கூட ஆட்சேபனையை பதிவு செய்யவில்லை என்ற (அ, கே)வலத்தையும் பதிவு செய்கிறோம். 

நம் ஆசிரியர் அனைத்து விதமான அமைப்புகளைப் பற்றியும், ‘‘கடமையைச் செய்! பலன் கிடைக்கும்’’ நூலில் அனுபவத்தில் ஆராய்ந்து எழுதியதெல்லாம் உண்மை என்பது நமக்கு புலப்படுவதே, இதுபோன்ற நிகழ்வு நிலைகளில்தான்.

அப்படியானால், அவர் எவ்வளவு தூரம் ஒவ்வொரு அமைப்பிற்குள்ளும் உள்ளே புகுந்து, ஆராய்ந்து அறிந்து வெளிவந்திருக்க வேண்டுமென்பதை கற்பனை கூட செய்ய முடியவில்லை.

இறுதியாக, ‘‘கடமையைச் செய்யாதவன், உரிமையை இழப்பான்’’ என்பது இயற்கையின் விதிக்கேற்ப, அறத்தின் வழியில் நின்று நம்மால் முடிந்த கடமைகளை செய்து உள்ளோம். ஆகவே, நமக்கு தெரிந்த சட்ட விதிகளை மீறிய இயற்கையின் விதி விட்ட வழி என இதன் எம்முடிவையும் எண்ணிக் கொள்வோம். அவ்வளவே!

பிற்சேர்க்கை நாள் 17-10-2019

கடந்த மாதம் ஓசூர் இராமநாயக்கன் ஏரியில் ஆக்கிரமிப்பு செய்ய திட்டமிட்டு கூட்டப்பட்ட ஆலோசனை கூட்டத்தை நடத்தக்கூடாது என்றும், ஆக்கிரமிப்பு திட்டத்தை இரத்து செய்ய வேண்டுமென ஆட்சேபித்தும் நடத்தியதால் அதுபற்றி சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்துக்கு மின்னஞ்சல் அனுப்பினோம்.

இது உச்சநீதிமன்றத்தின் நாட்குறிப்பில் சேர்க்கப்பட்டு உள்ளது என்றும், நடவடிக்கை நடைமுறையில் இருப்பதாகவும் கூறி, நேற்று நாட்குறிப்பு எண்ணை முதற்கட்ட தகவலாக தந்துள்ளார்கள்.

இது நாம் மேற்கொண்ட ஆக்கிரமிப்பு தடுப்பு நடவடிக்கைக்கு கிடைத்த தற்காலிக ஆறுதல் செய்தி!இதற்கு உறுதுணையாக இருந்த அத்துனை பேருக்கும் இந்த ஆறுதல் செய்தியை தெரிவித்துக் கொள்கிறோம். 

இந்த ஆறுதல் நிரந்தரமாக வேண்டுமெனில், இதனை உச்சநீதிமன்றமே தன் விருப்புரிமை பொதுநல வழக்காக பதிவு செய்து விசாரித்தால் மட்டுமே, ஏற்கெனவே ஆக்கிரமிக்கப்பட்டுள்ள ஏரியும் மீட்கப்படும்.

இதிலேயே தமிழ்நாடு முழுவதும் ஏரிகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை இடிக்கச் சொல்ல வேண்டும். இல்லையேல், இடத்தின் மதிப்பை விட நூறு மடங்கு தொகையை அபராதமாக வசூல் செய்து அதன் மூலம் புதிய ஏரிகளை உருவாக்கச் சொல்ல வேண்டும். இப்படி செய்தால்தான், எவனும் ஏரிகளை ஆக்கிரமித்து கட்டிடம் கட்ட மாட்டான்.

இப்படி சரியான சட்ட விழிப்பறிவுணர்வுடன் நாம் இருந்த இடத்தில் இருந்தே செய்ய வேண்டிய சட்ட கடமைகளை செய்ய முடியும். இப்படி ஒவ்வொருவரும் தொடர்ந்து செய்யவும் வேண்டும். ஆகையால், இதில் அடுத்தகட்ட முயற்சியை துவங்குவோம். உங்களுக்கு தெரிந்த ஆலோசனைகளையும் சொல்லவும்.


பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

Friday, September 20, 2019

குழந்தை கடத்தல் குற்றமா... குற்றமில்லையா... குழப்படிகளும், தீர்வுகளும்!




‘‘நியாயந்தான் சட்டம்! அதற்கு தேவையில்லை வக்கீழ்ப் பட்டம்’’ என்று, நாம் முன் மொழிந்துள்ள தத்துவத்திற்கு ஏற்ப, சட்ட விதிகள் எல்லாம் நியாயமாகவே தான் இருக்கின்றன. 

ஆனால், வக்கீழ்ப் பொய்யர்களும், அவ்வழி வந்த நிதிபதிகளும் தங்களின் அளவற்ற அறிவுவறுமை முட்டாள் தனத்தால் சமூகம் சீர்கெட்டு கிடக்கிறது என்பதை எவ்வளவோ சங்கதிகளில் நிரூபித்து, நூல்களில் நிறுவி இருக்கிறோம். 

இதனை மீண்டும் நிரூபிக்கும் விதமாக ‘‘மிகவும் சிக்கலான குழந்தை கடத்தல் வழக்கு ஒன்று நம்மிடம் ஆலோசனைக்காக வர, அதனை நாம் பெரும் சவாலாக ஏற்று அடுத்தடுத்து சட்டப்படி செய்ய வேண்டியது என்ன என்பதை ஆராய்ந்துக் கொண்டிருக்கிறோம்’’. 

இதில் சம்பந்தப்பட்ட இரண்டு தரப்பினருமே சட்டத் தெளிவு இல்லாதவர்கள் என்பதாலும், கேவலர்கள் அரசுப் பொய்யர்கள் மற்றும் நிதிபதிகளின் கூட்டுக் களவாணித்தன முட்டாள் தனத்தாலும் எளிதில் முடிந்திருக்க வேண்டிய வழக்கு நீண்டு கொண்டே சென்று நம் தூக்கத்தை கெடுத்து விட்டதன் விளைவே, இந்த விழிப்பறிவுணர்வு கட்டுரை!

பொதுவாக ஒவ்வொரு குற்றமும், அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீராத ரணமாகவே இருக்கும். ஆகையால், குற்றத்தில் பெரிய குற்றம், சிறிய குற்றம் என்றெல்லாம் கிடையவே கிடையாது. 

ஆகையால், தனக்கு பாதிப்பை ஏற்படுத்தியவர்கள் மீது பாதிக்கப்பட்டவர்கள் எவ்வளவு கொலை வெறியில் இருப்பார்கள், சிக்கினால் என்ன செய்வார்கள் என்பதெல்லாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.  

இதிலும் ஏதுமறியாத குழந்தைகளை கடத்துவது என்பது மிகக் கொடூரமான குற்றமாகப் பார்க்கப் படுகிறது. தண்டனைகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன.

எங்காவது சந்தேகத்திற்கு இடமான புதிய நபர்களை கண்டால், அவர்கள் குழந்தையை கடத்த வந்தவர்கள் என நினைத்து, அவர்களை அடித்தே கொன்ற அவலச் சம்பவங்களும் அரங்கேறி, தற்போது கொஞ்சம் குறைந்து இருக்கிறது. இதற்காக சந்தேகத்திற்கு இடமானவர்கள் குழந்தை கடத்தலில் ஈடுபடுவது இல்லை என்றும் சொல்லவில்லை. 

எதையுமே ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டியுள்ள நிலையில் அதுகுறித்த ஆராய்வது எப்படி என தெரியாமலும்,  குற்றம் நடந்து விட்ட அவசர கதியில் உணர்ச்சி வசப்பட்டு, நாமும் தாக்குதல் நடத்தி அதன் விளைவாக குற்றவாளிகள் ஆகி விடுவதும் உண்டு. 

சரி, நம்ம விசயத்துக்கு வருவோம். 

நம்மிடம் வந்துள்ள வழக்கும், குழந்தை கடத்தல் வழக்குதான். ‘‘குழந்தையை கடத்தியவள், குழந்தையைப் பார்த்துக் கொள்வதற்காகவே அக்குழந்தையின் பெற்றோர்களால் ஏஜென்சி மூலம் பிரத்தியேகமாக நியமிக்கப்பட்ட வேலைக் கார பெண்ணே!’’ 

இந்த சம்பவத்தை தங்களின் குழந்தைகளை பாதுகாக்க வேலைக்கு ஆட்களை நியமிக்கும் பெற்றோர்கள் மிகமிக முக்கியமாக கவனிக்க வேண்டும்!

ஆமாம், தன் குழந்தைகள், தன் பெற்றோர் / முதியோர் ஆகியோர்களை நாமே பேணி காக்க வேண்டும் என்று தற்சார்பு வாழ்க்கை வாழ்ந்து இன்பம் அடைவதற்கு பதிலாக, எவன் எவனுக்கோ கூலிக்கு மாரடிக்கும் வேலையைப் பார்ப்பதற்காக குழந்தைகளையும், பெற்றோர்களையும் பராமரிக்கும் வேலைக்கு ஆட்களை நியமிக்கிறார்கள். 

அப்படி நியமிக்கப்படும் வேலையாட்கள் எப்படி யெல்லாம் குழந்தைகள் மீதும், முதியோர்கள் மீதும் ஈவு இரக்கமின்றி தாக்குதல் நடத்துகிறார்கள் என்பது குறித்த காணொளிகள் பல்லாயிரம் காண கிடைத்தாலும் கூட, நாங்கள் சுயமாக அனுபவப் பட்டாலே ஒழிய திருந்தவே மாட்டோம் என்கிற மாக்களே அதிகம்! 

சரி, நம்ம விசயத்துக்கு வருவோம்.

2017 ஆண்டில் சென்னையில் நடந்த இந்த சம்பவத்தில் காவல் துறையினர் தீவிரமாக தேடி இரண்டு நாட்களில் குழந்தையை கண்டுபிடித்து பெற்றோரிடம் ஒப்படைத்து விடுகிறார்கள். காவல் துறையினர் அவ்வளவு பொறுப்பானவர்களா? என்ற சந்தேகம் வந்தால், அதுவும் சரிதான்! 

இதன் பின்னனியே வேறு. அது பின்னரே சொல்லப்படும்!!

சரி, வேலைக்காரியே குழந்தையை கடத்தி இருக்கிறாள். ஆகையால் அவள் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டியவள்தானே? இதில் ஆராய நமக்கு என்ன இருக்கிறது என்ற கேள்வி எழுந்தால், அவளோ நியாயப்படி விடுதலை செய்யப்பட வேண்டியவள் என்கிறாள்!

ஆமாம், குற்றம் புரிந்தவர்கள் யாரும் தங்களை குற்றவாளிகள் என்று ஒருபோதும் ஒப்புக்கொள்வது இல்லையே! என்றால், ‘‘நியாயப்படி விடுதலை செய்யப்படி வேண்டுமென நம்மிடம் கேட்பது, குழந்தையை கடத்தியவள் அல்ல; மாறாக, குழந்தைப் பெற்றவள்!!’’

இதென்னடா, உலகத்தில் இல்லாத அதிசயமாக இருக்கு என்கிறீர்களா? நாமே ஓர் உலக அதிசயம் தானே! ஆகையால், இதுபோன்ற உலக அதிசய வழக்குகளும் நம்மிடம் தானே வந்து சேராமல் வேறெங்கு போகும்?! 

ஆமாம், எக்காரணம் கொண்டும் தன் குழந்தையை கடத்தியவள் தண்டனைக்கு உள்ளாகி விடக்கூடாது. விடுதலை செய்து விடவேண்டும் என்று, குழந்தையின் பெற்றோர் தவியாய் தவித்து, வேலைக்காரியை சந்திக்க மேற்கொண்ட முயற்சிகள் பலவும் பலன் அளிக்கவில்லை. 

ஆமாம், அவளுக்காக பொய்யாக வாதாடும் பொய்யன் யார் என்பதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. நீதித்துறைக்கான பிரத்தியேக பக்கத்தில் பார்த்து கண்டு படித்து விடலாம் என நினைத்துப் பார்த்தால், அதிலும் அப்பொய்யனது பெயர் இல்லை.

ஆகையால், அந்த வேலைக்காரப் பெண் வசிப்பதாக சொல்லப்படும் சென்னை ஓட்டேரி பகுதிக்கு கடந்த வாரம் சென்று, தங்களின் உன்னதமான உண்மை நோக்கத்தை எவ்வளவோ எடுத்துச் சொல்லியுங்கூட, காதில் வாங்காத அப்பகுதி மாக்கள், காட்டேரிகள் போல, இவர்களை அடிக்காத குறையாக துரத்தி இருக்கிறார்கள். 

அவள் நீதிமன்ற விசாரணைக்கு வருவாள். எளிதில் சந்தித்து பேசி விடலாம் என மாலை வரை காத்திருந்தால் அவள் வரவில்லை. காரணம், தேடிச் சென்றதை பொய்யனுக்கு சொல்லி இருப்பாள். அவனோ நம் பிழைப்பில் மண் விழுந்திடும் போலிருக்கே என நினைத்து நீ விசாரணைக்கு வர வேண்டாம் என பயமுறுத்தி இருக்கிறான் என யூகிக்க முடிகிறது. 

ஆமாம், அவள் வராததற்கு, அவள் சார்பில் பொய்யன் மனுத்தாக்கல் செய்துள்ளான். ஆனால், மனுத்தாக்கல் செய்தப் பொய்யன் யார் என்றும், இவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனாலும், நம்முடைய தொடர் ஆலோசனையின் பேரில், எப்படியாவது அவளை தொடர்பு கொண்டு, அவளுடைய சட்டப்படியான தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள சொல்ல வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.  

இதே நேரத்தில், ‘‘அவளை விடுதலை செய்வதற்காகவா நாங்கள் உங்கள் குழந்தையை கண்டு பிடித்து தந்தோம்’’ என்று தங்களின் கடமையை மறந்த கேவலர்கள்  இதுபோன்ற வழக்குகளில், எளிதாக குற்றவாளிக்கு தண்டனையைப் பெற்றுத்தந்து விடலாம். இதனால் நமக்கு பதவி உயர்வும், கூலி உயர்வும் கிடைக்கும் என்பதற்காக அரசூழிய அடிமைகளான கேவலர்களும், அரசுப் பொய்யர்களும், நிதிபதிகளும் தங்களின் சட்ட விரோதமான கூட்டுக்களவாணித் தனங்களை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆமாம், இந்த வேலைக்காரப் பெண் வசிக்கும் ஏரியாவைப் பார்த்தால், அவள் நிச்சயமாக தாழ்த்தப்பட்ட ஏழை எளியவளாகத்தான் இருப்பாள் என தெரிகிறது. இதுபோன்ற ஏழைகளைத்தான் நம்மால் எதுவும் செய்ய முடியும் என நம்பும் எடுபிடிகள்தானே அரசூழிய அய்யோக்கியர்கள். 

இதன் உச்சகட்டமாக, ‘‘தாங்கள் செய்துவிட்ட சட்ட விரோத செயல்களில் இருந்தும், நம் உடும்புப் பிடியில் இருந்தும் தப்பிக்க வேண்டும்; இல்லையேல், நம் வேலை காலியாகி விடும்’’ என்ற தெளிவான கெட்ட உள் நோக்கத்தில், நாம் கொடுத்த மனுக்களை ஏற்காது, ‘‘அவர்களாகவே வாக்கு மூலத்தை தட்டச்சி செய்து குழந்தையின் அப்பாவிடம் கட்டாயப் படுத்தி கையொப்பமும் பெற்று விட்டார்கள்’’.

அந்த வாக்குமூலத்தில் என்ன எழுதியுள்ளார்கள் என்பதும் தெரியவில்லை. நிச்சயம் நம்முடைய நியாய நிலைப் பாட்டுக்கு எதிராகத்தான் எழுதி இருப்பார்கள். இல்லையெனில், அப்படி வாங்க வேண்டிய அவசியம் இல்லையே! இதனால், இவர்களுக்கே கூட, பின்னர் சட்ட சிக்கல்களை கொடுக்கலாம்!! 

ஆமாம், நமக்கு எதிரான குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்கதானே கஷ்டப்பட வேண்டி இருக்கும். நாமே விடுதலை செய்யச் சொல்வது மிக எளிதுதானே. ஆகையால், நம்மை நம்பிக்கையுடன் நாட்டியவர்கள் நம்முடைய சட்ட விழிப்பறிவுணர்வை பெற்றிருக்கா விட்டால் என்ன? 

இவர்களின் நோக்கம் உன்னதமான நோக்கமாக இருக்கிறதே என நினைத்து ஆலோசனை சொன்னோம். ஆனால், விளைவு?

நாம் சொன்ன ஆலோசனைகளை தவிர, கூட்டுக் களவாணிகள் ஒன்று சேர்ந்து வேறு மாதிரி அல்லது சட்ட விரோதமாக நடந்தால் என்ன செய்வது என்ற சுய சிந்தனையோ, சமயோசித்த புத்தியோ இல்லாததால், கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்கி விட்டார்கள். இது சாட்சிய சட்டப்படி அப்படி செல்லும்.

எனவே, இனி இதனால் இவர்களுக்கு என்னென்ன பிரச்சினைகள் எழும், வேலைக்காரிக்கு தண்டனை கொடுப்பார்களா, இவைகளை தடுப்பது எப்படி அல்லது தீர்ப்பது எப்படி? இதற்குப் பிறகாவது இவர்களால் நாம் சொல்வதை செய்துவிட முடியுமா? என அனைத்துப் பிரச்சினைகளையும் நாம் தான் தீர்க்க வேண்டும் என மற்ற வேலைகளின் மீது கவனம் செலுத்த முடிவதில்லை. நாம் கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்களைப் போல பொறுப்பில்லாமல் விட்டுவிட முடியாதே!

இப்படித்தான் நாம் பிரச்சினையை தீர்த்துக் கொடுக்க நினைத்து சட்ட ஆலோசனை சொன்ன வாசகர்கள் பலரும்  அவர்களது முட்டாள்தனத்தால் நம்மை மிகவும் கஷ்டப்படுத்தி விடுகிறார்கள். 

இதெல்லாம் சுயமான சட்டத் தெளிவு பெற முயலாமல் எங்களிடம் அவ்வப்போது ஆலோசனையை கேட்டு சட்டப் பிரச்சினையை தீர்த்துக் கொண்டுவிட முடியும் என முட்டாள்தனமாக நினைக்கும் வாசகர்கள் தக்க பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும். 

ஆனால், முட்டாள் வாசகர்களுக்கு, நாம் எவ்வளவுதான் எடுத்துச் சொன்னாலும் புரியாமல், பொழுது விடிந்து பொழுது போனால் ஆலோசனை சொல்லுங்கள், ஆலோசனை சொல்லுங்கள் என்று எதையாவது கேட்கத்தான் செய்கிறார்கள். 

இப்படிப்பட்ட வாசக முட்டாள்கள் எதில் சிக்கி எப்படிச் செத்தால் நமக்கென்ன என்று, ஆலோசனை சொல்லி, அதனை சரியாக செய்ய முடியாது போனால், பின் அம்போவென விட்டு விட வேண்டும்; இல்லையேல், அப்படிப்பட்ட முட்டாள் வாசகர்களை நம் வாசகர் பட்டியலில் இருந்தே முற்றிலுமாக தடை செய்துவிட என்றே தோன்றுகிறது. 

ஆமாம், தனக்கு சட்ட ஆலோசனை மறுக்கப்பட்ட போது, இனி நாம் யாரிடமும் சட்ட  ஆலோசனை கேட்க கூடாது. மாறாக நாமே சட்ட ஆலோசனைகளை சொல்லும் நபராக மாற வேண்டுமென சபதமெடுத்து, அதற்கேற்ப திட்டமிட்ட ஐந்துக்கும் மேலே இரண்டு என ஏழு நூல்களை போற்ற வேண்டியப் பொக்கிஷங்களாக எழுத்திக் கொடுத்து விட்டாரே! 

இதைப் படித்தும், சுயமாக சிந்தித்தும் தன் பிரச்சினையை தீர்த்துக் கொள்ள இயலாமல் ஆலோசனை கேட்பதையே கொள்கையாக வாசகர்கள் வைத்திருக்கிறீர்கள் என்றால், உங்களை விட மடையன் இருப்பானா என்பதையும், இனியும் நாம் இருந்து என்ன சாதிக்கப் போகிறோம் என்பதையும் சிந்திக்க வேண்டாமா? 

சிந்திக்க முடியவில்லை என்றால், தன் எழுத்தின் மீதான தன்னம்பிக்கையில் ஆசிரியரே தில்லாக அறிவித்துள்ளபடி நூல்களை திருப்பிக் கொடுத்து விட்டு, நல்லதொரு பொய்யனை அணுகி நாசமாய் போக வேண்டியதுதானே? 

சரி, விட்ட விசயத்துக்கு வருவோம். 

கணவனிடம் கட்டாயப்படுத்தி வாக்குமூலம் பெற்றதைப் போலவே, மனைவியிடமும் வலுக் கட்டாயமாக பெற்றுவிட வேண்டும் என்ற அற்ப கெட்ட நோக்கத்தில், ‘‘சட்ட விரோதமாக குழந்தையின் தாய் சாட்சி சொல்ல வரவில்லை’’ என்று முட்டாள் நிதிபதி வாரண்ட் பிறப்பித்து இருப்பது நேற்று மதியம் எதார்த்தமாக பார்த்த போதுதான் நமக்கு தெரிந்தது. இதுபற்றி எல்லாம் அவர்கள் இருவருக்கும்தான் தெளிவு கிடையாதே! 

இந்த நிலையில் அந்த வேலைக்காரியை, உடனே கண்டு பிடித்தே ஆகவேண்டும் என்ற நிலையில் இன்று இப்படியொரு இபோஸ்ட் அவளுக்கு அனுப்பப் படுகிறது. இதன் பிறகு அவளது தலைவிதி என்னவோ?!
இபோஸ்ட் குறித்து ‘‘மநு வரையுங்கலை!’’ நூலில் விரிவாக எழுதப்பட்டு உள்ளது. இணையத்தில் தேடியும் எளிதாக அறியலாம்.

இதில் சம்பந்தப்பட்ட மனுக்களும், எந்த நியாயப்படி குற்றவாளி விடுதலை செய்யத்தக்கவள் என்பதும், மறைக்கப்பட்ட இன்னபிற தகவல்களும் இவ்வழக்கில் தீர்வு கண்ட பின்னரே முழுமையாக வெளியிடப்படும்.

பிற்சேர்க்கை நாள் 21-09-2019

மேற்சொன்னவாறு முதன் முதலாக நாம் இபோஸ்ட் அனுப்பிய அனுபவம் இது. அஞ்சலக ஊழியையாக உள்ள நம் வாசகியின் மூலம் அனுப்பப்பட்டது.


நீதியைத்தேடி... சட்டங்கள் உங்கள் பாக்கெட்டில் நூலில், ‘‘சான்று அஞ்சல் (Certificate of Posting)’’ என்பது பற்றி ஆசிரியர் எழுதி இருக்கிறார். இந்த முறை நீக்கப்பட்டு விட்டதால் தற்போது இல்லை.

இதேபோல, நீதியைத்தேடி... பிணை (ஜாமீன்) எடுப்பது எப்படி? நூலில், ‘‘சட்ட விரோதமாக கைது செய்யப்பட்டவர்களை அதிலிருந்து விடுவிக்க மாவட்ட நிதிபதிக்கு தந்தி அனுப்பலாம்’’ என சொல்லி இருக்கிறார். அஞ்சல் அலுவலகம் மூலம் அனுப்பும் தந்தி (Telegram) என்பதும் தற்போது இல்லை.

இதற்கு பதிலாக தற்போது, இபோஸ்ட் (ePost) என்ற முறையை பயன்படுத்திக் கொள்ளலாம். 

இதன்படி, நீங்கள் யாருடைய முகவரிக்கும் அனுப்பும் கடிதத்தை அப்படியே எழுதி JPGE படமாக அல்லது PDF ஆக கொடுத்தால், அதனை அந்த ஊர் அஞ்சலக மின்னஞ்சலுக்கு அனுப்பி, அங்கு பிரிண்ட் எடுத்து, உரிய முகவரியில் அன்றைய தினமோ அல்லது அடுத்த நாளோ கொடுத்து விடுவார்கள்.

நாம் இந்த வசதியைப் பெற, அந்த அஞ்சலகத்தில் கணினி பயன்பாடு இருக்க வேண்டும். ஆகையால், கிராமங்களில் உள்ள அஞ்சலகங்களில் இருந்து இப்படி அனுப்புவது கஷ்டந்தான்!

ஒரு வேளை நீங்கள் பெறுதல் முகவரியில் குறிப்பிட்ட  நபர் அந்த முகவரியில் இல்லையென்றால், நமக்கே திரும்ப அனுப்பி விடுவார்களாம். எப்படி வரும் என்பது வந்தால்தான் தெரியும்!

இந்தியாவின் எந்தவொரு முகவரிக்கும் இப்படி அனுப்ப ஒரு ஏ4 பக்கத்திற்கு ரூ 10 ஆகும் என்கிறார்கள். ஆனால், நாம் கொடுத்த ஒரு பக்கத்தை இரண்டு பக்கமாக கணக்கிட்டு ரூ. 20 வாங்கி இருக்கிறார்கள்.

நீங்கள் அனுப்பியதற்கு ஆதாரமாக மேலே கொடுத்துள்ளபடி ரசீது கிடைக்கும். ஆனால், அங்கு ஒப்படைக்கப்பட்டதற்கு ஆதாரம் எதுவும் கிடைக்காது என்பதால், இது முன்பு அமலில் இருந்து தற்போது இரத்து செய்யப்பட்டு விட்ட சான்று அஞ்சல் முறையை ஒத்ததே!

இதனை அவசரத் தேவைக்காக நீதிமன்றங்கள் உள்ளிட்டு யாருக்கு வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

பிற்சேர்க்கை நாள் 22-09-2019


நம்முடைய ePost கடிதத்திற்கு வேலைக்காரியிடம் இருந்து எந்தத் தகவலும் இல்லை. குழந்தையின் தந்தையிடம் மடத்தனமாக கட்டாயப்படுத்தி வாக்குமூலம் எழுதி வாங்கியதோடு, தாயை கைது செய்ய வாரண்ட் போட்டதால், இதையெல்லாம் விரிவாக எடுத்துச் சொல்லி இந்திய சாசனக் கோட்பாடு 227, 228 இன்படியான கண்காணிப்பு உரிமையின் கீழ், கண்காணித்து தக்க அறிவுறுத்தலை விடுக்க வேண்டுமென உயர்நீதிமன்ற பொதுப் பதிவாளருக்கு மின்னஞ்சல் மற்றும் பதிவுத்தபால் மூலம் மனுவை அனுப்பியாச்சி. இதன் நகலை நடுவருக்கும் அனுப்பியாச்சி. 

பிற்சேர்க்கை நாள் 26-09-2019

இது 24-09-2019 அன்று நடுவருக்கு சென்று சேர்ந்ததும், பெரிய அதிர்வலையை காண முடிந்தது. ஆமாம், இதன் விளைவாக 25-09-2019 அன்று வாரண்டின்படி கைது செய்யவில்லை என்பதோடு, குழந்தாயின் தாத்தா பாட்டியின் மூலம், குழந்தையின் பெற்றோர்களை சமாதானப்படுத்தி, சென்னை உயர்நீதிமன்றத்துக்கு அனுப்பிய கண்காணிப்பு மனுவை திரும்பப்பெற வைக்க முயற்சித்தனர்.

இதற்காக நடுவர் மன்றத்தில் வாதாடும் அரசுப் பொய்யரின் ஆலோசனையின்படியும், அவர்கள் வைத்துதரும் பொய்யரை வைத்தும், இவ்வழக்கை விசாரித்து வரும் கூட்டுக் களவாணிகளுக்கு பாதிப்பு எதுவும் இல்லாத வகையில் நடத்திக் கொள்ளலாம் என்பது திட்டம். 

ஆனால், நம் வாசகரோ ஏற்கெனவே வாக்கு மூலத்தில் கையொப்பமிட்டதை சுட்டிக்காட்டி கடுமையாக எச்சரித்து இருந்ததால், அப்பா அம்மாவின் சமரச முயற்சிக்கு இணங்காமல் நம் நிலைப்பாட்டில் தெளிவாக நின்று விட்டார். இந்தத் தெளிவு இல்லை என்றால், எதையும் உருப்படியாக செய்ய முடியாது. 

இனியும் குழந்தையின் பெற்றோர் இருவரும் இதே நிலைப்பாட்டில் உறுதியாய் நிலைத்து நின்றால் மட்டுமே நாம் நினைத்ததை சாதிக்க முடியும். பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

Friday, September 13, 2019

ஹீலர் பாஸ்கர் மீது, அரசூழியர்களின் கருணைப் பார்வை ஏன்?



அரசும் சரி, அரசூழியர்களும் சரி, ‘‘ஹீலர் பாஸ்கர் மீது கொண்டுள்ள கருணைப் பார்வை நமக்கு பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது’’

இது குறித்து சிபிஐ விசாரணை நடந்தால்தான் உண்மைகள் வெளிவரும் போலிருக்கு.

ஆனாலும், அதற்கு முன்பாக நமக்கு தெரிந்தவரை நாமே விசாரித்து பார்ப்போம் என்ற அடிப்படையில், திண்டுக்கல் மாவட்ட நலப்பணிகள் இயக்குநருக்கு சட்டப்படியான சான்று நகலை கேட்டுள்ளோம். இதன் முக்கிய நோக்கம், 

1. இவர்களுக்குள் உள்ள உண்மையான உறவு என்ன? 

2. எதற்காக ஹீலர் பாஸ்கரை மட்டும், மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தப் பாடுபடுகிறார்கள்? 

3. இதற்காக ஹீலர் பாஸ்கரிடம் இருந்து, அவர்கள் பெறும் ஆதாயம் என்ன? 

4. ஹீலர் பாஸ்கர் மீது போட்ட மோசடி வழக்கை நடத்தி தண்டனை வாங்கிக் கொடுத்து, சிறையில் அடைக்காதது ஏன்? 

5. ஹீலர் பாஸ்கரின் தகுதி என்ன? 

என்பதை ஆராய்ந்து கண்டுப் பிடிக்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது. ஆகையால், என்னென்ன கேள்விகளை கேட்டுள்ளோம் என்பதை இங்கு வெளியிட்டு உள்ளோம்.  

இந்த கேள்விகள் அனைத்தும் சரிதான் என நீங்கள் நினைத்தால், நீங்களும் அனுப்பி கேளுங்கள் அல்லது எது சரியென நினைக்கிறீர்களோ அதை கேளுங்கள். இதில் சொல்லியுள்ள மக்களில் நாங்களும் உண்டு என சொல்லியும் அனுப்பலாம். 

இதில் இல்லாது தங்களுக்கு தோன்றியதையும் கேளுங்கள். தனியாகவோ, குழுவாகவே விரும்பியபடி கேளுங்கள். 

இதற்கெல்லாம் ஏதுவாக எழுத்துக்களை நகலெடுத்து எடிட் செய்யும் வகையில் கொடுத்துள்ளோம். இனி சங்கதிக்கு உள்ளே செல்வோம். 

***************
கே சொ/ நி க/ 52 - 2019                                             தேதி 13-09-19

பெறுதல் 
நலப்பணிகள் இணை இயக்குநர் (பொ)
நலப்பணிகள் இணை இயக்குநர் அலுவலகம்
திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல்.

பொருள் : நீதிமன்ற சாசனமாம் இந்திய சாட்சிய சட்டம் 1872 இன் உறுபு 76 இன்கீழ் சான்று நகல் கோருதல் தொடர்பாக... 
  பார்வை : சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவிவரும் தங்களின் ந. க. எண். 6638/ வசெ /2019 தேதி 09-09-2019
நலப்பணிகள் இணை இயக்குநருக்கு, 

இந்திய சாசனக் கோட்பாடு 51அ -இன்படி, நாட்டின் முன்னேற்றத்துக்காக பாடுபடுவது அனைவரின் சட்டப்படியான கடமையாகும்.  

ஆனாலிது பொதுமக்களுக்கு ஊதியமில்லாத கடமையாகவும், உங்களைப் போன்ற ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய கடமையாகவும் இருப்பதால், மக்களை விட, (எங், மக்)களின் வரிப்பணத்தில் கூலிபெறும் உங்களைப் போன்ற ஊழியர்களுக்கே, அதிகப் பொறுப்பு இருக்கிறது.  

இந்த நோக்கத்திற்காகவும், கீழே கோரும் ஆவணங்கள் யாவும், நீதிமன்ற சாசனமாம் இந்திய சாட்சிய சட்டம் 1872 இன் உறுபு 74 இன்படி, பொது ஆவணங்கள் என்பதாலும், அதனை உறுபு 76 இன்கீழ் சான்று நகல் பெறுவதற்கு எவருக்கும் உரிமையுண்டு.

எங்களுக்கு தேவையான சான்று ஆவணங்கள் ஆவண,

1. பார்வையில் கண்டுள்ள காகிதத்தை எந்த சட்ட விதியின் கீழ் விடுத்தீர்கள்?

2. இந்தக் காகிதம் கடிதமா, அறிவிப்பா, விளக்கம் கோருதலா, வேறு ஏதாவதா?

3. அரசூழியராக இந்த சட்டப்படி இதைப் பெற்றுள்ளீர்களா? அந்தச் சட்டப்படி அதைப் பெற்றுள்ளீர்களா? என கேள்வி கேட்டுள்ள நீங்கள் எந்தச் சட்டப்படி கேட்கும் உரிமையுள்ளது என்பதை சொல்லாதது ஏன்? 

4. அதில் எந்தச் சட்டப்படி உங்களது பெயரை குறிப்பிடப்படவில்லை?

5. அரசூழியத்தில் உள்ள ஒருவர், பெயரை குறிப்பிடாமல் கடிதம் எழுதலாம் என எந்த சட்டம் அனுமதி அளித்தது? 

6. பெயரில்லாமல் இருக்க நீங்களென்ன அநாதையா? 

7. அநாதையாக இருந்தால், அரசூழியத்தில் சேர்ந்தது எப்படி?

8. அது அதற்கும் படித்தவன் மட்டுந்தான் அதையதை செய்யத் தகுந்தவர்கள். படிக்காதவர்கள் எல்லாம் அவர்களுக்கு தெரிந்ததை செய்யத் தகுதியற்றவர்கள் என்று எந்த சட்டம் சொல்கிறது?

9. மருத்துவம் பயின்றுள்ளீர்களா என கேட்டுள்ளீர்களே... திருக்குறளில் மருந்து என்ற அதிகாரத்தை எழுதிய திருவள்ளுவர் என்ன படித்தார் என்பதற்கு உங்களிடம் சான்றிதழ் இருக்கா? இருந்தால் சான்றிதழின் நகலை தரவும்.  

10. இல்லையென்றால், உங்களால் மருந்து அதிகாரத்தை யாரும் படிக்கக் கூடாது என தடை செய்ய முடியுமா? 

11. இப்படி உடல் நலம், மன நலம், மனைவி நலம் உள்ளிட்டவற்றை பதினெட்டு சித்தர்கள் உட்பட பலரும் எழுதி வைத்திருக்கிறார்கள். 

அவர்கள் எல்லாம் அதுபற்றி  படித்தார்கள் என்பதற்கு சான்றிதழ் இருக்கா? இருந்தால் சான்றிதழின் நகலை தரவும்.

12. இல்லையென்றால், அதையெல்லாம் உங்களால் தடை செய்ய முடியுமா?

13. ஆங்கில மருத்துவ சட்டங்களின் கீழ், நீங்கள் எழுப்பியுள்ள கேள்வி ஆங்கில மருத்துவத்தை ஆதரிப்பதுபோல இருக்கிறதே, நீங்கள் ஆங்கிலேயனுக்கா பிறந்தீர்கள்?

14. இந்திய சாசனக் கோட்பாடு 19 (1) (அ) இன்படி, இந்தியக் குடிமகனுக்கு சுதந்திரமாக சிந்திக்கவும், தன் சிந்தனையை எடுத்துச் சொல்வதற்கும் அடிப்படை உரிமை உள்ளபோது, அதை பல வருடங்களாக சுயமாக ஆராய்ந்து, அனுபவத்தில் எடுத்துச் சொல்வதை எந்த சட்டப்படி ஒழுங்கு நடவடிக்கை எடுப்பேன் என்கிறீர்கள்? 

15. காலங்காலமாக காய்ச்சலுக்கு ஊசி போட்டு வந்த நிலையில், பல்வேறு வழி வகையில் மருத்துவத்தை ஆராய்ந்தவர்கள் பலரும் ஊசி போடாதீர்கள் என்று சொல்லி வந்தார்கள். 

இது சரிதான் என்பதை உறுதிப்படுத்தும் வகையில், அண்மையில் சுகாதாரத்துறை அமைச்சரும், ஆங்கில வழி மருத்துவருமான விஜய பாஸ்கர் செய்தி ஊடகங்களுக்கு பேட்டி அளித்தார்.   
அமைச்சரின் பேட்டியை நீங்களும் பார்த்திருக்க வேண்டும். பார்க்கவில்லை என்றால், இதற்கு பதில் சொல்வதற்கு முன்பு பார்த்து விட்டு பதில் சொல்லுங்கள்.

இப்பேட்டியால், இதனை ஏற்கெனவே சொன்னவர்களின் வாக்கும், மதிப்பும் சமுதாயத்தில் கூடியது. காய்ச்சலுக்கு ஊசி போட கூடாது என்பதை ஒப்புக்கொண்டது போலவே, இனிவரும் காலத்தில் ஒவ்வொன்றாக ஒப்புக் கொள்ளவும் கூடும் என மக்கள் நம்பி விட்டார்கள். ஆகையால், அவர்களின் வழியை முன்பு இருந்ததை விட மிகத் தீவிரமாக பின்பற்றி வருகின்றனர். 

உண்மைகள் இப்படி இருக்க, இதற்கு எதிராக ஓர் ஊழியரான நீங்கள் எப்படி நடவடிக்கை எடுக்க முடியும் என புரியவில்லை, விளக்கமாக விளக்கவும். 

16. இப்படி ஒவ்வொரு நோயும் ஆங்கில மருத்துவத்தால் மட்டுமே வளர்ந்து வருகிறது என்பதை நாங்கள் பொதுவெளியில் விவாதிக்க தயார்; நீங்கள் தயாரா என பிரபல ஆங்கில மருத்துவர்களான திரு. ஹெக்டே, திரு. பஸ்லூர் ரஹ்மான் உள்ளிட்டு பல்வேறு வகையில் மருத்துவத்தை ஆராய்ந்தவர்கள் பொது வெளியில் சவால் விட்டு அழைத்து உள்ளார்கள். 

இந்த துண்டறிக்கை தெரிந்த உங்களுக்கு அதெல்லாம் தெரியாதா? ஏன் விவாதிக்கவில்லை?? முன்பு தெரியாவிட்டாலும், இப்போது தெரிவித்து விட்டோமே!

உண்மையிலேயே நீங்கள் அறிவாளிதான் என்றால், அதே 22-09-2019 அன்று அதே அரங்கத்தில் ஓரிரு மணி நேரமாவது தாக்குப்பிடித்து விவாதிக்க தயாரா?

நீங்கள் விவாதிக்க தயார் என்றால், அவர்களை நாங்கள் அழைத்து வருகிறோம். இந்த விவாதத்தில் யார் சொல்லது உண்மை என்பது எங்களுக்கும் தெரிந்து விடும். இதனை நாங்கள் பார்க்கவும் படம் பிடித்து சமூக நலனுக்காக சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி சரியான விழிப்பறிவுணர்வை ஏற்படுத்த தயாராக உள்ளோம்.  

17. எங்களுக்கு தெரிந்த பலரில் டாக்டர். ஹெக்டே, டாக்டர். பஸ்லூர் ரஹ்மான் உள்ளிட்ட பலர் ஆங்கில மருத்துவத்தை கரைத்து குடித்து, ஆராய்ந்து விட்டு, அதன் பாதகங்களை காணொலி வாயிலாக எடுத்துச் சொல்லி காரிகாரி துப்பிவரும் போது, ‘அதையே படிக்காமல் பலரும் சொல்வது, அறிவிற் சிறந்த அறிவாற்றல் தானே?!’ 

இவர்கள் மக்களுக்கு போதிப்பது மட்டும் எப்படி தவறாகும் என்பதை உங்களைப் போன்ற மடையர்கள் விளக்கிச் சொன்னால்தானே எங்களுக்கு நன்றாக புரியும்?

18. இப்படித்தான் கடந்த ஆண்டு கூட, ‘நீங்கள் குறிப்பிட்டுள்ள ஹீலர் பாஸ்கரை கைது செய்தார்கள். அதனால், அவரைப் பற்றி தெரியாதவர்கள் கூட தெரிந்து கொள்ளும் கொடுமை நேர்ந்தது. ஆகையால், முன்பை விட பல்வேறு விதங்களில் பிரபலமானார்’. 

அதற்கு பிறகு வழக்கை நடத்தி தண்டனையைப் பெற்றுத் தந்திருந்தால், அவரது பிரபலம் குறைந்து சிவனேன்னு சிறையில் இருந்திருப்பார். 

மக்களும் அவரைப்பற்றி நன்கு அறிந்து, அவரது கருத்துக்களை புறக்கணித்து இருப்பார்கள். ஆனால், அப்படிச் செய்யவில்லையே ஏன்? அதைச் செய்ய உங்களைப் போன்ற அரசூழியர்களுக்கு துப்பில்லையா? அல்லது 

இவரைப் போன்றவர்கள் மக்களை ஏமாற்றி கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார்கள் என்று கடந்த ஆண்டு கைது செய்தபோது செய்தியாளர்களுக்கு சொன்னபடி, அதிலிருந்து பெரும்பங்கை இலஞ்சப் பங்காக பெற்றுக் கொண்டு, அவர்களைப் பற்றி தெரியாத மக்களும் தெரிந்து கொள்ளட்டும், இதன் மூலம் மேன்மேலும் மக்களிடம் பணத்தை கொள்ளையடிக்கட்டும்; இதிலிருந்தும் நமக்கு இலஞ்சப் பங்குப்பணம் கிடைக்கும்.

ஆகையால், ‘வளர்ந்து பெரும்புகழை அடையட்டும் என்று திட்டமிட்டு வளர்த்து விடுவதற்காகவே இதுபோன்ற வெற்றுக் காகித காரியங்களைச் செய்கிறீர்களோ’ என்றே மக்கள் சந்தேகிக்கிறார்கள். 

ஆமாம், இதற்கு மேலும் வலுவூட்டும் விதமாகவே உங்களின் செயல்கள் பின் வருமாறு அமைந்து இருக்கின்றன. 

19. உங்களின் காகிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களைப் போன்றே பலரும் பல்வேறு விதமாக வகுப்புகளை தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே நடத்திக் கொண்டு இருக்கும் நிலையில், ‘அவர்கள் மீதெல்லாம் இல்லாத கருணைப் பார்வை, இவரைப் போன்ற ஒருசிலர் மீது மட்டும் வருவது’ மேற்சொன்னபடி மக்களின் சந்தேகத்தை உறுதி செய்வதாகவே இருக்கிறது. 

20. ஆமாம், உங்களை அதிகப்பட்சமாக உங்களுக்கு கீழும் மேலும் உள்ள ஊழியர்கள் ஐம்பது பேருக்கு தெரியுமா? 

ஆனால், நீங்கள் குறிப்பிட்டுள்ள ஹீலர் பாஸ்கருக்கு சமூக வலைத்தனமான யூடியூபில் மட்டும், ‘சுமார் நான்கு இலட்சத்து நாற்பத்தி எட்டாயிரம் பேர் சந்தாதாரர்களாக இருக்கிறார்கள்’ என்றால் மற்ற எண்ணிக்கையை சொல்லவும் வேண்டுமோ?  

இப்படி மக்களின் மத்தியில் புகழ்ப் பெற்றவர்களை, அரசூழியர்கள் எதிர்ப்பதாக காட்டிக் கொள்வதன் மூலம், ‘நம் ஊழியர்களையும் தாண்டி, நாமும் நாலு பேருக்கு தெரிவோம்’ என்கிற அற்பத்தனமான எண்ணமும் இருப்பதாகவே சந்தேகிக்கிறோம். 

உண்மையில் நாட்டில் என்ன நடக்கிறது? இதெல்லாம் எதற்காக நடக்கிறது என்பதில் மக்களுக்கு இடையே பெருங்குழப்பம் நிலவுகிறது. 

ஆகையால்தான் கேட்கிறோம்... இதுகுறித்த உங்களின் சட்ட விளக்கம் என்ன? சொல்லவில்லை என்றால், எங்களின் சந்தேகம் உறுதியாகி விடும். 

21. ஒருவருக்கு ஆங்கில மருத்துவம் பார்த்து, அதனால் பிரச்சினை ஏற்படும்போது அதுகுறித்து விசாரித்து அம்மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது அல்லவா? 

அதேபோல, மருத்துவம் படிக்காதவரின் அறிவுரையை கேட்டு பலரும் குணம் அடைந்தால், அவரை மருத்துவ ஆலோசகராக நியமிக்க வேண்டியதுதானே நியாயம்? 

இப்படி இதுவரை எத்தனை பேரை மருத்துவ ஆலோசகர்களாக நியமித்து உள்ளீர்கள்? 

இவர்கள் கூறும் மருத்துவ அறிவுவறுமைகளை இலட்சக்கணக்காணோர் கேட்டும் பின்பற்றியும் குணமாகி வருவதால், இவர்களை ஆங்கில மருத்துவத்தின் அறிவு வறுமைகளையும் விளக்கும் ஆலோசகர்களாக நியமிக்க வேண்டியதுதானே?!

நாங்கள் ஏற்கெனவே சொன்னபடி, இவர்களின் அறிவாற்றலை சோதிக்கும் அளவிற்கு உங்களில் யாருக்கேனும் ஆண்மை இருந்தால், நேருக்கு நேராக பொது வெளியில் விவாதித்து, இதுபோன்ற விவாதங்களுக்கு முடிவுகட்ட வேண்டியதுதானே?

இப்படியெல்லாம் செய்ய சட்டத்தில் இடமுண்டா என்ற கேள்வி உங்களைப் போன்ற சட்டந்தெரியாத மடையர் களுக்கு எழும். இதற்கு இந்திய சாசனத்திலேயே இடமிருக்கிறது என்பது எங்களுக்கு நன்றாகவே தெரியும். 

உங்களைப் போன்ற மடையர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்பதற்காக, கடந்த 30-08-2019 அன்று கல்வித்தகுதி அல்லாது பிற தகுதியின் அடிப்படையில் மத்திய அரசுப்பணியில், இதிலும் பிரதமர் தலைமையிலான குழு அமர்த்தியது குறித்து நாளிதழில் வந்த செய்தி!
clip
22. மக்கள் அரசூழியர்களிடம் தேவையான தகவலை கேட்டுப்பெற, தகவல் பெறும் உரிமைச் சட்டம் இருப்பது எல்லோருக்கும் தெரியும். 

மாறாக உங்களுக்கு மக்களிடம் பதில் கேட்க எந்த சட்டம் அனுமதிக்கிறது? 

அப்படி ஏதாவது சட்டம் இருந்தால் குறிப்பிட்டு இருக்க வேண்டுமே ஏன் குறிப்பிடவில்லை. இது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 166 இன்கீழ் சட்டக் கடமையில் தவறியது ஆகாதா? 

இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 167 இன்கீழ் சட்டப்படி உருவாக்க வேண்டிய ஆவணத்தை, சட்ட விரோதமான காகிதமாக உருவாக்கிய குற்றமும் ஆகாதா?

23. பதில் கேட்க உரிமையுள்ள சட்டத்தை குறிப்பிட தெரியாத உங்களுக்கு மூன்று நாட்களில் பதில் தரவேண்டுமென எந்த சட்டம் சொல்கிறது?

ஓர் அரசூழியரான நீங்கள், மக்கள் கேட்ட கேள்விகளுக்கு மூன்று நாட்களுக்குள் பதில் அளித்தது உண்டா... உண்டு என்றால், அதேபோல இதற்கும் பதில் அளித்து, நீங்கள் யோக்கியர் என்பதை நிரூபிக்கலாம்! 

இல்லையேல் நீங்கள் அய்யோக்கியர் என்பதை நீங்களே ஒப்புக்கொண்டதாகி விடும். பின் மக்களின் முடிவும் அய்யோக்கியர் என்பதே ஆகும். அவ்வளவே!!

இதிலுள்ள கேள்விகளுக்கெல்லாம், இது தொடர்பாக நடைபெறும் எந்தவொரு நீதிமன்ற குறுக்கு விசாரணையில் பதில் சொல்லும் ஆண்மை உங்களுக்கு இருந்தால், உங்களது வெற்றுக் காகிதத்தில் சொன்னபடி, சட்டப்படியான ஒழுங்கு நடவடிக்கையை எங்களின் மீதும் எடுக்க தார்மீக அனுமதி வழங்கி, வெற்றி பெற வாழ்த்துகிறோம். 

இந்த சான்று நகல்கள் மூன்றை, நகலர்கள் விதிகள் 1971 இன்படி, மிகவும் அவசரமாக மூன்று நாட்களுக்குள் வழங்கிட கோருகிறோம். 

இதற்காக கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியிருந்தால், அதுபற்றி உரிய முறையில் தெரிவித்தால், உடனே செலுத்திட தயாராய் இருக்கிறோம்.

கேர் சொசைட்டிக்காக 
உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள்

நகல்: இந்திய சாசனக்கோட்பாடு 51 அ-இன்படி, மக்களிடையே பொதுவான விழிப்பறிவுணர்வை ஏற்படுத்துவதற்காக நூல்கள், இணையப்பக்கங்கள், சமூக வலைத்தளங்களின் வெளியீட்டுக்காக...

*****************

குறிப்பு: இதனை நாங்கள் குறைந்தது 68 பேர் கொண்ட குழுவாக கையெழுத்திட்டு இன்று மாலைக்குள் அல்லது நாளைக்குள் அனுப்புவோம்.

திண்டுக்கல் பகுதியில் உள்ள வாசகர்கள் இயன்றால், நலப் பணிகள் இணை இயக்குநரது சரியான முகவரி, தொடர்பு எண் உள்ளிட்டவைகளை கண்டறிந்து தெரிவித்தால் பதிவிடுவோம். பலருக்கும் உதவியாக இருக்கும்.

பிற்சேர்க்கை நாள் 14-09-2019

ஏற்கெனவே திட்டமிட்டபடி நேற்றே 68 பேரின் கையொப்பத்துடன் பதிவஞ்சல் மூலம் அனுப்பப்பட்டு விட்டது. இது ஒப்படைப்புக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளதாக இணைய வழியில் தெரிகிறது.


எங்களைத் தொடர்ந்து, Ramesh Thirumeni என்ற வாசகரும் அனுப்பி உள்ளார். வேறு யார்யார் அனுப்பினார்கள் என்ற விவரத்தை தெரிவிக்கவில்லை. அனுப்பியவர்கள் தெரிவிக்கவும்.

பிற்சேர்க்கை நாள் 16-09-2019

நாம் விளக்கம் கேட்ட கூலிக்கு மாரடிக்கும் வேலைக்காரி, பூங்கோதை என்ற பொறுக்கி பெண் என்பதும், இந்தப் பொறுக்கி திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் சட்டத்துக்குப் புறம்பாக சொந்த மருத்துவமனையை நடத்தி வருவதாகவும், இதனால் தனக்கு வருமான இழப்பு ஏற்படும் என்றும் கருதி கேள்வி கேட்டதாக தெரிகிறது.

Dindigul
Dr.G. Poongothai, MBBS.,
0451-2432226
dfwdgl.tn@gmail.com

நாம் அனுப்பிய கடிதம் இன்று மாலை, அந்தப் பொறுக்கிப் பொள்பளைக்கு ஒப்படைக்கப்பட்டு விட்டது. இது தவிர மேலும் நம்முடைய வாசகர்கள் ஆன திருப்பூர் ஜெயக்குமார், ஈரோடு பிரகாஷ் ஆகிய இருவர் மட்டும் இன்று அனுப்பி உள்ளதாக அஞ்சல் இரசீதை அனுப்பி உள்ளனர்.

மற்றபடி, ஹீலர் பாஸ்கரை பின்பற்றுபவர்கள் என்று சொல்லிக் கொள்ளும் ஆயிரக்கணக்கானவர்களில் ஒருவருக்கு கூட, தவறை தட்டிக் கேட்க வேண்டும் என்ற தைரியமில்லாத கோழைகள் என்றும், ஆனால், ‘‘நான் ஹீலர் பாஸ்கரை ஆதரிக்கிறேன்’’ என்று வாயால் வடை சுடுவது போல, முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ஆதரவு தெரிவித்து போராடும் போராளிகளாகவும், தொடை நடுங்கிகளாகவும் இருக்கிறார்கள் என்றே கருத வேண்டியுள்ளது.

அப்படி இல்லையென்றால், இந்நேரம் அந்தப் பொம்பள பொறுக்கிக்கு குறைந்தது ஆயிரம் கடிதங்களாவது குவிந்திருக்க வேண்டாமா?

ஆகையால், இது நிச்சயமாக டாக்டர். ஹெக்டே, பஸ்லூர் ரஹ்மான், ஹீலர் பாஸ்கர் உள்ளிட்ட பலரையும் பின்பற்றுவதாக சொல்லும் அத்தனை பேருக்கும் வெட்கக்கேடு என்று சொல்வதைவிட, அவரவர்களின் ஆண்மைக்கும், பெண்மைக்கும் நேரிட்ட இழுக்கு என்றுதான் நேரடியாகவே சொல்லனும்.  

உண்மையிலேயே, சமூகத்திற்காக போராடும் எவரும், மக்களின் ஆதரவை நம்பி களமிறங்குபவர்கள் அல்ல.

ஆமாம், அவர்கள் ‘‘மக்களின் நலனுக்காக காலத்தால் களமிறக்கப்படுபவர்கள்’’, என்பதை, நம்முடைய ‘‘கடமையைச் செய்! பலன் கிடைக்கும்’’ நூலில் அவருடைய சொந்த அனுபவத்தைக் கொண்டும், ஆராய்ந்தும் தெளிவுபட எழுதியுள்ளார்.

ஆகையால், இப்படிப்பட்ட கடமையாளகளை எத்தனை எத்தனை கூட்டுக் களவாணிகள் ஒன்று சேர்ந்தாலும் எதுவும் செய்ய முடியாது என்பதையும், அவர்கள் நம்பும் அறமே அவர்களை காக்கும் என்பதையும் அவரே தெளிவுபடுத்தியும் உள்ளார்.  

ஆகையால், முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தள தொடை நடுங்கி போராளிகள் எல்லாம், உங்களது ஆதரவு போராட்டதை விட்டு விடாமல் தொடருங்கள். அவ்வளவே!

பிற்சேர்க்கை நாள் 17-09-2019

நேற்றையப் பிற்சேர்க்கையைப் படித்த நம் வாசகர்கள் உள்ளிட்ட சிலர், இதனை நகலெடுக்க முடியவில்லை என்றும், இந்த யுனிகோட் எழுத்துக்கள் மாறுகின்றன / தெரியவில்லை என்றும், தட்டச்சு செய்ய முடியவில்லை என்றும், சமூக வலைத்தளங்களில் ஆதரவு தருவதை தவிர, சட்டப்படி என்ன  செய்வது (பார்க்க இதன் 11-வது பின்னூட்டம்) என்று தெரியவில்லை என்றும் ஏற்க இயலாத காரணங்களை சொல்லி வருகின்றனர். 

ஆமாம், இதெல்லாம் உண்மை என்றால், அப்போதே கேட்டிருக்கலாம். இதிலிருந்து எடுத்துதான் சிலர் அனுப்பி இருக்கிறார்கள் என்கிற போது, இவர்களுக்கு மட்டும் எப்படி நகலெடுக்க முடியாமல் போகும் / எழுத்துக்கள் மாறும் / வராமல் போகும்??

உடனே சொல்லி இருந்தால், அதற்கு தக்க நாங்களும் எளிய வழிகளை சொல்லி இருப்போம். ஒருவேளை உண்மையாக இருந்தால், இதை செய்யவே லாயக்கு இல்லாத மடையர்கள் வேறு எதை செய்து விடுவார்கள் என்ற கேள்வியே இயல்பாய் எழுகிறது.

ஆமாம், மேலேயே கே சொ/ நி க/ 52 - 2019 தேதி 13-09-19 என்று கொடுத்துள்ளோம். இதனை மட்டும் குறிப்பிட்டு, ‘‘நானும் ஒரு குடிமகனாக இதில் கண்ட கேள்விகளுக்கு சான்று நகலை எதிர்ப் பார்க்கிறேன்’’ என்று ஒரு பத்தியில் கையால் கடிதத்தை முடித்து அனுப்பி இருக்கலாம். இனி இதை செய்தாலே போதும்.

ஆமாம், இக்கடிதம் கிடைத்து விட்டதாலும், வேறு சிலரும் இதையே அனுப்பி உள்ளதாலும், இனி எல்லோரும் இதையே அனுப்ப வேண்டியதில்லை. வேறு வித்தியாசமான சுயமான கேள்விகள் இருந்தால் மட்டும் கேட்கலாம். 

இல்லையேல், எங்களிடம் சொல்லி இருந்தால் அல்லது சொன்னால், ஏற்கெனவே தட்டச்சு செய்து வைத்துள்ளதில், அவரவர் முகவரியையும், புதிதாக கேள்வி இருந்தால் அதை மட்டும் தட்டச்சு அனுப்பி இருப்போம் / அனுப்புவோம். 


Dindigul
Dr.G. Poongothai, MBBS.,
0451-2432226
dfwdgl.tn@gmail.com


வெளி மாநிலத்திலும், வெளிநாட்டிலும் வசிப்பவர்கள் மின்னஞ்சல் முகவரியில் அனுப்பி வைக்கலாம். இப்படி அனுப்பும் போது, ‘‘எனது மின்னஞ்சல் முகவரியே சட்டப்படி போதும் என்பதால் கையொப்பம் தேவையில்லை’’ என்பதை குறிப்பிட வேண்டும். 

பிற்சேர்க்கை நாள் 22-09-2019 நேரம் 20.30

நம்முடைய சான்று நகல் கேள்விக்கு, பூங்கோதையிடம் இருந்து இதுவரை எந்தப் பதிலும் இல்லை. இல்லையில்லை, எந்தப் பதிலும் சொல்ல முடியவில்லை என்பதே உண்மை! இதுதான் சரித்திரம் படைக்கத்தக்க சான்று நகல் வலிமை என்பது!!

இந்த நிலையில், ஏற்கெனவே திட்டமிட்டபடி இன்று ஹீலர் பாஸ்கரின் வகுப்பில் சுமார் நாநூற்று முப்பதுக்கும் அதிகமானோர் கலந்து கொள்ள சிறப்பாக நடந்து முடிந்ததாகவும், நம்முடைய சட்ட நடவடிக்கைகளை குறிப்பிட்டு நன்றி தெரிவித்ததாகவும் அந்நிகழ்வில் கலந்துக் கொண்ட நம் வாசகர் திரு. காளிமுத்து தெரிவித்துள்ளார். 

ஹீலர் பாஸ்கரும், ‘‘வகுப்பு சிறப்பாக நடந்தது. உங்களுக்கும், உங்களது குழுவினருக்கும் நன்றிகள் கோடி. வாழ்க வளமுடன்’’ என்று தெரிவித்துள்ளார். இதனை இந்த விடயத்தில், எங்களைப் பின்பற்றி கடிதம் அனுப்பிய அனைவருக்கும் உரித்தாக்குகிறோம். 

யாராக இருந்தாலும், நாட்டுக்கு நல்லது செய்ய வேண்டுமென நினைப்பவர்கள் முதலில் செய்ய வேண்டியது, சரியான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெறுவதே! பின் அதனை ஏதோவொரு வகையில் பொதுத்தளத்தில் வெளிப்படுத்தி, வீணாக தொந்தரவு செய்தால், சட்டப்படி பதிலடி கொடுக்கப்படும் என உணர்த்த வேண்டியதே அவரவர்களின் தலையாய முதற் கடமை!! 


பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

அறவழி நோட்டா

அறவழி நோட்டா
மகாத்மா போதித்த வாக்குரிமை!

நோட்டா: NOTA

நோட்டா: NOTA
விளக்கம்: EXPLANATION

நியாயந்தான் சட்டம்!

நியாயந்தான் சட்டம்!
வக்கற்றவர்களின் கீழான பட்டம்!

நூல்களின் முகப்பு

Follow by Email

Followers

முக்கியப் பக்கங்கள்

அடிப்படை சட்டங்கள்

  • 1. இந்திய சாசனம் 1950
  • 2. நீதிமன்ற சாசனம் 1872
  • 3. இந்திய தண்டனை சட்டம் 1860
  • 4. குற்ற விசாரணை முறை விதிகள் 1973
  • 5. உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908

நம் நூல்களைப் பற்றி

நீதியைத்தேடி.... நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் வரிசையில்...
1 குற்ற விசாரணைகள்
2 பிணை (ஜாமீன்) எடுப்பது
எப்படி?
3 சட்ட அறிவுக்களஞ்சியம்
4 சட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்
5 சாட்சியங்களைச் சேகரிப்பது
எப்படி?
6 கடமையைச் செய்!
பலன் கிடைக்கும்
7 மநு வரையுங்கலை!Recent Posts Widget

இந்நூல்கள் அனைத்தும் உங்களின் சட்ட விழிப்பறிவுணர்வுக்காக
மத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவியோடு
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பொது நூலகங்கள், மத்திய சிறைச்சாலைகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

சொந்தமாக தேவைப்படுவோர், உ(ய)ரிய நன்கொடையைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு வாட்ஸ்அப் எண் 09842909190 ஆகும்.

எல்லாப் பதிவுகளும்!

நம் தள வகைகள்

பயின்றோர் (20-08-16)