No law no life. Know law, know life! நியாயந்தான் சட்டம்! அதற்கு தேவையில்லை வக்கீழ் பட்டம். வக்கீழ் என்றாலே, கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்களே! இடைத்தரகர்களே!! நீ வாழ, நீயே வாதாடு!

நீ வாழ... நீயே வாதாடு... வரவேற்பு வாழ்த்து!

No law, no life. Know law, know life! என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியத்தை உணர்ந்து, ‘‘நீதியைத்தேடி... சட்டப் பல்கலைக் கழகத்திற்கு’’ வருகை தந்துள்ள உங்களை வருக என வரவேற்று, உங்களுக்கான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்று பயனைப் பெறுக என வாழ்த்துகிறோம்!
முக்கிய அறிவிப்பு : இந்த இணையப்பக்கத்தை புதுப்பிக்கும் பணி நடந்துக் கொண்டிருப்பதால், சில பதிவுகள் அல்லது இணைப்புக்கள் கிடைக்காமல் போகலாம்!

Saturday, August 17, 2019

மனு எழுதத்தெரியாத மடையர்களே, ‘‘வக்கீழ்ப் பொய்யர்கள்’’தொழிலின் அடிப்படை நோக்கம் லாபமே! ஆகையால், தொழில் செய்பவர்களிடம் 100க்கு 99.99% நியாயத்தை எதிர்ப்பார்க்கவே முடியாது. ஆனாலும், இவர்களைத்தான் மக்கள் மலைபோல நம்புகிறார்களே ஒழிய, தன் திறனை நம்புவதில்லை.

இதுவே மக்களின் மடத்தனமாக இருப்பதால்தான், தொழில் செய்பவர்கள் கொடிகட்டி பறக்கிறார்கள். அதாவது இவர்களை அடிமைப்படுத்தி, இவர்களின் உழைப்பை சுரண்டி, கொழுக்கிறார்கள். உழைப்பவர்களோ வறுமையிலேயே வாடுகிறார்கள்.

இதையே இவர்கள் தன் திறன் மீது நம்பிக்கை வைத்து உழைத்தால், அடிமை, வறுமை என்ற இருநிலைகளும் நீங்கி ஆனந்த வாழ்வு வாழ்வார்கள். 

ஒரு பிரச்சினையை தீர்ப்பதற்காக எழுதப்படும் மனு, அந்தப் பிரச்சினையை சரியான முறையில் தீர்ப்பதோடு, வேறு பல பிரச்சினைகள் தீரும் வண்ணமும், வேறு சிக்கல்கள் எதுவும் எழாத வண்ணமும் இருக்க வேண்டும். 

இதற்கு சொல்ல வேண்டிய சங்கதிகளை மிகவும் நேர்த்தியாகவும், படிப்பவர்களுக்கு இடையில் கேள்விகள் எதுவும் எழாத வண்ணமும் தெளிவான நீரோடை போல. தெள்ளத் தெளிவான எழுத்து நடையில் இருக்க வேண்டும்.

ஆகையால், நம்ம பிரச்சினையை நம்மைத் தவிர வேறு யாரும் சரியாக சொல்ல முடியாது என்ற அடிப்படை தத்துவத்தின்படி, பிரச்சினையில் தொடர்புள்ள அக்கறையுள்ள அந்தந்த நபர்களே மனுவை எழுதும் போதுதான் அம்மனு மிகச் சிறப்பாக இருக்கும். 

இதற்கு நாமேதான் எழுத வேண்டுமென்கிற எண்ணமும், முயற்சியும் இருந்தால் போதும். இதைத்தான் ‘‘மநு வரையுங்கலை!’’ நூல் முழுவதிலும் நம் ஆசிரியர் திரு. வாரண்ட் பாலா எழுதி நிரூபித்து காட்டியுள்ளார்.

அதாவது அந்த நூலில் தொகுக்கப்பட்ட குற்றவியல், உரிமையியல், நுகர்வோர், திருமண விவாகரத்து, உரிமையியல் வழக்கிற்கு பதிலடி தரும் பதிலுரை, இப்பதிலுரையிலேயே எதிர்க்கோரிக்கை, குற்றவியல் மேல்முறையீட்டு மனுக்கள் என எல்லாமே நிதிபதிகளிடம் தாக்கல் செய்யப்பட்டு, அம்மனுவில் எழுதியது போலவே தீர்ப்பும் பெறப்பட்டவை ஆகும்.  

ஆகையால், இப்படியெல்லாம் மனுவை எழுத முடியுமா என்று அனைத்து மட்டத்தில் உள்ளவர்களையும் ஆச்சரியப்பட வைக்கும் அளவிற்கு குடியரசுத் தலைவர், ஆளுநர் ஆகியோருடன் நட்பு ரீதியாக நேரடி தொடர்பில் உள்ளோருக்கு கூட, இவரே மனு எழுதி பிரச்சினையை தீர்த்து வைத்திருக்கிறார். அதையும் அந்நூலிலேயே சொல்லி இருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். 

ஆகையால், அவர் யாருக்காக மனுவை எழுதுகிறாரோ அவர்கள் பாக்கியவான்கள் என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு நியாயம் இருக்கிறது என்று உணர்ந்தால் மட்டுமே மனுவை எழுதுவார். இதுக்கும் சிந்தனைகள் தானாக வரவேண்டும். ஆகையால், சில நேரங்களில் இரண்டு பக்கம் எழுதுவதற்கு, இருபது நாட்கள் கூட ஆகி விடும் என்பது எங்களுக்கே கிடைத்துள்ள அனுபவம். 

இது மனுவிற்கு மட்டுமல்ல; அவர் எழுதும் கட்டுரைகள் நூல்கள் உள்ளிட்ட அனைத்துக்கும் பொருந்தும். ஆகையால்தான், நூல்களை எழுத சாதாரணமாக ஓரிரு வருடங்கள் ஆகிறது. அதற்கு மேலும் ஆகிறது. இதனால்தான், அவர் கணித்து சொன்னது சொன்ன படியேயும், எழுதியது எழுதிய படியேயும் நடக்கிறது.  

மற்றபடி, உறவு, நட்பு, பணம், புகழ் என்று எதற்காகவும் மனுவை எழுதிவிடவோ, ஆலோசனையை சொல்லி விடவோ மாட்டார். எந்தவொரு நிர்ப்பந்தத்துக்கும் ஆளாக கூடாது. அப்படி ஆளானால், அடிமையாகி விடுவோம் என்று ‘‘கடமையைச் செய்! பலன் கிடைக்கும்’’ நூலில் தெளிவுபட எழுதியுள்ளார்.

கர்மவினை

இது புரியாமல் பலர், அவரிடம் ஏடாகூடமாக பேசி எதையாவது செய்து தங்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயத்தை  இழந்து, மேலும் பல சிக்கல்களில் சிக்கி தவியாய் தவிப்பர். பரிதவிப்பர். இதுதான் அவரவர்களும் அனுபவித்தாக வேண்டிய கர்மவினை. இதையெல்லாம் அவரது நூலிலேயே படிக்கலாம்.

இதில், அவர் பணத்துக்கு ஆசைப்படலாம் என்று அற்பத்தனமாக நினைத்து, மனு எழுத அல்லது ஆலோசனை சொல்ல இலட்சக் கணக்கில் பணம் தருவதாக கூறி, வாங்கிக் கட்டிக் கொண்டவர்களும் பலருண்டு.

ஆமாம், எப்படி தெரியுமா?

இலட்சம் இல்லை; நீ கோடி கொடுத்தாலும் கூட உனக்காக ஒரு எழுத்தை கூட எழுத மாட்டேன் என்று, கோடான கோடியில் ஒரு நபராக உள்ள இவரைத் தவிர வேறு யாராலும் உறுதியாக சொல்ல முடியாது.

இதனை வேறு விதமாக சொல்ல வேண்டுமென்றால், ‘‘நான் ஒரு தடவ சொன்னா நூறு தடவ சொன்ன மாதிரி’’ மற்றும் ‘‘நான் ஒருமுறை முடிவெடுத்துட்டா என் பேச்சை நானே கேட்கமாட்டேன்’’ என்ற சினிமா வசனங்களுக்கு அப்படியே மிகவும் பொருத்தமானவர். 

ஆமாம், ஒருமுறை சிக்கியவன் எத்தனைப் பிறவி எடுத்தாலும், மறக்க மாட்டான் என்கிற அளவிற்கு அவ்வளவு அன்பாக அர்த்தத்தோடு திட்டி தீர்ப்பார் என்பதை, நூல்களில் நிதிபதிகளை எழுதுவதை வைத்தே புரிந்துக் கொண்டிருப்பீர்கள். ஆகையால், இதற்குமேல் விளக்க வேண்டியதில்லை.

நம் கடமையும், உரிமையும்!

நம்முடைய வரிப்பணத்தில் கூலி பெரும் அரசூழியர்கள் நமக்கு சரியான நேரத்தில் வேலையை செய்துதர வேண்டிய ஊழியர்களே! ஆகையால், அவர்களை சட்டப்படி எப்படி வேலை வாங்க வேண்டுமோ அப்படி வேலையை வாங்க வேண்டியதே நம் கடமை!! 

ஆமாம், காமராஜர் தமிழ் திரைப்படத்தில், கண் அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக வெளிநாடு செல்ல வேண்டிய பிரச்சினை ஒன்று அவரது கவனத்திற்கு வந்ததும், மருத்துவதுறை தலைவரை நேரில் அழைத்து, ‘‘மக்களுக்கு தேவையான நல்லதை செய்யத்தானே சட்டம். அதைச் செய்யாமல் கண் நாசமா போறத்துக்கா சட்டம்?’’ என்று அவரு பாணியில் நாலு ஏத்து ஏத்தி தலை குனிய வைப்பாரே!

அதுபோல, நமக்கு அவசரமாக ஒரு செயல் நடைபெற வேண்டி இருக்கிறது என்றால், அதனை மிகவும் அவசரம் / நேரில் சார்வு என்று மனுவின் தலைப்பில் குறிப்பிட்டே கொண்டு செல்லலாம். அப்படி வரும் மனு மீது ஊழியர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நம் மனு மீது நடவடிக்கை எடுக்க எனக்கு இத்தனை நாட்கள் அல்லது மாதங்கள் கால அவகாசம் இருக்கிறது என்று அரசூழிய அய்யோக்கியர்கள் அலட்சியமாக சொன்னால், ‘‘அடிமை முட்டாளே, உனக்கு எப்படி அதிகபட்ச உரிமை இருக்கோ அப்படியே உடனே செய்து தரவேண்டும் என கேட்க எனக்கும் சட்ட உரிமை இருக்கு’’ என்று தெளிவாக பதில் சொல்ல வேண்டும்.

அப்படி செய்யவில்லை என்றால், செய்ய முடியாத அளவிற்கு அத்தனை நாட்கள் என்னென்ன வேலைகளை செய்தாய் என்று சான்று நகலை தர வேண்டி இருக்கும் அல்லது இது தொடர்பான வழக்கில்  உன்னை சாட்சியாக அழைத்து, கூண்டில் ஏற்றி நான் விசாரிக்கும் போது பதில் சொல்லி சட்ட விளைவுகளுக்கு உள்ளாக வேண்டி இருக்கும் என சட்டப்படியே எச்சரித்தாலே போதும். 

இதில் முக்கியமாகவும், மறைமுகமாகவும் சொல்லப் பட வேண்டியது, ‘‘பொய்யர்கள் இன்றி நாமே வாதாடுவோம்’’ என்பதைத்தான். இல்லையெனில், பொய்யனை வைத்துதான் வாதாடுவோம் என்றும், அவனை சரிகட்டி விடலாம் என்றும் நினைப்பாய்ங்க. 

இப்படி சொல்லி விட்டால், எப்படி எப்படியோ சீறிய எந்தவொரு அரசூழிய அய்யோக்கியனும் பல் பிடுங்கப்பட்ட பாம்பாக அடங்கிடுவாய்ங்க. நாம் சொன்னபடி சிக்கினால், காலில் விழுந்து விடுவாய்ங்க என்பது, ஆசிரியர் உட்பட நம் வாசகர்கள் பலருக்கும் கிடைத்த அனுபவம். இப்படியொரு அனுபவம், இனி இவ்வாசகிக்கும் கிடைக்கலாம். 

கிராமத்து வாசகியின் சாதனை!

இதனை, பள்ளிப் படிப்பே படித்துள்ள நம் கிராமத்து வாசகிக்கு நேற்று சொன்னதும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும், தபால் பிரிவில் மனுவை கொடுத்து ஒப்புதல் கேட்க, அங்கிருந்த முட்டாள் ஊழியனோ கொடுக்க முடியாது என்று சொல்லவே, மாவட்ட ஆட்சியரை நேரடியாக சந்தித்து மனுவை கொடுத்து சுருக்கமாக செய்தியையும் சொல்லி விட்டாள்.


அதனைப் பெற்ற மாவட்ட ஆட்சியர், அந்த மனுவின் நகலில், மனுவை பெற்றதுக்கான கையெழுத்து ஒப்புதலை போட்டுக் கொடுத்து விட்டு, உடனே உதவியாளரை அழைத்து இதனை இன்றே நடவடிக்கைக்கு அனுப்பு என்று சொல்லி விட்டார்.

ஆமாம், மனு எழுதுவது எவ்வளவு முக்கியமோ, அதைவிட மிகமிக முக்கியம் அதனை அந்தந்த அரசூழியர்களிடம் கொடுத்து, அப்படி அவர்களிடம் கொடுத்ததற்கான உரிய கையெழுத்து ஒப்புதலைப் பெறுவது. இப்படி பெற்று விட்டால், பின்னர் அதற்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு, அந்த நிமிடமே அவ்வூழியர்களுக்கு வந்து விடுகிறது. இல்லையெனில், மனுவை கிடப்பில் அல்லது குப்பையில் கூட போட்டு விடுவார்கள்.

போலி உயில்கள்: ஓர் எச்சரிக்கை!

அதாவது பத்தொன்பது வருடங்களாக இவளது அனுபவத்தில் இருந்து வரும் அப்பா வழி தாத்தா சொத்தை, திடீரென இவளது சித்தப்பா மகனான தம்பி, தாத்தா என் பேருக்கு உயில் எழுதி வைத்திருப்பதாக கூறி பொய்யான உயிலின் மூலம் கைப்பற்ற முயற்சிக்கிறான்.

சொத்து தனக்கு உரிமையான போதே பட்டாவையும் சேர்த்து மாற்றாது விட்டது இவளது தவறு. இவளைப்போன்றுதான் பலரும் பட்டா பிரச்சினையில், சொத்துப் பிரச்சினையை சந்திக்கிறார்கள். ஆகையால், இதற்கும் விரைவில் தீர்வு தரும் நடவடிக்கையை அரசு எடுத்துள்ளது.‘‘பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்’’ என்பது போல, இப்படி பொய்யான உயிலை தயாரித்து ஏற்கெனவே சில சொத்துக்களை மற்றவர்களிடம் இருந்து கைப்பற்றி இருக்கிறான் என்பது, இவளிடம் பிரச்சினை செய்ததன் மூலம் தெரிய வந்துள்ளது. ஆகையால், ஏற்கெனவே சொத்தை இழந்தவர்களும் விழித்துக் கொண்டார்கள்.

இக்குற்ற புத்தியுள்ள படித்த முட்டாள், அண்ணா பல்கலை கலகத்தில் விரிவுரையாளராக இருக்கிறான் என்கிறாள் நம் வாசகி. இவனிடம் படிக்கும் மாணவர்கள் எப்படி யோக்கியர்களாக இருப்பார்கள்?

ஆகையால், இந்த போலி உயிலை வைத்தே அடுத்த கட்டமாக இவனது விரிவுரையாளர் வேலையை காலி செய்ய வேண்டும்; இதற்காக குற்றவியல் வழக்கு நடவடிக்கையை எடுக்க வேண்டுமென்ற முனைப்பில் இருக்கிறாள்.

படிக்காதவர்களால், அவர்கள் படிக்கவில்லை என்பதை தவிர, சமூகத்தில் வேறு பிரச்சினை இல்லை. ஆனால், படித்த முட்டாள்களால்தான் அத்தனை பிரச்சினையும் வருகிறது என்பதற்கு இவனெல்லாம் உண்மைச் சான்று.

இத்திருடனுக்கு அந்த கிராம நிர்வாக ஊழியனான இளைஞனும் ஏனோ துணை நின்று, அவனது பட்டா மாற்றி தர கோரும் மனுவை தாசில்தாருக்கு அனுப்பி விட்டான். இதை தடுக்கவே நம் வாசகி மாவட்ட ஆட்சியரிடம் மனுவை கொடுத்து, பெரிய சொத்துப் பிரச்சினையை சிறிய அளவிலேயே தடுக்க முயற்சித்து இருக்கிறாள் என்பது பாராட்ட வேண்டிய விசயம். கிராம நிர்வாக ஊழியனும் இவளது சட்ட நடவடிக்கைக்கு உள்ளாகப் போகிறான்.

ஆனால், வாசகர்கள் பலரும் கொடுத்த மனுவிற்கு உரிய ஒப்புதலை சட்ட உரிமையோடு வாங்கவே சங்கடமாக இருக்கிறது. அப்படி இருந்தால், பிரச்சினையை பெரிதாக்கிக் கொண்டு சந்தியில் நிற்க வேண்டியதுதான்!

இதெல்லாம், நம் ஆசிரியரைப்போல நல்லதொரு கொள்கைவாதிக்கும், நம் வாசகியைப் போல பிரச்சினையை உடனே தீர்க்க வேண்டும் என்ற முனைப்போது செயல்படும் வாசகர்களுக்கான செயல் இலக்கணம்.

வக்கற்ற வக்கீழ்ப் பொய்யர்கள்’’ 

இதையே தொழில் செய்யும், வக்கீழ்ப் பொய்யர்கள், எப்படி பொறுப்பில்லாமல் இருப்பார்கள் என்பதற்கு இந்த பத்திரிகை செய்தியே நல்லதொரு சான்று.

காஷ்மீர் விவகாரத்தில், இந்தியா எடுத்துள்ள சிறப்பு அந்தஸ்து நீக்கம் என்ற நிலைப்பாட்டை உலக நாடுகள் அனைத்தும் உற்று நோக்க, அரசின் நிலையை எதிர்த்து பொய்யர்களால் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆறு மனுக்களிலும் ஏகப்பட்ட கருத்துப் பிழைகள், தவறான தகவல்கள்  உள்ளதாக, நிதிபதிகள் புலம்பி உள்ளனர்.

இந்தப் புலம்பல் மனுக்களை விசாரிக்க முடியாததால், கிடைக்க வேண்டிய நிதி கிடைக்காமல் போய் விட்டதே என்ற புலம்பலாக கூட இருக்கலாம். யாருக்கு தெரியும்?

clip

ஏனெனில், இதற்கு முன் நிதிபதிகள் இப்படி புலம்பியதில்லை. மனுவில் தவறு இருந்தால், அதனை திருத்தி கொடுக்க வலியுறுத்தி திருப்பி கொண்டுக்க வேண்டியதே நிதிபதிகளின் சட்டப்படியான வேலை.

இதை விட்டுவிட்டு, தள்ளுபடி செய்ய முடியும். ஆனால் செய்யவில்லை என்று புலம்புகிறார்கள் என்றால், வட போச்சே, வருமானம் போச்சே என்று எண்ணியதாகத் தான் கருத வேண்டி உள்ளது.

கழுதை திண்ணா காகிதம்!

மேலும், வக்கீழ்ப் பொய்யர்கள் வழி வந்த நிதிபதிகள் என்னமோ உலக மகா யோக்கியர்கள் போலவும் தவறான தீர்ப்பை எழுதியதே இல்லை என்பது போலவும் ஒரு கர்ப்பனையை மக்கள் மத்தியில் உண்டாக்க முயற்சித்து இருக்கிறார்கள் என்றும் சொல்லலாம்.

ஒரு பாணை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்ற பழமொழிக்கு இணங்க,  ‘‘நிதிபதிகள் தீர்ப்பு எழுதிய காகிதம் என்று கழுதைக்கு தெரிந்தால், கழுதை கூட அக்காகிதத்தை திண்ணாது’’  என்று ‘‘நீதியைத்தேடி... சாட்சியங்களைச் சேகரிப்பது எப்படி?’’ நூலில் எழுதி இருக்கிறார் என்றால், இதை விட கேவலமாக விமர்சிப்பதற்கு வேறென்ன இருக்கு?!

எது எப்படி இருப்பினும், உலகமே உற்று நோக்கும் மிக மிக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு மனுவிலேயே, நீங்களெல்லாம் பெரீய கறுப்பங்கி காரியப் புடுங்கிகள் என்று நினைக்கும் உச்சநீதிமன்றப் பொய்யர்களின் தகுதியே இவ்வளவு தான் என்றால்.., 

உங்களது வழக்கில் வாதாடும் உள்ளூர் வக்கீழ்ப் புடுங்கிகள் எல்லாம் எப்படிப்பட்ட தகுதியில் இருப்பார்கள் என்பதை சற்றே யோசித்தால், ‘‘இப்பொய் புடுங்கிகளை விட, நீங்களே மேலானவர்கள்’’ என்பதை புரிந்து கொள்வீர்கள்.

பிற்சேர்க்கை நாள் 19-09-2019

நமக்கு அஞ்சல் பெட்டி எண்ணை வாங்கியுள்ளோம். இந்த எண்ணை குறிப்பிட்டு தபால் எதுவும் வந்தால், அந்தப் பெட்டியில் போட்டு விடுவார்கள். ஆகையால், அவ்வப்போது சென்று தபால் எதுவும் வந்திருக்கா என பார்க்க வேண்டும். அப்படி இன்று சென்று பார்த்தால் எதுவும் வரவில்லை. 

ஆனால், அருகில் இருந்த அஞ்சல் பெட்டிகளில் பல கடிதங்கள் இருந்தன. அதெல்லாம் நகராட்சிக்கும், வட்டார வளர்ச்சி ஊழியர்களுக்கும் சாதாரண அஞ்சலில் அனுப்பப்பட்டவை என்பது அந்தந்த பெட்டியின் மேலே நகராட்சி, வட்டார வளர்ச்சி என்றும் குறிப்பிடப்பிட்டு உள்ளதன் மூலம் தெரிந்தது. 

அரசு அலுவலகங்களுக்கு இதுபோன்று, அஞ்சல் பெட்டி எண்களை வாங்க சட்டப்பூர்வ அனுமதி இருப்பதாக தெரியவில்லை. இருக்கவும் முடியாது. 

ஆனால், அந்த அய்யோக்கிய ஊழியர்கள் தங்களுக்கு வரும் கடிதங்களை குறைத்து, வேலையை குறைத்துக் கொள்ள சொந்த செலவில் அஞ்சல் பெட்டி எண்ணை வாங்கி விட்டு, அவர்களுக்கு மக்கள் அனுப்பும் கடிதங்களை சட்டத்துக்கு விரோதமாக அப்பெட்டியில் போட சொல்லி விடுகிறார்கள் போலிருக்கு. 

ஆகையால், நாம் மேற்சொன்ன கிராமத்து வாசகியைப் போல, மனுக்களை நேரில் கொடுத்து உரிய ஒப்புதலைப் பெற்றால் மட்டுமே பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.  இல்லையெனில், அப்பிரச்சினை நம் வாழ்க்கைக்கே கூட முற்றுப்புள்ளி வைத்து விடும். 

பிற்சேர்க்கை நாள்: 10-09-2019

இதில் சொல்லியுள்ள நம் வாசகியின் பிரச்சினை அடிமை அய்யோக்கிய அரசூழியர்களின் அலட்சியத்தால் பெரிதாகி விட்டது. பெரிதாகி விட்டது என்றால், இரண்டு தரப்புக்குமே என்றாலும், சட்டப்படி நடக்கும் நம் வாசகிக்கு பிரச்சினை பெரிதல்ல; மாறாக, சட்ட விரோதமாக நடந்த அய்யோக்கிய அரசூழியர்களுக்கே.

ஆமாம், அவ்வூழியர்களின் வேலைக்கே முற்றுப்புள்ளி வைக்கும் நிலையில், பிரச்சினை பெரிதாகி போய்க் கொண்டு இருக்கிறது. ஆகையால், நம் வாசகி வேறு சில மனுக்களையும், நினைவூட்டல் மனுவையும் கொடுக்க வேண்டி இருந்தது.

அப்படி கொடுக்கப் போனால், முன்பு மனுவைப் பெற்றுக் கொண்டு, நகலில் ஒப்புதல் கொடுத்ததை போல, இப்போது கொடுக்க மறுக்கிறார்கள். அப்படி கொடுத்தால், கீழ்நிலை ஊழியர்கள் செய்து விட்ட தவறுகளுக்கு, நாம் பதில் சொல்ல வேண்டி இருக்கும் என்பது அவர்களது எண்ணம்.

சட்ட விரோதமான காரியங்களை செய்து விட்ட கீழ்நிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க பயம். நாம் நடவடிக்கை எடுக்கப் போய் அவர்கள் எல்லாம் நமக்கு எதிராக போராட ஆரம்பித்தால், நம் நிலை மிகவும் மோசமாகி விடும் என்பது ஐ.ஏ.எஸ் அடிமைகளாக உள்ள மேல்நிலை ஊழியர்கள்.

ஆமாம், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் ஆகிவிட்டால் அவர்களெல்லாம் பெரிய பருப்பு போல சட்டப்படி நினைத்ததை எல்லாம் செய்து விட முடியாது என்பதற்கு சகாயத்திற்கு எதிராக கிராம நிர்வாக ஊழியர்கள் போராடியதாக, அவரே சொன்ன வாக்குமூலமே நல்லதொரு சான்று.

ஆகையால், வாங்க மறுத்த நினைவூட்டல் மனுவை மின்னஞ்சலில் அனுப்பி வைக்க அறிவுறுத்தினோம். அதன்படியே அனுப்பி விட்டு, நேற்று (09-09-2019) நேரில் போனால் மாவட்ட ஆட்சியரே, ‘‘உங்களுக்கு யார் இப்படியெல்லாம் (கடமை, தற்காப்பு உரிமை, குற்றம்) சட்டப் பிரிவுகளைப் போட்டு மனு எழுதிக் கொடுக்கிறார்கள்’’ என்று அலருகிறாராம்! உடனே விசாரிக்க உத்தரவு போடுகிறேன் என்று சொல்லி இருக்காராம்!!

நானும் சட்டம் படிக்கிறேன். நான்தான் எழுதினேன் என்று நீதியைத்தேடி... நூலை எடுத்துக் காட்டியும் கூட நம்பவில்லையாம். ஆள் பாதி, ஆடை பாதி என்பது போல ஆடையையும், ஆளையும் பார்த்தாலே ஓரளவு முடிவு செய்து விடலாம் அல்லவா? அதான்!

பிற்சேர்க்கை நாள் 18-09-2019

மாக்கள் பட்டா பிரச்சினை, நிலப் பிரச்சினை என்று வக்கீழ்ப் பொய்யர்களிடம் சிக்கிப் பத்துப் பதினைந்து வருடங்களுக்கு மேலாக, இலட்சக்கணக்கில் செலவழித்து செய்வதறியாது நிற்பதாக நமக்கு அவ்வப்போது செய்திகள் வந்து விடுகின்றன.

ஆனால், சரியான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்ற நாமோ ஒரு மாதத்திற்குள், சட்ட விரோதமாக வழங்கப்பட்ட பட்டாவை சட்டப்படி இரத்து செய்ய வைத்து பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வந்தாச்சு. ஆனாலும், பட்டா இரத்து என்ற காகிதத்தை இன்னும் வாங்கவில்லை.

ஆமாம், எதற்காக சட்ட விரோதமாக பட்டா பெயர் மாற்றம் செய்யப்பட்டது என, ஹீலர் பாஸ்கர் விவகாரத்தில் கேட்டதுபோல,  கேள்வி மேல் கேள்வி கேட்டு, இந்திய சாட்சிய சட்டப்படி சான்று நகல் கேட்டு அனுப்பிய மனு அய்யோக்கிய அரசூழியர்கள் அத்தனை பேரையும் அலற வைத்துள்ளது.

ஆகையால், இதிலிருந்து தப்பித்தால் போதுமென்று ‘‘பெயர் மாற்றம் செய்தப் பட்டாவை இரத்து செய்து விட்டதால், நாங்கள் அனுப்பிய சான்று நகல் மனு மீது பதில் தர வேண்டாம்’’ என்று எழுதிக் கொடுத்து விட்டு, பட்டா இரத்தை உறுதி செய்யும் காகிதத்தை வாங்கிச் செல்லுங்கள் என்று...

அனைத்துக்கும் காரணமான அய்யோக்கிய தலைமை நில அளவையர், இதற்கு பிறகும் எதுவும் மனு அனுப்பி விடாதீர்கள் என்று ஒரு வாரமாக தலை கீழாக நின்று கெஞ்சி கூத்தாடிக் கொண்டிருக்கிறான்.

ஆமாம், இப்படித்தான் பிரச்சினை என்று வந்தால் எழுதி வாங்கி நைசாக தப்பிக்க நினைப்பானுங்க. எச்சரிக்கையாக இருக்கனும். இதுபோன்ற அய்யோக்கியனுங்களுக்கு எல்லாம் மரியாதை கொடுக்க வேண்டிய அவசியமே நமக்கில்லை. கொடுக்கவும் கூடாது.  

ஆமாம், தினமும் நாம் வாசகிக்கு போன் போட்டு அழைக்கிறான். இதெல்லாம், ஆதாரத்திற்காக ஆடியோவாக பதிவு செய்யப்பட்டு உள்ளது. இவற்றை பின்னர் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றமும் செய்ய நேரலாம்.

ஆனால், நம் வாசகியோ பட்டாவை அவன் பெயருக்கு மாற்றுவதற்கு முன்பு என்னை கேட்டியா? நான் எதிலும் கையெழுத்து போட முடியாது. பட்டா இரத்து செய்யப்பட்ட விவரத்தை கடிதம் மூலம் அனுப்பு என பதில் சொல்லிக் கொண்டு இருக்கிறாள்.

இதே நிலை இன்னும் சில நாட்களுக்கு நீடித்தால், அடுத்த மனுவையும் அனுப்புவாள்; ஆகையால், அவனே வீடுதேடி வரனும். பார்ப்போம். முடிவுக்கு வந்ததும் முழு தகவலையும் வைத்து ஒரு நூலே கூட எழுதலாம்.  

பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

5 comments:

 1. செம.... ( பெரீய கறுப்பங்கி காரியப் புடுங்கிகள் என்று நினைக்கும் உச்சநீதிமன்றப் பொய்யர்களின் தகுதியே இவ்வளவு தான் என்றால்..,) இதனை படித்த பிறகு புடுங்கிகள் என்ன செய்ய முடியும்......... தூள்... சரியான கட்டுரை....

  ReplyDelete
 2. வழக்கம்போல் அட்டகாசமான கருத்து...
  இவற்றையெல்லாம் செயல்படுத்திப் பார்க்க அதிகம் தில்லு வேணும்... முயற்சிப்போம்.

  ReplyDelete
 3. சிறப்பான பதிவு அனைவரும் படிக்க வேண்டிய பதிவு. வாழ்த்தக்ள்.

  ReplyDelete
 4. எப்படி எழுதினாலூம் அவங்களுக்கு சொரணை வர மாதிரி தெரியல

  ReplyDelete
 5. இவர்களிடம் தயவு தாட்சண்யம் காட்ட வேண்டிய அவசியம் இல்லை.

  கட்டுரை வேற லெவல் சார் .
  வாழ்த்துக்கள். நன்றி.

  ReplyDelete

பத்திரிகை செய்திகள்

அறவழி நோட்டா

அறவழி நோட்டா
மகாத்மா போதித்த வாக்குரிமை!

நோட்டா: NOTA

நோட்டா: NOTA
விளக்கம்: EXPLANATION

நூல்களின் முகப்பு

Followers

முக்கியப் பக்கங்கள்

அடிப்படை சட்டங்கள்

 • 1. இந்திய சாசனம் 1950
 • 2. நீதிமன்ற சாசனம் 1872
 • 3. இந்திய தண்டனை சட்டம் 1860
 • 4. குற்ற விசாரணை முறை விதிகள் 1973
 • 5. உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908

நம் நூல்களைப் பற்றி

நீதியைத்தேடி.... நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் வரிசையில்...
1 குற்ற விசாரணைகள்
2 பிணை (ஜாமீன்) எடுப்பது
எப்படி?
3 சட்ட அறிவுக்களஞ்சியம்
4 சட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்
5 சாட்சியங்களைச் சேகரிப்பது
எப்படி?
6 கடமையைச் செய்!
பலன் கிடைக்கும்
7 மநு வரையுங்கலை!Recent Posts Widget

இந்நூல்கள் அனைத்தும் உங்களின் சட்ட விழிப்பறிவுணர்வுக்காக
மத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவியோடு
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பொது நூலகங்கள், மத்திய சிறைச்சாலைகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

சொந்தமாக தேவைப்படுவோர், உ(ய)ரிய நன்கொடையைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு வாட்ஸ்அப் எண் 09842909190 ஆகும்.

எல்லாப் பதிவுகளும்!

நம் தள வகைகள்

பயின்றோர் (20-08-16)