No law no life. Know law, know life! நியாயந்தான் சட்டம்! அதற்கு தேவையில்லை வக்கீழ் பட்டம். வக்கீழ் என்றாலே, கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்களே! இடைத்தரகர்களே!! நீ வாழ, நீயே வாதாடு!

நீ வாழ... நீயே வாதாடு... வரவேற்பு வாழ்த்து!

No law, no life. Know law, know life! என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியத்தை உணர்ந்து, ‘‘நீதியைத்தேடி... சட்டப் பல்கலைக் கழகத்திற்கு’’ வருகை தந்துள்ள உங்களை வருக என வரவேற்று, உங்களுக்கான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்று பயனைப் பெறுக என வாழ்த்துகிறோம்!
முக்கிய அறிவிப்பு : இந்த இணையப்பக்கத்தை புதுப்பிக்கும் பணி நடந்துக் கொண்டிருப்பதால், சில பதிவுகள் அல்லது இணைப்புக்கள் கிடைக்காமல் போகலாம்!

Thursday, August 8, 2019

நீ வாழ, நீயே வாதாடு! - தன் வேலையை மீட்ட வாசக தொழிலாளி!!உலகின் ஈடு இணையற்ற உழைப்பாளிகள் ஆன தொழிலாளர்கள், தொழிற்சங்க வியாதிகளை நம்பி இருக்காமல், சரியான சட்ட விழிப்பறிவுணர்வோடு உங்களை நீங்களே தற்காத்துக் கொள்ளுங்கள் என்பதை நீதியைத்தேடி... உள்ளிட்ட நூல்களில் ஆங்காங்கே வலியுறுதித்தி உள்ளதை காணலாம்.

இதற்கு ஏற்ப பல்வேறு தொழிலாளர்கள் தங்களின் சட்ட விழிப்பறிவுணர்வோடு சாதித்து வருகிறார்கள். இதில் வீண் பிரச்சினை ஏற்படுவதற்கு முன்பே, அதனை மிகவும் புத்திசாலித்தனமாக தடுத்து நிறுத்தியவர்களும் உண்டு என்பதற்கு, எங்களோடு பணி புரியும் ஒருவர் நிகழ்த்திய சாதனையைப் பற்றி, ஆட்சேபனையில் ஆரம்பித்து அடுத்தடுத்து அதிர்ச்சி தருவது எப்படி? என்ற கட்டுரையில் அறியலாம்.

தொழிலாளிகள் எப்படி சரியான சட்ட விழிப்பறிவுணர்வோடு இருக்க வேண்டும் என்பதற்கு ஓர் உண்மை!

இந்த வகையில் நாம் சட்டப்படி அரைகுறை நிறுவனம் என்று சொல்லும் போக்குவரத்து கலகத்தில் உள்ள நம் வாசகர் ஊழியர் ஒருவர், தன் வேலையை மீட்டெடுத்தது தொடர்பாக அனுப்பியுள்ள செய்தி இது!

*****************


ஐயா வணக்கம்.

நான் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் கோட்டம், புதுக்கோட்டை மண்டலம், புதுக்கோட்டை நகர் கிளையில் ஓட்டுனராக பணியாற்றி வந்தேன்.

கடந்த 06-11-2018 அன்று ஏற்பட்ட விபத்தின் காரணமாக என்னால் ஓட்டுநர் பணி செய்ய இயலாமல் போனது.  நான் எனது நிர்வாகத்தில் எனது உடல் தகுதிக்கு உரிய பணி வேண்டிய போது அவர்கள் தர மறுத்து வந்தனர்.

நமது சட்ட நூல்களை படித்ததன் விளைவாக எனக்கு தெரிந்தவரை அவர்களுக்கு கடிதம் மூலமாக பணி கேட்டு வந்தேன். 

அதன்  காரணமாக அவர்கள் வேறு வழியின்றி என்னை மருத்துவ குழுவிற்கு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை மருத்துவ குழுவிற்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

அங்கு என்னைப் பரிசோதித்த மருத்துவர்கள் எனது உடல்தகுதியை பற்றி நிர்வாகத்திற்கு தெரிவித்தும் எனக்கு எனது உடல் தகுதிக்கு உரிய பணி வழங்க மறுத்து வந்தனர். 

இதனால் நான் தொழிலாளர் நல ஆணையர் சமரசம் அவர்களிடம் முறையிட்டு அதனை வழக்காக மாற்றி, சமரசம் செய்து வைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் நிர்வாகம் வேலை தருகிறேன்; தருகிறேன் என்று கூறிக் கொண்டே இருந்ததே தவிர, வேலையும் தரவில்லை, ஊதியமும் தரவில்லை. 

நான் உடனடியாக எனது சமரச முடிவு அறிக்கையினை கொடுங்கள் எனக்கு இங்கு நீதி கிடைக்கவில்லை. நான் நீதிமன்றத்தில் முறையிட்டு நீதியினை பெற்றுக் கொள்கிறேன் என்று  கேட்டேன். 

அதைக் கேட்ட உடனே நிர்வாக தரப்பு அதிகாரி பதறிப் போய் அவருடைய உயரதிகாரியிடம் உடனடியாக அலைபேசியில் தொடர்பு கொண்டு வேலை தருவதாக கூறி அடுத்த வாய்தா வாங்கினார். 

தொழிலாளர் நல ஆணையரும் அடுத்த முறை வேலை வழங்க வில்லை என்றால் உங்களது கிளை மேலாளருக்கும், நிர்வாக இயக்குனருக்கும் சம்மன் அனுப்பி விடுவேன் என்று கூறினார். 

வேறுவழியின்றி தற்சமயம் எனக்கு காசாளர் பிரிவில் பணியினை நேற்று 06-08-2019 நாளன்று பணியில் சேர்ந்து பணி பார்த்து வருகிறேன். 

எனக்கு ஒரே ஒரு வருத்தம் தங்களது நூல்களில் தொழிலாளர்களுக்கு உண்டான பிரச்சனைகளுக்கு விரிவாக தீர்வு இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
*****************

இதில் நாம் மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது இவ்வாசகர் கடிதம் மூலமே நிர்வாகத்திடம் நடவடிக்கை மேற்கொண்டது. 

இவரும் ஒரு தொழிற் சங்கவாதிதான் என்றும், தொழிற் சங்கவாதிகள் எப்படி நடந்து கொள்வார்களோ, அப்படித்தான் இவரும் நடந்து கொண்டார் என்ற குற்றச்சாற்றுகளும் நமக்கு வந்தது உண்டு. 

அனைவருக்கும் தேவையான அடிப்படை சட்ட விழிப்பறிவுணர்வுக்கான நூல்களை மட்டுமே ஆசிரியர் திரு. வாரண்ட் பாலா அவர்கள் எழுதி உள்ளார். இதெல்லாமே உச்சநீதிமன்ற நிதிபதிகளுக்கு கூட தெரியாதவை என்பதை, பொது அறிவுள்ள எவரும் படிக்கும் போதே உணர முடியும். 

பொதுவாக சட்டத்தை அனைவரும் புரிந்துக் கொள்ளும்படி சாதாரணமாக எழுதமாட்டார்கள். இதற்காக சொல்ல வேண்டியதை நேராக சொல்லாமல் சுத்தி சுத்தி சொல்லுவார்கள். ஏனெனில், முதலில் எழுதுபவர்களுக்கு புரிந்தால்தானே தெளிவாக எழுதுவதற்கும், சொல்லுவதற்கும் முடியும். 

இதனை சரியாகப் புரிந்து, எளிமையாக எடுத்து சொல்லி இருப்பது, யாருக்கும் இல்லாத ஆசிரியரின் தனித்திறன். 

இந்த எளிய அடிப்படை புரிதலோடு, உங்களின் பிரச்சினைக்கு தக்கவாறு சட்டத்தைப் படித்துக் கொள்ளுங்கள் என்றும், எப்படி பயன்படுத்தலாம் என்பதை சிந்தியுங்கள் என்றும் குறிப்பிட்டும் உள்ளார். 

மேலும், ஆசிரியர் அடிப்படை இல்லாத, ஆனால் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து விதமான திருணம் விவகாரம், தொழிலாளர் நலன், நுகர்வோர் பாதுகாப்பு, மனித உரிமை உள்ளிட்ட பல்வேறு விசயங்களையும் தேவையான அளவிற்கு, வழக்கு அனுபவங்களோடு எழுதியுள்ளார். இதைக் கொண்டு சாதிக்கத் துடிப்பவர்கள் சாதித்துக் கொண்டேதான் இருக்கிறார்கள் என்பதற்கு எத்தனையோ ஆதாரக் கட்டுரைகளை கொடுத்துள்ளோம்.

தொழிலாளர்களுக்கு ‘‘மநு வரையுங்கலை!’’ நூலில் மனுவை தவிர்த்து நிறையவே எழுதி இருக்கிறார். ஆனால், வாசகர்கள் நூல்களை சரியாகவும், முழுவதுமாகவும் படிப்பதில்லை என்பதற்கு இத்தொழிலாளி வாசகரும் ஓர் உண்மை!

இதே நேரத்தில் ஆசிரியர் சொன்னபடி ஓரளவேனும் முயன்றதன் விளைவாகத்தான், இவ்வாசகர் தன் வேலையை மீட்டெடுத்துள்ளார் என்பதையும் சொல்ல வேண்டியதில்லை. சிறு முயற்சிக்கே இவ்வளவு பலனென்றால், பெரும் முயற்சி செய்தால், ஆசிரியரைப்போல என்னென்னவோ சாதித்து இருக்கனும்; அவரைப் போல இன்னும் பலர் உருவாகி அனுபவ நூல்கள் பற்பல வந்திருக்கனும். 

ஆனால், உருவாகவில்லை; ஆகையால், வாசகர்கள் யாரும் நூல்களும்  எழுதவில்லை. காரணம், ஆசிரியருக்கு இருக்கும் பரந்த சிந்தனையும், பெரும் மனப்பான்மையும், கடமை உணர்வும், வாசகர்களுக்கு சிறிதும் இல்லை என்பதை தவிர, வேறென்ன இருக்க முடியும்?!

இப்படியெல்லாம் கூட, நிதிபதிகள் உள்ளிட்டோரை விமர்சித்து, சட்ட நூல்களை தைரியமாக எழுதி வெளியிட முடியுமா? அவர்களுக்கே கொடுக்க முடியுமா?? என்று பிரபல எழுத்தாளர்களும், சிந்தனையாளர்களுமே ஆச்சரியப் படுகிறார்கள். 

ஆனாலும், உலகத்தில் உள்ள ஒவ்வொருவரும், தங்களுக்கு வரும் பிரச்சினைகளுக்கு தீர்வு சொல்லும் நூலை தேடும் முட்டாள்களாகவே இருக்க விரும்புகிறார்கள் என்றே சொல்ல வேண்டி உள்ளது.  


பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

0 comments:

Post a Comment

பத்திரிகை செய்திகள்

அறவழி நோட்டா

அறவழி நோட்டா
மகாத்மா போதித்த வாக்குரிமை!

நோட்டா: NOTA

நோட்டா: NOTA
விளக்கம்: EXPLANATION

நூல்களின் முகப்பு

Followers

முக்கியப் பக்கங்கள்

அடிப்படை சட்டங்கள்

  • 1. இந்திய சாசனம் 1950
  • 2. நீதிமன்ற சாசனம் 1872
  • 3. இந்திய தண்டனை சட்டம் 1860
  • 4. குற்ற விசாரணை முறை விதிகள் 1973
  • 5. உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908

நம் நூல்களைப் பற்றி

நீதியைத்தேடி.... நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் வரிசையில்...
1 குற்ற விசாரணைகள்
2 பிணை (ஜாமீன்) எடுப்பது
எப்படி?
3 சட்ட அறிவுக்களஞ்சியம்
4 சட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்
5 சாட்சியங்களைச் சேகரிப்பது
எப்படி?
6 கடமையைச் செய்!
பலன் கிடைக்கும்
7 மநு வரையுங்கலை!Recent Posts Widget

இந்நூல்கள் அனைத்தும் உங்களின் சட்ட விழிப்பறிவுணர்வுக்காக
மத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவியோடு
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பொது நூலகங்கள், மத்திய சிறைச்சாலைகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

சொந்தமாக தேவைப்படுவோர், உ(ய)ரிய நன்கொடையைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு வாட்ஸ்அப் எண் 09842909190 ஆகும்.

எல்லாப் பதிவுகளும்!

நம் தள வகைகள்

பயின்றோர் (20-08-16)