ரிக், யஸூர், ஸாம, அதர்வன வேதங்கள் எல்லாம் சமஸ்கிருதம் என்று சொல்லக் கூடிய வடமொழியில் இருப்பதாக நாம் எண்ணிக் கொண்டு இருக்கிறோம் அல்லவா?
உண்மையில் வேதத்திற்கு மொழி என்பதே கிடையாது என்றால், உங்களுக்கு ஆச்சரியமட்டுமல்ல, அதிர்ச்சியாக கூட இருக்கும்.
ஆமாம், வேதம் என்பது முற்றிலும் ஒலி வடிவம் உடையதே; அதே ஒலி வடிவில் உச்சரிக்கப்பட வேண்டியதே!
ஆனால், இந்த விதியை மீறி முதன் முதலில் சமஸ்கிருதத்தை தாய்மொழியாக கொண்டவர்கள் தங்களின் வசதிக்காக வேதங்களின் ஒலி வடிவை தங்களின் தாய்மொழி சமஸ்கிருதத்தில் எழுதி கொண்டதால் வேதங்கள் எல்லாம் சமஸ்கிருதத்திலேயே எழுதப்பட்டுள்ளன என்ற தவறான செய்தி இன்று வரை பதிவாகி இருக்கிறது. அவ்வளவே!
இதனை விளக்கிச் சொன்னவர் திரு. இலங்கை ஜெயராஜ் அவர்கள். இவர் இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நேர்மையாக சிந்திக்க கூடிய அறம் சார்ந்த ஆன்மீகச் சொற்பொழிவாளர்.
இவர் மாதந்தோரும் சென்னைக்கு வந்து, உயர் வள்ளுவம் என்ற தலைப்பில் திருக்குறளை வாழ்வியல் நெறியாக்க கற்பித்து வருகிறார். இதில் நூற்றுக் கணக்காணோர் கலந்துக் கொண்டு பயனடைந்து வருகின்றனர்.
இப்பவும் வேதம் என்பது ஒலி வடிவமே என்பதை நம்ப முடியவில்லையா? இந்த வீடியோவில் 8.50 நிமிடத்தில் கேட்டு அறியலாம்.
இன்று வேதத்தைச் சொல்பவர்கள் எல்லாம் சமஸ்கிருதத்தை படித்தவர்கள் அல்ல என்பதை தெளிவாகப் புரிந்துக் கொள்ளுங்கள்.
ஆமாம், நாம் எப்படி காயத்ரி மந்திரம் அல்லது எம்மொழியிலும் உள்ள திரைப்பட பாடலை ஒலி வடிவில் கேட்டுக் கேட்டு திரும்பப் பாடும் தகுதியைப் பெறுகிறோமோ அப்படியே அவர்களும் வேதங்களை ஒலி வடிவில் கேட்டுப் பேசுகிறார்கள், சொல்கிறார்கள்.
எனவே வேதங்களை அறிய முற்படுவது வடமொழி சமஸ்கிருதத்தை அறிவது ஆகாது. வடமொழி எதிர்ப்பு என்றப் பெயரில், எதிர்பாளர்களால் புனையப்பட்ட கட்டுக்கதை. அவ்வளவே!
குறிப்பு: இந்த ஆன்மீக சொற்பொழிவாளர் திரு. சதுர்வேதி அவர்கள் நம் நூல்களால் சட்ட விழிப்பறிவுணர்வை பெற்றவர்; தனக்கு எதிரான குற்றவியல் வழக்கில் தானே வாதாடியவர் என்பதோடு நமக்கு பல விதங்களில் உதவியுள்ளவர் ஆவார்.
இவரது காணொளிகளை பார்த்தால் இவர் ஒரு பன்மொழி புலமையாளர் என்பது விளங்கும்.
பகிர்ந்து கொள்ள
வாசகர்களின் கவனத்திற்கு...
இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.
இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.
சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.
0 comments:
Post a Comment