சட்டப்படி நமக்கு கொடுக்கப்படும் எந்தவொரு காகிக தகவலையும் வாங்க மறுக்கக் கூடாது. அப்படி மறுப்பதே சட்ட விரோதமான செயல் என்பதால், அதனால் பாதகங்களே விளையும்.
ஆனால், மக்களின் பிரச்சினையை முதலீடாக வைத்து சட்ட விரோத தொழில் செய்யும் வக்கீழ்ப் பொய்யர்கள் வாங்க கூடாது என்றே சொல்லுவார்கள். மக்களும் இதனை நம்பி வாங்காமல் விட்டு, வழக்கு மூலம் அவ்வக்கீழுக்கு ஆயுள் முழுவதும் பிழைப்பை தருவார்கள்.
ஆனால், நாமே படித்துப் பார்த்து, அதிலுள்ள சங்கதிகள் தவறாக இருந்தால் ஆட்சேபனையுடன் பெற்றுக் கொள்வதாக எழுதி கையொப்பமிட அறிவுறுத்துவோம். இப்படி செய்தால், பிரச்சினைக்கு முதலிலேயே முற்றுப்புள்ளி வைத்து விடலாம் என்பதற்கு பல சம்பவங்கள் குறித்து எழுதி உள்ளோம். இருந்தாலும், இது புதிது!
ஆமாம், எங்களோடு வேலைபார்க்கும் ஊழியரும் நம் வாசகரும் கேர் சொசைட்டி அங்கத்தினரும் ஆன ஒருவருக்கு எங்களது கம்பெனி நிர்வாகம் தன்னிலை விளக்கம் கோரும் அறிவிப்பு ஒன்றை கொடுத்தது.
இப்படி ஒன்று கொடுக்கப்பட்டால் அந்த ஊழியர்கள் நிர்வாகத்திடம் கெஞ்சுவார்கள் அல்லது தொழிற் சங்கப் பொறுப்பாளர்கள் உள்ளிட்டவர்களை துணைக்கு அழைப்பார்கள்.
அவர்களோ வருவதற்கு ரொம்பவே பிகு பண்ணுவார்கள். அப்படியே வந்தாலும் வர வேண்டியது நமது தொழிற்சங்க கடமை என்பதை மறந்து விட்டு வந்ததை அந்த ஆயுள் முழுவதும் சொல்லிக் காட்டுவார்கள்.
தொழிற்சங்க வியாதிகளைப் பற்றி, நீதியைத்தேடி... சட்ட அறிவுக்களஞ்சியம் மற்றும் கடமையைச் செய்! பலன் கிடைக்கும் ஆகிய நூல்களில் ஆசிரியர் திரு. வாரண்ட் பாலா விரிவாக எழுதி உள்ளார்.
இவர் தான் நம் வாசகர் ஆயிற்றே. இதுபோன்ற அறிவிப்பு அல்வா எதுவும் வராதா என அறிவுக்கு விருந்து படைக்க காத்திருப்பவர்கள் ஆயிற்றே!
ஆகையால் வாங்கிப் படித்துப் பார்த்தார். ஆட்சேபனையுடன் பெற்றுக் கொள்கிறேன் என்ற எழுதி கையொப்பம் போட்டு வாங்கி அவர்களுக்கு முதல் அதிர்ச்சியை தந்தார்!!
ஆமாம், எங்கள் தொழிற்சாலை தொழிலாளிகளில் இப்படி எழுதிப் பெறுவது இவரே முதல் நபர். சபாஷ்!
பின் அதற்கு சட்டப்படி என்ன பதில் கொடுக்க வேண்டுமே! அதையும் ஒரு வார கால அவகாசம் இருந்தும் அடுத்த நாளே கொடுத்து விட்டார்!!
இப்படித்தான் நமக்கு கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பிலும் சட்டத்தைப் பயன்படுத்தி தனி முத்திரைப் பதிக்க ஆரம்பித்து விட்டால், சாதாரணப் பாமரனுக்கும் கூட சட்டப் புரிதல் சர்வ சாதாரண சங்கதியாகி விடும்.
மற்றத் தொழிலாளிகள் என்றால், பதில் கொடுக்க கூடுதல் கால அவகாசம் கேட்பார்கள். ஆகையால் இவரை நிர்வாகத்தால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
இதுபற்றி நிர்வாகத் தரப்பு ஊழியர் ஒருவரிடம் கேட்ட போது...
நாம் எல்லோருக்கும் சட்டம் சொல்லிக் கொடுப்பதால் அவர்கள் எதற்கும் பயப்படுவதில்லை எதையும் வாங்கத் தயங்குவதில்லை அதற்கு பதில் கொடுக்கவும் தயங்குவதில்லை. ஆகையால் அவர்களை பயமுறுத்த கூட முடியவில்லை என புலம்பினார்களாம்!
நாம் தரும் ஆட்சேபனை அதிர்ச்சி முதல் அடுத்தடுத்து தரும் அதிர்ச்சி வரை எப்படி இருக்கு?
முன்னதாக இவரிடம் அந்த அறிவிப்பை வழங்கவே நிர்வாகத்தினர் யோசித்திருக்கிறார்கள். ஆகையால் இவரை வேலை வாங்கும் மேல்நிலை ஊழியர்கள் ஆறு பேரிடம் கொடுக்க சொல்லி இருக்கிறார்கள்.
ஆனால் அவர்களோ அவர் வேலையில் சரியாக இருக்கிறார். உனக்கும் அவருக்கும் பிரச்சனை என்றால் (உள்ளே வரும்போதும், வெளியில் போகும் போதும் வருகையை மின்னனு எந்திரத்தில் பதிவு செய்வதில்) நீயே கொடுத்துக் கொள். வேலையில் என்றால் நாங்கள் கொடுத்து கொள்கிறோம் என்று கூறி விட்டார்களாம்! இது முற்றிலும் சரிதான்!!
இதனைக் கேட்டதும் நம் ஆசிரியர் நீதிமன்றத்திற்கு போனால், அன்று நிதிபதிகள் பயந்து விடுமுறை எடுத்து விடுவார்கள் என்று நூல்களில் எழுதியுள்ள காமெடிதான் நினைவுக்கு வந்தது.
நம்முடைய நூல்களின் மூலம் சரியான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்றிருந்தால், அதிகார துஷ்பிரயோகிகள் கூட எவ்வளவு பயப்படுகிறார்கள் என்பது இதிலிருந்து புரிகிறதா?!
பகிர்ந்து கொள்ள
வாசகர்களின் கவனத்திற்கு...
இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.
இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.
சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.
0 comments:
Post a Comment