நம் நீதியைத்தேடி... வாசகரா என்று தெரியவில்லை. ஆனால், நம்முடைய பாணியில் பள்ளி ஒன்றுக்கு சட்டப்பூர்வ தன்னிலை விளக்கம் கோரி இந்திய சாட்சிய சட்ட உறுபு 101 இன்கீழ் அறிவிப்பு ஒன்றை அனுப்பியுள்ளார். இதற்கு அப்பள்ளியின் நிர்வாகி சார்பில் ஒரு பொய்யன் பதில் அனுப்பியுள்ளான்.
அதில், அப்பள்ளி நிர்வாகியின் கையொப்பம் இல்லாததால், அது அப்பொய்யனின் பதிலாக கருதப்படுமே அன்றி, நிர்வாகியின் பதிலாக கருதப்படாது. ஆகையால், இந்திய சாட்சிய சட்டப்படி செல்லாத காகிதமே!
அதில், அப்பள்ளி நிர்வாகியின் கையொப்பம் இல்லாததால், அது அப்பொய்யனின் பதிலாக கருதப்படுமே அன்றி, நிர்வாகியின் பதிலாக கருதப்படாது. ஆகையால், இந்திய சாட்சிய சட்டப்படி செல்லாத காகிதமே!
மேலும், இப்பொய்யன் கொடுத்துள்ள அவனது முகவரியே தவறு. அப்படி ஒரு முகவரி இல்லை என்பது இவர்களது தரப்பு குற்றச்சாட்டு.
பொதுவாக கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்கள் கொடுக்கும் அறிவிப்பில் சட்டப்பிரிவுகள் எதுவுமே இருக்காது. ஏனெனில் அறிவிப்பு அனுப்ப அவர்களுக்கென சட்ட விதிகள் இல்லை.
அவர்கள் வாதாடவே சட்டத் தடைகள் இருக்கும்போது அறிவிப்பு அனுப்ப எப்படி சட்டவிதி இருக்கும்? ஆனாலும் கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்கள் காலங் காலமாக அறிவிப்புகளை அனுப்பி பழக்கப்பட்டு விட்டதால், எதைப் பற்றியும் கவலைப்படாமல் அனுப்பவே செய்வார்கள்.
ஆகையால், நீங்கள்தான் எப்படியெல்லாம் சிந்திக்க முடியுமோ அப்படியெல்லாம் சிந்தித்து, செயல்பட வேண்டும். அப்போதுதான் எடுத்த காரியத்தை கச்சிதமாக முடிக்க முடியும்.
ஆனால், வாசகர்களோ பெரும்பாலும் ஈயடிச்சான் காப்பியடிக்கிறார்களே ஒழிய, சுயமாக சிந்திப்பதில்லை. அப்படி சிந்தித்தால்தான், அறிவு வளரும் என்பது புரியாமல் மூளை தேய்ந்து விடும் என எண்ணுகிறார்கள் போலும்!
சரி நம்ம விசயத்துக்கு வருவோம்.
நாம் அனுப்பும் அறிவிப்பிலே இதற்கு நேரடியாக நீதான் பதில் தரவேண்டுமே ஒழிய கூலிக்கு மாரடிக்கும் பொய்யனை வைத்து பதில் சொல்ல உரிமை இல்லை என்றும்; அப்படி அனுப்ப உரிமை இருந்தால் சரியான சட்ட விதிகளை குறிப்பிட்டே அனுப்ப வேண்டும்; இல்லையேல் அது சட்டப்படி செல்லாது என்பதால், அதன் கருத்துக்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது என்பதையும் சொல்லி விட வேண்டும்.
இல்லையேல், நம்மைப் போன்ற சட்ட விழிப்பறிவுணர்வு இல்லாத மாக்கள், நம்முடைய அறிவிப்பை பெற்றதும் பொய்யனை நாட, அவனோ அவனது புளுகு வேலைகளை எல்லாம் காட்டி நம் காரியத்தை குழப்பிவிட முயற்சிப்பான்.
இதுபற்றி நம்முடைய ஆசிரியர் திரு. வாரண்ட் பாலா அவர்கள் நூல்களில் தெளிவுபட எழுதி உள்ளார். இதையெல்லாம் அப்பள்ளிக்கு அறிவிப்பு அனுப்பியவர் படிக்கவில்லை போலுள்ளது.

ஆமாம், உண்மைக்காக இப்பொய்யன் அனுப்பியுள்ள பதிலில் இந்திய சாட்சிய சட்டப்பிரிவு 101 என்பது, ‘‘ஒருவர் சட்டப்படி நிரூபிக்க வேண்டிய சங்கதி ஆகும். ஆனால் நீங்களோ தன்னிலை விளக்கம் என்று குறிப்பிட்டுள்ளீர்கள்’’ என பதில் சொல்லி உள்ளான்.
உண்மையில், தன்னிலை விளக்கம் என்றால் உன் தரப்பு நியாயத்தை எனக்கு சொல் என்றே பொருள்!
இப்படி விளக்கப்படுவதன் அடிப்படையில் தான் ஒருவர் தனக்கு நியாயம் இருக்கிறதா என்பதை சீர்தூக்கிப் பார்த்து அதற்கென வழக்குத் தொடுக்க முடியும்.
ஒரு வழக்கில் தன் கட்சியை நிரூபிப்பதற்காக மனுதாரரும் எதிர் மனுதாரர்கள் இதைத்தான் செய்கிறார்கள்.
மொத்தத்தில் யார் எதை சொல்கிறார்களோ அதனை அவர்களே நிரூபிக்க வேண்டும் என்பதே இந்திய சாட்சிய சட்டப்பிரிவு 101 கீழான பொருளாகும்.
ஆனால் கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்களோ நாம் சொல்லும் உண்மையையும் நாம்தான் நிரூபிக்க வேண்டும்; அவன் சொல்லும் பொய்யையும் நாம்தான் நிரூபிக்க வேண்டும் என சொல்வதை நடைமுறையில் பழக்கப்படுத்தி வைத்து இருக்கிறார்கள்.
இதையெல்லாம் தன் வழக்கில் தானே வாதாடுவோரே தவிடு பொடியாக்க வேண்டும். இதற்கு சட்ட விழிப்பறிவுணர்வுடன் கூடிய சமயோசித்த புத்தியும் அவசியம்.
இதையெல்லாம் தன் வழக்கில் தானே வாதாடுவோரே தவிடு பொடியாக்க வேண்டும். இதற்கு சட்ட விழிப்பறிவுணர்வுடன் கூடிய சமயோசித்த புத்தியும் அவசியம்.
பகிர்ந்து கொள்ள
வாசகர்களின் கவனத்திற்கு...
இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.
இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.
சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.
0 comments:
Post a Comment