பொதுவாக ஆசிரியரே ஆலோசனை சொல்வதில்லை என்கிற நிலையில் நாங்களும் சொல்வதில்லை. ஆனால், இவ்வாசகர் நடுவரிடம் வாதாடி சிறைக்கு செல்லாமல் வெளியே வந்ததால், சற்று ஆலோசனைகளை சொல்லி முறைப்படுத்தலாம் என்று நினைத்ததன் விளைவு. இவர் சிறைக்கு சென்று, சட்டங்களைப் படித்தால், ஒருவேளை சரியான புரிதல் கிடைத்தாலும் கிடைக்கலாம்.
ஆமாம், ஆசிரியர் சொல்வது போலவே, சிலருக்கு ஆலோசனை சொல்லும்போதுதான் அவர்களின் சட்ட அறிவுத் திறனை அறிய முடிகிறது. இல்லையெனில், வாசகர்கள் எல்லாம் சட்டத்தில் வல்லவர்கள் என்றே குருட்டாம் போக்கில் தவறாக நினைக்க வேண்டி உள்ளது. அப்படி இவ்வாசகருக்கு சொல்லப் போய்தான் கணிக்க முடிந்தது.
வாசகர்கள் சுயமாக சிந்திக்காமல், ஈ அடிச்சான் காப்பியே அடிக்கிறார்கள் என்பதற்கு இவ்வாசகரும் நல்லதொரு உண்மை!
ஆமாம், திங்கள் அன்று ‘‘நீ நிதிபதியிடம் சொல்ல வேண்டியது நான் குற்றம் புரிந்ததற்கான முதற்கட்ட ஆதாரங்கள் இருந்தால் என்னை நீதிமன்ற காவலுக்கு தாராளமாக அனுப்புங்கள். இல்லையேல் குற்றம் புரியவில்லை என விடுவியுங்கள்.
நான் குற்றம் எதுவும் புரியாமலேயே பிணையில் செல்ல விரும்பவில்லை என்பதோடு குற்றம் புரிந்ததாக ஒப்புக்கொண்டு நீதிமன்ற காவலுக்கு ஆட்பட கையொப்பமிடவும் விரும்பவில்லை என்று குவிமுவி 2 (7) 7 இன் கீழ் பரிசீலனை மனு ஒன்றை கொடு’’ என்று சொல்லப்பட்டது.
இதில், சரியான குவிமுவி 2 (7) க்கு பதில் குவிமுவி 2 (7) 7 என தவறாக பதிவாகி விட்டது. இதெல்லாம் மிக முக்கியமான சட்ட விதிகள் என்பதால், சாதாரணமாக தெரிந்திருக்கும் என நினைத்து, தவறை சுட்டிக்காட்ட வில்லை.
ஆகையால், அப்படியே ஈ அடிச்சான் காப்பியாக குவிமுவி 2 (7) 7 இன் கீழ் மனு எழுதி அனுப்பி இருக்கார் என்றால், இவரெல்லாம் எப்படி வழக்கை சிறப்பாக நடத்துவார்? மாறாக ஏடாகூடமாக எதையாவது செய்ய, நம் வாசகர் என்ற வீண்பழி நம் சட்ட விழிப்பறிவுணர்வு மீதல்லவா விழும்??
இதுபற்றி கேட்டால், எல்லாம் அவன் செயல் தமிழ் திரைப்படத்தில், வக்கீழாக வாதாடும் வடிவேலு போல, ‘‘உங்களுக்கு தெரியாத சட்டம் ஒன்றுமில்லை; ஆகையால், எந்த சட்டம் சரியோ அதனை, நீங்களே போட்டுக்கொள்ளுங்கள் என்பாராம், நிதிபதியிடம்!’’
இதெல்லாம் நம் சட்ட விழிப்பறிவுணர்வுக்கே இழுக்கு என்பது இவ்வாசகருக்கு புரியாமல் போனது ஏனோ?!
ஆமாம், ஆசிரியரைப்போல், நாம் நீதிமன்றத்துக்கு சென்று சட்டம் பேசினால், நிதிபதிகள் அதுபற்றி தேடிப்பிடித்து படிக்க வைக்க வேண்டுமே ஒழிய, போயும் போயும் அக்கேடுகெட்ட நிதிபதிகளிடமா சட்ட விதியைக் கேட்பது... கெஞ்சுவது?
ஆசிரியர் சொல்வதுபோல, அடிப்படை சட்டங்கள் ஐந்தில் ஒன்வொன்றிலும் குறைந்தது மிக முக்கிய பத்து பிரிவுகள், விதிகள் என ஐம்பது சட்ட விதிகளை தெரிந்து வைத்திருந்தாலே, எப்படிப்பட்ட சட்டப் பிரச்சினையையும் எளிதில் சந்திக்கலாம். இவரைப் போன்ற வாசகர்கள் இதற்கே தயாரில்லை என்றால், எப்படி வாதாடி சாதிக்க முடியுமோ?
சரி, நம் மீதான புகாரின் நகல், ஆதாரச்சான்றுகளின் நகல் எதுவும் தரப்படாமல், அழைப்பாணையை மட்டும் கொடுத்தால், அதனைப் பெற்றதும், சட்டப்படி அடுத்து என்னென்ன செய்யலாம்? என்று பார்ப்போம்.
கு.வி.மு.வி 2(7) இன் கீழ் பரிசீலனை மனு ஒன்றை சம்பந்தப்பட்ட நடுவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யலாம். அந்நடுவர் யார் என்று தெரியாதபோது, மாவட்ட தலைமை குற்றவியல் நடுவரிடம் தாக்கல் செய்யலாம்.
அதில், குற்றம் சாற்றப்பட்ட ஒருவருக்கு, கு.வி.மு.வி 207 இன்படி. அனைத்து ஆவணங்களையும் தந்த பிறகுதான் நிதிபதியே விசாரிக்க முடியும் என்னும் போது, கேவலர்கள் அழைப்பாணையை மட்டும் தந்து விசாரிக்க அழைப்பது சரியல்ல. ஆகையால், என் மீது கொடுக்கப்பட்ட புகார் உள்ளிட்ட அனைத்து ஆவண ஆதாரங்களை தர உத்தரவிட வேண்டும் என்ற பரிசீலனை மனுவை தாக்கல் செய்யலாம்.
இப்படி தாக்கல் செய்தால், பொய்ப் புகாரின் பேரில் கேவலர்கள் நம்மை ஒன்றும் செய்ய முடியாமல் போய் விடும். இதையெல்லாம் இவ்வாசகர் உட்பட இதுவரை எந்த வாசகர்கரும் யோசித்து செய்யவில்லை என்பது வாசகர்களின் முட்டாள்தனமே அன்றி வேறென்ன?
என் பிரச்சினைக்கு தக்கவாறு நான் யோசித்து சட்டத்தை பயன்படுத்தினேன். அப்படியே நீங்களும் உங்களது பிரச்சினைக்கு தக்கவாறு சட்டத்தைப் பயன்படுத்துங்கள் என்று தானே, ஆசிரியர் நூல்களில் சொல்லி உள்ளார்?
அப்படியும் யோசிக்கவில்லை என்றால், மனிதனாய் பிறந்ததன் பயன்தான் என்ன... உங்களுக்கும் விலங்குக்கும் உள்ள வித்தியாசம் தான் என்ன?? என்று கேள்வி எழுப்புவதை தவிர்க்க இயலவில்லை.
சரி, இதனை இவ்வாசகர் சிந்திக்க தவறி விட்டார். இவரைப் போலவே நீங்களும் தவறி விட்டீர்கள் என வைத்துக் கொள்வோம். இது தொடர்பாகவே இனி நிதிபதியிடம் என்னென்ன கேள்விகளை கேட்கலாம் என யோசிக்க வேண்டும்.
ஆமாம், சட்ட விழிப்பறிவுணர்வுள்ள நாம் சட்டத்தை நீதிமன்றத்தில் தான் அதிகமாக பயன்படுத்த வேண்டுமே ஒழிய அதுபற்றி அறவே அறியாத முட்டாள் கேவலர்களிடம் பயன்படுத்துவது மடத்தனம் என்பதை ஆசிரியரே நூல்களில் எழுதியுள்ளதோடு அப்படித்தானே அவரும் நடந்து கொண்டுள்ளார் என்னும் போது, முட்டாள் கேவளர்களிடம் சட்டம் பேசி ஏன் நம்மை நாமே தாழ்த்திக் கொள்ளவோ அல்லது அடிபடவோ வேண்டும்?
எனவே, ‘‘கேவலர்கள் நீ தான் கொலை செய்தாய்’’ என்று ஒப்புக் கொண்டு எழுதிக்கொடு என்று கேட்டால் கூட, ‘‘ஓ, அவ்வளவுதானா...’’ என்று நகைப்பாக கேட்டு விட்டு தாராளமாக எழுதிக் கொடுக்கலாம்.
ஏனெனில், கேவலர்களின் காவலில் உள்ள ஒருவர் கொடுக்கும் வாக்குமூலம் எதுவுமே துன்புறுத்தியே வாங்கப்பட்டிருக்கும் என்று, சாட்சிய சட்டம் அனுமானிப்பதால், அது இந்திய சாட்சிய சட்ட உறுபு 26 இன்கீழ் செல்லாது என்பதை தன் அனுபவமாகவே ஆசிரியர் நூல்களில் பதிவு செய்துள்ளாரே!
நியாயந்தான் சட்டம்! என்று ஆசிரியர் முன் மொழிந்துள்ள தத்துவத்திற்கு இணங்கவே இப்படி யெல்லாம் சட்டம் நியாயமாக இருக்கும் போது, நாம் எதற்கு வீணாக கவலைப்படனும்?
ஆகையால், இனி ஒரு குற்றம் சுமத்திப்பட்ட நபராக இருக்கும்போது, கேவலர்கள் என்ன கேட்டாலும், அது காவல்துறையின் எந்த உயர்மட்ட கேவலராக இருந்தாலம் சரி... தாராளமாக எழுதிக் கொடுக்கலாம்.
ஆனால், இதையே ஒரு நிதிபதியிடம் எழுதிக் கொடுத்தால், அப்படியே செல்லுபடியாகும். ஆகையால், அதற்கான தண்டனையும் உறுதி! என்பது நினைவிருக்கட்டும்.
நாம் சட்டப்படி இப்படியெல்லாம் எழுதி வாங்கக் கூடாது; அப்படி வாங்கினாலும் செல்லாது என்று தெரியாத மடையர்களே கேவலர்கள் என்றால், உள்ளதை உள்ளபடி சொல்வது அவதூறு ஆகாது என்ற சட்டக் கருத்துக்கு இணங்க சட்டப்படியே இவர்களை கேவலர்கள் என்று விமர்சிக்காமல் வேறென்ன சொல்வது?
சரி, இனி நிதிபதியிடம் என்னென்ன கேள்விகளை சட்டப் பிரச்சினைகளாகவே எழுப்பலாம் என பார்ப்போம்.
என்னை கைது செய்து உங்களிடம் கொண்டு வந்த போதும் என்னை நீதிமன்ற காவலுக்கு ஆட்படுத்தும் அளவிற்கு மகஜர் சரியாக இல்லை; சட்டப் பிரிவுகளும் சரியில்லை என்று நீங்களே என்னை விடுவித்து உள்ள நிலையில் அவர்கள் என்னை கைது செய்தது மட்டும் எப்படி சரியாகும்?
கேவலர்கள் சமர்ப்பித்த ஆதாரங்கள் சட்டப்படி சரியில்லாதவை என தெரிந்தப்பின், கு.வி.மு.வி 167 இன்படி என் மீதான குற்றச் சாற்றுக்கு ஆதாரமில்லை என்று முற்றிலுமாக விடுவித்திருக்க வேண்டுமே ஒழிய, கேவலர்களின் சட்டக் குளறுபடிகளை சரி செய்து தருமாறும், என்னை இரு நபர் பிணையில் செல்லுமாறும் சொல்லியது எந்த சட்ட விதிப்படி சரியாகும்?
கேவலரின் அழைப்பாணையின்படி, சட்ட விரோதமாக விசாரணைக்கு செல்லவில்லை என்றால் கூட, அதற்காக இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 174 இன்படி, கைது செய்ய முடியாத அக்குற்றத்துக்கு சட்ட நடவடிக்கை எடுக்க முடியுமே தவிர, அக்கேவலரே கைது செய்ய முடியுமா?
என் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாற்றுக்கு சரியான ஆதாரங்கள் இருந்து, கைது செய்யத் தகுந்தது என்றால், முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்து என்னை நேரடியாக கைது செய்யாமல், புகார் என்ன என்பதை தெரிவிக்காமல் அழைப்பாணையை மட்டும் கொடுத்து விசாரணைக்கு அழைத்தது எந்த சட்ட விதிப்படி சரியாகும்?
இந்த விசாரணைக்கு நான் செல்லாமல் ஒத்துழைக்க மறுத்தது எந்த சட்ட விதிப்படி, பலவந்தமாக கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு நிறுத்த தக்க குற்றமாகும்?
ஏழு வருடத்துக்குள் சிறை தண்டனை விதிக்கத்தக்க குற்றத்துக்கு கைது செய்வதை தவிர்க்க வேண்டும் சட்ட விதி இருக்கும்போது, என்னை கைது செய்தது எப்படி சரியாகும்?
கேவலர்களின் அழைப்பாணையைப் பெற்றதும், அது குறித்து நான் உங்களுக்கு எழுதி அனுப்பிய கடிதத்தின் மீது நீங்கள் எடுத்த சட்ட நடவடிக்கை என்ன?
சட்டப்பூர்வ நடவடிக்கையை எடுத்திருக்க வேண்டிய நீங்கள் நடவடிக்கை எடுக்காததால்தானே என்னை, சட்ட விரோதமாக கைது செய்து, உங்களிடமே நீதிமன்ற காவலுக்கு கொண்டு வந்திருக்கிறார்கள்?
இதற்கு சட்டப்படி யார் பொறுப்பு, நிதிபதியாகிய நீங்களா அல்லது கேவலர்களா?
என்பன போன்று பல்வேறு கேள்விகளை எல்லாம் ஆசிரியரைப் போலவே கு.வி.மு.வி 2(7) மற்றும் 395 இன்கீழ், சட்டப் பிரச்சினையை எழுப்பி உயர்நீதிமன்றத்துக்கு அனுப்பி கருத்தை கேட்டு முடிவெடுக்கும் வரை தன்னை நீதிமன்ற காவலில் வைக்கும்படியும், சட்டத்துக்கு விரோதமாக நான் பிணையில் செல்ல இயலாது என்றும் துணிந்து சொல்லலாம்.
நான் ஏழுப்பியள்ள கேள்விகள் எல்லாம் சட்ட விதிப்படி சரியே என என்னை விடுவித்தால், கு.வி.மு.வி 340 இன்படி, என் மீது பொய் வழக்குப் போட்டு, நீதி நிர்வாகத்தைப் பாதிக்கச் செய்த கேவலர்கள் மீது சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் சொல்லலாம்.
இப்படி சொன்னாலே, வழக்குப் பதிவு செய்த கேவலர்களுக்கும், நடுவருக்கும் பீதியில் பேதியாகி விடும். இதெல்லாம் ஒன்றும் புதிதல்ல; ஏற்கெனவே நம் ஆசிரியர் திரு. வாரண்ட் பாலா அவர்கள் நூல்களில், தன் அனுபவமாகவே சொல்லி உள்ளது தான்.
அதை ‘‘அப்படியே ஈ அடிச்சான் காப்பியடிக்க முடியவில்லை என்று சொல்லும் இவரைப் போன்ற வாசகர்களுக்கு, இதையாவது ஈ அடிச்சான் காப்பியடிக்க முடிகிறதா?’’ என்று பார்ப்போம் என்பதை தவிர வேறென்ன சொல்ல முடியும்?
குறிப்பு: இதுபோன்ற கேவலர்கள் மீது, வாசகர்கள் மனித உரிமை சட்டப்பிரிவு 30 இன்கீழ், மாவட்ட அமர்வு நீதிமன்றங்களில் குற்றவியல் வழக்கை தொடுத்து, குற்றத்தை நிரூபித்து சிறையில் தள்ளி வேலையை காலி செய்ய வேண்டும்; வெளியில் வந்ததும் பிச்சை எடுக்க வைக்க வேண்டும்.
மிக முக்கிய குறிப்பு: இந்த கட்டுரையை எழுதி வெளியிட்டு படித்தப் பிறகு, இவ்வாசகர் தனது தரப்பை விளக்கும் பொருட்டு மூன்று ஆடியோக்களை அனுப்பி இருந்தார்.
அதில் இவர் கொடுத்த பணத்தை வாங்குவது தொடர்பாக ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்று பேசுகிறார். அடிப்படை சட்ட அறிவில்லாத இவர் அவர்களிடம் தன்னை சட்ட ஆராய்ச்சியாளர் என்று வேறு இரண்டு மூன்று இடங்களில் சொல்லிக் கொள்கிறார்.
ஏற்கெனவே நம் இருபாலின வாசகத் தறுதலைகள் சிலர் சட்ட ஆராய்ச்சியாளர்கள் என்று சொல்லிக் கொண்டு, பொய்யர்களுக்கு வழக்குப் பிடித்து தரும் புரோக்கர்களாகவும், பொய்யர்களின் கமிஷனுக்கு விற்றுத் தரும் விற்பனையார்களாகவும்..,
பிரச்சினைக்கு உரிய சொத்தை எனது பெயருக்கு எழுதி கொடு. அச்சொத்துப் பிரச்சினையை தீர்த்து தருகிறேன் என்றும் கூறி, அச்சொத்தை அபகரிக்க அவர்களை அடித்து உதைப்பவர்களாகவும், நிலத்தைப் பறிக்க பொய்யர்களை கொண்டு வழக்கு நடத்தும் கயவர்களாகவும்..,
சட்டத்துக்குப் புறம்பாக செயல்பட்டு சிக்கும் அய்யோக்கிய அரசூழியர்களை கொண்டு தங்களுக்கு தேவையான காரியங்களை சட்ட விரோதமாக செய்துக் கொள்ளும் கூட்டுக்களவாணிகளாகவும்..,
ஆலோசனை கேட்டு நாடும் ஆதரவற்ற இளம் பெண்களை வைத்து குடும்பம் நடத்தி விட்டு, பின் கருக்கலைப்பு செய்து கைவிட்டு விடும், மீறினால் மிரட்டல் விடுக்கும் கூட்டுக் களவாணிகளாகவும்..,
சிறைக்கு சென்றால் கூட, அங்குள்ள கைதிகளை நட்பு பிடித்து வெளியில் வந்தப்பின், அவர்களது வசிப்பிடம் சென்று, அவர்களது உறவினர்களிடம் சட்ட ஆராய்ச்சியாளராக சிறைக்கு சென்றிருந்தது போது விபரம் அறிந்ததாகவும், உதவுவதாகவும் கூறி பணப் பறிப்பு, பொருள் அபகரிப்பு ஆகிய வேலைகளில் ஈடுபடுகிறார்கள். இதனை தேனி மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண் வாசகியே செய்தாள்.
ஆகையால், ஆசிரியரைப் போல, வேறு யாராவது சட்ட ஆராய்ச்சியாளர்கள் என்று சொல்லிக் கொண்டால், அவர்களிடம் மிகுந்த எச்சரிக்கையாக இருங்கள்; ஏமாந்தப் பின் புலம்பிப் பயனில்லை என்பதை, நம் ஆசிரியரே, ‘‘மநு வரையுங்கலை!’’ நூலில் எழுதி எச்சரித்து உள்ளார் என்பதையும் நினைவு படுத்திக் கொள்ளுங்கள்.
ஆமாம், அரைகுறை ஊழியர்கள், அரசூழியர்கள் கேவலர்கள், வக்கீழ்கள், நிதிபதிகள் போலவே நம் வாசகர்களைப் பற்றியும் எடுத்துரைத்து எச்சரிக்க வேண்டியதும் கடமையே என்பதால்தான், ஆசிரியர் நூல்களிலேயே எச்சரித்து உள்ளார். அப்படியே இங்கும் எச்சரிக்கப்படுகிறது.
இறுதியாக நம் வாசகர்கள் என்று நம்பி, நீங்கள் யாரிடமாவது ஏமாந்தால், உறுதியாக அதற்கு ஆசிரியரோ அல்லது நாங்களோ எவ்விதத்திலும் பொறுப்பல்ல!
பிற்சேர்க்கை நாள் 03-07-2019
குற்ற விசாரணை முறை விதி 167(2) இன்படி, ஒருவரை கைது செய்த கேவலர்கள், அவரை நீதிமன்ற காவலில் அடைப்பதற்காக நிதிபதியின் முன் முன்னிலைப் படுத்தும்போது, அந்த நபர் குற்றம் புரிந்ததற்கான போதிய முகாந்திரம் இருந்தால் மட்டுமே அதனை ஏற்று நீதிமன்ற காவலில் வைக்க கையெழுத்திட வேண்டும். இல்லையேல், மேலே நம் வாசகரை விட்டது போல அங்கேயே விட்டுவிட வேண்டும்.
மேலும், இன்ன காரணத்துக்காகவே சிறையில் வைக்க கையெழுத்திட்டு உள்ளேன் என்பதை, அந்த நபருக்கும் தெரிவிக்கும் விதமாக, அவரின் கையொப்பத்தையும் கட்டாயம் பெற வேண்டும். ஆனால், பெரும்பாழான மட நிதிபதிகளுக்கு இப்படி பெற வேண்டும் என்பதே கூட தெரிவதில்லை.
ஆகையால், போதிய சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்று நீங்களே எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
இல்லையெனில், புகார் கொடுத்தவரை கூட, சிறையில் அடைக்க வேண்டிய குற்றம் புரிந்த கைதி என நினைத்து சிறையில் வைத்து விடுவார்கள், மட நிதிபதிகள்! இப்படிப்பட்ட கூத்துக் கொடுமைகள் எல்லாம் நம் முட்டாள் நிதிபதிகளால் அரங்கேற்றப்பட்டு உள்ளதையும் பாருங்கள்!!
வாசகர்களின் கவனத்திற்கு...
இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.
இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.
சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.