இயற்கை பெண்ணுக்கு தந்துள்ள இயல்பு, ‘‘அன்பு’’.
ஆணுக்கு தந்துள்ள இயல்பு ‘‘அறிவு’’
இவ்விரண்டு இயல்பும் தனித்து இல்லாத அல்லது இடம் மாறி இருக்கும் குடும்பம், ‘‘பாழ்!’’
ஆணுக்கு அறிவில்லை என்றால் கூட, பிரச்சினையில்லை. இன்னும் சொல்லப்போனால், அறிவுள்ளவனால்தான் அனைத்துப் பிரச்சினையும்.
ஆமாம், அறிவில்லை என்பதைத் தவிர, அவனால் வேறு எந்தப் பிரச்சினையும் அவனுக்கும், அடுத்தவனுக்கும் இல்லவே இல்லை. அப்படியானால், அவனால் குடும்பத்தில் என்ன பிரச்சினை இருக்க முடியும்?
இங்குதான், வான்டேடா வருகிறது பணம்.
பணம் இருக்கும் இடத்தில் அன்புக்கு மாறாக பாழ்படுத்தும் விரோதமே குடிக்கொண்டு இருக்கிறது. இது உயிர் உறவுகளைக் கொலையும் செய்யத் தூண்டுகிறது.
ஆகவே, குடும்பப் பிரச்சினைக்கு பணம் என்பது பற்றாக்குறையாக பத்தில் ஒரு பகுதி வேண்டுமானால் காரணமாக இருக்கலாமே ஒழிய, ஒருபோதும் முழுக் காரணமாக இருக்கவே முடியாது.
அறிவில்லாத ஆணிடம் நிச்சயம் மாற்றுத் திறனாக அன்பிருக்கும். உண்மையில் இது குடும்பத்தில் குறைந்தது இரட்டிப்பு மகிழ்ச்சிக்கேனும் வித்திட வேண்டும். இப்படி மகிழ்ச்சி கூடுமிடத்தில், மன்னிப்புக்கும் வரலாறு இருக்காது.
ஆகவே, அறிவை வளர்த்து வீண் சண்டையிட்டு பாழாவதை விட, அன்பை வளர்த்து அறவழி காட்டும் நெறியில் பிறவிப் பேற்றைப் பெறுங்கள்.
இந்த இயற்கை மற்றும் எதார்த்த இயல்புகளை மனதில் கொண்டு கணவனிடம் அன்பாக இருங்கள் என்று சொன்னால் கூட, ‘‘அது ஆணாதிக்கம், ஆணாதிக்கத் திமிர், பெண்ணடிமைத்தனம், மனித உரிமை மீறல் மற்றும் குடும்ப வன்முறை என்று சொல்லி விடுவார்கள் போலிருக்கிறது!’’
ஆணுக்கு சொல்லலாம் என்றால், அன்பு அவர்களது இயல்பில்லையே! பின் யாருக்கு என்னத்த எடுத்துச் சொல்லி நம் குடும்பங்களை எப்படி வாழ வைப்பது?!
இதனை அவரவர்களும் புரிந்துக் கொண்டு, தங்களின் வாழ்க்கையை வாழ்ந்து வளமாக்கிக் கொண்டு வாரிசுகளுக்கு வழிகாட்டினால்தான் உண்டு!!
இல்லையேல், இப்போதுள்ள சமுதாயம் கூட, எதிர்க் காலத்தில் இல்லை என்ற நிலைக்கு நம்மிடம் பழகி, பழக்கி, பாழாக்கி விடும். எச்சரிக்கை!
பகிர்ந்து கொள்ள
வாசகர்களின் கவனத்திற்கு...
இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.
இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.
சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.
யோசிக்க வேண்டிய பதிவு.
ReplyDelete