நாம் சட்டப்படிதான் வாழ்கிறோம். ஆனால், சட்டம் தெரியாமல் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம் என்ற நம் ஆசிரியரின் கூற்றுக்கு ஏற்ப சாதாரணமாக நம் வாழ்க்கை நடைமுறையில் உள்ள வார்த்தைப் பிரயோகங்களுக்கும், சட்டப் பிரயோகங்களுக்கும் சற்றே வித்தியாசம்தான் இருக்கும். இதுபற்றி நம் ஆசிரியர் நூல்களில் தெளிவாக குறிப்பிட்டு உள்ளார்.
நமக்கு தெரிந்த அன்பர்கள், அவர்களது சுப நிகழ்வுகளுக்கு அழைப்பதாக இருந்தால், நமக்கு அதற்கான அழைப்பிதழைக் கொடுப்பார்கள் அல்லவா? அதுபோல, எந்தவொரு சட்டப் பிரச்சினைகளுக்காக உங்களை சட்டப்படி விசாரிக்க வேண்டி இருந்தாலும், அதற்கான சட்டப்படியான அழைப்பாணையை உங்களுக்கு தரவேண்டும்.
அன்பர் உங்களது இருப்பிடம் தேடி வந்து அழைப்பிதழ் தராமல் நீங்கள் அவர்களது சுப நிகழ்வுகளுக்கு போக மாட்டீர்கள் அல்லவா? அதுபோலவே, சட்டப் பிரச்சினைகளை விசாரிப்பதற்காக, சம்பந்தப்பட்ட எவரும் உங்களைத்தேடி வந்துதான் அழைப்பாணையை கொடுக்க வேண்டுமே தவிர, ‘‘வந்து வாங்கிச் செல்’’ என்று, சட்ட விதிப்படி நீதிமன்றமே கூட சொல்ல முடியாது.
ஆமாம், உங்களின் மீது ஒரு குற்றவியல் வழக்கு காவலூழியர்களால் பதியப்படுகிறது. அதன் பேரில் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்படுகிறது. அதன் பேரில் வழக்கை சந்திக்க நீதிமன்றம் உங்களுக்கு காவலூழியர்களின் மூலம் அழைப்பாணை அனுப்புகிறது.
இதனை அக்காவலூழியர்கள் உங்கள் வீடு தேடி வந்து தரவேண்டுமே ஒழிய, நீங்கள் குற்றம் சாற்றப்பட்டவர் என்பதாலேயே, கு.வி.மு.வி 62 இன்படி வேறு எங்கு சென்றும் வாங்க வேண்டியதில்லை.
ஆமாம், கு.வி.மு.வி 62(2) இல், அழைக்கப்பட்டவரிடம் என்பதற்கு, ‘‘அழைப்பாணையை யாருக்கு கொடுக்க வேண்டுமோ அவருக்கு என்றுதான் அர்த்தமாகுமே’’ தவிர, அவரை வரவழைத்து தரவேண்டுமென்று அர்த்தம் அல்ல.
அவர்கள் அழைப்பாணையை கொண்டு வரும் நேரத்தில் நீங்கள் இல்லாது போனால், உங்களது நெருங்கிய உறவுகள் உள்ளிட்டவர்களிடம் கூட கொடுக்கலாம். அலுவலகம் என்றால் அலுவலகத்திலும் கொடுக்கலாம்.
ஆனால், இயன்ற வரை சம்பந்தப்பட்ட நபரிடம் நேரடியாகவே சார்வு செய்ய வேண்டும். அவர்கள் வழங்குவதை தவிர்க்கும் முயற்சியில், நீங்கள் ஈடுபட்டால் வேறு வழிமுறைகளில் சார்பு செய்ய விரிவான சட்ட விதிகள் உண்டு.
ஆமாம், கொடுப்பது, வழங்குவது என்பது சாதாரண வழக்கத்தில் உள்ள சொல். ‘‘சார்வு செய்தல் என்றால் சட்டப்படியான சொல். இதனை வழக்கத்தில் சார்பு என்றும் சொல்கிறார்கள்’’. இதெல்லாம் பொதுவாக அழைப்பாணையை சார்வு செய்யும் முறை.
இதில், குற்றவியல் வழக்குகளில் காவலூழிர்கள், நிதிபதிகள் விசாரணைக்கு அழைப்பது எப்படி, உரிமையியல் சம்பந்தமான வழக்குகளில் விசாரணைக்கு அழைப்பது எப்படி என்று விரிவாக அது அதற்குறிய சட்ட விதிகளில் உள்ளதை படித்துக் கொள்ள வேண்டும்.
இதில், அவர்களது விசாரணைக்கு உதவி புரிவதற்காக உங்களை சாட்சியாக விசாரணைக்கு அழைத்தால், இந்த தேதியில், இத்தனை மணிக்கு வரவேண்டுமென குறிப்பிட்டு அழைக்கவே முடியாது. ஏனெனில், உதவி செய்வதற்கு உங்களது விருப்பப்படி ஓய்வு நேரத்தில் மட்டும் செல்லும் உரிமையும், அதற்கான செலவுத் தொகையையும் பெறும் உரிமையும் சட்ட விதிப்படி உண்டு.
இப்படி அழைக்கும்போது மட்டும், நேரில் அழைப்பாணையை தருவதோடு, கூடுதலாக பதிவஞ்சல் மூலமாகவும் அனுப்பலாம் என கு.வி.மு.வி 69 அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
ஏன் இப்படியொரு விதியை வைத்துள்ளார்கள் என்று ஆராய்ந்தால், காவலூழியர்கள் அழைப்பாணையை சாட்சிக்கு கொடுக்காமல், களவாணித்தனம் செய்து விட வாய்ப்புண்டு என்பதோடு, சாட்சியின் முக்கியத்துவமும் உணர்த்தப்பட்டு உள்ளது.
மொத்தத்தில், நீங்கள் யாராக இருந்தாலும், உங்களுக்கான எந்தவொரு அழைப்பாணையாக இருந்தாலும், அவர்கள் ஏதோவொரு வழியில் உங்களைத் தேடிவந்து கொடுக்க, நீங்கள் வாங்க வேண்டுமே அன்றி, நீங்களாக சென்று வாங்க வேண்டிய அவசியம் சட்ட விதிப்படி இல்லை.
இதேபோல கொடுக்கும் அழைப்பாணை உள்ளிட்ட எதையுமே வாங்க மறுக்கக்கூடாது. அப்படி மறுத்தால், அது சட்டப்படி சிறை தண்டனை விதிக்கத்தக்க குற்றம்.
ஆகையால், சட்ட விரோதம் என்று நிரூபிக்க முடியும் என்று நினைக்கிற காகிதத் தகவல் எதையும் முதலில் படித்துப் பார்த்து ஆட்சேபனையுடன் பெற்றுக் கொள்வதாக எழுதி கையொப்பமிட வேண்டும்.
இதனை, குற்றவாளி என அறிவிக்கப்பட்ட தவறான தண்டனை தீர்ப்புரையை பெறுபவர்களும் எழுதலாம். நம் ஆசிரியர் இப்படியெல்லாம் ஆட்சேபனையை எழுதி, நிதிபதிகளையே அலற விட்டுள்ளதை அவரது நூல்களில் பதிவு செய்துள்ளார். தேவை இருப்பின் படித்துக் கொள்ளவும்.
ஒருவேளை நீங்கள் கைது செய்யப்பட்ட போது இருந்த முகவரியில் இருந்து, வேறு முகவரிக்கு மாறி இருந்தால், கேவலர்கள் அழைப்பாணையை சார்வு செய்வதற்கு ஏதுவாக, அதுபற்றிய தகவலை சம்பந்தப்பட்ட கேவலர்களுக்கு சட்டப்படி பதிவு அஞ்சலில் தெரிவித்து விட்டு, அதன் நகலை கைது செய்தபோது எந்த நிதிபதியிடம் முன்னிலைப்படுத்தி நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்களோ அந்த நிதிபதிக்கும் போட்டு விடவும்.
இதுபற்றி தெரியாதபோது, மாவட்ட நிதிபதிக்கு அனுப்பியும் அனுப்பி வைக்க சொல்லலாம். மாவட்ட நிதிபதிகளுக்கான் மின்னஞ்சல் மற்றும் தொடர்பு எண்கள் Ecourt இணையப்பக்கத்தில் கிடைக்கும்.
இல்லையேல், நீங்களே வாதாடுவதை தடுக்கும் ஒரு முயற்சியாக, குற்றம் சாற்றப்பட்டவர்கள் தலைமறைவு என எதையாவது எழுதி, ஏடாகூடமாக எதையாவது செய்யவும் வாய்ப்புண்டு.
ஒருவேளை நீங்கள் கைது செய்யப்பட்ட போது இருந்த முகவரியில் இருந்து, வேறு முகவரிக்கு மாறி இருந்தால், கேவலர்கள் அழைப்பாணையை சார்வு செய்வதற்கு ஏதுவாக, அதுபற்றிய தகவலை சம்பந்தப்பட்ட கேவலர்களுக்கு சட்டப்படி பதிவு அஞ்சலில் தெரிவித்து விட்டு, அதன் நகலை கைது செய்தபோது எந்த நிதிபதியிடம் முன்னிலைப்படுத்தி நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்களோ அந்த நிதிபதிக்கும் போட்டு விடவும்.
இதுபற்றி தெரியாதபோது, மாவட்ட நிதிபதிக்கு அனுப்பியும் அனுப்பி வைக்க சொல்லலாம். மாவட்ட நிதிபதிகளுக்கான் மின்னஞ்சல் மற்றும் தொடர்பு எண்கள் Ecourt இணையப்பக்கத்தில் கிடைக்கும்.
இல்லையேல், நீங்களே வாதாடுவதை தடுக்கும் ஒரு முயற்சியாக, குற்றம் சாற்றப்பட்டவர்கள் தலைமறைவு என எதையாவது எழுதி, ஏடாகூடமாக எதையாவது செய்யவும் வாய்ப்புண்டு.
அழைப்பாணை எதுவும் தராமல், விசாரணைக்கு என வலுக்கட்டாயமாக அழைத்து சென்றால், அதற்கு கைது என்றே முதலில் பொருள் கொள்ள வேண்டும்.
அதன் பின்னர் கைது செய்யவில்லை என்று விடுவித்தால், அழைப்பாணை வழங்காமல் வலுக் கட்டாயமாக அழைத்து சென்றதற்கு, அக்காவலூழியர் மீது குற்றவியல் உள்ளிட்ட மனித உரிமை மீறல் நடவடிக்கையை எடுக்க முடியும்.
சமுதாயத்தில் கெளரவம் மிக்க நபர்களை விசாரணைக்கு அழைக்க வேண்டி இருந்தால், அவர்களுக்கு அழைப்பாணை அனுப்புவதற்கு பதில், கடிதமாக அனுப்பலாம் அல்லது அவர்களை நேரில் சென்று விசாரித்து வர ஆட்களை அனுப்பலாம்.
பகிர்ந்து கொள்ள
வாசகர்களின் கவனத்திற்கு...
இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.
இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.
சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.
0 comments:
Post a Comment