No law no life. Know law, know life! நியாயந்தான் சட்டம்! அதற்கு தேவையில்லை வக்கீழ் பட்டம். வக்கீழ் என்றாலே, கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்களே! இடைத்தரகர்களே!! நீ வாழ, நீயே வாதாடு!

நீ வாழ... நீயே வாதாடு... வரவேற்பு வாழ்த்து!

No law, no life. Know law, know life! என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியத்தை உணர்ந்து, ‘‘நீதியைத்தேடி... சட்டப் பல்கலைக் கழகத்திற்கு’’ வருகை தந்துள்ள உங்களை வருக என வரவேற்று, உங்களுக்கான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்று பயனைப் பெறுக என வாழ்த்துகிறோம்!
முக்கிய அறிவிப்பு : இந்த இணையப்பக்கத்தை புதுப்பிக்கும் பணி நடந்துக் கொண்டிருப்பதால், சில பதிவுகள் அல்லது இணைப்புக்கள் கிடைக்காமல் போகலாம்!

Tuesday, May 14, 2019

இனி தமிழில் தட்டச்சு மிக எளிது!அதிசயம். ஆனால் உண்மை! ஆமாம், நாம் தமிழில் சொல்வதை, அப்படியே தட்டச்சு செய்து தரும் தகவல் தொழில் நுட்பம்!!

தகவல் தொழில் நுட்பம் எவ்வளவோ வளர்ந்து இருந்தாலுங்கூட, பலரும் அதைப்பற்றிய அறியாமையில் தான் இருக்கின்றனர்.

இந்த வகையில் தமிழில் நாம் பேசுவது, அப்படியே தமிழில் தட்டச்சு ஆகுமாறு மென்பொருள் ஒன்றை ஆன்ராய்டு உலாப்பேசிக்கு வடிவமைத்து தந்திருக்கிறார்கள், கூகுள் நிறுவனத்தினர்.

ஆமாம், இதற்கு இந்தப் படத்தில் உள்ளபடி, கூகுள் பிரே ஸ்டோருக்கு சென்று ஜிபோர்டை நிறுவிக் கொள்ள வேண்டும். இதற்கு சுமார் 35 எம்.பி இடம் தேவைப்படும்.


பின், கீபோர்டு செட்டிங் சென்று, நிறுவிய ஜி போர்டை ஆக்டிவேட் செய்துக் கொண்டால், கீழ்கண்டவாறு தமிழில் ஜி கீபோர்டு தோன்றும். இதை இடதுபுறம் மஞ்சள் நிற வட்டத்தில் உள்ள ஜி உறுதிப்படுத்தும்.


இப்போது, வலது புறம் மஞ்சள் வட்டமிட்டு காட்டியுள்ள மைக்கை தொட்டால் ஆன் ஆகி விடும். வாய்க்கு சற்று அருகில் பிடித்து எழுத வேண்டிய எண்ணத்தை சொன்னால், அது அப்படியே மிக அழகாக தமிழில் தட்டச்சு ஆகும். 

ஒருவேளை ஒலிப்பேழையாக (ஆடியோவாக) அனுப்ப நினைத்தால், வலது புறம் மஞ்சள் வட்டமிட்டு காட்டியுள்ள மைக்கிற்கு மேலுள்ள மைக்கை, பேசி முடிக்கும் வரை அழுத்திப் பிடித்துக் கொள்ள வேண்டும்.  

இவை இரண்டுக்குமே இணைய இணைப்பில் (ஆன்லைனில்) இருப்பது மிகமிக முக்கியம். இணைய இணைப்பில் வேகம் குறைவாக இருந்தாலும் தட்டச்சு ஆகாது அல்லது ஆக காலதாமதம் ஆகும்.

ஒருவேளை ஜி கீபோர்டை ஆங்கிலத்தில் வைத்துக் கொண்டு தமிழில் பேசினால், அது அப்படியே அரையும், குறையுமாக பிழையுடன் தமிங்கிலத்தில் தட்டச்சு ஆகும்.

வார்த்தையின் உச்சரிப்பு மற்றும் அக்கம் பக்கத்தில் இருக்கும் சப்தம் ஆகியவற்றைப் பொறுத்து, சில எழுத்துப் பிழைகள் வரலாம். அவற்றை நாம் கையால்,  மிக எளிதாக திருத்திக் கொள்ளலாம்.

மேலும், தமிழில் இல்லாத, ஆனால் நாம் தேவைக்கு ஏற்ப உருவாக்கிப் பயன்படுத்தும் கேவலர்கள், வக்கீழ்கள், நிதிபதிகள் உள்ளிட்ட வார்த்தைகள் எப்படிச் சொன்னாலும் வரவே வராது.

ஆமாம், இப்படி நாம் உருவாக்கும் வார்த்தைகளும் ஒருநாள் தமிழ் அகராதியில் சேரும். அதுவரை நாம்தான் கையால் திருத்திக் கொள்ள வேண்டும்.

மேலும், இதனை மின்னஞ்சல், டெலிகிராம் என நாம் உலாப்பேசியில் பயன்படுத்தும் அத்தனை வசதியிலும் மிகவும் வசதியாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

எழுதுவதற்கு ஆகும் நேரத்தை விட, பேசுவதற்கு ஆகும் நேரம் மிகவும் குறைவு என்பதால், நமக்கு அதிகமான நேரம் மிச்சம்.

வம்பு, வழக்கு உள்ள வாசகர்கள் அதற்கான மனுக்களை வெளியில் தட்டச்சு செய்வதில், பொருளாதாரம், வெளியில் சொல்ல முடியாத வார்த்தைகள், வாழ்க்கை இரகசியங்கள் என பல்வேறு சங்கடங்கள் இருக்கும். 

சமயத்தில் தட்டச்சு நிலையங்களில், நாம் யாருக்கு எதிராக என்ன தட்டச்சு செய்தோம் என்ற தகவல் சம்பந்தப்பட்டவர்களுக்கு எளிதில் சென்று விடும்.

இவர்களுக்கெல்லாம் இந்த மென்பொருள் வரப்பிரசாதம். குறிப்பாக பிரச்சினையில் உள்ள பெண்களுக்கு.

ஆமாம், நம்முடைய பிரச்சினைக்கு தீர்வாக என்னென்ன எண்ணங்கள் தோன்றுகிறேதோ அதை அவ்வப்போது மின்னஞ்சல் உள்ளிட்ட ஏதோ ஒன்றில், தட்டச்சு செய்து வைத்துக் கொண்டு, தேவைப்படும் போது எளிதாக திருத்தி மாற்றி அமைத்துக் கொண்டு, பின் பிரிண்ட் எடுத்துக் கொள்ளலாம். 

அடுத்தடுத்த நடவடிக்கைகளுக்கு தேவையான சங்கதிகளையும் மிக எளிதாக எடுத்துக் கொள்ளலாம். 

இது ஒரு சிறிய அறிமுகம் மட்டுமே. இதில் நான் சொல்லாத மேலும் பல செயல்களை இருக்கின்றன. அவற்றையும் தேவைக்கு ஏற்ப பயன்படுத்திக் கொள்ளலாம்.  

இப்படி, கணினி, மடிக்கணினி உள்ளிட்ட எதுவுமே இல்லாமல் பயன்படுத்த வேண்டிய விதத்தில் பயன்படுத்தி பல நன்மைகளை அடையலாம்.

ஆமாம், இனி வருங்காலங்களில், இதனை நூல் எழுதவே பயன்படுத்தலாமே என்று, நாங்கள் சிந்தித்து உள்ளதோடு, சிலருக்கு சிபாரிசும் செய்துள்ளோம். இப்போது உங்களுக்கும்!

நாங்கள் எப்படி எந்த நேரத்திலும், உடனுக்குடன் தமிழில் பதில் அனுப்புகிறோம் என்பதற்கான இரகசியம், இப்போது புரிந்ததா?!பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

1 comment:

  1. ஓ இதனால் தான் ஸ்பீடாக தமிழில் எழுதுகிர்களா .அருமை. நானும் இன்ஸ்டால் பண்ணிக்கிறேன் .இப்போவே.

    ReplyDelete

பத்திரிகை செய்திகள்

அறவழி நோட்டா

அறவழி நோட்டா
மகாத்மா போதித்த வாக்குரிமை!

நோட்டா: NOTA

நோட்டா: NOTA
விளக்கம்: EXPLANATION

நூல்களின் முகப்பு

Followers

முக்கியப் பக்கங்கள்

அடிப்படை சட்டங்கள்

  • 1. இந்திய சாசனம் 1950
  • 2. நீதிமன்ற சாசனம் 1872
  • 3. இந்திய தண்டனை சட்டம் 1860
  • 4. குற்ற விசாரணை முறை விதிகள் 1973
  • 5. உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908

நம் நூல்களைப் பற்றி

நீதியைத்தேடி.... நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் வரிசையில்...
1 குற்ற விசாரணைகள்
2 பிணை (ஜாமீன்) எடுப்பது
எப்படி?
3 சட்ட அறிவுக்களஞ்சியம்
4 சட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்
5 சாட்சியங்களைச் சேகரிப்பது
எப்படி?
6 கடமையைச் செய்!
பலன் கிடைக்கும்
7 மநு வரையுங்கலை!Recent Posts Widget

இந்நூல்கள் அனைத்தும் உங்களின் சட்ட விழிப்பறிவுணர்வுக்காக
மத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவியோடு
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பொது நூலகங்கள், மத்திய சிறைச்சாலைகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

சொந்தமாக தேவைப்படுவோர், உ(ய)ரிய நன்கொடையைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு வாட்ஸ்அப் எண் 09842909190 ஆகும்.

எல்லாப் பதிவுகளும்!

நம் தள வகைகள்

பயின்றோர் (20-08-16)