No law no life. Know law, know life! நியாயந்தான் சட்டம்! அதற்கு தேவையில்லை வக்கீழ் பட்டம். வக்கீழ் என்றாலே, கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்களே! இடைத்தரகர்களே!! நீ வாழ, நீயே வாதாடு!

நீ வாழ... நீயே வாதாடு... வரவேற்பு வாழ்த்து!

No law, no life. Know law, know life! என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியத்தை உணர்ந்து, ‘‘நீதியைத்தேடி... சட்டப் பல்கலைக் கழகத்திற்கு’’ வருகை தந்துள்ள உங்களை வருக என வரவேற்று, உங்களுக்கான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்று பயனைப் பெறுக என வாழ்த்துகிறோம்!
முக்கிய அறிவிப்பு : இந்த இணையப்பக்கத்தை புதுப்பிக்கும் பணி நடந்துக் கொண்டிருப்பதால், சில பதிவுகள் அல்லது இணைப்புக்கள் கிடைக்காமல் போகலாம்!

Tuesday, May 7, 2019

பொதுமக்களுக்கு சொல்லப்பட வேண்டிய சொத்துரிமைகள்!நம் சமூகத்திற்கான சட்ட ஆராய்ச்சியாளராக திரு. வாரண்ட் பாலா அவர்கள், மத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவியோடு  எத்தனையோ சட்ட உரிமைச் சங்கதிகளைப் பற்றி ஆராய்ந்து, நூல்களில் எழுதி அதனை பொதுவுடைமையாகவும் ஆக்கி உள்ளார். 

ஆனால், இப்பொதுவுடைமை கருத்துக்களை பொது மக்களிடம் கொண்டுச் செல்லும் அக்கறை மிகமிக குறைவாகவே இருக்கிறது. இதனால், சமூகத்தில் எளிதாக தீர்க்கப்பட ஒரு பிரச்சினை தீர்க்க முடியாத பல்வேறு பிரச்சினைகளாக மாறி விடுகின்றன. தேவையற்ற உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.  

ஆமாம், 2008 ஆம் ஆண்டில் எழுதி வெளியிட்ட நீதியைத்தேடி... சட்ட அறிவுக்களஞ்சியம் என்ற நூலில், இன்று சமூகத்தில் நிலவும் ‘‘இலஞ்சம், வரதட்சினை, சொத்துரிமை, பாகப் பிரிவிணை, பெண்களுக்கு சொத்தில் சமபங்கு என்பது என்ன?’’ என்பன போன்ற பலவற்றுக்கும் சட்ட ரீதியான தீர்வுகளை சொல்லி உள்ளார். 

இந்த நூலில் மட்டும் 155 தலைப்புகளில் எழுதி உள்ளார். இதற்கு முக்கிய பத்திரிகைகள் இப்படி மதிப்புரை எழுதியுள்ளன என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். 

நூல்: நீதியைத்தேடி... சட்ட அறிவுக்களஞ்சியம்

மதிப்புரை: தீக்கதிர் நாளிதழ் 07-12-2008

நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் என்கிற அறைகூவலுடன் ‘‘சட்ட அறிவுக்களஞ்சியமாக’’ இந்நூலை பட்டறிவுடன் படைத்து உள்ளார், வாரண்ட் பாலா. மத்திய சட்ட அமைச்சகமே நிதி உதவி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், தமிழ்நாடு, பாண்டிச்சேரி நூலகங்கள் சிறைச்சாலைகள் என எங்கும் இலவசமாக வழங்கிட சட்ட அமைச்சகம் நிதி உதவி செய்துள்ளது.

‘‘நமக்காக நாம்தான் பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்ள வேண்டுமே யன்றி பிறரை நம்பிப் பயனில்லை’’ என்ற அனுபவ வெளிச்சத்தில், ‘‘சாதாரண சட்ட நடைமுறைகளை எளிய தமிழில், உரிய விளக்கங் களோடு சொல்லும் இந்நூலை எல்லோரும் வாங்கிப் படிப்பதும், பாதுகாப்பதும் அவசியம்’’ என்று குறிப்பிட்டு உள்ளது.


நூல்: நீதியைத்தேடி... சட்ட அறிவுக்களஞ்சியம்

மதிப்புரை: துக்ளக் வார இதழ் 04-02-2009 

இந்நூலாசிரியரின் நீதியைத்தேடி... வரிசையில் ஏற்கெனவே ‘குற்ற விசாரணைகள்’, ‘பிணை எடுப்பது எப்படி?’ என சட்டம் குறித்த இரண்டு நூல்கள் வெளியாகி, பொதுமக்கள் பலரின் வரவேற்பைப் பெற்றன. 

தவிர, பொதுமக்கள் சட்ட விழிப்புணர்வைப் பெற, இதுபோன்ற தனியார் முயற்சிகளை, மத்திய சட்ட அமைச்சகமும் நிதியுதவி செய்து ஊக்குவிக்கிறது. அந்த வகையில், ‘சட்ட அறிவுக் களஞ்சியம்’ என்ற இந்த மூன்றாவது நூலையும் ஆசிரியர் எழுதியுள்ளார்.  

இதில் சொல்லப்பட்டுள்ள கருத்துகள் கோர்ட் நடவடிக்கைகள் பற்றி, அனுபவ ரீதியாக பாமரர்களுக்கும் புரியும் வண்ணம் கூறப் பட்டுள்ளன. 

சட்டங்கள் எப்படி இயற்றப்படுகின்றன? சட்டத்தில் ஓட்டை என்பது என்ன? வழக்கறிஞர்களின் கடமைகள் என்னென்ன? குறுக்கு விசாரணை. சாட்சியங்களை சேகரிப்பது எப்படி? இப்படி சுமார் 155 தலைப்புகளில் கட்டுரை வடிவில் சட்ட அறிவுக்களஞ்சியம் தொகுக்கப் பட்டுள்ளது.

சரி, நம்ம விசயத்துக்கு வருவோம். 


சமூகப் பொறுப்புணர்வுள்ள ஒருவரால் இந்தச் செய்தியைப் படித்ததும், வழக்கம் போல இதுவும் ஒன்று என்று மிக எளிதில் கடந்து செல்ல முடியாது. கடந்து செல்லவும் கூடாது என்பதை விளக்கவே இக்கட்டுரை!

பெற்றோரின் சம்மதம் இல்லாமல் திருமணம் செய்வோர், சொத்தை அடைவதற்காக கொலை செய்வோர் ஆகியோர் இந்து வாரிசு உரிமைச் சட்டப்படி வாரிசு என்கிற உரிமையை இழந்தவர்கள் ஆவர்.

ஆமாம், நாளடைவில் மனம் சமாதானம் ஆகி, பெற்றோர்களாகப் பார்த்து பரிதாப்பட்டு ஏதாவது தந்தால்தானே ஒழிய, சட்டப்படி உரிமை கோர முடியாது.

ஆகையால், இவர்களுக்கு பரம்பரை சொத்தில் கூட பங்கு கிடைக்காது. ஆனால், இதுபற்றி போதிய சட்ட விழிப்பறிவுணர்வு மக்களிடம் இல்லை.

ஆகையால், சொத்துள்ளவர்களை குறிவைத்து காதலிப்பது, சொத்தை அடைவதற்காகவே கொலை செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டு விட்டு, பின்னர் ஏற்படும் பின் விளைவுகளால் பெரும் துன்பப்படுகின்றனர்.

இந்தச் செய்தியைப் பொருத்தவரை, எங்களது விருப்பத்துக்கு விரோதமாக திருமணம் செய்தால், ‘‘இந்து வாரிசுரிமை சட்டப்படி, வாரிசு உரிமையையும் சொத்துரிமையையும் இழப்பாய் என்று எச்சரித்து இருந்தால், காதல் திருமணம் குறித்து யோசித்து இருப்பான்’’ என்றே எண்ணத் தோன்றுகிறது.

அப்படியானால், தன் விருப்பப்படி காதல் திருமண சுய முடிவை எடுக்க ஒரு இளைஞனுக்கு சட்டத்தகுதி இல்லையா என்ற கிறுக்குத்தனமான கேள்வி, உங்களில் யாருக்கேனும் எழுந்தால், அதே சுய முடிவை சொத்தில் எடுக்கும் உரிமை அவனது பெற்றோர்களுக்கு இல்லையா என்றும் யோசித்தால், சொத்துரிமை கிடையாது என்ற சட்டம் சரியே என்பதும், காதல் திருமணம் செய்துக் கொண்டவர்கள் கூட, தங்களது வாரிசுகளின் காதல் திருமணத்துக்கு தடையாக இருப்பதும் விளங்கும்.

சொத்து கிடையாது என்பதை அவனது தந்த சட்ட அறிவோடு சொன்னாரா அல்லது கோவத்தில் குத்து மதிப்பாக சொன்னாரா என்று ஆராய்ந்தால், சட்ட அறிவோடு சொல்லி இருந்தால், திருமணத்துக்கு முன்பாகவே எச்சரித்து இருப்பார்.

ஆகையால், கோவத்தில் சொன்னதாகத்தான் நாம் தீர்மானிக்க வேண்டி உள்ளது. கோவத்தில் சொன்னதாகவே இருந்தாலும், அவரது சட்ட உரிமையே சொன்னதால், தற்கொலைக்கு தூண்டிய குற்றமும் சட்டப்படி சாராது.

ஆனால், இதுதான் பணம் பறிக்க சரியான சமயமென்று நினைக்கும் கேவலர்கள் வழக்குப் பதிவு செய்யலாம், பொய்யர்கள் வாதாடலாம், நிதிபதிகள் தண்டனை கூட கொடுக்கலாம்.

எது எப்படி இருப்பினும், சரியான சட்ட விழிப்பறிவுணர்வோடு எடுத்துச் சொல்லி புரிய வைத்திருக்க வேண்டியதை, தன் கோவத்தால் சொன்னதன் மூலம், மகனையே இழந்துள்ள தந்தைக்கு இதைவிட பெரிய தண்டனை எதுவும் இருக்க முடியாது என்பதே உண்மை!

பெரிய வீரன் போல காதல் திருமணம் செய்தவன், சொத்து கிடையாது என்று சொன்னதும், தன்னை நம்பி காதலித்து, கல்யாணம் செய்துக் கொண்டவளை மறந்து தற்கொலை செய்துக் கொண்டுள்ளான் என்றால், அவன் நிச்சயம் காதலிக்க தகுதி இல்லாத கோழையே. அவனை நம்பி, ஒரு பெண் தன் வாழ்க்கையை கேள்விக்குறி ஆக்கிக் கொண்டு உள்ளாள் என்பது வேதனையே!

மொத்தத்தில் சரியான சட்ட விழிப்பறிவுணர்வு இல்லாததால், இந்த சம்பவத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான இழப்பு. இதில் நாம் அனைவருக்காகவுமே பரிதாப்பட வேண்டி உள்ளது. 

இதுபோன்ற துன்பங்கள் இனி சமூகத்தில் நடக்கவே கூடாது என நினைப்பவர்கள், இதுபோன்ற செய்திகளை மக்களிடம் கொண்டு செல்லுங்கள். இதனை (உங், மக்)களைத் தவிர வேறு யாரும் செய்ய மாட்டார்கள்.

ஆமாம், இதுபோன்று காதல் திருமணங்களை, அதற்கான புரோக்கர்கள் இல்லாமல், அவ்வளவு எளிதில் பதிவு செய்துவிட முடியாது. காதல் திருமணம் செய்வோருக்கு சொத்துரிமை கிடைக்காது என்பது இப்புரோக்கர்களுக்கு நன்றாகவே தெரியும்.

ஆனாலும், தங்களின் நாறியப் பிழைப்புக்காக இதனை காதல் திருமணம் செய்துக் கொள்ள தங்களை நாடும், காதலர்களிடம் சொல்வதில்லை. 

மேலும், இப்படி புரோக்கர்களின் துணையோடு சட்டப்படி செய்யப்படும் பதிவுத் திருமணங்களில் 100 க்கு 99% திருமணங்கள் சட்டப்படி செல்லாது என்று பலருக்கும் தெரியாத இரகசியம், நம் சட்ட ஆராய்ச்சியாளர் திரு. வாரண்ட் பாலா அவர்கள் ஆராய்ந்து சூசகமாக எழுதி உள்ளார். 

எனவே, மகனோ அல்லது மகளோ தங்களுக்கு தெரியாமல் காதல் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார்களே அல்லது செய்துக் கொண்டார்களே என தவறான முடிவுகளை எடுப்பதை தவிர்த்து, சரியான சட்ட விழிப்பறிவுணர்வோடு சந்திக்கவும், சிந்திக்கவும் வேண்டும். 

பிற்சேர்க்கை நாள் 19-05-2019

சொத்தை அடைவதற்கான கொலைகள் தொடர் கதையாகவே இருப்பது கொடுமை!


இதற்கு கூலிக்கு மாரடிக்கும் வக்கீழ்கள் என்கிற பொறுக்கிகள் வழங்கும் தவறான சட்ட ஆலோசனைகளே காரணமாக இருக்கிறது என்பதால், குற்றச் செயல்களுக்கு அடிப்படை காரணமாக விளங்கும், அவர்களையும் சட்டப்படி கைது செய்து நடவடிக்கை எடுத்தாலே ஒழிய, இதுபோன்ற கொலைகளை தடுத்து நிறுத்த முடியாது.பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

3 comments:

 1. இக்கால இளைஞர்களுக்கு தேவையான பதிவு. கண்டிப்பாக எல்லோரிடமும் சேர்க்க வேண்டும்

  ReplyDelete
 2. காதல் வசப்படும் இளைஞர்களுக்கு இந்த சட்ட நுணுக்கங்கள் அவசியம் தெரிந்திருக்க வேண்டும்/தெரிய படுத்துங்கள்

  ReplyDelete
 3. நல்ல பதிவு. இந்தத் தகவல் உண்மைதானா என்ற சந்தேகம் தீர்ந்தது.

  ReplyDelete

பத்திரிகை செய்திகள்

அறவழி நோட்டா

அறவழி நோட்டா
மகாத்மா போதித்த வாக்குரிமை!

நோட்டா: NOTA

நோட்டா: NOTA
விளக்கம்: EXPLANATION

நூல்களின் முகப்பு

Followers

முக்கியப் பக்கங்கள்

அடிப்படை சட்டங்கள்

 • 1. இந்திய சாசனம் 1950
 • 2. நீதிமன்ற சாசனம் 1872
 • 3. இந்திய தண்டனை சட்டம் 1860
 • 4. குற்ற விசாரணை முறை விதிகள் 1973
 • 5. உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908

நம் நூல்களைப் பற்றி

நீதியைத்தேடி.... நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் வரிசையில்...
1 குற்ற விசாரணைகள்
2 பிணை (ஜாமீன்) எடுப்பது
எப்படி?
3 சட்ட அறிவுக்களஞ்சியம்
4 சட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்
5 சாட்சியங்களைச் சேகரிப்பது
எப்படி?
6 கடமையைச் செய்!
பலன் கிடைக்கும்
7 மநு வரையுங்கலை!Recent Posts Widget

இந்நூல்கள் அனைத்தும் உங்களின் சட்ட விழிப்பறிவுணர்வுக்காக
மத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவியோடு
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பொது நூலகங்கள், மத்திய சிறைச்சாலைகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

சொந்தமாக தேவைப்படுவோர், உ(ய)ரிய நன்கொடையைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு வாட்ஸ்அப் எண் 09842909190 ஆகும்.

எல்லாப் பதிவுகளும்!

நம் தள வகைகள்

பயின்றோர் (20-08-16)