வாசகர்களின் கவனத்திற்கு...
இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.
இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.
சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.
நீ வாழ... நீயே வாதாடு... வரவேற்பு வாழ்த்து!

Sunday, May 19, 2019
இயல்பை அறிவோம்! இன்பம் பெறுவோம்!!
Friday, May 17, 2019
மனுவில் தொடர்பு எண்ணை குறிப்பிடவே கூடாது!
மற்றுமொரு சிறந்த வழியாக, மின்னஞ்சல் முகவரியைப் பெற்று, அதற்கு அனுப்பி வைப்பதும் மிகச் சிறந்தது.
வாசகர்களின் கவனத்திற்கு...
இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.
இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.
சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.
Wednesday, May 15, 2019
அழைப்பாணையை கொடுக்கனுமா... வாங்கனுமா?
ஒருவேளை நீங்கள் கைது செய்யப்பட்ட போது இருந்த முகவரியில் இருந்து, வேறு முகவரிக்கு மாறி இருந்தால், கேவலர்கள் அழைப்பாணையை சார்வு செய்வதற்கு ஏதுவாக, அதுபற்றிய தகவலை சம்பந்தப்பட்ட கேவலர்களுக்கு சட்டப்படி பதிவு அஞ்சலில் தெரிவித்து விட்டு, அதன் நகலை கைது செய்தபோது எந்த நிதிபதியிடம் முன்னிலைப்படுத்தி நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்களோ அந்த நிதிபதிக்கும் போட்டு விடவும்.
இதுபற்றி தெரியாதபோது, மாவட்ட நிதிபதிக்கு அனுப்பியும் அனுப்பி வைக்க சொல்லலாம். மாவட்ட நிதிபதிகளுக்கான் மின்னஞ்சல் மற்றும் தொடர்பு எண்கள் Ecourt இணையப்பக்கத்தில் கிடைக்கும்.
இல்லையேல், நீங்களே வாதாடுவதை தடுக்கும் ஒரு முயற்சியாக, குற்றம் சாற்றப்பட்டவர்கள் தலைமறைவு என எதையாவது எழுதி, ஏடாகூடமாக எதையாவது செய்யவும் வாய்ப்புண்டு.
வாசகர்களின் கவனத்திற்கு...
இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.
இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.
சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.
Tuesday, May 14, 2019
இனி தமிழில் தட்டச்சு மிக எளிது!
தகவல் தொழில் நுட்பம் எவ்வளவோ வளர்ந்து இருந்தாலுங்கூட, பலரும் அதைப்பற்றிய அறியாமையில் தான் இருக்கின்றனர்.
இந்த வகையில் தமிழில் நாம் பேசுவது, அப்படியே தமிழில் தட்டச்சு ஆகுமாறு மென்பொருள் ஒன்றை ஆன்ராய்டு உலாப்பேசிக்கு வடிவமைத்து தந்திருக்கிறார்கள், கூகுள் நிறுவனத்தினர்.
ஆமாம், இதற்கு இந்தப் படத்தில் உள்ளபடி, கூகுள் பிரே ஸ்டோருக்கு சென்று ஜிபோர்டை நிறுவிக் கொள்ள வேண்டும். இதற்கு சுமார் 35 எம்.பி இடம் தேவைப்படும்.
பின், கீபோர்டு செட்டிங் சென்று, நிறுவிய ஜி போர்டை ஆக்டிவேட் செய்துக் கொண்டால், கீழ்கண்டவாறு தமிழில் ஜி கீபோர்டு தோன்றும். இதை இடதுபுறம் மஞ்சள் நிற வட்டத்தில் உள்ள ஜி உறுதிப்படுத்தும்.
இப்போது, வலது புறம் மஞ்சள் வட்டமிட்டு காட்டியுள்ள மைக்கை தொட்டால் ஆன் ஆகி விடும். வாய்க்கு சற்று அருகில் பிடித்து எழுத வேண்டிய எண்ணத்தை சொன்னால், அது அப்படியே மிக அழகாக தமிழில் தட்டச்சு ஆகும்.
ஒருவேளை ஒலிப்பேழையாக (ஆடியோவாக) அனுப்ப நினைத்தால், வலது புறம் மஞ்சள் வட்டமிட்டு காட்டியுள்ள மைக்கிற்கு மேலுள்ள மைக்கை, பேசி முடிக்கும் வரை அழுத்திப் பிடித்துக் கொள்ள வேண்டும்.
இவை இரண்டுக்குமே இணைய இணைப்பில் (ஆன்லைனில்) இருப்பது மிகமிக முக்கியம். இணைய இணைப்பில் வேகம் குறைவாக இருந்தாலும் தட்டச்சு ஆகாது அல்லது ஆக காலதாமதம் ஆகும்.
ஒருவேளை ஜி கீபோர்டை ஆங்கிலத்தில் வைத்துக் கொண்டு தமிழில் பேசினால், அது அப்படியே அரையும், குறையுமாக பிழையுடன் தமிங்கிலத்தில் தட்டச்சு ஆகும்.
வார்த்தையின் உச்சரிப்பு மற்றும் அக்கம் பக்கத்தில் இருக்கும் சப்தம் ஆகியவற்றைப் பொறுத்து, சில எழுத்துப் பிழைகள் வரலாம். அவற்றை நாம் கையால், மிக எளிதாக திருத்திக் கொள்ளலாம்.
மேலும், தமிழில் இல்லாத, ஆனால் நாம் தேவைக்கு ஏற்ப உருவாக்கிப் பயன்படுத்தும் கேவலர்கள், வக்கீழ்கள், நிதிபதிகள் உள்ளிட்ட வார்த்தைகள் எப்படிச் சொன்னாலும் வரவே வராது.
ஆமாம், இப்படி நாம் உருவாக்கும் வார்த்தைகளும் ஒருநாள் தமிழ் அகராதியில் சேரும். அதுவரை நாம்தான் கையால் திருத்திக் கொள்ள வேண்டும்.
மேலும், இதனை மின்னஞ்சல், டெலிகிராம் என நாம் உலாப்பேசியில் பயன்படுத்தும் அத்தனை வசதியிலும் மிகவும் வசதியாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
எழுதுவதற்கு ஆகும் நேரத்தை விட, பேசுவதற்கு ஆகும் நேரம் மிகவும் குறைவு என்பதால், நமக்கு அதிகமான நேரம் மிச்சம்.
வம்பு, வழக்கு உள்ள வாசகர்கள் அதற்கான மனுக்களை வெளியில் தட்டச்சு செய்வதில், பொருளாதாரம், வெளியில் சொல்ல முடியாத வார்த்தைகள், வாழ்க்கை இரகசியங்கள் என பல்வேறு சங்கடங்கள் இருக்கும்.
சமயத்தில் தட்டச்சு நிலையங்களில், நாம் யாருக்கு எதிராக என்ன தட்டச்சு செய்தோம் என்ற தகவல் சம்பந்தப்பட்டவர்களுக்கு எளிதில் சென்று விடும்.
இவர்களுக்கெல்லாம் இந்த மென்பொருள் வரப்பிரசாதம். குறிப்பாக பிரச்சினையில் உள்ள பெண்களுக்கு.
ஆமாம், நம்முடைய பிரச்சினைக்கு தீர்வாக என்னென்ன எண்ணங்கள் தோன்றுகிறேதோ அதை அவ்வப்போது மின்னஞ்சல் உள்ளிட்ட ஏதோ ஒன்றில், தட்டச்சு செய்து வைத்துக் கொண்டு, தேவைப்படும் போது எளிதாக திருத்தி மாற்றி அமைத்துக் கொண்டு, பின் பிரிண்ட் எடுத்துக் கொள்ளலாம்.
அடுத்தடுத்த நடவடிக்கைகளுக்கு தேவையான சங்கதிகளையும் மிக எளிதாக எடுத்துக் கொள்ளலாம்.
இது ஒரு சிறிய அறிமுகம் மட்டுமே. இதில் நான் சொல்லாத மேலும் பல செயல்களை இருக்கின்றன. அவற்றையும் தேவைக்கு ஏற்ப பயன்படுத்திக் கொள்ளலாம்.
இப்படி, கணினி, மடிக்கணினி உள்ளிட்ட எதுவுமே இல்லாமல் பயன்படுத்த வேண்டிய விதத்தில் பயன்படுத்தி பல நன்மைகளை அடையலாம்.
ஆமாம், இனி வருங்காலங்களில், இதனை நூல் எழுதவே பயன்படுத்தலாமே என்று, நாங்கள் சிந்தித்து உள்ளதோடு, சிலருக்கு சிபாரிசும் செய்துள்ளோம். இப்போது உங்களுக்கும்!
நாங்கள் எப்படி எந்த நேரத்திலும், உடனுக்குடன் தமிழில் பதில் அனுப்புகிறோம் என்பதற்கான இரகசியம், இப்போது புரிந்ததா?!
வாசகர்களின் கவனத்திற்கு...
இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.
இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.
சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.
Tuesday, May 7, 2019
பொதுமக்களுக்கு சொல்லப்பட வேண்டிய சொத்துரிமைகள்!
மதிப்புரை: தீக்கதிர் நாளிதழ் 07-12-2008
பெற்றோரின் சம்மதம் இல்லாமல் திருமணம் செய்வோர், சொத்தை அடைவதற்காக கொலை செய்வோர் ஆகியோர் இந்து வாரிசு உரிமைச் சட்டப்படி வாரிசு என்கிற உரிமையை இழந்தவர்கள் ஆவர்.
ஆனால், இதுதான் பணம் பறிக்க சரியான சமயமென்று நினைக்கும் கேவலர்கள் வழக்குப் பதிவு செய்யலாம், பொய்யர்கள் வாதாடலாம், நிதிபதிகள் தண்டனை கூட கொடுக்கலாம்.
இதுபோன்ற துன்பங்கள் இனி சமூகத்தில் நடக்கவே கூடாது என நினைப்பவர்கள், இதுபோன்ற செய்திகளை மக்களிடம் கொண்டு செல்லுங்கள். இதனை (உங், மக்)களைத் தவிர வேறு யாரும் செய்ய மாட்டார்கள்.
ஆமாம், இதுபோன்று காதல் திருமணங்களை, அதற்கான புரோக்கர்கள் இல்லாமல், அவ்வளவு எளிதில் பதிவு செய்துவிட முடியாது. காதல் திருமணம் செய்வோருக்கு சொத்துரிமை கிடைக்காது என்பது இப்புரோக்கர்களுக்கு நன்றாகவே தெரியும்.
ஆனாலும், தங்களின் நாறியப் பிழைப்புக்காக இதனை காதல் திருமணம் செய்துக் கொள்ள தங்களை நாடும், காதலர்களிடம் சொல்வதில்லை.
மேலும், இப்படி புரோக்கர்களின் துணையோடு சட்டப்படி செய்யப்படும் பதிவுத் திருமணங்களில் 100 க்கு 99% திருமணங்கள் சட்டப்படி செல்லாது என்று பலருக்கும் தெரியாத இரகசியம், நம் சட்ட ஆராய்ச்சியாளர் திரு. வாரண்ட் பாலா அவர்கள் ஆராய்ந்து சூசகமாக எழுதி உள்ளார்.
எனவே, மகனோ அல்லது மகளோ தங்களுக்கு தெரியாமல் காதல் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார்களே அல்லது செய்துக் கொண்டார்களே என தவறான முடிவுகளை எடுப்பதை தவிர்த்து, சரியான சட்ட விழிப்பறிவுணர்வோடு சந்திக்கவும், சிந்திக்கவும் வேண்டும்.
பிற்சேர்க்கை நாள் 19-05-2019
சொத்தை அடைவதற்கான கொலைகள் தொடர் கதையாகவே இருப்பது கொடுமை!
இதற்கு கூலிக்கு மாரடிக்கும் வக்கீழ்கள் என்கிற பொறுக்கிகள் வழங்கும் தவறான சட்ட ஆலோசனைகளே காரணமாக இருக்கிறது என்பதால், குற்றச் செயல்களுக்கு அடிப்படை காரணமாக விளங்கும், அவர்களையும் சட்டப்படி கைது செய்து நடவடிக்கை எடுத்தாலே ஒழிய, இதுபோன்ற கொலைகளை தடுத்து நிறுத்த முடியாது.
வாசகர்களின் கவனத்திற்கு...
இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.
இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.
சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.
Monday, May 6, 2019
இந்திய சாசனத்தை சுயமாக எழுதினார்களா...?!
இந்த இந்திய சாசனத்தையும், இதர முக்கிய இந்திய சட்டங்களையும் எழுதியது யார் என்ற கேள்விகளை அடிக்கடி கேட்டுக் கொண்டேதான் இருக்கிறார்கள். இதற்கு முக்கிய காரணம், இதுபற்றி தவறான செய்தியை தற்போது அதிகமாக பரப்புவதே!
ஆமாம், இதே மூடர்கள்தான் சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பு வரை, இந்திய சாசனத்தை எழுதியது அம்பேத்கர்தான் என்றாலும், வரைவுக் குழுவில் இருந்த ஆதிக்க சாதியினர் தங்களின் எண்ணங்களை எல்லாம், அவர் மீது திணித்து எழுத வைத்தனர் என்றும், ஆகையால், என்னிடம் அதிகாரம் இருந்தால், இந்திய சாசனத்தை நானே தீயிட்டு கொளுத்துவேன் என்று அம்பேத்கரே சூளுரைத்ததாகவும் அவரது ஆதரவாளர்களே சொல்லி வந்தது, பல்வேறு பதிவுகளில் வரலாறாக இருக்கிறது.
இதில், இப்பொய்ப் பெருமையை தங்களின் அரசியல் ஆதாயத்திற்காக, அரசியல் வியாதிகள் ஆமோதிப்பது போல ஆமோதித்து, அடிமட்டத்தில் கை வைத்துக் கொண்டு இருக்கிறார்கள் என்பது, மாக்களுக்கு புரியவில்லை என்பதை இங்கு விவரிக்க இயலாது. விவரிக்க வேண்டிய விடயமும் இதுவல்ல.
இது ஒருபுறம் இருக்க, அனைத்து அரசியல் வியாதிகளும் ஆளும்கட்சியாக இருக்கும்போது, இந்திய சாசனத்தில் குறை இருக்கிறது. ஆகையால் அதனை மறு பரிசீலனை செய்து திருத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டுக்கு வருவர்.
ஆனால், இதே நிலைப்பாட்டை இந்து மதவாதிகள் என்று பெயரெடுத்துள்ள அரசியல் வியாதிகள் எடுத்தால் மட்டும், மற்ற அரசியல் வியாதிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து இந்திய சாசனத்தை பங்கப்படுத்துகிறார்கள்.
ஆகையால் பாதுகாப்போம் என்று கூக்குரல் இடுவதை வாடிக்கையான வேடிக்கையாக வைத்திருக்கின்றன என்பதை, 2001 ஆம் ஆண்டே பதிவு செய்திருக்கிறார்கள். இப்படியொரு வேடிக்கை கடந்த 2018 ஆம் ஆண்டும் நடந்தது.
ஆமாம், இந்திய அரசமைப்பு என்பது, பல நாடுகளின் அரசமைப்பு சட்டங்களில் இருந்து களவாடப்பட்டு எழுதப்பட்டது என்று சொல்வதே சரியானது. ஆனால், இதனை தவிர்த்து, நாகரீகமாக தொகுக்கப்பட்டது என்று உண்மையைப் பேசுவோர் என்று சொல்லிக் கொள்வோரும் சொல்லுகின்றனர்.
இன்று (06-05-2019) தினமணி நாளிதழில் வெளிவந்துள்ள இம்முழுப் பக்க கட்டுரையைக் கொண்டு விளக்கம் அளிப்பது, உங்களின் எளியப் புரிதலுக்கு ஏதுவாய் இருக்கும். இதிலும் எளிதாகப் புரிந்துக் கொள்ளும் பொருட்டு, ஒரே மாதிரியான வர்ணம் ஒன்றுக்கொன்று தொடர்புள்ள சான்றுச் சங்கதிகளுக்கு கொடுக்கப் பட்டு உள்ளது.
உண்மையில், இந்திய சாசனம் என்பது, நம் சுய சிந்தனையில் உருவானது அல்ல. ஆகையால்தான், அப்போதைய மூன்றாவது இறுதி வரைவில் இருந்த 395 கோட்பாடுகளில் விவாதங்களை செய்து 7653 திருத்தங்களை சட்ட வரைவுக் குழுவினரும், இதர உறுப்பினர்களுமே செய்துள்ளனர்.
இதிலும் மிக முக்கியமானது, முன் இரண்டு வரைவுகளிலும் செய்யப்பட்ட திருத்தங்கள் எத்தனை என்பதும், முதல் வரைவில் திருத்தங்களை பரிந்துரைக்க கொடுக்கப்பட்ட எட்டு மாதத்தில் எத்தனை மக்கள், எத்தனை திருத்தங்களை சொன்னார்கள் என்பதும் கணக்கில் இல்லை.
இதனை நாம் தோராயமாக மூன்றாவது மற்றும் இறுதித் திருத்தமான 7653 ஐ இரண்டு மடங்கு சேர்த்து மும்மடங்காக 22959 என்றே எடுத்துக் கொண்டாலும் கூட, இத்தனை ஆயிரம் திருத்தங்களை கொண்ட வரைவைத் (எழுதிய அல்ல அல்ல) தொகுத்தவர்கள் அனைவரும் எப்படி செதுக்கிய சிற்பி ஆவார்கள்?
இதையும் திரித்து அம்பேத்கர் ஒருவரை மட்டுமே செதுக்கிய சிற்பி என்று சொல்வது, இவை எல்லாம் தெரிந்தும் இட்டுகட்டிச் சொல்லும் பொய்ப்புளுகு ஆகாதா??
உண்மையில், இந்திய சாசன வரைவுக் குழுவின் தலைவராக திரு. இராஜேந்திரப் பிரசாத்தும், உறுப்பினர்களாக பலரும் அக்கம் வகித்துள்ளனர் என்பது ஆதாரமாக இருக்கும் போது, மற்றவர்களை எல்லாம் விட்டுவிட்டு, அம்பேத்கர் என்ற ஒருவரை மட்டும் கெளரவப்படுத்தி உயர்த்திப் பிடிப்பது போல, பொய்யைப்புளுகி கெட்ட உள் நோக்கத்தோடு சொல்வது கண்டிக்கத் தக்கது அல்லாமல் வேறென்ன?
ஆமாம், ‘‘இந்திய சாசனமானது சுமார் 60 க்கும் மேற்பட்ட நாடுகளின் அரசமைப்பு சட்டங்களை ஆராய்ந்து எடுக்கப்பட்டது’’ என்று இக்கட்டுரையில் சொல்லப்பட்டு இருந்தாலுங்கூட, அதுபற்றி சுருக்கமான விவரத்தை கூட, சொல்லவில்லை.
ஆனால், எந்தெந்த நாடுகளில் இருந்து, எதுயெது மிகமிக முக்கியமாக எடுக்கப்பட்டது என்ற சான்றுகளை, சட்ட ஆராய்ச்சியாளர் திரு. வாரண்ட் பாலா அவர்கள் எழுதியுள்ள நீதியைத்தேடி... சட்ட அறிவுக்களஞ்சியம் நூலில் தொகுத்துக் கொடுத்து உள்ளார்.
இதுதான் சரியான தகவல் என எப்படி நம்புவது, என்ற சந்தேகம் இருந்தால், சரி பார்ப்பது மிகவும் எளிது.
அக்கம் பக்கத்தில் ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற போட்டித் தேர்வுக்குப் படிப்பவர்களை கேட்டாலே, சொல்லி விடுவார்கள் அல்லது அவர்கள் படிக்கும் நூல்களை வாங்கிப் படித்தும் தெளியலாம். இதுமட்டுமல்லாமல் இணையத்திலும் தேடிப்படித்து அறியலாம்.
ஒரு கருத்தை களவாடும் விதமாக காப்பியடித்தால், அதன் கருப் பொருளை உணர முடியாது என்பதற்கு ஏற்ப, ‘‘கடமையைச் செய்யாமல் உரிமையைப் பெற முடியாது’’ என்பதை, இந்திய சாசனத்தை தொகுத்த நம் வரைவுக்குழு உறுப்பினர்கள் உணரவில்லை என்பதில் வியப்பேதும் இல்லை.
மாறாக, இதைக்கூட உணராதவர்களா இந்திய சாசனத்தை உருவாக்கும் குழுவில் இருந்தார்கள் என்ற கேள்வி எழும்போது அவர்களைப் பற்றிய மதிப்பு தானாகவே குறைவதை தவிர்க்க முடியவில்லை. இதுவே இப்போது உங்களின் நிலையாகவும் இருக்கும்.
ஆமாம், இந்திய குடிமக்களின் கடமை குறித்து, முதலில் உருவாக்கப்பட்ட இந்திய சாசனத்தில் எதுவுமே சொல்லவில்லை. பின் இந்திய சாசனத்தில் 1976 ஆம் ஆண்டில் செய்யப்பட்ட 42 வது திருத்தத்தில் 51அ-வாகவே சேர்க்கப்பட்டு உள்ளது.
இப்படி இதுவரை 103 முறை திருத்தி உள்ளார்கள். ஒருமுறை திருத்தினார்கள் என்றால், அதில் ஒரேயொரு திருத்தம்தான் செய்தார்கள் என்று பொருள் இல்லை. ஒன்றுக்கும் மேற்பட்டு ஓராயிரம், ஒரு இலட்ச திருத்தங்களை கூட செய்யலாம். இப்படி திருத்தியதை பின் மீண்டும் வேறொரு திருத்தத்தில், திருத்தி குழம்பி இருக்கிறார்கள்.
இக்குறைபாடுகள் எல்லாவற்றுக்குமே ஆங்கிலேயர்களின் அற்ப வழியில், போதிய முதிர்ச்சி இல்லாதவர்கள் எல்லாம் இந்திய சாசனத்தை உருவாக்குவதில் உடன்பாடு இல்லாமல், காந்தி விலகி இருந்ததே முக்கிய காரணமாக இருந்து இருக்கலாம் என்பதை விளங்கிக் கொள்ள, பாராளுமன்றம் குறித்த காந்தியாரின் இக்கருத்தே இன்று நாட்டில் நடந்துக் கொண்டிருக்கிறது என்பதற்கு போதுமான ஆதாரமாக இருக்கிறது.
இதன்படி பார்த்தால், காந்தி முழுமையாக உணர்ந்து எழுதிய மற்றும் அப்படி, தான் எழுதியதில் தன்னுடைய பெண் நண்பி ஒருவர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, அதில் ஒரேயொரு வார்த்தையை மட்டுமே திருத்திய இந்திய சுயராஜியம் நூலின் கருத்துக்களை நிறைவேற்றும் படியே இந்திய சாசனம் அறவழியில் அமைந்திருந்திருக்கனும்.
ஆனால், அப்படி இல்லாமல் போனது, முதிர்ச்சி இல்லாத இந்தியர்களால், இந்தியர்களுக்கு ஏற்பட்ட துரதிருஷ்டமே!
ஆமாம், இந்திய சாசன நிர்ணய சபையில் உள்ள அறிவாளிகள் அனைவரையும், இறைவன் முட்டாளாக்கி விட வேண்டும் என்றே காந்தி கூறியதாக..,
மதுரை சர்வோதையா இலக்கியப் பண்ணை வெளியிட்ட ஏப்ரல் 2001 இல் வெளியிட்ட, ‘‘அரசியல் அமைப்புச் சட்டம் மறு பரிசீலனை தேவையா?’’ என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள சிறு நூலில் சொல்லப்பட்டு உள்ளது. (முதலிரண்டு செய்திகளும் கூட, இந்த நூலில் இருந்துதான் பதிவிடப்பட்டு உள்ளது.)
இதோ உங்களின் பார்வைக்கு...
ஆனால், காந்தியே இந்திய சாசன வரைவுக் குழுவிற்கு ஆதரவு தந்ததுபோல, திட்டமிட்ட ஒரு மாயையை அரசியல் காழ்ப்புணர்ச்சி மற்றும் களவாணித்தன ஆதாயங்களுக்காக அய்யோக்கியர்கள் ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள்.
இதில் மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது, இந்திய சாசன வரைவுக் குழுவில் இடம் பெறாத முக்கியத் தலைவர்கள் காந்தியும், முகமது அலி ஜின்னாவும். ஆனால், இவர்களே இருநாடுகளின் தேசத்தந்தைகள்!
மொத்தத்தில் இந்தியாவுக்கே அடிப்படை சாசன சட்டமாகவும், அடிப்படை சட்டங்கள் ஐந்தில் முதன்மையானதாகவும் விளங்கும் இந்திய சாசனமே இவ்வளவு கேடுகளோடுதான் தொகுக்கப்பட்டது என்றால், மற்றச் சட்டங்களைப் பற்றி சொல்லவும் வேண்டுமா?
அதாவது ஆங்கிலேயர் காலத்தில் அவர்கள் இயற்றிய சட்டங்களும் அப்படியே அமலில் இருக்கின்றன. அவர்கள் போன பின் இயற்றப்பட்ட சட்டங்கள் எல்லாம் கூட மற்ற நாடுகளின் சட்டங்களை காப்பியடித்து தான் என்று துணிந்து சொல்லலாம்.
இதற்கு நல்லதொரு உண்மையாக திரு. வாரண்ட் பாலா அவர்களே, தற்போது அமலில் உள்ள தொழிலாளர் நலன் சார்ந்த சட்டம் 1947 ஆனது, சோவியத் ரஷ்யாவை முன்மாதிரியாகக் கொண்டது என்பதையும் சட்ட அறிவுக்களஞ்சியம் நூலில் துணிந்து பதிவு செய்துள்ளாரே!
மொத்தத்தில், நமக்கு எந்தவொரு சட்டத்தையும் சுயமாக எழுதும் திறன் இல்லவே இல்லை. மாறாக, ஏதோவொரு நாட்டின் சட்டங்களையாவது முன் மாதிரிகளாக கொண்டு, நமக்கு ஏற்ற வகையில் தொகுத்துக் கொள்ளும் திருட்டுத் திறன்மட்டுமே உண்டு.
ஆமாம், இப்படி சட்டங்களில் என்னென்ன திருட்டுத் தனங்கள் யார் யாரால் செய்யப்படுகின்றன என்பதில் தொடங்கி, எந்த சட்டம் செல்லும், எந்த சட்டம் செல்லாது என்பதை கூட நாமே தீர்மானிக்கும் அளவிற்கு சரியானப் புரிதலை பெற வேண்டுமென விரும்புவோருக்கு, திரு. வாரண்ட் பாலா அவர்களின் சட்ட விழிப்பறிவுணர்வு நூல்களே, நல்லதொரு வழிகாட்டி!
பிற்சேர்க்கை தேதி: 08-05-2019
பிற்சேர்க்கை நாள்: 13-05-2019
உலகில் உள்ள சாசனங்கள் (அரசியலமைப்பு) எல்லாம் ஒரே குட்டையில் விழுந்த மட்டைகள்தான் என்பதற்கு இதுவும் ஒரு நற்சான்று!
ஆனால், இதுபற்றி அடிப்படை அறிவே இல்லாத மடையர்கள், இந்திய சாசனத்தை சுயமாக எழுதினார்கள், சிற்பிகளாய் செதுக்கினார்கள் என்றெல்லாம், உண்மையைத் திரித்து பீலா விட்டுக் கொண்டு திரிகிறார்கள்.