No law no life. Know law, know life! நியாயந்தான் சட்டம்! அதற்கு தேவையில்லை வக்கீழ் பட்டம். வக்கீழ் என்றாலே, கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்களே! இடைத்தரகர்களே!! நீ வாழ, நீயே வாதாடு!

நீ வாழ... நீயே வாதாடு... வரவேற்பு வாழ்த்து!

No law, no life. Know law, know life! என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியத்தை உணர்ந்து, ‘‘நீதியைத்தேடி... சட்டப் பல்கலைக் கழகத்திற்கு’’ வருகை தந்துள்ள உங்களை வருக என வரவேற்று, உங்களுக்கான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்று பயனைப் பெறுக என வாழ்த்துகிறோம்!
முக்கிய அறிவிப்பு : இந்த இணையப்பக்கத்தை புதுப்பிக்கும் பணி நடந்துக் கொண்டிருப்பதால், சில பதிவுகள் அல்லது இணைப்புக்கள் கிடைக்காமல் போகலாம்!

Thursday, April 18, 2019

மகாத்மா போதித்த வாக்குரிமை!




மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்தநாளை கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்த ஆண்டில், மிகப் பொருத்தமாக மக்களவைத் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்று நாம் எதையெல்லாம் சரியில்லை என்றும், சீர்திருத்தம் செய்ய வேண்டுமென்றும் சொல்லிக் கொண்டு இருக்கிறோமோ, அதையெல்லாம்  1908-1909-ஆம் ஆண்டுகளிலேயே  இந்தியத் தன்னாட்சி/இந்திய சுயராஜ்ஜியம் என்ற தொகுப்பு நூலில் தீர்க்க தரிசனத்துடன் மகாத்மா காந்தி எழுதியிருக்கிறார். அதில் அவர் என்னவெல்லாம் நடக்கும் என்று சொல்லி இருக்கிறாரோ, அதுதான் இன்று நாட்டில் நடந்துகொண்டிருக்கிறது. 

மக்களவைத் தேர்தல் நடக்க இருக்கும் இந்தத் தருணத்தில், நாடாளுமன்றம் குறித்து மகாத்மா காந்தி கூறிய வரிகள் இவைதாம்: ஆங்கில அரசாங்க முறை பரிதாபத்துக்குரியது. இது நாம் விரும்பத்தக்கதோ, தகுதியானதோ அன்று என்பதால், இப்படியொரு நிலைமை இந்தியாவுக்கு என்றுமே வந்துவிடக் கூடாது என்று கடவுளை வேண்டுகிறேன் என்று ஆரம்பித்து, பிரிட்டனைப் போன்று இந்தியா நடப்பதென்று ஆரம்பித்துவிட்டால், நமது நாடு அழிவுறும் என்பது என்னுடைய உறுதியான நம்பிக்கை என்று முடிக்கிறார் என்றால், என்னென்ன சொல்லி இருப்பார் என்பதை யோசித்துக் கொள்ளுங்கள்.

ஒரு பக்கம் நாடு வளர்ச்சி அடைந்து வருவதாகக் காட்டப்பட்டாலும்கூட, இதற்கெல்லாம் அடிப்படையில் தேர்தலின் மூலம் மக்களாட்சிதான் நடக்கிறதா என்பதை நாம் புரிந்துகொண்டால் போதும். மகாத்மா காந்தி போதித்த அறவழியில், சட்டப்படியான வாக்குரிமையைச் செலுத்தி மக்களே மக்களுக்கான மகத்தான மக்களாட்சியை மலரச் செய்ய முடியும்.

இதற்கு முன்பாக, தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் ஆட்சி மக்களாட்சியாக இருக்கிறதா என்பதை நம் எளிய புரிதலுக்காக மேலோட்டமாகப் பார்த்து விடுவோம்.  ஒரு தொகுதியில், நான்கு வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள் என்றும், அந்தத் தொகுதியில் வாக்குரிமை உள்ள 100 பேரும் தங்களின் வாக்குரிமையை ஒவ்வொரு வேட்பாளருக்கும் முறையே, 27; 25; 24; 24 எனச் செலுத்துவதாகக் கருத்தில் கொள்வோம்.  இதில் யார் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுகிறார் என்றால், எந்தவிதமான சந்தேகத்துக்கும் இடமின்றி 27 வாக்காளர்களின் வாக்குரிமையைப் பெற்ற வேட்பாளர்தான் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுகிறார். 

ஆனால், உண்மையில் வெற்றி பெற்ற வேட்பாளருக்கு எதிராக மற்ற மூன்று வேட்பாளருக்கும் மொத்தமாக 73 வாக்குகளை அந்தத் தொகுதியின் வாக்காளர்கள் செலுத்தி உள்ளனர் அல்லவா?  இப்படி அதிகபட்ச எதிர்ப்போடும், குறைந்தபட்ச ஆதரவோடும் ஒரு வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்படுவது எப்படி மக்களாட்சியாக இருக்கும்? 

இது தவிர, ஒவ்வொரு கட்சிக்கும் என தனித்தனி கொள்கைகள் இருந்தாலும்கூட, தேர்தல் என்று வந்தால் மட்டும் எப்படி கூட்டுச் சேர்ந்து, கூட்டணி அமைத்துப் போட்டிப் போட முடியும்?

போட்டி என்றால், வயது அல்லது எடை அல்லது பிற ஏதாவது ஒரு தகுதியின் அடிப்படையில் இருக்க வேண்டும் என்பதே இயற்கை நியதி. ஆனால், தேர்தலில் மட்டும் ஒரு கட்சியின் தலைவராக அறியப்படுபவரை எதிர்த்து, எதிர்க்கட்சித் தலைவர் போட்டி போடாமல், அந்தக் கட்சியில் உள்ள யாரோ ஒருவர் போட்டி போடுவது எப்படி நியாயமாகும்? 

இப்படிப் பல காரணங்களை விவரித்துக் கொண்டே போகலாம். எனினும், எளிய புரிதலுக்கு மேற்சொன்ன முத்தாய்ப்பான மூன்றே போதும். இப்படி தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளால் மக்களாட்சி நடைபெறவில்லை. மாறாக, முன்பே சொன்னபடி அதிகபட்ச எதிர்ப்போடு தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளால் மக்களுக்கு எதிரான ஆட்சியே நடைபெறுகிறது.

அப்படியானால், மகாத்மா காந்தி விரும்பியபடி, மக்கள் விரும்பும் மக்களாட்சி அமைய வழிதான் என்னவென்றால், இனி அரசியல்வாதிகளை நம்பிப் பலனில்லை என்று மகாத்மா காந்தி போதித்த அறத்தின் வழியில், நோட்டா என்ற சட்டப்படியான வாக்குரிமையை நாடுவதே ஆகும்.

நோட்டா என்ற வாக்கு மட்டுமே, இனி போராட்டம் ஏதுமின்றி ஆட்சியாளர்களை மக்கள் துளைத்தெடுக்க உதவும். மக்களின் கைகளில் காலம் கனிவுடன் தந்துள்ள ஈடு இணையற்ற சட்டப்படியான தோட்டாவே நோட்டா என்னும் வாக்கு. இதை நன்றாகப் புரிந்து கொண்டவர்கள், மக்களுக்கு எளிதில் புரிந்து விடக்கூடாது என்பதற்காகவே நோட்டாவுக்கு வாக்களிப்பதால் எந்தப் பலனும் இல்லை என்ற பொய்யான பரப்புரையைத் திட்டமிட்டுச் செய்து வருகின்றனர்.

இவர்கள் பொய் பரப்புரை செய்வதுபோல, ஒரு தொகுதியில் வாக்குரிமை பெற்றுள்ள 1,110 பேரில், வேட்பாளர்களின் மீதுள்ள அதிருப்தியின் காரணமாக நோட்டாவுக்கு 1,000 பேர் வாக்குகளை செலுத்திவிட, 100 பேர் வாக்குரிமையைச் செலுத்தாமல் விட்டுவிட, மீதமுள்ள 10 வாக்காளர்கள் மட்டும் வேட்பாளர்களுக்கு வாக்கைச் செலுத்தியதாகக் கொள்வோம்.  இதில் செலுத்தப்பட்ட 10 வாக்குகளில், எந்த வேட்பாளர் அதிக வாக்குகளைப் பெற்றுள்ளாரோ அவரே வெற்றி பெற்றவர் என அறிவிக்கப்படுவார் என்று பரப்புரை செய்கிறார்கள். இது முற்றிலும் தவறு.

ஒரு தொகுதியில் பதிவாகும் வாக்குகளில் ஆறில் ஒரு பங்கு வாக்கைப் பெறாத  வேட்பாளர்கள், தன்னுடைய வைப்புத் தொகையை இழந்து விடுவார்கள் என்பது நாம் அறிந்ததே. இந்த வகையில், வாக்கு எண்ணிக்கையில் நோட்டாவும் செல்லத்தக்க வாக்காக கணக்கிடப்படுவதால், இப்போது அமலில் உள்ள மக்கள் பிரதிநிதித்துவச் சட்ட விதிகளின்படி, மொத்தம் பதிவான 1,010 செல்லத்தக்க வாக்குகளில் குறைந்தது 168 வாக்குகளைப் பெறாதவர்கள் அத்தனை பேரும் வைப்புத் தொகையை இழந்து தோற்றவர்களாகிப் போவார்களே ஒழிய, சட்டப்படி ஒருபோதும் வெற்றி பெற்றவர்கள் ஆகவே முடியாது. 

மேலும், இதைவிடச் சிறப்பான செயல்பாடாக ஒட்டுமொத்தமாக பதிவான வாக்குகளில் 6 சதவீத வாக்கைப் பெறாத அரசியல்வாதிகளின் சின்னங்களும் முடக்கப்படும் எனத் தெரிகிறது.

இதனால், வேட்பாளர்களின் தகுதியைவிட, முக்கியமாகக் கருதும் சின்னங்களை வைத்து நடத்தும் ஆபத்தான அரசியலுக்கும் முற்றுப்புள்ளி வைத்ததாகி விடும். இப்படி ஒரே வாக்குரிமையில் எத்தனை எத்தனையோ மறுமலர்ச்சி மாற்றங்களை நம் வாக்கால் மட்டுமே உருவாக்க முடியும். 

ஆம். எப்போதெல்லாம் மகத்தான மக்களாட்சி மலர வேண்டுமோ, அப்போதெல்லாம் இதை நாமே செய்ய முடியும் என்பதன் மூலம், உண்மையான அரசாட்சி அதிகாரம் அரசியல்வாதிகளிடம் இல்லை; நம்மிடமே இருக்கிறது என்று வரலாற்றை ஒவ்வொரு முறையும் மக்களே புதிதாக மாற்றி எழுதுவதன் மூலம், அரசியல்வாதிகளுக்கு உணர்த்தி உறுதி செய்ய முடியும். 

ஆகவே, காலம் நம்முடைய கையில் அளித்துள்ள நோட்டா எவ்வளவு வலிமையானது என்பதை உணர்ந்து செயல்பட்டு, அறத்தின் துணையுடன், நாம் விரும்பும் மகத்தான மக்களாட்சியை மலரச் செய்ய வேண்டும். 

உண்மையில், 49-ஓ மற்றும் நோட்டா வாக்குகள் அறிமுகமானதிலிருந்து இதுவரை போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களைவிட அவை அதிக வாக்குகளைப் பெற்றதில்லை. அதனால், நோட்டாவின் வெற்றியில் இதுவரை சட்டச் சிக்கல்கள் எதுவும் எழவில்லை.  அதாவது, வேட்பாளர்களைவிட நோட்டாவுக்கு அதிகமானோர் வாக்களித்தால், வெற்றி பெற்றது யார் என்று இதுவரை இல்லாத புது சட்டச் சிக்கல்கள் எழும். 

இதற்கு சட்டப் பிரிவுகளின் அடிப்படையில் நல்லதொரு தீர்வே கிடைக்கும் என்று அறுதியிட்டுச் சொல்ல முடியுமே தவிர, என்ன தீர்வு கிடைக்கும் என்பதை இப்போது நான் சொல்ல முடியாது. நான் மட்டுமல்ல; தேர்தல் ஆணையம் உள்பட வேறு யாராலும்கூட சொல்ல முடியாது.

ஏனெனில், இப்படியொரு சட்டப் பிரச்னை இனிமேல்தான் வர வாய்ப்புள்ளது என்பதால், அதற்கான சட்டமும் தீர்வும்கூட, அதன் பின்னரே வரவேண்டும்.

எனவே, அவர்கள் சார்ந்துள்ள சின்னத்துக்கு அரசியல்வாதிகள் வாக்கு சேகரிப்பதுபோல, நோட்டாவுக்காக அல்ல, மகத்தான மக்களாட்சி மலர்வதற்காக மக்களில் யார் வேண்டுமானாலும், இந்தப் பிரசாரத்தை சட்டப்படி செய்யலாம் என்பதை 2009-ஆம் ஆண்டே தேர்தல் ஆணையத்திடமிருந்து கடிதமாகவே பெற்றுள்ளோம். 

எனவே, நீங்கள் வேட்பாளர்களை விரும்பாத நிலையில் நன்கு சிந்தித்து அறவழி நோட்டாவுக்கு வாக்களித்தால், முதலில் உங்களின் வாக்கை கள்ள வாக்காக வேறு யாரும் பதிவு செய்ய முடியாதபடி தடுத்த புண்ணியத்துக்கு உள்ளாவீர்கள். 

இப்படி அறத்தின் வழியில் அடுத்தவர்களிடமும் ஆதரவு திரட்டி, அனைத்து அல்லது பெரும்பான்மை வாக்குகளை நோட்டாவில் விழச் செய்வதன் மூலம், அரசியல்வாதிகளை தேர்தலில் வீழ்த்தி, அறத்தின் துணையுடன் மகத்தான மக்களாட்சி மலர பெரிதும் துணை நிற்க முடியும். 

எனவே, நோட்டா  என்பது மகாத்மா காந்தி போதித்த சட்டப்படியான அறவழி என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்து தவறாமல் வாக்களியுங்கள். ஒவ்வொருவருக்கும் உணர்த்தி 100 சதவீதம் வாக்களிக்க வையுங்கள்.

கட்டுரையாளர்: சட்ட ஆராய்ச்சியாளர்.

பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

Tuesday, April 16, 2019

நோட்டா என்ற தோட்டா... ஞாநியின் நினைவாக!



மறைந்த எழுத்தாளர்கள் ஞாநி மற்றும் இந்திய ஆட்சிப் பணி ஊழியராக இருந்த ஆ.கி.வேங்கடசுப்பிரமணியன் ஆகியோர், இப்போதைய நோட்டா, முந்தைய 49-ஓ ஓட்டுக்காக செய்த காரியங்கள் குறித்து, நோட்டா (ஓ, போ)ட்டால் மட்டுமே, மகத்தான மக்களாட்சிக்கு அறவழிப் பிறக்கும்! என்ற கட்டுரையில் எழுதி உள்ளேன். 

எங்களுக்குள் நல்லதொரு அறிமுக நட்பு உண்டு என்றாலுங்கூட, மிக நெருங்கிய நட்பு கிடையாது. இதிலும் ஆ.கி.வே அவர்களை விட, ஞாநியிடம் குறைவே. ஆம், நேரில் இரு முறை சந்தித்ததாகவும், உலாப்பேசியில் இரண்டு முறை பேசியதாகவுமே நினைவு.

ஆனால், ஆ.கி.வேவை பலமுறை நேரில் சந்தித்து பேசி இருக்கிறேன். குடிமக்கள் முரசு என்று அவர் எழுதி வந்த மாத இதழில், நீதியைத்தேடி... குற்ற விசாரணைகள் நூலுக்கு மதிப்புரை எழுதி எங்களை வெளிப்படையாகவே பாராட்டி எழுதியதோடு, சுமார் 250 பிரிதிகளை வாங்கி, அவர் நடத்தி வந்த மக்கள் மையம் என்ற அமைப்புக்கு கொடுத்தார். இதனை அவர் எழுதிய மதிப்புரையிலேயே தெரிவித்தும் உள்ளார். எனக்கு முன்பாகவே அவர் உலாப்பேசியை உபயோகிக்காதவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
49-ஓ ஓட்டுக்கு நோட்டா என்ன பொத்தானை வைக்க வேண்டுமென உச்சநீதிமன்ற நிதிபதிகள் 2013 இல் அறிவித்தபோது, பொத்தான் வந்து விட்டதால், இனி எல்லோரும் தைரியமாக வாக்களிப்பர்; நாம் கையிலெடுத்த வேலை முடிந்து விட்டது என்று எண்ணியும், அந்த நேரத்தில் ‘‘கடமையைச் செய்! பலன் கிடைக்கும்’’ நூலை மிகுந்த ஈடுபாட்டுடன் எழுதிக் கொண்டிருந்ததாலும், இதற்கிடையில் இப்ப என்ன பண்ணுவ என்ற கட்டுரையில் நோட்டா கடந்து வந்த பாதையை சொல்லிவிட்டு, மற்ற எதையும் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டேன்.

ஆகையால், அந்த  சமயத்தில் ஞாநி இப்படியொரு கட்டுரை, 01-10-2013 அன்று தமிழ் இந்து நாளிதழில் எழுதியது எனக்கு தெரியவில்லை. இன்று 16-04-2019 அன்று நோட்டா குறித்து என்னென்ன தகவல்கள் உலாவுகின்றன என்பதை இணையத்தில் தேடிய போது, இந்த கட்டுரை கண்ணில் சிக்கியது. 


இதில், நோட்டா (ஓ, போ)ட்டால் மட்டுமே, மகத்தான மக்களாட்சிக்கு அறவழிப் பிறக்கும்! என்ற கட்டுரையில் நான் சொல்லியுள்ளபடி, ‘‘நோட்டா அதிக வாக்குகளை வாங்கி சட்டப் பிரச்சினை எழுந்தால்தான் தீர்வு கிடைக்கும்’’ என்பதை அவரும் ஆறு வருடங்களுக்கு முன்பே எழுதி உள்ளார். 

மேலும், நான் இப்போது சிந்திக்காத, இன்னும் செய்யப்பட வேண்டிய சீர்த்திருத்தங்களைக் குறித்தும் எழுதி உள்ளார். இதனைப் பகிர்ந்து, பாதுகாக்க வேண்டும் என்பதற்காக அப்படியே பகிர்ந்து உள்ளேன். இது அவரெழுதிய அசல் இணைய முகவரி 

**************************

10 ஆண்டுகளுக்கும் மேலாக நாடு முழுவதும் சமூக ஆர்வலர்கள் அயராமல் போராடியதற்கான வெற்றி இப்போது உச்ச நீதிமன்றத் தீர்ப்பாகக் கிடைத்திருக்கிறது. எல்லா வேட்பாளர்களையும் நிராகரிப்பதற்கான உரிமை மக்களுக்கு உண்டு; அதை ரகசியமாகத் தெரிவிக்கும் வசதியும் அவர்கள் உரிமை என்று தெளிவாகச் சொல்லிவிட்டது நீதிமன்றம்.

இதை வர விடாமல், அரசு மட்டத்திலும் நீதிமன்றத்திலும் இழுத்தடித்த கட்சிகள் எல்லாம் இப்போது இதை வரவேற்பதாகப் பாவனை செய்கின்றன. முன்னர் வேட்பாளர்கள் சொத்துக் கணக்கு தெரிவிக்க வேண்டும் என்ற விதியைத் தேர்தல் ஆணையம் கொண்டுவந்தபோது, எல்லாக் கட்சிகளும் அதை எதிர்த்தன. ஆனால், அந்த விதியும் உச்ச நீதிமன்ற உத்தரவால்தான் நடைமுறைக்கு வந்தது.

முன்பு சமூக ஆர்வலர்கள் ‘49 ஓ’என்று சுருக்கமாகக் குறிப்பிட்டு வந்த நிராகரிக்கும் உரிமைக்கு இப்போது நீதிமன்ற உத்தரவின் பின் புதுப் பெயர் ‘நோட்டா’. மின்னணு இயந்திரத்தில் வேட்பாளர் பட்டியல் வரிசையில் கடைசியாக ‘மேற்கண்ட யாரும் இல்லை’(நன் ஆஃப் தி அபவ்) என்ற வரியும் அதற்கான பொத்தானும் இடம்பெறப்போகின்றன. அதன் சுருக்கமே ‘நோட்டா’. அதாவது, சுருக்கமாகச் சொன்னால் என்னிடம் நோட்டை நீட்டி, என் ஓட்டை வாங்க முயற்சிக்கும் வேட்பாளர்களுக்கெல்லாம் நான் ‘நோட்டா’போடலாம். ஆக, ‘நோட்டா’மக்கள் கையில் கிட்டியிருக்கும் தோட்டா.

இந்தப் புதிய உத்தரவால் என்ன பயன்? ‘‘தேர்தல் ஜனநாயகத்தில் இருக்கும் எல்லாப் பிரச்சினைகளும் தீர்ந்துவிடுமா?’’ என்று சிலர் கேட்கிறார்கள். எல்லா நோய்க்குமான ஒற்றை மருந்து உலகில் எங்கும் கிடையாது. ஒவ்வொரு மருந்தும் ஒரு சில நோய்களைத் தீர்க்க உதவும். அப்படித்தான் இதுவும்.

முதல் விஷயம், இனி இந்த நிராகரிப்பு ஓட்டுகள் கணக்கில் வரும். ‘49 ஓ’-வின் கீழ் போட்ட ஓட்டுகள் எல்லாம் மொத்தமாக செல்லத்தக்க ஓட்டுகள் பட்டியலிலேயே சேராதவை. ஆனால், இப்போது நீதிமன்றம் நிராகரிக்கும் உரிமை வாக்காளர்களின் அடிப்படை உரிமை என்று சொல்லியிருப்பதால், அந்த ஒட்டுகளை எண்ணி செல்லத் தக்கவையாகக் கருதாவிட்டால், உரிமை முழுமை அடையாது. அப்படி எண்ணியதில் நிராகரித்தோரின் வாக்கு எண்ணிக்கை எல்லா வேட்பாளர்களும் பெற்ற வாக்குகளுக்கும் சமமாகவோ அதிகமாகவோ வந்துவிட்டால், வேட்பாளர்களில் அதிக வாக்கு பெற்றவரைவிட இந்த வாக்கல்லவா அதிகமாக இருக்கும். அவரை ஜெயித்தார் என்று அறிவிப்பார்களா, மாட்டார்களா, தேர்தல் செல்லாது என மறு தேர்தலுக்கு உத்தரவிடுவார்களா? இந்த விஷயங்களைப் பற்றி நீதிமன்றம் எதுவும் சொல்லவில்லையே என்று சிலர் கேட்கிறார்கள்.

நீதிமன்றம் ஊகங்களின் அடிப்படையில் எதையும் சொல்ல முடியாது. எனவே, சொல்லாதது சரி. சட்டச் சிக்கல் வந்தால்தான் எதுவும் சொல்ல முடியும். ஆனால், அப்படிப்பட்ட சட்டச் சிக்கல் வர வேண்டும் என்றுதான் என்னைப் போன்ற ஆர்வலர்கள் விரும்புகிறோம். அப்போதுதான் இது அடுத்த கட்டத்துக்கு நகரும்.

அப்போது என்ன செய்ய வேண்டும்? நிராகரிப்பு ஓட்டுகள் இதர வேட்பாளர்களின் ஓட்டுகளைவிட அதிகமாக இருந்தால், மறு தேர்தலுக்குத்தான் உத்தரவிட வேண்டும். அந்தத் தேர்தலில், முந்தைய நிராகரிக்கப்பட்ட வேட்பாளர்கள் மறுபடியும் நிற்கத் தகுதி இல்லை. அவர்கள் நிராகரிக்கப்பட்டவர்கள்.

இதைச் செய்யச் சட்டத் திருத்தம் தேவையெனச் சில ஆர்வலர்கள் கருதுகிறார்கள். நான் அப்படிக் கருதவில்லை. தேர்தல் ஆணையம் தனக்குள்ள அதிகாரத்தின் கீழ் இப்போதே இந்த விதிகளை அறிவித்துவிடலாம் என்பது என் கருத்து. ஏனென்றால், ஒவ்வொரு தொகுதியிலும் வாக்கு எண்ணிக்கை முடிந்ததும், வெற்றி - தோல்விகளை அறிவிக்கும் முழு உரிமை ஆணையத்துடையதுதான். முடிவை அறிவிக்காமல் தொகுதியில் பல பகுதிகளில் மறு வாக்குப்பதிவு நடத்தும் உரிமையெல்லாம் ஏற்கெனவே ஆணையத்துக்கு உள்ளது. இப்படியெல்லாம் செய்தால் வீண் செலவுதானே என்று நாட்டில் இதர துறைகளில் நடக்கும் பிரமாண்டமான வீண் செலவுகள், ஊழல்கள் பற்றியெல்லாம் கவலைப்படாத சிலருக்கு இதைக் குறித்து மட்டும் கவலை வருகிறது.

முதலில் இப்படிப் பல தொகுதிகளில் மறு தேர்தல் நடத்துவதற்கான வாய்ப்பு வராது. காரணம், மக்களுக்கு இப்போது ரகசிய ஓட்டின் மூலம் எல்லாரையும் நிராகரிக்கும் உரிமை வந்துவிட்டதால், ஒவ்வொரு கட்சியும் முன் எப்போதையும்விட தங்கள் வேட்பாளர் தேர்வில் எச்சரிக்கையாக இருப்பார்கள். கட்டாயம் கிரிமினல்களை நிறுத்த முடியாது. பெரும் ஊழல் ஆசாமிகளை நிறுத்த முடியாது. உள்ளூர் ரௌடிகளை நிறுத்த முடியாது. சொந்தக் கட்சிக்காரர்களும் கட்சி விசுவாசிகளும்கூட அத்தகைய வேட்பாளருக்கு எதிராக நிராகரிப்புப் பொத்தானைப் பயன்படுத்திவிட முடியும்.

கட்சிகள் முன்பைவிட தரமான வேட்பாளர்களை நிறுத்தச் செய்வதுதான் நிராகரிப்பு உரிமையின் முதல் பெரும் பயனாக இருக்கும். இது ஒரே தேர்தலில் நிகழாவிட்டாலும் படிப்படியாக நிகழும். அப்படித் தரமான வேட்பாளர்கள் நிறுத்தப்படும்போது அடுத்த பயனாக,தேர்தலில் விரக்தியால் பங்கேற்காமல் இருப்போரெல்லாம் கலந்துகொள்ளும் ஊக்கம் ஏற்படும். ‘நோட்டா’-வைத் தொடர்ந்து செய்யப்பட வேண்டிய தேர்தல் சீர்திருத்தங்கள் பல காத்திருக்கின்றன. தேர்தல் செலவைச் சமமாக்குவது, கட்சிகளின் கணக்குகளைத் தணிக்கை செய்வது, உட்கட்சித் தேர்தல்களைத் தேர்தல் ஆணையமே நடத்துவது, விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ முறைக்கு மாறுவது, பிரதிநிதிகளைப் பதவியிலிருந்து திரும்பப் பெறும் மக்கள் அதிகாரம், கொள்கை விஷயங்களில் மக்களிடம் நேரடியான கருத்து வாக்கெடுப்புச் சட்டம் என்று நீண்ட பட்டியல் உள்ளது. இவையெல்லாம் இந்தியாவில் நடக்குமா என்று ஏங்குவோர் பலருண்டு.

மறைந்த சமூக ஆர்வலர் அ.கி. வேங்கடசுப்பிரமணியன் எனக்கு ‘49 ஓ’-வை அறிமுகப்படுத்தி 10 ஆண்டுகளுக்கு முன் இதற்காகப் பிரச்சாரத்தில் நான் ஈடுபடத் தொடங்கியபோது இதெல்லாம் என் வாழ்நாளில் நடக்குமா என்ற ஏக்கத்துடனேதான் ஈடுபட வேண்டியிருந்தது. ஆனால், இதோ நடந்துவிட்டது. கூடவே, எல்லாமே 10 ஆண்டுகளில் நடந்துவிடும் என்ற நம்பிக்கையும் இப்போது வந்திருக்கிறது!

ஞாநி, மூத்த பத்திரிகையாளர் - தொடர்புக்கு: gnanisankaran@gmail.com

பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

Sunday, April 14, 2019

இனி இப்படியெல்லாம் தமிழ்ப் புத்தாண்டை கொண்டாடுக!



‘‘தீதும், நன்றும் பிறர்தர வாரா’’ என்பது நம் தமிழ் முன்னோர்களின் முதுமொழி!

இதற்கேற்ப இன்று தமிழும், தமிழனும் தரம் தாழ்ந்து தலைகுனிந்து நிற்பதற்கு காரணமும், தமிழர்களே அன்றி மற்றவர்கள் அல்ல என்பதை தங்களின் வசதிக்காக மறைத்து, மற்றவர்கள் மீது குற்றம் சுமத்துவதையே வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

இதை மறுப்பவர்கள், முன்னோர்களின் முதுமொழிதான் தவறென்று சொல்ல வேண்டும். ஆனால், அப்படியும் சொல்வதில்லை.

எங்களுக்கு மட்டுமல்ல; சித்திரை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டாக நெடும் காலமாக கொண்டாடப்பட்டு வருகிறது என்பது நாம் எல்லோரும் நன்கு அறிந்ததே! இதனை நம்மை விட வயதில் மிக மூத்தப் பெரியவர்களும் உறுதி செய்கிறார்கள். அவர்களுக்கு அவர்களின் முன்னோர்கள் உறுதி செய்ததன் மூலம், இதன் பழம்பெரும் தொடர்பு என்னவென்று தெரிகிறது.

நமக்கு தெரிய தமிழ்ப் புத்தாண்டு சித்திரை முதல் நாளா அல்லது தை முதல் நாளா என்ற சர்ச்சை முதன் முதலாகவும், கடைசியாகவும் கருணாநிதி முத(லை, ல்) அமைச்சராக இருந்த காலத்தில்தான் உருவானது; அல்ல அல்ல திட்டமிட்டு உருவாக்கப்பட்டது என்றே கருத வேண்டி உள்ளது.

ஆமாம், இதற்கு முன்பாக இப்படியொரு சர்ச்சை இருந்ததற்கான அறிகுறிகளே இல்லை என்பதால், நாங்களே தமிழர்கள், தமிழர்களின் தலைவர்கள் என்று சொல்லிக் கொள்ள முயன்ற தற்குறிகளின் திட்டமிட்ட செயலே தீராத சர்ச்சையாக இருக்கிறது.

உண்மையில், சித்திரை முதல்திருநாளே தமிழர்களின் வருடப்பிறப்பு என்றால், இதை பெரியாரும், அண்ணாவும் அவர்கள் வாழ்ந்த காலத்திலேயே அறிவித்து இருப்பார்களே?

அண்ணாவுக்குப் பின், அத்தனை ஆண்டுகள் முதல் அமைச்சராக இருந்த கருணாநிதியும் அப்போதே அறிவிக்காமல் கடைசியாக இருந்தபோது அறிவிக்க காரணம் ‘‘தான் சொல்வதே என்ற தற்குறித்தனம் தானேயன்றி வேறு காரணம் எதுவும் இருப்பதாக தெரியவில்லை’’.

எது எப்படி இருப்பினும், நாங்களே தமிழர்கள், தமிழைக் காப்பாற்ற வந்தவர்கள் என்று சொல்லிக் கொண்டு திரியும் தற்குறிகளை தவிர, மற்றபடி உலகெங்கிலும் உள்ளத் தமிழர்கள் அனைவரும் வழி வழியாகவும், வழக்கம் போலவும் சித்திரை முதல் நாளையே ஒவ்வொரு ஆண்டும் தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாடுகிறார்கள்.

தமிழக சட்ட சபையில் தலைமை அரசியல் வியாதியாக இருப்பது ஆரியனா அல்லது திராவிடனா அல்லது அவரவர்களது ஆதரவைப் பெற்றவர்களா என்பதைப் பொறுத்து, தமிழ் வருடப்பிறப்பு மாறிமாறி கொண்டாடப்படுகிறது என்றால்..,

இப்படிப்பட்ட கேவலமான ஒரு வருடப்பிறப்பு கொண்டாட்டம் நமக்கு தேவைதானா என்ற நியாயமான கேள்வி நடுநிலையாளர்கள் எல்லோரது மனதிலும் இருந்தாலுங்கூட, ‘‘நாங்களே தமிழர்கள் என்று சொல்லிக் கொள்ளும் தற்குறிகள், எங்கே நம்மை தமிழர் விரோதி என்று சொல்லி விடுவார்களே’’ என்ற எண்ணத்திலேயே தானுன்டு, தன் வேலையுண்டு என கொண்டாடிக் கொண்டு இருக்கிறார்கள்.

ஏனெனில், இதற்கு முன்பாக உலகின் முதல்குடி, மூத்த குடி என்று சொல்லிக் கொள்கிற தமிழ் இனத்தில் இப்படியொரு சர்ச்சை இருந்ததாகவே தெரியவில்லை.

மேலும், உலகின் வேறெந்த மொழியைத் தாய் மொழியாக கொண்ட இனத்திலும் இதுபோன்ற ஆரியன், திராவிடன் என்ற சாக்கடைத் தனமான சண்டையும், வருடப் பிறப்பு சச்சரவுகளும் இருப்பதாக தெரியவில்லை.

மேலும் கன்னடம் தெலுங்கு ஆகியவற்றை தாய்மொழியாக கொண்டவர்கள், குறிப்பிட்ட ஒரே நாளில் தங்களின் வருடப் பிறப்பை கொண்டாடுகிறார்கள் எனவும் தெரிகிறது.

ஆகையால், ‘‘தமிழன் என்று சொல்லடா; தலை நிமிர்ந்து நில்லடா என்று நாமே சொல்லி வீர வசனத்தை, இனி தமிழன் என்று சொல்லடா; தலைக்குனிந்து நில்லடா’’ என்று மற்றவர்கள் சொல்லும் இழிநிலமை விரைவில், நமக்கு வந்து விடும் போலிருக்கு!

ஆகையால், இனி ஒவ்வொரு தமிழனும் தமிழனாய் பிறந்ததற்கு பெருமைப்படுவது போலவே, இனி வெட்கப்படவும் வேண்டி இருக்கும் போலிருக்கு.


இந்த இழிநிலைகள் ஏற்படாமல் தடுக்க, நம்மால் என்ன செய்ய முடியும் என நீங்கள் நினைத்தால், உண்மையில் தமிழ்ப் புத்தாண்டு என்பது தமிழை தாய்மொழியாகக் கொண்ட ஒவ்வொரு தமிழர்களும் தாங்கள் விரும்பியபடி கொண்டாட வேண்டியது தானேயன்றி, இந்த நாளில்தான் கொண்டாட வேண்டுமென்று சொல்லி அரசியல் செய்வதற்கு அது ஆரியருடைய சொத்தோ அல்லது திராவிடர்களின் சொத்தோ அல்லது தமிழ் தற்குறிகளின் சொத்தோ அல்லது வேறு எவருடைய சொத்தோ அல்ல.

எனவே, இனி தமிழைத் தாய்மொழியாக கொண்டவர்களும், தமிழை நேசிப்பவர்களும் தாங்கள் விரும்பும் ஒரு நாளில் / நந்நாளில் / பிறந்தநாள் உள்ளிட்ட சிறப்பாக நினைவு கூறத்தக்க ஏதோவொரு நாட்களில் தமிழ் வருடப் பிறப்பை கொண்டாடுங்கள். இதையுங்கூட, உங்களுக்கு ஏற்ற வகையில் வருடா வருடம் மாற்றிக் கொள்ளுங்கள்.

அது சித்திரையாக இருந்தால் என்ன... தையாக இருந்தால் என்ன... அல்லது நாம் விரும்பும் வேறெந்த நாளாக இருந்தால் என்ன... ஒவ்வொரு நாளும் தமிழ்க் கொண்டாட்டமாக இருக்கும் என்பதோடு, இப்படி கொண்டாட ஆரம்பித்தால் ஆரிய, திராவிட, தமிழ்த் தற்குறிகள் உள்ளிட்ட அவரவரின் ஆட்டமும் தானாக அடங்கி விடும். அவ்வளவே!

பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

Saturday, April 13, 2019

தேர்தலில் மக்களின் மடத்தனமும்; அக்கறை உள்ளவர்களின் அய்யோக்கியத்தனங்களும்!



நம்முடைய பாராளுமன்ற அமைப்பு பற்றி சத்தியவான் காந்தியின் எச்சரிக்கை, பாராளுமன்றம், சட்டமன்றங்களுக்கு நடக்கும் தேர்தல், அத்தேர்தலில் வாக்காளர்கள், வேட்பாளர்களை புறக்கணிக்கும் உரிமை, மகத்தான மக்களாட்சி மலர செய்ய வேண்டிய சீர்த்திருத்தங்கள், இச்சீர்த்திருத்தங்களின் நோட்டாவின் மகிமை என, யாருமே சிந்திக்காத கோணத்தில் நியாயப்படி சிந்தித்து பல கட்டுரைகளை  எழுதி உள்ளேன். 

இதையெல்லாம் படித்து தெளிவைப்பெற விரும்புபவர்கள் மட்டும் கீழ்கண்ட தலைப்புகளைச் சொடுக்கிப் படிக்கலாம். 


இப்ப என்னா பண்ணுவ?

மகத்தான மக்களாட்சி மலர...!



ஆமாம், இக்கட்டுரைகளை எல்லாம் முழுமையாகப் படித்தால்தான், நாம் எப்படியெல்லாம் குழப்பத்தில் இருக்கிறோம் என்பதும், திறந்த மனதோடு நான் நோட்டாவை ஆதரிக்க காரணம் என்ன என்பதும் தெளிவாக விளங்கும். 

இதனை சொல்வதற்கு மிக முக்கிய காரணமே, நாம் எவ்வளவு விளக்கினாலும், மக்கள் இதுகுறித்து போதியப் புரிதல் இல்லாமல் இல்லாமல் இருப்பது ஒருபக்கம் என்றால், நம்மை சரியாகப் புரிந்துக் கொண்டிருக்கிறார்கள் என்று நான் நம்புகிற நீதியைத்தேடி... உள்ளிட்ட சட்ட விழிப்பறிவுணர்வு நூல்களின் வாசகர்களே தெளிவில்லாமல் இருக்கிறார்கள்; இதிலும் நாங்கள் யாரையெல்லாம் தெளிவானர்கள் என நம்புகிறோமோ அவர்கள்தான் தெளிவில்லாமல் இருக்கிறார்கள் என்பது அவர்களின் கேள்வி மூலந்தான் தெரிய வருகிறது. 

ஆமாம், நோட்டா மட்டுமே தோட்டா என்ற கட்டுரையைப் படித்துங்கூட மக்களில் சிலருக்கு போதியப் புரிதல் இல்லை என்பது, அக்கறையுள்ள அய்யோக்கியர்கள் சமூக வலைத்தளங்களில் பொய்யாக பரவ விட்டிருக்கும் காணொளிகள் குறித்து கருத்து கேட்பதன் மூலம் தெரிந்தது. 

இதற்கு மாறாக, நம் நீதியைத்தேடி... வாசகர்கள் சிலர் நோட்டாவுக்குப் பதில், சுயேச்சைகளை ஆதரிக்கலாமே என்றும், அப்படி ஆதரிக்கும்போது, அவர்கள் ஆக்கப்பூர்வமாக செய்வார்களே என்றும், அவர்களின் தன்னம்பிக்கை கூடுமே என்றும் கேள்வியை முன் வைத்து உள்ளனர். 

இவர்கள் எல்லாம், நம் நூல்களை வாங்கிய வாசகர்களே ஒழிய படிக்கவில்லை என்றோ அல்லது அப்படியே படித்து இருந்தாலும், சரியான ஆழ்ந்தப் புரிதலோடு படிக்கவில்லை என்றோ அல்லது படித்ததை வைத்து கூட, சுயமாக சிந்திக்கும் திறனை பெற்றிருக்கவில்லை என்றோ உறுதியாக நம்ப வேண்டியிருக்கிறது. ஆகவே, இதுபற்றியும் தெளிவுப் படுத்தவே இந்தக் கட்டுரை!

சரி நம்ம விசயத்துக்கு வருவோம். 

ஏழாவது நூலாக எழுதியுள்ள ‘‘மநு வரையுங்கலை!’’ நூலில், உண்மையில் இந்திய சாசனக் கோட்பாடுகளின் படி, மத்திய அரசின் ஆட்சி அதிகாரம் குடியரசுத் தலைவரிடமும், மாநிலத்தில் ஆளுநர்களிடமும், யூனியன் பிரதேசங்களில் துணைநிலை ஆளுநர்களிடமுமே இருக்கிறது என்றும், மற்றபடி மத்திய மாநில அரசியல் வியாதிகள் எல்லாம், மக்களுக்கு இதையிதை செய்யுங்கள் என பரிந்துரைக்கும் பரிந்துரையாளர்களே என்பதைப் பற்றி விரிவாக தெளிவுபடுத்தி உள்ளேன். 

இதுகுறித்த கட்டுரையை படிக்க விரும்பினால், ஆளுநர்களுக்கே, ஆய்வு செய்யும் அதிகாரமுண்டு! என்ற இந்தக் கட்டுரையைப் படித்து தெளிவு பெறவும். இந்த விவகாரத்தில் அவ்வப் போதைய அரசியல் வியாதிகளின் எடுபிடிகளாகவும், நாட்டாண்மைகளாகவும் உள்ள நிதிபதிகள், முன்னுக்குப் பின் முரணாக சொல்லும் குப்பைத் தீர்ப்புகளை எதையும் கவனத்தில் கொள்ளவே கூடாது என்பது மிகமிக முக்கியம். 

நம் நாடு சுதந்திரம் பெற்றப் பிறகு, மூன்றில் இரண்டு பங்குக்கும் மேலான ஆண்டுகள் மத்தியில் காங்கிரஸை சேர்ந்த அரசியல் வியாதிகளே பரிந்துரையாளர்களாக இருந்துள்ளனர். அதேபோல, அதே சமயத்தில் பல மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் இருந்துள்ளனர். 

அப்படி இருந்தபோது மத்திய மாநில அரசுகளுக்கு இடையில் கூட்டுக் களவாணிகளாக இருந்ததால் பிரச்சினை இல்லை. அப்படி இல்லாத மாநிலங்களில் கருத்து மோதல்களும் பிரச்சினைகளும் இருந்தன. 

இது தமிழ்நாட்டிலும் இருந்தது என்பதற்கான ஆதாரந்தான், முதல் முறையாக காங்கிரஸை வீழ்த்தி, திமுக பரிந்துரைக்கு வந்தபோது, மத்திய அரசு கொண்டு வந்த இந்தி தினிப்பு மற்றும் அதற்கு எதிர்ப்பு போராட்டங்கள் என்பதை நாம் நன்றாகப் புரிந்துக் கொள்ள வேண்டும். 

இப்படித்தான் முதல் முறையாக, தலைநகர் தில்லியில் ஆம் ஆத்மி பரிந்துரைக்கு வந்தபோது, தில்லி மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கா அல்லது மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கா என்றப் பிரச்சினை எழுந்து இன்றும் தீராத தகராறாகவே இருக்கிறது. இது என்றும் இருக்கும்.

இதில், முதல் முறையாக கெஜிரிவால் முதலமைச்சராக பொறுப்பேற்று இருந்தப்போது, பொறுப்பற்ற முறையில் பதவி விலகியதும், பின் மக்களிடம் மன்னிப்பு கேட்டு, மீண்டும் வெற்றி பெற்ற கெஜிரிவால் ஆளுநரின் வீட்டில் புகுந்து, பல நாட்கள் உட்கார்ந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார் என்பதும், இதற்கிடையில் ஆளுநர் பதவி விலகினார் என்பதெல்லாம், உங்களுக்கு உண்மையை எளிமையாக சொல்லும் ஓரிரண்டு நிகழ்வுகள் மட்டுமே! 

இதுபோலவேதான், யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் காங்கிரஸில் இருந்துப் பிரிந்து வெற்றி பெற்ற என்.ஆர். காங்கிரஸீக்கும் ஏற்பட்டது. இப்போது, அங்கு காங்கிரஸ்தான் என்றாலும், மத்தியில் பாஜக என்பதால், ஆளுநர் எதிர் முதலமைச்சர் என்று இன்றும் சட்ட தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதுவும் என்றும் இருக்கும். 

இப்படி, ஒவ்வொரு மாநிலத்திலும் நடக்கும் அரசியல் கூத்துக்களை எல்லாம் விவரித்து பல நூல்களையே எழுதலாம். ஆனால், மிக எளிதாக உண்மையை விளங்கிக் கொள்ள இம்மூன்றுமே போதும். 

இதிலிருந்து நீங்கள் புரிந்துக் கொள்ள வேண்டியது, மத்திய மாநில அரசியல் வியாதிகளுக்குள் கொள்கை ரீதியான கொள்ளை கூட்டுக்களவாணித்தனம் இல்லையெனில், அவர்கள் எவ்வளவு பலம் வாய்ந்த மக்களால் தேர்ந்தெடுக்கப்பட அரசியல் வியாதிகளாக இருந்தாலும், அவர்களால் ஒரு ஆணியைக்கூட புடுங்க முடியாது என்பதை, கடந்த 2014 ஆண்டில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் 40 இல் 39 என்ற மகத்தான் வெற்றியை மக்கள் தந்துங்கூட அஇஅதிமுகாவால் பெரிதாக எதையுமே சாதிக்க முடியவில்லை. 

கடந்த கால மற்றும் நிகழ்கால வரலாற்று உண்மைகள் இப்படி இருக்க, இதையெல்லாம் சற்றும் யோசிக்காமல், பெரும்பாழும் ஏதோவொரு வகையில் சுய விளம்பரத்துக்காகவே போட்டிபோடும் சுயேச்சை வேட்பாளர்களை தேர்ந்தெடுத்தால், அவர்களால் தனித்து எதையும் செய்யவே முடியாது என்பதும், அவர்களை அரசியல் வியாதிகள் பேரம்பேசி தங்களின் பக்கம் இழுக்க ஏதுவாகவே அமையும் என்பது கூட, மக்களுக்கு புரியாமல் போனால், இம்மாக்களை எல்லாம் வல்ல இயற்கை கூட காப்பாற்ற முன்வராது. 


ஆமாம், என்னுடைய மறு உருவமாக இருக்கிற அறத்திற்கு துணை நிற்காமல், அரசியல் வியாதிகளுக்கு துணை நின்ற காரணத்தால், அவர்களின் அத்தனை துன்பங்களையும் அனுபவித்து செத்து மடியுங்கள் என்று இயற்கையே சாபமிடும் என்பதில் எனக்கு எள் முனையளவும் சந்தேகமில்லை. 

ஆகவேதான் சொல்கிறேன், நீங்கள் யாராக இருந்தாலுஞ் சரி அறத்தின் வழியில் துணை நிற்க விரும்பினால், அதன் ஓர் அங்கமாக அறவழியில் பெரும்பான்மை வாக்குரிமையை பதிவு செய்து கடும் எதிர்ப்பையும், அதன் மூலம் சட்டப் பிரச்சினைகளும் எழுந்து, அதே அறத்தின் வழியில் மகத்தான மக்களாட்சி மலர சட்டப்படியான ஒரே வாய்ப்பாக இருக்கக்கூடிய நோட்டாவுக்கு வாக்களித்து, நல்வாழ்வு வாழ முற்படுங்கள். 

பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

Wednesday, April 10, 2019

(உங், மக்)களுக்கான (தோ, நோ)ட்டா வாக்கு மட்டுந்தான்!



நாம் விரும்பியோ அல்லது விரும்பாமலோ அரசியல் என்பது அனைத்திற்குமான அடிப்படை காரணமாய் அமைந்து இருக்கிறது. எனவே அரசியலே அசிங்கம் என நாம் அல்லது நல்லவர்கள் ஒதுங்கினால், அசிங்கமானது மேன்மேலும் நாறத்தான் செய்யுமே ஒழிய, சுத்தமாக வழியே இல்லாமல் போய்விடும். 

இப்படித்தான் போய்விட்டது என்பதை, மகத்தான மக்களாட்சி மலர என்ற இக்கட்டுரையைப் படித்தால்தான் நன்கு புரியும். எனவே இனி மக்களாட்சியை மீட்டெடுக்க வேண்டிய மாபெரும் கடமை மக்களிடம் மட்டுமே இருக்கிறது. 

எனவே, நாட்டின் நலன் கருதி மக்கள் அரசியல் வியாதிகளை புறக்கணித்து, அறத்தின் வழியில் நின்றால்தான் மக்களாட்சியை மீட்டெடுக்க முடியும். அதாவது நாம் நம்பும் அறம் மீட்டுக் கொடுக்கும் என்பதே எனது ஆராய்ச்சி முடிவு. இம்முடிவு இன்று, நேற்று எடுக்கப்பட்ட முடிவு அல்ல. 

சட்ட ஆராய்ச்சியில் களமிறங்கிய சில காலங்களிலேயே எடுக்கப்பட்ட முடிவு. அந்த முடிவை ஒட்டியே பல்வேறு களப்பணிகளை செய்து, அதில் கொஞ்சங் கொஞ்சமாக முன்னேற்றமும் ஏற்பட்டு உள்ளது. 

இதில் மிகவும் திருப்பு முனையாக அமைந்தது, சரியாக பத்து வருடங்களுக்கு முன்பு இதே 10-04-2009 அன்று தினமணி நாளிதழ், நானெழுதி வெளியிட்ட இக்கட்டுரைதான்! 


ஆமாம், மகத்தான மக்களாட்சியை மலரச் செய்வதற்காக நாங்கள் மேற்கொண்ட முயற்சிகளின் வாயிலாகவே, இக்கட்டுரையின் இறுதியில் சொன்னபடி, நோட்டா என்ற வாக்குப் பொத்தானும் வைக்கப்பட்டு விட்டது. 

இனியும் இப்படி ஒவ்வொன்றாக நடந்தாக வேண்டும் என்பதாலும், இனி எந்த வேட்பாளரையும் தேர்ந்தெடுக்க விரும்பவில்லை என நோட்டாவில் வாக்களிப்பதில் உங்களுக்கு எந்த சிரமமும் இல்லை என்பதாலும் நாம் விரும்பும் மக்களாட்சியை மலரச் செய்வது மிகமிக எளிதே!

சரி, இனி ஏன் எந்தவொரு வேட்பாளரையும் தேர்ந்தெடுக்க விரும்பவில்லை என நோட்டாவில் வாக்களிக்க வேண்டும் என்பதற்கு திருவள்ளுவர் வழியில் ஓர் எளிய நியாயக்குறள்!

அதிகாரம்: அரசியல்

எதிர்க்கட்சியாக இருக்கும்போது எதிர்ப்பவர்கள் ஆளுங் 
கட்சியாகும்போது அதையேத்தான் செய்வர்.

என்பது தெய்வப்புலவர் எழுதிய திருக்குறள் அன்று. பல வருடங்களுக்கு முன்பு நான் எழுதிய நியாயக்குறள். 

ஆமாம், அப்போதே வள்ளுவர் இப்படி எழுதி விட்டாரா என்றும், திருக்குறளில் இதுபோன்ற குறள் இல்லையே என்று பலரும் தேடிவிட்டு கேட்டிருக்கிறார்கள். இனி யாரும் இப்படி தவறாக கேட்கக்கூடாது என்பதற்காகவே இந்தத் தெளிவுரை. 

ஆமாம், அரசியலில் நடக்கும் அக்கிரமங்களை எல்லாம் எழுத ஒவ்வொன்ருக்கும் ஒவ்வொரு குறளை எழுத வேண்டி இருக்கும். ஆனால், அத்தனைக்கும் ஒரேயொரு குறளில் இப்படித்தான் சொல்ல வேண்டும். 

இந்த நியாயக்குறளை விட எளிமையாகவும், தெளிவாகவும் அரசியல் வியாதிகளின்  கெட்ட எண்ண நிலைப்பாட்டை விளக்கிவிட முடியாது.

இது மக்களுக்கு புரிந்து விடவே கூடாது என்பதற்காக, ஒவ்வொரு அரசியல் வியாதிகளும் அவர்களின் அடிமைகளும் தங்களின் குற்றத்தை மறைத்தும், தங்களை யோக்கியர்களாக காட்டிக் கொண்டும், மற்றவர்களின் மீது குற்றங் குறைகளை சொல்லி (பிர, விப)ச்சாரம் செய்கிறார்கள். 

ஆமாம், மக்களுக்கான மகத்தான மக்களாட்சி என்பது, எந்தவொரு அரசியல் வியாதிகளிடம் இல்லை. மாறாக அரசியல் வியாதிகளைப் புறக்கணித்து வாக்களிக்கும் நோட்டாவின் வழியில், அறத்திடமே இருக்கிறது. அறத்தினால் மட்டுமே சாத்தியம் என்பதே சத்தியம்!

சரி, நோட்டாவில் வாக்களிப்பதால் எந்தப் பயனும் விளையப் போவதில்லை என்று சொல்கிறார்களே என்றால், அப்படி சொல்பவர்கள் எல்லாம் யாரென்றால், அரசியல் வியாதிகள் அல்லது அந்த அரசியல் வியாதிகளின் அடிமைகள் அல்லது அறிவு வறுமைகள் என்றெல்லாம் சொல்வதை விட, நோட்டாவால் மாற்றம் எதுவும் நிகழ்ந்து விடக்கூடாது என்பதில் எச்சரிக்கையாக இருக்கும் பொய்யர்கள் என்று சொல்வதும் சாலப்பொருந்தும்.

ஆமாம், ஒரு தொகுதியில் உள்ள ஆயிரத்தி நூற்றுப் பத்து வாக்காளர்களில், ஆயிரம் பேர் நோட்டாவுக்கு வாக்களித்தால், மீதமுள்ள நூற்றுப் பத்தில், நூறு பேர் வாக்களிக்கவில்லை என்று வைத்துக் கொள்வோம். 

வாக்களித்த பத்து வாக்காளர்களின் வாக்கில் யார் அதிகமான வாக்கைப் பெற்று இருக்கிறாரோ அவரே வெற்றி பெற்றவர் என அறிவிக்கப்படுவார் என்று இவர்களாகவே திட்டமிட்டப் பொய்யைப் பரப்பி வருகிறார்கள். 

இந்த திட்டமிட்டப் பொய்ப் பைத்தியங்களையும், அவரவர்களின் அறிவு வறுமையையும் நினைத்தால் எனக்கு அடக்க முடியாத சிரிப்புதான் வருகிறது.

ஆமாம், இவர்கள் எவ்வளவு பெரிய அடிமுட்டாள்கள் அல்லது பொய்யைப் பொருத்தமாக சொல்லத் தெரியாத பொய்யர்கள் என்பதற்கு நல்லதொரு உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், ‘‘ஒரு வேட்பாளர் மொத்தமாக பதிவான செல்லத்தக்க வாக்குகளில் ஆறில் ஒரு பங்கைப் பெறவில்லை என்றால், அவரது வைப்புத் தொகையை இழந்து விடுவார்’’ என்பது ஒரளவுக்கேனும் அனைவரும் அறிந்ததே.

இந்த வகையில், வாக்கு எண்ணிக்கையில் நோட்டாவும் செல்லத்தக்க வாக்காக கணக்கிடப் படுவதால், மொத்தம் பதிவான 1010 செல்லத்தக்க வாக்குகளில் 168 வாக்குகளைப் பெறாதவர்கள் அத்தனை பேரும் வைப்புத் தொகையை இழந்து தோற்றவர்களாகி ஒழிந்து போவார்களே ஒழிய, ஒரு போதும் வெற்றிப் பெற்றவர்கள் ஆகவே முடியாது. 

மேலும், இதைவிட சிறப்பான செயல்பாடாக ஒட்டு மொத்தமாக பதிவான வாக்குகளில் ஆறு சதவிகித வாக்கைப் பெறாத அரசியல் வியாதிகளின் சின்னங்களும் முடக்கப்படும் என்பதாகவே தெரிகிறது. ஆகையால், சின்னங்களை வைத்து நடத்தும் ஆபத்தான அரசியலுக்கும் முற்றுப் புள்ளி வைத்ததாகி விடும். 

இப்படி ஒரே வாக்குரிமையில் எத்தனை எத்தனையோ மறுமலர்ச்சி மாற்றங்களை நம் வாக்கால் மட்டுமே உருவாக்க முடியும். 

எப்பொழுதெல்லாம் மகத்தான மக்களாட்சி மலர வேண்டுமோ, அப்பொழுதெல்லாம் இதனை நாமே செய்ய முடியும் என்பதன் மூலம், உண்மையான அரசாட்சி அதிகாரம் அரசியல் வியாதிகளிடம் இல்லை; நம்மிடமே இருக்கிறது என்று மக்களே வரலாற்றை ஒவ்வொரு முறையும் புதிதாக மாற்றி எழுதுவதன் மூலம், அரசியல் வியாதிகளுக்கு உணர்த்தி உறுதி செய்யவும் முடியும். 

ஆகவே, காலம் நம்முடைய கையில் அளித்து இருக்கிற (தோ நோ)ட்டா எவ்வளவு வலிமையானது என்பதை நாம்தான் உணர்ந்து செயல்பட்டு, அறத்தின் துணையோடு, நாம் விரும்பும் மகத்தான மக்களாட்சியை மலரச் செய்ய வேண்டுமே அன்றி, 

காலங் காலமாக அரசியல் வியாதிகளுக்கு வாக்களித்து, சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொண்டது போல இனியும் வைத்துக் கொள்ளவே கூடாது. அப்படியும் வைத்துக் கொண்டால், இந்த சூனியத்தை யாராலும் அகற்றவே முடியாது. இது இக்காலத்திற்கு மட்டும் சொல்லப்பட்டது அல்ல; எக்காலத்துக்கும் இதுதான். 

உண்மையில், 49-ஓ மற்றும் நோட்டா ஓட்டுகள் அறிமுகமானதில் இருந்து இதுவரை வேட்பாளர்களை விட அதிக ஓட்டுகளைப் பெற்றதில்லை. அதனால், நோட்டாவின் வெற்றியில் இதுவரை சட்ட சிக்கல்கள் எதுவும் எழவில்லை. 

ஆமாம், நான் சொல்வது போல, வேட்பாளர்களை விட நோட்டாவுக்கு அதிகமானோர் வாக்களித்தால் என்னவாகும் என்றால், வெற்றிப் பெற்றது யார் என்றப் புது  சட்ட சிக்கல்கள் எழும். 

இதற்கு, முன் சொன்ன சட்ட சங்கதிகளின் அடிப்படையில் நல்லதொரு தீர்வே கிடைக்கும் என்று அறுதியிட்டு சொல்ல முடியுமே தவிர, என்ன தீர்வு கிடைக்கும் என்பதை இப்போது நான் சொல்ல இயலாது.

ஆமாம், நான் மட்டுமல்ல; இந்தியத் தேர்தல் ஆணையம் உள்ளிட்ட வேறு யாராலுங்கூட சொல்ல முடியாது.   

ஏனெனில்,  இப்படியொரு சட்டப் பிரச்சினை இனிமேல் தான் வரப்போகிறது என்பதால், அதற்கான சட்டமும், தீர்வுங்கூட, அதன் பின்னரே வரவேண்டும்.

எனவே, தினமணி கட்டுரையில் சொல்லியுள்ளபடி, நோட்டாவுக்காக அல்ல அல்ல; மகத்தான மக்களாட்சி மலர்வதற்காக யார் வேண்டுமானாலும், இந்தப் பிரச்சாரத்தை செய்யலாம்.

எனவே நன்கு சிந்தித்து இதற்கு வாக்களிப்பதோடு, அறத்தின் வழியில் அடுத்தவர்களிடமும் ஆதரவு திரட்டி, அனைத்து அல்லது பெரும்பான்மை வாக்குகளை நோட்டாவில் விழச் செய்வதன் மூலம், அரசியல் வியாதிகளை வீழச்செய்து, அறத்தின் துணையோடு மகத்தான மக்களாட்சி மலர துணை நிற்போம்.

ஆமாம், தோட்டா என்கிற துப்பாக்கி குண்டு என்பது, வன்முறை வழி.  ஆனால், அதே போன்ற நோட்டாவோ சட்டப் படியான  அறவழி என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்து வாக்களியுங்கள்!ஒவ்வொருவருக்கும் உணர்த்தி வாக்களிக்க வைத்து  நல்வாழ்வு வாழுங்கள்!!

Explanation of the NOTA vote!

People Who all say "Voting in 'NOTA-None Of The Above' is useless at all" are only pol(lu,i)ticians or their slaves. Rather saying them stupids, it is perfect to say, they are liars much cautious to obstruct any positive change from taking place in the nation by NOTA.

YES. If 1000 electors vote for NOTA in a constituency, which has 1110 total electors, assume that 100 electors did not vote, and 10 electors only voted to those contested Pol(i,lu)ticians.

The planned lie is purposely spread as the candidate will win, who scored more votes among this polled 10 votes only.

It makes me laugh to think about these planned liars stupidity and madness.

Yes. These people are senseless or who cannot say lie properly. The truth is "A candidate loses his deposit amount, if he did not score 1/6th of the total polled votes for him. Most of us aware of this fact. 

As NOTA is counted for valid polled votes, all the candidates who all not scored 168 of total polled 1010,  deposit amount will be lost and they are declared lost in the election. They never can be a winner.

More specially, all pol(i, lu)ticians who did not score 1/6th of total polled votes,  their respective symbol registration will be cancelled. So, the dangerous symbol based politics brought to an end.

As such, we can make many reforms and positive changes, only by our voting right.

We can do this, whenever we want democracy to flourish. By doing this, we can rewrite  History every time newly and make the pol(i, lu)ticians to realise the power lies with the Public not with them.

Time has given NOTA in our hand, like a mighty weapon. We must act with understanding and support of ethic, have to establish the democracy as how we want.

Hereafter, we should not continue the self witch crafting practice by casting vote to pol(i, lu)ticians. If we continue to vote for them, nobody can stop the witchcraft to us.

NOTA is the ethical weapon in your hand now. Use it to make the Pol(i, lu)ticians as your slaves.

Source: This is translation of Original article by who is Researching in Law and contributing seven books to the Society Mr. Warrant Balaw.

இது நோட்டா வாக்குரிமை குறித்த இந்தி மொழியாக்கம்.

नोटा (NOTA) केलिए एक विवरण है ।

लोगोंग कोण बोलते हैं की "नोटा (NOTA) केलिए वोट करेगा तो कुछ बी उपयोग नहीं है ", वो राजनेताओंग या उनलोगोंका धासवाले हैं। उनलोगोंको बेवकूफ बोलने से अच्छा है उनको बोलना जूठेवाले हैं। इस कारण से ये लोग बहुत ज्यादा सतर्क हैं की नोटा (NOTA) से कोई सकारात्मक नहीं होना चाहिए हमारा देश में।

हाँ। एक चुनाव क्षेत्र में १००० मतदाता नोटा (NOTA) केलिए वोट करेगा तो, बोलेंगे की १०० मतदाता वोट नहीं किया, और सिर्फ ११० मतदाता वो लड़नेवाले राजनेताओंग को वोट किया है। 

एक जुट जानबूझकर प्रसार करते हैं की वो राजनेता जीत हो जायेगा किसको ज्यादा वोट मिला ये ११० वोट में। 

मुझे हसना आती है इस बात और ये जूठेवाले को सोचने में।

हाँ। ये लोगोंको दीमाक नहीं है या इनको ढंग से जूट बोलना नहीं आता है। एक चीज़ हम सबको मालुम है की किसको १/६ (कुल मतदान हुआ) वोट मिला नहीं , वो उम्मीदवार को डिपाजिट पैसा खो जाता है।

पूरा नोटा (NOTA) वोट वैध वोट केलिए गिनती है। इसलिए वो राजनेताओंग सबको १६८ बी मिला नहीं ये १०१० (कुल मतदान हुआ) वोट्स से , उन सबको डिपाजिट पैसा खो जाएगा और वो हार जायेगा। 

एक और बात विशेष है इस में। वो राजनेताओंग किस किसको १/६ (कुल मतदान हुआ) वोट्स बी मिला नहीं है उनको पार्टी प्रतीक बी कैंसिल हो जाएगा। ऐसा ये ख़तरनाक प्रतीक चुनाव अभ्यास बी बंध कर सकते हममे।

हम ऐसा कबि बी कर सकते है हमारा जनतंत्र विकास पननेलिए। इस से नया इथिक्स लिक सकते हैं। ये करने में राजनेताओंग को समज में आएगा की असलि अधिकार जनता को पास है नेताओंग को पास नहीं है करके।

इस समय में नोटा (NOTA) हमारा हाथ में है. नोटा(NOTA) है एक मजबूत हाथियार। हम बराबर समझना चाहिए और धर्म का समर्तन लेकर जनतंत्र स्थापति करना है , कैसा जनतंत्र हमरेलिए पैसंठ है ऐसा।

यहांसे राजनेताओंग को वोट करके हम हमारा ऊपर जादूटोना रूकना पड़ेगा। फिर बी राजनेताओंग को वोट करेंगे तो कोई बी वो जादू से हमको बचा नहीं सकते ।

'नोटा' (NOTA)धर्म का हाथियार- अभी हमारा हाथ में है। यह उपयोग करना है , पूरा राजनेताओंग को आपका दास बनने केलिए ।


धन्यवाद ।

பிற்சேர்க்கை நாள் 16-04-2019 ; காலை மணி 08.30 

நோட்டாதான் அரசியல்வியாதிகளை சட்டப்படி துலைத்தெடுக்க மக்களுக்கு கிடைத்துள்ள ஒரே அறவழித்தோட்டா என்ற நம்முடைய இத்தமிழ்க் கட்டுரையும், ஆங்கில இந்தி மொழியாக்கங்களும், இதன் யூடியூப் காணொளிகளும் அசைக்க வேண்டியவர்களை அசைத்து, பயத்தை உண்டு பண்ணி இருக்கு என்றுதான் சொல்ல வேண்டும்.

இதனை உறுதிப்படுத்தும் வகையிலேயே இதுபோன்ற செய்திகள் வருகின்றன தொடர்ந்து இரண்டு நாட்களாக வருகின்றன. இது நேற்று 15-04-2019 அன்று வந்தது.

இந்த செய்தி இன்று 16-04-2019 அன்று வந்துள்ளது.

அதாவது, நோட்டா அதிகமாகி விடக்கூடாது என்ற தங்களின் கருத்தை இவர்களாகவே சமூகத்தில் திணிக்கிறார்கள். உண்மையில் இவர்களுக்கு (நோ, தோ)ட்டாவால் எந்த பிரச்சனையும் இல்லை என்றால் இதையெல்லாம் செய்ய வேண்டிய அவசியமே இல்லை என்பதே வாக்காளர்கள் மிக முக்கியமாக புரிந்து கொள்ள வேண்டியதும், நோட்டாவை ஆதரித்து அறத்தின் வழியில் ஓட்டளிப்பதும் கடமையாகும்!

ஆனால், நிச்சயமாக கடந்த தேர்தல்களை விட, இம்முறை மட்டுமல்ல; இனிவரும் ஒவ்வொரு முறையும் நோட்டாவின் பலம் கூடிக் கொண்டேதான் போகும். இதனை யாராலும் தடுக்க முடியாது.

ஆமாம், அரசியல்வியாதிகளின் அடிமைகளாக இருப்பவர்கள் கூட, பொறுத்தது போதுமென பொங்கி எழுந்து நோட்டாவில் ஓட்டுபோடும் காலமும் விரைவில் வரும்.
நாம் முன்னரே சொன்னபடியும், மேற்கண்ட செய்தியில் உள்ளபடியும், இப்போது நோட்டா சில கட்சிகளை மட்டுமே முந்தி இருக்கிறது என்பதே முன்னேற்றந்தான். இம்முன்னேற்றமே அரசியல் வியாதிகளையும், அவர்களைச் சார்ந்திருக்கும் அடிமைகளையும் பயங்கொள்ளச் செய்துள்ளது.

இதுவே எல்லாம் கட்சிகளையும் மிஞ்சும்போது தான், நாம் சொல்லும் மகத்தான மக்களாட்சி மலர்வதற்கான மறுமலர்ச்சிகள் நடக்கும் என்பது இப்போது உங்களுக்கும் நன்கு புரிந்திருக்கும்.
பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

Tuesday, April 2, 2019

நோட்டா (ஓ, போ)ட்டால் மட்டுமே, மகத்தான மக்களாட்சிக்கு அறவழிப் பிறக்கும்!



உலகின் மிகப் பெரிய ஜனநாயகம் என்று சொல்லக் கூடிய நம் நாட்டில் ஐந்து வருடத்துக்கு ஒருமுறை தேர்தல் என்கிற திருவிழா நடந்துக் கொண்டுதான் இருக்கிறது. 

ஆனால், எந்த ஆட்சியிலும், பெரும்பான்மையான மக்கள் நிம்மதியாக இருந்ததாக சரித்திரமில்லை. 

ஆமாம், தாங்கள் விரும்பும் அரசியல்வியாதிகள் ஆட்சிக்கு வந்ததால், அவர்களை ஆதரித்த சிறுபான்மை மக்கள் மட்டுமே சந்தோசம் அடைகிறார்கள். மற்றப்படி பெரும்பான்மை மக்களின் பாடு படுதிண்டாட்டம்தான்!

இங்கு பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை என்று சொல்லப்படுவது வழக்கமான அர்த்தத்தில் அன்று. மாறாக, வேட்பாளர்கள் வாங்கும் வாக்கு விகிதத்தின் அடிப்படையிலேயே சொல்லப்படுகிறது.  

நம்மை அடிமைகளாக வைத்திருந்த ஆங்கிலேயர்களை விரட்டி விட்டு, அவர்களின் வழியை நாம் பின்பற்றினால், நாம் நாசமாவதைத் தவிர வேறு வழியில்லை என்று, சத்தியவான் காந்தி இன்றைக்கு சுமார் 110 வருடங்களுக்கு முன்பே, தனது முதல் மற்றும் தத்துவ நூலான இந்திய சுயராஜியத்தில் எழுதி விட்டார். 

ஆமாம், இதுபற்றி விரிவாக அறிய பாராளுமன்றம், பத்திரிகை குறித்து மகாத்மா காந்தி! என்ற கட்டுரையை சொடுக்கிப் படித்தப்பின் தொடரவும். 

அன்றே சொன்ன சத்தியவான் காந்தியின் கருத்துக்கள் இன்றும் அப்படியே அரங்கேறிக் கொண்டுதான் இருக்கிறது என்ற தெளிவுக்கு வந்து விட்டீர்களா? 

சரி, அப்படியானால் நம் நாட்டில் மக்கள் நிம்மதியாக வாழ மக்களாட்சி மலர வேறு வழியே இல்லையா என்ற கேள்வி எழுந்தால், சாவி இல்லாத பூட்டுகள் தயாரிக்கப்படுவது இல்லை என்பது போலவே எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு இல்லாமல் இல்லை. 

ஆனால், பிரச்சினையை தீர்க்க  வேண்டிய அரசியல் வியாதிகள் தங்களின் சுய நலனுக்காக தீர்க்க முன்வரவில்லை என்றால், மக்கள்தானே தீர்த்துக் கொள்ள வேண்டும்?! 

இதற்கு நமது நலனுக்காகத்தான் அரசே ஒழிய, அரசியல் வியாதிகளுக்காக நாம் அல்ல என்ற தூய எண்ணம், முதலில் கட்சிப் பாகுபாடு இன்றி ஒவ்வொருவரின் மனதிலும் மாற்றமாக ஏற்பட வேண்டும். 

அப்படி ஏற்பட்டால் மட்டுமே மக்களாகிய நம்மால் மக்களாட்சிக்கு வழிகோல முடியும். இதற்கு முன்பாக நம் நாட்டில் மகத்தான மக்களாட்சி மலர... தடைகளாக அல்லது குறைகளாக இருப்பது என்னென்ன? 

இதனை முறைப்படுத்த நாம் என்னென்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றிய, அடிப்படைப் புரிதல் அவசியம். ஆகையால், மகத்தான மக்களாட்சி மலர... என்ற இந்தக் கட்டுரையையும் படித்தப் பின், இதனை தொடரவும். 

படித்து விட்டீர்களா... மக்களாட்சி என்றப் பெயரில் மக்கள் விரோத ஆட்சியே நடத்தப்பட்டு வருகிறது என்பது தெள்ளத் தெளிவாகப் புரிந்தா? 

நம் நாட்டில் வாழும் சுமார் 125 கோடி மக்களுக்கே மகத்தான மக்களாட்சியாக இல்லாத நாடு, எப்படி உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடாக இருக்க முடியும் என்ற கேள்விக்கான விடையை, சுமார் பத்து வருடங்களுக்கு (மு, பி)ன்னர் வரும் ‘ஓ’ போடு! 49-ஓ போடு!! என்றத் தலைப்பில் தினமணியில் எழுதிய கட்டுரையின் ஆரம்ப வரிகளில் அறிவீர்கள்.  

சரி, மகத்தான் மக்களாட்சி மலர... கட்டுரையில் சொல்லியுள்ள இந்த விசயம் அரசியல் வியாதிகளுக்கும், அவர்கள் தன்வசப்படுத்தி வைத்துள்ள ஊடகங்களுக்கும் (தெ, பு)ரியாதா என்ன? 

ஆமாம், இந்த மகத்தான் மக்களாட்சி மலர... கட்டுரையை மிகவும் சிந்தித்து பத்திரிகைகளுக்கு எழுதி அனுப்பினால், வெளியிடுவார்கள் என்பதற்காகவே எழுதி அனுப்பினேன். ஆனால், யாருமே வெளியிடவில்லை. 

ஆமாம், இதையெல்லாம் வெளியிட்டு யாருமே சொந்தச் செலவில் சூனியம் வைத்துக் கொள்ள விரும்பமாட்டார்களே! 

சரி நம்ம விசயத்துக்கு வருவோம். 

இப்படித்தான் சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு, ‘‘நான் எந்த வேட்பாளரையும் தேர்ந்ததெடுக்க விரும்பவில்லை என்று வேட்பாளர்களை நிராகரிக்கும் உரிமை வேண்டும்’’ என்ற முழக்கம் ஏற்பட்டது. 

இதில் மறைந்த பத்திரிகையாளர் ஞாநி, இந்திய ஆட்சிப் பணி ஊழியர் ஆ.கி. வேங்கடசுப்ரமணியம் ஆகியோர் முக்கிய பங்காற்றினாலும், அவர்களுக்கு போதிய சட்ட விழிப்பறிவுணர்வு இன்மையாலும், இந்திய தேர்தல் ஆணைய ஊழியர்களுக்குங் கூட, போதிய சட்ட விழிப்பறிவுணர்வு இல்லாததால்.., 

என்னைப் போன்ற ஓரிரு வாக்காளர்களைத் தவிர மற்றவர்கள் வேட்பாளர்களை நிராகரித்து வாக்களிக்க முடியாமல் சில ஆண்டுகள் தவியாய் தவித்தனர். 

இதற்கிடையில் சமூகத்திற்கான சட்ட ஆராய்ச்சியில் களமிறங்கிய நான், வேட்பாளர்களை நிராகரிக்கும் உரிமை குறித்து ஆராய்ந்து, 2006 ஆம் ஆண்டில் நடந்த சட்டமன்ற தேர்தலில், வாக்காளர்கள் பிடிக்காத வேட்பாளர்களை நிராகரித்து வாக்களிக்க ஏதுவாக, ‘‘உங்கள் பார்வையில் தேர்தல்...’’ என்ற சுமார் பதினாறு நிமிட ஆவணப்படத்தை எடுத்து வெளியிட்டேன்.

இதனால், 49-ஓ ஓட்டு (இப்போதுள்ள நோட்டா) குறித்து தெளிவில்லாமல் இருந்த மறைந்த ஞாநி, ஆ.கி.வே உள்ளிட்ட பலருக்கும் தெளிவு ஏற்பட்டு அவர்களும் பிரச்சாரம் செய்யவே ஒவ்வொரு தொகுதியிலும் ஒன்றைப் படையில் இருந்த 49-ஓ ஓட்டின் எண்ணிக்கை இரட்டைப்படை எண்ணுக்கு முன்னேறியது.

இதனால், அரசியல்வியாதிகளின் மீது அதிருப்தியில் இருந்த ஆர்வலர்களிடையே 49-ஓ ஒட்டு குறித்த ஆர்வம் மேலும் மேலோங்கியது. 

இந்த நிலையில் 2009 ஆம் ஆண்டில் நடந்த பாராளுமன்ற தேர்தலையொட்டி, வேட்பாளர்களை நிராகரிக்கும் உரிமை குறித்து தெளிவுபடுத்தும் விரிவான கட்டுரையை எழுதி பத்திரிகைகளுக்கு அனுப்ப, அதனை தினமணி நாளிதழில் வெளியிட்டார்கள். 


இந்தக் கட்டுரையை வெளியிட்டதற்காக தினமணி நாளிதழுக்கு சமூகம் என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறது.

ஆம், வேட்பாளர்களை நிராகரித்து ஓட்டுப்போடும்  உரிமையின் ஒரு மைல் கல்லாகவும் இன்றுள்ள நோட்டா பட்டனுக்கு அஸ்திவாரமாகவும் இந்தக் கட்டுரை அமைந்தது என்றால் சிறிது மிகையல்ல! 

ஆமாம், இந்தக் கட்டுரையை, நம் வாசகர்கள், தன்னார்வலர்கள் பலரும் தங்களின் பகுதிகளில் பேனராக வைத்து விழிப்பறிவுணர்வை ஊட்டினார்கள். இதனால், முன் தேர்தலில் ஒவ்வொரு தொகுதியிலும் இரட்டை இலக்கத்தில் இருந்த 49-ஓ ஒட்டின் எண்ணிக்கை, மூன்று நான்கு இலக்கமாக மாறி தன் வெற்றியைக் கொண்டாடியது.  

ஆமாம், பத்தாண்டுகளுக்கு முன்பு இந்த கட்டுரையை தினமணி நாளிதழ் வெளியிட்டு இருக்கா விட்டால், வேட்பாளர்களை நிராகரிக்கும் 49-ஓ, ஒட்டு பரவலாக பலருக்கும் தெரிந்திருக்காது. தெரிந்தாலும், தேர்தல் ஊழியர்களின் அரைகுறை அறிவால், விரும்பியபடி வாக்களித்திருக்க முடியாது. 

இக்கட்டுரையின் இறுதியில் நான் சொல்லியுள்ளபடி அடுத்தப் பரிணாம வளர்ச்சியாக இப்போதுள்ள நோட்டா என்ற ஓட்டுப் பொத்தானும் வந்திருக்காது. நோட்டா வந்த வரலாற்றை அறிய விரும்பினால், இப்ப என்ன பண்ணுவ? என்ற கட்டுரையைப் படித்து தெளியவும்.

இல்லையெனில், நம் முன்னோர்கள் பாடுபட்டு பெற்றுத் தந்த சுதந்திரத்தின் (அ, பெ)ருமை புரியாமல் அடிமையாக இருப்பது போலவே, நாங்கள் போராடிப் பெற்ற 49-ஓ என்ற நோட்டா ஓட்டால் மட்டுமே, நமக்கான மகத்தான மக்களாட்சி மலரச் செய்ய முடியும் என்பது தெரியாமலேயே போய்விடும். 

அரசியல் வியாதிகள் அவரவர்களது சின்னங்களுக்கு ஆதரவு கேட்பது போலவே, மகத்தான் மக்களாட்சி மலர வேண்டும் என நினைக்கும் எவர் ஒருவரும் 49-ஓ என்கிற நோட்டாவுக்கு ஆதரவாக தனியாகவோ அல்லது குழுவாகவே பிரச்சாரம் செய்யலாம் என்பதை, தினமணி கட்டுரையின் இறுதிப் பகுதியில் தெளிவுபடுத்தி உள்ளேன்.

தினமணி நாளிதழ் வெளியிட்ட அந்தக் கட்டுரையைப் படித்தால், இப்போதுள்ள நோட்டா ஓட்டை போட, அப்போது எவ்வளவு அறியாமை இருந்தது என்பதும், அதனால், எவ்வளவு கஷ்டப்பட வேண்டி இருந்தது என்பதும், அவ்வோட்டு வெளிப்படையாக தெரியும் என்பதால், அவ்வோட்டைப் போடவே பலரும் பயந்தனர் என்பது உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் புரியும். 

ஆமாம், சமூதாய நலன் குறித்த என்னுடைய அறவழி எண்ணங்கள் எழுத்து வடிவங்களாகி, அது எப்படியே நடைமுறைக்கு வந்துக் கொண்டேதான் இருக்கிறது. இனியும் எல்லாம் வல்ல இயற்கையின் துணையோடு வர இருக்கிறது.

இதனை விளக்கவே நோட்டா (ஓ, போ)ட்டால் மட்டுமே, மகத்தான மக்களாட்சிக்கு வழிப் பிறக்கும் என்ற இந்த கட்டுரை! 

ஆமாம், தேர்தல் மூலம் மகத்தான மக்களாட்சிக்கு வழிக் (கா, கூ)ட்டும் இறுதிக் கட்டுரையும் இதுவே!!
   
ஆமாம், உங்களுக்கு எந்தவொரு அரசியல் சார்ந்த நபரையும் பிடித்து இருக்கலாம். அதற்காக, அவருக்கு வாக்களித்தால், நம் நாட்டில் எக்காலத்திலும் மக்களாட்சி மலர வழியில்லாமலேயே போய்க் கொண்டே இருக்கும்.

எனவே, நாட்டின் நலனை கருத்தில் கொண்டு, தேர்தலின் போது உங்களுக்குப் பிடித்த அரசியல் வியாதிகளை தூக்கி ஒரு ஓரமாக வைத்து விடுங்கள்.

அப்படியே உங்களது வாக்கை சமூக அக்கறையோடு நோட்டாவில் செலுத்தி, அத்தொகுதியில் நிற்கும் எல்லா வேட்பாளர்களும் பெறும் வாக்கை விட,  அதிக வாக்குகளைப் பெற்று நோட்டாவை முந்தச் செய்யுங்கள்.

இப்படி ஒவ்வொரு தொகுதியிலும் நோட்டா வாக்குகள் முந்தினால், அங்கு வெற்றி பெற்றது யார் என்ற சட்டப் பிரச்சினை தானே உருவாகும். அப்படி உருவாகும் போதுதான்..,

மகத்தான மக்களாட்சி மலர... கட்டுரையில் சொல்லியுள்ள ஒவ்வொரு சட்ட விரோத சங்கதிகள் குறித்தும் விவாதங்கள் எழத் தொடங்கி, ஏதோவொரு வகையில் நியாயமான தீர்வும் காணப்படும்.

ஆமாம், மகத்தான மக்களாட்சி மலர வேண்டுமென்று நம்மிடம் மேலோங்கியுள்ள  அறத்திற்கு, அந்த அறமே துணை நின்று நம் நியாய எண்ணங்களை நிறைவேற்றித் தரும். இதுதவிர வேறு வழிகள் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. 

ஆமாம், இது அறத்தால் ஆகவேண்டிய காரியமே அன்றி, அற்ப அரசியல் வியாதிகளால் ஆகக் கூடியது அன்று என்பதை இனியொருபோதும் மறக்காது, அறத்தின் பக்கம் நிற்கும் விதமாக தேர்தலில் அரசியல் வியாதிகளைப் புறக்கணித்து, நோட்டாவை ஆதரியுங்கள்.  

இப்படி ஆதரித்து நாம் நினைக்கும் மகத்தான மக்களாட்சி மலர்ந்து விட்டால், அடிப்படை கட்டமைப்பு சரியாக இருந்தால் அனைத்தும் சரியாகவே இருக்கும் என்பதற்கு இணங்க, இன்று நாட்டில் இருக்கும் மற்றப் பெரும்பாலான பிரச்சினைகள் எல்லாம் தானாகவே தீரும். 

குடிமக்களாகிய நாமும் நிம்மதியாக வாழலாம். அவ்வளவே!

பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

பத்திரிகை செய்திகள்

அறவழி நோட்டா

அறவழி நோட்டா
மகாத்மா போதித்த வாக்குரிமை!

நோட்டா: NOTA

நோட்டா: NOTA
விளக்கம்: EXPLANATION

நூல்களின் முகப்பு

Followers

முக்கியப் பக்கங்கள்

அடிப்படை சட்டங்கள்

  • 1. இந்திய சாசனம் 1950
  • 2. நீதிமன்ற சாசனம் 1872
  • 3. இந்திய தண்டனை சட்டம் 1860
  • 4. குற்ற விசாரணை முறை விதிகள் 1973
  • 5. உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908

நம் நூல்களைப் பற்றி

நீதியைத்தேடி.... நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் வரிசையில்...
1 குற்ற விசாரணைகள்
2 பிணை (ஜாமீன்) எடுப்பது
எப்படி?
3 சட்ட அறிவுக்களஞ்சியம்
4 சட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்
5 சாட்சியங்களைச் சேகரிப்பது
எப்படி?
6 கடமையைச் செய்!
பலன் கிடைக்கும்
7 மநு வரையுங்கலை!Recent Posts Widget

இந்நூல்கள் அனைத்தும் உங்களின் சட்ட விழிப்பறிவுணர்வுக்காக
மத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவியோடு
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பொது நூலகங்கள், மத்திய சிறைச்சாலைகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

சொந்தமாக தேவைப்படுவோர், உ(ய)ரிய நன்கொடையைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு வாட்ஸ்அப் எண் 09842909190 ஆகும்.

எல்லாப் பதிவுகளும்!

நம் தள வகைகள்

பயின்றோர் (20-08-16)