உலகத்தில் படைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு ஜீவராசிகளுக்கும் ஒரு உன்னதமான நோக்கம் இருக்கிறது. இந்த வகையில், மனிதனின் ஆணவத்தை அடக்குவதற்காகவே படைக்கப்பட்ட உன்னதமான உயிரினம் கொசுவாகத்தான் இருக்கும்!
ஆமாம், மற்ற ஜீவராசிகளை எல்லாம் பிடிக்க வலை விரிக்கும் மனிதன், கொசுவுக்கு மட்டும் பயந்து அவனுக்கு கொசுவலையை விரித்து கட்டி, உள்ளே படுத்து உறங்குகிறான் என்பதில் இருந்து, மனிதனின் ஆணவத்தை அடக்க படைக்கப்பட்டதே கொசு என்ற உண்மை விளங்கனும்.
இது ஏற்றுக் கொள்ள கூடியதாக இல்லை என்று சொல்பவர்களுக்கு இன்னொன்றை உதாரணமாக சொல்லலாம்.
ஆமாம், வெளியில் ஆணவத் திமிரில் குற்றம் புரிபவர்களை வழக்கு பதிவு செய்து சிறையில் அடைப்பார்கள் அல்லவா? சரி, சிறையிலும் ஆணவத்தோடு நடந்தால் என்ன செய்வார்கள்??
அடி உட்பட, என்னென்ன கொடுக்க முடியுமோ அத்தனையையும் பகலில் கொடுப்பார்கள். அந்த வலி அவரவர்களது உடல் வாகைப் பொறுத்து ஓரிரு நாட்கள் முதல் நீடிக்கும். ஆகையால், அடி வாங்கிய அன்று உடல் வலியால் தூங்க முடியாது அல்லவா?
எனவே, அவர்களே மிகவும் நல்லவர்களாக இரவானதும் வலியை மறைக்கும் அய்யோபதி மாத்திரைகளை ஒன்றுக்கு இரண்டாக கொடுத்து விடுவார்கள். ஆகையால் வலி தெரியாமல் போய் தூங்கிவிட முடியும்.
ஒருவேளை அவர்கள் கொடுத்த அடியால், தழும்புத் தடையமோ, உடல் உபாதைகளோ, உயிரோ போய் விட்டால் அவர்களுக்கு சட்டப்பிரச்சினைகள் வரும் அல்லவா?
ஆகையால், தனியொரு லாக்கப்பில் வேறு துணி மணிகள் எதையும் கொடுக்காமல் ஜட்டியோடு அடைத்து விடுவார்கள், சமையத்தில் ஜட்டி இல்லாமலும் அடைத்து விடுவார்கள்.
கொசுக்கடியால் அவன் என்னாவான் என்பதை சற்றே யோசித்தால், அவன் ஆயிரம் பேரை கொலை செய்தவன் என்ற ஆணவத்திமிரில் இருந்தவனாக இருந்தாலும் அடங்கி விடுவான். இப்போது புரிகிறதா, கொசு படைக்கப்பட்டதன் உன்னத நோக்கம்?!
இதெல்லாம் வெளியில் இருந்தால் புரியாது. கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு சிறைக்கும் சென்று வந்தால்தான், இது போன்ற பல்வேறு சிறப்பு இயல்புகளை புரிந்து கொள்ள முடியும்.
முதலில் கொல்லாமை நெறி கொசுவுக்கு பொருந்துமா என்ற கேள்வி பலருக்கு இருக்கிறது.
கொசுவை கொல்வதற்கு, அது அற்ப படைப்புகள் அல்ல என்றே தோன்றுகிறது. ஆனால், அது நம்மை கடித்தே கொல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டுமே; அதற்காகவேனும் கொல்லத் தோன்றுகிறது!
இல்லையெனில், நமக்கும் அதுக்கும் என்ன பங்காளிச் சண்டையா அல்லது பரம்பரை சண்டையில் பழிவாங்கும் நடவடிக்கையா?
ஆமாம், மனிதன் நிம்மதியாக இருக்கும் ஒரே நேரமான தூக்கத்தையும் தொலைத்து, மனநிம்மதி, ஆரோக்கியம் என அத்தனையையும் இழந்து நோய் வாய்ப்பட்டு இறக்கிறான் என்கிறது, அய்யோபதி மருத்துவம். பல்வேறு விதமான காய்ச்சல்கள் கொசுவால்தான் வருகின்றன என்கிறார்கள். இது பொய் என்று சொல்வோரும் இருக்கிறார்கள்.
இதில் எது உண்மை, எது பொய் என்று தெளிவான முடிவை சொல்வதற்கு, நான் அதுபற்றி ஆராயவில்லை.
கொசுவை ஒழிக்க அரசு கோடிக்கணக்கில் செலவழிக்கிறது. இணையத்தால் கண்காணித்து கண்டறிந்து துல்லியமாக அழிக்கிறார்களாம். யார் கண்டது?
இதுக்காக தனி நபர்கள் செய்யும் செலவுகளை மொத்தமாக கூட்டினால், ஒரு நாளில் கோடாணகோடி அல்ல, பில்லியன், டிரில்லியன் வரை கூட வியாபாரம் நடக்கிறது.
ஆமாம், கொசு ஒழிப்பு சுருள், திரவம் என பல்வேறு கார்ப்பரேட் கம்பெனிகள் கொள்ளை லாபம் அடிக்கின்றன. ஆனாலும், கொசுக்களை கட்டுப் படுத்த முடியவில்லை. கூடவே நோய்களையும் கட்டுப் படுத்த முடியவில்லை. ஆனால், எல்லாமே வீண்தான்!
நாம் எவ்வளவுதான் நம் இடத்தை தூய்மையாக வைத்திருந்தால், அக்கம் பக்கத்து இடங்கள் தூய்மை இல்லாதபோது, அங்கு உற்பத்தியாகும் கொசுக்களால் நாமும் துன்பத்தை அனுபவத்தித்தான் ஆகவேண்டி உள்ளது. தப்பவே முடிவதில்லை.
தப்புவதற்காக சமூக வலைத்தளங்களில் பரவிக் கிடக்கும் ஆயிரமாயிரம் செய்திகளும் அற்ப விளம்பரத்துக்காக வெளியிடப்பட்டுள்ளதே தவிர, எதிலும் அனுபவப்பூர்வ உண்மையில்லை என்பது, காசை செலவழித்து கண்ட அனுபவ உண்மை. இந்த அனுபவம் உங்களுக்கும் இருந்திருக்கும்.
இந்த நிலையில், நாம் தூக்க பயன்படுத்தும் காடா துணிப்பையைப் போல, எந்த காலத்திலும் நாம் தூங்க காடா துணியால் ஆன கொசு பை ஒன்றை மாதிரிக்காக தைக்க திட்டம் போட்டு இருந்தேன். இதுக்கெல்லாம் கூட திட்டம் போட்டேன் என்றால், எவ்வளவு தொல்லை அனுபவித்து இருப்பேன் என யோசித்துக் கொள்ளுங்கள்.
இதுபற்றி சிலரிடம் சொன்னபோது, சரியான திட்டம் என்றார்களே ஒழிய, ஏனோ இத்திட்டத்தை செயல் படுத்தவில்லை. ஆகையால், எந்த அளவிற்கு பலன் என்பதை உறுதியாக சொல்ல முடியவில்லை.
ஆனால், அதற்குள் இரண்டு தினங்களுக்கு முன்பு திடீர் யோசனை ஒன்று தோன்றியது. இது, வறுமையில் வாழும் உனக்கு எதுக்கு வீண் செலவு என்பதாகவும், இதுவே மிகவும் சரியாகவே இருக்கும் என்றும் தெளிவாகத் தோன்றியது. ஆகையால், அப்போதே அதனை செய்துப் பார்த்தேன்.
என்ன ஓர் ஆச்சரியம். கொசுக்களின் ஆணவம் அடங்கியதா... இல்லை அங்கிருந்தே ஓடி விட்டதா என்று தெரியவில்லை. இவ்விரண்டு நாட்களாக அவ்வளவாக கொசுத்தொல்லை இல்லை.
ஆமாம், ஏதோ ஒன்றிரண்டு மட்டுமே இருக்கிறது. இதுவுங் கூட வெளியில் இருந்து வந்த விருந்தாளி கொசுவைப் போல தெரிகிறதே தவிர, இவ்வளவு நாளாக கூடவே இருந்து கடித்து குடும்பம் நடத்தின கொசுக்கள் போலவோ, அவைகளின் சொத்துரிமை கோரும் வாரிசுகளைப் போலவோ தெரியவில்லை.
ஆகையால், செலவே இல்லாமல் செய்துப் பார்த்து விட்டு உங்களின் அனுபவத்தையும் சொல்லுங்கள்.
நீங்கள் செய்ய வேண்டியது, தினமும் சமையலுக்கு உறிக்கும் சிறிய வெங்காயம் மற்றும் பூண்டுத் தோலை வைத்து புகை மூட்டம் போட்டுப் பாருங்கள். உண்மை புரியும்!
பொதுவாக இவ்விரண்டையும் சாத்வீக குணங் கொண்டவர்கள் சாப்பிட கூடாது என்பார்கள். ஏனெனில், ‘‘இது தாமச குணத்தை தரவல்லது’’ என்பார்கள். இதனை பச்சையாக சாப்பிட்டவர்களின் பக்கத்தில் கூட நிற்கவே முடியாது என்பது பலருக்கு அனுபவமிருக்கும்.
மனிதனுக்கே தாமச குணத்தை கொடுக்கும் என்றால், இதன் புகைக்கு கொசுக்கள் எப்படி நம்மை கடிக்க நம் வீட்டில் தாக்குப் பிடித்து தங்கும்?!
எனவே, என் சோதனை சரிதானா என்பதை இன்றே சொதித்து பார்த்து விட்டு, சரியாக இருந்தால் சொல்ல வேண்டியவர்களுக்கு எல்லாம், இக் கொசு(ரு) சமாச்சாரத்தை சொல்லி அவர்களின் பணம், ஆரோக்கியம் உள்ளிட்ட அனைத்தையும் காப்பாற்றிய, கார்பரேட் கம்பெனிகளை ஒழித்த பாக்கியவானாக ஆகுங்கள்.
நாகரீக கோமாளிகளாக நரகத்தில் வாழும் நமக்கு, நம் முன்னோர்களின் வழியில் ஆரோக்கியத்தைப் பேன என்னென்ன வழிகள் இருக்கிறது என்றும் ஆராய்ந்து கொண்டுதான் இருக்கிறேன். முடிந்ததும் சொல்கிறேன்.
பகிர்ந்து கொள்ள
வாசகர்களின் கவனத்திற்கு...
இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.
இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.
சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.
0 comments:
Post a Comment