No law no life. Know law, know life! நியாயந்தான் சட்டம்! அதற்கு தேவையில்லை வக்கீழ் பட்டம். வக்கீழ் என்றாலே, கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்களே! இடைத்தரகர்களே!! நீ வாழ, நீயே வாதாடு!

நீ வாழ... நீயே வாதாடு... வரவேற்பு வாழ்த்து!

No law, no life. Know law, know life! என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியத்தை உணர்ந்து, ‘‘நீதியைத்தேடி... சட்டப் பல்கலைக் கழகத்திற்கு’’ வருகை தந்துள்ள உங்களை வருக என வரவேற்று, உங்களுக்கான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்று பயனைப் பெறுக என வாழ்த்துகிறோம்!
முக்கிய அறிவிப்பு : இந்த இணையப்பக்கத்தை புதுப்பிக்கும் பணி நடந்துக் கொண்டிருப்பதால், சில பதிவுகள் அல்லது இணைப்புக்கள் கிடைக்காமல் போகலாம்!

Wednesday, January 9, 2019

மகத்தான சாதனைகளுக்கு வழிகாட்டும், ‘மநு வரையுங்கலை!’ஏற்கெனவே நம்முடைய சட்ட விழிப்பறிவுணர்வு நூல் வரிசையில் ஏழாவது நூலான ‘‘மநு வரையுங்கலை!’’ நூலைப்பற்றி நிறையவே எழுதியாகி விட்டது. மேலும், அந்த நூலைப் படித்த வாசகர்களால் அவ்வப்போது நிகழ்ந்த அதிசயங்களும், மத்திய சிறைகளில் மநு வரையுங்கலை! என்ற கட்டுரையின் வாயிலாக எழுதப்பட்டு விட்டன.


இதன் உச்சமாக செய்யாத கொலைக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, இதற்காக பொய்யர்கள் உள்ளிட்டோருக்கு வாய்க்கரிசியாக சுமார் 30 இலட்சத்தை செலவு செய்து, சுமார் பத்து வருடங்களுக்கு மேல் சிறை தண்டனையை அனுபவித்து வந்த மதுரையை சேர்ந்த கணேஷ் கண்ணன்  ரூபாய் 1800 நன்கொடை செலுத்தி நம் நூல்களைப் வாங்கிப் படித்து மேற்கொண்ட முயற்சிகளால் ஒரு வருடத்திற்குள் விடுதலை யானார். 

இந்த வகையில் ‘‘மநு வரையுங்கலை!’’ நூலை கடலூர் சிறையில் படித்த விசாரணை கைதி சங்கர்லால், சக கைதிகளுக்கெல்லாம் மநுக்களை எழுதிக் கொடுத்தே கடலூர் சிறையில் இருந்த கைதிகள் பலரை காலி செய்து சாதனை படைத்திருக்கிறார். 

அதே நேரத்தில், நாம் கைதிகள் படிப்பதற்கு என்றே நன்கொடையாக கொடுத்த  ‘‘மநு வரையுங்கலை!’’ நூலுக்கு ரூபாய் இருபதாயிரம் வரை, இலஞ்சம் கொடுத்து  ஒருமாதம் தன்னிடம் வைத்திருந்தாராம்!

ஒரு கொலை வழக்கில் தொடர்புடையவரோடு, இவருக்கு தொடர்பு இருந்ததால், இவரையும் இந்த வழக்கில் சேர்த்து கடலூர் மத்திய சிறையில் விசாரணை கைதியாக அடைத்து இருக்கிறார்கள்.


அங்கு நம் நூல்களைப் படித்தால்தான், நம் மீதான பொய் வழக்கை சந்திக்க முடியும் என்று கேள்விப்பட்டு நம் நூல்களை கேட்டிருக்கிறார்.

நம் நூல்களை எல்லாம் சிறை நூலகத்தில் கைதிகள் படிக்கும்படி வைக்காமல், ஒளித்து வைத்துக் கொண்டு, நூலை கேட்பவர்களிடம் இலஞ்சம் வாங்கிக் கொண்டு ஜெயிலர் கொடுக்கிறாராம். இப்படித்தான் இவருக்கும் கொடுத்துள்ளார்.

இதையே சற்று யோசித்து நமக்கு கடிதம் எழுதி இருந்தால், இலஞ்சம் கொடுத்த இருபதாயிரத்துக்கு, நம் பங்களிப்பையும் சேர்த்து 11 க்கு, 15 செட் நூல்களை கைதிகளுக்கு அனுப்பி இருந்தால், அனைவரும் படித்து இருக்கலாம்.

ஆனால், ஏனோ இதை யோசிக்காமல், சிறை கேவலர்களின் சட்ட விரோதமாக இலஞ்சத்திற்கு இவரும் ஒத்துழைத்து கொடுத்துள்ளார். இந்த தகவலை முன்பே நமக்கு தெரியப்படுத்தி இருந்தால், கேவலர்களை கேள்வி கேட்டிருக்கலாம். இவருக்கு நூல்களை அனுப்பியும் இருக்கலாம்.

ஆனால், நாம் நினைப்பது போல, 15 செட் நூல்களை கைதிகளுக்கு அனுப்பி, அவர்கள் எல்லோரும் படித்திருந்தால் கூட, தங்களுக்கு தேவையான மனுக்களை எழுதிக் கொடுத்து பிணையில் வந்திருப்பார்களா அல்லது இவரைப்போலவே வாதாடி விடுதலை ஆகி இருப்பார்களா என்பதெல்லாம் சந்தேகந்தான்.

ஆனால், இவரோ இவரே வாதாடி விடுதலையானதோடு இல்லாமல், மற்றவர்களுக்கும் மநுக்களை எழுதிக் கொடுத்து பிணையில் அனுப்பி வைத்திருக்கிறார்.

இப்படி குறைந்தது சுமார் 300 மனுக்களுக்கு மேல் எழுதி இருப்பதாகவும், சுமார் 100 மனுக்களுக்கு மேல் தீர்வு கண்டிருப்பதாகவும் சொல்லும் இவர், தான் எழுதிய மநுக்களின் நகல்களையும் வைத்திருக்கிறேன் என்றும், சுமார் 17 வருடத்துக்குப் பிறகு சிறையில்தான் பேனாவைப் பிடித்து எழுதினேன் என்றும் சொல்கிறார்.

பள்ளிக் கல்வியில் எட்டாம் வகுப்புவரை மட்டுமே படித்துள்ள இவர், தனக்கு நூல்களை வாசிக்கும் பழக்கம் இருக்கு என்றும், நெப்போலின் உள்ளிட்ட எத்தனையோ வரலாற்று நாயகர்களின் நூல்களைப் படித்துள்ளேன்.

ஆனால், என்னை முழுமையாக திருப்பிப் போட்டது, ‘‘மநு வரையுங்கலை!’’ நூல்தான் என்றும், இனி என் வாழ்நாளில் இப்படியொரு நூலைப் படிப்பேனா என்பது சந்தேகமே என்றும், இப்படியெல்லாம் ஒரு நூலை எழுத முடியுமா என்றும் ஆச்சரியமாக இருக்கிறது என வியப்பாக வியக்கிறார்.

ஆமாம், இந்த நூல் சிறையில் கிடைக்கப் பெற்றதும், நாலைந்து நாட்கள் தூங்கவே இல்லையாம். திரும்பத் திரும்ப, திரும்பத் திரும்ப, திரும்பத் திரும்ப, திரும்பத் திரும்ப என பல முறை படித்தாராம்!

முதல் நூலில் இருந்து எவ்வளவுதான் முக்கி முக்கிப் படித்தாலும், எதையும் சாதிக்க முடியாமல் உள்ள வாசகர்களுக்கு மத்தியில், எடுத்த எடுப்பிலேயே ஏழாவது நூலைப் படித்து புரிந்துக் கொண்டு சாதித்து இருப்பது, ‘‘தேடுதலைப் பொருத்தே புரிதல்’’ என்பதை மீண்டும் பறைச்சாற்றி உள்ளது.

மற்றவர்களைப் போலவே இவரும், ‘‘தன் வாழ்நாளில் ஒரு முறையேனும் ஆசிரியர் திரு. வாரண்ட் பாலா அவர்களை பார்த்து விட வேண்டும். அதற்கான வாய்ப்பு கிடைக்குமா’’ என்று கேட்டபோது, நாங்கள் பார்ப்பதே அரிதாக இருக்கிறது என்ற நிலையை தெளிவுபடுத்தியதும், அவரோடு தொடர்பில் உள்ள உங்களோடு பேசியதே சந்தோசமாக இருக்கிறது என்றார்.

தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் பிட்பாக்கெட், திருட்டு போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டு வழக்கு நிலையில் உள்ளவர்கள் வெளியில் இருந்தால், மீண்டும் களவாடுவார்கள், புகார்கள் குவியும் என்பதாலும், தங்களுக்கு போட்டியாக வேறு வெளித் திருடர்கள் யாரும் இருக்கக்கூடாது என்பதாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்றப் பெயரில் அவர்கள் மீது கேவலர்கள் புதிதாக ஒரு பொய் வழக்கை பதிவு செய்து, நிதிபதியிடம் நிப்பாட்டி சிறையில் அடைத்து விடுவது வழக்கம்.

நாளைந்து நாட்களில் பண்டிகை முடிந்ததும்,  பிணை கொடுத்து வெளியில் அனுப்பி விடுவார்கள். ஆனால், ஒருவர் ஒருமாதம் ஆகியும் சிறையிலேயே இருக்க, ‘‘ஏன் என்று இவர் விவரம் கேட்க, பிணை கொடுக்க சூரிட்டி கேட்கிறாங்க’’ என்று அவர் சொல்லி இருக்கிறார். போட்டது பொய் வழக்கு. இதுக்கு எதுக்கு சூரிட்டி கேக்குறானுங்க?

சரி நானொரு மநுவை எழுதித்தருகிறேன் கொண்டு போய் நிதிபதியிடம் கொடுக்குறாயா என கேட்க, அவரும் சரி என்று சொல்ல, இப்படி எழுதிக் கொடுத்து விட்டார்.

அதாவது, ‘‘இது பொய் வழக்கு என்பது காவலூழியர் களுக்கும் தெரியும், பொய்யர்களுக்கும் தெரியும், பொய்யர்கள் வழிவந்த நிதிபதிகளுக்கும் தெரியும் என தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று அவர் பாணியில் எழுதிக் கொடுத்து உள்ளார்.

அவரும் இதை நிதிபதியிடம் கொடுக்க, படித்ததும் பீதியில் பேதியாகிப் போன நிதிபதி, இதுக்கு நீ என்னை நேராகவே எதாவது சொல்லி இருக்கலாம் என்று சொல்லி விட்டு, சூரிட்டி இல்லாமல் சொந்தப் பிணையில் விட்டு விட்டாராம்!

இதுதான் இவரது முதல் மநு என்றால், மற்ற மநுக்கள் எல்லாம் எப்படி இருந்திருக்கும் என்பது சொல்லாமலேயே விளங்கும்.

ஒரு கைதிக்கு எழுதிக் கொடுத்த மநுவை படித்த அந்த நிதிபதி, பொய்யர்களைப் பெருமைப்படுத்தும் விதமாக, ஒரு பெய்யரால் மட்டுந்தான், இப்படி நேர்த்தியாக மனு எழுத முடியும்? சிறையில் ஏது பொய்யர் என்றாராம்!

உடனே அந்த கைதி, என்னைப் போன்ற விசாரணை சிறைவாசிதான் எழுதிக் கொடுத்தார் என்பதை அவரே எழுதி உள்ளாரே என்று சொல்லி நிதிபதியின் மூக்கை உடைத்து இருக்கிறார். சபாஷ்!

ஆமாம், எந்தப் பொய்யருக்கு நாம் எழுதுவதுபோல, உ(ய)ரிய சட்டப்பிரிவுகளைக் குறிப்பிட்டு நேர்த்தியான மநுவை எழுத தெரியும்? அல்லது எந்த நிதிபதி(களு)க்குத்தான் நேர்த்தியாக தீர்ப்பெழுதத் தெரியும்??

அப்படி எழுதத் தெரிந்தால் மேல் முறையீடு எப்படி செய்ய முடியும்??? ஆகவே, அப்புட்டு நிதிபதிகளும் அடிப்படை சட்ட அறிவில்லாத முட்டாள்களே! இது இக்காலத்துக்கு மட்டும் சொல்லப்பட்டது அல்ல; எக்காலத்திலும் இதேதான்!!

சரி நம்ம விட்ட விசயத்துக்கு வருவோம்.

ஆமாம், படித்தவர், படிக்காதவர் என அனைவருக்கும் இவர் எழுதிக் கொடுத்த மநுக்களில் எல்லாம், இம்மநுவை நான்தான் எழுதிக் கொடுத்தேன் என்பதை குறிப்பிடும் விதமாக, தன்னுடைய பெயர், விசாரணை கைதி எண் ஆகியவற்றையும், சிறிதும் அச்சமின்றி தெளிவாக எழுதிக் கொடுத்து இருக்கிறார். அப்படிப்போடு!

ஏனெனில், ஆசிரியரே வெட்ட வெளிச்சமாக நூலில் எல்லாவற்றையும் எழுதி இருக்கும்போது, நாம் எழுதாவிட்டால் எப்படி என்ற தெளிவான மனநிலை. சபாஷ்!!

இதனால், கடுப்பாகிப் போன நிதிபதிகள் ஒரு கட்டத்தில், ‘‘சங்கர் லாலுக்கு வேற வேலையே இல்லையா... அவன் பாட்டுக்கு எதையாவது எழுதிக் கொடுத்துகிட்டே  இருக்கானே’’ என மனுவை கொண்டு வந்து கொடுத்த கைதிகளின் காதுபடவே புலம்பி இருக்கிறார்கள். உண்மையில், இதெல்லாம் நிதிபதிகளுக்கு  அசிங்கமே!

ஆனாலும், பகுத்தறிவுப் பெரியார் சொன்ன இந்த ஈனப் பிறவிகளுக்கு, இந்த அசிங்கங்கள் எல்லாம் ஒரு பொருட்டே அல்ல. இல்லையென்றால், நம் நூல்களைப் படித்தப் பின்னும் ஒன்றும் செய்ய முடியாத பேடியாக அல்லவா இருக்கிறார்கள்.

விசாரணை கைதிகளுக்கு சிறையில் வேலையே, வேளா வேளைக்கு சாப்பிட்டு விட்டு, ஊர் கதை பேசி, தூங்கி ஓய்வெடுக்க வேண்டியதுதான். 

ஆனால், சரியான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்ற சங்கர் லாலைப் போன்ற விசாரணை கைதிக்கு சாப்பிட்டு, சாப்பிட்டு தூங்குவதா வேலை? 

சட்டந் தெரியாதவர்களுக்கு சட்ட விழிப்பறிவுணர்வை ஊட்டி, மநு எழுதிக் கொடுப்பதுதானே... இதைத்தானே ஆசிரியரும் போராடி சிறைக்கு சென்று செய்து காண்பித்தார். இதில், சட்ட கோவிந்தன் என்பவர், அவர் மீதான 11 வழக்கில் வாதாடி விடுதலை ஆனதெல்லாம் சரித்திர சாதனைகள் ஆயிற்றே!  

இதுகூட, தெரியாத கூமுட்டை அடிமுட்டாள் களாகவே நிதிபதிகள் நேற்றும் இருந்தார்கள்; இன்றும் இருக்கிறார்கள்; நாளையும் இருப்பார்கள். 

ஆனால், இதெல்லாம் தெரியாத நீங்கதான், ‘‘நிதிபதிகள் என்னமோ அனைத்தும் தெரிந்த லாடு லபக்குதாசுகள் என நினைத்துக் கொண்டு இருக்கிறீர்கள்’’. நிதிபதிகளே இப்படித்தான் என்றால், மற்ற அய்யோக்கிய அரசூழியர்கள், அரைகுறை ஊழியர்களின் அறிவைப்பற்றி சொல்லவா வேண்டும்?

சரி, நம்ம விசயத்துக்கு வருவோம்!

ஒரு கட்டத்தில், பிணையில் செல்ல முடியாது சிறையில் இருந்த சுமார் 30 கைதிகளை, சிறை கண்காணிப்பாளரே, ‘சங்கர்லாலிடம் சென்று மநு எழுதிக் கொள்ளுங்கள்’ என்று சொன்னாராம்! அந்த அளவிற்கு இவரை சிறையில் பெரிய ஆளாக நினைத்தார்களாம். ஆனால், இந்தப் புகழும், புண்ணியமும் ஆசிரியருக்கே சேரும் என்கிறார்.

நீதிமன்றத்தில் வாதாடி, பிணையில் வருவது மட்டுமல்ல; சிறைக்குள் செல்வதும் சாதனைதான்! என்ற தத்துவத்தை முன்மொழிந்த ஆசிரியருக்கு, இதில் எவ்வளவு தெளிவு இருந்திருக்க வேண்டும் என்பதில், உங்களுக்கு எல்லாம் இப்போதாவது தெளிவு பிறந்ததா?

‘‘நீதியைத்தேடி... பிணை (ஜாமீன்) எடுப்பது எப்படி?’’ நூலில், சரியான சட்ட விழிப்பறிவுணர்வோடு நாம் சிறைக்கு சென்றால் என்னென்ன நடக்கும் என்பதை எப்படியெல்லாம் அனுபவப்பூர்வமாக ஆசிரியர் எழுதி உள்ளாரோ, அப்படியே இருக்கிறது இவருடைய அனுபவமும்! ஆகையால், இவரும் ஓர் அனுபவ நூலை எழுதுவதற்கு அனுபவத் தகுதி படைத்தவரே!! 

நூலைப் படைத்தால், நாமே கூட வெளியிடலாம். காலத்தின் கட்டளை என்னவோ... பொருத்திருந்து பார்ப்போம். 

பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

0 comments:

Post a Comment

பத்திரிகை செய்திகள்

அறவழி நோட்டா

அறவழி நோட்டா
மகாத்மா போதித்த வாக்குரிமை!

நோட்டா: NOTA

நோட்டா: NOTA
விளக்கம்: EXPLANATION

நூல்களின் முகப்பு

Followers

முக்கியப் பக்கங்கள்

அடிப்படை சட்டங்கள்

  • 1. இந்திய சாசனம் 1950
  • 2. நீதிமன்ற சாசனம் 1872
  • 3. இந்திய தண்டனை சட்டம் 1860
  • 4. குற்ற விசாரணை முறை விதிகள் 1973
  • 5. உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908

நம் நூல்களைப் பற்றி

நீதியைத்தேடி.... நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் வரிசையில்...
1 குற்ற விசாரணைகள்
2 பிணை (ஜாமீன்) எடுப்பது
எப்படி?
3 சட்ட அறிவுக்களஞ்சியம்
4 சட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்
5 சாட்சியங்களைச் சேகரிப்பது
எப்படி?
6 கடமையைச் செய்!
பலன் கிடைக்கும்
7 மநு வரையுங்கலை!Recent Posts Widget

இந்நூல்கள் அனைத்தும் உங்களின் சட்ட விழிப்பறிவுணர்வுக்காக
மத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவியோடு
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பொது நூலகங்கள், மத்திய சிறைச்சாலைகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

சொந்தமாக தேவைப்படுவோர், உ(ய)ரிய நன்கொடையைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு வாட்ஸ்அப் எண் 09842909190 ஆகும்.

எல்லாப் பதிவுகளும்!

நம் தள வகைகள்

பயின்றோர் (20-08-16)