சமூகத்தின் சட்ட விழிப்பறிவுணர்வுக்கான தளம் நீ வாழ, நீயே வாதாடு! நீதிமன்றத்தில் வாதாடுவது அப்பா அம்மாவிடம் பேசுவதுபோல்தான்! நியாயந்தான் சட்டம்! அதற்கு தேவையில்லை வக்கீல் பட்டம் வக்கீல் என்றாலே கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்களே! இடைத்தரகர்களே!!

நீ வாழ... நீயே வாதாடு... வரவேற்பு வாழ்த்து!

No law, no life. Know law, know life! என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியத்தை உணர்ந்து, ‘‘நீதியைத்தேடி... சட்டப் பல்கலைக் கழகத்திற்கு’’ வருகை தந்துள்ள உங்களை வருக என வரவேற்று, உங்களுக்கான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்று பயனைப் பெறுக என வாழ்த்துகிறோம்!
முக்கிய அறிவிப்பு : இந்த இணையப்பக்கத்தை புதுப்பிக்கும் பணி நடந்துக் கொண்டிருப்பதால், சில பதிவுகள் அல்லது இணைப்புக்கள் கிடைக்காமல் போகலாம்!

Friday, September 13, 2019

ஹீலர் பாஸ்கர் மீது, அரசூழியர்களின் கருணைப் பார்வை ஏன்?அரசும் சரி, அரசூழியர்களும் சரி, ‘‘ஹீலர் பாஸ்கர் மீது கொண்டுள்ள கருணைப் பார்வை நமக்கு பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது’’

இது குறித்து சிபிஐ விசாரணை நடந்தால்தான் உண்மைகள் வெளிவரும் போலிருக்கு.

ஆனாலும், அதற்கு முன்பாக நமக்கு தெரிந்தவரை நாமே விசாரித்து பார்ப்போம் என்ற அடிப்படையில், திண்டுக்கல் மாவட்ட நலப்பணிகள் இயக்குநருக்கு சட்டப்படியான சான்று நகலை கேட்டுள்ளோம். இதன் முக்கிய நோக்கம், 

1. இவர்களுக்குள் உள்ள உண்மையான உறவு என்ன? 

2. எதற்காக ஹீலர் பாஸ்கரை மட்டும், மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தப் பாடுபடுகிறார்கள்? 

3. இதற்காக ஹீலர் பாஸ்கரிடம் இருந்து, அவர்கள் பெறும் ஆதாயம் என்ன? 

4. ஹீலர் பாஸ்கர் மீது போட்ட மோசடி வழக்கை நடத்தி தண்டனை வாங்கிக் கொடுத்து, சிறையில் அடைக்காதது ஏன்? 

5. ஹீலர் பாஸ்கரின் தகுதி என்ன? 

என்பதை ஆராய்ந்து கண்டுப் பிடிக்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது. ஆகையால், என்னென்ன கேள்விகளை கேட்டுள்ளோம் என்பதை இங்கு வெளியிட்டு உள்ளோம்.  

இந்த கேள்விகள் அனைத்தும் சரிதான் என நீங்கள் நினைத்தால், நீங்களும் அனுப்பி கேளுங்கள் அல்லது எது சரியென நினைக்கிறீர்களோ அதை கேளுங்கள். இதில் சொல்லியுள்ள மக்களில் நாங்களும் உண்டு என சொல்லியும் அனுப்பலாம். 

இதில் இல்லாது தங்களுக்கு தோன்றியதையும் கேளுங்கள். தனியாகவோ, குழுவாகவே விரும்பியபடி கேளுங்கள். 

இதற்கெல்லாம் ஏதுவாக எழுத்துக்களை நகலெடுத்து எடிட் செய்யும் வகையில் கொடுத்துள்ளோம். இனி சங்கதிக்கு உள்ளே செல்வோம். 

***************
கே சொ/ நி க/ 52 - 2019                                             தேதி 13-09-19

பெறுதல் 
நலப்பணிகள் இணை இயக்குநர் (பொ)
நலப்பணிகள் இணை இயக்குநர் அலுவலகம்
திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல்.

பொருள் : நீதிமன்ற சாசனமாம் இந்திய சாட்சிய சட்டம் 1872 இன் உறுபு 76 இன்கீழ் சான்று நகல் கோருதல் தொடர்பாக... 
  பார்வை : சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவிவரும் தங்களின் ந. க. எண். 6638/ வசெ /2019 தேதி 09-09-2019
நலப்பணிகள் இணை இயக்குநருக்கு, 

இந்திய சாசனக் கோட்பாடு 51அ -இன்படி, நாட்டின் முன்னேற்றத்துக்காக பாடுபடுவது அனைவரின் சட்டப்படியான கடமையாகும்.  

ஆனாலிது பொதுமக்களுக்கு ஊதியமில்லாத கடமையாகவும், உங்களைப் போன்ற ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய கடமையாகவும் இருப்பதால், மக்களை விட, (எங், மக்)களின் வரிப்பணத்தில் கூலிபெறும் உங்களைப் போன்ற ஊழியர்களுக்கே, அதிகப் பொறுப்பு இருக்கிறது.  

இந்த நோக்கத்திற்காகவும், கீழே கோரும் ஆவணங்கள் யாவும், நீதிமன்ற சாசனமாம் இந்திய சாட்சிய சட்டம் 1872 இன் உறுபு 74 இன்படி, பொது ஆவணங்கள் என்பதாலும், அதனை உறுபு 76 இன்கீழ் சான்று நகல் பெறுவதற்கு எவருக்கும் உரிமையுண்டு.

எங்களுக்கு தேவையான சான்று ஆவணங்கள் ஆவண,

1. பார்வையில் கண்டுள்ள காகிதத்தை எந்த சட்ட விதியின் கீழ் விடுத்தீர்கள்?

2. இந்தக் காகிதம் கடிதமா, அறிவிப்பா, விளக்கம் கோருதலா, வேறு ஏதாவதா?

3. அரசூழியராக இந்த சட்டப்படி இதைப் பெற்றுள்ளீர்களா? அந்தச் சட்டப்படி அதைப் பெற்றுள்ளீர்களா? என கேள்வி கேட்டுள்ள நீங்கள் எந்தச் சட்டப்படி கேட்கும் உரிமையுள்ளது என்பதை சொல்லாதது ஏன்? 

4. அதில் எந்தச் சட்டப்படி உங்களது பெயரை குறிப்பிடப்படவில்லை?

5. அரசூழியத்தில் உள்ள ஒருவர், பெயரை குறிப்பிடாமல் கடிதம் எழுதலாம் என எந்த சட்டம் அனுமதி அளித்தது? 

6. பெயரில்லாமல் இருக்க நீங்களென்ன அநாதையா? 

7. அநாதையாக இருந்தால், அரசூழியத்தில் சேர்ந்தது எப்படி?

8. அது அதற்கும் படித்தவன் மட்டுந்தான் அதையதை செய்யத் தகுந்தவர்கள். படிக்காதவர்கள் எல்லாம் அவர்களுக்கு தெரிந்ததை செய்யத் தகுதியற்றவர்கள் என்று எந்த சட்டம் சொல்கிறது?

9. மருத்துவம் பயின்றுள்ளீர்களா என கேட்டுள்ளீர்களே... திருக்குறளில் மருந்து என்ற அதிகாரத்தை எழுதிய திருவள்ளுவர் என்ன படித்தார் என்பதற்கு உங்களிடம் சான்றிதழ் இருக்கா? இருந்தால் சான்றிதழின் நகலை தரவும்.  

10. இல்லையென்றால், உங்களால் மருந்து அதிகாரத்தை யாரும் படிக்கக் கூடாது என தடை செய்ய முடியுமா? 

11. இப்படி உடல் நலம், மன நலம், மனைவி நலம் உள்ளிட்டவற்றை பதினெட்டு சித்தர்கள் உட்பட பலரும் எழுதி வைத்திருக்கிறார்கள். 

அவர்கள் எல்லாம் அதுபற்றி  படித்தார்கள் என்பதற்கு சான்றிதழ் இருக்கா? இருந்தால் சான்றிதழின் நகலை தரவும்.

12. இல்லையென்றால், அதையெல்லாம் உங்களால் தடை செய்ய முடியுமா?

13. ஆங்கில மருத்துவ சட்டங்களின் கீழ், நீங்கள் எழுப்பியுள்ள கேள்வி ஆங்கில மருத்துவத்தை ஆதரிப்பதுபோல இருக்கிறதே, நீங்கள் ஆங்கிலேயனுக்கா பிறந்தீர்கள்?

14. இந்திய சாசனக் கோட்பாடு 19 (1) (அ) இன்படி, இந்தியக் குடிமகனுக்கு சுதந்திரமாக சிந்திக்கவும், தன் சிந்தனையை எடுத்துச் சொல்வதற்கும் அடிப்படை உரிமை உள்ளபோது, அதை பல வருடங்களாக சுயமாக ஆராய்ந்து, அனுபவத்தில் எடுத்துச் சொல்வதை எந்த சட்டப்படி ஒழுங்கு நடவடிக்கை எடுப்பேன் என்கிறீர்கள்? 

15. காலங்காலமாக காய்ச்சலுக்கு ஊசி போட்டு வந்த நிலையில், பல்வேறு வழி வகையில் மருத்துவத்தை ஆராய்ந்தவர்கள் பலரும் ஊசி போடாதீர்கள் என்று சொல்லி வந்தார்கள். 

இது சரிதான் என்பதை உறுதிப்படுத்தும் வகையில், அண்மையில் சுகாதாரத்துறை அமைச்சரும், ஆங்கில வழி மருத்துவருமான விஜய பாஸ்கர் செய்தி ஊடகங்களுக்கு பேட்டி அளித்தார்.   
அமைச்சரின் பேட்டியை நீங்களும் பார்த்திருக்க வேண்டும். பார்க்கவில்லை என்றால், இதற்கு பதில் சொல்வதற்கு முன்பு பார்த்து விட்டு பதில் சொல்லுங்கள்.

இப்பேட்டியால், இதனை ஏற்கெனவே சொன்னவர்களின் வாக்கும், மதிப்பும் சமுதாயத்தில் கூடியது. காய்ச்சலுக்கு ஊசி போட கூடாது என்பதை ஒப்புக்கொண்டது போலவே, இனிவரும் காலத்தில் ஒவ்வொன்றாக ஒப்புக் கொள்ளவும் கூடும் என மக்கள் நம்பி விட்டார்கள். ஆகையால், அவர்களின் வழியை முன்பு இருந்ததை விட மிகத் தீவிரமாக பின்பற்றி வருகின்றனர். 

உண்மைகள் இப்படி இருக்க, இதற்கு எதிராக ஓர் ஊழியரான நீங்கள் எப்படி நடவடிக்கை எடுக்க முடியும் என புரியவில்லை, விளக்கமாக விளக்கவும். 

16. இப்படி ஒவ்வொரு நோயும் ஆங்கில மருத்துவத்தால் மட்டுமே வளர்ந்து வருகிறது என்பதை நாங்கள் பொதுவெளியில் விவாதிக்க தயார்; நீங்கள் தயாரா என பிரபல ஆங்கில மருத்துவர்களான திரு. ஹெக்டே, திரு. பஸ்லூர் ரஹ்மான் உள்ளிட்டு பல்வேறு வகையில் மருத்துவத்தை ஆராய்ந்தவர்கள் பொது வெளியில் சவால் விட்டு அழைத்து உள்ளார்கள். 

இந்த துண்டறிக்கை தெரிந்த உங்களுக்கு அதெல்லாம் தெரியாதா? ஏன் விவாதிக்கவில்லை?? முன்பு தெரியாவிட்டாலும், இப்போது தெரிவித்து விட்டோமே!

உண்மையிலேயே நீங்கள் அறிவாளிதான் என்றால், அதே 22-09-2019 அன்று அதே அரங்கத்தில் ஓரிரு மணி நேரமாவது தாக்குப்பிடித்து விவாதிக்க தயாரா?

நீங்கள் விவாதிக்க தயார் என்றால், அவர்களை நாங்கள் அழைத்து வருகிறோம். இந்த விவாதத்தில் யார் சொல்லது உண்மை என்பது எங்களுக்கும் தெரிந்து விடும். இதனை நாங்கள் பார்க்கவும் படம் பிடித்து சமூக நலனுக்காக சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி சரியான விழிப்பறிவுணர்வை ஏற்படுத்த தயாராக உள்ளோம்.  

17. எங்களுக்கு தெரிந்த பலரில் டாக்டர். ஹெக்டே, டாக்டர். பஸ்லூர் ரஹ்மான் உள்ளிட்ட பலர் ஆங்கில மருத்துவத்தை கரைத்து குடித்து, ஆராய்ந்து விட்டு, அதன் பாதகங்களை காணொலி வாயிலாக எடுத்துச் சொல்லி காரிகாரி துப்பிவரும் போது, ‘அதையே படிக்காமல் பலரும் சொல்வது, அறிவிற் சிறந்த அறிவாற்றல் தானே?!’ 

இவர்கள் மக்களுக்கு போதிப்பது மட்டும் எப்படி தவறாகும் என்பதை உங்களைப் போன்ற மடையர்கள் விளக்கிச் சொன்னால்தானே எங்களுக்கு நன்றாக புரியும்?

18. இப்படித்தான் கடந்த ஆண்டு கூட, ‘நீங்கள் குறிப்பிட்டுள்ள ஹீலர் பாஸ்கரை கைது செய்தார்கள். அதனால், அவரைப் பற்றி தெரியாதவர்கள் கூட தெரிந்து கொள்ளும் கொடுமை நேர்ந்தது. ஆகையால், முன்பை விட பல்வேறு விதங்களில் பிரபலமானார்’. 

அதற்கு பிறகு வழக்கை நடத்தி தண்டனையைப் பெற்றுத் தந்திருந்தால், அவரது பிரபலம் குறைந்து சிவனேன்னு சிறையில் இருந்திருப்பார். 

மக்களும் அவரைப்பற்றி நன்கு அறிந்து, அவரது கருத்துக்களை புறக்கணித்து இருப்பார்கள். ஆனால், அப்படிச் செய்யவில்லையே ஏன்? அதைச் செய்ய உங்களைப் போன்ற அரசூழியர்களுக்கு துப்பில்லையா? அல்லது 

இவரைப் போன்றவர்கள் மக்களை ஏமாற்றி கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார்கள் என்று கடந்த ஆண்டு கைது செய்தபோது செய்தியாளர்களுக்கு சொன்னபடி, அதிலிருந்து பெரும்பங்கை இலஞ்சப் பங்காக பெற்றுக் கொண்டு, அவர்களைப் பற்றி தெரியாத மக்களும் தெரிந்து கொள்ளட்டும், இதன் மூலம் மேன்மேலும் மக்களிடம் பணத்தை கொள்ளையடிக்கட்டும்; இதிலிருந்தும் நமக்கு இலஞ்சப் பங்குப்பணம் கிடைக்கும்.

ஆகையால், ‘வளர்ந்து பெரும்புகழை அடையட்டும் என்று திட்டமிட்டு வளர்த்து விடுவதற்காகவே இதுபோன்ற வெற்றுக் காகித காரியங்களைச் செய்கிறீர்களோ’ என்றே மக்கள் சந்தேகிக்கிறார்கள். 

ஆமாம், இதற்கு மேலும் வலுவூட்டும் விதமாகவே உங்களின் செயல்கள் பின் வருமாறு அமைந்து இருக்கின்றன. 

19. உங்களின் காகிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களைப் போன்றே பலரும் பல்வேறு விதமாக வகுப்புகளை தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே நடத்திக் கொண்டு இருக்கும் நிலையில், ‘அவர்கள் மீதெல்லாம் இல்லாத கருணைப் பார்வை, இவரைப் போன்ற ஒருசிலர் மீது மட்டும் வருவது’ மேற்சொன்னபடி மக்களின் சந்தேகத்தை உறுதி செய்வதாகவே இருக்கிறது. 

20. ஆமாம், உங்களை அதிகப்பட்சமாக உங்களுக்கு கீழும் மேலும் உள்ள ஊழியர்கள் ஐம்பது பேருக்கு தெரியுமா? 

ஆனால், நீங்கள் குறிப்பிட்டுள்ள ஹீலர் பாஸ்கருக்கு சமூக வலைத்தனமான யூடியூபில் மட்டும், ‘சுமார் நான்கு இலட்சத்து நாற்பத்தி எட்டாயிரம் பேர் சந்தாதாரர்களாக இருக்கிறார்கள்’ என்றால் மற்ற எண்ணிக்கையை சொல்லவும் வேண்டுமோ?  

இப்படி மக்களின் மத்தியில் புகழ்ப் பெற்றவர்களை, அரசூழியர்கள் எதிர்ப்பதாக காட்டிக் கொள்வதன் மூலம், ‘நம் ஊழியர்களையும் தாண்டி, நாமும் நாலு பேருக்கு தெரிவோம்’ என்கிற அற்பத்தனமான எண்ணமும் இருப்பதாகவே சந்தேகிக்கிறோம். 

உண்மையில் நாட்டில் என்ன நடக்கிறது? இதெல்லாம் எதற்காக நடக்கிறது என்பதில் மக்களுக்கு இடையே பெருங்குழப்பம் நிலவுகிறது. 

ஆகையால்தான் கேட்கிறோம்... இதுகுறித்த உங்களின் சட்ட விளக்கம் என்ன? சொல்லவில்லை என்றால், எங்களின் சந்தேகம் உறுதியாகி விடும். 

21. ஒருவருக்கு ஆங்கில மருத்துவம் பார்த்து, அதனால் பிரச்சினை ஏற்படும்போது அதுகுறித்து விசாரித்து அம்மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது அல்லவா? 

அதேபோல, மருத்துவம் படிக்காதவரின் அறிவுரையை கேட்டு பலரும் குணம் அடைந்தால், அவரை மருத்துவ ஆலோசகராக நியமிக்க வேண்டியதுதானே நியாயம்? 

இப்படி இதுவரை எத்தனை பேரை மருத்துவ ஆலோசகர்களாக நியமித்து உள்ளீர்கள்? 

இவர்கள் கூறும் மருத்துவ அறிவுவறுமைகளை இலட்சக்கணக்காணோர் கேட்டும் பின்பற்றியும் குணமாகி வருவதால், இவர்களை ஆங்கில மருத்துவத்தின் அறிவு வறுமைகளையும் விளக்கும் ஆலோசகர்களாக நியமிக்க வேண்டியதுதானே?!

நாங்கள் ஏற்கெனவே சொன்னபடி, இவர்களின் அறிவாற்றலை சோதிக்கும் அளவிற்கு உங்களில் யாருக்கேனும் ஆண்மை இருந்தால், நேருக்கு நேராக பொது வெளியில் விவாதித்து, இதுபோன்ற விவாதங்களுக்கு முடிவுகட்ட வேண்டியதுதானே?

இப்படியெல்லாம் செய்ய சட்டத்தில் இடமுண்டா என்ற கேள்வி உங்களைப் போன்ற சட்டந்தெரியாத மடையர் களுக்கு எழும். இதற்கு இந்திய சாசனத்திலேயே இடமிருக்கிறது என்பது எங்களுக்கு நன்றாகவே தெரியும். 

உங்களைப் போன்ற மடையர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்பதற்காக, கடந்த 30-08-2019 அன்று கல்வித்தகுதி அல்லாது பிற தகுதியின் அடிப்படையில் மத்திய அரசுப்பணியில், இதிலும் பிரதமர் தலைமையிலான குழு அமர்த்தியது குறித்து நாளிதழில் வந்த செய்தி!
clip
22. மக்கள் அரசூழியர்களிடம் தேவையான தகவலை கேட்டுப்பெற, தகவல் பெறும் உரிமைச் சட்டம் இருப்பது எல்லோருக்கும் தெரியும். 

மாறாக உங்களுக்கு மக்களிடம் பதில் கேட்க எந்த சட்டம் அனுமதிக்கிறது? 

அப்படி ஏதாவது சட்டம் இருந்தால் குறிப்பிட்டு இருக்க வேண்டுமே ஏன் குறிப்பிடவில்லை. இது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 166 இன்கீழ் சட்டக் கடமையில் தவறியது ஆகாதா? 

இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 167 இன்கீழ் சட்டப்படி உருவாக்க வேண்டிய ஆவணத்தை, சட்ட விரோதமான காகிதமாக உருவாக்கிய குற்றமும் ஆகாதா?

23. பதில் கேட்க உரிமையுள்ள சட்டத்தை குறிப்பிட தெரியாத உங்களுக்கு மூன்று நாட்களில் பதில் தரவேண்டுமென எந்த சட்டம் சொல்கிறது?

ஓர் அரசூழியரான நீங்கள், மக்கள் கேட்ட கேள்விகளுக்கு மூன்று நாட்களுக்குள் பதில் அளித்தது உண்டா... உண்டு என்றால், அதேபோல இதற்கும் பதில் அளித்து, நீங்கள் யோக்கியர் என்பதை நிரூபிக்கலாம்! 

இல்லையேல் நீங்கள் அய்யோக்கியர் என்பதை நீங்களே ஒப்புக்கொண்டதாகி விடும். பின் மக்களின் முடிவும் அய்யோக்கியர் என்பதே ஆகும். அவ்வளவே!!

இதிலுள்ள கேள்விகளுக்கெல்லாம், இது தொடர்பாக நடைபெறும் எந்தவொரு நீதிமன்ற குறுக்கு விசாரணையில் பதில் சொல்லும் ஆண்மை உங்களுக்கு இருந்தால், உங்களது வெற்றுக் காகிதத்தில் சொன்னபடி, சட்டப்படியான ஒழுங்கு நடவடிக்கையை எங்களின் மீதும் எடுக்க தார்மீக அனுமதி வழங்கி, வெற்றி பெற வாழ்த்துகிறோம். 

இந்த சான்று நகல்கள் மூன்றை, நகலர்கள் விதிகள் 1971 இன்படி, மிகவும் அவசரமாக மூன்று நாட்களுக்குள் வழங்கிட கோருகிறோம். 

இதற்காக கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியிருந்தால், அதுபற்றி உரிய முறையில் தெரிவித்தால், உடனே செலுத்திட தயாராய் இருக்கிறோம்.

கேர் சொசைட்டிக்காக 
உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள்

நகல்: இந்திய சாசனக்கோட்பாடு 51 அ-இன்படி, மக்களிடையே பொதுவான விழிப்பறிவுணர்வை ஏற்படுத்துவதற்காக நூல்கள், இணையப்பக்கங்கள், சமூக வலைத்தளங்களின் வெளியீட்டுக்காக...

*****************

குறிப்பு: இதனை நாங்கள் குறைந்தது 68 பேர் கொண்ட குழுவாக கையெழுத்திட்டு இன்று மாலைக்குள் அல்லது நாளைக்குள் அனுப்புவோம்.

திண்டுக்கல் பகுதியில் உள்ள வாசகர்கள் இயன்றால், நலப் பணிகள் இணை இயக்குநரது சரியான முகவரி, தொடர்பு எண் உள்ளிட்டவைகளை கண்டறிந்து தெரிவித்தால் பதிவிடுவோம். பலருக்கும் உதவியாக இருக்கும்.

பிற்சேர்க்கை நாள் 14-09-2019

ஏற்கெனவே திட்டமிட்டபடி நேற்றே 68 பேரின் கையொப்பத்துடன் பதிவஞ்சல் மூலம் அனுப்பப்பட்டு விட்டது. இது ஒப்படைப்புக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளதாக இணைய வழியில் தெரிகிறது.


எங்களைத் தொடர்ந்து, Ramesh Thirumeni என்ற வாசகரும் அனுப்பி உள்ளார். வேறு யார்யார் அனுப்பினார்கள் என்ற விவரத்தை தெரிவிக்கவில்லை. அனுப்பியவர்கள் தெரிவிக்கவும்.

பிற்சேர்க்கை நாள் 16-09-2019

நாம் விளக்கம் கேட்ட கூலிக்கு மாரடிக்கும் வேலைக்காரி, பூங்கோதை என்ற பொறுக்கி பெண் என்பதும், இந்தப் பொறுக்கி திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் சட்டத்துக்குப் புறம்பாக சொந்த மருத்துவமனையை நடத்தி வருவதாகவும், இதனால் தனக்கு வருமான இழப்பு ஏற்படும் என்றும் கருதி கேள்வி கேட்டதாக தெரிகிறது.

Dindigul
Dr.G. Poongothai, MBBS.,
0451-2432226
dfwdgl.tn@gmail.com

நாம் அனுப்பிய கடிதம் இன்று மாலை, அந்தப் பொறுக்கிப் பொள்பளைக்கு ஒப்படைக்கப்பட்டு விட்டது. இது தவிர மேலும் நம்முடைய வாசகர்கள் ஆன திருப்பூர் ஜெயக்குமார், ஈரோடு பிரகாஷ் ஆகிய இருவர் மட்டும் இன்று அனுப்பி உள்ளதாக அஞ்சல் இரசீதை அனுப்பி உள்ளனர்.

மற்றபடி, ஹீலர் பாஸ்கரை பின்பற்றுபவர்கள் என்று சொல்லிக் கொள்ளும் ஆயிரக்கணக்கானவர்களில் ஒருவருக்கு கூட, தவறை தட்டிக் கேட்க வேண்டும் என்ற தைரியமில்லாத கோழைகள் என்றும், ஆனால், ‘‘நான் ஹீலர் பாஸ்கரை ஆதரிக்கிறேன்’’ என்று வாயால் வடை சுடுவது போல, முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ஆதரவு தெரிவித்து போராடும் போராளிகளாகவும், தொடை நடுங்கிகளாகவும் இருக்கிறார்கள் என்றே கருத வேண்டியுள்ளது.

அப்படி இல்லையென்றால், இந்நேரம் அந்தப் பொம்பள பொறுக்கிக்கு குறைந்தது ஆயிரம் கடிதங்களாவது குவிந்திருக்க வேண்டாமா?

ஆகையால், இது நிச்சயமாக டாக்டர். ஹெக்டே, பஸ்லூர் ரஹ்மான், ஹீலர் பாஸ்கர் உள்ளிட்ட பலரையும் பின்பற்றுவதாக சொல்லும் அத்தனை பேருக்கும் வெட்கக்கேடு என்று சொல்வதைவிட, அவரவர்களின் ஆண்மைக்கும், பெண்மைக்கும் நேரிட்ட இழுக்கு என்றுதான் நேரடியாகவே சொல்லனும்.  

உண்மையிலேயே, சமூகத்திற்காக போராடும் எவரும், மக்களின் ஆதரவை நம்பி களமிறங்குபவர்கள் அல்ல.

ஆமாம், அவர்கள் ‘‘மக்களின் நலனுக்காக காலத்தால் களமிறக்கப்படுபவர்கள்’’, என்பதை, நம்முடைய ‘‘கடமையைச் செய்! பலன் கிடைக்கும்’’ நூலில் அவருடைய சொந்த அனுபவத்தைக் கொண்டும், ஆராய்ந்தும் தெளிவுபட எழுதியுள்ளார்.

ஆகையால், இப்படிப்பட்ட கடமையாளகளை எத்தனை எத்தனை கூட்டுக் களவாணிகள் ஒன்று சேர்ந்தாலும் எதுவும் செய்ய முடியாது என்பதையும், அவர்கள் நம்பும் அறமே அவர்களை காக்கும் என்பதையும் அவரே தெளிவுபடுத்தியும் உள்ளார்.  

ஆகையால், முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தள தொடை நடுங்கி போராளிகள் எல்லாம், உங்களது ஆதரவு போராட்டதை விட்டு விடாமல் தொடருங்கள். அவ்வளவே!

பிற்சேர்க்கை நாள் 17-09-2019

நேற்றையப் பிற்சேர்க்கையைப் படித்த நம் வாசகர்கள் உள்ளிட்ட சிலர், இதனை நகலெடுக்க முடியவில்லை என்றும், இந்த யுனிகோட் எழுத்துக்கள் மாறுகின்றன / தெரியவில்லை என்றும், தட்டச்சு செய்ய முடியவில்லை என்றும், சமூக வலைத்தளங்களில் ஆதரவு தருவதை தவிர, சட்டப்படி என்ன  செய்வது (பார்க்க இதன் 11-வது பின்னூட்டம்) என்று தெரியவில்லை என்றும் ஏற்க இயலாத காரணங்களை சொல்லி வருகின்றனர். 

ஆமாம், இதெல்லாம் உண்மை என்றால், அப்போதே கேட்டிருக்கலாம். இதிலிருந்து எடுத்துதான் சிலர் அனுப்பி இருக்கிறார்கள் என்கிற போது, இவர்களுக்கு மட்டும் எப்படி நகலெடுக்க முடியாமல் போகும் / எழுத்துக்கள் மாறும் / வராமல் போகும்??

உடனே சொல்லி இருந்தால், அதற்கு தக்க நாங்களும் எளிய வழிகளை சொல்லி இருப்போம். ஒருவேளை உண்மையாக இருந்தால், இதை செய்யவே லாயக்கு இல்லாத மடையர்கள் வேறு எதை செய்து விடுவார்கள் என்ற கேள்வியே இயல்பாய் எழுகிறது.

ஆமாம், மேலேயே கே சொ/ நி க/ 52 - 2019 தேதி 13-09-19 என்று கொடுத்துள்ளோம். இதனை மட்டும் குறிப்பிட்டு, ‘‘நானும் ஒரு குடிமகனாக இதில் கண்ட கேள்விகளுக்கு சான்று நகலை எதிர்ப் பார்க்கிறேன்’’ என்று ஒரு பத்தியில் கையால் கடிதத்தை முடித்து அனுப்பி இருக்கலாம். இனி இதை செய்தாலே போதும்.

ஆமாம், இக்கடிதம் கிடைத்து விட்டதாலும், வேறு சிலரும் இதையே அனுப்பி உள்ளதாலும், இனி எல்லோரும் இதையே அனுப்ப வேண்டியதில்லை. வேறு வித்தியாசமான சுயமான கேள்விகள் இருந்தால் மட்டும் கேட்கலாம். 

இல்லையேல், எங்களிடம் சொல்லி இருந்தால் அல்லது சொன்னால், ஏற்கெனவே தட்டச்சு செய்து வைத்துள்ளதில், அவரவர் முகவரியையும், புதிதாக கேள்வி இருந்தால் அதை மட்டும் தட்டச்சு அனுப்பி இருப்போம் / அனுப்புவோம். 

Dindigul
Dr.G. Poongothai, MBBS.,
0451-2432226
dfwdgl.tn@gmail.com


வெளி மாநிலத்திலும், வெளிநாட்டிலும் வசிப்பவர்கள் மின்னஞ்சல் முகவரியில் அனுப்பி வைக்கலாம். இப்படி அனுப்பும் போது, ‘‘எனது மின்னஞ்சல் முகவரியே சட்டப்படி போதும் என்பதால் கையொப்பம் தேவையில்லை’’ என்பதை குறிப்பிட வேண்டும். 


பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

Tuesday, September 10, 2019

வெளிவந்தது, கொலீஜியத்தின் கூட்டுக் களவாணித்தனம்!
07-09-2019 அன்று மதியம் இந்த இராஜினாமா செய்தியை கேள்விப்பட்டதுமே, இதுபற்றி உங்களுடைய கருத்து என்ன என்று, நம்ம சட்ட ஆராய்ச்சியாளரை கேட்டதுமே, ‘‘ஆளைப் பார்த்தா கொஞ்சம் யோக்கியமாய் தெரிகிறது’’ என்றார். 

clip

இப்படி அவர் நிதிபதிகளுக்கு, கொஞ்சம் நற்சான்று கொடுப்பது அரிதிலும் அரிதே! ஆனாலும் மனதில் வரும் உண்மையை மறைக்க தெரியாது, சொல்லி விடுவார். 

அதன் பிறகு மதியம், இந்த இராஜினாமாவிற்கு உண்மையான காரணம் என்ன என்பதை விளக்கும் இந்த செய்தி, மாலையில் வாட்ஸ் அப்புக்கு முன்னனுப்பப்பட்ட செய்தியாக வந்தது. 

********************

விஜயா தஹில்ராமாணி ... இந்த பெயர் எத்தனை பேருக்கு தெரியம்னு எனக்கு தெரியல... இவங்க தான் கடந்த 11 மாசமா தமிழ்நாட்டுக்கு தலைமை நீதிபதியா இருந்தவங்க... இதுக்கு முன்னாடி பாம்பே ஹைக்கோர்ட்ல பொருப்பு தலைமை நீதிபதியா 2015 -17 வரை இருந்தவங்க ... 

இவங்க தான் குஜராத்ல மோடி ஆசியோட ஆர்எஸ்எஸ் விஹச்பி போன்ற காவி பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட முஸ்லீம்களின் இன படுகொலையில கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு தனது கண் முன்னாடியே கைக் குழந்தையையும் தனது மாமனார் மாமியார் உட்பட தனது குடும்பம் மொத்தமும் படுகொலை செய்யப்பட்டதை பார்க்கும் கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட "பல்கீஸ் பானு" வழக்கை குஜராத்தில் நேர்மையா விசாரிக்க மாட்டாங்கனு உண்மையை உணர்ந்து பாம்பேக்கு வழக்கை மாற்றி விசாரித்து.. பல கொலை மிரட்டலுக்கு அஞ்சாமல்.. ஆசை வார்த்தைக்கு மயங்காக காவி பயங்கரவாதிகளான "ஒரு டாக்குடர், ஒரு போலீசு உட்பட 9 மனித மிருகங்களுக்கு சட்டப்படியான தண்டனை வழங்கிய நீதிதேவதை ... 

அதுக்கு பிறகு நாட்டின் நான்காவது பெரிய நீதிமன்றமும் பழமையானதுமான நம்ம சென்னை ஹைக்கோர்ட்டு தலைமை நீதிபதியா மாற்றப்பட்டு வந்தாங்க ... 

இப்போ காவி பாசிச ஆட்சி நடப்பதால் பழிவாங்கலோ அல்லது என்ன ஆச்சுனு தெரியல திடீர்னு மேகலாயா ஹைக்கோர்ட்டுக்கு மாத்திட்டாங்க...

இதுல என்ன பெரிய விஷயம்னா ஒரு காலாஜ்ல புரஃபசரா இருந்தவரை திடீர்னு எல் கே ஜி க்கு பாடம் நடத்துனு அவமானப்படுத்தியதை போல அனுப்பி இருக்கானுங்க... 

75 நீதிபதிகளுக்கு தலைமையா இருந்தவங்க இவங்க கீழ நாலு லட்சம் வழக்கு போயிட்டு இருக்கு. அப்படிபட்டவரை வெறும் 2 நீதிபதிக்கு தலைமை நீதிபதியா மாத்தியிருக்காங்க அங்க வெறும் 1070 கேசுதான் ஓடிட்டு இருக்கு... 

இதை ஏன் செஞ்சாங்க எதுக்கு செஞ்சாங்கனு யாருமே கேக்க மாட்டாங்க. எப்படியோ நாடு நாசமா போகுதா அது போதும் .. ஒரே நாடு ஒரேடியா மூடு..// 

****************

இதில் மேலே உள்ள வழக்கு, தண்டனை குறித்த செய்திகளைப் பற்றி சரியாக தெரியவில்லை. ஆனால், மேகாலயா உயர்நீதிமன்றத்தில் இரண்டு நிதிபதிகளுக்கு தலைமை நிதிபதியாக மாத்தி இருக்காங்க என்று சொல்லி இருப்பது கூட தவறு. 

ஆமாம், அங்கு மொத்தமே இரண்டு பேருதான் என்று, நீதித்துறைக்கான பிரத்தியேக இணையப்பக்கத்தில் சொல்லப்பட்டு உள்ளது. 

எனவே, இதுவரை நிதிபதிகளை கன்னியத்துடன் காத்து வருகிறோம் என்று சொல்லிவந்த கொலீஜியம் கூட்டுக்களவாணிகள், ‘‘நிதிபதி விஜயா தஹில் ரமணியை அசிங்கப்படுத்துவதாக நினைத்து, அசிங்கப்பட்டாய்ங்க’’ என்றுதான் சொல்ல வேண்டும்.

பொதுவாக நிதிபதிகள் பதவி விலகுவதாக கடிதம் கொடுத்தால், அதனை ஏற்றுக் கொண்டு அடுத்த நபரை நியமிக்கும் வேலையைப் பார்க்க வேண்டியது தானே? இதை செய்யாமல், பதவி விலக வேண்டாமென கெஞ்ச வேண்டிய அவசியமென்ன?

ஆகவே, நிச்சயமாக இந்த இடமாறுதல் நடவடிக்கையில் ஏதேதோ உள்குத்துகள் இருக்கிறது என்பதுதான் உண்மை. இதனை உறுதிப்படுத்தும் விதமாக ‘‘சிறந்த நிர்வாகம் நடைபெற வேண்டும்’’ என்பதற்காக எடுத்ததாக கொலிஜியம் குழுவில் உள்ள நிதிபதிகள் தெரிவித்து உள்ளார்கள்!

இதில், நமக்கு இயல்பாக எழும் சில கேள்விகள்

1. நீதித்துறையே சிறந்த நிர்வாகமாக இல்லை என்று சொல்கிறார்களா?

2. தஹிலராமாணி தலைமையில் சிறந்த நிர்வாகம் இருக்கிறது என்கிறார்களா அல்லது இல்லை என்கிறார்களா?

3. தஹில்ராமாணியிடம் இருக்கு என்றால், மேகாலயா நிதிபதியிடம் இல்லை. அதனால்தான் அவரை அங்கிருந்து தூக்கி விட்டு, இவரை அங்கு பணியிடை மாற்றம் செய்கிறோம் என்றே அர்த்தம்!

4. அப்படியானால், மேகாலயா தலைமை நிதிபதியை, எப்படி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நிதிபதியாக நியமிக்க முடியும்?

5. தஹில்ராமாணிக்கு நிர்வாகத் திறமை இல்லை என்றால், பின் எந்த அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு தலைமையாக கடந்த ஆண்டே, இதே கொலிஜியம் நிதிபதிகளால் நியமிக்கப்பட்டார்?

என்பன போன்ற பல்வேறு கேள்விகளுக்கும் பதில் சொல்லனும். ஆனால், உண்மை இருந்தால்தானே சொல்ல முடியும். ஆகையால் சொல்லவே மாட்டார்கள். 

யோக்கியமாய் இருப்பவர்கள், வக்கீழ்த் தொழிலுக்கு தொழிலுக்கு லாயக்கு அற்றவர்கள் என்பதை காந்தியும், பெரியாரும் அப்பவே சொல்லி விட்டார்களே!

உச்சநீதிமன்றத்தில் தலைமை நிதிபதியாக இருந்த தறுதலை சதிசிவம் ஓய்வு பெற்றப்பின், மிகமிக கேவலமாக கேரள ஆளுநராக ஆசைபட்டதைப் போல உயர்நீதிமன்ற தலைமை நிதிபதி தஹிலராமாணி தன் தகுதியில் இருந்து கீழிறங்க ஆசைப்படனும் என சொல்ல முடியுமா என்ன?

வக்கிழ்ப் பொய்யர்களின் நடவடிக்கைகளை பார்த்தால், பிரச்சினையை தீர்க்க பாடுபடுவது போலவேதான் இருக்கும். ஆனால், நிச்சயமாக பிரச்சினையை பெரிது படுத்தி பிரித்து விடும்.

ஏனெனில், வக்கீழ்ப் பொய்யர்களின் பிறவிக் குணமே இதுதான் என்பது சட்ட ஆராய்ச்சியாளர் திரு. வாரண்ட் பாலா அவர்களின் ஆய்வு முடிவு.

clip

இதனை மகாத்மா காந்தி, ‘‘வக்கீழ்களால் ஒரு நல்ல காரியத்தை கூட செய்ய முடியாது’’ என்று வேறு விதமாக குறிப்பிடுகிறார். கருத்துக்கள் வெவ்வேறாக இருந்தாாலும் முடிவு ஒன்றுதான்! ஆகையால், இது வக்கீழ்ப் பொய்யர்களின் வழியில் வந்த நிதிபதிகளுக்கும் சாலப் பொருந்தும்!!

ஆமாம், இந்த செய்தியில் கூட, பணியிட மாற்றம், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து 06-09-2019 அன்றே இராஜினாமா என்ற நிலையில், நேற்று 09-09-2019 அன்று தலைமை நிதிபதிக்கு 75 வழக்குகளை விசாரிப்பதற்காக ஒதுக்கியுள்ள நிலையில், அதனை விசாரித்து இருந்தால் பிரச்சினை சுமூகமாக முடிந்திருக்கும்.

ஆமாம், இதற்காக திட்டமிட்டுதான் வழக்கை விசாரிக்க ஒதுக்கியும் இருக்கிறார்கள். இதனை யார் செய்ய முடியும்?

தலைமை நிதிபதி இருக்கும்போது, அவரே முடிவு செய்ய முடியும். அவர் இல்லாதபோது, அவருக்கு கீழுள்ளவர்கள் ஒதுக்க முடியுமா? நிச்சயமாக முடியாது. ஆகையால், மேல்நிலை உத்தரவுபடியே ஒதுக்கி இருக்க முடியும். அப்படியென்றால், பிரச்சினையை பெரிதாக்காமல் முடிக்க மேற்கொண்ட முயற்சியே அன்றி வேறில்லை.

இதைத்தான் சட்டத்துறை அமைச்சர் சந்தித்துப் பேசியதும் கூட என்றே நாம் ஆராய்ந்து அனுமானிக்க வேண்டும். மேலும் தலைமை நிதிபதிக்கு பிடிவாத குணமும் உண்டு என்பதையும் அனுமானிக்கவே வேண்டும்.

பொய்யர்களின் போராட்டத்தை அடுத்து, ஐந்து நிதிபதிகளை கொண்ட கொலிஜியம் குழு, தன் பணியிட மாற்ற உத்தரவை அதிகாரப்பூர்வமாக மாற்றிக் கொண்டால், அக்குழுவில் உள்ள ஐவரும் ஜந்துக்கள் என்றாகி விடுவர்.

தங்களுக்கும், நிதிபதிகளுக்கும் நீதியில்லை என நீதிமன்றத்துக்கு வெளியே போராடும் பொய்யர்கள், மக்களுக்கான நீதியை மட்டும் எப்படி, நிதிபதிகளிடம் வாதாடி பெற்றுத் தருவார்கள்?

மொத்தத்தில் சுமூகமாக முடிவு காண வேண்டிய இப்பிரச்சினையை வக்கீழ்ப் பொய்யர்கள் பெரிது படுத்தவே பாடுபடுகிறார்கள் என்பது இன்று விளங்கவில்லை என்றாலும், விரைவில் இரண்டில் ஒன்றான செய்தியாக வெளிவரும். அப்போது நன்கு விளங்கும். 

பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

Saturday, August 17, 2019

மனு எழுதத்தெரியாத மடையர்களே, ‘‘வக்கீழ்ப் பொய்யர்கள்’’தொழிலின் அடிப்படை நோக்கம் லாபமே! ஆகையால், தொழில் செய்பவர்களிடம் 100க்கு 99.99% நியாயத்தை எதிர்ப்பார்க்கவே முடியாது. ஆனாலும், இவர்களைத்தான் மக்கள் மலைபோல நம்புகிறார்களே ஒழிய, தன் திறனை நம்புவதில்லை.

இதுவே மக்களின் மடத்தனமாக இருப்பதால்தான், தொழில் செய்பவர்கள் கொடிகட்டி பறக்கிறார்கள். அதாவது இவர்களை அடிமைப்படுத்தி, இவர்களின் உழைப்பை சுரண்டி, கொழுக்கிறார்கள். உழைப்பவர்களோ வறுமையிலேயே வாடுகிறார்கள்.

இதையே இவர்கள் தன் திறன் மீது நம்பிக்கை வைத்து உழைத்தால், அடிமை, வறுமை என்ற இருநிலைகளும் நீங்கி ஆனந்த வாழ்வு வாழ்வார்கள். 

ஒரு பிரச்சினையை தீர்ப்பதற்காக எழுதப்படும் மனு, அந்தப் பிரச்சினையை சரியான முறையில் தீர்ப்பதோடு, வேறு பல பிரச்சினைகள் தீரும் வண்ணமும், வேறு சிக்கல்கள் எதுவும் எழாத வண்ணமும் இருக்க வேண்டும். 

இதற்கு சொல்ல வேண்டிய சங்கதிகளை மிகவும் நேர்த்தியாகவும், படிப்பவர்களுக்கு இடையில் கேள்விகள் எதுவும் எழாத வண்ணமும் தெளிவான நீரோடை போல. தெள்ளத் தெளிவான எழுத்து நடையில் இருக்க வேண்டும்.

ஆகையால், நம்ம பிரச்சினையை நம்மைத் தவிர வேறு யாரும் சரியாக சொல்ல முடியாது என்ற அடிப்படை தத்துவத்தின்படி, பிரச்சினையில் தொடர்புள்ள அக்கறையுள்ள அந்தந்த நபர்களே மனுவை எழுதும் போதுதான் அம்மனு மிகச் சிறப்பாக இருக்கும். 

இதற்கு நாமேதான் எழுத வேண்டுமென்கிற எண்ணமும், முயற்சியும் இருந்தால் போதும். இதைத்தான் ‘‘மநு வரையுங்கலை!’’ நூல் முழுவதிலும் நம் ஆசிரியர் திரு. வாரண்ட் பாலா எழுதி நிரூபித்து காட்டியுள்ளார்.

அதாவது அந்த நூலில் தொகுக்கப்பட்ட குற்றவியல், உரிமையியல், நுகர்வோர், திருமண விவாகரத்து, உரிமையியல் வழக்கிற்கு பதிலடி தரும் பதிலுரை, இப்பதிலுரையிலேயே எதிர்க்கோரிக்கை, குற்றவியல் மேல்முறையீட்டு மனுக்கள் என எல்லாமே நிதிபதிகளிடம் தாக்கல் செய்யப்பட்டு, அம்மனுவில் எழுதியது போலவே தீர்ப்பும் பெறப்பட்டவை ஆகும்.  

ஆகையால், இப்படியெல்லாம் மனுவை எழுத முடியுமா என்று அனைத்து மட்டத்தில் உள்ளவர்களையும் ஆச்சரியப்பட வைக்கும் அளவிற்கு குடியரசுத் தலைவர், ஆளுநர் ஆகியோருடன் நட்பு ரீதியாக நேரடி தொடர்பில் உள்ளோருக்கு கூட, இவரே மனு எழுதி பிரச்சினையை தீர்த்து வைத்திருக்கிறார். அதையும் அந்நூலிலேயே சொல்லி இருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். 

ஆகையால், அவர் யாருக்காக மனுவை எழுதுகிறாரோ அவர்கள் பாக்கியவான்கள் என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு நியாயம் இருக்கிறது என்று உணர்ந்தால் மட்டுமே மனுவை எழுதுவார். இதுக்கும் சிந்தனைகள் தானாக வரவேண்டும். ஆகையால், சில நேரங்களில் இரண்டு பக்கம் எழுதுவதற்கு, இருபது நாட்கள் கூட ஆகி விடும் என்பது எங்களுக்கே கிடைத்துள்ள அனுபவம். 

இது மனுவிற்கு மட்டுமல்ல; அவர் எழுதும் கட்டுரைகள் நூல்கள் உள்ளிட்ட அனைத்துக்கும் பொருந்தும். ஆகையால்தான், நூல்களை எழுத சாதாரணமாக ஓரிரு வருடங்கள் ஆகிறது. அதற்கு மேலும் ஆகிறது. இதனால்தான், அவர் கணித்து சொன்னது சொன்ன படியேயும், எழுதியது எழுதிய படியேயும் நடக்கிறது.  

மற்றபடி, உறவு, நட்பு, பணம், புகழ் என்று எதற்காகவும் மனுவை எழுதிவிடவோ, ஆலோசனையை சொல்லி விடவோ மாட்டார். எந்தவொரு நிர்ப்பந்தத்துக்கும் ஆளாக கூடாது. அப்படி ஆளானால், அடிமையாகி விடுவோம் என்று ‘‘கடமையைச் செய்! பலன் கிடைக்கும்’’ நூலில் தெளிவுபட எழுதியுள்ளார்.

கர்மவினை

இது புரியாமல் பலர், அவரிடம் ஏடாகூடமாக பேசி எதையாவது செய்து தங்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயத்தை  இழந்து, மேலும் பல சிக்கல்களில் சிக்கி தவியாய் தவிப்பர். பரிதவிப்பர். இதுதான் அவரவர்களும் அனுபவித்தாக வேண்டிய கர்மவினை. இதையெல்லாம் அவரது நூலிலேயே படிக்கலாம்.

இதில், அவர் பணத்துக்கு ஆசைப்படலாம் என்று அற்பத்தனமாக நினைத்து, மனு எழுத அல்லது ஆலோசனை சொல்ல இலட்சக் கணக்கில் பணம் தருவதாக கூறி, வாங்கிக் கட்டிக் கொண்டவர்களும் பலருண்டு.

ஆமாம், எப்படி தெரியுமா?

இலட்சம் இல்லை; நீ கோடி கொடுத்தாலும் கூட உனக்காக ஒரு எழுத்தை கூட எழுத மாட்டேன் என்று, கோடான கோடியில் ஒரு நபராக உள்ள இவரைத் தவிர வேறு யாராலும் உறுதியாக சொல்ல முடியாது.

இதனை வேறு விதமாக சொல்ல வேண்டுமென்றால், ‘‘நான் ஒரு தடவ சொன்னா நூறு தடவ சொன்ன மாதிரி’’ மற்றும் ‘‘நான் ஒருமுறை முடிவெடுத்துட்டா என் பேச்சை நானே கேட்கமாட்டேன்’’ என்ற சினிமா வசனங்களுக்கு அப்படியே மிகவும் பொருத்தமானவர். 

ஆமாம், ஒருமுறை சிக்கியவன் எத்தனைப் பிறவி எடுத்தாலும், மறக்க மாட்டான் என்கிற அளவிற்கு அவ்வளவு அன்பாக அர்த்தத்தோடு திட்டி தீர்ப்பார் என்பதை, நூல்களில் நிதிபதிகளை எழுதுவதை வைத்தே புரிந்துக் கொண்டிருப்பீர்கள். ஆகையால், இதற்குமேல் விளக்க வேண்டியதில்லை.

நம் கடமையும், உரிமையும்!

நம்முடைய வரிப்பணத்தில் கூலி பெரும் அரசூழியர்கள் நமக்கு சரியான நேரத்தில் வேலையை செய்துதர வேண்டிய ஊழியர்களே! ஆகையால், அவர்களை சட்டப்படி எப்படி வேலை வாங்க வேண்டுமோ அப்படி வேலையை வாங்க வேண்டியதே நம் கடமை!! 

ஆமாம், காமராஜர் தமிழ் திரைப்படத்தில், கண் அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக வெளிநாடு செல்ல வேண்டிய பிரச்சினை ஒன்று அவரது கவனத்திற்கு வந்ததும், மருத்துவதுறை தலைவரை நேரில் அழைத்து, ‘‘மக்களுக்கு தேவையான நல்லதை செய்யத்தானே சட்டம். அதைச் செய்யாமல் கண் நாசமா போறத்துக்கா சட்டம்?’’ என்று அவரு பாணியில் நாலு ஏத்து ஏத்தி தலை குனிய வைப்பாரே!

அதுபோல, நமக்கு அவசரமாக ஒரு செயல் நடைபெற வேண்டி இருக்கிறது என்றால், அதனை மிகவும் அவசரம் / நேரில் சார்வு என்று மனுவின் தலைப்பில் குறிப்பிட்டே கொண்டு செல்லலாம். அப்படி வரும் மனு மீது ஊழியர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நம் மனு மீது நடவடிக்கை எடுக்க எனக்கு இத்தனை நாட்கள் அல்லது மாதங்கள் கால அவகாசம் இருக்கிறது என்று அரசூழிய அய்யோக்கியர்கள் அலட்சியமாக சொன்னால், ‘‘அடிமை முட்டாளே, உனக்கு எப்படி அதிகபட்ச உரிமை இருக்கோ அப்படியே உடனே செய்து தரவேண்டும் என கேட்க எனக்கும் சட்ட உரிமை இருக்கு’’ என்று தெளிவாக பதில் சொல்ல வேண்டும்.

அப்படி செய்யவில்லை என்றால், செய்ய முடியாத அளவிற்கு அத்தனை நாட்கள் என்னென்ன வேலைகளை செய்தாய் என்று சான்று நகலை தர வேண்டி இருக்கும் அல்லது இது தொடர்பான வழக்கில்  உன்னை சாட்சியாக அழைத்து, கூண்டில் ஏற்றி நான் விசாரிக்கும் போது பதில் சொல்லி சட்ட விளைவுகளுக்கு உள்ளாக வேண்டி இருக்கும் என சட்டப்படியே எச்சரித்தாலே போதும். 

இதில் முக்கியமாகவும், மறைமுகமாகவும் சொல்லப் பட வேண்டியது, ‘‘பொய்யர்கள் இன்றி நாமே வாதாடுவோம்’’ என்பதைத்தான். இல்லையெனில், பொய்யனை வைத்துதான் வாதாடுவோம் என்றும், அவனை சரிகட்டி விடலாம் என்றும் நினைப்பாய்ங்க. 

இப்படி சொல்லி விட்டால், எப்படி எப்படியோ சீறிய எந்தவொரு அரசூழிய அய்யோக்கியனும் பல் பிடுங்கப்பட்ட பாம்பாக அடங்கிடுவாய்ங்க. நாம் சொன்னபடி சிக்கினால், காலில் விழுந்து விடுவாய்ங்க என்பது, ஆசிரியர் உட்பட நம் வாசகர்கள் பலருக்கும் கிடைத்த அனுபவம். இப்படியொரு அனுபவம், இனி இவ்வாசகிக்கும் கிடைக்கலாம். 

கிராமத்து வாசகியின் சாதனை!

இதனை, பள்ளிப் படிப்பே படித்துள்ள நம் கிராமத்து வாசகிக்கு நேற்று சொன்னதும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும், தபால் பிரிவில் மனுவை கொடுத்து ஒப்புதல் கேட்க, அங்கிருந்த முட்டாள் ஊழியனோ கொடுக்க முடியாது என்று சொல்லவே, மாவட்ட ஆட்சியரை நேரடியாக சந்தித்து மனுவை கொடுத்து சுருக்கமாக செய்தியையும் சொல்லி விட்டாள்.


அதனைப் பெற்ற மாவட்ட ஆட்சியர், அந்த மனுவின் நகலில், மனுவை பெற்றதுக்கான கையெழுத்து ஒப்புதலை போட்டுக் கொடுத்து விட்டு, உடனே உதவியாளரை அழைத்து இதனை இன்றே நடவடிக்கைக்கு அனுப்பு என்று சொல்லி விட்டார்.

ஆமாம், மனு எழுதுவது எவ்வளவு முக்கியமோ, அதைவிட மிகமிக முக்கியம் அதனை அந்தந்த அரசூழியர்களிடம் கொடுத்து, அப்படி அவர்களிடம் கொடுத்ததற்கான உரிய கையெழுத்து ஒப்புதலைப் பெறுவது. இப்படி பெற்று விட்டால், பின்னர் அதற்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு, அந்த நிமிடமே அவ்வூழியர்களுக்கு வந்து விடுகிறது. இல்லையெனில், மனுவை கிடப்பில் அல்லது குப்பையில் கூட போட்டு விடுவார்கள்.

போலி உயில்கள்: ஓர் எச்சரிக்கை!

அதாவது பத்தொன்பது வருடங்களாக இவளது அனுபவத்தில் இருந்து வரும் அப்பா வழி தாத்தா சொத்தை, திடீரென இவளது சித்தப்பா மகனான தம்பி, தாத்தா என் பேருக்கு உயில் எழுதி வைத்திருப்பதாக கூறி பொய்யான உயிலின் மூலம் கைப்பற்ற முயற்சிக்கிறான்.

சொத்து தனக்கு உரிமையான போதே பட்டாவையும் சேர்த்து மாற்றாது விட்டது இவளது தவறு. இவளைப்போன்றுதான் பலரும் பட்டா பிரச்சினையில், சொத்துப் பிரச்சினையை சந்திக்கிறார்கள். ஆகையால், இதற்கும் விரைவில் தீர்வு தரும் நடவடிக்கையை அரசு எடுத்துள்ளது.‘‘பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்’’ என்பது போல, இப்படி பொய்யான உயிலை தயாரித்து ஏற்கெனவே சில சொத்துக்களை மற்றவர்களிடம் இருந்து கைப்பற்றி இருக்கிறான் என்பது, இவளிடம் பிரச்சினை செய்ததன் மூலம் தெரிய வந்துள்ளது. ஆகையால், ஏற்கெனவே சொத்தை இழந்தவர்களும் விழித்துக் கொண்டார்கள்.

இக்குற்ற புத்தியுள்ள படித்த முட்டாள், அண்ணா பல்கலை கலகத்தில் விரிவுரையாளராக இருக்கிறான் என்கிறாள் நம் வாசகி. இவனிடம் படிக்கும் மாணவர்கள் எப்படி யோக்கியர்களாக இருப்பார்கள்?

ஆகையால், இந்த போலி உயிலை வைத்தே அடுத்த கட்டமாக இவனது விரிவுரையாளர் வேலையை காலி செய்ய வேண்டும்; இதற்காக குற்றவியல் வழக்கு நடவடிக்கையை எடுக்க வேண்டுமென்ற முனைப்பில் இருக்கிறாள்.

படிக்காதவர்களால், அவர்கள் படிக்கவில்லை என்பதை தவிர, சமூகத்தில் வேறு பிரச்சினை இல்லை. ஆனால், படித்த முட்டாள்களால்தான் அத்தனை பிரச்சினையும் வருகிறது என்பதற்கு இவனெல்லாம் உண்மைச் சான்று.

இத்திருடனுக்கு அந்த கிராம நிர்வாக ஊழியனான இளைஞனும் ஏனோ துணை நின்று, அவனது பட்டா மாற்றி தர கோரும் மனுவை தாசில்தாருக்கு அனுப்பி விட்டான். இதை தடுக்கவே நம் வாசகி மாவட்ட ஆட்சியரிடம் மனுவை கொடுத்து, பெரிய சொத்துப் பிரச்சினையை சிறிய அளவிலேயே தடுக்க முயற்சித்து இருக்கிறாள் என்பது பாராட்ட வேண்டிய விசயம். கிராம நிர்வாக ஊழியனும் இவளது சட்ட நடவடிக்கைக்கு உள்ளாகப் போகிறான்.

ஆனால், வாசகர்கள் பலரும் கொடுத்த மனுவிற்கு உரிய ஒப்புதலை சட்ட உரிமையோடு வாங்கவே சங்கடமாக இருக்கிறது. அப்படி இருந்தால், பிரச்சினையை பெரிதாக்கிக் கொண்டு சந்தியில் நிற்க வேண்டியதுதான்!

இதெல்லாம், நம் ஆசிரியரைப்போல நல்லதொரு கொள்கைவாதிக்கும், நம் வாசகியைப் போல பிரச்சினையை உடனே தீர்க்க வேண்டும் என்ற முனைப்போது செயல்படும் வாசகர்களுக்கான செயல் இலக்கணம்.

வக்கற்ற வக்கீழ்ப் பொய்யர்கள்’’ 

இதையே தொழில் செய்யும், வக்கீழ்ப் பொய்யர்கள், எப்படி பொறுப்பில்லாமல் இருப்பார்கள் என்பதற்கு இந்த பத்திரிகை செய்தியே நல்லதொரு சான்று.

காஷ்மீர் விவகாரத்தில், இந்தியா எடுத்துள்ள சிறப்பு அந்தஸ்து நீக்கம் என்ற நிலைப்பாட்டை உலக நாடுகள் அனைத்தும் உற்று நோக்க, அரசின் நிலையை எதிர்த்து பொய்யர்களால் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆறு மனுக்களிலும் ஏகப்பட்ட கருத்துப் பிழைகள், தவறான தகவல்கள்  உள்ளதாக, நிதிபதிகள் புலம்பி உள்ளனர்.

இந்தப் புலம்பல் மனுக்களை விசாரிக்க முடியாததால், கிடைக்க வேண்டிய நிதி கிடைக்காமல் போய் விட்டதே என்ற புலம்பலாக கூட இருக்கலாம். யாருக்கு தெரியும்?

clip

ஏனெனில், இதற்கு முன் நிதிபதிகள் இப்படி புலம்பியதில்லை. மனுவில் தவறு இருந்தால், அதனை திருத்தி கொடுக்க வலியுறுத்தி திருப்பி கொண்டுக்க வேண்டியதே நிதிபதிகளின் சட்டப்படியான வேலை.

இதை விட்டுவிட்டு, தள்ளுபடி செய்ய முடியும். ஆனால் செய்யவில்லை என்று புலம்புகிறார்கள் என்றால், வட போச்சே, வருமானம் போச்சே என்று எண்ணியதாகத் தான் கருத வேண்டி உள்ளது.

கழுதை திண்ணா காகிதம்!

மேலும், வக்கீழ்ப் பொய்யர்கள் வழி வந்த நிதிபதிகள் என்னமோ உலக மகா யோக்கியர்கள் போலவும் தவறான தீர்ப்பை எழுதியதே இல்லை என்பது போலவும் ஒரு கர்ப்பனையை மக்கள் மத்தியில் உண்டாக்க முயற்சித்து இருக்கிறார்கள் என்றும் சொல்லலாம்.

ஒரு பாணை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்ற பழமொழிக்கு இணங்க,  ‘‘நிதிபதிகள் தீர்ப்பு எழுதிய காகிதம் என்று கழுதைக்கு தெரிந்தால், கழுதை கூட அக்காகிதத்தை திண்ணாது’’  என்று ‘‘நீதியைத்தேடி... சாட்சியங்களைச் சேகரிப்பது எப்படி?’’ நூலில் எழுதி இருக்கிறார் என்றால், இதை விட கேவலமாக விமர்சிப்பதற்கு வேறென்ன இருக்கு?!

எது எப்படி இருப்பினும், உலகமே உற்று நோக்கும் மிக மிக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு மனுவிலேயே, நீங்களெல்லாம் பெரீய கறுப்பங்கி காரியப் புடுங்கிகள் என்று நினைக்கும் உச்சநீதிமன்றப் பொய்யர்களின் தகுதியே இவ்வளவு தான் என்றால்.., 

உங்களது வழக்கில் வாதாடும் உள்ளூர் வக்கீழ்ப் புடுங்கிகள் எல்லாம் எப்படிப்பட்ட தகுதியில் இருப்பார்கள் என்பதை சற்றே யோசித்தால், ‘‘இப்பொய் புடுங்கிகளை விட, நீங்களே மேலானவர்கள்’’ என்பதை புரிந்து கொள்வீர்கள்.

பிற்சேர்க்கை நாள் 19-09-2019

நமக்கு அஞ்சல் பெட்டி எண்ணை வாங்கியுள்ளோம். இந்த எண்ணை குறிப்பிட்டு தபால் எதுவும் வந்தால், அந்தப் பெட்டியில் போட்டு விடுவார்கள். ஆகையால், அவ்வப்போது சென்று தபால் எதுவும் வந்திருக்கா என பார்க்க வேண்டும். அப்படி இன்று சென்று பார்த்தால் எதுவும் வரவில்லை. 

ஆனால், அருகில் இருந்த அஞ்சல் பெட்டிகளில் பல கடிதங்கள் இருந்தன. அதெல்லாம் நகராட்சிக்கும், வட்டார வளர்ச்சி ஊழியர்களுக்கும் சாதாரண அஞ்சலில் அனுப்பப்பட்டவை என்பது அந்தந்த பெட்டியின் மேலே நகராட்சி, வட்டார வளர்ச்சி என்றும் குறிப்பிடப்பிட்டு உள்ளதன் மூலம் தெரிந்தது. 

அரசு அலுவலகங்களுக்கு இதுபோன்று, அஞ்சல் பெட்டி எண்களை வாங்க சட்டப்பூர்வ அனுமதி இருப்பதாக தெரியவில்லை. இருக்கவும் முடியாது. 

ஆனால், அந்த அய்யோக்கிய ஊழியர்கள் தங்களுக்கு வரும் கடிதங்களை குறைத்து, வேலையை குறைத்துக் கொள்ள சொந்த செலவில் அஞ்சல் பெட்டி எண்ணை வாங்கி விட்டு, அவர்களுக்கு மக்கள் அனுப்பும் கடிதங்களை சட்டத்துக்கு விரோதமாக அப்பெட்டியில் போட சொல்லி விடுகிறார்கள் போலிருக்கு. 

ஆகையால், நாம் மேற்சொன்ன கிராமத்து வாசகியைப் போல, மனுக்களை நேரில் கொடுத்து உரிய ஒப்புதலைப் பெற்றால் மட்டுமே பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.  இல்லையெனில், அப்பிரச்சினை நம் வாழ்க்கைக்கே கூட முற்றுப்புள்ளி வைத்து விடும். 

பிற்சேர்க்கை நாள்: 10-09-2019

இதில் சொல்லியுள்ள நம் வாசகியின் பிரச்சினை அடிமை அய்யோக்கிய அரசூழியர்களின் அலட்சியத்தால் பெரிதாகி விட்டது. பெரிதாகி விட்டது என்றால், இரண்டு தரப்புக்குமே என்றாலும், சட்டப்படி நடக்கும் நம் வாசகிக்கு பிரச்சினை பெரிதல்ல; மாறாக, சட்ட விரோதமாக நடந்த அய்யோக்கிய அரசூழியர்களுக்கே.

ஆமாம், அவ்வூழியர்களின் வேலைக்கே முற்றுப்புள்ளி வைக்கும் நிலையில், பிரச்சினை பெரிதாகி போய்க் கொண்டு இருக்கிறது. ஆகையால், நம் வாசகி வேறு சில மனுக்களையும், நினைவூட்டல் மனுவையும் கொடுக்க வேண்டி இருந்தது.

அப்படி கொடுக்கப் போனால், முன்பு மனுவைப் பெற்றுக் கொண்டு, நகலில் ஒப்புதல் கொடுத்ததை போல, இப்போது கொடுக்க மறுக்கிறார்கள். அப்படி கொடுத்தால், கீழ்நிலை ஊழியர்கள் செய்து விட்ட தவறுகளுக்கு, நாம் பதில் சொல்ல வேண்டி இருக்கும் என்பது அவர்களது எண்ணம்.

சட்ட விரோதமான காரியங்களை செய்து விட்ட கீழ்நிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க பயம். நாம் நடவடிக்கை எடுக்கப் போய் அவர்கள் எல்லாம் நமக்கு எதிராக போராட ஆரம்பித்தால், நம் நிலை மிகவும் மோசமாகி விடும் என்பது ஐ.ஏ.எஸ் அடிமைகளாக உள்ள மேல்நிலை ஊழியர்கள்.

ஆமாம், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் ஆகிவிட்டால் அவர்களெல்லாம் பெரிய பருப்பு போல சட்டப்படி நினைத்ததை எல்லாம் செய்து விட முடியாது என்பதற்கு சகாயத்திற்கு எதிராக கிராம நிர்வாக ஊழியர்கள் போராடியதாக, அவரே சொன்ன வாக்குமூலமே நல்லதொரு சான்று.

ஆகையால், வாங்க மறுத்த நினைவூட்டல் மனுவை மின்னஞ்சலில் அனுப்பி வைக்க அறிவுறுத்தினோம். அதன்படியே அனுப்பி விட்டு, நேற்று (09-09-2019) நேரில் போனால் மாவட்ட ஆட்சியரே, ‘‘உங்களுக்கு யார் இப்படியெல்லாம் (கடமை, தற்காப்பு உரிமை, குற்றம்) சட்டப் பிரிவுகளைப் போட்டு மனு எழுதிக் கொடுக்கிறார்கள்’’ என்று அலருகிறாராம்! உடனே விசாரிக்க உத்தரவு போடுகிறேன் என்று சொல்லி இருக்காராம்!!

நானும் சட்டம் படிக்கிறேன். நான்தான் எழுதினேன் என்று நீதியைத்தேடி... நூலை எடுத்துக் காட்டியும் கூட நம்பவில்லையாம். ஆள் பாதி, ஆடை பாதி என்பது போல ஆடையையும், ஆளையும் பார்த்தாலே ஓரளவு முடிவு செய்து விடலாம் அல்லவா? அதான்!பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

Thursday, August 8, 2019

நீ வாழ, நீயே வாதாடு! - தன் வேலையை மீட்ட வாசக தொழிலாளி!!உலகின் ஈடு இணையற்ற உழைப்பாளிகள் ஆன தொழிலாளர்கள், தொழிற்சங்க வியாதிகளை நம்பி இருக்காமல், சரியான சட்ட விழிப்பறிவுணர்வோடு உங்களை நீங்களே தற்காத்துக் கொள்ளுங்கள் என்பதை நீதியைத்தேடி... உள்ளிட்ட நூல்களில் ஆங்காங்கே வலியுறுதித்தி உள்ளதை காணலாம்.

இதற்கு ஏற்ப பல்வேறு தொழிலாளர்கள் தங்களின் சட்ட விழிப்பறிவுணர்வோடு சாதித்து வருகிறார்கள். இதில் வீண் பிரச்சினை ஏற்படுவதற்கு முன்பே, அதனை மிகவும் புத்திசாலித்தனமாக தடுத்து நிறுத்தியவர்களும் உண்டு என்பதற்கு, எங்களோடு பணி புரியும் ஒருவர் நிகழ்த்திய சாதனையைப் பற்றி, ஆட்சேபனையில் ஆரம்பித்து அடுத்தடுத்து அதிர்ச்சி தருவது எப்படி? என்ற கட்டுரையில் அறியலாம்.

தொழிலாளிகள் எப்படி சரியான சட்ட விழிப்பறிவுணர்வோடு இருக்க வேண்டும் என்பதற்கு ஓர் உண்மை!

இந்த வகையில் நாம் சட்டப்படி அரைகுறை நிறுவனம் என்று சொல்லும் போக்குவரத்து கலகத்தில் உள்ள நம் வாசகர் ஊழியர் ஒருவர், தன் வேலையை மீட்டெடுத்தது தொடர்பாக அனுப்பியுள்ள செய்தி இது!

*****************


ஐயா வணக்கம்.

நான் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் கோட்டம், புதுக்கோட்டை மண்டலம், புதுக்கோட்டை நகர் கிளையில் ஓட்டுனராக பணியாற்றி வந்தேன்.

கடந்த 06-11-2018 அன்று ஏற்பட்ட விபத்தின் காரணமாக என்னால் ஓட்டுநர் பணி செய்ய இயலாமல் போனது.  நான் எனது நிர்வாகத்தில் எனது உடல் தகுதிக்கு உரிய பணி வேண்டிய போது அவர்கள் தர மறுத்து வந்தனர்.

நமது சட்ட நூல்களை படித்ததன் விளைவாக எனக்கு தெரிந்தவரை அவர்களுக்கு கடிதம் மூலமாக பணி கேட்டு வந்தேன். 

அதன்  காரணமாக அவர்கள் வேறு வழியின்றி என்னை மருத்துவ குழுவிற்கு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை மருத்துவ குழுவிற்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

அங்கு என்னைப் பரிசோதித்த மருத்துவர்கள் எனது உடல்தகுதியை பற்றி நிர்வாகத்திற்கு தெரிவித்தும் எனக்கு எனது உடல் தகுதிக்கு உரிய பணி வழங்க மறுத்து வந்தனர். 

இதனால் நான் தொழிலாளர் நல ஆணையர் சமரசம் அவர்களிடம் முறையிட்டு அதனை வழக்காக மாற்றி, சமரசம் செய்து வைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் நிர்வாகம் வேலை தருகிறேன்; தருகிறேன் என்று கூறிக் கொண்டே இருந்ததே தவிர, வேலையும் தரவில்லை, ஊதியமும் தரவில்லை. 

நான் உடனடியாக எனது சமரச முடிவு அறிக்கையினை கொடுங்கள் எனக்கு இங்கு நீதி கிடைக்கவில்லை. நான் நீதிமன்றத்தில் முறையிட்டு நீதியினை பெற்றுக் கொள்கிறேன் என்று  கேட்டேன். 

அதைக் கேட்ட உடனே நிர்வாக தரப்பு அதிகாரி பதறிப் போய் அவருடைய உயரதிகாரியிடம் உடனடியாக அலைபேசியில் தொடர்பு கொண்டு வேலை தருவதாக கூறி அடுத்த வாய்தா வாங்கினார். 

தொழிலாளர் நல ஆணையரும் அடுத்த முறை வேலை வழங்க வில்லை என்றால் உங்களது கிளை மேலாளருக்கும், நிர்வாக இயக்குனருக்கும் சம்மன் அனுப்பி விடுவேன் என்று கூறினார். 

வேறுவழியின்றி தற்சமயம் எனக்கு காசாளர் பிரிவில் பணியினை நேற்று 06-08-2019 நாளன்று பணியில் சேர்ந்து பணி பார்த்து வருகிறேன். 

எனக்கு ஒரே ஒரு வருத்தம் தங்களது நூல்களில் தொழிலாளர்களுக்கு உண்டான பிரச்சனைகளுக்கு விரிவாக தீர்வு இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
*****************

இதில் நாம் மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது இவ்வாசகர் கடிதம் மூலமே நிர்வாகத்திடம் நடவடிக்கை மேற்கொண்டது. 

இவரும் ஒரு தொழிற் சங்கவாதிதான் என்றும், தொழிற் சங்கவாதிகள் எப்படி நடந்து கொள்வார்களோ, அப்படித்தான் இவரும் நடந்து கொண்டார் என்ற குற்றச்சாற்றுகளும் நமக்கு வந்தது உண்டு. 

அனைவருக்கும் தேவையான அடிப்படை சட்ட விழிப்பறிவுணர்வுக்கான நூல்களை மட்டுமே ஆசிரியர் திரு. வாரண்ட் பாலா அவர்கள் எழுதி உள்ளார். இதெல்லாமே உச்சநீதிமன்ற நிதிபதிகளுக்கு கூட தெரியாதவை என்பதை, பொது அறிவுள்ள எவரும் படிக்கும் போதே உணர முடியும். 

பொதுவாக சட்டத்தை அனைவரும் புரிந்துக் கொள்ளும்படி சாதாரணமாக எழுதமாட்டார்கள். இதற்காக சொல்ல வேண்டியதை நேராக சொல்லாமல் சுத்தி சுத்தி சொல்லுவார்கள். ஏனெனில், முதலில் எழுதுபவர்களுக்கு புரிந்தால்தானே தெளிவாக எழுதுவதற்கும், சொல்லுவதற்கும் முடியும். 

இதனை சரியாகப் புரிந்து, எளிமையாக எடுத்து சொல்லி இருப்பது, யாருக்கும் இல்லாத ஆசிரியரின் தனித்திறன். 

இந்த எளிய அடிப்படை புரிதலோடு, உங்களின் பிரச்சினைக்கு தக்கவாறு சட்டத்தைப் படித்துக் கொள்ளுங்கள் என்றும், எப்படி பயன்படுத்தலாம் என்பதை சிந்தியுங்கள் என்றும் குறிப்பிட்டும் உள்ளார். 

மேலும், ஆசிரியர் அடிப்படை இல்லாத, ஆனால் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து விதமான திருணம் விவகாரம், தொழிலாளர் நலன், நுகர்வோர் பாதுகாப்பு, மனித உரிமை உள்ளிட்ட பல்வேறு விசயங்களையும் தேவையான அளவிற்கு, வழக்கு அனுபவங்களோடு எழுதியுள்ளார். இதைக் கொண்டு சாதிக்கத் துடிப்பவர்கள் சாதித்துக் கொண்டேதான் இருக்கிறார்கள் என்பதற்கு எத்தனையோ ஆதாரக் கட்டுரைகளை கொடுத்துள்ளோம்.

தொழிலாளர்களுக்கு ‘‘மநு வரையுங்கலை!’’ நூலில் மனுவை தவிர்த்து நிறையவே எழுதி இருக்கிறார். ஆனால், வாசகர்கள் நூல்களை சரியாகவும், முழுவதுமாகவும் படிப்பதில்லை என்பதற்கு இத்தொழிலாளி வாசகரும் ஓர் உண்மை!

இதே நேரத்தில் ஆசிரியர் சொன்னபடி ஓரளவேனும் முயன்றதன் விளைவாகத்தான், இவ்வாசகர் தன் வேலையை மீட்டெடுத்துள்ளார் என்பதையும் சொல்ல வேண்டியதில்லை. சிறு முயற்சிக்கே இவ்வளவு பலனென்றால், பெரும் முயற்சி செய்தால், ஆசிரியரைப்போல என்னென்னவோ சாதித்து இருக்கனும்; அவரைப் போல இன்னும் பலர் உருவாகி அனுபவ நூல்கள் பற்பல வந்திருக்கனும். 

ஆனால், உருவாகவில்லை; ஆகையால், வாசகர்கள் யாரும் நூல்களும்  எழுதவில்லை. காரணம், ஆசிரியருக்கு இருக்கும் பரந்த சிந்தனையும், பெரும் மனப்பான்மையும், கடமை உணர்வும், வாசகர்களுக்கு சிறிதும் இல்லை என்பதை தவிர, வேறென்ன இருக்க முடியும்?!

இப்படியெல்லாம் கூட, நிதிபதிகள் உள்ளிட்டோரை விமர்சித்து, சட்ட நூல்களை தைரியமாக எழுதி வெளியிட முடியுமா? அவர்களுக்கே கொடுக்க முடியுமா?? என்று பிரபல எழுத்தாளர்களும், சிந்தனையாளர்களுமே ஆச்சரியப் படுகிறார்கள். 

ஆனாலும், உலகத்தில் உள்ள ஒவ்வொருவரும், தங்களுக்கு வரும் பிரச்சினைகளுக்கு தீர்வு சொல்லும் நூலை தேடும் முட்டாள்களாகவே இருக்க விரும்புகிறார்கள் என்றே சொல்ல வேண்டி உள்ளது.  


பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

Saturday, August 3, 2019

வேதங்களின் மொழி என்ன?ரிக், யஸூர், ஸாம, அதர்வன வேதங்கள் எல்லாம் சமஸ்கிருதம் என்று சொல்லக் கூடிய வடமொழியில் இருப்பதாக நாம் எண்ணிக் கொண்டு இருக்கிறோம் அல்லவா? 

உண்மையில் வேதத்திற்கு மொழி என்பதே கிடையாது என்றால், உங்களுக்கு ஆச்சரியமட்டுமல்ல, அதிர்ச்சியாக கூட இருக்கும். 

ஆமாம், வேதம் என்பது முற்றிலும் ஒலி வடிவம் உடையதே; அதே ஒலி வடிவில் உச்சரிக்கப்பட வேண்டியதே!

ஆனால், இந்த விதியை மீறி முதன் முதலில் சமஸ்கிருதத்தை தாய்மொழியாக கொண்டவர்கள் தங்களின் வசதிக்காக வேதங்களின் ஒலி வடிவை தங்களின் தாய்மொழி சமஸ்கிருதத்தில் எழுதி கொண்டதால் வேதங்கள் எல்லாம் சமஸ்கிருதத்திலேயே எழுதப்பட்டுள்ளன என்ற தவறான செய்தி இன்று வரை பதிவாகி இருக்கிறது. அவ்வளவே!

இதனை விளக்கிச் சொன்னவர் திரு. இலங்கை ஜெயராஜ் அவர்கள். இவர் இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நேர்மையாக சிந்திக்க கூடிய அறம் சார்ந்த ஆன்மீகச் சொற்பொழிவாளர்.

இவர் மாதந்தோரும் சென்னைக்கு வந்து, உயர் வள்ளுவம் என்ற தலைப்பில் திருக்குறளை வாழ்வியல் நெறியாக்க கற்பித்து வருகிறார். இதில் நூற்றுக் கணக்காணோர் கலந்துக் கொண்டு பயனடைந்து வருகின்றனர். 

இப்பவும் வேதம் என்பது ஒலி வடிவமே என்பதை நம்ப முடியவில்லையா? இந்த வீடியோவில் 8.50 நிமிடத்தில் கேட்டு அறியலாம்.

இன்று வேதத்தைச் சொல்பவர்கள் எல்லாம் சமஸ்கிருதத்தை படித்தவர்கள் அல்ல என்பதை தெளிவாகப் புரிந்துக் கொள்ளுங்கள்.

ஆமாம், நாம் எப்படி காயத்ரி மந்திரம் அல்லது எம்மொழியிலும் உள்ள திரைப்பட பாடலை ஒலி வடிவில் கேட்டுக் கேட்டு திரும்பப் பாடும் தகுதியைப் பெறுகிறோமோ அப்படியே அவர்களும் வேதங்களை ஒலி வடிவில் கேட்டுப் பேசுகிறார்கள், சொல்கிறார்கள்.

எனவே வேதங்களை அறிய முற்படுவது வடமொழி சமஸ்கிருதத்தை அறிவது ஆகாது. வடமொழி எதிர்ப்பு என்றப் பெயரில், எதிர்பாளர்களால் புனையப்பட்ட கட்டுக்கதை. அவ்வளவே!

குறிப்பு: இந்த ஆன்மீக சொற்பொழிவாளர் திரு. சதுர்வேதி அவர்கள் நம் நூல்களால் சட்ட விழிப்பறிவுணர்வை பெற்றவர்; தனக்கு எதிரான குற்றவியல் வழக்கில் தானே வாதாடியவர் என்பதோடு நமக்கு பல விதங்களில் உதவியுள்ளவர் ஆவார். 

இவரது காணொளிகளை பார்த்தால் இவர் ஒரு பன்மொழி புலமையாளர் என்பது விளங்கும்.

பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

Friday, August 2, 2019

ஆட்சேபனையில் ஆரம்பித்து அடுத்தடுத்து அதிர்ச்சி தருவது எப்படி?சட்டப்படி நமக்கு கொடுக்கப்படும் எந்தவொரு காகிக தகவலையும் வாங்க மறுக்கக் கூடாது. அப்படி மறுப்பதே சட்ட விரோதமான செயல் என்பதால், அதனால் பாதகங்களே விளையும்.

ஆனால், மக்களின் பிரச்சினையை முதலீடாக வைத்து சட்ட விரோத தொழில் செய்யும் வக்கீழ்ப் பொய்யர்கள் வாங்க கூடாது என்றே சொல்லுவார்கள். மக்களும் இதனை நம்பி வாங்காமல் விட்டு, வழக்கு மூலம் அவ்வக்கீழுக்கு ஆயுள் முழுவதும்  பிழைப்பை தருவார்கள். 

ஆனால், நாமே படித்துப் பார்த்து, அதிலுள்ள சங்கதிகள் தவறாக இருந்தால் ஆட்சேபனையுடன் பெற்றுக் கொள்வதாக எழுதி கையொப்பமிட அறிவுறுத்துவோம். இப்படி செய்தால், பிரச்சினைக்கு முதலிலேயே முற்றுப்புள்ளி வைத்து விடலாம் என்பதற்கு பல சம்பவங்கள் குறித்து எழுதி உள்ளோம். இருந்தாலும், இது புதிது! 

ஆமாம், எங்களோடு வேலைபார்க்கும் ஊழியரும் நம் வாசகரும் கேர் சொசைட்டி அங்கத்தினரும் ஆன ஒருவருக்கு எங்களது கம்பெனி நிர்வாகம் தன்னிலை விளக்கம் கோரும் அறிவிப்பு ஒன்றை கொடுத்தது. 

இப்படி ஒன்று கொடுக்கப்பட்டால் அந்த ஊழியர்கள் நிர்வாகத்திடம் கெஞ்சுவார்கள் அல்லது தொழிற் சங்கப் பொறுப்பாளர்கள் உள்ளிட்டவர்களை துணைக்கு அழைப்பார்கள். 

அவர்களோ வருவதற்கு ரொம்பவே பிகு பண்ணுவார்கள். அப்படியே வந்தாலும் வர வேண்டியது நமது தொழிற்சங்க கடமை என்பதை மறந்து விட்டு வந்ததை அந்த ஆயுள் முழுவதும் சொல்லிக் காட்டுவார்கள். 

தொழிற்சங்க வியாதிகளைப் பற்றி, நீதியைத்தேடி... சட்ட அறிவுக்களஞ்சியம் மற்றும் கடமையைச் செய்! பலன் கிடைக்கும் ஆகிய நூல்களில் ஆசிரியர் திரு. வாரண்ட் பாலா விரிவாக எழுதி உள்ளார்.


இவர் தான் நம் வாசகர் ஆயிற்றே. இதுபோன்ற அறிவிப்பு அல்வா எதுவும் வராதா என அறிவுக்கு விருந்து படைக்க காத்திருப்பவர்கள் ஆயிற்றே!

ஆகையால் வாங்கிப் படித்துப் பார்த்தார். ஆட்சேபனையுடன் பெற்றுக் கொள்கிறேன் என்ற எழுதி கையொப்பம் போட்டு வாங்கி அவர்களுக்கு முதல் அதிர்ச்சியை தந்தார்!!

ஆமாம், எங்கள் தொழிற்சாலை தொழிலாளிகளில் இப்படி எழுதிப் பெறுவது இவரே முதல் நபர். சபாஷ்!

பின் அதற்கு சட்டப்படி என்ன பதில் கொடுக்க வேண்டுமே! அதையும் ஒரு வார கால அவகாசம் இருந்தும் அடுத்த நாளே கொடுத்து விட்டார்!!  

இப்படித்தான் நமக்கு கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பிலும் சட்டத்தைப் பயன்படுத்தி தனி முத்திரைப் பதிக்க ஆரம்பித்து விட்டால், சாதாரணப் பாமரனுக்கும் கூட சட்டப் புரிதல் சர்வ சாதாரண சங்கதியாகி விடும்.

மற்றத் தொழிலாளிகள் என்றால், பதில் கொடுக்க கூடுதல் கால அவகாசம் கேட்பார்கள். ஆகையால் இவரை நிர்வாகத்தால் ஒன்றும் செய்ய முடியவில்லை. 

இதுபற்றி நிர்வாகத் தரப்பு ஊழியர் ஒருவரிடம் கேட்ட போது... 

நாம் எல்லோருக்கும் சட்டம் சொல்லிக் கொடுப்பதால் அவர்கள் எதற்கும் பயப்படுவதில்லை எதையும் வாங்கத் தயங்குவதில்லை அதற்கு பதில் கொடுக்கவும் தயங்குவதில்லை. ஆகையால் அவர்களை பயமுறுத்த கூட முடியவில்லை என புலம்பினார்களாம்! 

நாம் தரும் ஆட்சேபனை அதிர்ச்சி முதல் அடுத்தடுத்து தரும் அதிர்ச்சி வரை எப்படி இருக்கு? 

முன்னதாக இவரிடம் அந்த அறிவிப்பை வழங்கவே நிர்வாகத்தினர் யோசித்திருக்கிறார்கள். ஆகையால் இவரை வேலை வாங்கும் மேல்நிலை ஊழியர்கள் ஆறு பேரிடம் கொடுக்க சொல்லி இருக்கிறார்கள். 

ஆனால் அவர்களோ அவர் வேலையில் சரியாக இருக்கிறார். உனக்கும் அவருக்கும் பிரச்சனை என்றால் (உள்ளே வரும்போதும், வெளியில் போகும் போதும் வருகையை மின்னனு எந்திரத்தில் பதிவு செய்வதில்) நீயே கொடுத்துக் கொள். வேலையில் என்றால் நாங்கள் கொடுத்து கொள்கிறோம் என்று கூறி விட்டார்களாம்! இது முற்றிலும் சரிதான்!!

இதனைக் கேட்டதும் நம் ஆசிரியர் நீதிமன்றத்திற்கு போனால், அன்று நிதிபதிகள் பயந்து விடுமுறை எடுத்து விடுவார்கள் என்று நூல்களில் எழுதியுள்ள காமெடிதான் நினைவுக்கு வந்தது. 

நம்முடைய நூல்களின் மூலம் சரியான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்றிருந்தால், அதிகார துஷ்பிரயோகிகள் கூட எவ்வளவு பயப்படுகிறார்கள் என்பது இதிலிருந்து புரிகிறதா?!

பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

Wednesday, July 31, 2019

வெளிநடப்பு - சொன்னால் சொன்னதுதான்!இன்றைக்கு சுமார் பதினோரு ஆண்டுகளுக்கு முன்பாக, அதாவது 2008 ஆம் ஆண்டில் திரு. வாரண்ட் பாலா அவர்கள் எழுதி வெளியிட்ட ‘‘நீதியைத்தேடி... சட்ட அறிவுக்களஞ்சியம்’’ நூலில் ‘‘வெளிநடப்பே வெற்றிக்கு முதல்படி! யாருக்கு?’’ என்ற தலைப்பில்... சட்ட விரோதமான சட்டங்கள் நிறைவேறுவதற்கு காரணமே, அதனை எதிர்ப்பவர்கள் எதிர்ப்பது போல வெளிநடப்பு செய்து, மறைமுக ஆதரவை தெரிப்பதுதான் என்று தெள்ளத்தெளிவாக எழுதினார். இதன் மூலம் எதிர்க்கட்சிகளும் ஆளும் கட்சிகளோடு சேர்ந்த கூட்டுக்களவாணிகள்தான் என்பது தெளிவு.
இது சட்ட அறிவுக்களஞ்சியம் என்ற நூலின் தலைப்புக்கு ஏற்ப அதிகாரப்பூர்வமாக வெளியிடப் பட்டதுதானே தவிர, ஆனால், இதற்கு ஐந்தாறு வருடங்களுக்கு முன்பே இதுபற்றி சொல்லி உள்ளார். என்னவொரு தீர்க்கமான சிந்தனை!

அவர் ஆராய்ந்து சொன்னால், சொன்னதுதான் என்பதற்கு எத்தனையோ விடங்களில் இதுவும் ஒன்று!!

இதெல்லாம் எந்த அளவிற்கு சரியானது? இதுகூட தெரியாமலா அரசியல் வியாதிகள் இருக்கிறார்கள்?? என்ற கேள்விகள் எல்லாம் பலருக்கு இன்றும் இருக்கிறது.

ஆமாம், அவர் ஆராய்ந்து தெளிவாக எழுதுவதை கூட, பலரால் விளங்கிக் கொள்ள முடியவில்லை என்றால், அவர்கள் எல்லாம் எங்கே விளங்குவது?!

ஆனால், அரசியல் வியாதிகள் தெரிந்தேதான் வெளி நடப்பு செய்கிறார்கள் என்பதை, மத்திய அரசால் நேற்று முத்தலாக்தடை சட்டம் நிறைவேற்றப்பட்டதில் கனிமொழியின் கருத்து நிரூபிக்கிறது.


clip

ஆனால், இன்றும் இதையேத்தான் எதிர்க் கட்சியாக இவர்களும் தமிழ்நாடு சட்ட சபையில் செய்கிறார்கள். இவர்களுக்கு ஒரு நியாயம்! மற்றவர்களுக்கு ஒரு நியாயமாம்!! இது மிகவும் அப்பட்டமான, அநாகரீகமான மக்களை ஏமாற்றும் கேவலமான அரசியல் இல்லையா??

இதெல்லாம் புரிய வேண்டிய மாக்களுக்கு புரிந்து விடக்கூடாது என்பதற்காகவே, இதற்கு முன்பு, இதுபற்றி எந்தவொரு அரசியல் வியாதியும் பேசியதாக தெரியவில்லை.

ஆனால், இப்போது எதிர்க்கட்சி மீது குற்றம்சாற்ற வேண்டும் என்ற கெட்ட உள் நோக்கத்தோடு கனிமொழியின் பதிவு வெளிவந்து, எதிர்க்ட்சிகளின் வெளிநடப்பு விசயத்தில் நாம் சொல்லும், உண்மையை வெளிப்படுத்தி விட்டது.

இதனை ஆளும்கட்சியும், மசோதாக்கள் நிறைவேற்றப்படும் போது, உறுப்பினர்கள் அவையில் இருப்பது மிகவும் முக்கியம் என்று சொல்லி, உறுப்பினர்கள் யாரும் வெளிநடப்பு செய்யக்கூடாது என்பதை வேறு விதமாக, ஒப்புக் கொள்கிறது.


இவ்விரண்டு செய்திகளும், எதிரும் புதிருமான அரசியல் வியாதிகளால் சொல்லப்பட்டு ஒரே நாளில் ஒரே செய்தித்தாளில் வெளிவந்துள்ளதும் சிறப்பே!

ஆமாம், உண்மையை ஒளித்து வைக்க முடியுமே தவிர, ஒருபோதும் ஒழித்து விட முடியாது. அது ஒருநாள் வெளிப்பட்டே தீரும் என்பதற்கான சான்றுகள்தான் இவை!

எனவே, மிகமிக எளிய முறையில் சட்ட சங்கதிகளை சரியாகப் புரிந்துக் கொள்ள சமூகத்திற்கான சட்ட ஆராய்ச்சியாளர் திரு. வாரண்ட் பாலா அவர்களின் வழியில் சிந்திப்பதை தவிர, வேறு வழியிருப்பதாக தெரியவில்லை என்பதற்கு இந்த ஆக்கமும் நல்லதொரு உண்மையாக இருக்கும். அவ்வளவே!

பிற்சேர்க்கை நாள் 01-08-2019

விடுகதையும் அல்ல; விளக்குமாரும் அல்ல; வெளிநடப்பு என்றப் பெயரில் ஆதரவு அவ்வளவே!

clip
பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

Tuesday, July 9, 2019

சட்ட விரோத மதுக் கொள்(கை, ளை)யும், போராட்டங்களும், மற்ற மர்ம முடிச்சுகளும்...மதுவால் விளையும் தீங்குகளை விளக்க பல நூல்களையே எழுதலாம் என்றாலுங்கூட, மது என்ற இவ்விரண்டு எழுத்தை வைத்தே சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், ம=மகிழ்ச்சி; து=துன்பம். 

ஆமாம், மகிழ்ச்சியில் ஆரம்பித்து துன்பத்தில் முடிவதுதான் மது. இதுபோன்று மதி நுட்பமாக தன் கருப்பொருளை உணர்த்தக்கூடிய வார்த்தைகள் தமிழில் அதிகம் என்றாலும், ஏனோ தமிழைத் தாய் மொழியாக கொண்டவர்கள் உணர்வதில்லை. அப்படி உணர்ந்திருந்தால், மதியை மயக்கும் மதுவுக்கு அடிமையாகி இருக்க மாட்டார்களே! 

பொதுவாக குற்றம் என்பது, ‘‘சட்டப்படி செய்ய வேண்டியதை செய்யாமல் இருப்பதும், செய்யக் கூடாததை செய்வதும் ஆகும்’’. இந்த வரையறை சாதாரண குடிமகனில் இருந்து, அக்குடிமகனை காக்க  அவர்களே தேர்ந்தெடுக்கும் அரசு வரைக்கும் சரி சமமாகப் பொருந்த வேண்டும். 

ஆனால், இந்திய சாசனம் என்கிற இந்திய அரசமைப்பின் அடிப்படை உரிமையில், ‘‘சட்டத்தின் முன் அனைவரும் சமம்’’ என்று தெள்ளத் தெளிவாக சொல்லப்பட்டு இருந்தாலுங்கூட, சட்டத்தை இயற்றும் அரசுகள் தனக்கொரு நீதி, தன் குடிகளுக்கொரு நீதி என்ற வகையில், பாரபட்சத்துடன்தான் சட்டத்தை இயற்றும். 

அதாவது, தன்குடிகள் செய்தால் குற்றம். ஆனால், அதையே தானோ அல்லது தன்னால் நியமிக்கப்பட்ட அரசூழியர்களோ செய்தால் குற்றமல்ல என்ற வகையிலேயே சட்டத்தை இயற்றும்.

இதற்கு முழுக்க முழுக்க அடிப்படை அமைத்து தந்தது, பல்வேறு நாடுகளின் சாசனங்களை எல்லாம் ஈ அடிச்சான் காப்பியடித்து, இந்திய சாசனத்தை தொகுத்த மாமேதை மடையர்களே என்பதை விளங்கிக் கொள்ள விரும்பினால், இந்திய சாசனத்தை சுயமாக எழுதினார்களா...?! என்ற கட்டுரையைப் படித்தப் பின்னரே இதனை தொடர வேண்டும்.

அப்போதுதான் சட்டங்களை குறித்த சரியானப் புரிதலைப் பெற முடியும் என்பதால், ஏற்கெனவே படிக்காதவர்கள் படித்து விட்டு தொடருங்கள்.

பொதுவாக இணையத்தில் தினசரி நாளிதழ்களைப் படித்து, அதில் சட்டம் தொடர்பாக வரும் செய்திகளைப் பற்றி கருத்தை முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவு செய்கிறோமே தவிர, சமூக வலைத்தளங்களில் சட்டம் தொடர்பாக யார் யார் என்னென்ன எழுதி இருக்கிறார்கள் என்று படிப்பதில்லை. 

அப்படி படிக்க ஆரம்பித்தால், அவை அதிகபட்சம் மிகுந்த முட்டாள் தனமாகத்தான் இருக்கும். ஆகையால், அப்பதிவுகள் பலவற்றுக்கு சரியான சட்ட விளக்கத்தை எழுதிப் பதிவிட வேண்டி இருக்கும். மேலும், இவை பெரும்பாலும், ஏற்கெனவே ஆசிரியர் திரு. வாரண்ட் பாலா அவர்கள் நிச்சயமாக நீதியைத்தேடி... உள்ளிட்ட நூல்களில் எழுதியதாகவே தான் இருக்கும்.

அப்படியே ஆசிரியரால் எழுதப்படாத சட்ட சங்கதி என்றாலும் கூட, ஆசிரியரின் கருத்துப்படி, யாருக்கு என்ன தெரியனுமோ அதற்காக அவரவர்கள்தானே சிந்திக்கனும்? நாங்களே எதுக்கு சிந்திக்கனும்?

ஆகையால், என்னதான் நடக்கிறது என்று பார்க்கலாம் என வேடிக்கைதான் பார்க்கிறோம்.

ஆனால், நம் நீதியைத்தேடி... வாசகர்கள் உட்பட பலருக்கும், அவரவர்களுக்காக சிந்திப்பதே மிகுந்த சிரமமாக இருக்கிறது என்றால், அவர்கள் எப்படி மற்றவர்களைப் பற்றியும், மற்றவர்கள் சொல்லுவதில் உள்ள உண்மைகளைப் பற்றியும், சமுதாயத்தைப் பற்றியும் எப்படி சிந்திப்பார்கள்? சிந்திப்பீர்கள்??

அப்படி யாருமே சிந்திக்கத் தயாராக இல்லை. இந்த இழிநிலையே நீடித்தால், எப்படி உருப்பட முடியுமோ??!

சரி, நம்ம விசயத்துக்கு வருவோம்.

ஒரு போராட்டம் என்றால், அதனை தொடர்ந்து நடத்தி அக்காரியத்தை முடித்த பின்னரே ஓயவேண்டும்; அடுத்த போராட்டத்தை ஆரம்பிக்க வேண்டும் என்பதை மகாத்மா காந்தி ஒருவரே சரியாகப் பின்பற்ற, மக்களும் அமோக ஆதரவு கொடுக்க அவர் முன்னெடுத்த ஒவ்வொரு போராட்டமும் வெற்றி அடைந்தது.

அதன் பிறகு, அதே பிரச்சினைக்காக மீண்டும் மீண்டும் போராட வேண்டிய தேவையே இல்லாமல் போனது. இது காந்தி போன்ற கொள்கையாளர்கள் எடுத்த தெளிவான முடிவு. இதுபற்றி ஆசிரியர், ‘‘கடமையைச் செய்! பலன் கிடைக்கும்’’ நூலிலும் விரிவான விளக்கத்தோடு எழுதி உள்ளார்.

ஆனால், இப்போதுள்ள பெரும்பாலான போராட்ட காரர்களின் நோக்கமும், அவர்கள் போராடும் விதமும் தவறாகத்தான் இருக்கிறது.

சமீப காலங்களில் மது ஒழிப்புப் போராட்டம் என சொல்லிக் கொண்டு, சிலர் போராடி வருகிறார்கள். இதில் சசி பெருமாள் என்று ஒருவர் இருந்ததையே நீங்கள் மறந்திருக்க கூடும்.

ஆமாம், ஆள் இருந்தாலே பலருக்கு தெரியாது என்ற நிலையில், இல்லாத சசி பெருமாளை எப்படி நினைவிருக்கும்?

தன்னை காந்தியவாதி என்று சொல்லிக் கொண்ட இவர், அவ்வப்போது உண்ணாவிரதம் உள்ளிட்ட பல்வேறு வழிவகைகளில் போராட்டங்களை நடத்தியவர். இறுதியாக, கடந்த 2015 ஆம் ஆண்டில் செல்போன் டவரின் உச்சியில் ஏறி நின்று போராடினார்.

இது எந்த வகையில் காந்தி சொன்ன அகிம்சை போராட்டம் என்று தெரியவில்லை. தெரிந்தவர்கள் தெளிவாக விளக்கிச் சொன்னால், தெரிந்து கொள்வோம். 

அவ்வப்போது அரசுக்கு பெரும் தொந்தரவாக இருந்த இவரை மேலிருந்து கீழே இறக்குவதாக கூறி, இனியும் இருந்தால் தானே போராடுவாய்? ஆகையால், இனி இல்லாமலேயே போய்விடு என இறக்கவே வைத்து விட்டார்கள்.


ஆமாம், இந்த ஒளிப்படத்தை, நன்றாகப் பார்த்தாலே, இதுபற்றிய பல உண்மைகள் விளங்கும். அந்தரத்தில் வேலை பார்ப்பவர்கள், தவறி கீழே விழாமல் இருக்க அதற்கென உள்ள பிரத்தியேக பெல்ட்டை அணிந்த கொள்ள வேண்டும். இதையேதான் உயரத்தில் உள்ள ஒருவரை கீழே இறக்கவும் பயன்படுத்த வேண்டும்.


இதுபற்றி மேலும் விரிவாக அறிய விரும்புபவர்கள், இந்த காணொளியை பார்க்கவும். ஆனால், இதனை பின்பற்றாமல் கயிற்றை கண்டபடி உடம்பில் சுற்றி இறக்கியும், கயிற்றால் கழுத்தை இறுக்கியும் இறக்க வைத்தார்கள் என்பது படத்தைப் பார்த்தாலே புரியும். ஆகவே, இதுவும் ஒரு திட்டமிட்ட கொலைதான்.

ஆகையால், இவரது மரணத்துக்கு அரசே பொறுப்பு, நீதி விசாரணை வேண்டும் என்றெல்லாம் போலிப் போராளிகள் கூக்குரலிட்டதோடு சரி.


அவரவர்களும் அடுத்தடுத்த தங்களின் போலிப் போராட்டத்திற்கு சென்று விட மற்றுமல்லது அவர்களது தொழிற்சாலைகளில் மது தயாரிக்கும் வேலையில் மும்மரமாகி விட, அனாதையானது சசி பெருமாள் அவர்களது மனைவியும், குடும்பமும் தான்!

மதுவின் துயரத்தில் இருந்து மக்களை காப்பேன் என்று போராட்டக்களத்தில் இறங்கியவர் இறுதியாக தன்னையே காப்பாற்றிக் கொள்ள முடியாது போனது துரதிருஷ்டமே!

இப்போது மது எதிர்ப்பு போராளியாக இருப்பவர்கள், ஆனந்தனும், அவரது மகள் நந்தினி மற்றும் நிரஞ்சனா. இவர்களது முகநூல் பதிவு ஒன்று.

*************

"சமூக வலைத்தளங்களில் நீதிபதிகளை விமர்சித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தனது வானளாவிய அதிகாரத்தை மக்கள் மீது ஏவும் உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கவனத்துக்கு..

இ.பி.கோ.328 பிரிவின்படி மதியை மயக்கக் கூடிய, உடல்நலத்தைக் கெடுக்கக்கூடிய போதையூட்டும் மதுவகைகளை பிறருக்குக் கொடுப்பவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்கப்பட வேண்டும். இச்சட்டம் சரியாக செயல்படுத்தப்பட்டால் தமிழக முதல்வர் முதல் டாஸ்மாக்கில் மதுவிற்கும் ஊழியர் வரை சிறையில் அடைக்கப்பட வேண்டும். சட்டம் தெரிந்த நீதிபதிகளுக்கு இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 328 தெரியாமல் இருக்க முடியாது.

சாதாரண மக்கள் மீது தனது மேலாண்மையை செலுத்தும் நீதிபதிகள் மது ஆலை நடத்தும் அரசியல் வாதிகள் மீதும், மது விற்று லட்சக்கணக்கான மக்களை படுகொலை செய்யும் ஆட்சியாளர்கள் மீதும் ஒரு துரும்பையாவது கிள்ளிப் போட முடியுமா? 

நீதிமன்றத்தை விமர்சித்ததாக குற்றம்சாட்டி பொது மக்களை சிறைக்கு அனுப்ப உத்தரவிடும் உங்களுக்கு இ.பி.கோ-328 பிரிவின் படி மது விற்று மக்களைக் கொல்லும் குற்றவாளிகளை, கொலைகாரர்களை சிறைக்கு அனுப்பும் துணிவு உண்டா? 

ஹெல்மெட் போடுவது கட்டாயம் என்று அதிரடியாக உத்தரவிடும் நீதிபதிகளே! விபத்துகளுக்கு மூல காரணமாக உள்ள டாஸ்மாக் கடைகளை மூடச் சொல்லி உத்தரவிட முடியாமல் உங்களைத் தடுப்பது எது? 

அதிகாரத்தில் இருப்பவர்கள் கொடூரமான குற்றங்களைச் செய்தாலும் கண்டு கொள்ளாமல் குற்றவாளிகளுக்கு துணைபோகும் நீதிபதிகளும் குற்றவாளிகள் தானே? இதை உங்களால் மறுக்க முடியுமா? இதுபற்றி பகிரங்கமாக விவாதிக்க நீங்கள் தயாரா?

நீதிபதி என்பதாலேயே மக்களின் சட்டப்படியான உரிமைகள் மீது கைவைக்கும் அதிகாரத்தை உங்களுக்கு யார் கொடுத்தது? எத்தனையோ தியாகங்கள் செய்து கிடைத்த ஜனநாயக உரிமைகளை ஒருபோதும் விட்டுத்தர மாட்டோம். 

பிரிட்டிஷ் காலத்து சிறைச்சாலையைக் காட்டி மக்களை பயமுறுத்தும் அடக்குமுறையை ஏற்க மாட்டோம். தவறு செய்யும் நீதிபதிகளை விமர்சிப்பதால் என்ன விளைவு ஏற்பட்டாலும் சந்திக்க தயாராகவே இருக்கிறோம் என்பது Nandhini Anandan 22 செப்டம்பர் 2017 அன்று பதிவிட்ட பதிவு.

*************

இது அப்போதே இதுபற்றி எழுத நினைத்து எடுத்த பதிவு. ஆனால், இதில் என்னென்ன கூத்துக்கள் எல்லாம் நடக்கிறது என்பதை அறிவதற்காகவே காத்திருந்தோம். இன்னும் கூட காத்திருக்கலாம்.

ஆனால், இவர்களது போராட்டத்திற்கு நாம் ஏன் ஆதரவு தரவில்லை, இதுபற்றி நாம் ஏன் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை என்ற குழுப்பம் வாசகர்கள் உள்ளிட்ட பலருக்கும் இருக்கிறது.

ஆகையால், வாசகர்கள் உள்ளிட்ட பலரும் இவர்களது போராட்டங்கள் குறித்த பதிவுகளை நமக்கு அனுப்பி, நம் கருத்தை எதிர்ப்பார்த்து நீண்ட காலமாகவே காத்திருக்கிறார்கள்.

ஆமாம், நம் நீதியைத்தேடி... வாசகர்களுக்கே இவர்களது போராட்டம் எந்த அளவிற்கு சட்டப்படி சரியானது என்று தெரியாதபோது, மற்றவர்களுக்கு எப்படி தெரியும்?

எனவே, எல்லோருக்கும், எல்லாவற்றையும் சட்டப்படி விளக்கவே, இந்த விரிவான கட்டுரை!

உண்மையில், ஆனந்தனும், அவரது மகள்களும் நம்முடைய வாசகர்கள். ஆனந்தனும், நம் ஆசிரியரும் இப்போதுள்ள நோட்டா பட்டன் வரவேண்டும் என்ற எண்ணத்தோடு 2008 ஆம் ஆண்டுகளில் களப்பணி ஆற்றியவர்கள்.

ஆமாம், எந்த அளவிற்கு நண்பர்கள் என்றால், ஆசிரியர் எழுதி வந்த ‘‘கடமையைச் செய்! பலன் கிடைக்கும்’’ பத்திரிகையை 2011 ஆம் ஆண்டில் இருந்து நடத்துவதாக இருந்தவர் ஆனந்தன். ஆனால், பிறகு ஏனோ வேறு ஒரு பெயரில் மாத இதழை தொடங்கினார். அதன் பெயரும் நினைவில்லை. அது எவ்வளவு காலம் வெளிவந்தது என்பதும் தெரியாது.

இப்படி நம் ஆசிரியரைப் பார்த்து, வேறு இரண்டு வாசகர்கள் தொடங்கிய மாத இதழ்களும் கூட, தொடர்ந்து வெளிவராமல் போனதில் வியப்பில்லை.

நம் வாசகர்களாக நம் கருத்துக்களில் ஏற்பு இருந்தும், நந்தினி ஆனந்தன் சட்ட பட்டப் படிப்பை தேர்ந்தெடுக்க காரணம், ‘‘வக்கீழ் என்றால், ஓர் அங்கீகாரம் கிடைக்கும்’’ என்று, ஏற்கெனவே உள்ள வக்கீழ்கள் நினைத்ததைப் போலவே, இவர்களும் நினைத்ததை தவிர வேறென்ன இருக்க முடியும்?

சரி, வக்கீழ்களுக்கு எந்த சட்ட விதிகளும் சரியாக தெரிவதில்லை என்பதுதானே நாம் நம் நூல்கள் முழுவதும் நிறுவியுள்ள கருத்து. இது வக்கீழ் நந்தினிக்கு மட்டும் பொருந்தாமல் போய் விடுமா என்ன?!

ஆமாம், இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 328 இன்படி, அரசு மது விற்பது குற்றம் என்பதுதானே நந்தினியின் பிரச்சாரம். ஆனால், உண்மையில் அந்த சட்டப் பிரிவு சொல்வது என்ன? என்பதை மிகவும் கவனமாக படியுங்கள்.


இதன்படி, அரசு அரிசியில் ஆரம்பித்து ஆடு, மாடு உள்ளிட்டவற்றை வழங்குவது போல, மதுவை யாருக்கும் ஓசியில் ஊட்டியோ அல்லது ஊத்தியோ விட வில்லை.

மாறாக, அரசு தன் கஜானாவை நிரப்புவதற்காக, மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு (விற்கும் எனக்கும், வாங்கிக் குடிக்கும் உனக்கும் கேடு) என்று சொல்லியே விற்கிறது. அதனை வாங்கிக் குடிக்க விரும்புபவர்கள் காசு கொடுத்து வாங்கிக் குடிக்கிறார்கள். இது அரசுக்கும், குடிகாரர்களுக்கும் இடையே நடக்கும் கொள்கை, கொள்ளை, கொலை முடிவு.

எனவே, அரிசி, ஆடு, மாடு உள்ளிட்டவற்றை இலவசமாக கொடுத்தது போல, மதுவையும் அரசு இலவசமாக கொடுத்து குடிக்கச் சொன்னால் மட்டுமே, மேற்சொன்ன சட்டப் பிரிவு, அரசை நிர்வகிக்கும் அரசியல் வியாதிகளை தண்டிக்க தக்க அளவில் பொருந்தும் என்பது இப்போது புரிந்து இருக்கும்.  

ஆகையால், இதுபற்றிய வழக்கு விசாரணையில் கேள்வி கேட்டதாகவும், மேலும் கேட்க இருந்ததாகவும் சொல்லப்படும் கிறுக்குத்தனமான கேள்விகள், அதனால் ஏற்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, சிறையில் அடைப்பு, முகநூல் பதிவின் கருத்துக்கு மாறாக பிணையில் விட கோரியது, பிணையில் விட விதிக்கப்பட்ட நிபந்தனை என எல்லாமே கேலிக் கூத்தானவை என்பதால், இதற்கெல்லாம் வீணாக விளக்கம் தரவில்லை.  

ஆனாலும், முக்கியமான இரண்டு விசயங்களை தெளிவுபடுத்த வேண்டி உள்ளது. குடி வீட்டுக்கு கேடு என்பது மட்டும் அவர்களின் பிரச்சாரமல்ல; மோடி நாட்டுக்கு கேடு என்பதும் தான்! இதுகுறித்த காணொளிகளை யூடியூபில் காணலாம். 

மது விற்பனையை தமிழக அரசு செய்ய, மது ஒழிப்பு பிரச்சாரத்தில் மோடியை இழுக்க வேண்டி தேவை என்ன? இதனை மோடியின் ஆதரவாளர்கள் எதிர்த்து பிரச்சினை செய்யாமல் என்ன செய்வார்கள்? அப்போது சமூகத்தில் வேறு பிரச்சினைகள் உருவாகுமா உருவாகாதா? மதுவால் ஏற்படும் தீங்குகள் குறித்து விழிப்புணர்வு செய்கிறேன் என்று சொல்லுபவர்கள், வேறு பல பிரச்சினைகளை உருவாக்கு எப்படி சரியாகும்?

மோடியை எதிர்க்க வேண்டிய தேவை இருந்தால், அதனை தனியாக செய்ய வேண்டியதுதானே?! 

வழக்கு விசாரணையில் நந்தினி கேட்ட கேள்வி தவறு என்றால், அதனை நிதிபதி தவிர்க்க அறிவுறுத்தி, அவரும் பதிவு செய்ய மறுப்பார். இதனை ஆட்சேபித்து, எப்படி தொடர்புள்ளது என விளக்கினால், நிதிபதி ஏற்றுக் கொள்ள வேண்டும். 

எனவே இதற்காக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போட முடியாது. போடப்பட்டதாக சொல்வதும் பொய். பொய்த்தொழிலை செய்ய ஆரம்பித்தால் பொய்த்தானே சொல்ல வேண்டும்? 

உண்மையில், அரசின் மது விற்பனைக்கு நீதிமன்றமும் உடந்தையா என ஆனந்தன் கூச்சல் இட்டதாலேயே நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிகிறது. நிதிபதிகளும் உடந்தைதான் என்பதில் எங்களுக்கும் மாற்றுக் கருத்தில்லை. ஏன் உடந்தையாக இருக்கிறார்கள் என்பதை இதன் இறுதிப் பகுதியில் பார்ப்போம். 

சரி, அப்படியானால், இந்த சட்டப்பிரிவை சரியாக எப்படி எல்லாம் பொருள் கொள்ளலாம் என்றால், இந்தப் பிரிவின்படி, நாம் ஒருவருக்கு வலுக் கட்டாயமாக போதையை ஊட்டி விட்டு, அதனால் நிலை தடுமாறி அவன் குற்றம் எதையும் புரிந்து விட்டால், அதற்கு அவன் பொறுப்பாகவே மாட்டான். கட்டாயமாக ஊட்டி விட்ட நாமே பொறுப்பாவோம் என்பது ஒன்று.

அப்படி கட்டாயப்படுத்தி மதுவைக் கொடுத்ததால் அந்நபர் போதையில் தன்னிச்சையாக தனக்குத் தானே எந்த விதத்தில் காயம் ஏற்படுத்திக் கொண்டாலும் அதற்கும் நாமே பொறுப்பாவோம் என்பது மற்றொன்று என எங்களது அறிவுக்கு எட்டிய வகையில், இப்போதைக்கு இரண்டு விதங்களாக வகைப்படுத்தலாம். 

இதனை நாம் கட்டாயப்படுத்தி கொடுக்க வேண்டும் என்பது மட்டுமல்ல; அவர் அறியாமல் குடிக்கும் சூழ்நிலையை உருவாக்கி அதனால் குற்றம் நிகழ்ந்தாலும், அதற்கு அவர் பொறுப்பல்ல; நாமே பொறுப்பு என நம் ஆசிரியர் சொல்வதைப் போல, இச்சட்டப்பிரிவு பல்வேறு அர்த்தங்களை தருகிறது. ஆகையால், மேன்மேலும் இதுபற்றி சிந்திக்க வேண்டும்.

எனவே, இது அல்லாமலோ அல்லது இது தவிரவோ வேறு எதாவதொரு அர்த்ததில் இருப்பது, உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள். நாங்களும் அதுபற்றி சிந்தித்து தெரிந்துக் கொள்வதோடு, இதிலும் சேர்த்து விடலாம்.  

இது புரியாமல், இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 19 இன் விளக்கத்தை தவறாகப் புரிந்துக் கொண்டு, ‘‘நானும் நிதிபதிதான் என்று சொல்லிக் கொண்டதால் சிறைத்தண்டனைக்கு ஆளாகி இருக்கும் செந்தமிழ்க் கிழார் என்பவரைப் போல’’ இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 328 ஆனது என்ன சொல்கிறது என்றே புரியாமல், ‘‘அரசு மதுவை விற்பது குற்றம்’’ என்று ஆனந்தனும், நந்தினியும் பல வருடங்களாக இச்சட்டப் பிரிவை தவறாகச் சொல்லி போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்பதே எங்களின் கருத்து.

இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 328 க்கான சரியான விளக்கம் இதுதான் என்பதை, இதுவரை யாரும் சொன்னதாக தெரியவில்லை. அப்படி யாராவது சொல்லி இருந்து, அதுபற்றி சொன்னால் தெரிந்துக் கொள்கிறோம். 

மேலும், இதனை ஆனந்தன் மற்றும் நந்தினி சரிபார்த்து, விரும்பினால் விளக்கமான மறுப்புக் கட்டுரை எழுதிக் கொடுத்தால் வெளியிட்டு, நாங்களும் சட்டப்படியே ஆதரவு தர தயாராக இருக்கிறோம்.

அப்படி இல்லையென்றால், தங்களின் போராட்டம் எந்த அளவிற்கு சரியானது என்பதை (இப்போதே சுமார் ஐந்தாறு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இன்னும் பல்லாண்டுகள் கழித்து நிதிபதிகள் சட்ட விளக்கம் தவறு என்று சொல்வதற்கு முன்பாக) ஆனந்தனே சீர்தூக்கிப் பார்த்து போராட வேண்டும். ஏனெனில், போராடுவதற்கு பலரும் தயாரில்லாத நிலையில், போராடுபவர்களின் எந்தவொரு போராட்டமும் வீணாக கூடாது. 

இது புரியாமல், இச்சட்டப் பிரிவின்படி சரிதான் என நம் வாசகர்கள் உள்ளிட்ட, சமூகம் நம்பிக் கொண்டு ஆதரவு கொடுக்கிறோம் என்றப் பெயரில், ‘‘அவர்களை உசுப்பேத்தி உசுப்பேத்தியே சிறைக்குள் தள்ளி நடக்க இருந்த திருமணத்தை நிறுத்தி விட்டார்கள்’’ என்பதை தவிர வேறென்ன சொல்வது?

மேற்சொன்ன சட்ட விளக்கத்தின்படி, இக்குற்றம் (ந, த)டைபெற காரணமாக இருந்த ஆதரவாளர்கள் அனைவரையும் கூடவே, குற்ற உடந்தையில் சேர்த்து தண்டனைக்கு உள்ளாக்கலாம்.

அப்படியானால், மதுவை ஒழிக்க எதுவுமே செய்ய முடியாதா அல்லது என்ன செய்ய வேண்டுமென்றால், முன்பே சொன்னது போல, இந்திய சாசனத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ள கொள்கை முடிவுகளை பின்பற்ற வேண்டியது அரசின் கட்டாயக் கடமை.

ஆனாலும், அரசு அக்கடமையில் இருந்து தவறினால், நீதிமன்றம் உள்ளிட்ட யாரும் கேள்வி கேட்க முடியாது என்று மற்ற நாடுகளின் சாசனங்களில் இருந்து ஈ அடிச்சான் காப்பியாக இந்திய சாசனத்தை தொகுத்த மாமேதைகளின் மடத்தனத்தை திருத்தி எழுத முயற்சிப்பதன் மூலம் எளிதில் தீர்வு காண முயல வேண்டும்.

இது ஒன்றே இந்தியா முழுமைக்கும் மது விலக்கை அமல்படுத்துவதற்கான தீர்வாகவும், தீர்ப்பாகவும் இருக்கும் என நம்பலாம்.

ஆமாம், இந்த ஒன்றை மட்டும் செய்து விட்டால் மது மட்டுமல்ல; அரசின் கொள்கை முடிவு என்ற பல்வேறு பகல் கொள்ளை முடிவுகளுக்கும் சமாதி கட்டி விடலாம். 

இப்படி ஒன்றின் மூலம் பல பிரச்சினைகளை வராமல் தடுப்பது சிறந்ததா அல்லது ஒவ்வொரு பிரச்சினையாக வந்தப்பின் அவைகளை எதிர்த்து ஆயுள் முழுவதும் போராடுவது சிறந்ததா?

சரி, இதனை நீதிமன்றத்தின் மூலம் செய்ய வழியில்லையா என்ற கேள்வி உங்களுக்கு எழுந்தால்,

அரசின் கூலிக்கு மாரடிக்கும் எவரும்
காரிய அடிமைகளே! கயமை கோமாளிகளே!!
வெள்ளையர்களை விஞ்சிய கொள்ளையர்களே!!

என்று ‘‘மநு வரையுங்கலை!’’ நூலில் ஆசிரியர் திரு. வாரண்ட் பாலா அவர்கள் முன்மொழிந்த தத்துவத்தை நினைவில் கொள்ளுங்கள். 
அவர் சொல்லும் தத்துவங்கள், மேலோட்டமாக படிக்க சர்வ சாதாரணமாக தெரியலாம். ஆனால், அவை அனைத்துமே சரித்திரத்தில் பொறிக்கப்பட வேண்டிய அளவிற்கு அர்த்தங்கள் பொருந்தியவை. 
ஆமாம், எந்த நூலில் இந்த தத்துவத்தை சொன்னாரோ, அந்த நூலிலேயே இதற்கான விடையையும் வேறு விதமாக எழுதியுள்ளார். அது என்ன?
பொதுவாக அரசூழியர்கள் என்று சொல்லப்படுபவர்களை ‘‘அரைகுறை ஊழியர்கள், அரசூழியர்கள், பொது ஊழியர்கள்’’ என மூன்றாக, தகுதியின் அடிப்படையில் தரம் பிரித்து சொன்னார் அல்லவா? 


அதில், வாரியங்கள் மற்றும் கலகங்களால் மட்டுமே அரசுக்கு வருமானம் என்றும், அரசுத்துறை மற்றும் அரசின் அதிகாரம் பெற்ற நீதித்துறையால் அரசுக்கு அவ்வளவாக வருமானம் கிடையாது. 
ஆனால், இவ்விரு துறைகளுக்கும் பெரும்பணம் செலவு செய்யப்படுகிறது என்றும், இதற்கு வாரியங்கள் மற்றும் கலகங்களில் வசூலாகும் நிதியே கை கொடுக்கிறது என்றும் சொல்லி உள்ளார்.  
நிதிபதிகளுக்கு கொடுக்கப்படும் பெரும்கூலி, வீடு, கார் உள்ளிட்ட சொகுசு வாழ்க்கைக்கு மது உள்ளிட்ட வருவாயில் இருந்துதான், அரசு செலவழிக்கிறது என்ற நிலையில், ‘‘மதுவை விற்க கூடாது என்று கூறி நிதிபதிகள் சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்வார்களா?’’ 

இவ்வளவு ஏன், அரசு ஊழியராக இருந்து, விருப்ப ஓய்வைப் பெற்று மதுவுக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கும், ஆனந்தன், அரசிடம் இருந்து மாதா மாதம் தனக்கு கிடைக்கும் பென்ஷன் பணத்தை வேண்டாமென சொல்லி விடுவாரா? அந்தப் பணம் இல்லாமல், அவர்களால் போராட முடியுமா??

மதுவை மையக்கருவாக கொண்ட தமிழ் திரைப்படம் ஒன்றில், ‘‘நாங்க குடிச்சிட்டு தள்ளாடுவதால்தான், அரசாங்கம் தள்ளாடாம இருக்கு; நாங்க ஸ்டெடியா நிற்க ஆரம்பிச்சிட்டோம்னா, அப்புறம் அரசாங்கம் தள்ளாட வேண்டியதுதான்’’ என்று சொன்னதில் கூடுதலாக நாம் சொல்வது, நிதிபதிகளின் வாழ்வும் ஆட்டம் கண்டு விடும் என்பதே!
இப்படித்தான் கேவலர்களுக்கு வழங்கப்படும் பெரும் கூலி உள்ளிட்ட சலுகைகளுக்கு ஆகும் தொகையை அவர்கள் மக்களிடம் மாதாமாதம் அபராதமாக வசூலித்து தந்து விட வேண்டும் என்பதெல்லாம் எழுதப்படாத சட்டம் அல்ல.  
ஆமாம், அவரவர்களுக்கு மாத்திரமே தெரியும் வண்ணம் எழுதப்படுகிற சட்டம் என்பதற்கு ஆதாரமாக, இந்த 2019 - 2020 ஆம் நிதியாண்டில் எவ்வளவு கோடி (சுமார் 1634.30 கோடி என தெரிகிறது. இது ஆய்வில் இருக்கிறது) தொகையை வசூல் என்றப் பெயரில் மக்களிடம் இருந்து வழிபறி செய்துத் தரவேண்டுமென இந்திய இரயில்வே வாரியம், அதன் பயணச்சீட்டு பரிசோதகர்களுக்கு இலக்காக நிர்ணயித்துள்ள ஆதாரம் நம்மிடம் இருக்கிறது. 

ஆகவே, திட்டம் போட்டு மக்களிடம் வழிபறி மூலம் கொள்ளையடிக்கும் கொள்ளையர்களுக்கும், அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி மக்களை கொள்ளையடித்து, அதில் கூலியைப் பெற்று சொகுசாக வாழும் இவர்களுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. 

இந்திய தன்னாட்சி நூலின், ஒன்பதாவது கட்டுரையில், இந்திய இரயில்வே சமூகத்திற்கு கேடு என்று மகாத்மா காந்தி சொன்னதை, இங்கு மிகப் பொருத்தமாக நினைவு கூற வேண்டியுள்ளது. 

இறுதியாக, எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்கிறது என்று தெரியாது என்பது போலவே, யாருடைய போராட்டத்தின் பின்னனியில் யார் இருக்கிறார்கள் என்பது எதுவுமே தெரியாமல், நாம் யாரையுமே கண்மூடித்தனமாக  ஆதரிக்க கூடாது. அவ்வளவே! 

பிற்சேர்க்கை நாள் 11-07-2019

கடந்த 05-07-2019 அன்று நந்தினிக்கு நடைப்பெற்று இருக்க வேண்டிய திருமணம், சிறையில் இருந்ததால் நின்று போனது. பின் பிணையில் வந்துள்ள நந்தினிக்கு, தந்தை ஆனந்தன் தலைமையேற்று, அவருக்கே உரிய பாணியில் நேற்று திருமணம் நடத்தி வைத்துள்ளார். அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்!


பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

அறவழி நோட்டா

அறவழி நோட்டா
மகாத்மா போதித்த வாக்குரிமை!

நோட்டா: NOTA

நோட்டா: NOTA
விளக்கம்: EXPLANATION

நியாயந்தான் சட்டம்!

நியாயந்தான் சட்டம்!
வக்கற்றவர்களின் கீழான பட்டம்!

நூல்களின் முகப்பு

Follow by Email

Followers

முக்கியப் பக்கங்கள்

அடிப்படை சட்டங்கள்

  • 1. இந்திய சாசனம் 1950
  • 2. நீதிமன்ற சாசனம் 1872
  • 3. இந்திய தண்டனை சட்டம் 1860
  • 4. குற்ற விசாரணை முறை விதிகள் 1973
  • 5. உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908

நம் நூல்களைப் பற்றி

நீதியைத்தேடி.... நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் வரிசையில்...
1 குற்ற விசாரணைகள்
2 பிணை (ஜாமீன்) எடுப்பது
எப்படி?
3 சட்ட அறிவுக்களஞ்சியம்
4 சட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்
5 சாட்சியங்களைச் சேகரிப்பது
எப்படி?
6 கடமையைச் செய்!
பலன் கிடைக்கும்
7 மநு வரையுங்கலை!Recent Posts Widget

இந்நூல்கள் அனைத்தும் உங்களின் சட்ட விழிப்பறிவுணர்வுக்காக
மத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவியோடு
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பொது நூலகங்கள், மத்திய சிறைச்சாலைகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

சொந்தமாக தேவைப்படுவோர், உ(ய)ரிய நன்கொடையைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு வாட்ஸ்அப் எண் 09842909190 ஆகும்.

எல்லாப் பதிவுகளும்!

நம் தள வகைகள்

பயின்றோர் (20-08-16)