No law no life. Know law, know life! நியாயந்தான் சட்டம்! அதற்கு தேவையில்லை வக்கீழ் பட்டம். வக்கீழ் என்றாலே, கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்களே! இடைத்தரகர்களே!! நீ வாழ, நீயே வாதாடு!

நீ வாழ... நீயே வாதாடு... வரவேற்பு வாழ்த்து!

No law, no life. Know law, know life! என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியத்தை உணர்ந்து, ‘‘நீதியைத்தேடி... சட்டப் பல்கலைக் கழகத்திற்கு’’ வருகை தந்துள்ள உங்களை வருக என வரவேற்று, உங்களுக்கான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்று பயனைப் பெறுக என வாழ்த்துகிறோம்!
முக்கிய அறிவிப்பு : இந்த இணையப்பக்கத்தை புதுப்பிக்கும் பணி நடந்துக் கொண்டிருப்பதால், சில பதிவுகள் அல்லது இணைப்புக்கள் கிடைக்காமல் போகலாம்!

Thursday, December 27, 2018

கணவனை மீட்க கண்ணகியாக, ஒரு கண்டன காதல் கடிதம்!சமூகத்தில் சட்டப் பிரச்சினைகள் பல இருந்தாலும், தம்பதிகளுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, விவாகரத்து கோரும் குடும்பப் பிரச்சினைகள் குடும்பம் என்ற சமூக கட்டமைப்பையே உடைத்து, குடும்பமில்லாத நிலைக்கு தள்ளிவிடும் பேராபத்து நோக்கி சென்று கொண்டே இருக்கிறது. 

ஆமாம், இப்போது எப்படி கூட்டுக் குடும்பங்கள் இல்லாமல் போய் விட்டதோ, அப்படி இனி வரும் காலங்களில் தனிக்குடும்பங்களும் இல்லாதுபோய், அவரவரும் தனித்தனியாகவே வாழ்வதே குடும்பம் என்ற அவல நிலைக்கு சென்று விடும். 

ஆனால், குடும்பச் சண்டை போடுபவர்கள் எல்லாம் இதைப்பற்றியெல்லாம் யோசிக்காமல், தங்களின் சுயநலனை மட்டுமே கருத்தில் கொண்டு சண்டைப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதனை தடுத்தி நிறுத்தி அவர்களை ஒன்றாக வாழவைக்க வேண்டிய அவர்களின் பெற்றோர்களோ, அவர்களது பிரிவை தூண்டி விட்டு, கைகட்டி வேடிக்கைப் பார்க்கின்றனர். 

இவர்கள் தங்களது மாமனார், மாமியாருடன் கூட்டுக் குடும்பமாக, குடும்பக் குத்து விளக்காக வாழ்ந்திருந்தால்தானே, கூடி வாழ்வதில் உள்ள (அ, பெ)ருமையும் புரிந்திருக்கும்? 

அப்படி வாழாமல் விலகி வந்ததால் கூட்டுக் குடும்பமாய் வாழாததன் கேடு என்ன என்பது இப்போதாவது புரிந்திருக்க வேண்டும். ஆனாலும் புரியவில்லை. 

இந்த இழிநிலை நீடித்தால், அவரவரது குல வம்சமே இல்லாது போய்விடும். ஏற்கெனவே இப்படி நிறைய குல வம்சங்கள் அழிந்தொழிந்து விட்டன. 

எனவே, குடும்பப் பாரம்பரியங்களை காக்கும் முயற்சியில் ஒவ்வொருவரும் ஈடுபட வேண்டி உள்ளது. இதற்கான களத்தை அமைத்து தரும் கட்டுரையாகவே இதனை வடிக்கிறோம். 

ஆமாம், ஏற்கெனவே ஒழுங்காக இருந்த சமூகத்தை கெடுத்துக் குட்டிச் சுவராக்கிய பொறுப்பு அனைத்து தொழில் செய்பவர்களுக்கும் உண்டு என்றாலும், தங்களின் பெ(ரு, று)ங் கூலிக்காக வக்கீல் என்றப் பெயரில் தொழில் செய்யும் பொறுக்கிப் பொய்யர்கள் முக்கிய காரணம் என்று மகாத்மா காந்தி, பகுத்தறிவுப் பெரியார், கவிமணிப் பிள்ளை, கப்பலோட்டிய தமிழன், நீதிபதி வேதநாயகம் பிள்ளை ஆகிய அறிஞர் பெருமக்களே சொல்லிவிட்ட பிறகு, இப்பொய்யர்களை ஒழிப்பதுதான் நமது முக்கிய கடமையாக இருக்க வேண்டி இருக்கிறது. 

இதேபோல, அடிப்படை அறிவு இல்லாமல் திருமணப் பொருத்தம் சொல்லும் ஜோதிடப் பொய்யர்களையும் ஒழித்து கட்ட வேண்டும். இதற்கெல்லாம், நமக்கு அதுபற்றிய அறிவுத் தெளிவு வேண்டும். அதற்கு நம் முன்னோர்கள் கற்ற குருகுல கல்வி முறைக்கு மாற வேண்டும். 

குடும்பங்களின் சீரழிவை தடுக்க விரும்பிய ஆந்திராவை சேர்ந்த ஒருவர் வக்கீல் தொழில் மூலம் அதனை சாதித்து விடலாம் என நினைத்து, அப்படியே ஆகி விட்டாராம். 

ஆனால், குடும்பச் சண்டை போட்டுக்கிட்டு கோர்ட்டுக்கு வர்றவிய்ங்க, சேர்ந்து வாழ்வதற்கு இவரு சொல்ற ஆலோசனையை கேட்காமல் போகவே மனம் நொந்திருந்த வேளையில், எப்படியோ ஜோதிடக் கலையின் மூலம் தடுக்கலாம் என்ற முடிவுக்கு வந்து ஜோதிடத்தை கற்று திருமணம் பொருத்தம் பார்ப்பதையே தொழிலாக செய்து, அதில் பிரபலம் ஆகி இருக்கிறார். 

ஆமாம், திருமணம் பொருத்தம் பார்க்க வந்தால், அலசி ஆராய்ந்துப் பார்த்து விட்டு செய் அல்லது செய்யாதே என்று ஒரே வார்த்தையில் சொல்லி விடுவாராம். அதற்கான காரணங்களை சொல்ல மாட்டாராம். இவரு சொன்னா மட்டும், அவர்களுக்கெல்லாம் வெளங்கிடவா போவுது?

சிலருக்கு பத்துப் பதினைத்து வருடந்தான் உன் வாழ்வு சிறப்பாக இருக்கும். வேறு வழியில்லை. விரும்பினால் செய்துக் கொள் என்பாராம். 

இந்தக் கலியுகத்திலும் இப்படியெல்லாம் ஆட்கள் இருக்க முடியுமா என்ற சந்தேகம் இருக்கலாம். எதையும் பணம் சம்பாதிப்பதற்கான தொழிலாக செய்யாமல், சமூக நலனுக்காக செய்பவர்களுக்கு மட்டுமே இத்திறனும், திறமையும் இருக்கிறது. 

(ஆனால், இவர்களை இனங்கண்டறிவது மிகமிக கடினம். ஏனெனில், முதலில் இவர்கள் அதனை தொழிலாக செய்ய எங்குமே கடை விரிக்க மாட்டார்கள். எங்காவது ஒரு ஒதுக்குப் புறத்தில், எதுவுமில்லாமல் பரதேசிகளைப் போல உட்காந்து இருப்பார்கள்.

ஆனால், நாம என்ன நினைப்போம். அவர்கள் பிச்சை எடுக்கும் பரதேசிகள் என்றும், கடை விரித்து கொள்ளை காசு வாங்குபவனே (ந, வ)ல்லவன் எனவும் நம்பி ஏமாறுவோம். கூடவே, நமக்கு மிகவும் வேண்டியவர்களையும் கைகோர்த்து விட்டு ஏமாறச் செய்வோம்.) 

ஆமாம், உங்களின் சிந்தனை மற்றும் கொள்கைக்கு ஏற்ப பலத்த தேடுதலுக்குப் பிறகே, இதுபோன்ற ஒத்த சிந்தனையுள்ள ஆட்களை அடையாளங்காண முடியும். இவர்கள் தங்களை வெளிப்படுத்திக் கொள்ள வேண்டுமென நினைத்தால், வியாபாரிகள் என்ற விபச்சாரிகளிடம் சிக்கி தங்களையே இழந்து விடுவார்கள். இப்படி ஞானிகளே ஆகி இருக்கிறார்கள். 

சரி, நம்ம கண்டன காதல் கடித விசயத்துக்கு வருவோம். இதுக்கு முன்பு விவாகரத்துக்கு விண்ணப்பித்துள்ள தம்பதிகள் காதல் கடிதம் எழுதுவது எப்படி? என்ற கட்டுரையைப் படித்தீர்கள் அல்லவா?! படிக்காதவர்கள் படித்து விட்டு தொடர்க!

இதன்படி, அப்பெண்ணால் தன் கணவனுக்கு எழுதப்பட்ட கடிதத்தில் காதல் பகிர்வு பகுதியை நீக்கி விட்டு கண்டனப் பகுதியை பதிந்து உள்ளோம்.  இந்த மடலை மிகவும் கவனமாகப் படித்து புரிந்துக் கொள்ள வேண்டும்.

குடும்ப வழக்குகளை சந்திப்பவர்கள் இதுபோன்ற ஆக்கப் பூர்வமான முயற்சிகளை மேற்கொண்டு கைமேல் பலனைப் பெறுங்கள். சமூகத்தின் மீது அக்கறை உள்ளவர்கள், குடும்ப வழக்குகளை சந்திக்கும் தம்பதிகளுக்கு எடுத்துச் சொல்லுங்கள்.

கடிதத்தின் கண்டனப் பகுதி தொடங்குகிறது.

******************

சரி, நம்ம வழக்கு விசயத்துக்கு வருவோம். 

சிவனேன்னு, சும்மா இருந்த என் மீது பொய்யான விவாகரத்து வழக்கை தொடுத்து சட்டம் படிக்க வைத்ததால், நானே வாதாடும் அளவிற்கு சட்டத்தை தெரிந்துக் கொண்டு, கடந்த 19-12-2018 அன்று நடந்த விசாரணையில் நானே ஆஜரானேன். 

அப்போது, நம் வழக்கை விசாரிக்கும் நீதிபதி, ‘‘உனக்கு சட்டம் தெரியுமா’’ என்றார்.  ‘‘கொஞ்சம் தெரியும்; ஒரு மாதம் வாய்தா கொடுங்க; நான் கத்துகிட்ட வர்றேன்’’ என்று நான் சொன்னதும், அடுத்த 24-01-2019 அன்று வாய்தா கொடுத்துள்ளார். 

இதற்காக உனக்கு முதலில் நன்றி சொல்கிறேன். ஏனோ நீதான் வரவில்லை. வந்திருந்தால், நான் நீதிபதியிடம் பேசியதை நீயும் பார்த்து ரசித்து இருப்பாய். நானும் உனக்கு அங்கேயே நன்றி சொல்லி இருப்பேன். 

சரி விடு, அதான் இங்கு சொல்லி விட்டேனே... நீயும் அடுத்தடுத்த முறை நான் வாதாடும்போது பார்த்து ரசிப்பாய்.    

பொதுவா வக்கீல்னா சட்டம் தெரியும்னு நாம நினைக்கிறோம். ஆனால், அவங்களுக்கு அடிப்படை சட்ட அறிவே கிடையாது என்று நான் சொன்னால், நீ நம்பகூட மாட்ட. ஆனால், உண்மை இதுதான். 

ஆமாம், குடும்ப நீதிமன்றங்கள் சட்டம் 1984 இன் பிரிவு 13 இன்படி, குடும்ப வழக்குகளில் வக்கீல்கள் வாதாட தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆமாம், இது மத்திய சட்ட அமைச்சகத்தின் இணையப் பக்கத்தில் இருந்தே எடுத்தது பாரு.  

இது தெரிந்திருந்தால், வக்கீல் உன் சார்பாக அவர் பேரில் வழக்கு தாக்கல் செய்திருப்பாரா?

கொஞ்சம் யோசிப் பாரு. குடும்பம் நடத்தினது நாம. அதில் பிரச்சினை வந்தால், நம்மைப் பற்றி எதுவுமே தெரியாத வக்கீல்கள் எப்படி நமக்காக வாதாட முடியும்? அதனாலதான், குடும்ப நீதிமன்ற சட்டத்தில் மத்திய அரசே தடை விதிச்சிருக்கு. சட்டத்தை மீறி எப்படி வாதாடுவார்? 

ஆகையால், உன் சார்பாக வக்கீல் தாக்கல் செய்த மனு சட்டப்படி செல்லாது. இதுக்குன்னு தக்க சட்ட நடவடிக்கை மனுவையும் கொடுக்கப் போறேன். 

ஆமாம், சட்டங்கிறது வீண் சண்டை போடுவதற்கும் அல்ல! வந்த வீண் சண்டையை போடாமல் விட்டு விடுவதற்கும் அல்ல!!  

இப்படி வக்கீல் தொழிலைப் பற்றிய அவலங்களை எல்லாம் நம்ம தாத்தா காந்தி, பெரியார், வ.உ.சி, கவிமணிப் பிள்ளை, நீதிபதி வேதநாயகம் பிள்ளை என பல அறிஞர் பெருமக்கள் மக்களுக்கு எச்சரிக்கும் விதமாக தங்களின் வாழ்க்கை வரலாற்றில் பதிவு செய்து வைத்து இருக்கிறார்கள்.

ஆனா, இது நமக்கு தெரியாததால் நம்மகிட்ட பீசு வாங்கிட்டு, பொய் சொல்லி நம்மள ஏமாத்துறாங்க. ஏமாந்திராத, மாமா! நீ கொடுத்த பீச உடனே கேட்டு வாங்கிடு. தரலேன்னா சொல்லு, எப்படி வாங்குறதுன்னு சட்டப்படியான வழிய நான் சொல்லுறேன்.

மாமா, நாம ரெண்டு பேரும் தாம்பத்திய உறவில் இருந்தோமா இல்லையான்னு நமக்குதானே தெரியும். அதனால, நாம் இருவரையும் அறிவியல் ரீதியான மருத்துவ பரிசோதனைக்கு விரைவில்  உட்படுத்த சொல்லி மனு கொடுக்கப் போறேன். இந்த முடிவு நாம தாம்பத்தியத்தில் இருந்தோம் என்றுதான் நிச்சயம் சொல்லும். இது உனக்கும் நன்றாகவே தெரியும்.

ஆகையால், நீ தாம்பத்தியத்தில் இருந்து விட்டு இல்லை என்று பொய்யாக வழக்கு போட்டு, என்னை மனதாலும் உடலாலும் நோகடித்தது, இதுக்காக நீதிமன்றத்துக்கு பொய்யான ஆவணங்களை தாக்கல் செய்தது எல்லாம் சட்டப்படி சிறை தண்டனை விதிக்கத்தக்க குற்றமாகும் என்பது, உனக்கு தெரியுமா?

இன்னோன்னு தெரியுமா மாமா, உனக்கு? 

நீ நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பத்திரம் உன் பெயரிலும், உன் ஊர் பெயரிலும் வாங்கப்பட்டு உள்ளது. ஆகவே, நீதான் அதை வாங்கி, உனக்கு தெரிந்தவரை வைத்து எழுதி, என் வீட்டுக்கு பலருடன் கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்கிச் சென்றாய் என்பதற்கு நீயே ஆதாரத்தை தாக்கல் செய்து இருக்கிறாய்! இது சட்டப்படி குற்றம் இல்லையா? 

உன்கிட்ட காச வாங்கிகிட்டு, யார் யாரோ கிறுக்குத் தனமா சொன்ன யோசனையின்படி நடந்திருக்க என்பதை உன் மீதுள்ள அன்பால் எடுத்துச் சொல்கிறேன். இனியாவது அதுபோன்ற கிறுக்கர்கள் சொல்வதை கேட்காதே! எதாவது, வில்லங்கத்தில் மாட்டி விட்டு விடுவார்கள்!!

உனக்கு என்னை ரொம்பவே பிடிக்கும் என்பதால்தான், என்னுடன் தாம்பத்தியத்தில் ஈடுபட்டாய். தற்போதுள்ள குறைவான சம்பளத்துக்கு குழந்தையை பின்னர் பெத்துக்கலாம் என்று சொன்னாய். நானும் சம்மதித்தேன். அதன்படியே நமக்கு கருத்தரித்து குழந்தை பிறக்கவில்லை. அவ்வளவே!

ஒருவேளை குழந்தை உருவாகி இருந்தாலோ அல்லது பிறந்திருந்தால் தாம்பத்தியத்தில் ஈடுபட அனுமதிக்க வில்லை என்று நீ பொய் காரணத்தை சொல்லி விவாகரத்து கேட்டிருக்க முடியுமா? 

இதெல்லாம் உன் வக்கீலுக்கு தெரிய, அவரென்ன நம் தாம்பத்திய உறவுக்கு விளக்கு பிடித்தாரா?? போயும் போயும், நீ எதுக்கு அவரைப் பிடித்தாயோ...

உண்மையிலேயே, நான் தாம்பத்திய உறவுக்கு சம்மதிக்கவில்லை என்றால் கூட, இந்து திருமண சட்டம் 1955 இன் பிரிவு 9 இன்படி, ‘‘என்னோடு உடலுறவு கொள்ளும் உரிமையை மீட்டுத்தர கேட்டு தானே மனு செய்யனும்’’ என்ற அறிவு கூட இல்லாத வக்கீலை வைத்து விவாகரத்து வழக்கை தாக்கல் செய்து இருக்கிறியே, நீ என்ன மக்கா மாமா!

மாமா, உறுதியாக மீண்டும் சொல்கிறேன், உனக்கு என்னை ரொம்ப பிடிக்கும்; அதுபோலவே எனக்கும் உன்னை ரொம்ப ரொம்ப பிடிக்கும். 

ஆனால், என்னைப் பெண் பார்த்து பிடித்துப் போய் நமக்கு திருமணம் செய்து வைத்த, உன் பெற்றோருக்கு ஏனோ காரணத்தால் இடையில் பிடிக்காமல் போனால், அதுக்காக தாம்பத்தியத்தில் ஈடுபட மறுக்கிறேன் என பொய் வழக்கு போடுவியா?

தாய் தந்தையின் பேச்சைத்தான் கேட்பேன் என்றால், என்னை திருமணம் செய்திருக்க வேண்டியது இல்லையே. அவர்கள் வாழும் காலம் வரை அவர்களுக்கே நல்ல மகனாக இருந்திருக்கலாமே! இடையில் என்னை திருமணம் செய்து எதற்காக அனுதினமும் நோகடித்தே சாகடிக்கிறாய்? 

ஆமாம், சிறிது நோய்வாய்ப் பட்டிருந்த என் தந்தையும் இந்த விவாகரத்து விவாகாரத்தால் மனம் நொந்து இறந்துவிட, அதற்கு கூட நீ வராமல் என்னை நோகடித்து சாகடித்து விட்டாயே! 

இப்படி உனக்கு என்னையும், எனக்கு உன்னையும் ரொம்பவே பிடித்திருக்கும் போது, என் அத்தை மாமாவுக்கு இடையில் ஏனோ பிடிக்கவில்லை என்பது சரிதானே?

இல்லையென்றால், அவர்களே உனக்கு தக்க புத்திமதியை சொல்லி இருப்பார்களே! உன்னை வழக்கு போட வைத்து வேடிக்கைப் பார்க்க மாட்டார்களே!!

எனவே, அவர்களுக்கு பிடிக்கவில்லை என்பதற்காக நான் எப்படி மாமா உனக்கு விவாகரத்து வழங்க முடியும்? ஏன் வழங்க வேண்டும்??

அப்படி வழங்கினால், என்னைப்போல் இன்னொருத்தி அல்ல அல்ல எத்தனை பெண்ணின் வாழ்க்கை கெடும்? இதற்கு நான் சம்மதிக்க வேண்டுமென எந்த வகையில் எதிர்ப்பார்க்கிறாய் சொல்லு, மாமா! 

வழக்கு தொடர்ந்து நடந்தால், மருத்துவ பரிசோதனையின் அடிப்படையில் உனக்கு விவாகரத்து கிடைக்காது என்பது உனக்கே நன்றாக தெரியும். அதன் பிறகும் நாம் மனதார வாழ முடியுமானு சொல்லு, மாமா!

உண்மையில், உனக்கு என்னோடு வாழப் பிடிக்க வில்லை என்றால், அதற்கான உண்மையான காரணத்தை சொல்லி விவாகரத்து கேள். வழங்குவதா வேண்டாமா என்பதை சட்டப்படி அல்ல அல்ல தர்மத்தின் அடிப்படையில் கூட முடிவெடுக்க தயாராய் இருக்கிறேன். 

ஆமாம், உன் மீது உண்மையான அன்பு வைத்ததற்காக இதை செய்ய முடியுமே தவிர, யார் யார் பேச்சையோ கேட்டு, நீ சுமத்தியுள்ள வீண் பழி மற்றும் பொய் வழக்கு அடிப்படையில் என்னால் முடிவெடுக்க முடியாது. 

மாமா, நீ என் மீது தொடுத்துள் வழக்கில் இதுவே என் நிலைப்பாடு. உன் நிலைப்பாடு என்ன என்பதை இந்த மடலைப் பெற்ற பத்து நாட்களுக்குள் எழுத்து மூலமாக எனக்கும், என்னைப் போலவே நீதிமன்றத்துக்கும் நீயே தெரிவித்தால், உன் முடிவுக்கு ஏற்ப நான் பதிலுரையை தாக்கல் செய்ய வசதியாக இருக்கும். 

மாமா, நீ தீர்க்கமாக எடுக்க வேண்டிய முடிவு ஒன்னு பொய் வழக்கை வாபஸ் வாங்குகிறேன் என்று சொல். இல்லேன்னா, வழக்கை நடத்தி நிரூபிக்கிறேன் என்று சொல். உன் முடிவே, என் முடிவு. நன்றி!

பிரியமுள்ள
உன் மனைவி 

நகல் சமர்ப்பிக்கப்படுகிறது: 

1. இந்து திருமண அசல் வழக்கு எண் 87 / 2018 இல், குடும்ப நீதிமன்றங்கள் சட்டம் 1984 இன் பிரிவு 14 இன் கீழான நோக்கத்திற்காகவும், நடவடிக்கைக்காகவும் செஞ்சி சார்பு நீதிபதிக்கு சமர்ப்பிக்கப்படுகிறது.


2. தேவையைப் பொறுத்து பின்னர், இந்திய சாசன கோட்பாடு 227 இன் கீழான நோக்கங்களுக்காகவும், நடவடிக்கைக்காகவும் பொதுப் பதிவாளர், சென்னை உயர்நீதிமன்றம், சென்னை - 600104 சமர்ப்பிக்கப்படும்.


*******************
இப்படியெல்லாம், இதிலும் குறிப்பாக வக்கீல் விளக்குப் பிடித்தாரா என்றெல்லாம் எழுதலாமா என்றால் கட்டாயமாக எழுதி, பொய்யர்களின் மூக்கை உடைக்க வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற வழக்குகளில் இனி மூக்கை நுழைக்க மாட்டார்கள். 

இதன் நகலை உயர்நீதிமன்றத்துக்குப் போட்டாலும், போடவில்லை என்றாலும் சார்பு நிதிபதி டென்ஷன் ஆகி எதையும் செய்யக்கூடாது அல்லவா? அவரை எச்சரிக்கவே தேவையைப் பொறுத்து சமர்ப்பிப்போம் என குறிப்பிட்டு இருக்கிறாள். 

இந்த காதல் கண்டன கடிதத்தை, இன்று 27-12-2018 பதிவஞ்சல் மூலம் அனுப்ப அஞ்சலகத்தில் இருந்த போது, கணவனின் உறவினர் ஒருவர் உலாப்பேசியில் அழைத்து, ‘‘இவங்க தேவையில்லாம கோர்ட்டு கேசுன்னு பொயிட்டாங்க; நான் சேர்த்து வைக்கிறேன்; வக்கீல் கிட்ட கேட்டத்துக்கு நீயே வாதாடப் போறதா சொன்னாங்க; அதனால நாங்க சமரசம் பேச வர்றோம்’’ என்று சொன்னதாக இவ்வாசகி நமக்கு ஆடியோ அனுப்பி இருக்கிறாள். 

நீ போட்ட பொய் வழக்கில் நானே வாதாடப் போகிறேன் என்று ஒரு இளம்பெண் துணிந்து சொன்னதும், அப்பொய் வழக்கை போட்டவர் களுக்கும், அவர்களது பெ(ரு, று)ங்கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்களுக்கும் எவ்வளவு பயம் வருகிறது பாருங்கள்!

இந்தக் காதல் கண்டன கடிதமும், நிதிபதிக்கு போய்ச்  சேர்ந்தால், இதனால் நமக்கு என்னென்ன பிரச்சினை வருமோ என்ற பயத்தில் நிச்சயம் பேதியாகும்!!

ஒன்றை மட்டும், எந்த நிலையிலும் மறக்காமல் நினைவு வைத்துக் கொள்ளுங்கள். கூட்டுக் களவாணிப் பொய்யர்களால், ஒரு நிதிபதியின் சட்ட விரோத நடவடிக்கைகளை சுட்டிக்காட்ட கூட முடியாது. ஆனால், நாமோ பகிரங்கமாகவே நூல்களில் எழுதி, அவர்களுக்கே படிக்க கொடுக்கிறோம். இப்படியொரு துணிச்சல் யாருக்கு வரும்?

ஆமாம், நம்முடைய நீதியைத்தேடி... உள்ளிட்ட நூல்களை நீங்கள் மட்டும் படிக்கவில்லை. நிதிபதிகளும் படிக்கிறார்கள். புதிதாகப் பணியில் சேரும் நிதிபதிகளும், அவர்களுக்கான பயிற்சிக் காலத்தில் படிக்கிறார்கள் என்பதை, தன் வழக்கில் தானே வாதாடிய நம் வாசகர்களிடம் ஒப்புதல் வாக்குமூலம் அளித்து, அதையும் நாம் ‘‘மநு வரையுங்கலை!’’ நூலில் ஆதாரத்துடன் ஆவணப் படத்துடன் பதிவு செய்துள்ளோம். 

இதெல்லாம் நம்முடைய சமூகத்திற்கான சட்ட விழிப்பறிவுணர்வுக் கொள்கையில் இந்திய அளவில் செய்த சாதனையல்ல; உலக அளவில் யாரும் செய்திறாத சாதனைகள்! 

இதனை நியாயமுள்ள நீங்களும் உணர்ந்து வாதாடினால் மட்டுமே உங்களுக்கான பயனைப் பெற முடியும்.  

ஆமாம், தன் வழக்கில் தானே வாதாட முன் வருகிறார்கள் என்றால், அவர்கள் நிச்சயமாக நம் நீதியைத்தேடி... வாசகர்களே என்பதையும், எனவே நம்மை  சமாளிக்க முடியாது என்பதையும் கூட்டுக் களவாணிகள் ஆன நிதிபதிகளும், பொய்யர்களும் நன்கு அறிந்து வைத்திருக்கிறார்கள்.

மேலும், இதுபோன்று தன் வழக்கில் தானே வாதிடுபவர்கள் அதிகரித்து ஆப்படிக்க விட்டால், நாம் சட்டப்படி வழக்குகளில் வாதாட முடியாது என்பது வழக்காளிகளுக்குள் பரவி விடும். பின் சமூகத்திற்கு உள்ளும் பரவி விடும். ஆகையால், நம் நாறிய பிழைப்பும் நடக்காது போய்விடும் என்பதை கூட்டுக் களவாணிப் பொய்யர்களும், நிதிபதிகளும் நன்றாகவே அறிந்து வைத்திருக்கிறார்கள்.

ஆகையால், இவ்வழக்கை விசாரிக்கும் சார்பு நிதிபதியே, இப்பொய் வழக்கை தாக்கல் செய்த பொய்யரை அழைத்து, உன் கட்சிக்காரனை சமரசமாகப் போகச் சொல்லி எச்சரித்து இருக்கலாம் என்றே நம்புகிறோம்.

இல்லையெனில், வீம்புக்கு வீராப்பாக கோட்டுக்குப் போனவனுங்களுக்கு, இவளே வாதாடப் போறான்னு சொன்னதும் எப்படி சமரசமாகப் போக வேண்டுமென்கிற புத்தி வரும்? எந்த காலத்திலும் வந்திருக்காது.

நீயே வாதாட ஆரம்பித்தால் வழக்கு விசாரணையே நடைபெறாது; பொய்யனை வைத்து நடத்தினால் விவாகரத்து ஆகி விடும் என்பது உட்பட எங்களின் பல கட்ட அறிவுறுத்தலை ஏற்று நானே வாதாடுகிறேன் என்று நீதிமன்றத்தில் களமிறங்கி வாய்தா வாங்கிய எட்டாவது நாளில், எட்டாத கனியாக தெரிந்த இவ்வாசகியின் வாழ்வு, எட்டுங் கனியாக காலம் அடித்தளம் அமைத்து தந்திருக்கிறது.

இப்படித்தான் இதற்கு முன்பும், சென்னையைச் சேர்ந்த கோமதி என்ற வாசகியின் வாழ்வுக்கு, பலகட்ட அறிவுறுத்தல்களை வழங்கி, அதன்படி அவள் கடிதம் எழுதவே எண்ணி ஏழாவது நாளில் காலம் எட்டுங் கனியாக  வாழ்க்கை துணையை மீட்டுத்தந்தது.

நாம் சொல்லும் நியாயமான சட்ட ஆலோசனையை கேட்டு நடக்கும் வரை, நம் கணிப்பு எப்போதும் சரியாகவே இருக்கும் என்பது மீண்டும் மீண்டும் உறுதியாகி கொண்டே வருகிறது. இனியும் வரும்!

இந்த வகையில் தன் மீதான பொய் வழக்கில் தானே வாதாட இசைந்ததன் மூலம் தன் வாழ்வை தன் வசமாக்கிக் கொண்ட இவ்வாசகியின் வாழ்வு மேன்மேலும் சிறப்பாக அமைய வாழ்த்துவோம்!

பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

0 comments:

Post a Comment

பத்திரிகை செய்திகள்

அறவழி நோட்டா

அறவழி நோட்டா
மகாத்மா போதித்த வாக்குரிமை!

நோட்டா: NOTA

நோட்டா: NOTA
விளக்கம்: EXPLANATION

நூல்களின் முகப்பு

Followers

முக்கியப் பக்கங்கள்

அடிப்படை சட்டங்கள்

  • 1. இந்திய சாசனம் 1950
  • 2. நீதிமன்ற சாசனம் 1872
  • 3. இந்திய தண்டனை சட்டம் 1860
  • 4. குற்ற விசாரணை முறை விதிகள் 1973
  • 5. உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908

நம் நூல்களைப் பற்றி

நீதியைத்தேடி.... நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் வரிசையில்...
1 குற்ற விசாரணைகள்
2 பிணை (ஜாமீன்) எடுப்பது
எப்படி?
3 சட்ட அறிவுக்களஞ்சியம்
4 சட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்
5 சாட்சியங்களைச் சேகரிப்பது
எப்படி?
6 கடமையைச் செய்!
பலன் கிடைக்கும்
7 மநு வரையுங்கலை!Recent Posts Widget

இந்நூல்கள் அனைத்தும் உங்களின் சட்ட விழிப்பறிவுணர்வுக்காக
மத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவியோடு
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பொது நூலகங்கள், மத்திய சிறைச்சாலைகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

சொந்தமாக தேவைப்படுவோர், உ(ய)ரிய நன்கொடையைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு வாட்ஸ்அப் எண் 09842909190 ஆகும்.

எல்லாப் பதிவுகளும்!

நம் தள வகைகள்

பயின்றோர் (20-08-16)