நீ வாழ... நீயே வாதாடு... வரவேற்பு வாழ்த்து!

No law, no life. Know law, know life! என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியத்தை உணர்ந்து, ‘‘நீதியைத்தேடி... சட்டப் பல்கலைக் கழகத்திற்கு’’ வருகை தந்துள்ள உங்களை வருக என வரவேற்று, உங்களுக்கான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்று பயனைப் பெறுக என வாழ்த்துகிறோம்!
முக்கிய அறிவிப்பு : இந்த இணையப்பக்கத்தை புதுப்பிக்கும் பணி நடந்துக் கொண்டிருப்பதால், சில பதிவுகள் அல்லது இணைப்புக்கள் கிடைக்காமல் போகலாம்!

Friday, December 14, 2018

பிளாஸ்டிக்கை தவிர்த்து, முற்றிலும் ஒழிக்க தயாராகுங்க!எதிர் வரும் 2019 ஆம் ஆண்டு முதல் பிளாஸ்டிக் ஒழிப்பு என்ற அரசின் கொள்கை முடிவு, நமக்கு நல்லதொரு விடியலாக அமையப் போகிறது. இந்த விடியலை உருவாக்கித் தர முயன்றுள்ள அரசுக்கு நாம் துணை நின்றால்தான் நமக்கான விடியல் நிச்சயம்!

பொதுவாக அரசு எடுக்கும் கொள்கை முடிவுகள் எல்லாம் அபத்தமாகவும், ஆபத்தானதாகவுமே இருக்கும். 

ஆனால், பிளாஸ்டிக் ஒழிப்பு என்ற கொள்கை முடிவு, இதனால் கொள்ளை லாபம் போய் விடுமே என்கிற தயாரிப்பாளர்களை தவிர, மற்ற அனைவருக்குமே ஆனந்தமானதாகத்தான் இருக்கிறது.

ஆனாலும், ஏற்கெனவே நாம் பயன்படுத்திய பிளாஸ்ட்டிக்கின் கொடூரங்களை, நாமும் நம் சந்ததிகளும் அனுபவித்துத்தான்  ஆகவேண்டும். இதில் ஆறுதல் என்னவென்றால், தவறு செய்த நாம் அதிகமாக அனுபவிப்போம்; நம் வாரிசுகள் குறைவாக அனுபவிப்பார்கள்.  அவ்வளவே!

அரசு எதில் கொள்கை முடிவு எடுத்தாலும், எடுக்கா விட்டாலும் அதன் நன்மை, தீமையை ஆராய்ந்து மக்கள் பயன்படுத்தினாலோ அல்லது பயன் படுத்தாமல் போனாலோ அக்கொள்கை முடிவால் மக்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. 

அக்கொள்கை முடிவை எடுத்த அரசுக்கே பாதிப்பாக அமையும் என்பதை நாம் நன்றாகப் புரிந்துக் கொண்டு விட்டால், அரசின் கொள்கை முடிவுகள் எதுவாயினும், அது நம்மை பாதிக்காது. 

சரி நம்ம விசயத்துக்கு வருவோம். 

அரசு முன்னெடுத்துள்ள பிளாஸ்டிக் ஒழிப்பு என்ற கொள்கைக்கு நம்மால் இயன்றதைச் செய்ய வேண்டும் என்ற கருத்தில், நம் வாசகி காடாத் துணியால் ஆன பைகளைத் தைத்து வினியோகித்து வருகிறாள். வெண்மைக்காக பிளீச்ங் செய்யாத துணியே காடா துணி எனப்படும். 

இதனை தேவைக்கு ஏற்ப பலமுறை துவைத்து பயன்படுத்த முடியும் என்பது சிறப்பு. துவைக்க துவைக்க நன்றாக இருக்கும். பெரிய அளவில் இலாப நோக்கம் இல்லாமல் பையின் அளவுக்கு ஏற்ப இரண்டு மூன்று ரூபாய் முதல் விலையை நிர்ணயம் செய்திருக்கிறாள். உண்மைக்கு 15 * 6 ( Rs. 2 ) 15 * 9 ( Rs. 3 ). விலையை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்.

அதாவது, தற்போது புழக்கத்தில் உள்ள நான் ஓவன் பை (NON WOVEN) விலைக்கு நிகரானதே அல்லது ஒரு ரூபாய் கூடுதலாகும். அவ்வளவே!


இப்படி இன்னும் பலருங்கூட தைத்து  விற்கலாம். நமக்கு தெரிந்த நம் வாசகி என்பதால் மட்டுமே சொல்கிறோம். 

நாங்களும் இதனை ஆதரித்து, ஊக்குவிக்கும் விதமாக இனி நம் நீதியைத்தேடி... உள்ளிட்ட நூல்களை வாங்கும் வாசகர்களுக்கு அனுப்புவதற்காக தோள் (ஜோல்னா) பையை தைத்து தரும்படி கேட்டுள்ளோம்.  

எனவே, இதுபோன்ற துணிப்பைகளை 50 அல்லது 100 என இவ்வாசகியிடமோ அல்லது இதைவிட விலை குறைவாக கிடைக்கும் இடத்தில் இருந்தோ வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.

இதில், உங்களது தேவைக்கு பயன்படுத்துவது போக, நீங்கள் யாருக்காவது எதையாவது கொடுக்க விரும்பினால், இந்தப் பையில் போட்டு கொடுங்கள். நீங்கள் கொடுக்கும் பொருளின் பெரும் செலவோடு, கூடுதலாக ஓரிரு ரூபாய் சிறிய செலவு மட்டுமே. 

எனவே, அவர்கள் அப்பையை திருப்பிக் கொடுத்தால் வாங்காமல், இனி இதையே பயன்படுத்துங்கள் என்றும், விரும்பினால் அதற்கான மூன்று ரூபாயை கொடுங்கள் என சொல்லி விடுங்கள். 

அப்போதுதான் அவர்களும் அதனைப் பயன்படுத்த ஆரம்பிப்பார்கள். இல்லையேல், ஏற்கெனவே சேமித்து வைத்துள்ள பிளாஸ்டிக்கு பைகளையே மீண்டும் பயன்படுத்திக் கொண்டே இருப்பார்கள். 

நம் கைக்கு கிடைத்தது வாய்க்கு எட்டாமல் போய் விடக்கூடாது அல்லவா? 

நாட்டில் நல்லதைச் செய்ய ஆட்கள் மிக குறைவு. அவர்களை நாம் ஆதரிக்கா விட்டால், அவர்களும் நல்ல விசயங்களை கைவிட வேண்டிய நிலை வந்து விடும். அதற்காகத்தான் இந்த வழிகாட்டு கட்டுரை!

பிற்சேர்க்கை நாள் 16-12-2018

சங்கங்களை அமைப்பதன் நோக்கமே, சமூகத்திற்கு நன்மை செய்வதுதான் என்ற நிலை மாறி, கேடு செய்வதுதான் என்ற நிலையாகி விட்டது என்று ‘‘கடமையைச் செய்! பலன் கிடைக்கும்’’ நூலில் ஓர் அத்தியாயம் முழுவதும் ஆதாரங்களுடன் விளக்கி எழுதி உள்ளேன். 


அரசு முன்னெடுத்துள்ள பிளாஸ்டிக்க ஒழிப்பு நடவடிக்கைக்கு எதிராக அப்படியேத்தான் இருக்கிறது தமிழ்நாடு, பாண்டி பிளாஸ்டிக் சங்கத்தின் மேற்கண்ட கதவடைப்பு அறிவிப்பு. ஆனால், இந்த அறிவிப்பே நிரந்தரம் ஆகட்டும்! 

ஆமாம், அரசின் திட்டப்படி, அந்நிறுனவங்கள் தங்களின் உற்பத்தியை மூடுவதற்கு இன்னும் பதினைந்து நாட்கள் உள்ள நிலையில், ‘‘அதற்கு முன்பாகவே மூடு விழாவை நடத்துகிறோம்’’ என்று அறிவித்து உள்ளதால், நாம் அனைவரும் அதனை வாழ்த்தி வரவேற்போம். 

பிற்சேர்க்கை நாள் 16-06-2019

பிளாஸ்டிக்கை ஒழிக்க அரசு, கீழ்கண்ட செய்தியில் உள்ளபடி தீவிரம் காட்டி உள்ளதன் விளைவாக, காடா துணியின் விலை அதிகரித்து உள்ளது. ஆகையால், மேற்சொன்ன விலையில் மாற்றங்கள் இருக்கும். 

clip

இரு தினங்களுக்கு முன்பு (14-06-2019), விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த நம் வாசகர் செந்தில் என்பவரது இல்லத்தில் விழா!

பிளாஸ்டிக் தடை காரணமாக விழாவுக்கு வந்தவர்களுக்கு கொடுக்க தாம்பூலப்பை கிடைக்கவில்லை. மேலும், இவ்வாசகர் பிளாஸ்டிக் எதிர்ப்பாளர்.

ஆகையால், ஏற்கெனவே நீதியைத்தேடி... இணையப் பக்கத்தில் வாசகி நம் தயாரிக்கும் காடா துணிப்பை குறித்து எழுதியதை நினைவில் வைத்து, தக்க சமயத்தில் வாங்கிப் பயன்படுத்திக் கொண்டார்.

இல்லையெனில், வந்தவர்களுக்கு தாம்பூலப்பையை கொடுக்க முடியாத அவல நிலை ஏற்பட்டு இருக்கும் என்பதால், நமக்கும், நம் வாசகிக்கும் நன்றியை உரித்தாக்கினார்.

இதுபோன்றதொரு நிலை உங்களுக்கோ அல்லது உறவினர்களுக்கோ வந்தால், உதவும் வகையில் நினைவூட்டுகிறோம்.

குறிப்பு: நம் நூல்களை வாங்கும் வாசகர்களுக்கு ஒரு ஜோல்னா பையை வழங்க திட்டமிட்டு, தயார் செய்து தருமாறு அவ்வாசகியிடம் கேட்டு உள்ளோம்.

பிற்சேர்க்கை நாள் 14-06-2019

அரசு முன்னெடுத்துள்ள தீவிர பிளாஸ்டிக் ஒழிப்பின் காரணமாகவும், பிளாஸ்டிக் தாம்பூலப்பை உள்ளிட்ட (த, க)ட்டுப்பாடுகளின் காரணமாகவும், இவ்வாசகி தைத்துக் கொடுக்கும் காடா துணியின் விலை உயர்வு காரணமாக, பையின் விலையும் உயர்ந்துள்ளது.

எனவே, மேற்சொன்ன தோராய விலையை பொருட்படுத்தாமல், விலையின் ஏற்றத்தாழ்வுக்கு ஏற்ப விலையை ஆராய்ந்து கேட்டுப் பெற்றுக் கொள்ளுங்கள். 

ஆமாம், இன்று நடந்த நம் வாசகர் செந்தில் முருகன் என்பவரது சுப நிகழ்வுக்கு விலை அதிகம் கொடுத்து வாங்கப்பட்டு உள்ளது. 

பிற்சேர்க்கை நாள் 12-07-2019

ஆவின் என்றால், மாடு என்று பொருள் என்பதால், அரசு தன் பால் நிறுவனத்திற்கு ஆவில் என்றப் பெயரைப் பொருத்தமாக சூட்டியுள்ளது. ஆனால், மாடு போலத்தான் விலங்காகவே இருக்கிறது, அரசும் அதன் ஆவின் நிறுவனம். 
clip
ஆமாம், மனிதனைக் கொல்லும் மதுவை, கண்ணாடி பாட்டிலில் அடைத்து விக்கிறானுங்க. 
ஆனால், மக்களுக்கு அத்தியாவசியமான பால் உள்ளிட்ட உணவுப் பொருட்களை பிளாஸ்டிக் கவரில் விக்கிறானுங்க!
மொத்தத்தில், இவர்களின் முடிவு மக்களை கொல்வது என்பதாகவே தெரிகிறது. இதை அங்கீகரிக்க வேண்டுமென்று வழக்கும் போடுறானுங்க என்றால், எங்கே உருப்படுவது?பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

0 comments:

Post a Comment

பத்திரிகை செய்திகள்

அறவழி நோட்டா

அறவழி நோட்டா
மகாத்மா போதித்த வாக்குரிமை!

நோட்டா: NOTA

நோட்டா: NOTA
விளக்கம்: EXPLANATION

நூல்களின் முகப்பு

Follow by Email

Followers

முக்கியப் பக்கங்கள்

அடிப்படை சட்டங்கள்

  • 1. இந்திய சாசனம் 1950
  • 2. நீதிமன்ற சாசனம் 1872
  • 3. இந்திய தண்டனை சட்டம் 1860
  • 4. குற்ற விசாரணை முறை விதிகள் 1973
  • 5. உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908

நம் நூல்களைப் பற்றி

நீதியைத்தேடி.... நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் வரிசையில்...
1 குற்ற விசாரணைகள்
2 பிணை (ஜாமீன்) எடுப்பது
எப்படி?
3 சட்ட அறிவுக்களஞ்சியம்
4 சட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்
5 சாட்சியங்களைச் சேகரிப்பது
எப்படி?
6 கடமையைச் செய்!
பலன் கிடைக்கும்
7 மநு வரையுங்கலை!Recent Posts Widget

இந்நூல்கள் அனைத்தும் உங்களின் சட்ட விழிப்பறிவுணர்வுக்காக
மத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவியோடு
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பொது நூலகங்கள், மத்திய சிறைச்சாலைகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

சொந்தமாக தேவைப்படுவோர், உ(ய)ரிய நன்கொடையைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு வாட்ஸ்அப் எண் 09842909190 ஆகும்.

எல்லாப் பதிவுகளும்!

நம் தள வகைகள்

பயின்றோர் (20-08-16)