No law no life. Know law, know life! நியாயந்தான் சட்டம்! அதற்கு தேவையில்லை வக்கீழ் பட்டம். வக்கீழ் என்றாலே, கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்களே! இடைத்தரகர்களே!! நீ வாழ, நீயே வாதாடு!

நீ வாழ... நீயே வாதாடு... வரவேற்பு வாழ்த்து!

No law, no life. Know law, know life! என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியத்தை உணர்ந்து, ‘‘நீதியைத்தேடி... சட்டப் பல்கலைக் கழகத்திற்கு’’ வருகை தந்துள்ள உங்களை வருக என வரவேற்று, உங்களுக்கான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்று பயனைப் பெறுக என வாழ்த்துகிறோம்!
முக்கிய அறிவிப்பு : இந்த இணையப்பக்கத்தை புதுப்பிக்கும் பணி நடந்துக் கொண்டிருப்பதால், சில பதிவுகள் அல்லது இணைப்புக்கள் கிடைக்காமல் போகலாம்!

Wednesday, December 12, 2018

நிவாரண உதவிகளை வழங்கிட திட்டமிடல் அவசியம்!புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் துயரை துடைக்க ஆதரவு தருக!  என்ற முந்தையத் தொடர் கட்டுரையின் (இ, உ)றுதிக் கட்டுரை இது!

இக்கட்டுரையின் இறுதியில் சொல்லிய பருவ நிலை மாற்றத்தில் மழை இல்லை என்பது தெரிய வந்ததால், முன்பு திட்டமிட்ட நாளுக்கு இரண்டு நாட்கள் முன்பாக  08-12-2018 அன்று 550 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.  

அதாவது கேர் சொசைட்டி, ஜீவாதார் மற்றும் ஆரோக்கியான் ஆகிய மூன்றுக்கும் கிடைத்த நன்கொடை நிதியைக் கொண்டு நாம் முன்னரே திட்டமிட்டபடி நிவாரணப் பொருட்களை வழங்குவதாக இருந்தால், அதிகபட்சம் நாநூறு குடும்பத்துக்கு மட்டுமே வழங்க முடியும் என்ற இக்கட்டான நிலை ஏற்பட்டது.

அவ்வூரில் மாடி வீட்டில் வாழும் சுமார் 200 குடும்பங்களுக்கு கொடுக்க முடியாவிட்டாலுங்கூட, குடிசை மற்றும் ஓட்டு வீட்டில் வாழும் சுமார் 550 குடும்பங்களுக்கு எவ்வித பேதம் இன்றி வழங்க வேண்டுமே என்பதற்காக இரண்டு கிலோ வழங்க திட்டமிட்ட துவரம் பருப்பை ஒரு கிலோவாக குறைத்துக் கொண்டோம். 

ஒரு கிலோ வழங்க திட்டமிட்ட சமையல் எண்ணையை அறவே கொடுக்காமலும் நிறுத்திக் கொண்டு, கிடைத்த தொகையை 550 குடும்பங்களுக்கு சமன் செய்ய முயற்சித்தோம். இதனால், 500 குடும்பங்களாவது முழுப் பயனை அடைந்திருப்பார்கள்.  

மொத்தத்தில் ஒரு குடும்பத்துக்கு ஒரு சோலார் விளக்கு. நூலால் பின்னப்பட்ட தரமானதொரு கோரைப் பாய். ஒரு போர்வை மற்றும் ஒரு கிலோ துவரம் பருப்பு என மொத்தம் நான்குப் பொருட்களை மட்டுமே வழங்கி உள்ளோம்.  

சோலார் விளக்கை மின்சாரத்திலும் சார்ஜ் செய்துக் கொள்ள முடியும் என்பதோடு, மின்சாரம் இல்லாத போது சோலார் வழியாக உலாப்பேசிகளை (செல்போன்களை) சார்ஜ் செய்து கொள்ளும் வகையில் மூன்று வகையான வசதிகளைக் கொண்டது.   

மக்கள் மனதில் மாற்றம் வரவேண்டும்!

பொதுவாக மக்களுக்கு எது இலவசமாக கிடைத்தாலும் அது தனக்கு பயன்பட்டாலும், பயன்படா விட்டாலும் அடித்துப் பிடித்தாவது வாங்கி விட  வேண்டும். அப்போதுதான் ஆத்ம திருப்தி என்ற கொள்ளை முடிவிலேயே இருக்கிறார்கள். 

இதற்கேற்பவே அரசியல் வியாதிகள் இலவசங்களை கொடுத்து கெடுத்து வைத்திருக்கிறார்கள். இலவச அரிசியைப் பெறும் மக்கள் அதனை அண்டை மாநிலங்களில் இருந்து பிழைப்பு தேடி வரும் மக்களுக்கு கிலோ 20 க்கு விற்று ரூ 400 ஐ வருமானமாக ஈட்டுகிறார்கள். 

இலவசமாக வந்த உணவுப் பொருளை பணத்துக்கு விற்பதை விட பாவச் செயல் இருக்க முடியுமா?! இவர்கள் எல்லாம் தங்களின் வாழ்நாளில் இயற்கைச் சீற்றங்களில் சிக்கிப் பிச்சை எடுக்காமல் என்ன செய்வார்கள்??!

சாதாரண நாட்களிலேயே இவ்வளவு கேவலமாக நடந்துக் கொள்ளும் மக்கள், இயற்கையின் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் சும்மா இருப்பார்களா? 
ஆகையால், நிவாரணப் பொருட்களை கொண்டு வந்து வழங்குவோரை, இனி இப்படியொரு உதவியை செய்யவே கூடாது என்று நினைக்கும் அளவிற்கு தொந்தரவு செய்து விடுகிறார்கள். இவ்வளவு தூரம் திட்டமிட்ட நமக்கும் இந்த அனுபவம் ஏற்பட்டதுதான் கொடுமை!

ஆமாம், பாதிக்கப்பட்டு சோற்றுக்கு வழியில்லை என்று சொல்லும் இம்மக்களுக்கு சாராயம் குடிப்பதற்கு மட்டும் பணம் எங்கிருந்து கிடைக்கிறது என்பது அக்குடி(ம, மா)க்களுக்கே வெட்ட வெளிச்சம். 

இவர்களுக்கு நாம் பணமாக கொடுத்திருந்தால், நமக்கு பாவமே வந்து சேரும்படி குடித்து குதுகளித்து இருப்பார்கள். 

ஆமாம், நாம் சென்ற காலை 11 மணிக்கே வயது வித்தியாசம் இன்றி ஆண்கள் குடித்து விட்டு அலப்பரை செய்ய, பெண்கள் குடிக்காமலேயே ஆண்களை விட அதிகமான அலப்பரையை செய்து விட்டார்கள். 

இத்தனைக்கும் அவ்வூரில் உள்ள இளைஞர்கள் சிலர் உதவ முன்வந்து, அம்மக்களை ஒழுங்குபடுத்தி, நாமே ஒவ்வொரு வீடாக சென்று நிவாரணப் பொருட்களை கொடுக்க உதவிய அவர்கள் மீதும்,  நாம் கூட்டமாய் கூடி தன் விருப்பப்படி ஒன்றுக்கு இரண்டு மூன்றாக இஷ்டப்படி ஏமாற்றி வாங்கிட, நம்ம ஊர்க்காரர்களே தடையாக இருக்கின்றனரே என்று அவர்கள் மீதும் சீனங்கொண்டு சீறினர். 

பத்து நாட்கள் முன்பே வந்து, உங்களையும் உங்களது தேவைகளையும் கணக்கிட்டு, எல்லோருக்கும் நிவாரணப் பொருட்களை கொண்டு வந்துள்ளோம். எனவே, உங்களது வீட்டிலேயே இருங்கள் நாங்களே கொண்டு வந்து கொடுக்கிறோம். 

இரவு பகல் பாராமல் பணம் வசூலித்து, பொருட்களை தேடித்தேடி பேரம் பேசி வாங்கி, சாப்பாடு மற்றும் தூக்கமில்லாமல் மிகவும் சிரமப்பட்டு கொண்டு வந்துள்ளோம். எனவே, அனைவருக்கும் வழங்கிட ஒத்துழைப்பு கொடுங்கள் என எவ்வளவோ கெஞ்சிக் கேட்டும், அதனை அம்(ம, மா)க்கள் சற்றும் பொருட் படுத்தவே இல்லை என்பது கொடுமையிலும் கொடுமை!

இதில், எளியவருக்கு நாம் கொடுப்பதை, அதில் வலியவர்கள் தட்டிப் பிடுங்குவதும், அந்த எளியவரை தாக்கியதும், இந்த சண்டையில் கொடுத்த பொருட்கள் கீழே விழுந்ததும், நம்மை மிகுந்த மன வேதனைக்கு உள்ளாக்கியது. 

எனவே ஆரம்பத்தில் கட்டுப்படுத்த முடிந்த மக்களை மதிய வேளையில் கட்டுப்படுத்த முடியாமல் போய் விட்டது. எனவே மதிய உணவை முடித்து விட்டு மீண்டும் கொடுக்கலாம் என திட்டமிட்டோம். 

ஆனால், வேறு இடத்தில் இருந்து கொடுக்க ஆரம்பித்து கொடுத்து முடித்தோம் என்பது ஆறுதலாக இருந்தாலும், விட்ட இடத்தில் இருந்து மீண்டும் கொடுக்கத் தொடங்காததால் சுமார் ஐம்பது வீடுகளுக்கு கொடுக்க முடியாமலேயே போய் விட்டது நம்முடைய தவறுதல்; அவசரப்பட்ட அவர்களுக்கு சிறு தண்டனை. 

ஆனாலும், நம் திட்டப்படி பொருளைப் பெற்றவர்கள் போற்றாமல் இருப்பார்களா... ஆகையால், நம்மைப் போற்றி விட்டார்கள். இதேபோல, கிடைக்காமல் போனவர்கள் நிச்சயம் தூற்றி இருப்பார்கள். ஆனால், இது நம் செவிகளுக்கு சேரவில்லை. அவ்வளவே! 

இவ்வளவு திட்டமிட்ட நமக்கே இப்படி என்றால், திட்ட மிடாமலும், விளம்பரத்துக்காகவும் கொண்டு சென்றவர்கள் எவ்வளவு திண்டாடி இருப்பார்கள் என்றால், அவர்கள் இதைப்பற்றி எல்லாம் கவலைப் பட்டிருக்கவே மாட்டார்கள். அவர்களின் நோக்கம் வேறு. அவ்வளவுதான்!
  
இயற்கைச் சீற்றங்கள் எல்லாமே, மனிதனின் தவறுகளுக்கு இயற்கை தரும் தண்டனைதான் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அப்படி இருந்தால், அவர்கள் நிச்சயம் வேண்டாத விதண்டா வாதம் செய்பவர்களே!

ஆகையால், இயற்கை தன் சீற்றத்தின் மூலம் தரும் தண்டனையை அம்(ம, மா)க்கள் முழுமையாக அனுபவித்து துன்பத்தை உணர வேண்டியதே இயற்கையின் நியதியாக இருக்க முடியும். 

ஆனால், நாமோ மனிதாபிமானம் என்ற அடிப்படையில், (ம, மா)க்களுக்கு வலிந்து வீட்டுக்கு வீடு தேடிச் சென்று உதவப் போய் இயற்கையின் தண்டனையில் இருந்து அவர்களை காக்க முயற்சித்து, நம்மை நாமே துன்பப்படுத்திக் கொண்டு, கர்ம வினையையும் சம்பாதித்துக் கொள்கிறோம் என்றே நமக்கு கிடைத்த இந்த அனுபவத்தில் எண்ண வேண்டி வந்து விட்டது. 

ஆமாம், அறத்தின் வழியில் வாழ்பவர்கள் யாரும் எந்தவொரு இயற்கைச் சீற்றத்திலும் சிக்குவதில்லை என்ற உண்மையை நாம் முதலில் உணர வேண்டும். 

திட்டமிடலுக்கு தீர்வு என்ன?

சரி, மக்கள் என்றால் இப்படித்தான் இருப்பார்கள். அதற்காக நாம் உதவும் கடமையில் இருந்து தவற முடியுமா... இதற்கு நாமே இப்படி வழிகாட்டலாமா என்ற கேள்வி உங்களுக்கு எழுந்தால், இதற்கும் நல்லதொரு தீர்வை தருவதே நியாயம்.

இந்த வகையில், நாம் திட்டமிட்டபடி எல்லோருக்கும் நிவாரணப் பொருட்கள் போய்ச் சேர வேண்டுமென எண்ணினால், அப்பொருட்களை அம்மக்கள் வசிக்கும் பகுதிக்கு அப்பால், பத்துப் பதினைந்து கிலோ மீட்டருக்கு வந்து வாங்கிச் செல்லுமாறு, பாதுகாப்பான ஒரு இடத்தில் இறக்கி வைத்து விட வேண்டும். 

இதே நேரத்திலோ அல்லது முன்போ அல்லது பின்போ நம் சிந்தனையில் பிரத்தியேகமாக தயார் செய்த (இது கள்ளத்தனமாக செய்ய முடியாதபடி இருக்க வேண்டும்) அடையாளச் சீட்டை வீட்டுக்கு ஒன்றாக வழங்கி விட்டு, ஓரிரு நாட்களுக்குள் வந்து பெற்றுக் கொள்ளச் சொன்னால் (கூடுதல் கால அவகாசம் கொடுத்தால் கள்ளத்தனமாக தயார் செய்து விட முடியும்), எல்லோரும் ஒரே நேரத்தில் கூடி கூச்சல் போட்டு நம்மை துன்பப்படுத்த முடியாது. ஒன்றுக்கு மேற்பட்டு வாங்கவும் முடியாது. 

மக்கள் மக்களாக மிகுந்தப் பொறுப்புணர்வோடு வந்து பெற்றுச் செல்வார்கள் என்பதால், இப்போதைக்கு இதுவே மிகச்சிறந்த வழி. எனவே, நீங்கள் விரும்பினால், இவ்வழியைப் பின்பற்றுங்கள்.

நன்றியுரை

இந்த நிவாரண உதவிக்கு நிதியுதவி அளித்த அனைவருக்கும், பொருட்களை தேடித்தேடி பேரம் பேசி வாங்கித் தந்தவர்களுக்கும், அப்பொருளை விலையை குறைத்துக் கொடுத்தவர்களுக்கும், அப்பொருட்களை விநியோகம் செய்ய உதவியவர்களுக்கும், உதவியைப் பெற்றுக் கொண்டவர்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

இதுகுறித்த விளக்க காணொலியை தயாரானதும் வெளியிடுகிறோம். 

பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

0 comments:

Post a Comment

பத்திரிகை செய்திகள்

அறவழி நோட்டா

அறவழி நோட்டா
மகாத்மா போதித்த வாக்குரிமை!

நோட்டா: NOTA

நோட்டா: NOTA
விளக்கம்: EXPLANATION

நூல்களின் முகப்பு

Followers

முக்கியப் பக்கங்கள்

அடிப்படை சட்டங்கள்

  • 1. இந்திய சாசனம் 1950
  • 2. நீதிமன்ற சாசனம் 1872
  • 3. இந்திய தண்டனை சட்டம் 1860
  • 4. குற்ற விசாரணை முறை விதிகள் 1973
  • 5. உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908

நம் நூல்களைப் பற்றி

நீதியைத்தேடி.... நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் வரிசையில்...
1 குற்ற விசாரணைகள்
2 பிணை (ஜாமீன்) எடுப்பது
எப்படி?
3 சட்ட அறிவுக்களஞ்சியம்
4 சட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்
5 சாட்சியங்களைச் சேகரிப்பது
எப்படி?
6 கடமையைச் செய்!
பலன் கிடைக்கும்
7 மநு வரையுங்கலை!Recent Posts Widget

இந்நூல்கள் அனைத்தும் உங்களின் சட்ட விழிப்பறிவுணர்வுக்காக
மத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவியோடு
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பொது நூலகங்கள், மத்திய சிறைச்சாலைகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

சொந்தமாக தேவைப்படுவோர், உ(ய)ரிய நன்கொடையைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு வாட்ஸ்அப் எண் 09842909190 ஆகும்.

எல்லாப் பதிவுகளும்!

நம் தள வகைகள்

பயின்றோர் (20-08-16)