No law no life. Know law, know life! நியாயந்தான் சட்டம்! அதற்கு தேவையில்லை வக்கீழ் பட்டம். வக்கீழ் என்றாலே, கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்களே! இடைத்தரகர்களே!! நீ வாழ, நீயே வாதாடு!

நீ வாழ... நீயே வாதாடு... வரவேற்பு வாழ்த்து!

No law, no life. Know law, know life! என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியத்தை உணர்ந்து, ‘‘நீதியைத்தேடி... சட்டப் பல்கலைக் கழகத்திற்கு’’ வருகை தந்துள்ள உங்களை வருக என வரவேற்று, உங்களுக்கான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்று பயனைப் பெறுக என வாழ்த்துகிறோம்!
முக்கிய அறிவிப்பு : இந்த இணையப்பக்கத்தை புதுப்பிக்கும் பணி நடந்துக் கொண்டிருப்பதால், சில பதிவுகள் அல்லது இணைப்புக்கள் கிடைக்காமல் போகலாம்!

Thursday, December 27, 2018

கணவனை மீட்க கண்ணகியாக, ஒரு கண்டன காதல் கடிதம்!சமூகத்தில் சட்டப் பிரச்சினைகள் பல இருந்தாலும், தம்பதிகளுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, விவாகரத்து கோரும் குடும்பப் பிரச்சினைகள் குடும்பம் என்ற சமூக கட்டமைப்பையே உடைத்து, குடும்பமில்லாத நிலைக்கு தள்ளிவிடும் பேராபத்து நோக்கி சென்று கொண்டே இருக்கிறது. 

ஆமாம், இப்போது எப்படி கூட்டுக் குடும்பங்கள் இல்லாமல் போய் விட்டதோ, அப்படி இனி வரும் காலங்களில் தனிக்குடும்பங்களும் இல்லாதுபோய், அவரவரும் தனித்தனியாகவே வாழ்வதே குடும்பம் என்ற அவல நிலைக்கு சென்று விடும். 

ஆனால், குடும்பச் சண்டை போடுபவர்கள் எல்லாம் இதைப்பற்றியெல்லாம் யோசிக்காமல், தங்களின் சுயநலனை மட்டுமே கருத்தில் கொண்டு சண்டைப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதனை தடுத்தி நிறுத்தி அவர்களை ஒன்றாக வாழவைக்க வேண்டிய அவர்களின் பெற்றோர்களோ, அவர்களது பிரிவை தூண்டி விட்டு, கைகட்டி வேடிக்கைப் பார்க்கின்றனர். 

இவர்கள் தங்களது மாமனார், மாமியாருடன் கூட்டுக் குடும்பமாக, குடும்பக் குத்து விளக்காக வாழ்ந்திருந்தால்தானே, கூடி வாழ்வதில் உள்ள (அ, பெ)ருமையும் புரிந்திருக்கும்? 

அப்படி வாழாமல் விலகி வந்ததால் கூட்டுக் குடும்பமாய் வாழாததன் கேடு என்ன என்பது இப்போதாவது புரிந்திருக்க வேண்டும். ஆனாலும் புரியவில்லை. 

இந்த இழிநிலை நீடித்தால், அவரவரது குல வம்சமே இல்லாது போய்விடும். ஏற்கெனவே இப்படி நிறைய குல வம்சங்கள் அழிந்தொழிந்து விட்டன. 

எனவே, குடும்பப் பாரம்பரியங்களை காக்கும் முயற்சியில் ஒவ்வொருவரும் ஈடுபட வேண்டி உள்ளது. இதற்கான களத்தை அமைத்து தரும் கட்டுரையாகவே இதனை வடிக்கிறோம். 

ஆமாம், ஏற்கெனவே ஒழுங்காக இருந்த சமூகத்தை கெடுத்துக் குட்டிச் சுவராக்கிய பொறுப்பு அனைத்து தொழில் செய்பவர்களுக்கும் உண்டு என்றாலும், தங்களின் பெ(ரு, று)ங் கூலிக்காக வக்கீல் என்றப் பெயரில் தொழில் செய்யும் பொறுக்கிப் பொய்யர்கள் முக்கிய காரணம் என்று மகாத்மா காந்தி, பகுத்தறிவுப் பெரியார், கவிமணிப் பிள்ளை, கப்பலோட்டிய தமிழன், நீதிபதி வேதநாயகம் பிள்ளை ஆகிய அறிஞர் பெருமக்களே சொல்லிவிட்ட பிறகு, இப்பொய்யர்களை ஒழிப்பதுதான் நமது முக்கிய கடமையாக இருக்க வேண்டி இருக்கிறது. 

இதேபோல, அடிப்படை அறிவு இல்லாமல் திருமணப் பொருத்தம் சொல்லும் ஜோதிடப் பொய்யர்களையும் ஒழித்து கட்ட வேண்டும். இதற்கெல்லாம், நமக்கு அதுபற்றிய அறிவுத் தெளிவு வேண்டும். அதற்கு நம் முன்னோர்கள் கற்ற குருகுல கல்வி முறைக்கு மாற வேண்டும். 

குடும்பங்களின் சீரழிவை தடுக்க விரும்பிய ஆந்திராவை சேர்ந்த ஒருவர் வக்கீல் தொழில் மூலம் அதனை சாதித்து விடலாம் என நினைத்து, அப்படியே ஆகி விட்டாராம். 

ஆனால், குடும்பச் சண்டை போட்டுக்கிட்டு கோர்ட்டுக்கு வர்றவிய்ங்க, சேர்ந்து வாழ்வதற்கு இவரு சொல்ற ஆலோசனையை கேட்காமல் போகவே மனம் நொந்திருந்த வேளையில், எப்படியோ ஜோதிடக் கலையின் மூலம் தடுக்கலாம் என்ற முடிவுக்கு வந்து ஜோதிடத்தை கற்று திருமணம் பொருத்தம் பார்ப்பதையே தொழிலாக செய்து, அதில் பிரபலம் ஆகி இருக்கிறார். 

ஆமாம், திருமணம் பொருத்தம் பார்க்க வந்தால், அலசி ஆராய்ந்துப் பார்த்து விட்டு செய் அல்லது செய்யாதே என்று ஒரே வார்த்தையில் சொல்லி விடுவாராம். அதற்கான காரணங்களை சொல்ல மாட்டாராம். இவரு சொன்னா மட்டும், அவர்களுக்கெல்லாம் வெளங்கிடவா போவுது?

சிலருக்கு பத்துப் பதினைத்து வருடந்தான் உன் வாழ்வு சிறப்பாக இருக்கும். வேறு வழியில்லை. விரும்பினால் செய்துக் கொள் என்பாராம். 

இந்தக் கலியுகத்திலும் இப்படியெல்லாம் ஆட்கள் இருக்க முடியுமா என்ற சந்தேகம் இருக்கலாம். எதையும் பணம் சம்பாதிப்பதற்கான தொழிலாக செய்யாமல், சமூக நலனுக்காக செய்பவர்களுக்கு மட்டுமே இத்திறனும், திறமையும் இருக்கிறது. 

(ஆனால், இவர்களை இனங்கண்டறிவது மிகமிக கடினம். ஏனெனில், முதலில் இவர்கள் அதனை தொழிலாக செய்ய எங்குமே கடை விரிக்க மாட்டார்கள். எங்காவது ஒரு ஒதுக்குப் புறத்தில், எதுவுமில்லாமல் பரதேசிகளைப் போல உட்காந்து இருப்பார்கள்.

ஆனால், நாம என்ன நினைப்போம். அவர்கள் பிச்சை எடுக்கும் பரதேசிகள் என்றும், கடை விரித்து கொள்ளை காசு வாங்குபவனே (ந, வ)ல்லவன் எனவும் நம்பி ஏமாறுவோம். கூடவே, நமக்கு மிகவும் வேண்டியவர்களையும் கைகோர்த்து விட்டு ஏமாறச் செய்வோம்.) 

ஆமாம், உங்களின் சிந்தனை மற்றும் கொள்கைக்கு ஏற்ப பலத்த தேடுதலுக்குப் பிறகே, இதுபோன்ற ஒத்த சிந்தனையுள்ள ஆட்களை அடையாளங்காண முடியும். இவர்கள் தங்களை வெளிப்படுத்திக் கொள்ள வேண்டுமென நினைத்தால், வியாபாரிகள் என்ற விபச்சாரிகளிடம் சிக்கி தங்களையே இழந்து விடுவார்கள். இப்படி ஞானிகளே ஆகி இருக்கிறார்கள். 

சரி, நம்ம கண்டன காதல் கடித விசயத்துக்கு வருவோம். இதுக்கு முன்பு விவாகரத்துக்கு விண்ணப்பித்துள்ள தம்பதிகள் காதல் கடிதம் எழுதுவது எப்படி? என்ற கட்டுரையைப் படித்தீர்கள் அல்லவா?! படிக்காதவர்கள் படித்து விட்டு தொடர்க!

இதன்படி, அப்பெண்ணால் தன் கணவனுக்கு எழுதப்பட்ட கடிதத்தில் காதல் பகிர்வு பகுதியை நீக்கி விட்டு கண்டனப் பகுதியை பதிந்து உள்ளோம்.  இந்த மடலை மிகவும் கவனமாகப் படித்து புரிந்துக் கொள்ள வேண்டும்.

குடும்ப வழக்குகளை சந்திப்பவர்கள் இதுபோன்ற ஆக்கப் பூர்வமான முயற்சிகளை மேற்கொண்டு கைமேல் பலனைப் பெறுங்கள். சமூகத்தின் மீது அக்கறை உள்ளவர்கள், குடும்ப வழக்குகளை சந்திக்கும் தம்பதிகளுக்கு எடுத்துச் சொல்லுங்கள்.

கடிதத்தின் கண்டனப் பகுதி தொடங்குகிறது.

******************

சரி, நம்ம வழக்கு விசயத்துக்கு வருவோம். 

சிவனேன்னு, சும்மா இருந்த என் மீது பொய்யான விவாகரத்து வழக்கை தொடுத்து சட்டம் படிக்க வைத்ததால், நானே வாதாடும் அளவிற்கு சட்டத்தை தெரிந்துக் கொண்டு, கடந்த 19-12-2018 அன்று நடந்த விசாரணையில் நானே ஆஜரானேன். 

அப்போது, நம் வழக்கை விசாரிக்கும் நீதிபதி, ‘‘உனக்கு சட்டம் தெரியுமா’’ என்றார்.  ‘‘கொஞ்சம் தெரியும்; ஒரு மாதம் வாய்தா கொடுங்க; நான் கத்துகிட்ட வர்றேன்’’ என்று நான் சொன்னதும், அடுத்த 24-01-2019 அன்று வாய்தா கொடுத்துள்ளார். 

இதற்காக உனக்கு முதலில் நன்றி சொல்கிறேன். ஏனோ நீதான் வரவில்லை. வந்திருந்தால், நான் நீதிபதியிடம் பேசியதை நீயும் பார்த்து ரசித்து இருப்பாய். நானும் உனக்கு அங்கேயே நன்றி சொல்லி இருப்பேன். 

சரி விடு, அதான் இங்கு சொல்லி விட்டேனே... நீயும் அடுத்தடுத்த முறை நான் வாதாடும்போது பார்த்து ரசிப்பாய்.    

பொதுவா வக்கீல்னா சட்டம் தெரியும்னு நாம நினைக்கிறோம். ஆனால், அவங்களுக்கு அடிப்படை சட்ட அறிவே கிடையாது என்று நான் சொன்னால், நீ நம்பகூட மாட்ட. ஆனால், உண்மை இதுதான். 

ஆமாம், குடும்ப நீதிமன்றங்கள் சட்டம் 1984 இன் பிரிவு 13 இன்படி, குடும்ப வழக்குகளில் வக்கீல்கள் வாதாட தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆமாம், இது மத்திய சட்ட அமைச்சகத்தின் இணையப் பக்கத்தில் இருந்தே எடுத்தது பாரு.  

இது தெரிந்திருந்தால், வக்கீல் உன் சார்பாக அவர் பேரில் வழக்கு தாக்கல் செய்திருப்பாரா?

கொஞ்சம் யோசிப் பாரு. குடும்பம் நடத்தினது நாம. அதில் பிரச்சினை வந்தால், நம்மைப் பற்றி எதுவுமே தெரியாத வக்கீல்கள் எப்படி நமக்காக வாதாட முடியும்? அதனாலதான், குடும்ப நீதிமன்ற சட்டத்தில் மத்திய அரசே தடை விதிச்சிருக்கு. சட்டத்தை மீறி எப்படி வாதாடுவார்? 

ஆகையால், உன் சார்பாக வக்கீல் தாக்கல் செய்த மனு சட்டப்படி செல்லாது. இதுக்குன்னு தக்க சட்ட நடவடிக்கை மனுவையும் கொடுக்கப் போறேன். 

ஆமாம், சட்டங்கிறது வீண் சண்டை போடுவதற்கும் அல்ல! வந்த வீண் சண்டையை போடாமல் விட்டு விடுவதற்கும் அல்ல!!  

இப்படி வக்கீல் தொழிலைப் பற்றிய அவலங்களை எல்லாம் நம்ம தாத்தா காந்தி, பெரியார், வ.உ.சி, கவிமணிப் பிள்ளை, நீதிபதி வேதநாயகம் பிள்ளை என பல அறிஞர் பெருமக்கள் மக்களுக்கு எச்சரிக்கும் விதமாக தங்களின் வாழ்க்கை வரலாற்றில் பதிவு செய்து வைத்து இருக்கிறார்கள்.

ஆனா, இது நமக்கு தெரியாததால் நம்மகிட்ட பீசு வாங்கிட்டு, பொய் சொல்லி நம்மள ஏமாத்துறாங்க. ஏமாந்திராத, மாமா! நீ கொடுத்த பீச உடனே கேட்டு வாங்கிடு. தரலேன்னா சொல்லு, எப்படி வாங்குறதுன்னு சட்டப்படியான வழிய நான் சொல்லுறேன்.

மாமா, நாம ரெண்டு பேரும் தாம்பத்திய உறவில் இருந்தோமா இல்லையான்னு நமக்குதானே தெரியும். அதனால, நாம் இருவரையும் அறிவியல் ரீதியான மருத்துவ பரிசோதனைக்கு விரைவில்  உட்படுத்த சொல்லி மனு கொடுக்கப் போறேன். இந்த முடிவு நாம தாம்பத்தியத்தில் இருந்தோம் என்றுதான் நிச்சயம் சொல்லும். இது உனக்கும் நன்றாகவே தெரியும்.

ஆகையால், நீ தாம்பத்தியத்தில் இருந்து விட்டு இல்லை என்று பொய்யாக வழக்கு போட்டு, என்னை மனதாலும் உடலாலும் நோகடித்தது, இதுக்காக நீதிமன்றத்துக்கு பொய்யான ஆவணங்களை தாக்கல் செய்தது எல்லாம் சட்டப்படி சிறை தண்டனை விதிக்கத்தக்க குற்றமாகும் என்பது, உனக்கு தெரியுமா?

இன்னோன்னு தெரியுமா மாமா, உனக்கு? 

நீ நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பத்திரம் உன் பெயரிலும், உன் ஊர் பெயரிலும் வாங்கப்பட்டு உள்ளது. ஆகவே, நீதான் அதை வாங்கி, உனக்கு தெரிந்தவரை வைத்து எழுதி, என் வீட்டுக்கு பலருடன் கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்கிச் சென்றாய் என்பதற்கு நீயே ஆதாரத்தை தாக்கல் செய்து இருக்கிறாய்! இது சட்டப்படி குற்றம் இல்லையா? 

உன்கிட்ட காச வாங்கிகிட்டு, யார் யாரோ கிறுக்குத் தனமா சொன்ன யோசனையின்படி நடந்திருக்க என்பதை உன் மீதுள்ள அன்பால் எடுத்துச் சொல்கிறேன். இனியாவது அதுபோன்ற கிறுக்கர்கள் சொல்வதை கேட்காதே! எதாவது, வில்லங்கத்தில் மாட்டி விட்டு விடுவார்கள்!!

உனக்கு என்னை ரொம்பவே பிடிக்கும் என்பதால்தான், என்னுடன் தாம்பத்தியத்தில் ஈடுபட்டாய். தற்போதுள்ள குறைவான சம்பளத்துக்கு குழந்தையை பின்னர் பெத்துக்கலாம் என்று சொன்னாய். நானும் சம்மதித்தேன். அதன்படியே நமக்கு கருத்தரித்து குழந்தை பிறக்கவில்லை. அவ்வளவே!

ஒருவேளை குழந்தை உருவாகி இருந்தாலோ அல்லது பிறந்திருந்தால் தாம்பத்தியத்தில் ஈடுபட அனுமதிக்க வில்லை என்று நீ பொய் காரணத்தை சொல்லி விவாகரத்து கேட்டிருக்க முடியுமா? 

இதெல்லாம் உன் வக்கீலுக்கு தெரிய, அவரென்ன நம் தாம்பத்திய உறவுக்கு விளக்கு பிடித்தாரா?? போயும் போயும், நீ எதுக்கு அவரைப் பிடித்தாயோ...

உண்மையிலேயே, நான் தாம்பத்திய உறவுக்கு சம்மதிக்கவில்லை என்றால் கூட, இந்து திருமண சட்டம் 1955 இன் பிரிவு 9 இன்படி, ‘‘என்னோடு உடலுறவு கொள்ளும் உரிமையை மீட்டுத்தர கேட்டு தானே மனு செய்யனும்’’ என்ற அறிவு கூட இல்லாத வக்கீலை வைத்து விவாகரத்து வழக்கை தாக்கல் செய்து இருக்கிறியே, நீ என்ன மக்கா மாமா!

மாமா, உறுதியாக மீண்டும் சொல்கிறேன், உனக்கு என்னை ரொம்ப பிடிக்கும்; அதுபோலவே எனக்கும் உன்னை ரொம்ப ரொம்ப பிடிக்கும். 

ஆனால், என்னைப் பெண் பார்த்து பிடித்துப் போய் நமக்கு திருமணம் செய்து வைத்த, உன் பெற்றோருக்கு ஏனோ காரணத்தால் இடையில் பிடிக்காமல் போனால், அதுக்காக தாம்பத்தியத்தில் ஈடுபட மறுக்கிறேன் என பொய் வழக்கு போடுவியா?

தாய் தந்தையின் பேச்சைத்தான் கேட்பேன் என்றால், என்னை திருமணம் செய்திருக்க வேண்டியது இல்லையே. அவர்கள் வாழும் காலம் வரை அவர்களுக்கே நல்ல மகனாக இருந்திருக்கலாமே! இடையில் என்னை திருமணம் செய்து எதற்காக அனுதினமும் நோகடித்தே சாகடிக்கிறாய்? 

ஆமாம், சிறிது நோய்வாய்ப் பட்டிருந்த என் தந்தையும் இந்த விவாகரத்து விவாகாரத்தால் மனம் நொந்து இறந்துவிட, அதற்கு கூட நீ வராமல் என்னை நோகடித்து சாகடித்து விட்டாயே! 

இப்படி உனக்கு என்னையும், எனக்கு உன்னையும் ரொம்பவே பிடித்திருக்கும் போது, என் அத்தை மாமாவுக்கு இடையில் ஏனோ பிடிக்கவில்லை என்பது சரிதானே?

இல்லையென்றால், அவர்களே உனக்கு தக்க புத்திமதியை சொல்லி இருப்பார்களே! உன்னை வழக்கு போட வைத்து வேடிக்கைப் பார்க்க மாட்டார்களே!!

எனவே, அவர்களுக்கு பிடிக்கவில்லை என்பதற்காக நான் எப்படி மாமா உனக்கு விவாகரத்து வழங்க முடியும்? ஏன் வழங்க வேண்டும்??

அப்படி வழங்கினால், என்னைப்போல் இன்னொருத்தி அல்ல அல்ல எத்தனை பெண்ணின் வாழ்க்கை கெடும்? இதற்கு நான் சம்மதிக்க வேண்டுமென எந்த வகையில் எதிர்ப்பார்க்கிறாய் சொல்லு, மாமா! 

வழக்கு தொடர்ந்து நடந்தால், மருத்துவ பரிசோதனையின் அடிப்படையில் உனக்கு விவாகரத்து கிடைக்காது என்பது உனக்கே நன்றாக தெரியும். அதன் பிறகும் நாம் மனதார வாழ முடியுமானு சொல்லு, மாமா!

உண்மையில், உனக்கு என்னோடு வாழப் பிடிக்க வில்லை என்றால், அதற்கான உண்மையான காரணத்தை சொல்லி விவாகரத்து கேள். வழங்குவதா வேண்டாமா என்பதை சட்டப்படி அல்ல அல்ல தர்மத்தின் அடிப்படையில் கூட முடிவெடுக்க தயாராய் இருக்கிறேன். 

ஆமாம், உன் மீது உண்மையான அன்பு வைத்ததற்காக இதை செய்ய முடியுமே தவிர, யார் யார் பேச்சையோ கேட்டு, நீ சுமத்தியுள்ள வீண் பழி மற்றும் பொய் வழக்கு அடிப்படையில் என்னால் முடிவெடுக்க முடியாது. 

மாமா, நீ என் மீது தொடுத்துள் வழக்கில் இதுவே என் நிலைப்பாடு. உன் நிலைப்பாடு என்ன என்பதை இந்த மடலைப் பெற்ற பத்து நாட்களுக்குள் எழுத்து மூலமாக எனக்கும், என்னைப் போலவே நீதிமன்றத்துக்கும் நீயே தெரிவித்தால், உன் முடிவுக்கு ஏற்ப நான் பதிலுரையை தாக்கல் செய்ய வசதியாக இருக்கும். 

மாமா, நீ தீர்க்கமாக எடுக்க வேண்டிய முடிவு ஒன்னு பொய் வழக்கை வாபஸ் வாங்குகிறேன் என்று சொல். இல்லேன்னா, வழக்கை நடத்தி நிரூபிக்கிறேன் என்று சொல். உன் முடிவே, என் முடிவு. நன்றி!

பிரியமுள்ள
உன் மனைவி 

நகல் சமர்ப்பிக்கப்படுகிறது: 

1. இந்து திருமண அசல் வழக்கு எண் 87 / 2018 இல், குடும்ப நீதிமன்றங்கள் சட்டம் 1984 இன் பிரிவு 14 இன் கீழான நோக்கத்திற்காகவும், நடவடிக்கைக்காகவும் செஞ்சி சார்பு நீதிபதிக்கு சமர்ப்பிக்கப்படுகிறது.


2. தேவையைப் பொறுத்து பின்னர், இந்திய சாசன கோட்பாடு 227 இன் கீழான நோக்கங்களுக்காகவும், நடவடிக்கைக்காகவும் பொதுப் பதிவாளர், சென்னை உயர்நீதிமன்றம், சென்னை - 600104 சமர்ப்பிக்கப்படும்.


*******************
இப்படியெல்லாம், இதிலும் குறிப்பாக வக்கீல் விளக்குப் பிடித்தாரா என்றெல்லாம் எழுதலாமா என்றால் கட்டாயமாக எழுதி, பொய்யர்களின் மூக்கை உடைக்க வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற வழக்குகளில் இனி மூக்கை நுழைக்க மாட்டார்கள். 

இதன் நகலை உயர்நீதிமன்றத்துக்குப் போட்டாலும், போடவில்லை என்றாலும் சார்பு நிதிபதி டென்ஷன் ஆகி எதையும் செய்யக்கூடாது அல்லவா? அவரை எச்சரிக்கவே தேவையைப் பொறுத்து சமர்ப்பிப்போம் என குறிப்பிட்டு இருக்கிறாள். 

இந்த காதல் கண்டன கடிதத்தை, இன்று 27-12-2018 பதிவஞ்சல் மூலம் அனுப்ப அஞ்சலகத்தில் இருந்த போது, கணவனின் உறவினர் ஒருவர் உலாப்பேசியில் அழைத்து, ‘‘இவங்க தேவையில்லாம கோர்ட்டு கேசுன்னு பொயிட்டாங்க; நான் சேர்த்து வைக்கிறேன்; வக்கீல் கிட்ட கேட்டத்துக்கு நீயே வாதாடப் போறதா சொன்னாங்க; அதனால நாங்க சமரசம் பேச வர்றோம்’’ என்று சொன்னதாக இவ்வாசகி நமக்கு ஆடியோ அனுப்பி இருக்கிறாள். 

நீ போட்ட பொய் வழக்கில் நானே வாதாடப் போகிறேன் என்று ஒரு இளம்பெண் துணிந்து சொன்னதும், அப்பொய் வழக்கை போட்டவர் களுக்கும், அவர்களது பெ(ரு, று)ங்கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்களுக்கும் எவ்வளவு பயம் வருகிறது பாருங்கள்!

இந்தக் காதல் கண்டன கடிதமும், நிதிபதிக்கு போய்ச்  சேர்ந்தால், இதனால் நமக்கு என்னென்ன பிரச்சினை வருமோ என்ற பயத்தில் நிச்சயம் பேதியாகும்!!

ஒன்றை மட்டும், எந்த நிலையிலும் மறக்காமல் நினைவு வைத்துக் கொள்ளுங்கள். கூட்டுக் களவாணிப் பொய்யர்களால், ஒரு நிதிபதியின் சட்ட விரோத நடவடிக்கைகளை சுட்டிக்காட்ட கூட முடியாது. ஆனால், நாமோ பகிரங்கமாகவே நூல்களில் எழுதி, அவர்களுக்கே படிக்க கொடுக்கிறோம். இப்படியொரு துணிச்சல் யாருக்கு வரும்?

ஆமாம், நம்முடைய நீதியைத்தேடி... உள்ளிட்ட நூல்களை நீங்கள் மட்டும் படிக்கவில்லை. நிதிபதிகளும் படிக்கிறார்கள். புதிதாகப் பணியில் சேரும் நிதிபதிகளும், அவர்களுக்கான பயிற்சிக் காலத்தில் படிக்கிறார்கள் என்பதை, தன் வழக்கில் தானே வாதாடிய நம் வாசகர்களிடம் ஒப்புதல் வாக்குமூலம் அளித்து, அதையும் நாம் ‘‘மநு வரையுங்கலை!’’ நூலில் ஆதாரத்துடன் ஆவணப் படத்துடன் பதிவு செய்துள்ளோம். 

இதெல்லாம் நம்முடைய சமூகத்திற்கான சட்ட விழிப்பறிவுணர்வுக் கொள்கையில் இந்திய அளவில் செய்த சாதனையல்ல; உலக அளவில் யாரும் செய்திறாத சாதனைகள்! 

இதனை நியாயமுள்ள நீங்களும் உணர்ந்து வாதாடினால் மட்டுமே உங்களுக்கான பயனைப் பெற முடியும்.  

ஆமாம், தன் வழக்கில் தானே வாதாட முன் வருகிறார்கள் என்றால், அவர்கள் நிச்சயமாக நம் நீதியைத்தேடி... வாசகர்களே என்பதையும், எனவே நம்மை  சமாளிக்க முடியாது என்பதையும் கூட்டுக் களவாணிகள் ஆன நிதிபதிகளும், பொய்யர்களும் நன்கு அறிந்து வைத்திருக்கிறார்கள்.

மேலும், இதுபோன்று தன் வழக்கில் தானே வாதிடுபவர்கள் அதிகரித்து ஆப்படிக்க விட்டால், நாம் சட்டப்படி வழக்குகளில் வாதாட முடியாது என்பது வழக்காளிகளுக்குள் பரவி விடும். பின் சமூகத்திற்கு உள்ளும் பரவி விடும். ஆகையால், நம் நாறிய பிழைப்பும் நடக்காது போய்விடும் என்பதை கூட்டுக் களவாணிப் பொய்யர்களும், நிதிபதிகளும் நன்றாகவே அறிந்து வைத்திருக்கிறார்கள்.

ஆகையால், இவ்வழக்கை விசாரிக்கும் சார்பு நிதிபதியே, இப்பொய் வழக்கை தாக்கல் செய்த பொய்யரை அழைத்து, உன் கட்சிக்காரனை சமரசமாகப் போகச் சொல்லி எச்சரித்து இருக்கலாம் என்றே நம்புகிறோம்.

இல்லையெனில், வீம்புக்கு வீராப்பாக கோட்டுக்குப் போனவனுங்களுக்கு, இவளே வாதாடப் போறான்னு சொன்னதும் எப்படி சமரசமாகப் போக வேண்டுமென்கிற புத்தி வரும்? எந்த காலத்திலும் வந்திருக்காது.

நீயே வாதாட ஆரம்பித்தால் வழக்கு விசாரணையே நடைபெறாது; பொய்யனை வைத்து நடத்தினால் விவாகரத்து ஆகி விடும் என்பது உட்பட எங்களின் பல கட்ட அறிவுறுத்தலை ஏற்று நானே வாதாடுகிறேன் என்று நீதிமன்றத்தில் களமிறங்கி வாய்தா வாங்கிய எட்டாவது நாளில், எட்டாத கனியாக தெரிந்த இவ்வாசகியின் வாழ்வு, எட்டுங் கனியாக காலம் அடித்தளம் அமைத்து தந்திருக்கிறது.

இப்படித்தான் இதற்கு முன்பும், சென்னையைச் சேர்ந்த கோமதி என்ற வாசகியின் வாழ்வுக்கு, பலகட்ட அறிவுறுத்தல்களை வழங்கி, அதன்படி அவள் கடிதம் எழுதவே எண்ணி ஏழாவது நாளில் காலம் எட்டுங் கனியாக  வாழ்க்கை துணையை மீட்டுத்தந்தது.

நாம் சொல்லும் நியாயமான சட்ட ஆலோசனையை கேட்டு நடக்கும் வரை, நம் கணிப்பு எப்போதும் சரியாகவே இருக்கும் என்பது மீண்டும் மீண்டும் உறுதியாகி கொண்டே வருகிறது. இனியும் வரும்!

இந்த வகையில் தன் மீதான பொய் வழக்கில் தானே வாதாட இசைந்ததன் மூலம் தன் வாழ்வை தன் வசமாக்கிக் கொண்ட இவ்வாசகியின் வாழ்வு மேன்மேலும் சிறப்பாக அமைய வாழ்த்துவோம்!

பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

Friday, December 21, 2018

விவாகரத்துக்கு விண்ணப்பித்துள்ள தம்பதிகள் காதல் கடிதம் எழுதுவது எப்படி?இந்தத் தலைப்பை படித்ததும், காதலிப்பதற்கு தானே காதல் கடிதம் எழுத முடியும்... விவாகரத்துக்கு விண்ணப்பித்துள்ள நிலையில் காதல் கடிதம் எழுத முடியுமா, சட்டப்படி அப்படி எழுதலாமா என்றெல்லாம் சந்தேகம் எல்லோருக்குமே இருக்கிறது.  

நியாயந்தான் சட்டம் என்பதை நினைவில் கொண்டால், எதற்கான எல்லை எவ்வளவு என்பதை நாமே கணித்து விடலாம். தம்பதியரில் ஒருவர் விவாகரத்து கோரியுள்ள நிலையிலும் காதல் கடிதம் எழுதுவது சரியானதே என்பது விளங்கி விடும். 

ஆமாம், சட்டம் என்பது வீண் சண்டை போடுவதற்கும் அல்ல! வந்த வீண் சண்டையை போடாமல் விட்டு விடுவதற்கும் அல்ல!! 

ஏதோவொரு கோபத்தில் விவாகரத்து கோரி வழக்கு தாக்கல் செய்துள்ள தம்பதிகளுக்குள் காதல் கடிதம் எழுத சொல்வது நம் வழக்கம். இது பழைய நினைவுகளை மலரும் நினைவுகளாக்கி, பிரிந்த இணைகள் மீண்டும் இணைய நல்வாய்ப்பை உருவாக்கும்.

ஆமாம், தம்பதிகளுக்குள் முட்டிக் கொண்டுள்ள கசப்பான உணர்வுகளை கொஞ்சம் குறைத்து, பிரச்சினைக்கு சுமூக தீர்வு காண உதவும் என்பது ஏற்கெனவே கைகூடிய அனுபவம் பற்பல இருக்க, அண்மையில், கோமதி என்ற சென்னை வாசகி கடிதம் எழுதி கணவர் கைகூடியது தொடர்பான மடலிது!


இதிலென்ன சிறப்புன்னா, எண்ணி ஏழாவது நாளில் இருவருக்குள்ளும் இருந்த மனக்கசப்பு தீர்ந்து, சேர்ந்து வாழ ஆரம்பித்து விட்டார்கள் என்பதுதான்!


இந்த வகையில், கடந்த 19-12-2018 தேதி, திருமணமாகி ஒரு வருடத்தில், விவாகரத்து கோரி கணவன் தாக்கல் செய்த வழக்கில், ‘‘எண்ணி நான்கு நாட்களுக்கு முன்பு நம் நீதியைத்தேடி... வாசகியானவள், நீதிமன்றத்தில் அவளே நேரில் ஆஜரானாள்’’.

தனக்கு எல்லாம் தெரிந்தது போல, ‘‘நீயே வாதாட உனக்கு சட்டம் தெரியுமா?’’ என நிதிபதி கேட்க, ‘‘கொஞ்சம் தெரியும்; ஒரு மாதம் வாய்தா கொடுங்க; நான் கத்துகிட்ட வர்றேன்’’ என்று இவள் சொன்னதும், நிதிபதி வாய்தா கொடுத்து விட்டார்.


இனி இவள் தாக்கல் செய்யும் பதிலுரை மூலந்தான், தனக்கும், வழக்கை தாக்கல் செய்தப் பொய்யனுக்கும் அடிப்படை சட்ட அறிவே கிடையாது என்பது நிதிபதிக்குப் புரியப் போகிறது.

முன்பெல்லாம் இதுபோன்ற ஆதாரங்களை திரட்டுவது மிகவும் கடினம். அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பதை அறிய நீதிமன்ற வழக்கு நாட்குறிப்பை பார்க்க வேண்டும். இதற்காக நீதிமன்றத்துக்கு செல்ல வேண்டும். 

அப்படியே சென்றாலும், நீதிமன்ற மாமாக்களான ஊழியர்கள், யாரும் எளிதில் எடுத்துப் பார்க்கும் வகையில், பொதுவில் வைக்க வேண்டிய நீதிமன்ற வழக்கு நாட்குறிப்பை (டைரியை) தங்களின் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு தர மறுப்பார்கள் அல்லது அவர்களுக்கு லஞ்சப் பிச்சை போடும் பொய்யர்களே பார்க்க வேண்டும் என்பார்கள்.

ஆனால், இப்போது இந்தப் பிரச்சினையே கிடையாது. இகோர்ட் என்ற நீதித்துறைக்கான பிரத்தியேக இணையப்பக்கத்தின் வழியில் சென்று எளிதில் சேகரித்து விட முடியும் என்பதால், இருந்த இடத்தில் இருந்தே இந்தியாவில் உள்ள எந்தவொரு வழக்கு விசாரணையைப் பற்றியும் அறிந்துக் கொள்ள முடியும். 

எனினும், வழக்குத் தரப்பினர்களின் முகவரி, வழக்குரை, ஆதார ஆவணங்கள் உள்ளிட்ட ஒரு வழக்கு சம்பந்தமாக தாக்கல் செய்யப்படும் அனைத்து ஆவணங்களையும் அந்தந்த வழக்கு எண்ணிலேயே பதிவேற்றம் செய்யும் வகையில் மேம்படுத்த வேண்டும். 

இதற்கான நடவடிக்கைகளை சட்டப்படி முன்னெடுக்க நீதியைத்தேடி... வாசகர்கள் உள்ளிட்ட எவர் முன்வந்தாலும் வரவேற்று வழிகாட்ட தயாராக உள்ளோம். 

இவளைப் போன்றே, தன் வழக்கை நடத்த விரும்புபவர்கள் சட்டம் படிக்க வாய்தா வாங்கிக் கொள்ளுங்கள் என்றுதான், நாமும் இக்கட்டுரை மூலம் பரிந்துரை செய்துள்ளோம்.

சரி இதற்கு முன்பாக, நம்ம பாணியில் செய்ய வேண்டியது, வழக்கை தாக்கல் செய்துள்ள கணவனுக்கு காதல் கடிதம் எழுதச் சொல்வது.

குடும்ப நீதிமன்றங்கள் சட்டம் 1984 இன் பிரிவு 13 இன்படி, ‘‘குடும்ப வழக்குக்களில் பொய்யர்கள் வாதிட அனுமதியில்லை’’ என்ற அடிப்படை சட்ட அறிவில்லாமல் இவளது கணவன் சார்பாக வழக்கை தாக்கல் செய்த பொய்யனை வழக்கில் இருந்து நீக்குவது உட்பட பல நற்காரியங்களைச் செய்ய வேண்டும்.

ஆமாம், முன்னரே சொன்னது போல, நம் நீதியைத்தேடி... நூல்களின் வழிகாட்டுதலோடு இனி இவளே வழக்கை விசாரிக்கும் நிதிபதிக்கே சட்டம் சொல்லிக் கொடுக்கப் போகிறாள்.
எனவே, இதன் அடுத்த கட்டமாக, அவளை விவாகரத்து கோரிய கணவனுக்கு காதல் கடிதம் என்ற எழுத சொன்னதும், முதலில் ஈகோவால் எழுத மறுத்தவள் பின், அதிலுள்ள இரகசியங்களைச் சொன்னதும் இரவோடு இரவாக நான்கு பக்கங்களுக்கு காதல் கடிதத்தை எழுதி விட்டாள். இதுதான் கடைசிப் பக்கம்!

இதுவே, நல்லதொரு முன்னேற்றந்தான். எழுத எழுத இன்னும் முன்னேற்றம் ஏற்படும். வழக்கு விசாரணைக்கு முதல் நாள் முன்பு வரை, வழக்கு குறித்து புலம்பிக் கொண்டு இருந்தவளே, இன்று இந்த அளவிற்கு முன்னேறி உள்ளாள்.

இப்படியே, சட்டத்துக்குப் புறம்பாக குடும்ப வழக்கில் பொய்யனை அனுமதித்தது எப்படி என்பதை கேள்வி எழுப்பி, நீக்க கோரும் இடைமனுவை எழுதச் சொல்ல வேண்டும். 

பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

Friday, December 14, 2018

பிளாஸ்டிக்கை தவிர்த்து, முற்றிலும் ஒழிக்க தயாராகுங்க!எதிர் வரும் 2019 ஆம் ஆண்டு முதல் பிளாஸ்டிக் ஒழிப்பு என்ற அரசின் கொள்கை முடிவு, நமக்கு நல்லதொரு விடியலாக அமையப் போகிறது. இந்த விடியலை உருவாக்கித் தர முயன்றுள்ள அரசுக்கு நாம் துணை நின்றால்தான் நமக்கான விடியல் நிச்சயம்!

பொதுவாக அரசு எடுக்கும் கொள்கை முடிவுகள் எல்லாம் அபத்தமாகவும், ஆபத்தானதாகவுமே இருக்கும். 

ஆனால், பிளாஸ்டிக் ஒழிப்பு என்ற கொள்கை முடிவு, இதனால் கொள்ளை லாபம் போய் விடுமே என்கிற தயாரிப்பாளர்களை தவிர, மற்ற அனைவருக்குமே ஆனந்தமானதாகத்தான் இருக்கிறது.

ஆனாலும், ஏற்கெனவே நாம் பயன்படுத்திய பிளாஸ்ட்டிக்கின் கொடூரங்களை, நாமும் நம் சந்ததிகளும் அனுபவித்துத்தான்  ஆகவேண்டும். இதில் ஆறுதல் என்னவென்றால், தவறு செய்த நாம் அதிகமாக அனுபவிப்போம்; நம் வாரிசுகள் குறைவாக அனுபவிப்பார்கள்.  அவ்வளவே!

அரசு எதில் கொள்கை முடிவு எடுத்தாலும், எடுக்கா விட்டாலும் அதன் நன்மை, தீமையை ஆராய்ந்து மக்கள் பயன்படுத்தினாலோ அல்லது பயன் படுத்தாமல் போனாலோ அக்கொள்கை முடிவால் மக்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. 

அக்கொள்கை முடிவை எடுத்த அரசுக்கே பாதிப்பாக அமையும் என்பதை நாம் நன்றாகப் புரிந்துக் கொண்டு விட்டால், அரசின் கொள்கை முடிவுகள் எதுவாயினும், அது நம்மை பாதிக்காது. 

சரி நம்ம விசயத்துக்கு வருவோம். 

அரசு முன்னெடுத்துள்ள பிளாஸ்டிக் ஒழிப்பு என்ற கொள்கைக்கு நம்மால் இயன்றதைச் செய்ய வேண்டும் என்ற கருத்தில், நம் வாசகி காடாத் துணியால் ஆன பைகளைத் தைத்து வினியோகித்து வருகிறாள். வெண்மைக்காக பிளீச்ங் செய்யாத துணியே காடா துணி எனப்படும். 

இதனை தேவைக்கு ஏற்ப பலமுறை துவைத்து பயன்படுத்த முடியும் என்பது சிறப்பு. துவைக்க துவைக்க நன்றாக இருக்கும். பெரிய அளவில் இலாப நோக்கம் இல்லாமல் பையின் அளவுக்கு ஏற்ப இரண்டு மூன்று ரூபாய் முதல் விலையை நிர்ணயம் செய்திருக்கிறாள். உண்மைக்கு 15 * 6 ( Rs. 2 ) 15 * 9 ( Rs. 3 ). விலையை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்.

அதாவது, தற்போது புழக்கத்தில் உள்ள நான் ஓவன் பை (NON WOVEN) விலைக்கு நிகரானதே அல்லது ஒரு ரூபாய் கூடுதலாகும். அவ்வளவே!


இப்படி இன்னும் பலருங்கூட தைத்து  விற்கலாம். நமக்கு தெரிந்த நம் வாசகி என்பதால் மட்டுமே சொல்கிறோம். 

நாங்களும் இதனை ஆதரித்து, ஊக்குவிக்கும் விதமாக இனி நம் நீதியைத்தேடி... உள்ளிட்ட நூல்களை வாங்கும் வாசகர்களுக்கு அனுப்புவதற்காக தோள் (ஜோல்னா) பையை தைத்து தரும்படி கேட்டுள்ளோம்.  

எனவே, இதுபோன்ற துணிப்பைகளை 50 அல்லது 100 என இவ்வாசகியிடமோ அல்லது இதைவிட விலை குறைவாக கிடைக்கும் இடத்தில் இருந்தோ வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.

இதில், உங்களது தேவைக்கு பயன்படுத்துவது போக, நீங்கள் யாருக்காவது எதையாவது கொடுக்க விரும்பினால், இந்தப் பையில் போட்டு கொடுங்கள். நீங்கள் கொடுக்கும் பொருளின் பெரும் செலவோடு, கூடுதலாக ஓரிரு ரூபாய் சிறிய செலவு மட்டுமே. 

எனவே, அவர்கள் அப்பையை திருப்பிக் கொடுத்தால் வாங்காமல், இனி இதையே பயன்படுத்துங்கள் என்றும், விரும்பினால் அதற்கான மூன்று ரூபாயை கொடுங்கள் என சொல்லி விடுங்கள். 

அப்போதுதான் அவர்களும் அதனைப் பயன்படுத்த ஆரம்பிப்பார்கள். இல்லையேல், ஏற்கெனவே சேமித்து வைத்துள்ள பிளாஸ்டிக்கு பைகளையே மீண்டும் பயன்படுத்திக் கொண்டே இருப்பார்கள். 

நம் கைக்கு கிடைத்தது வாய்க்கு எட்டாமல் போய் விடக்கூடாது அல்லவா? 

நாட்டில் நல்லதைச் செய்ய ஆட்கள் மிக குறைவு. அவர்களை நாம் ஆதரிக்கா விட்டால், அவர்களும் நல்ல விசயங்களை கைவிட வேண்டிய நிலை வந்து விடும். அதற்காகத்தான் இந்த வழிகாட்டு கட்டுரை!

பிற்சேர்க்கை நாள் 16-12-2018

சங்கங்களை அமைப்பதன் நோக்கமே, சமூகத்திற்கு நன்மை செய்வதுதான் என்ற நிலை மாறி, கேடு செய்வதுதான் என்ற நிலையாகி விட்டது என்று ‘‘கடமையைச் செய்! பலன் கிடைக்கும்’’ நூலில் ஓர் அத்தியாயம் முழுவதும் ஆதாரங்களுடன் விளக்கி எழுதி உள்ளேன். 


அரசு முன்னெடுத்துள்ள பிளாஸ்டிக்க ஒழிப்பு நடவடிக்கைக்கு எதிராக அப்படியேத்தான் இருக்கிறது தமிழ்நாடு, பாண்டி பிளாஸ்டிக் சங்கத்தின் மேற்கண்ட கதவடைப்பு அறிவிப்பு. ஆனால், இந்த அறிவிப்பே நிரந்தரம் ஆகட்டும்! 

ஆமாம், அரசின் திட்டப்படி, அந்நிறுனவங்கள் தங்களின் உற்பத்தியை மூடுவதற்கு இன்னும் பதினைந்து நாட்கள் உள்ள நிலையில், ‘‘அதற்கு முன்பாகவே மூடு விழாவை நடத்துகிறோம்’’ என்று அறிவித்து உள்ளதால், நாம் அனைவரும் அதனை வாழ்த்தி வரவேற்போம். 

பிற்சேர்க்கை நாள் 16-06-2019

பிளாஸ்டிக்கை ஒழிக்க அரசு, கீழ்கண்ட செய்தியில் உள்ளபடி தீவிரம் காட்டி உள்ளதன் விளைவாக, காடா துணியின் விலை அதிகரித்து உள்ளது. ஆகையால், மேற்சொன்ன விலையில் மாற்றங்கள் இருக்கும். 

clip

இரு தினங்களுக்கு முன்பு (14-06-2019), விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த நம் வாசகர் செந்தில் என்பவரது இல்லத்தில் விழா!

பிளாஸ்டிக் தடை காரணமாக விழாவுக்கு வந்தவர்களுக்கு கொடுக்க தாம்பூலப்பை கிடைக்கவில்லை. மேலும், இவ்வாசகர் பிளாஸ்டிக் எதிர்ப்பாளர்.

ஆகையால், ஏற்கெனவே நீதியைத்தேடி... இணையப் பக்கத்தில் வாசகி நம் தயாரிக்கும் காடா துணிப்பை குறித்து எழுதியதை நினைவில் வைத்து, தக்க சமயத்தில் வாங்கிப் பயன்படுத்திக் கொண்டார்.

இல்லையெனில், வந்தவர்களுக்கு தாம்பூலப்பையை கொடுக்க முடியாத அவல நிலை ஏற்பட்டு இருக்கும் என்பதால், நமக்கும், நம் வாசகிக்கும் நன்றியை உரித்தாக்கினார்.

இதுபோன்றதொரு நிலை உங்களுக்கோ அல்லது உறவினர்களுக்கோ வந்தால், உதவும் வகையில் நினைவூட்டுகிறோம்.

குறிப்பு: நம் நூல்களை வாங்கும் வாசகர்களுக்கு ஒரு ஜோல்னா பையை வழங்க திட்டமிட்டு, தயார் செய்து தருமாறு அவ்வாசகியிடம் கேட்டு உள்ளோம்.

பிற்சேர்க்கை நாள் 14-06-2019

அரசு முன்னெடுத்துள்ள தீவிர பிளாஸ்டிக் ஒழிப்பின் காரணமாகவும், பிளாஸ்டிக் தாம்பூலப்பை உள்ளிட்ட (த, க)ட்டுப்பாடுகளின் காரணமாகவும், இவ்வாசகி தைத்துக் கொடுக்கும் காடா துணியின் விலை உயர்வு காரணமாக, பையின் விலையும் உயர்ந்துள்ளது.

எனவே, மேற்சொன்ன தோராய விலையை பொருட்படுத்தாமல், விலையின் ஏற்றத்தாழ்வுக்கு ஏற்ப விலையை ஆராய்ந்து கேட்டுப் பெற்றுக் கொள்ளுங்கள். 

ஆமாம், இன்று நடந்த நம் வாசகர் செந்தில் முருகன் என்பவரது சுப நிகழ்வுக்கு விலை அதிகம் கொடுத்து வாங்கப்பட்டு உள்ளது. 

பிற்சேர்க்கை நாள் 12-07-2019

ஆவின் என்றால், மாடு என்று பொருள் என்பதால், அரசு தன் பால் நிறுவனத்திற்கு ஆவில் என்றப் பெயரைப் பொருத்தமாக சூட்டியுள்ளது. ஆனால், மாடு போலத்தான் விலங்காகவே இருக்கிறது, அரசும் அதன் ஆவின் நிறுவனம். 
clip
ஆமாம், மனிதனைக் கொல்லும் மதுவை, கண்ணாடி பாட்டிலில் அடைத்து விக்கிறானுங்க. 
ஆனால், மக்களுக்கு அத்தியாவசியமான பால் உள்ளிட்ட உணவுப் பொருட்களை பிளாஸ்டிக் கவரில் விக்கிறானுங்க!
மொத்தத்தில், இவர்களின் முடிவு மக்களை கொல்வது என்பதாகவே தெரிகிறது. இதை அங்கீகரிக்க வேண்டுமென்று வழக்கும் போடுறானுங்க என்றால், எங்கே உருப்படுவது?பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

Wednesday, December 12, 2018

நிவாரண உதவிகளை வழங்கிட திட்டமிடல் அவசியம்!புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் துயரை துடைக்க ஆதரவு தருக!  என்ற முந்தையத் தொடர் கட்டுரையின் (இ, உ)றுதிக் கட்டுரை இது!

இக்கட்டுரையின் இறுதியில் சொல்லிய பருவ நிலை மாற்றத்தில் மழை இல்லை என்பது தெரிய வந்ததால், முன்பு திட்டமிட்ட நாளுக்கு இரண்டு நாட்கள் முன்பாக  08-12-2018 அன்று 550 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.  

அதாவது கேர் சொசைட்டி, ஜீவாதார் மற்றும் ஆரோக்கியான் ஆகிய மூன்றுக்கும் கிடைத்த நன்கொடை நிதியைக் கொண்டு நாம் முன்னரே திட்டமிட்டபடி நிவாரணப் பொருட்களை வழங்குவதாக இருந்தால், அதிகபட்சம் நாநூறு குடும்பத்துக்கு மட்டுமே வழங்க முடியும் என்ற இக்கட்டான நிலை ஏற்பட்டது.

அவ்வூரில் மாடி வீட்டில் வாழும் சுமார் 200 குடும்பங்களுக்கு கொடுக்க முடியாவிட்டாலுங்கூட, குடிசை மற்றும் ஓட்டு வீட்டில் வாழும் சுமார் 550 குடும்பங்களுக்கு எவ்வித பேதம் இன்றி வழங்க வேண்டுமே என்பதற்காக இரண்டு கிலோ வழங்க திட்டமிட்ட துவரம் பருப்பை ஒரு கிலோவாக குறைத்துக் கொண்டோம். 

ஒரு கிலோ வழங்க திட்டமிட்ட சமையல் எண்ணையை அறவே கொடுக்காமலும் நிறுத்திக் கொண்டு, கிடைத்த தொகையை 550 குடும்பங்களுக்கு சமன் செய்ய முயற்சித்தோம். இதனால், 500 குடும்பங்களாவது முழுப் பயனை அடைந்திருப்பார்கள்.  

மொத்தத்தில் ஒரு குடும்பத்துக்கு ஒரு சோலார் விளக்கு. நூலால் பின்னப்பட்ட தரமானதொரு கோரைப் பாய். ஒரு போர்வை மற்றும் ஒரு கிலோ துவரம் பருப்பு என மொத்தம் நான்குப் பொருட்களை மட்டுமே வழங்கி உள்ளோம்.  

சோலார் விளக்கை மின்சாரத்திலும் சார்ஜ் செய்துக் கொள்ள முடியும் என்பதோடு, மின்சாரம் இல்லாத போது சோலார் வழியாக உலாப்பேசிகளை (செல்போன்களை) சார்ஜ் செய்து கொள்ளும் வகையில் மூன்று வகையான வசதிகளைக் கொண்டது.   

மக்கள் மனதில் மாற்றம் வரவேண்டும்!

பொதுவாக மக்களுக்கு எது இலவசமாக கிடைத்தாலும் அது தனக்கு பயன்பட்டாலும், பயன்படா விட்டாலும் அடித்துப் பிடித்தாவது வாங்கி விட  வேண்டும். அப்போதுதான் ஆத்ம திருப்தி என்ற கொள்ளை முடிவிலேயே இருக்கிறார்கள். 

இதற்கேற்பவே அரசியல் வியாதிகள் இலவசங்களை கொடுத்து கெடுத்து வைத்திருக்கிறார்கள். இலவச அரிசியைப் பெறும் மக்கள் அதனை அண்டை மாநிலங்களில் இருந்து பிழைப்பு தேடி வரும் மக்களுக்கு கிலோ 20 க்கு விற்று ரூ 400 ஐ வருமானமாக ஈட்டுகிறார்கள். 

இலவசமாக வந்த உணவுப் பொருளை பணத்துக்கு விற்பதை விட பாவச் செயல் இருக்க முடியுமா?! இவர்கள் எல்லாம் தங்களின் வாழ்நாளில் இயற்கைச் சீற்றங்களில் சிக்கிப் பிச்சை எடுக்காமல் என்ன செய்வார்கள்??!

சாதாரண நாட்களிலேயே இவ்வளவு கேவலமாக நடந்துக் கொள்ளும் மக்கள், இயற்கையின் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் சும்மா இருப்பார்களா? 
ஆகையால், நிவாரணப் பொருட்களை கொண்டு வந்து வழங்குவோரை, இனி இப்படியொரு உதவியை செய்யவே கூடாது என்று நினைக்கும் அளவிற்கு தொந்தரவு செய்து விடுகிறார்கள். இவ்வளவு தூரம் திட்டமிட்ட நமக்கும் இந்த அனுபவம் ஏற்பட்டதுதான் கொடுமை!

ஆமாம், பாதிக்கப்பட்டு சோற்றுக்கு வழியில்லை என்று சொல்லும் இம்மக்களுக்கு சாராயம் குடிப்பதற்கு மட்டும் பணம் எங்கிருந்து கிடைக்கிறது என்பது அக்குடி(ம, மா)க்களுக்கே வெட்ட வெளிச்சம். 

இவர்களுக்கு நாம் பணமாக கொடுத்திருந்தால், நமக்கு பாவமே வந்து சேரும்படி குடித்து குதுகளித்து இருப்பார்கள். 

ஆமாம், நாம் சென்ற காலை 11 மணிக்கே வயது வித்தியாசம் இன்றி ஆண்கள் குடித்து விட்டு அலப்பரை செய்ய, பெண்கள் குடிக்காமலேயே ஆண்களை விட அதிகமான அலப்பரையை செய்து விட்டார்கள். 

இத்தனைக்கும் அவ்வூரில் உள்ள இளைஞர்கள் சிலர் உதவ முன்வந்து, அம்மக்களை ஒழுங்குபடுத்தி, நாமே ஒவ்வொரு வீடாக சென்று நிவாரணப் பொருட்களை கொடுக்க உதவிய அவர்கள் மீதும்,  நாம் கூட்டமாய் கூடி தன் விருப்பப்படி ஒன்றுக்கு இரண்டு மூன்றாக இஷ்டப்படி ஏமாற்றி வாங்கிட, நம்ம ஊர்க்காரர்களே தடையாக இருக்கின்றனரே என்று அவர்கள் மீதும் சீனங்கொண்டு சீறினர். 

பத்து நாட்கள் முன்பே வந்து, உங்களையும் உங்களது தேவைகளையும் கணக்கிட்டு, எல்லோருக்கும் நிவாரணப் பொருட்களை கொண்டு வந்துள்ளோம். எனவே, உங்களது வீட்டிலேயே இருங்கள் நாங்களே கொண்டு வந்து கொடுக்கிறோம். 

இரவு பகல் பாராமல் பணம் வசூலித்து, பொருட்களை தேடித்தேடி பேரம் பேசி வாங்கி, சாப்பாடு மற்றும் தூக்கமில்லாமல் மிகவும் சிரமப்பட்டு கொண்டு வந்துள்ளோம். எனவே, அனைவருக்கும் வழங்கிட ஒத்துழைப்பு கொடுங்கள் என எவ்வளவோ கெஞ்சிக் கேட்டும், அதனை அம்(ம, மா)க்கள் சற்றும் பொருட் படுத்தவே இல்லை என்பது கொடுமையிலும் கொடுமை!

இதில், எளியவருக்கு நாம் கொடுப்பதை, அதில் வலியவர்கள் தட்டிப் பிடுங்குவதும், அந்த எளியவரை தாக்கியதும், இந்த சண்டையில் கொடுத்த பொருட்கள் கீழே விழுந்ததும், நம்மை மிகுந்த மன வேதனைக்கு உள்ளாக்கியது. 

எனவே ஆரம்பத்தில் கட்டுப்படுத்த முடிந்த மக்களை மதிய வேளையில் கட்டுப்படுத்த முடியாமல் போய் விட்டது. எனவே மதிய உணவை முடித்து விட்டு மீண்டும் கொடுக்கலாம் என திட்டமிட்டோம். 

ஆனால், வேறு இடத்தில் இருந்து கொடுக்க ஆரம்பித்து கொடுத்து முடித்தோம் என்பது ஆறுதலாக இருந்தாலும், விட்ட இடத்தில் இருந்து மீண்டும் கொடுக்கத் தொடங்காததால் சுமார் ஐம்பது வீடுகளுக்கு கொடுக்க முடியாமலேயே போய் விட்டது நம்முடைய தவறுதல்; அவசரப்பட்ட அவர்களுக்கு சிறு தண்டனை. 

ஆனாலும், நம் திட்டப்படி பொருளைப் பெற்றவர்கள் போற்றாமல் இருப்பார்களா... ஆகையால், நம்மைப் போற்றி விட்டார்கள். இதேபோல, கிடைக்காமல் போனவர்கள் நிச்சயம் தூற்றி இருப்பார்கள். ஆனால், இது நம் செவிகளுக்கு சேரவில்லை. அவ்வளவே! 

இவ்வளவு திட்டமிட்ட நமக்கே இப்படி என்றால், திட்ட மிடாமலும், விளம்பரத்துக்காகவும் கொண்டு சென்றவர்கள் எவ்வளவு திண்டாடி இருப்பார்கள் என்றால், அவர்கள் இதைப்பற்றி எல்லாம் கவலைப் பட்டிருக்கவே மாட்டார்கள். அவர்களின் நோக்கம் வேறு. அவ்வளவுதான்!
  
இயற்கைச் சீற்றங்கள் எல்லாமே, மனிதனின் தவறுகளுக்கு இயற்கை தரும் தண்டனைதான் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அப்படி இருந்தால், அவர்கள் நிச்சயம் வேண்டாத விதண்டா வாதம் செய்பவர்களே!

ஆகையால், இயற்கை தன் சீற்றத்தின் மூலம் தரும் தண்டனையை அம்(ம, மா)க்கள் முழுமையாக அனுபவித்து துன்பத்தை உணர வேண்டியதே இயற்கையின் நியதியாக இருக்க முடியும். 

ஆனால், நாமோ மனிதாபிமானம் என்ற அடிப்படையில், (ம, மா)க்களுக்கு வலிந்து வீட்டுக்கு வீடு தேடிச் சென்று உதவப் போய் இயற்கையின் தண்டனையில் இருந்து அவர்களை காக்க முயற்சித்து, நம்மை நாமே துன்பப்படுத்திக் கொண்டு, கர்ம வினையையும் சம்பாதித்துக் கொள்கிறோம் என்றே நமக்கு கிடைத்த இந்த அனுபவத்தில் எண்ண வேண்டி வந்து விட்டது. 

ஆமாம், அறத்தின் வழியில் வாழ்பவர்கள் யாரும் எந்தவொரு இயற்கைச் சீற்றத்திலும் சிக்குவதில்லை என்ற உண்மையை நாம் முதலில் உணர வேண்டும். 

திட்டமிடலுக்கு தீர்வு என்ன?

சரி, மக்கள் என்றால் இப்படித்தான் இருப்பார்கள். அதற்காக நாம் உதவும் கடமையில் இருந்து தவற முடியுமா... இதற்கு நாமே இப்படி வழிகாட்டலாமா என்ற கேள்வி உங்களுக்கு எழுந்தால், இதற்கும் நல்லதொரு தீர்வை தருவதே நியாயம்.

இந்த வகையில், நாம் திட்டமிட்டபடி எல்லோருக்கும் நிவாரணப் பொருட்கள் போய்ச் சேர வேண்டுமென எண்ணினால், அப்பொருட்களை அம்மக்கள் வசிக்கும் பகுதிக்கு அப்பால், பத்துப் பதினைந்து கிலோ மீட்டருக்கு வந்து வாங்கிச் செல்லுமாறு, பாதுகாப்பான ஒரு இடத்தில் இறக்கி வைத்து விட வேண்டும். 

இதே நேரத்திலோ அல்லது முன்போ அல்லது பின்போ நம் சிந்தனையில் பிரத்தியேகமாக தயார் செய்த (இது கள்ளத்தனமாக செய்ய முடியாதபடி இருக்க வேண்டும்) அடையாளச் சீட்டை வீட்டுக்கு ஒன்றாக வழங்கி விட்டு, ஓரிரு நாட்களுக்குள் வந்து பெற்றுக் கொள்ளச் சொன்னால் (கூடுதல் கால அவகாசம் கொடுத்தால் கள்ளத்தனமாக தயார் செய்து விட முடியும்), எல்லோரும் ஒரே நேரத்தில் கூடி கூச்சல் போட்டு நம்மை துன்பப்படுத்த முடியாது. ஒன்றுக்கு மேற்பட்டு வாங்கவும் முடியாது. 

மக்கள் மக்களாக மிகுந்தப் பொறுப்புணர்வோடு வந்து பெற்றுச் செல்வார்கள் என்பதால், இப்போதைக்கு இதுவே மிகச்சிறந்த வழி. எனவே, நீங்கள் விரும்பினால், இவ்வழியைப் பின்பற்றுங்கள்.

நன்றியுரை

இந்த நிவாரண உதவிக்கு நிதியுதவி அளித்த அனைவருக்கும், பொருட்களை தேடித்தேடி பேரம் பேசி வாங்கித் தந்தவர்களுக்கும், அப்பொருளை விலையை குறைத்துக் கொடுத்தவர்களுக்கும், அப்பொருட்களை விநியோகம் செய்ய உதவியவர்களுக்கும், உதவியைப் பெற்றுக் கொண்டவர்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

இதுகுறித்த விளக்க காணொலியை தயாரானதும் வெளியிடுகிறோம். 

பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

தன் கள்ள உறவுக்காக மகளின் வாழ்வை பாழாக்கும் அம்-மாக்கள்!உலகப் பொதுமறையாகவும், மனித குலத்திற்கு அற வாழ்வைக் கற்றுத் தரும் நூலாகவும் உள்ள திருக்குறள் உள்ளிட்ட அறநூல்கள் அனைத்துமே கள்ளக்காதலை கண்டிக்கிறது. அமலில் உள்ள சட்டங்களும் அப்படித்தான்!

ஆனால், இவ்விரண்டிலும் உள்ள ஒற்றுமை என்ன வென்றால், ஆண்களுக்கான அறிவுரையாகத்தான் இருக்கிறதே அன்றி, பெண்களுக்காக இல்லை. ஏன் இந்தப் பாகுபாடு என்பது எனக்கு சரியாகப் புரியவில்லை. 

சமூகத்தை கட்டமைக்கும் பொறுப்பு ஆண்களுக்கும், குடும்பத்தை கட்டமைக்கும் பொறுப்பு பெண்களுக்கும் இருப்பதாக அற நூல்கள் சொல்வதாலும், கள்ளக்காதல் என்பது முதலில் குடும்பத்தை சிசைத்தாலும், பின் அது சமூகத்தைப் பாதிக்கும் என்பதால்தான், சமூகத்தை கட்டமைக்கும் ஆண்களுக்கு இந்த எச்சரிக்கையை அற நூல்கள் விடுக்கின்றன என்றே எண்ணுகின்றேன்.

ஆகையால், அப்படிப்பட்ட பெண்களிடம் ஆண்கள் தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பது சொல்லாமலேயே விளங்க வேண்டும். ஆனாலும், இது நியாயந்தான் சட்டம் என்பதற்கு எதிராக உள்ள பாகுபாட்டால்தான் இது தொடர்பான குற்றங்களை ஒழிக்க முடியவில்லை என்றே எண்ணுகிறேன். 

ஆமாம், இந்தியாவில் கள்ளக் காதல் கற்பழிப்பு குற்றமாகி இலட்சக் கணக்கான ஆண்கள் சட்டப்படி தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கிறார்கள். ஆனால், பெண்களில் அப்படி யாரையும் சொல்ல முடியாது. அப்படியே சொன்னாலும், அந்த எண்ணிக்கையை விரல் விட்டு எண்ணி விடலாம். 

இந்த இழிநிலையில், குற்றங்களை குறைக்க வழிகான வேண்டிய கூலிக்கு மாரடிக்கும் உச்சநீதிமன்ற அறிவிலி நிதிபதிகள், ‘‘தாங்கள் எப்படியோ அப்படித் தான் மக்களும் இருப்பார்கள்’’ என்ற கேவலமான எண்ணத்தில் கள்ளக்காதலை ஆதரித்து தீர்ப்பை சொல்லி உள்ளார்கள். 

ஆனால், இந்திய சாசனக் கோட்பாடு 142 இன்படி, அத்தீர்ப்பை மத்திய அரசோ அல்லது அக்கூறுகெட்ட நிதிபதிகளை நியமித்த குடியரசுத் தலைவரோ சட்டமாக கொண்டு வந்தால் அல்லது சட்டமாக கருத வேண்டுமென அங்கீகரித்தால் மட்டுமே சட்டமாகும். இல்லையேல், அத்தீர்ப்பு எந்த வழக்கில் சொல்லப் பட்டதோ அந்த வழக்கோடு நீர்த்துப் விடும். 

ஆமாம், இதுபற்றி விரிவாக அறிய சட்டமா... தீர்ப்பா... எது முக்கியம்... ஏன்?! என்றக் கட்டுரையைப் படிக்கவும். 

கள்ளக்காதலில் ஆண்கள் புத்திசாலிகள் என்றால் பெண்கள் அதிபுத்திசாலிகள் என்பதை மிகவும் விளக்கமாக 2010 ஆம் ஆண்டில் எழுதி வெளியிட்ட நீதியைத்தேடி... சாட்சியங்களைச் சேகரிப்பது எப்படி? நூலில் எழுதி உள்ளேன். 

அதில் எழுதாத சங்கதி என்றால், கணவனோடு வாழ்ந்து பெண் குழந்தையைப் பெற்ற பெண்கள், வேறொரு ஆணுடன் கள்ளக் காதலில் சிக்கினால், அதே கள்ளக் காதலனிடம், தன் கணவனுக்குப் பெற்ற பெண் குழந்தையையும் தன் வாழ்வுக்காக அவளே கூட்டிக் கொடுக்க நேரிடும். 

இதற்கு அவள் உடன்படவில்லை என்றால், அக்கள்ளக் காதலனோடு தொடர் கள்ள உறவில் இருக்க முடியாது என்பதோடு மீண்டும் கணவனோடு சேர்ந்து வாழவும் முடியாது. (இ, அ, எ)ப்படியும் பலர் வாழ்ந்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். 

இதைத்தான், நடிகர் கமலோடு சில காலம் கள்ளக் காதல் குடும்பம் நடத்திய நடிகை கெளதமி, ஒரு கட்டத்தில், ‘‘என் மகளின் நல்வாழ்வுக்காக கமலை விட்டுப் பிரிகிறேன் என்று உள் அர்த்தத்தோடு சொல்லி விட்டு, தனியாக வாழ்ந்து வருகிறாள்’’. 

இதனை அவள் நம்மைப் போல் தெளிவாக சொல்லி இருந்தால், கள்ளக் காதலில் ஈடுபட நினைக்கும் பெண்களுக்கு தக்க பாடமாக இருந்திருக்கும். மொத்தத்தில் ஒரு கள்ளக்காதல், விளைவாக மூவரின் வாழ்க்கை நாசமாகும் என்பதை கள்ளக் காதலில் முடிவுரும் மூவரின் வாழ்க்கை என்றக் கட்டுரையைப் படித்துத் தெளியலாம். 

எந்தப் பெண்ணுக்கு எப்போது கள்ளக்காதல் வரும் என்பதை யாரும் தீர்மானிக்க முடியாது. இப்படித்தான் நம் வாசகி ஒருத்தியும் மிகவும் ஒழுக்கமானவளாக இருந்தாள். அவளா இப்படியானால் என்று வியக்கும் அளவிற்கு பின் ஒழுக்கம் தவறி கணவனை விரட்டி விட்டு, முன்னாள் காதலனை கள்ளக்காதல் செய்து கள்ளத் திருமணமும் செய்துக் கொண்டாள். 

இவளது இக்கள்ளக் காதலும், கள்ளத் திருமணமும் சில வருடங்களுக்கு மேல் நீடிக்காது என எனது ஆராய்ச்சியின்படி, கணக்கு போட்டு சொல்லி இருந்தேன். என் கணக்கு தவறுமா... அப்படியே ஆகி விட்டது. 

ஆமாம், அவளது வயதுக்கு வந்த 18 வயது நிரம்பிப் பெண்ணையும், பத்து வயதைக் கடந்து தன் அப்பன் யார், அடுத்தவன் யார் என்று அறிந்த மகனையும், இவளது கள்ளக் காதலனை ‘‘அப்பா என்றே அழைக்க வேண்டும்’’ என்று கட்டாயப்படுத்தி இருக்கிறாள். 

விவரம் அறிந்த எந்தக் குழந்தையாவது, ‘‘அங்கிள் என்று அழைத்தவனை, அப்பா என்று அழைக்குமா?!’’

ஆகையால், இது பெரும் அடிதடி பிரச்சினையாகி, காவல் நிலையத்தில் புகாராகி, அங்கு நடந்த கட்டப் பஞ்சாயத்தில் அவ்விரு குழந்தைகளும், இவளது அம்மா, சகோதர, சகோதரிகளோடும், தங்களின் அப்பாவோடும் செல்வதாக கூறி சென்றுவிட இப்போது கடும் மனத் துன்பத்தில் இருக்கிறாள். 

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பதற்கு ஏற்ப, முன்பிருந்த முகத் தோற்றத்துக்கும் (அ, ப)ன்புக்கும் எதிர்மறையாக இருக்கிறாள். அப்படியும் தன் தவறை உணர்ந்தாளா என்றால் இல்லை. மாறாக, இவளுக்கு நாம் துணை நிற்கவில்லை என்ற அநியாய கோபம் வேறு. 

இக்கள்ளக் காதலால் இவள் அனுபவித்த துன்பங்களை விரிவாகச் சொல்ல வேண்டுமானால், ஒரு நூலே எழுதலாம். இதனை அவளே மனந்திருந்தி எழுதுவது தான் சிறப்பாக இருக்கும். 

இவளால், இவளோடு உடன் பிறவாத அண்ணன் வாழ்வும் கெட்டது. இவரது விவாகரத்து மநுவைத்தான் ‘‘மநு வரையுங்கலை!’’ நூலில் தொகுத்து உள்ளேன். 

எனவே நான் முன்பே சொன்னதைப் போல, எதிர்ப்பாலின ஈர்ப்பு என்பதை எல்லாங் கடந்து, எல்லா வகையிலும் பெண்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது, ஆண்களின் சமூக கடமையாகிறது.    

இப்படித்தான் பல அம்-மாக்கள் மகளின் வாழ்வில் மாக்களாகவே இருக்கிறாளுங்க.

ஆமாம், இப்போது நம் வாசகராக விரும்பி நம் நூல்களை கேட்ட இளைஞன் (வயது 33) சொல்வதும் இப்படியொரு கள்ளக் காதல் விவகாரத்தைதான்.

அதாவது இவன் தன் உடன் பிறந்த அக்கா (வயது 35) மகளையே (வயது 18) கடந்த 26-02-2018 அன்று திருமணம் செய்துள்ளான். அவள் தற்போது ஜீவனாம்சம் கேட்டு இவன் மீது குற்றவியல் வழக்கு போட்டுள்ளாள்.

இக்குற்றவியல் மனுவில், இவன் இவனது உடன் பிறந்த தங்கையோடு (இவளுக்கு சித்தி, இவளது அம்மாவுக்கு உடன் பிறந்த தந்தை) தவறான உறவில் இருந்ததை நேரில் பார்த்தாளாம்! மேலும், வரதட்சினை கேட்டது உள்ளிட்ட காரணங்களைச் சொல்லி, 14-08-2018 அன்று வீட்டு அனுப்பி விட்டானாம்!!

இவன் செய்யும் தொழில் மூலம் மாதம் ஐம்பதாயிரம் வருமானம் வருகிறதாம். அகையால், அதில் ரூ 20, 000 ஐ ஜீவனாம்சமாகவும், துணிமணி மற்றும் மருத்துவ செலவுக்காக ரூ 20, 000 என மொத்தம் ரூ 40, 000 வழங்க உத்தரவிட வேண்டுமென ஐந்து கூட்டுக் களவாணிப் பொய்யர்கள் மற்றும் ஒரு பொய்யனி இணைந்து மனுத் தாக்கல் செய்திருக்கானுங்க.

உண்மை என்னவென்று இவனிடம் கேட்டால், அக்காள் தன்னை வீட்டோடு மாப்பிள்ளையாக அம்மாவோடு இருக்கச் சொல்கிறாள். அதற்கு நான் சம்மதிக்க வில்லை. மேலும், அவளுக்கு வேறொரு ஆணுடன் தொடர்பு இருக்கு. அதை கண்டித்ததால் இப்படி யெல்லாம் செய்கிறாள் என்கிறான்.

உண்மையில், அக்கா என்பவள் தன் தம்பிக்கும், தங்கைக்கும் தாயாக இருக்க வேண்டுமே அன்றி இவளைப் போல பேயாக இருக்கக் கூடாது.

ஆமாம், தன் கெட்ட நோக்கத்தை வழக்கு மூலம் நிறைவேற்ற தன் தம்பியும், தங்கையும் தகாத உறவில் இருக்கிறார்கள் என்று தன் குடும்பத்தைப் பற்றி நீதிமன்றத்தில் சொல்பவள் எப்படிப்பட்ட விபச் சாரியாக இருப்பாள் என்பதை விவரித்துச் சொல்லத் தேவையில்லை.  

ஆமாம், வரதட்சினை கேட்டது உண்மையென்றால், அதுகுறித்து வழக்குப் பதிவு செய்திருக்க வேண்டும். அதற்கு காவலூழியர்கள் மறுத்து இருந்தால் கூட, கூடுதலாக தகாத உறவை காரணங்காட்டி, விவாகரத்துடன் கூடிய ஜீவனாம்சத்தை அல்லவா குடும்ப நல நீதிமன்றத்தின் மூலம் கேட்க வேண்டும்?

இவனது மாமா, (அக்காளின் கணவன்) கூட்டுறவு சங்கத்தில் இலட்சக்கணக்கில் கையாடல் செய்து சிக்கி இருக்கிறாராம்! 

தம்பியை மிரட்டி தன் வழிக்கு கொண்டு வர பூச்சி மருந்தை குடித்து, அரசு மருத்துவ மனையில் அனுமதியாகி, சட்ட விரோதமான சாட்சிய ஆவணங்களை வேறு தயார் செய்து இருக்கிறாள். இதனை தங்களுக்கு ஆதரவாக மனுவிலும் சொல்லி உள்ளது, மனுவை எழுதியப் பொய்யர்களின் மடத்தனம்.

ஆமாம், அவளே தயார் செய்துள்ள அரசு ஆவணத்தின் மூலம் தற்கொலைக்கு முயன்றதற்காக சிறைத் தண்டனைக்கு உள்ளாக வேண்டுமே! இப்படி ஒன்வொன்றாக கிளப்பி கிளறினால் அவரே சிறைக்குப் போக வேண்டி இருக்கும்!!

இவனே வாதாடினால், இதெல்லாம் நடக்க வாய்ப்புண்டு என்பதால், முதலில் இதையெல்லாம் எடுத்துச் சொல்லி வழக்கை வாபஸ் வாங்க அக்காளை எச்சரி. இல்லையேல், வழக்கில் நடத்திக் காட்டு என அறிவுரை வழங்கி உள்ளேன். 

இது உங்களுக்கும், உங்களைப் போன்ற பலருக்கும் கள்ளக் காதலில் சிக்கி தன் வாழ்வையம், மகளின் வாழ்வையும் சீரழிக்க நினைக்கும் பெண்கள் சிந்திக்கவும் பயன்படலாம் என்பதாலேயே கட்டுரையாக பகிர்ந்து உள்ளேன். 

பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

பத்திரிகை செய்திகள்

அறவழி நோட்டா

அறவழி நோட்டா
மகாத்மா போதித்த வாக்குரிமை!

நோட்டா: NOTA

நோட்டா: NOTA
விளக்கம்: EXPLANATION

நூல்களின் முகப்பு

Followers

முக்கியப் பக்கங்கள்

அடிப்படை சட்டங்கள்

  • 1. இந்திய சாசனம் 1950
  • 2. நீதிமன்ற சாசனம் 1872
  • 3. இந்திய தண்டனை சட்டம் 1860
  • 4. குற்ற விசாரணை முறை விதிகள் 1973
  • 5. உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908

நம் நூல்களைப் பற்றி

நீதியைத்தேடி.... நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் வரிசையில்...
1 குற்ற விசாரணைகள்
2 பிணை (ஜாமீன்) எடுப்பது
எப்படி?
3 சட்ட அறிவுக்களஞ்சியம்
4 சட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்
5 சாட்சியங்களைச் சேகரிப்பது
எப்படி?
6 கடமையைச் செய்!
பலன் கிடைக்கும்
7 மநு வரையுங்கலை!Recent Posts Widget

இந்நூல்கள் அனைத்தும் உங்களின் சட்ட விழிப்பறிவுணர்வுக்காக
மத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவியோடு
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பொது நூலகங்கள், மத்திய சிறைச்சாலைகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

சொந்தமாக தேவைப்படுவோர், உ(ய)ரிய நன்கொடையைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு வாட்ஸ்அப் எண் 09842909190 ஆகும்.

எல்லாப் பதிவுகளும்!

நம் தள வகைகள்

பயின்றோர் (20-08-16)