சமூகத்தின் சட்ட விழிப்பறிவுணர்வுக்கான தளம்

நீ வாழ... நீயே வாதாடு... வரவேற்பு வாழ்த்து!

No law, no life. Know law, know life! என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியத்தை உணர்ந்து, ‘‘நீதியைத்தேடி... சட்டப் பல்கலைக் கழகத்திற்கு’’ வருகை தந்துள்ள உங்களை வருக என வரவேற்று, உங்களுக்கான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்று பயனைப் பெறுக என வாழ்த்துகிறோம்!
முக்கிய அறிவிப்பு : இந்த இணையப்பக்கத்தை புதுப்பிக்கும் பணி நடந்துக் கொண்டிருப்பதால், சில பதிவுகள் அல்லது இணைப்புக்கள் கிடைக்காமல் போகலாம்!

Thursday, November 22, 2018

வங்கியில் கடன் வாங்கி சீரழியாதீர்; சிறைக்குப் போகாதீர்!வங்கியில் கடன் வாங்கவே கூடாது. அப்படி வாங்கி விட்டால், அவர்களது அடிமையாக அவர்கள் சொல்லும் தொகையைத்தான் கட்டியாக வேண்டும். 

அப்படி கட்டா விட்டால் சமரசம் பேசுவது போல பேசி எவ்வளவு கறக்க முடியுமோ கறப்பார்கள். ஆகையால், நம் பிரச்சினை இத்தோடு முடிந்தது என்று நினைப்போம். 

ஆனால், நம்மை பழி வாங்க நினைக்கும் வங்கி ஊழியர்கள், நாம் வாங்கிய கடனை செலுத்தாமல் இருக்கிறோம் என்ற காரணத்தோடு, நம் பெயரை சிபிலில் சேர்த்து விடுவார்கள். இது நாம் அவசரத்துக்கு லோன் வாங்கப் போகும் போதுதான் தெரியவரும். 

எனவே, பின்னும் அவர்கள் சொல்லும் பணத்தை கட்டி விட்டு மாதக்கணக்கில் காத்திருக்க வேண்டும். 

அப்பவாவது, நம் பெயரை சிபிலில் இருந்து நீக்குவார்களா என்றால் நீக்க மாட்டார்கள். நீங்கள் கட்ட வேண்டிய பணத்தை கட்டுங்கள் என்று சற்றும் பொறுப்பில்லாமல் பதில் தருவார்கள்.


இப்படியொரு பதிலை நம் நீதியைத்தேடி... வாசகருக்கு வங்கி தரவே, அதற்கு அவர் தந்த பதிலிது. 

புகார் பிரிவு ஊழியருக்கு வணக்கம். 

எச்எஸ்பிசி கன்ஸூமர் லோன் நம்பர் 042308437542 என்ற கணக்கில், நான் இறுதியாக செலுத்த வேண்டிய ரூபாய் 6176.86 பைசாவை கடந்த 17-08-2018 அன்று பேங்க் ஆப் பரோடா காசோலை மூலம் தங்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு விட்டது. 

இதற்கான பேங்க் ஆப் பரோடா அறிக்கையை கீழே கொடுத்து உள்ளேன். இதற்காக தங்களது வங்கியால் எனக்கு வழங்கப்பட்ட கடன் முடிவு அறிக்கையை கீழே கொடுத்துள்ளேன். 

இப்படி செலுத்தப்பட்ட நாளில் இருந்து 30 முதல் 45 நாட்களுக்குள் சிபில் அறிக்கையில் இருந்து என்னுடைய பெயர் அகற்றப்படும் என்று தெரிவித்தார்கள். ஆனால், இன்றோடு 105 நாட்கள் ஆகியும், என்னுடைய பெயர் சிபில் அறிக்கையில் இருந்து அகற்றப்படாமலேயே இருக்கிறது. 

இதுகுறித்து கடந்த 08-11-2018 அன்று மின்னஞ்சல் மூலம் தகவல் கேட்டிருந்தேன். அதற்கு தங்களிடம் இருந்து வந்த 13-08-2018 மின்னஞ்சல் பதிலில் மேற்சொன்னபடி நான் கட்டியுள்ள நிலுவை தொகையை கட்டவில்லை என்று தவறான தகவலை தந்து உள்ளீர்கள். 

எனவே, மேற்கண்ட ஆவணங்களை சரி பார்த்து எனது பெயரை உடனே சிபில் அறிக்கையில் இருந்து நீக்கிட தேவையான நடவடிக்கையை எடுக்க கோருகிறேன்.

குறிப்பு: வாசகரின் நலன் கருதி, மேற்சொன்ன அவரது வங்கி ஆவணங்களை பதிவிடவில்லை. 

இவர், 2007 ஆம் ஆண்டில் 40000 கடன் பெற்றார். இதில் பிராஸஸ் கட்டணம் 2500 போக மீதம் 37500 ஐ தந்தார்கள். இதில் மாதம் 2240 வீதம் 36 மாதங்கள் கட்ட வேண்டும். அப்படியானால், வாங்கிய 37500 க்கு 80640 கட்ட வேண்டும்.

உண்மையில், இந்த வட்டி விகிதங்கள் எல்லாம் தமிழ்நாடு கந்து வட்டி சட்டத்துக்கு உட்பட்ட தண்டனைக்கு உரிய குற்றம் என்று ஒரு வாசகருக்காக எச்டிஎஃப்சி வங்கிக்கு கடிதம் அனுப்பியதும் அவரிடம் வசூல் செய்ய வேண்டிய பணத்தை கூட அவ்வங்கி வசூலிக்கவில்லை

சரி, இவர் விசயத்துக்கு வருவோம். இவர் ஆறு மாதம் 13440 கட்டி விட்ட பின் மொத்தமாக கட்ட முயன்றபோது 35000 க்கு மேல் கட்ட சொல்லவே, அதுகுறித்து விவரம் கேட்டுள்ளார். 

எனவே, ஆறாயிரத்துக்கு மேல் குறைத்துக் கொண்டு கட்ட சொல்லவே கட்டி விட்டார். கட்டியதும் கடன் முடிந்தது என்று கடிதம் தராமல், செட்டில்டு என்று கொடுத்து உள்ளார்கள். செட்டில்டு என்றால், முடிந்து விட்டது என்ற பொருளில் இவரும் இருந்து விட்டார். 

ஆனால், வங்கி குறிப்பிட்டதாக சொல்வதோ, ‘‘இவ்வளவு தொகைதான் செட்டில்டு; செலுத்த வேண்டிய தொகை மீதம் இருக்கிறது’’ என்று பொருள்.

இதுபோன்ற நுட்பமான வாக்கியத்தின் பொருளால் தான் ஏமாற்றுவார்கள். ஆக, அப்போது கட்ட மறுத்த தொகையைத்தான் இப்போது சிபில் சேர்த்து கட்ட வைத்து உள்ளார்கள். 

அப்படி கட்டிய பின்னும், மீண்டும் கட்டவில்லை என்றும், கட்டு என்றும் சொல்கிறார்கள் என்பதால் தான் மேற்கண்ட விளக்க கடிதத்தை அனுப்பி உள்ளார்.

இப்படி தொழில் தொடங்கவும் பல பேர் கடன் வாங்குவதை வழக்கத்தில் வைத்திருக்கிறார்கள். இவர்கள் தொடங்கும் தொழில் நல்லபடியாக நடந்து விட்டால் பிரச்சினை ஏதுவும் இல்லை. ஆனால், நட்டம் ஏற்பட்டால் பல்வேறு பிரச்சினைகளை சந்திக்க நேரிடும் என்பது அவர்களுக்கு புரிவதில்லை.

இன்னும் சிலர், தொழிலில் நமக்கு ஏற்பட்ட நட்டத்தை வங்கிக்கு கணக்கு காட்டி விடலாம் என்று தப்பு கணக்கும் போடுகிறார்கள். அய்யோ பாவம்!

இலாபகரமாக நடந்துக் கொண்டிருக்கும் தொழிலில் மேலும் முதலீடு செய்ய கடன் வாங்குவதில் தவறில்லை. கடன் வாங்கிதான் தொழிலை தொடங்க வேண்டும் என்றால், பலமுறை யோசிக்க வேண்டும். அதுவும் வங்கியில் கடன் வாங்குவது என்றால், தொழில் நட்டம் ஏற்பட்டால் இருக்கும் சொத்தை விற்று கொடுக்க முடியும் என்ற நிலை இருக்க வேண்டும்.

தொழிலில் நட்டம் ஏற்பட்டவர்கள், வங்கி ஊழியர்களின் நெருக்கடி காரணமாக மேன்மேலும் நட்டம் ஏற்படாமல் தடுத்து தப்பிக்க நினைத்து வங்கிக் கடனில் வாங்கிய பொருட்களை வந்த விலைக்கு விற்று விட்டு, அந்தப் பணத்தை வங்கியில் செலுத்தி விடலாம் என தவறாமல் தவறாக நினைப்பது உண்டு. இது மாபெரும் தவறு.

நீங்கள் தொழில் தொடங்க வங்கிக் கடனில் வாங்கியப் பொருட்களை விற்காத வரை, வங்கி ஊழியர்கள் உங்களை கடனை கட்டச் சொல்லி நெருக்கடி கொடுப்பார்களே ஒழிய, சட்ட நடவடிக்கை எதையும் எடுக்க மாட்டார்கள். எடுக்கவும் இயலாது. எடுத்தால், சட்ட நடவடிக்கையில் அவர்களுக்கு சட்டப்படி தோல்வியே கிடைக்கும். 

ஆகையால், உங்களை எவ்வளவு தொந்தரவு செய்ய முடியுமோ அவ்வளவு செய்வார்கள். இதற்கு பயந்த தவறான ஆலோசனை அல்லது உங்களது புத்திசாலித் தனம் என நினைத்து கடனில் வாங்கியப் பொருட்களை விற்று கடனை கட்ட நினைத்தால், நீங்கள் சட்டப் பிரச்சினையில் சிக்கி சிறைக்கு போகவும் நேரிடும். 

ஆமாம், நீங்கள் கடன் வாங்கும் போது கண்ணை மூடிக் கொண்டு போடும்  ஒப்பந்தத்தில், இந்தக் கடன் உங்களது சரீரத்தையும் (உடலையும்) கட்டுப்படுத்தும் என்றும், இக்கடனில் வாங்கியப் பொருளை எக்காரணம் கொண்டும் விற்க கூடாது என்பதும் நிபந்தனையாக இருக்கும். 

இதையெல்லாம் கடன் வாங்குபவர்கள் யார் பார்க்கிறார்கள். ஆகையால் விற்று விட்டு இந்தியத் தண்டனை சட்டப்படி நம்பிக்கை மோசடி குற்றத்துக்கு ஆளாகி விடுவார்கள்.

ஆமாம், இப்படி திருத்தனியை சேர்ந்த நம் வாசகரான திரு. தட்சிணா மூர்த்தி என்ற படிப்பறிவு இல்லாத நெசவு தொழிலாளி (2003 ஆம் ஆண்டில் என நினைவு) சிறை தண்டனையை அனுபவித்தார். 

இதுபோன்ற வழக்குகள் காவல் துறையால் பதியப்படாமல், நேரடியாக நீதிமன்றத்தில் பதியப்படும். ஆகையால், வங்கி  நிதிபதியை சரிகட்டி விடுவார்கள். இப்படித்தான் மேற்சொன்ன நம் வாசகருக்கு நடந்தது.

ஆமாம், இவர் கட்டிய பணத்தை முறையாக வரவு வைக்காமல் மோசடி செய்த வங்கிக் களவாணி கயவர்கள், அதிலிருந்து தாங்கள் தப்பிக்க நிதிபதியை சரிகட்டி இவரை சிறைக்கு அனுப்பி விட்டார்கள். 

அவரோ மேற்கொண்டு போராடாமல், நம் கொள்கையின்படி ஆறு மாத சிறை தண்டனையை  நல்லதொரு அனுபவ பாடமாக எடுத்துக் கொண்டார். 

எனவே, கடன் வாங்கி கட்ட முடியாமல் விற்று கட்டும் முடிவில் உள்ளவர்கள், இதன் உண்மை தன்மையை அறிய விரும்பினால், வங்கியிடம் எழுத்து மூலமாக கேள்வி எழுப்பி பதிலைப் பெற்று சரி பார்த்துக் கொள்ளவும். அவ்வளவே!

பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

0 comments:

Post a Comment

அறவழி நோட்டா

அறவழி நோட்டா
மகாத்மா போதித்த வாக்குரிமை!

நோட்டா: NOTA

நோட்டா: NOTA
விளக்கம்: EXPLANATION

நியாயந்தான் சட்டம்!

நியாயந்தான் சட்டம்!
வக்கற்றவர்களின் கீழான பட்டம்!

நூல்களின் முகப்பு

Follow by Email

Followers

முக்கியப் பக்கங்கள்

அடிப்படை சட்டங்கள்

  • 1. இந்திய சாசனம் 1950
  • 2. நீதிமன்ற சாசனம் 1872
  • 3. இந்திய தண்டனை சட்டம் 1860
  • 4. குற்ற விசாரணை முறை விதிகள் 1973
  • 5. உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908

நம் நூல்களைப் பற்றி

நீதியைத்தேடி.... நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் வரிசையில்...
1 குற்ற விசாரணைகள்
2 பிணை (ஜாமீன்) எடுப்பது
எப்படி?
3 சட்ட அறிவுக்களஞ்சியம்
4 சட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்
5 சாட்சியங்களைச் சேகரிப்பது
எப்படி?
6 கடமையைச் செய்!
பலன் கிடைக்கும்
7 மநு வரையுங்கலை!Recent Posts Widget

இந்நூல்கள் அனைத்தும் உங்களின் சட்ட விழிப்பறிவுணர்வுக்காக
மத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவியோடு
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பொது நூலகங்கள், மத்திய சிறைச்சாலைகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

சொந்தமாக தேவைப்படுவோர், உ(ய)ரிய நன்கொடையைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு வாட்ஸ்அப் எண் 09842909190 ஆகும்.

எல்லாப் பதிவுகளும்!

நம் தள வகைகள்

பயின்றோர் (20-08-16)