நம் நாட்டில் நீதிபதிகள் என்று யாருமே இல்லை. இருக்கவும் முடியாது. எல்லோருமே கூலிக்கும், இதர சலுகைகளுக்கும் மாரடிக்கும் நிதிபதிகள்தான் என்பதற்கு அரிதிலும் அரிதான இதுபோன்ற செய்திகளே சான்று!
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இந்த நிதிபதியின் விவகாரத்தில், இவருடைய மேல்நிலை நிதிபதிகளுக்கு பங்கு போகவில்லை என்பதோடு, இந்நிதிபதி வெளி நாடுகளுக்கு சென்று செலவழித்து மகிழ்ந்ததை பொறுத்துக் கொள்ள முடியவில்லை போலும்!
இல்லையெனில், இதுபோன்று நிதிபதிகள் கைது நடவடிக்கை எல்லாம் நடக்கவே நடக்காத காரியம்.
சரி, இந்தச் செய்தியில் ஒரு மிகவும் நுட்பமான சட்டப் பிழை ஒன்று உள்ளது. அது என்ன என்பதுபற்றி சற்றே ஆராய்வோம்.
ஆமாம், குற்ற விசாரணை முறை விதிகள் 1973 இன் விதி 171 இன்படி, புகார் கொடுத்தவர் அல்லது சாட்சி நீதிமன்றத்துக்கு வருகை தந்து சாட்சியம் அளித்து தான் சொன்ன குற்றத்தை நிருபிக்க மறுக்கும் போது, அவர்களை கைது செய்து நீதிமன்றக் காவலில் வைத்து விசாரிக்க முடியும் அல்லது இனி தவறாது வருவேன் என எழுதிக் கொடுக்கும் கடப்பாட்டு ஆவணத்தின் மூலம் விடுவிக்கவும் முடியும்.
ஆமாம், நீதிமன்றக் காவல் என்றால் சிறையில் அடைப்பது. அப்படி சிறையில் அடைக்கப்பட்டு உள்ள ஒருவரை காவலூழியர்கள் விசாரணை செய்யவே முடியாது.
அப்படிச் செய்ய வேண்டும் என்றால், காவலூழியர்கள் தங்களின் கட்டுப்பாட்டில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டுமென நிதிபதியிடம் மனுத் தாக்கல் செய்து, அதனை ஏற்று குறிப்பிட்ட சில நாட்களுக்கு அனுமதி வழங்கினால், அதன் அடிப்படையில் சிறையில் இருந்து வெளிக் கொண்டு வந்து விசாரிக்க முடியும்.
இவ்விசாரணை முடிந்தப் பின் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த வேண்டும். பின் நிதிபதி சிறையில் அடைக்க உத்தரவிடுவார் அல்லது தேவையைப் பொறுத்து மீண்டும் சில நாட்கள் விசாரிக்க அனுமதி வழங்குவார்.
மொத்தத்தில் நீதிமன்றக் காவலில் உள்ள ஒருவரை, நீதிமன்றத்துக்கு வரவழைத்தோ அல்லது தானே சிறைக்கு சென்றோ ஒரு நிதிபதிதான் விசாரிக்க முடியுமே தவிர, காவலூழியர்கள் உள்ளிட்ட வேறு எவரும் விசாரிக்கவே முடியாது.
ஆனால், இந்தச் செய்தியில் குற்றஞ் சாற்றப்பட்ட ஓர் எதிரியை நீதிமன்றக் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டு உள்ளதாக சொல்லப்பட்டு உள்ளது. மேற்சொன்ன விளக்கத்தின்படி இப்படிச் செய்யவே முடியாது.
எனவே, இது செய்தியை எழுதியவரின் தவறே அன்றி, நிதிபதியின் தவறாக இருக்க வாய்ப்பில்லை என்றே சொல்ல முடியும் என்றாலும், சட்ட விரோதமாக செயல்படுவதையே வழக்கமாக கொண்டுள்ள நிதிபதிகளை நம்பி உறுதியாகச் சொல்ல முடியாது.

பகிர்ந்து கொள்ள
வாசகர்களின் கவனத்திற்கு...
இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.
இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.
சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.
0 comments:
Post a Comment