சமூகத்தின் சட்ட விழிப்பறிவுணர்வுக்கான தளம்

நீ வாழ... நீயே வாதாடு... வரவேற்பு வாழ்த்து!

No law, no life. Know law, know life! என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியத்தை உணர்ந்து, ‘‘நீதியைத்தேடி... சட்டப் பல்கலைக் கழகத்திற்கு’’ வருகை தந்துள்ள உங்களை வருக என வரவேற்று, உங்களுக்கான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்று பயனைப் பெறுக என வாழ்த்துகிறோம்!
முக்கிய அறிவிப்பு : இந்த இணையப்பக்கத்தை புதுப்பிக்கும் பணி நடந்துக் கொண்டிருப்பதால், சில பதிவுகள் அல்லது இணைப்புக்கள் கிடைக்காமல் போகலாம்!

Thursday, November 22, 2018

வங்கியில் கடன் வாங்கி சீரழியாதீர்; சிறைக்குப் போகாதீர்!வங்கியில் கடன் வாங்கவே கூடாது. அப்படி வாங்கி விட்டால், அவர்களது அடிமையாக அவர்கள் சொல்லும் தொகையைத்தான் கட்டியாக வேண்டும். 

அப்படி கட்டா விட்டால் சமரசம் பேசுவது போல பேசி எவ்வளவு கறக்க முடியுமோ கறப்பார்கள். ஆகையால், நம் பிரச்சினை இத்தோடு முடிந்தது என்று நினைப்போம். 

ஆனால், நம்மை பழி வாங்க நினைக்கும் வங்கி ஊழியர்கள், நாம் வாங்கிய கடனை செலுத்தாமல் இருக்கிறோம் என்ற காரணத்தோடு, நம் பெயரை சிபிலில் சேர்த்து விடுவார்கள். இது நாம் அவசரத்துக்கு லோன் வாங்கப் போகும் போதுதான் தெரியவரும். 

எனவே, பின்னும் அவர்கள் சொல்லும் பணத்தை கட்டி விட்டு மாதக்கணக்கில் காத்திருக்க வேண்டும். 

அப்பவாவது, நம் பெயரை சிபிலில் இருந்து நீக்குவார்களா என்றால் நீக்க மாட்டார்கள். நீங்கள் கட்ட வேண்டிய பணத்தை கட்டுங்கள் என்று சற்றும் பொறுப்பில்லாமல் பதில் தருவார்கள்.


இப்படியொரு பதிலை நம் நீதியைத்தேடி... வாசகருக்கு வங்கி தரவே, அதற்கு அவர் தந்த பதிலிது. 

புகார் பிரிவு ஊழியருக்கு வணக்கம். 

எச்எஸ்பிசி கன்ஸூமர் லோன் நம்பர் 042308437542 என்ற கணக்கில், நான் இறுதியாக செலுத்த வேண்டிய ரூபாய் 6176.86 பைசாவை கடந்த 17-08-2018 அன்று பேங்க் ஆப் பரோடா காசோலை மூலம் தங்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு விட்டது. 

இதற்கான பேங்க் ஆப் பரோடா அறிக்கையை கீழே கொடுத்து உள்ளேன். இதற்காக தங்களது வங்கியால் எனக்கு வழங்கப்பட்ட கடன் முடிவு அறிக்கையை கீழே கொடுத்துள்ளேன். 

இப்படி செலுத்தப்பட்ட நாளில் இருந்து 30 முதல் 45 நாட்களுக்குள் சிபில் அறிக்கையில் இருந்து என்னுடைய பெயர் அகற்றப்படும் என்று தெரிவித்தார்கள். ஆனால், இன்றோடு 105 நாட்கள் ஆகியும், என்னுடைய பெயர் சிபில் அறிக்கையில் இருந்து அகற்றப்படாமலேயே இருக்கிறது. 

இதுகுறித்து கடந்த 08-11-2018 அன்று மின்னஞ்சல் மூலம் தகவல் கேட்டிருந்தேன். அதற்கு தங்களிடம் இருந்து வந்த 13-08-2018 மின்னஞ்சல் பதிலில் மேற்சொன்னபடி நான் கட்டியுள்ள நிலுவை தொகையை கட்டவில்லை என்று தவறான தகவலை தந்து உள்ளீர்கள். 

எனவே, மேற்கண்ட ஆவணங்களை சரி பார்த்து எனது பெயரை உடனே சிபில் அறிக்கையில் இருந்து நீக்கிட தேவையான நடவடிக்கையை எடுக்க கோருகிறேன்.

குறிப்பு: வாசகரின் நலன் கருதி, மேற்சொன்ன அவரது வங்கி ஆவணங்களை பதிவிடவில்லை. 

இவர், 2007 ஆம் ஆண்டில் 40000 கடன் பெற்றார். இதில் பிராஸஸ் கட்டணம் 2500 போக மீதம் 37500 ஐ தந்தார்கள். இதில் மாதம் 2240 வீதம் 36 மாதங்கள் கட்ட வேண்டும். அப்படியானால், வாங்கிய 37500 க்கு 80640 கட்ட வேண்டும்.

உண்மையில், இந்த வட்டி விகிதங்கள் எல்லாம் தமிழ்நாடு கந்து வட்டி சட்டத்துக்கு உட்பட்ட தண்டனைக்கு உரிய குற்றம் என்று ஒரு வாசகருக்காக எச்டிஎஃப்சி வங்கிக்கு கடிதம் அனுப்பியதும் அவரிடம் வசூல் செய்ய வேண்டிய பணத்தை கூட அவ்வங்கி வசூலிக்கவில்லை

சரி, இவர் விசயத்துக்கு வருவோம். இவர் ஆறு மாதம் 13440 கட்டி விட்ட பின் மொத்தமாக கட்ட முயன்றபோது 35000 க்கு மேல் கட்ட சொல்லவே, அதுகுறித்து விவரம் கேட்டுள்ளார். 

எனவே, ஆறாயிரத்துக்கு மேல் குறைத்துக் கொண்டு கட்ட சொல்லவே கட்டி விட்டார். கட்டியதும் கடன் முடிந்தது என்று கடிதம் தராமல், செட்டில்டு என்று கொடுத்து உள்ளார்கள். செட்டில்டு என்றால், முடிந்து விட்டது என்ற பொருளில் இவரும் இருந்து விட்டார். 

ஆனால், வங்கி குறிப்பிட்டதாக சொல்வதோ, ‘‘இவ்வளவு தொகைதான் செட்டில்டு; செலுத்த வேண்டிய தொகை மீதம் இருக்கிறது’’ என்று பொருள்.

இதுபோன்ற நுட்பமான வாக்கியத்தின் பொருளால் தான் ஏமாற்றுவார்கள். ஆக, அப்போது கட்ட மறுத்த தொகையைத்தான் இப்போது சிபில் சேர்த்து கட்ட வைத்து உள்ளார்கள். 

அப்படி கட்டிய பின்னும், மீண்டும் கட்டவில்லை என்றும், கட்டு என்றும் சொல்கிறார்கள் என்பதால் தான் மேற்கண்ட விளக்க கடிதத்தை அனுப்பி உள்ளார்.

இப்படி தொழில் தொடங்கவும் பல பேர் கடன் வாங்குவதை வழக்கத்தில் வைத்திருக்கிறார்கள். இவர்கள் தொடங்கும் தொழில் நல்லபடியாக நடந்து விட்டால் பிரச்சினை ஏதுவும் இல்லை. ஆனால், நட்டம் ஏற்பட்டால் பல்வேறு பிரச்சினைகளை சந்திக்க நேரிடும் என்பது அவர்களுக்கு புரிவதில்லை.

இன்னும் சிலர், தொழிலில் நமக்கு ஏற்பட்ட நட்டத்தை வங்கிக்கு கணக்கு காட்டி விடலாம் என்று தப்பு கணக்கும் போடுகிறார்கள். அய்யோ பாவம்!

இலாபகரமாக நடந்துக் கொண்டிருக்கும் தொழிலில் மேலும் முதலீடு செய்ய கடன் வாங்குவதில் தவறில்லை. கடன் வாங்கிதான் தொழிலை தொடங்க வேண்டும் என்றால், பலமுறை யோசிக்க வேண்டும். அதுவும் வங்கியில் கடன் வாங்குவது என்றால், தொழில் நட்டம் ஏற்பட்டால் இருக்கும் சொத்தை விற்று கொடுக்க முடியும் என்ற நிலை இருக்க வேண்டும்.

தொழிலில் நட்டம் ஏற்பட்டவர்கள், வங்கி ஊழியர்களின் நெருக்கடி காரணமாக மேன்மேலும் நட்டம் ஏற்படாமல் தடுத்து தப்பிக்க நினைத்து வங்கிக் கடனில் வாங்கிய பொருட்களை வந்த விலைக்கு விற்று விட்டு, அந்தப் பணத்தை வங்கியில் செலுத்தி விடலாம் என தவறாமல் தவறாக நினைப்பது உண்டு. இது மாபெரும் தவறு.

நீங்கள் தொழில் தொடங்க வங்கிக் கடனில் வாங்கியப் பொருட்களை விற்காத வரை, வங்கி ஊழியர்கள் உங்களை கடனை கட்டச் சொல்லி நெருக்கடி கொடுப்பார்களே ஒழிய, சட்ட நடவடிக்கை எதையும் எடுக்க மாட்டார்கள். எடுக்கவும் இயலாது. எடுத்தால், சட்ட நடவடிக்கையில் அவர்களுக்கு சட்டப்படி தோல்வியே கிடைக்கும். 

ஆகையால், உங்களை எவ்வளவு தொந்தரவு செய்ய முடியுமோ அவ்வளவு செய்வார்கள். இதற்கு பயந்த தவறான ஆலோசனை அல்லது உங்களது புத்திசாலித் தனம் என நினைத்து கடனில் வாங்கியப் பொருட்களை விற்று கடனை கட்ட நினைத்தால், நீங்கள் சட்டப் பிரச்சினையில் சிக்கி சிறைக்கு போகவும் நேரிடும். 

ஆமாம், நீங்கள் கடன் வாங்கும் போது கண்ணை மூடிக் கொண்டு போடும்  ஒப்பந்தத்தில், இந்தக் கடன் உங்களது சரீரத்தையும் (உடலையும்) கட்டுப்படுத்தும் என்றும், இக்கடனில் வாங்கியப் பொருளை எக்காரணம் கொண்டும் விற்க கூடாது என்பதும் நிபந்தனையாக இருக்கும். 

இதையெல்லாம் கடன் வாங்குபவர்கள் யார் பார்க்கிறார்கள். ஆகையால் விற்று விட்டு இந்தியத் தண்டனை சட்டப்படி நம்பிக்கை மோசடி குற்றத்துக்கு ஆளாகி விடுவார்கள்.

ஆமாம், இப்படி திருத்தனியை சேர்ந்த நம் வாசகரான திரு. தட்சிணா மூர்த்தி என்ற படிப்பறிவு இல்லாத நெசவு தொழிலாளி (2003 ஆம் ஆண்டில் என நினைவு) சிறை தண்டனையை அனுபவித்தார். 

இதுபோன்ற வழக்குகள் காவல் துறையால் பதியப்படாமல், நேரடியாக நீதிமன்றத்தில் பதியப்படும். ஆகையால், வங்கி  நிதிபதியை சரிகட்டி விடுவார்கள். இப்படித்தான் மேற்சொன்ன நம் வாசகருக்கு நடந்தது.

ஆமாம், இவர் கட்டிய பணத்தை முறையாக வரவு வைக்காமல் மோசடி செய்த வங்கிக் களவாணி கயவர்கள், அதிலிருந்து தாங்கள் தப்பிக்க நிதிபதியை சரிகட்டி இவரை சிறைக்கு அனுப்பி விட்டார்கள். 

அவரோ மேற்கொண்டு போராடாமல், நம் கொள்கையின்படி ஆறு மாத சிறை தண்டனையை  நல்லதொரு அனுபவ பாடமாக எடுத்துக் கொண்டார். 

எனவே, கடன் வாங்கி கட்ட முடியாமல் விற்று கட்டும் முடிவில் உள்ளவர்கள், இதன் உண்மை தன்மையை அறிய விரும்பினால், வங்கியிடம் எழுத்து மூலமாக கேள்வி எழுப்பி பதிலைப் பெற்று சரி பார்த்துக் கொள்ளவும். அவ்வளவே!

பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

Wednesday, November 21, 2018

புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் துயரை துடைக்க ஆதரவு தருக!இதற்கு முன்பாக இயற்கை சீற்றங்களின் போது இருக்க வேண்டிய புத்திசாலித்தனம் என்ன? என்று கட்டுரையை எழுதி உள்ளோம்.  


இப்படி இயற்கை சீற்றத்தால் பாதிக்கப் படுபவர்களுக்கு ஏதாவது உதவ  வேண்டுமே என்ற எண்ணம் மனதில் ஓடிக் கொண்டிருந்த நிலையில், சில ஆர்வலர்கள் நிதி கொடுக்க  நம்பிக்கையானவர்களை பரிந்துரைக்க  கோரினார்கள். 

ஆகையால், நாமே களமிறங்கி செய்தால்தான் உருப்படியாக எதையாவது செய்து தரமுடியும் என்று எண்ணி நம் வாசகர்கள் உள்ளிட்ட ஆர்வலர்களிடம்  இருந்து நிதியுதவி பெற்று, அதனை கொண்டு குடிசை வாழ் மக்களுக்கு இயன்ற நிதியை பகிர்ந்தளிப்பது என்ற முடிவோடு இப்படியொரு பதிவை 21-11-2018 அன்று காலை முகநூல், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்தோம். 

கேர் சொசைட்டியின் (CARE Society - Hosur) அறிவிப்பு...

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உதவிட, நம்பிக்கையானவர்கள் யாரும் உள்ளார்களா என வாசகர்கள் சிலர் கேட்கிறார்கள். 

ஆகையால், அங்கு கொஞ்சம் நிலைமை சீரான பின்பு நாங்களே செய்ய முடிவு எடுத்துள்ளோம்.

அதாவது நேரடியாக சென்று, வசதியற்றவர்களை கண்டறிந்து இயன்ற சிறு சிறு நிதியை கொடுப்பது என்பதே அது. பொருட்களாக கொண்டு சென்று  வழங்குவதை விட, இப்படி நிதியாக கொடுக்கும்போது, அவர்களது தேவைக்கு ஏற்ப பயன்படுத்திக் கொள்வார்கள் என்று நம்புகிறோம்.

எனவே, விருப்பம் உள்ளவர்கள் 9842909190 என்ற வாட்ஸ்அப் அல்லது டெலிகிராம் எண்ணில் தகவல் சொல்லலாம். கேர் சொசைட்டியின் பங்களிப்பாக முதற்கட்டமாக சுமார் 20, 000 (இருபதாயிரம் மட்டும்) ஒதுக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

கஜா புயலுக்கான நிதியுதவி (gaja cyclone donation) என்பதை  மறக்காமல் குறிப்பிட்டு நன்கொடையை செலுத்த வேண்டிய வங்கிக் கணக்கு  எண்...

Account Name : CARE Society

Account Number : 768307417

Account Type : Saving Bank Account

IFSC code : IDIB000H011

Bank Name : Indian Bank, Hosur – 635109

நன்கொடை செலுத்தியப் பின் அதுகுறித்த தகவலை 9842909190 என்ற வாட்ஸ்அப் எண்ணில் முகவரியுடன் தெரிவித்தால், நன்கொடைக்கான உ(ய)ரிய இரசீது அனுப்பி வைக்கப்படும்.

இந்த அறிவிப்பை தொடர்ந்து நீதியைத்தேடி... வாசகர்கள் உள்ளிட்ட ஆர்வலர்கள் பலர் நிதியுதவி அளித்து வருகின்றனர். 

இதன் ஒரு பகுதியாக, கட்டுமானத்தில் நல்லதொரு அனுபவம் உள்ள அன்பர் திரு. பிரபு அடுத்தடுத்து மழை மற்றும் புயல் இருப்பதால், அவை முடிவுற்றதும் உருப்படியாக ஏழை மக்களுக்கு அவர்கள் சேகரித்து தரும் பொருளை வைத்து, (பயலால் விழுந்துள்ள மரங்கள், தென்னை மட்டைகள் உள்ளிட்டவற்றை) கூலி வாங்காமல் நம் உழைப்பில் வீடு கட்டி கொடுக்கலாம் என்ற ஆலோசனையை முன் வைத்துள்ளார். இதனை வரவேற்று ஏற்றுக் கொண்டுள்ளோம்.  

இவரது கட்டுமான முயற்சி எந்த அளவிற்கு ஆரோக்கியமானது என்று நமக்கான வீட்டை நாமே திட்டமிட்டு கட்டலாம் என்ற கட்டுரையில் எழுதி உள்ளோம். 

ஏனெனில், சாதாரணமாகவே கூலியை அதிகமாக கேட்பவர்கள், இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையில் இரண்டு மடங்காக கேட்பார்கள். அவர்களுக்கும் அதிகப் பணம் தேவைப்படுமே!

ஆகையால் அரசு தரும் நிவாரண நிதிகள் கட்டுமான கூலிக்கே செலவாகி விடும் என்பதோடு வேலை செய்ய தேவையான ஆட்கள் கிடைப்பதும் கடினம் அல்லவா? 

ஆகையால், இந்த முடிவே வீட்டை இழந்த மக்களுக்கு நல்லதொரு பயனை அளிக்கும் என எண்ணி உள்ளோம். எனவே, இதற்கான கட்டுமான களப்பணியில் இறங்க தற்போது பத்து பேர் தயாராக உள்ளோம். கூடுதலாக நாற்பது நபர்கள் வரை தேவை.  

இவர்கள் வெல்டிங், எலக்ட்ரிக்கல் ஓயரிங், கட்டுமானம், கீற்று முடைதல் மற்றும் கட்டுதல் போன்றவற்றில் ஈடுபடுபவர்களாக இருந்தால் சிறப்பு. எடுபிடி வேலைகளுக்கு அந்தந்த வீட்டு ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளையே பயன்படுத்திக் கொள்ள எண்ணி உள்ளோம். 

இவை அனைத்தையும் மழை, புயல் எல்லாம் ஓய்ந்த பிறகே சரியாக செய்ய முடியும். எனவே, இதற்கு தக்கவாறு நிவாரணப் பணியில் ஈடுபட விரும்புபவர்கள் தனிநபராக அல்லது குழுவாக இருந்தாலும் சரி!

தங்களின் தொழில் சார்ந்த உங்களுக்கு பழக்கமான கையடக்கம் முதல் பையடக்கம் வரையிலான தொழிலுக்கு அத்தியாவசிய கருவிகளுடனும், தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் வேலை செய்வதற்கு ஏற்ற துணிமணிகளுடனும் பத்து முதல் பதினைந்து நாட்களை வரை தங்கும்படி வந்தால் போதும். 

இதற்கும் மேலான கருவிகள், வெல்டிங் மிஷின்கள் உள்ளிட்டவற்றை நாங்கள் ஏற்பாடு செய்து கொள்வோம். 

உணவு, தங்குமிடம், பத்து மணி நேர ஓய்வு நேரம் ஆகியவை எந்தக் குறையும் இன்றி வழங்கப்படும். 

குறைந்தபட்ச இலக்காக ஐம்பது குடிசை மற்றும் ஓட்டு வீடுகளுக்கு மட்டுமே திட்டமிட்டு உள்ளோம். உங்களிடம் இருந்து கிடைக்கும் நல்ஆதரவைப் பொருத்து வீட்டின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், தங்கும் நாட்களின் எண்ணிக்கையும் அதிகரிப்போம்.  

இதற்காக நிதி அல்லது இயன்ற பொருட்களை வழங்கிட விரும்புவோர் அது குறித்தும் தகவல் சொன்னால், அதனை சேர்க்க வேண்டிய களப்பணிக்கு அருகில் உள்ள இடத்தை சொல்லுவோம். 

இவை அனைத்துக்குமான ஒரே வாட்ஸ்அப் அல்லது டெலிகிராம் எண் 9842909190 மட்டுமே. பங்களிப்பு நிதியை செலுத்த வேண்டியது மேற்சொன்ன கேர் சொசைட்டியின் வங்கிக் கணக்கு மட்டுமே! 

நாங்கள் பல்வேறு பணிகளில் ஈடுபட்டுள்ள காரணத்தால், அழைப்பை தவிர்க்கவும். வாட்ஸ்அப் அல்லது டெலிகிராம் வழியில் மட்டும் தகவல் சொல்லவும். 

உலகத்திற்கே தங்களின் அயராத உழைப்பால் உணவளித்துக் கொண்டிருக்கும் விவசாயிகளின் துயரை துடைக்க, நாம் எண்ணிய செயலை எண்ணியபடி முடிக்க உங்களால் இயன்ற ஆதரவை தருக; உங்களுக்கு தெரிந்த அன்பர்களின் ஆதரவையும் பெற்றுத் தருக!! 

முக்கிய குறிப்புகள்: குழுவாக வர விரும்புபவர்கள் தங்களுக்கே உண்டான பிரத்தியேக உடைகளை (யூனிபார்ம்) கட்டாயம் தவிர்க்க வேண்டும். மற்ற விளம்பரங்களையும் தவிர்க்க வேண்டும். 

ஆமாம், பல்வேறு பிரச்சினைகளை தடுக்க அந்த இடத்திற்கு நாம் போனதோ, உதவி செய்ததோ, வந்ததோ தெரியாத வகையில் நடந்து கொள்ள வேண்டும்.

உடல் பலகீனம், தினசரி மருந்து மாத்திரைகளை உட்கொள்பவர்கள் உதவிக்கு வருவதை கட்டாயமாக தவிர்க்கவும். வயதுக்கு தடையில்லை. 

உதவிக்கு வருபவர்கள் தங்களின் தொடர் வேலை வாய்ப்புகளை விட்டு விட்டோ அல்லது தங்களுக்கு கிடைக்கும் கூலியை விட்டு விட்டோ வரவேண்டாம். பொருளாதார ரீதியாக நல்ல நிலையில் உள்ளோர் மட்டும் வரவும். 

தொடர்ந்து பத்துப் பதினைந்து நாட்களுக்கு இருக்க இயலாது என்பவர்கள் தனக்கான மாற்று அன்பர்களை ஏற்பாடு செய்துக் கொண்டு செயலை முடிக்க திட்டமிடலாம். 

இதில், அவ்வப்போது தேவைக்கு ஏற்ப திருத்தங்கள் செய்யப்படும்.

பிற்சேர்க்கை: 23-11-2018

விரைவில் நிவாரணப் பணி தொடங்கும்!

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நம்மால் இயன்ற நிவாரணப் பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டு இருந்ததை இந்தக் கட்டுரையில் படித்து அறியலாம்.

நாம் திட்டமிட்டபடி, பரவலாக மழை ஓய்ந்துள்ளதாலும், இதே நிலை நீடித்தாலும் எதிர்வரும் திங்கள் 26-11-2018 அன்று நேரடியாக சென்று எந்த இடத்தில் நம் களப்பணியை செய்யலாம், மக்களுக்கு எந்த மாதிரியான நிவாரணப் பணிகளை செய்ய வேண்டி உள்ளது என்பதை எல்லாம் ஆராய்ந்து முடிவு செய்து அறிவிக்க உள்ளோம்.

மேலும், நிவாரணப் பணிக்கு வருபவர்களுக்கான தங்குமிட வசதி உள்ளிட்டவற்றையும் ஏற்பாடு செய்து விட்டு சில நாட்களில், திட்டமிட்டபடி நம் வேலையை தொடங்க உள்ளோம்.

எனவே, இதற்கான உதவிகளை செய்ய நினைப்பவர்கள் விரைந்து செய்திடுமாறு அன்புடன் கோருகிறோம். நன்றி!

பிற்சேர்க்கை: 25-11-2018

திட்டமிட்டபடி நாளை தொடங்குகிறோம்!

ஏற்கெனவே திட்டமிட்டபடி, கஜா புயலில் சேதமடைந்த கட்டுமானப் பணியை எங்கு மேற்கொள்வது என்பது குறித்து ஆய்வு செய்வதற்கான நான்கு பேர் கொண்ட நம் குழு நாளை புறப்படுகிறது.

இக்குழு இரண்டு நாட்கள் சர்வே எடுத்து எங்கு கட்டுமானப் பணியை தீர்மானிப்பது என முடிவெடுத்து, அப்பகுதி மக்களுக்கு அறிவிக்கும். 

பின் சில நாட்கள் கழித்து, ஆர்வலர்களுக்கான உணவு, உறைவிடம் ஆகியவற்றை தயார் செய்துக் கொண்டு கட்டுமானப் பணியை தொடங்கும்.

அரசின் நிதியுதவி மக்களுக்கும் கிடைக்க வேண்டும். அது கிடைத்தால் அவர்களும் தேவைக்கு ஏற்ப கட்டுமானத்துக்கு தேவையான மூலப் பொருட்களை வாங்க முடியும்.

பொருளுதவி அல்லது நிதியுதவி என்றால், பெரிய அளவில்தான் செய்ய வேண்டும் என்றும், அது நம்மால் முடியாத காரியம் என்றே பலரும் நினைக்கிறார்கள். 

காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும் 
ஞாலத்தின் மாணப் பெரிது. (குறள் - 102)

உதவி எவ்வளவு சிறிதாக இருந்தாலும், அது செய்யப்படும் காலத்தால் அதுதான் மிகப்பெரியது என்(கி)றார், வள்ளுவர். எனவே, உங்களுக்கு கிடைத்த இதுபோன்ற எந்தவொரு நல்வாய்ப்பையும் பயன் படுத்திக் கொள்ளுங்கள். 

நாம் மேற்கொள்ளும் இப்பணி மிகச்சிறப்பாக நடைபெற வேண்டுமென்று வேண்டி, இக்களப் பணியில் ஈடுபட உள்ளோரையும், ஏற்கெனவே ஈடுபட்டுக் கொண்டு உள்ளோரையும் வாழ்த்துங்கள்!

பிற்கேர்க்கை 28-11-2018

கஜாவில் நம் கள ஆய்வும், அடுத்தக் களப்பணியும்!

திட்டமிட்டபடி 26-11-2018 அன்று திருத்துறைப்பூண்டிக்கு அடுத்து 15 கிலோ மீட்டர் தூரத்தில் புறப்பகுதியாக உள்ள உம்பளச்சேரி மற்றும் கீழ உம்பளச்சேரி ஆகிய பகுதிகளில் நம் குழு பாதிக்கப்பட்ட மக்களை சந்திந்து ஆய்வு செய்தது. இந்தப் பகுதியில் சுமார் 750 வீடுகள் இருப்பதாக தகவல் தெரிவித்தனர். 

இதுபற்றிய நம் தொகுப்பு காணொலியை காண விரும்பினால், இங்கு சொடுக்கி காணலாம். இது போலவே நம் நிவாரண களப்பணி முடிந்ததும், அதுகுறித்த காணொலியும் பதிவேற்றப்படும். 

அதில், கனத்தப் புயல் காரணமாக தென்னை ஓலைகள் எல்லாம் பாழாகி விட்டதால், கீற்றுகள் கிடையாது. இதுபோலவே ஓடுகளும் கிடையாது. ஆகையால், நம்முடைய கட்டுமான திட்டம் தற்போதைக்கு சாத்தியம் இல்லை என்பது புரிந்தது. இவை சாத்தியமாக வருடங்களும் ஆகலாம்.

எனவே இப்போது அப்பகுதி மக்களுக்கு உள்ள ஒரே வழி, தார்ப்பாயை கொண்டு வீட்டை அமைத்துக் கொள்வது மட்டுமே. ஆகையால், தார்ப்பாய், படுக்க பாய், போர்வை, சோலாரில் எரியக்கூடிய விளக்கு ஆகியவற்றோடு இயன்றால் உணவுப் பொருட்களில் பருப்பையும் எண்ணையும் தர கோரினார்கள். இதுவே, எந்தவொரு புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சேர்ந்தவர்களுக்கும் இவையே தற்போது தேவையான நிவாரணமாக இருக்கும் என்பதால், நிவாரண உதவியில் ஈடுபடுகிறவர்கள் இதனை முக்கியமாக கவனத்தில் கொள்ளவும். அவர்களிடம் முடிந்த வரையில் உதவி செய்ய முயல்கிறோம் என உறுதி அளித்துள்ளோம். அதன் பிறகு அரசு தார்ப்பாய் வழங்குவதாக தெரிய வந்துள்ளது. எனவே, மற்றதில் முடிந்ததை நாம் வழங்கினால் போதும். 

இந்த அடிப்படையில் ஒரு வீட்டுக்கு தரமான பெரிய படுக்கை கோரைப் பாய் ஒன்று (150), இரண்டு போர்வைகள் (100), சோலார் விளக்கு (150), துவரம் பருப்பு இரண்டு கிலோ (130 - 140), பாமாயில் எண்ணை ஒரு கிலோ (68) என அங்குள்ள 750 வீட்டுகளுக்கும் வழங்கலாம் என முடிவு செய்துள்ளோம். 

ஆமாம், கடந்த இரண்டு நாளாக நாங்கள் மேற்கொண்ட பல்வேறு முயற்சிகளின் பயனாகவே இந்த விலைக்கு கிடைக்க இருக்கிறது. உங்களுக்கு தெரிந்து இதை விட குறைவாக கிடைக்கும் என்றால், தாராளமாக எங்களுக்கு தெரியப் படுத்துங்கள். இந்த நோக்கத்திற்காகவே இத்தோராய விலையை குறிப்பிட்டு உள்ளோம். 

எனவே, உங்களுக்கு தெரிந்தால் நம்முடைய 9842909190 என்ற வாட்ஸ்அப் எண்ணில் தகவல் சொல்லவும்.  

இதற்காக ஒரு  குடும்பத்திற்கு குறைந்தபட்சம் 600 வரை செலவாகும். இதுவும் கூட, கஜாவுக்கு உதவி செய்யும் நோக்கத்தோடு பொருட்களை கொடுக்க விரும்பும் அன்பர்களின் அன்பால் மட்டுமே. கொண்டு சேர்க்கும் செலவு கூடுதலாகும். 

எனவே, இதில் உங்களால் எத்தனை வீட்டிற்கு உதவ முடியும் என்பதை கணக்கிட்டு நிதியுதவி அல்லது மேற்சொன்ன பொருளுதவியை வழங்கலாம்.

மிக முக்கியமாக ஏற்கெனவே சிறு சிறு பங்களிப்பு தொகையை வழங்கியவர்கள் ஒரு வீட்டிற்கு கூட உதவவில்லையே என கருத வேண்டாம். இனி இப்படியே உதவ முன்வருபவர்களுங்கூட கருத வேண்டாம்.

நாம் வழங்க நினைக்கும் இப்பொருளுதவிகளை அதிகபட்சம் ஒரு வாரத்திற்குள் வழங்கிட இருப்பதால், உங்களால் முடிந்த உதவியை 02-12-2018 அன்று நள்ளிரவுக்குள் செய்திடுங்கள். 

அப்போதுதான் அடுத்தநாள் நமக்கு வந்துள்ள நன்கொடைக்கு எத்தனை குடும்பத்திற்கு வாங்க, வழங்க முடியும் என்பதை எல்லாம் கணக்கிட்டு வாங்கிடவும், வழங்கிடவும் ஏதுவாக இருக்கும். அவ்வளவே!

பிற்சேர்க்கை நாள் 05-12-2018

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்மால் இயன்ற நிவாரண உதவிகளுக்காக நிதி திரட்டும் பணி கடந்த 02-12-2018 அன்றோடு முடிவடைந்தது.

இதற்கு கேர் சொசைட்டியின் பங்களிப்புத் தொகை ரூபாய் 20, 000 ஐ சேர்த்து மொத்தமாக 1, 09, 938. 00 (ஒரு இலட்சத்து ஒன்பதாயிரத்து, தொள்ளாயிரத்து முப்பத்தி எட்டு ரூபாய்) வசூல் ஆகியுள்ளது. 

நம்மோடு இணைந்து பணியாற்ற உள்ள ஜீவாதார் மற்றும் ஆரோக்கியான் சார்பாக 1, 20, 000. 00 (ஒரு இலட்சத்து இருபதாயிரம் ரூபாய்) வசூல் ஆகியுள்ளது.

இதில் சமூக பொறுப்புணர்வோடு பங்களிப்பு தொகை செலுத்திய அனைவருக்கும் எங்களின் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். 

முன்பு திட்டமிட்டபடி, இந்த நிதியைக் கொண்டு குறைந்தது சுமார் நாநூறு குடும்பங்களுக்கு உதவிட முடியும். இந்த உதவியை செய்ய இன்று 05-12-2018 அன்று திட்டமிடப்பட்டு இருந்தது. இதற்காக வாங்க உள்ள பொருட்களுக்கு முன்பணமும் செலுத்தப்பட்டு விட்டது.


ஆனால், மீண்டும் மழை குறுக்கிட்டு உள்ளதாலும், படத்தில் உள்ளபடி எதிர்வரும் 08-12-2018 வரை மழை எச்சரிக்கை விடப்பட்டு உள்ளதாலும், நம் கொண்டு சென்று வழங்க உள்ள நிவாரணப் பொருட்களை, எந்தவித சேதாரமும் இன்றி சேர்க்க வேண்டிய பொறுப்பு நமக்கு இருப்பதாலும் அடுத்த வாரமே நம் பயணத்தை தொடங்க முடியும் என எண்ணுகிறோம்.

இந்நிவாரண உதவிகளை வழங்கியதும், அதுபற்றிய முழு தகவல்களையும் தெரியப்படுத்துகிறோம்.

பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

Tuesday, November 20, 2018

இயற்கை சீற்றங்களின் போது இருக்க வேண்டிய புத்திசாலித்தனம் என்ன?ஆண்டுக்கு ஒரு முறையோ அல்லது இரண்டு ஆண்டுக்கு ஒருமுறையே இயற்கை சீற்றங்கள் நம்மையோ அல்லது நம்முடைய அண்டை மாவட்ட அல்லது மாநில மக்களையோ பெரிதும் பாதிப்புக்கு உள்ளாக்கி விடுகின்றன. 

முதலில் இதுபோன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டால், ஏற்பட்டால் என்னென்ன துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென அரசு திட்டம் தீட்டி ஓரளவுக்குத்தான் அதனை செயல்படுத்த முடியுமே அன்றி, முற்றிலுமாக இயற்கை சீற்றத்தை தடுக்கவோ அல்லது முழுமையான நிவாரணப் பணிகளை செய்து விடவோ முடியாது என்பதை நாம் புரிந்துக் கொள்ள வேண்டும். 

ஆகையால், உயிரிழப்புக்கள், பொருட் சேதம் உள்ளிட்டவைகளை தவிர்க்க முடியாது என்பதோடு, இந்த நிலைமை சீராக குறைந்தது ஒருசில மாதங்களாவது ஆகும் என்பது சுனாமி ஆழிப் பேரலை ஏற்பட்ட காலத்தில் இருந்து நாம் காணும் காட்சிகளாக இருந்து வருகிறது.

உயிரை காப்பாற்றிக் கொள்ள நினைப்பவர்கள் வேண்டுமானால், அசையும் சொத்துக்களான பணத்துடனும் சின்னஞ்சிறு பொருட்களுடனும் இடம் மாறி தப்பிக்கலாம். ஆனால், ஆடு, மாடு, கோழி போன்ற அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களை அனைவராலும் காப்பாற்றி விடவே முடியாது.

ஆமாம், கடந்த ஓரிரு ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகானத்தில் பெரும் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்ட போது, அங்குள்ள நம் வாசக சகோதரி ஒருத்திக்கு இப்படியொரு ஆலோசனையை சொன்னபோது, அதனை ஏற்று அப்படியே செய்தாள். ஆகையால், பாதிப்பில் இருந்து முழுவதும் தப்பினாள்.

இவள் மட்டுமல்ல; அங்குள்ள பெரும்பாலானோர் இப்படித்தான் இடம் பெயர்ந்தனர். இதனை அவர்கள் வழக்கமாகவே வைத்திருக்கிறார்கள். ஆகையால், பெரும் அளவிலான உயிர்சேதமும், பொருட் சேதமும் தடுக்கப்படுகின்றன. அரசும் நிவாணரப் பணிகளை மிகவும் துரிதமாக செய்து விட்டு, ஊர் விட்டு ஊர் போன மக்களை திரும்ப வரும்படி அழைக்க ஏதுவாக இருக்கிறது என்பதை நாம் கவனிக்க வேண்டும்.

ஆனால், நம் நாட்டில் இதுபோன்ற தப்பிக்கும் வாய்ப்புகளை எல்லாம் யாரும் யோசிப்பது இல்லை. எடுத்துச் சொல்வதற்கும் ஆட்கள் இல்லை.  

ஆனால், இயற்கை சீற்றம் போன்ற இக்கட்டான சூழ்நிலையைப் பயன்படுத்தித்தான் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் எண்ணத்தோடு இருப்பவர்கள் தங்களின் கெட்ட உள்நோக்கங் கொண்ட அறிக்கைகளை விதம் விதமாக விடுகிறார்கள்; இனியும் விடுவார்கள். 

ஆனால், உண்மை என்னவென்றால், யார் ஆட்சியில் இருந்தாலும் இயற்கை சீற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளுக்கு உடனடி நிவாரணத்தை வழங்கிடவே முடியாது. 

ஆமாம், இதனை நம் முப்பாட்டன் வள்ளுவன் வழியில் இரத்திணச் சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால், 

அதிகாரம்: அரசியல்
எதிர்க்கட்சியாக இருக்கும்போது எதிர்ப்பவர்கள் ஆளுங் கட்சியாகும்போது அதையேதான் செய்வர்.

என்று துணிந்து சொல்லலாம். இதில் சந்தேகம் இருந்தால் ஆர அமர ஆராய்ந்து பாருங்கள்; உண்மை விளங்கும். 

எனவே, எக்காலத்திலும் எதிர்க்கட்சி அரசியல் வியாதிகளின் மோசடி வார்த்தைகளை நம்பி அவ்வப்போது நிவாரணப் பணிகளை பார்வையிட வரும் ஆளும் அரசியல் வியாதிகளுக்கு எதிராக போராடினாலோ அல்லது அவர்களை விரட்டி அடித்தாலோ அதனால் ஏற்படும் உடனடிப் பாதிப்பு அப்படிச் செய்யும் மக்களுக்குத் தானே அன்றி, நிச்சயமாக அவர்களுக்கு இல்லை என்பதை நாம் புரிந்துக் கொள்ள வேண்டும். 

ஏனெனில், மக்கள் எவ்வளவுதான் உதவ முன் வந்தாலும் நேரடியாக வந்து உதவுவது கடினம். அப்படி உதவ நினைத்தால், அவர்கள் மிகப் பெரும் இன்னல்களுக்கே ஆளாக நேரிடும். இதனை யார்தான் விரும்புவர்?

இந்நிலையில் தாங்கள் வழங்க நினைக்கும் பணமும் பொருளும் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் போய் சேருமா என்ற சந்தேகத்திலேயே பலரும் உதவிக்கரம் நீட்டுபவர்களிடம் தருவதில்லை. உதவி செய்கிறேன் என்று சொல்பவர்கள் எல்லோருமே யோக்கியர்களும் அல்லர். இதுபோன்ற சூழ்நிலைகளைப் பயன்படுத்தி கொள்ளையடிப்பவர்களும் பலருண்டு என்பதற்கான வரலாறும் உண்டு. 

இந்த நிலையில், அரசு மட்டுமே எந்த வகையிலும் ஓரளவிற்காவது உதவக்கூடிய வசதிகளை கொண்டுள்ளது என்பதை புரிந்துக் கொண்டு ஆளும் அரசியல் வியாதிகளை தங்களது பகுதிக்கு அழைக்க வேண்டுமே தவிர, வருபவர்களை விரட்டி அடிப்பதால், எந்தப் பயனுமில்லை என்பதை உணர்வதே புத்திசாலித்தனம்!

பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

Friday, November 16, 2018

நீதிமன்றக் காவலில் உள்ளவரை யார் விசாரிக்க முடியும்?நம் நாட்டில் நீதிபதிகள் என்று யாருமே இல்லை. இருக்கவும் முடியாது. எல்லோருமே கூலிக்கும், இதர சலுகைகளுக்கும் மாரடிக்கும் நிதிபதிகள்தான் என்பதற்கு அரிதிலும் அரிதான இதுபோன்ற செய்திகளே சான்று!

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இந்த நிதிபதியின் விவகாரத்தில், இவருடைய மேல்நிலை நிதிபதிகளுக்கு பங்கு போகவில்லை என்பதோடு, இந்நிதிபதி வெளி நாடுகளுக்கு சென்று செலவழித்து மகிழ்ந்ததை பொறுத்துக் கொள்ள முடியவில்லை போலும்! 

இல்லையெனில், இதுபோன்று நிதிபதிகள் கைது நடவடிக்கை எல்லாம் நடக்கவே நடக்காத காரியம். 

சரி, இந்தச் செய்தியில் ஒரு மிகவும் நுட்பமான சட்டப் பிழை ஒன்று உள்ளது. அது என்ன என்பதுபற்றி சற்றே ஆராய்வோம். 

ஆமாம், குற்ற விசாரணை முறை விதிகள் 1973 இன் விதி 171 இன்படி, புகார் கொடுத்தவர் அல்லது சாட்சி நீதிமன்றத்துக்கு வருகை தந்து சாட்சியம் அளித்து தான் சொன்ன குற்றத்தை நிருபிக்க மறுக்கும் போது, அவர்களை கைது செய்து நீதிமன்றக் காவலில் வைத்து விசாரிக்க முடியும் அல்லது இனி தவறாது வருவேன் என எழுதிக் கொடுக்கும் கடப்பாட்டு ஆவணத்தின் மூலம் விடுவிக்கவும் முடியும்.

ஆமாம், நீதிமன்றக் காவல் என்றால் சிறையில் அடைப்பது. அப்படி சிறையில் அடைக்கப்பட்டு உள்ள ஒருவரை காவலூழியர்கள் விசாரணை செய்யவே முடியாது. 

அப்படிச் செய்ய வேண்டும் என்றால்,  காவலூழியர்கள் தங்களின் கட்டுப்பாட்டில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டுமென நிதிபதியிடம் மனுத் தாக்கல் செய்து, அதனை ஏற்று குறிப்பிட்ட சில நாட்களுக்கு அனுமதி வழங்கினால், அதன் அடிப்படையில் சிறையில் இருந்து வெளிக் கொண்டு வந்து விசாரிக்க முடியும். 

இவ்விசாரணை முடிந்தப் பின் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த வேண்டும். பின் நிதிபதி சிறையில் அடைக்க உத்தரவிடுவார் அல்லது தேவையைப் பொறுத்து மீண்டும் சில நாட்கள் விசாரிக்க அனுமதி வழங்குவார்.

மொத்தத்தில் நீதிமன்றக் காவலில் உள்ள ஒருவரை, நீதிமன்றத்துக்கு வரவழைத்தோ அல்லது தானே சிறைக்கு சென்றோ ஒரு நிதிபதிதான் விசாரிக்க முடியுமே தவிர, காவலூழியர்கள் உள்ளிட்ட வேறு எவரும் விசாரிக்கவே முடியாது.

ஆனால், இந்தச் செய்தியில் குற்றஞ் சாற்றப்பட்ட ஓர் எதிரியை நீதிமன்றக் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டு உள்ளதாக சொல்லப்பட்டு உள்ளது. மேற்சொன்ன விளக்கத்தின்படி இப்படிச் செய்யவே முடியாது.

எனவே, இது செய்தியை எழுதியவரின் தவறே அன்றி, நிதிபதியின் தவறாக இருக்க வாய்ப்பில்லை என்றே சொல்ல முடியும்  என்றாலும், சட்ட விரோதமாக செயல்படுவதையே வழக்கமாக கொண்டுள்ள நிதிபதிகளை நம்பி உறுதியாகச் சொல்ல முடியாது.

பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

Wednesday, November 7, 2018

தன் வழக்கில் தானே வாதாடி விடுதலையான மூட்டை தூக்கும் தொழிலாளி!
தன்னுடைய வாட்ஸ்அப்பில் இப்படியொரு முகப்பு படத்தை வைத்துள்ள திருப்பூர் சரவணன் என்பவர் அனுப்பியுள்ள செய்தி. 

ஐயா நான் எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள ஒரு மூட்டை தூக்கும் தொழிலாளி. 

திரு. Warrant Ba-Law அவர்களின் நீதியைத்தேடி... பிணை (ஜாமீன்) எடுப்பது எப்படி? என்ற புக்கை திருப்பூர் நூலகம் சென்று படித்தேன். 

எதையும் எதார்த்தமாக எழுதுகிறார். அவர் எழுதுவது அனைத்தும் உண்மையாகவே இருக்கிறது. ஆகையால், மிகவும் பிடித்து விட்டது. 

அவரை நேரில் சந்தித்து வாழ்த்த வேண்டும் என்று ஆசையில் இருக்கிறேன். அதற்கு ஏற்பாடு செய்வீர்களா? அவரது சட்ட ஆராய்ச்சிக்கு நிதியுதவி செய்வதற்காகவே, தினமும் தூக்கும் மூட்டைகளோடு கூடுதலாக நான்கு மூட்டைகளை தூக்குவேன். 

அவரது நீதியைத்தேடி... பிணை (ஜாமீன்) எடுப்பது எப்படி? உதவியால், என் மீது காவலூழியர்கள் தொடர்ந்த பொய்யான குற்றவியல் வழக்கில் திருப்பூர் ஜே.எம் 2. வழக்கு எண் சிசி 180/2012 வழக்கில் நானே வாதாடி வெற்றி பெற்றேன். 

அதனால் தாங்கள் தங்களிடம் உள்ள அவரது அனைத்து நூல்களையும் பட்டியில் இடவும். உடனே வாங்கி விடுகிறேன். நன்றி!

குறிப்பு: இந்த தகவலை எனக்கு அனுப்ப, இது எந்த அளவிற்கு உண்மை என்பதை சரி பார்க்க, ஆசிரியர் திரு. Warrant Ba-Law அவர்களுக்கு அனுப்பினோம்.

அவர்  திருப்பூர் ஜே.எம் 2. வழக்கு எண் சிசி 180/2012 அல்ல என்றும், வழக்கு எண்ணில் ஏதோ பிழை இருக்கிறது என்றும் சொல்லி விட்டார். 

இதனால், சரவணனிடம் சரியான வழக்கு என்னை கேட்டபோது, அவர் விடுதலை செய்யப்பட்டதை அறிவிக்கும் தீர்ப்பு நகலை அனுப்பி வைத்தார். 

அதன் மூலம் சரியான வழக்கு எண் சி.சி 120 / 2013 என்பதை அறிந்து, அதன் தீர்ப்பு நகலை இணையப் பக்கத்தில் இருந்து எடுத்து, தன் பாணியில் ஆராய்ந்தார். அவர் ஆராய்ந்தால், நிதிபதிகள் சிக்காமல் இருப்பார்களா? 

ஆமாம், சரவணனை பிணையில் எடுத்த பொய்யரே, வாதாடியதாக தீர்ப்பில் பொய்யாக குறிப்பிட்டு உள்ளதை கண்டு பிடித்து விட்டார். 

சரி, சரவணன் ‘‘தானே வாதாடியாதாக சொல்வதற்கு என்ன ஆதாரம் இருக்கு?’’ என்ற நியாயமான கேள்வி உங்களுக்கு எழ வேண்டும். எழுந்தால் உங்களுக்கு சிந்திக்கும் திறன் இருக்கு.  

ஆமாம், நம் வேலையை நாமே திறம்பட செய்வதற்கும், கூலிக்கு மாரடிப்பவர்களை வைத்து செய்வதற்கும் வித்தியாசம் தெரியாதா? என்பதற்கு ஏற்ப...

இவரே வாதாடினார் என்பதற்கான சான்றுகள் அதே தீர்ப்பில் இருக்கிறது என்பதை ஆராய்ந்து விட்டார். பின்ன சட்ட ஆராய்ச்சியாளர் என்றால் சும்மாவா?! 

இதனால், விடுதலை தீர்ப்பு சொன்ன நிதிபதி (நடுவர்) பழனி பொய் வழக்குப் போட்ட காவலூழியர்களுக்கு சட்டப் பிரச்சினை வரக் கூடாது என்பதற்காகவே, கேனச் சந்துருவைப் போல தீர்ப்பை திரித்து எழுதி உள்ளார்

தீர்ப்புகளை எப்படி ஆராய வேண்டும் என்பதற்காக இதனை மநு வரையுங்கலை! நூலில் தொகுத்து அளித்து உள்ளேன்.  

இதனை நாம் கையிலெடுத்தால், சட்டப்படி நிதிபதி (நடுவர்) பழனி பணியில் நீடிக்க முடியாது. இதுபற்றி விரிவானதொடு ஆய்வுக் கட்டுரையை திரு. Warrant Ba-Law அவர்களே நேரம் இருக்கும்போது பதிவிடுவார். 

தன் வழக்கில் தானே வாதாடி விடுதலைப் பெற்ற திருப்பூர் சரவணனுக்கு நம்முடைய நல்வாழ்த்துக்கள். இவர் பொய் வழக்குப் போட்ட காவலூழியர்கள் மீது உ(ய)ரிய சட்ட நடவடிக்கை எடுத்தால் சாதனையில் சாதனை படிக்கலாம். 

எது எப்படி இருப்பினும், சாதாரண மனிதனும் வழக்கில் வாதாடனும்; சாதிக்கனும் என்ற திரு. Warrant Ba-Law அவர்களின் இலட்சிய இலக்கு எல்லையை கடந்து சென்று கொண்டே இருக்கிறது. 

பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

அறவழி நோட்டா

அறவழி நோட்டா
மகாத்மா போதித்த வாக்குரிமை!

நோட்டா: NOTA

நோட்டா: NOTA
விளக்கம்: EXPLANATION

நியாயந்தான் சட்டம்!

நியாயந்தான் சட்டம்!
வக்கற்றவர்களின் கீழான பட்டம்!

நூல்களின் முகப்பு

Follow by Email

Followers

முக்கியப் பக்கங்கள்

அடிப்படை சட்டங்கள்

  • 1. இந்திய சாசனம் 1950
  • 2. நீதிமன்ற சாசனம் 1872
  • 3. இந்திய தண்டனை சட்டம் 1860
  • 4. குற்ற விசாரணை முறை விதிகள் 1973
  • 5. உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908

நம் நூல்களைப் பற்றி

நீதியைத்தேடி.... நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் வரிசையில்...
1 குற்ற விசாரணைகள்
2 பிணை (ஜாமீன்) எடுப்பது
எப்படி?
3 சட்ட அறிவுக்களஞ்சியம்
4 சட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்
5 சாட்சியங்களைச் சேகரிப்பது
எப்படி?
6 கடமையைச் செய்!
பலன் கிடைக்கும்
7 மநு வரையுங்கலை!Recent Posts Widget

இந்நூல்கள் அனைத்தும் உங்களின் சட்ட விழிப்பறிவுணர்வுக்காக
மத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவியோடு
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பொது நூலகங்கள், மத்திய சிறைச்சாலைகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

சொந்தமாக தேவைப்படுவோர், உ(ய)ரிய நன்கொடையைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு வாட்ஸ்அப் எண் 09842909190 ஆகும்.

எல்லாப் பதிவுகளும்!

நம் தள வகைகள்

பயின்றோர் (20-08-16)