சமூகத்தின் சட்ட விழிப்பறிவுணர்வுக்கான தளம்

நீ வாழ... நீயே வாதாடு... வரவேற்பு வாழ்த்து!

No law, no life. Know law, know life! என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியத்தை உணர்ந்து, ‘‘நீதியைத்தேடி... சட்டப் பல்கலைக் கழகத்திற்கு’’ வருகை தந்துள்ள உங்களை வருக என வரவேற்று, உங்களுக்கான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்று பயனைப் பெறுக என வாழ்த்துகிறோம்!
முக்கிய அறிவிப்பு : இந்த இணையப்பக்கத்தை புதுப்பிக்கும் பணி நடந்துக் கொண்டிருப்பதால், சில பதிவுகள் அல்லது இணைப்புக்கள் கிடைக்காமல் போகலாம்!

Thursday, August 9, 2018

நீங்க எவ்வளவு பெரிய அறிவாளி?!



நீங்க எதில் எவ்வளவு பெரிய அறிவாளியாக இருந்தாலும், அதில் எவ்வளவுதான் (உணர், புர)ச்சிகரமான வேலையைச் செய்தாலும் உங்களின் மூளையை முடக்கி ஒரு மூலையில் உட்கார வைக்க முடியும்.

ஆமாம், இதற்கு ஒரேயொரு பொய்யான குற்றவியல் வழக்கை தொடுத்தாலே போதும். மெய்யான வழக்கெல்லாம் தேவையே இல்லை. எவ்வளவு பெரிய அறிவாளியாக இருந்தாலும், அனைத்தும் வீணாகி, சட்டந் தெரியாத அறிவிலி ஆகி விட்டோமே என வருந்துவீர்கள். 

எனவே, உங்கள் வேலைகளை சற்றே ஒதுக்கி வைத்து விட்டு, சட்ட விழிப்பறிவுணர்வே பிரதானம் என்பதை உணர்ந்து அதனை அடைய முயற்சி செய்யுங்கள்.

இதனை அடைந்து விட்டால், எதை செய்ய வேண்டும்... எதை செய்யக்கூடாது என்ற தெளிவான முடிவுக்கு வந்து விடலாம். 

இதையும் மீறி சட்டப் பிரச்சினைகள் வந்தால், அதனை நியாயத்தின் வழியில் எளிதில் (ச, சி)ந்தித்து தவிடு பொடி ஆக்கலாம். 

மேலும், நீங்கள் அடைந்தால் மட்டும் போதாது. உங்களைச் சார்ந்து இயங்குபவர்களும் அடைய வேண்டும். இல்லையேல், உங்களை முடக்க அவர்களை முடக்குவார்கள். உங்களை முடக்கி விட்டால், அவர்களே முடங்கி விடுவார்கள். 

இதெல்லாம் புரியாமல், பலபேர் நாமே பெரிய அறிவாளி என்ற எண்ணத்தில், எதாவது செய்யப் போய் சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொண்ட கதையாக பொதுத்தளங்களில் புலம்புகிறார்கள். 

இவர்களின் புலம்பல், புறம்போக்கு தனமான செயல்களை செய்பவர்களை மீண்டும் மீண்டும் செய்ய ஊக்குவிப்பதோடு, நல்ல செயல்களை செய்ய வேண்டுமென நினைப்பவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது. 

எனவே, அடிப்படை சட்ட விழிப்பறிவுணர்வு இல்லாத எவராக இருந்தாலும், மற்றதில் எவ்வளவு அறிவாளியாக இருந்தாலும்  (அனைத்தையும் மூடிக்கொண்டு) சும்மா இருப்பதே சமூகத்திற்கு செய்யும் பெரிய நன்மை!

எழுதப்படிக்க தெரியாதவர்கள் கூட, அடிப்படை கணக்கை தெரிந்து வைத்திருக்கிறார்கள். காரணம், தெரியவில்லை என்றால், ஏமாற்றி விடுவார்கள்; தினந்தினம் ஏமாந்து வாழ்வையே இழந்து விடுவோம் என்பதே!

இதுபோலத்தான், பாமரர்கள் முதல் படித்தவர்கள் வரை அடிப்படை சட்டத்தையும் தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியமாகி விட்டது. இதனை நேற்று உணராதவர்கள் இன்று உணர்ந்ததைப் போல, இன்று உணராதவர்கள் நாளை நிச்சயம் உணர்வீர்கள். 

சரி, சட்ட விழிப்பறிவுணர்வைப் பெறுவது என்று முடிவெடுத்து விட்டால், அதனை இளைஞர் என்ற பருவம் தொடங்கும் போது பெற்றுவிட்டால் மிகவும் நல்லது. அந்த வயதில் பெற முடியாமல் போனால், இளைஞர் பருவம் முடிவதற்கு உள்ளாக பெற்று விட வேண்டும். இதுவே சரியான பருவம். இல்லையேல், கடினம். 

ஆமாம்,  உங்கள் விருப்பப்படி சுகப் பிரசவத்தில் குழந்தையை பெறுவது கூட கடினம். எனவே தற்சார்பு வாழ்க்கை வாழத் தேவையான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்றால்தான், திருமணம் செய்து கொள்வேன் என்ற நிலைப்பாட்டுக்கு இருபால் இனத்தவரும் வந்து விட்டால், எல்லாமே சாத்தியமாகி விடும். 

மேலும், இது மட்டுமே உங்களது வாழ்க்கைக்கு மிகுந்தப் பயனை அளிக்கும் என்பதை உறுதியாகச் சொல்ல முடியும். ஏனெனில், உங்களது குடும்பத்து பெரியவர்கள் மீது வம்பு வழக்கு எதுவும் இருந்தால் வாரிசு உரிமை அடிப்படையில், எளிதில் தீர்க்க முடியும். இல்லையெனில், அவர்களைப் போலவே தடுமாறி, தடம் மாறி, தடமே இல்லாத நிலையும் உருவாகி விடும்.

சரி, இதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும்.

பொய் வழக்கில் எதிர்ப்பாராத விதமாக கைது செய்யப்பட்டால், அதனை சட்டப்படி மிகவும் திறமையாக எதிர்க் கொண்டு கைது செய்த காவலூழியர்களையும், நிதிபதிகளையும் கலங் கடிப்பது எப்படி என்பதைப் பற்றி அறிய விரும்புகிறீர்களா?! 



ஆம் எனில், ‘‘கடமையைச் செய்! பலன் கிடைக்கும்’’ நூலில் 210 ஆம் பக்கத்தில் உள்ள, ‘‘நிதிபதிகளை வறுத்தெடுப்பது எப்படி?’’ என்ற கட்டுரையைப் படிக்கவும். ஏன் தெரியுமா?

நம் அப்பாவி வாசகர் ஒருவரை ‘‘காவலூழியர்கள் பொய் வழக்கில் கைது செய்ய, அவர் நிதிபதியையே எப்படியெல்லாம் கதிகலங்க வைத்தார்’’ என்பதை விளக்கிச் சொல்லி உள்ளேன்.

இது அவசரத்துக்காக சொல்லும் வழிகாட்டுதல் மட்டுமே. முழுமையான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்றால்தான் மிகவும் நல்லது என்பதையும் எச்சரித்துக் கொள்கிறேன்.

பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

நூல்களின் முகப்பு

நியாயந்தான் சட்டம்

Follow by Email

Followers

முக்கியப் பக்கங்கள்

அடிப்படை சட்டங்கள்

  • 1. இந்திய சாசனம் 1950
  • 2. நீதிமன்ற சாசனம் 1872
  • 3. இந்திய தண்டனை சட்டம் 1860
  • 4. குற்ற விசாரணை முறை விதிகள் 1973
  • 5. உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908

நம் நூல்களைப் பற்றி

நீதியைத்தேடி.... நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் வரிசையில்...
1 குற்ற விசாரணைகள்
2 பிணை (ஜாமீன்) எடுப்பது
எப்படி?
3 சட்ட அறிவுக்களஞ்சியம்
4 சட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்
5 சாட்சியங்களைச் சேகரிப்பது
எப்படி?
6 கடமையைச் செய்!
பலன் கிடைக்கும்
7 மநு வரையுங்கலை!Recent Posts Widget

இந்நூல்கள் அனைத்தும் உங்களின் சட்ட விழிப்பறிவுணர்வுக்காக
மத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவியோடு
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பொது நூலகங்கள், மத்திய சிறைச்சாலைகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

சொந்தமாக தேவைப்படுவோர், உ(ய)ரிய நன்கொடையைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு வாட்ஸ்அப் எண் 09842909190 ஆகும்.

நம் தள வகைகள்

பயின்றோர் (20-08-16)