பொதுவாக தங்களுக்கு உள்ள ஒரு பிரச்சினை தீர்த்துக் கொள்வதற்கு வழி கேட்டு நடையாய் நடப்பார்கள். பிரச்சினை தீர்ந்து விட்டால், கண்டு கொள்ள மாட்டார்கள். கண்டு கொள்ள வேண்டும் என்ற அவசியம் கூட இல்லை.
ஆனால், பிரச்சினை தீர்ந்ததைக்கூட நமக்கு சொல்ல மாட்டார்கள். சட்டம், மருத்துவம் உள்ளிட்ட எல்லாவற்றிலுமே இதே நிலைதான். இதற்கு முக்கிய காரணம், அப்படி தீர்த்துக் கொண்டவர்களது சமூகத்தைப் பற்றிய அக்கறை இன்மையும், அலட்சியமும், சுயநலமுமே!
ஆமாம், வெகுசிலர் மட்டும், தங்களது பிரச்சினை என்ன என்பதை வெளியில் சொல்லவே தயங்குவார்கள். ஆனால், இவர்கள் பிரச்சினை என்ன, அதற்கான ஆதாரங்கள் என்ன என்பதை திரட்டி நாமே செய்தி வெளியிட முடியும். ஆனால், அதில் அவர்களே சொல்வது போன்ற நம்பகத்தன்மை இருக்காது.
பொது நோக்கத்திற்காக, இப்படி நாம் திரட்டியோ அல்லது நம்மிடம் கேட்ட ஆலோசனையின் அடிப்படையிலோ வெளியிட்டு விட்டால், அது அவர்களுக்கு தன்மானப் பிரச்சினை என்று கருதி, நம்மோடே மல்லுக்கு நிற்க ஆரம்பித்து விடுவார்கள்.
பகிரங்க மன்னிப்பு கேட்கவில்லை என்றால், வழக்கு போடுவேன் என்று கூட மிரட்டல் விடுப்பார்கள்.

இப்படி மல்லுக்கு நிற்பது, மிரட்டல் விடுப்பது எல்லாம் ‘‘வரங் கொடுத்தவன் தலையில் கை வைப்பது போன்றது’’ என்பதால், அது இயலாத காரியம்.
ஆகையால், அவர்களைப் பற்றி தங்களுக்கு தெரிந்த அதாவது தான் பின்பற்றும் கேவலமான வழி முறைகளில் எல்லாம் அவதூறு செய்ய ஆரம்பிப்பார்கள்.

இப்படிப் பட்டவர்களைப் போல் இல்லாமல், ‘‘தன் பிரச்சினையை தீர்த்துக் கொண்ட வழியில் மக்களும் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்ற சமூகப் பொறுப்புணர்வோடு அவர்கள் வழிகாட்டுவதால் தானே நாம் பலனை அடைந்தோம்’’ என்ற நற்சிந்தனை மட்டும் மக்களுக்கு இருந்து விட்டால் சமூக அவலங்கள் எல்லாமே சமாதியாகி விடும்.
ஆனால், இப்படியொரு நற்சிந்தனையோடு மக்கள் செய்ய முன்வருவதே இல்லை என்பதும், சமூக அவலங்கள் தொடர காரணமாக இருக்கிறது.
ஆமாம், இதற்கு என்னுடைய அனுபவங்களே போதும். ஆனால், இன்றைய நிலையில் இதற்கு நல்லதொரு உண்மையைச் சொல்ல வேண்டுமானால், ஹீலர் பாஸ்கரின் வழிகாட்டுதலால் தங்களின் பிரச்சினைகளை தீர்த்துக் கொண்டோர் பலரும், அதுபற்றி உலகலாவிய மக்களுக்கு தெரியும் வகையில் பொதுவெளியில் பரப்பவில்லை.
விதி விலக்காக விரல்விட்டு எண்ணக்கூடிய சிலர் பொது வெளியில் பரப்பி இருக்கலாம். இன்னுஞ் சிலர் தங்களுக்கு தெரிந்தவர்களுக்கு மட்டும் சொல்லி இருக்கலாம்.
ஆனால், ஹீலர் பாஸ்கர் கைது செய்யப்பட்ட பின்பு, பலரும் தாங்கள் அடைந்த பயனை காணொலியாக வெளியிட்டு வருகிறார்கள். இப்படி இதுவரை வெளியிடப்பட்டுள்ள நூற்றி ஐம்பதுக்கும் மேற்பட்ட காணொலிகளை, இந்த இணைப்பில் சொடுக்கிப் பார்க்கலாம்.
நான் முன்பே சொன்னது போல, இவர்களும் முன்பே வெளியிட்டு இருந்தால், இப்போது வெளியிட தேவையே இல்லையே!
இப்படி வெளிவர வேண்டும்; இதுபற்றி தெரியாத மக்களுக்கும் தெரிய வேண்டும் என்ற காலத்தின் கட்டாயத்தினாலே, ஹீலர் பாஸ்கரின் கைது நடந்து உள்ளதோ என்றே நம்ப வேண்டி இருக்கிறது. இது எனது நம்பிக்கை மட்டுமல்ல; பலரின் நம்பிக்கையாகவே இருக்கிறது என்பதால், இதையும் பதிவு செய்கிறேன்.
சரிங்க, இதுபற்றி எங்களை குற்றங்குறை சொல்லும் நீங்க என்ன செஞ்சிருக்கிங்க என்ற கேள்வி உங்களுக்கு கட்டாயம் வந்திருக்க வேண்டும். வரவில்லை என்றாலும், நானே கேள்வியை கேட்டு பதில் சொல்வதுதான் நியாயமானது என்பதால் சொல்கிறேன்.

ஆமாம், 2014 ஆம் ஆண்டில் எழுதி வெளியிட்ட ‘‘கடமையைச் செய்! பலன் கிடைக்கும்’’ என்ற என்னுடைய ஆறாவது நூலில், ‘‘கடமையாளர்கள் ஒரு சிறப்பு ஆய்வுக் கோர்வை’’ என்ற இரண்டாவது அத்தியாயத்தில், சமூகத்திற்கு உழைத்துக் கொண்டிருக்கும் பத்து கடமையாளர்களைப் பற்றி எழுதி உள்ளேன்.
இதில், ‘‘உடலில் ஓர் அகழ்வாராய்ச்சி’’ என்ற தலைப்பில் ஹீலர் பாஸ்கரைப் பற்றி எழுதியுள்ளேன்.
கடமையைச் செய்! பலன் கிடைக்கும் நூலில் கடமையாளர்களைப் பற்றி சொல்லி உள்ளது மட்டுமல்ல; ஒரு நாணயத்தின் இரண்டு பக்கத்தைப் போல, கடமைக்கு எதிரான கயமையாளர்களை எல்லா நூல்களிலும் தோலுரித்து அடையாளங் காட்டி உள்ளேன்.
எனவே, சமூக அவலங்கள் சமாதியாக வேண்டுமெனில், அதற்கென கடமையாற்றும் கடமையாளர்களும், கயமையாளர்களும் பொது மக்களால் ஆடையாளங் காணப்பட வேண்டும்.
இதற்கு, அக்கடமையாளர்களால் பலனடைந்தவர்கள் தாங்கள் அடைந்தப் பலன்களைப் பற்றி பொது மக்களுக்கு பல்வேறு வழிவகைகளில், சமூக வலைத்தளங்களில் கட்டாயம் பகிரும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
இதுபோலவே, கயமையாளர்களால் அடைந்த பாதிப்புகளையும் பகிர வேண்டும். அப்போதுதான், அவர்களும் கடமையைச் செய்ய முன்வருவார்கள். இல்லையேல், கயமையை செய்யாமல் ஒதுங்கி விடுவார்கள்.
இதுபோன்ற செய்கைகளால்தான், சமூக அவலங்கள் சமாதியாகும். அவ்வளவே!

பகிர்ந்து கொள்ள
வாசகர்களின் கவனத்திற்கு...
இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.
இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.
சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.
0 comments:
Post a Comment